Jump to content

படங்களை ஸ்கேன் செய்யும் போது...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களை ஸ்கேன் செய்யும் போது...

04100404.jpg

ஒரு புகைப்படத்தை சாதாரணமாக ஒரு ஸ்கேனில் செய்வதைக் காட்டிலும் வலைப்பக்கத்திற்கு ஸ்கேனிங் செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ஏனெனில் நமது வலைப் பக்கத்தை பலர் வந்து பார்க்க கூடும். அப்போது பார்ப்பவர்களின் கண்ணிற்கு புகைப்படங்கள் தெளிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும். மேலும் ஏதோ ஒரு பொருளை விற்பனை செய்யும் வலை மனை என்றால் கண்டிப்பாக புகைப்படங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

ஸ்கேனிங், தரம் இல்லாத குறைவான ரெசெல்ïசன் உள்ள படங்கள் விற்பனையையும், வலைப்பக்க வடிவமைப்பின் போது முதலில் அதிக ரெசெல்ïசன்களைக் கொண்ட படங்களை ஸ்கேன் செய்து அதை வலைப்பக்கத்திற்கு ஏற்றவாறு பதிவு செய்வார்கள். வலைப்பக்க வடிவமைப்புக்கு புதியவர்கள் தரமான படங்களை வலைப்பக்கத்தில் வெளியிட வேண்டும். இதன் மூலம் வலைப் பக்கத்தை பார்வையிட வரும் பல பேரை கவர்ந்து விடலாம் என்பதை மறந்து விடுகின்றனர்.

வலைப் பக்கத்தை எவ்வளவு அழகாக அதிக தகவல்களுடன் வடிவமைத்தாலும் படங்கள் தெளிவாக இல்லை என்றால் மொத்த உழைப்பும் வீணாகி விடுகிறது. ஸ்கேனர்கள் பொதுவாக ஒன்றுக்கொன்று வேறுபட்டு காணப்படும். விலை உயர்ந்த ஸ்கேனர்கள் என்றாலும், விலை குறைந்த ஸ்கேனர்கள் என்றாலும் செட்டிங்சை வைத்து தான் ஸ்கேன் செய்வது நம் கையில் உள்ளது.

பொதுவாக ஸ்கேனர்கள் டீபால்ட் செட்டிங்ஸ் உடன் ஸ்கேன் செய்ய தயாராக இருக்கும். அதே செட்டிங்ஸ் உடன் ஸ்கேன் செய்தால் படத்தின் ஒளி, அளவு, ரெசெல்ïசன்கள் கண்டிப்பாக மட்டுப்படும். எனவே வலைப் பக்கத்துக்கு ஏற்றவாறு ஸ்கேன் செய்ய ஸ்கேன் செட்டிங்சை மாற்ற வேண்டும். பெரும்பாலும் எல்லா ஸ்கேனர்களும் ஒரே மாதிரி டீபால்ட் செட்டிங்சை கொண்டு இருக்காது. ஒவ்வொரு தயாரிப்பும், ஒவ்வொரு வடிவமைப்பையும் செட்டிங்ஸ் அளவையும் கொண்டு இருக்கும்.

கீழே போட்டாலும் உடையாது..

தகவல் தொடர்பு சாதனங்களில் கம்ப்ïட்டர் முக்கிய பங்கு வகிக்கின்றன. கம்ப்ïட்டர்களை கையில் எடுத் துச்செல்லும் வகையில் லேப்-டாப்,நோட் புக் எனப்படும் மடிக் கணிணிகள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இந்த கம்ப்ïட்டர்கள் நோட்டு புத்தகம் போல மடித்து கையில் எடுத்துச்செல்ல முடியும்.

இதனால் இந்த வகையான கம்ப்ïட்டர்களுக்கு மடிக்கணிணி என்றும் நோட்டு புத்தக கம்ப்ïட்டர் என்றும் பெயர் வந்தது. எந்த இடத்துக் குச்சென்றாலும் இந்த மடிக் கணிணியை கையுடன் எடுத்துச்சென்று பயன்படுத்த முடியும். இந்த மடிக்கணிணிகள் தற்போது நவீன வசதிகள் பொருத்தப்பட்டு குறைந்த எடையுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் ஜப் பான் நிறுவனமான என்.இ.சி நிறுவனம் தயாரித்துள்ள எப்.சி.-நோட் என்று அழைக்கப்படும் உறுதிமிக்க நோட்டு புத்தக கம்ப்ïட்டர் ஆகும்.

1.1 ஜிகா ஹெர்ட்ஸ் பென்டியம்-எம் பிராசசர் கொண்ட இந்த கம்ப்ïட்டர் 12.1 அங்குலம் திரை அளவு கொண் டது. தண்ணீரில் போட்டாலும் சரி இதற்குள் ஒரு சொட்டு தண்ணீர் கூட உள்ளே புகமுடியாது. தூசி மற்றும் அதர்ச் சியை தாங்கக்கூடியது. சுமார் 90 சென்டி மீட்டர் உயரத்தில் இருந்து கீழே போட்டால் கூட இது உடையாது. அடுத்த மாதம் முதல் இந்த கம்ப்ïட்டர் விற்பனைக்கு வருகிறது. விலை ரூ.ஒரு லட்சத்து 75 ஆயிரம்.

நன்றி மாலைமலர்

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.