யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
கிருபன்

வயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா?

Recommended Posts

வயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா?

துஷ்யந்தன்

ஆண்களால் முதல் காதலை மறக்கவே முடியாது அதிலும் அந்த அறியா வயசில் வரும் பப்பி லவ் சான்ஸே இல்லை, தயங்கி தயங்கி தங்களுடைய முதல் காதலை வெளியே சொல்லும் ஒரு சில ஆண்கள் கூட அதற்க்கு முன்னால் வரும் தங்கள் பப்பி லவ்வை மறந்து கூட வெளியே சொல்வது இல்லை, வெளியே சொன்னால் எங்கே இது பிஞ்சிலேயே பழுத்தது என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தால்.

அதிலும் பல ஆண்களுக்கு பப்பி லவ் வருவதே தங்களை விட வயது அதிகமான பெண்கள் மீதுதான்.

எனக்கும் சின்ன வயசில் இப்படி ஒரு காதல் வந்து இருக்கிறது, அவளுக்கு என்னை விட 4 வயது அதிகம், அவளை பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகு என்று சொல்லலாம், அவள் எனக்கு சொந்த மச்சாளும் கூட, நான் எங்கள் வீட்டில் தங்கியதை விட அவர்கள் வீட்டில் தங்கியதுதான் அதிகம். அவர்கள் வீட்டிலும் சரி எங்கள் வீட்டிலும் சரி எங்கள் ரெண்டு பேருக்கும் தான் திருமணம் செய்து வைக்க போவதாக சொல்லி எங்களைக் கிண்டல் பண்ணுவார்கள். நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுத்தி திரிந்தாலும் இந்த திருமண விசயத்தைப்பற்றி எங்களுக்குள் பேசியதும் இல்லை மற்றவர்கள் பேசும் போது மறுத்ததும் இல்லை ஆனாலும் மனசுக்குள் ஒருவரை ஒருவர் நேசித்துக்கொண்டேதான் இருந்தோம், அதிலும் அவள் மேலான என் காதல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சில வருடங்களில் நடந்த யுத்தத்தின் காரணமான இடம்பெயர்வால் அவள் குடும்பமும் எங்கள் குடும்பமும் பிரிந்து விட்ட நிலையிலும் அவள் மேலான என் காதல் மட்டும் வளர்ந்து கொண்டேதான் இருந்தது.

சமீப காலத்தில் அவள் மேலான என் காதலை கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையில் "டேய் உன் மச்சாளுக்கு கல்யாணமாம்டா .. பையன் வெளி நாட்டில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறானாம்" என்று என் உறவினர் ஒருவர் சொன்ன போது மனசு வலித்தது இன்னும் மிச்ச சொச்சம் இருக்கும் அவள் மேலானா காதலையே காட்டிக்கொடுத்தது.

முடிந்து போன என்னுடைய இந்த பழைய காதல் கதையை இப்போது என் நண்பர்கள் யாரிடமாவது சொன்னால் அவர்கள் கேக்கும் முதல் கேள்வி, டேய் லூசாடா நீ..! எப்புடிடா உன்னை விட 4 வயசு அதிகமான பெண்ணை காதலிச்ச..! என்றுதான். ஒரு ஆண் தன்னை விட 7, 8 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போது ஒரு பெண் ஏன் தன்னை விட வயது குறைந்த ஆணை திருமணம் செய்யக்கூடாது..! இது என் பதில் வாதமாக இருக்கும். அதற்க்கு அவர்கள் எப்போதுமே சரியான பதில் தந்ததே இல்லை, இங்கு வெளி நாட்டில் தன்னை விட வயது மூத்த பெண்களை ஆண்கள் சர்வசாதாரணமாக திருமணம் செய்துகொன்று சந்தோஷமாக வாழ்வதை பார்த்து இருக்கிறேன்,

ஆனால் நம் நாட்டில்தான் நாம் இத்தகைய திருமணங்களை ஆதிரிப்பது இல்லை, தப்பித்தவறி ஒரு சில திருமணங்கள் இப்படி நடந்து விட்டால் கூட அதை நம்மால் முடிந்தளவு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கேவலப்படுத்தி பேசுகின்றோம். தங்களை விட வயது அதிகமான பெண்களை மனசுக்குள்ளேயே காதலித்து சுற்றியிருப்பவர்களுக்கு பயந்து அதை வெளியே சொல்லாமல் இருக்கும் எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறேன், ஒருவிதத்தில் அவர்கள் மேல் பரிதாபம் வந்தாலும் அதிகமாக அவர்கள் கோழைத்தனம் மீது கோவம்தான் வருகிறது. நாம் வெளி நாட்டவர் போல் வாழவேண்டும் என்பது என் வாதம் அல்ல இந்த திருமண விசயத்தை அவர்களைப்போல் சர்வசாதாரணமாக எடுத்து ஏன் கடந்து போகக்கூடாது என்பதுதான் என் வாதம்.

அண்மையில் கூட ஒரு பத்திரிகையில் இப்படிப்பட்ட ஒரு திருமண செய்தி வந்து இருந்தது, அதற்க்கு வந்து இருந்த வாசகர் கருத்துரைகள் பெரும்பாலும் அவர்களை கேவலமாக சித்தரித்தே வந்து இருந்தது, அதிலும் ஒரு சில வாசகர்கள் ஒரு படி மேலே போய் இத்தகைய திருமணம் செய்துகொண்ட சில பிரபல ஜோடிகளை குறிப்பாக "ஐஸ்வர்யா - தனுஷ்" 'ஐஸ்வர்யா ராய் - அபிஷேக்பச்சன்" போன்றவர்களையும் மிகமோசமாக விமர்சித்திருந்தமை அவர்களுடைய ஊனமான மனசையே காட்டிகொடுத்தது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் அது ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்று எதுவும் பார்ப்பது இல்லை அப்படி இருக்கையில் அது வயசை மட்டுமா பாக்க முடியும்..? அதிலும் 40 வயது ஆண் 20 வயது பெண்ணை திருமணம் செய்தால் அதை சர்வசாதாரணமாக எடுக்கும் நம் அறிவுஜீவிகள் ஏன் ஒரு பெண் ஒரு சில வயது மட்டுமே குறைந்த ஆணைத்திருமணம் செய்தால் மட்டும் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அந்த பெண்ணின் நடத்தையையே தப்பா பேசுகிறார்கள். இங்கே ஆண் செய்தது தவறு இல்லை என்றால் பெண் செய்தது மட்டும் எப்படி தவறாகும்..!

http://www.thusyanthan.com/2011/06/blog-post.html

Share this post


Link to post
Share on other sites

வயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா?

தப்பை தப்பே என்று சொல்லி வாதிட வரவில்லை.

காதல்... எப்படி வந்தால் என்ன அதை வாழ வைப்போம்.

Share this post


Link to post
Share on other sites

[size=3]எமது சமுதாயம் மூடநம்பிக்கையில் பின்னப்பட்டது. அது மட்டுமல்ல அடுத்தவனை விடுப்பு பார்க்கிற சமுதாயம்.[/size][size=1]

[size=3]நீங்கள் உங்களுக்காக வாழ நினைத்தால் காதலை வாழ வையுங்கள். [/size][/size][size=1]

[size=3]சமுதாயத்துக்காக வாழ நினைத்தால் உங்கள் காதலை சாகடியுங்கள்.[/size][/size]

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

பெண்கள் வேலைச் சுமை, குழந்தை பெறுவது போன்ற பாதிப்புகளால் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடுவர். ஆண்கள் அப்படி அல்ல எப்போதும் அவர்கள் வயது குறைந்தவர்களாகவே காணப்படுவர்.முதலில் உண்மையான காதலாகத் தெரிவது,பெண்ணும் முதுமை கண்டதும் ஆண்களுக்கு அவலட்ச்சனமாக ஆகிவிடும். அதன் பின் அவர்கள் மனைவியை மதிப்பதையோ தொடர்ந்து அன்பு செலுத்துவதையோ மறந்து வேறு பெண்ணை நாடவோ அல்லது மனைவியுடன் ஒட்டாத வாழ்க்கையோ வாழ முனைவர். அதன்பின் குடும்பம் பிரியும் நிலையோ அல்லது கடமைக்காக வாழும் வால்வோதான் தொடரும்.அத்தோடு பெண்கள் குடும்பத்தை மட்டுமல்ல கடைசி காலத்தில் கணவனையும் பார்க்கவேண்டிய தொண்டு செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகின்றாள்.தங்கள் சுயனலத்துக்காக்கவும்தான் ஆண்களே வயது கூடிய பெண்ணைத் திருமணம் செய்யத் தடை போட்டனர். அதுவே தமிழர் பண்பாடாகி விட்டது இன்றுவரை.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

மூடத்தனமேயன்றி வெறெதுவுமில்லை.

Share this post


Link to post
Share on other sites

தெரியவில்லை.

இனித்தான் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

[size=5]கிழவி மேல் காதல் கொள்ளடா - தமிழா

கிழவி மேல் காதல் கொள்ளடா............[/size]

-திருச்சி லோகநாதன்-

Share this post


Link to post
Share on other sites

[size=5]கிழவி மேல் காதல் கொள்ளடா - தமிழா

கிழவி மேல் காதல் கொள்ளடா............[/size]

-திருச்சி லோகநாதன்-

அது கிளவியாக இருக்கும்!

Share this post


Link to post
Share on other sites

வயதில் மூத்த பெண்களைக் காதல் செய்த அனுபவம் இல்லை என்று சொல்ல முடியாது. :rolleyes: ஒரே ஒரு லைன் அரசல் புரசலாக ஓடிய அனுபவம் உள்ளது.. :lol:

Share this post


Link to post
Share on other sites

இது சரியா பிழையா என்று தெரியவில்லை. ஆனால் என்னை விட வயதில் குறைந்த ஒருவர் எனக்கு ஐ. லவ். யு சொன்னார். :lol: அதிலிருந்து தம்பி தானே என்று நினைத்து பழகுபவர்களிடமும் உசாராக தான் இருப்பேன். :D

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வயதில் மூத்த பெண்களைக் காதல் செய்த அனுபவம் இல்லை என்று சொல்ல முடியாது. :rolleyes: ஒரே ஒரு லைன் அரசல் புரசலாக ஓடிய அனுபவம் உள்ளது.. :lol:

எப்படி இசை வயதுக்கு குறைந்தவர்களையே முடியல ..........வயதிற்கு கூடியவர்களை எப்படியப்பா ................. :D

Share this post


Link to post
Share on other sites

எப்படி இசை வயதுக்கு குறைந்தவர்களையே முடியல ..........வயதிற்கு கூடியவர்களை எப்படியப்பா ................. :D

அதுக்கெல்லாம் ஒரு தனித்திறமை வேணும்ணே.. :rolleyes::lol::icon_idea:

Share this post


Link to post
Share on other sites

அதுக்கெல்லாம் ஒரு தனித்திறமை வேணும்ணே.. :rolleyes::lol::icon_idea:

ஓகே பாஸ் :D :D :D

Share this post


Link to post
Share on other sites

எப்படி இசை வயதுக்கு குறைந்தவர்களையே முடியல ..........வயதிற்கு கூடியவர்களை எப்படியப்பா ................. :D

[size=1]மனசு பெரிசா இருந்தால்...............[/size][size=1]

வயசை பார்க்க கண்களுக்கு தெரிவதில்லை. காதல் தானாகவே வந்துவிடும்.[/size]

Share this post


Link to post
Share on other sites

இதை எழுதியவர் தலைப்பை இருபகுதியினருக்கும் பொதுவான தலைப்பாக வைத்திந்தால் நன்றாக இருந்திருக்கும்....சில வயது குறைந்த பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலை எனக்கும் முகநூலில் ஏற்படுவதுண்டு......கதைக்க தொடங்கும் போதே வணக்கம் தம்பி என்று விடுவேன்.....தம்பி என்றால் லூசு என்று சொல்லி திட்டுவீனம்,எருமை எண்டுவீனம் சிரிக்கிறதா அழுகிறதா என்று புரியாமல் இருக்கும்...

சில சமயம் இடக்கு,முடக்கான கேள்வி கேட்பவர்களை கேட்டு முடிக்கிறதுக்குள் அவ்விடத்தை விட்டு அகற்றி விடுவேன்... இந்த பேஸ்புக் எல்லாம் வேணுமா விட்டு எறிந்துட்டு நம்ம பாட்டுக்கு போய் விட்டால் என்ன என்று தோன்றும்...என்ன செய்வது காலக்கிரமத்தில் பார்ப்போம்..சரி இனி பொதுவான கருத்துக்கு வாறன்....

கடந்த இரண்டு கிழமைக்கு முன்னர் எனது நண்பி ஒருத்திக்கு அவாவிலும் பார்க்க 9 வயது கூடிய ஆண் ஒருவருக்கு திருமண ஒப்பந்தம் செய்து முடிக்கப்பட்டு இருக்கிறது..படத்தை பார்த்துட்டு இந்தப் பிள்ளை இதற்கு ஓம் பண்ணாமலே இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது...தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படும்போது ஒன்றுமே செய்ய இயலாது...இப்படி தங்களிலும் பார்க்க நிறையவே வயது கூடிய ஆண்களை திருமணம் செய்த பெண் பிள்கைள் இருக்கிறார்கள்.....ஆண்கள் தங்களிலும் பார்க்க அதிகம் வயதான பெண்களை திருமணம் செய்ய முனையும் போது, யதார்த்தத்துக்கு ஒவ்வாத ஒன்றை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று தான் மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள்...

Share this post


Link to post
Share on other sites

காதலிக்கலாம் !!!!!!!!!..... ஆனால் கலியாணம்..குடித்தனம் என்றால் பிற்காலத்தில் உடல் உளவியல் ரீதியாக பல பாதிப்புகள் ,மன உளைச்சல்களை சந்திக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

[size=5]கிழவி மேல் காதல் கொள்ளடா - தமிழா

கிழவி மேல் காதல் கொள்ளடா............[/size]

-திருச்சி லோகநாதன்-

இவர் பீர் குடித்துவிட்டு எழுதியுள்ளார்,

BeforeandAfterBeer.gif

http://www.ebaumsworld.com/pictures/view/36147/

Share this post


Link to post
Share on other sites

வயது அதிகமான பெண்களைக் காதலித்து, கலியாணம் கட்டும் போது... பல தாம்பத்திய பிரச்சினைகளை வயது போன காலத்தில்... ஏற்படுத்தலாம். ஆண்கள் 70, 80 வயது வரையிலும்... தாம்பத்திய சுகத்தில்.. ஈடுபடக்கூடியதாக, அவர்களின் உடலமைப்பு உள்ளது.

பெண்களுக்கு... 50. 60 வயதிலேயே... தாம்பத்தியத்தில் நாட்டம் குறைந்து விடுகின்றதால்....

ஆண்கள் 10, 15 வயது இளம் பெண்களைத் திருமணம் செய்யும் போது.... கட்டையிலை போற‌ கடைசிக் காலம் மட்டும்... இல்லற சுகத்தை அனுபவிக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

[size=3]எமது சமுதாயம் மூடநம்பிக்கையில் பின்னப்பட்டது. அது மட்டுமல்ல அடுத்தவனை விடுப்பு பார்க்கிற சமுதாயம்.[/size][size=1]

[size=3]நீங்கள் உங்களுக்காக வாழ நினைத்தால் காதலை வாழ வையுங்கள். [/size][/size][size=1]

[size=3]சமுதாயத்துக்காக வாழ நினைத்தால் உங்கள் காதலை சாகடியுங்கள்.[/size][/size]

நம்மவர்களுக்கு எதைச் சொல்லியும் பிரியோசனம் இல்லை....

Share this post


Link to post
Share on other sites

வயது அதிகமான பெண்களைக் காதலித்து, கலியாணம் கட்டும் போது... பல தாம்பத்திய பிரச்சினைகளை வயது போன காலத்தில்... ஏற்படுத்தலாம். ஆண்கள் 70, 80 வயது வரையிலும்... தாம்பத்திய சுகத்தில்.. ஈடுபடக்கூடியதாக, அவர்களின் உடலமைப்பு உள்ளது.

பெண்களுக்கு... 50. 60 வயதிலேயே... தாம்பத்தியத்தில் நாட்டம் குறைந்து விடுகின்றதால்....

ஆண்கள் 10, 15 வயது இளம் பெண்களைத் திருமணம் செய்யும் போது.... கட்டையிலை போற‌ கடைசிக் காலம் மட்டும்... இல்லற சுகத்தை அனுபவிக்கலாம்.

மாட்டுக்கு நலமடிப்பவருடன் தர்க்கப்பட்டு அவரால் நலமெடுக்கப்பட்டவர்களின் கருத்துக்கூட ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு