Jump to content

தி இராவணன் கோட்


Recommended Posts

"தி இராவணன் கோட்" (The Ravana Code) - சிறுகதை

அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவே நினைத்துக் கொண்டான்.

இனி எப்படி வெளியே தலை காட்டுவது? இதற்கா இத்தனை இழப்புக்களும்? சனம் கை கொட்டிச் சிரிக்குமே? தம்பிமார்கள் கேட்டால் என்ன சொல்வது? சீதையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அனுமன் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இராமனின் மனதில் பல சிந்தனைகள் ஓடி அவனை மேலும் குழப்பின. "இருவரையும் கொன்று விடுவோமா?" இராமன் யோசித்தான். "வேண்டாம், கொன்று விட்டால் விசயம் எல்லோருக்கும் தெரிந்து விடும்". தனக்குத்தானே பேசிக் கொண்டான் ராமன். "கொல்வது என்றால் பணிப்பெண்ணையும் அல்லவா கொல்ல வேண்டும்". சிந்திக்க தலையே வெடித்துவிடும் போலிருந்தது இராமனுக்கு.

அப்பொழுது அந்தப் பணிப்பெண் நடுங்கியபடி இராமனின் அருகில் மெதுவாக வந்தாள். "மாகாராஜா! என்னைக் எதுவும் செய்து விடாதீர்கள்! நான் இதை யாரிடமும் வெளியில் சொல்ல மாட்டேன்! சத்தியம் மகாராஜா! என்னை நம்புங்கள்!" கதறி அழுதாள் பணிப்பெண். "சத்தம் போடாதே! யாராவது வந்து விடப் போகிறார்கள்" இராமன் பணிப்பெண்ணின் வாயைப் பொத்தினான். "நான் தண்டிப்பது என்றால் சீதையை அல்லவா தண்டிக்க வேண்டும்! நீ பயப்படாமல் போ!" வெறுப்போடும், இயலாமையோடும் சொன்னான் இராமன். அந்த அழகான பணிப்பெண் கொஞ்சம் நம்பிக்கையோடும், கொஞ்சம் சந்தேகத்தோடும் திரும்பி நடந்தாள். திடீரென்று இராமனுக்கு ஒரு எண்ணம். "பழிக்குப் பழியாக நானும் இந்தப் பணிப்பெண்ணுடன்......". ஒரு முடிவோடு பணிப்பெண்ணை நோக்கிச் சென்ற இராமன் சட்டென்று நின்றான். "வேண்டாம், என் தந்தை போன்று நானும் இருக்க வேண்டாம்". அந்த நேரத்தில் இராமனுக்கு ஏற்பட்ட நல்ல சிந்தனை பணிப்பெண்ணைக் காத்தது.

ஆனால் இப்பொழுது சீதையால் ஏற்பட்டிருக்கும் விபரீதத்திற்கு என்ன செய்வது என்று இராமனுக்கு புரியவில்லை. சீதை கர்ப்பமாக இருக்கின்றாள் என்று பணிப்பெண் ஓடி வந்து சொன்ன பொழுது இராமன் பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஓடி வந்த செய்தி சொன்ன அதே பணிப்பெண் பிரசவமும் பார்த்தாள். அழகான குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் இராமனின் மகிழ்ச்சி தொலைந்து விட்டது. "என்ன செய்யலாம்? கடுமையாக சிந்திக்கத் தொடங்கினான் இராமன். சில நிமிடங்கள் கடுமையாக சிந்தித்த பிறகு அவனது மனதில் ஒரு திட்டம் உதித்தது. "விசயம் வெளியே தெரிவதற்கு முன்பு சீதையையும் குழந்தையையும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்". முடிவு எடுத்து விட்டதால் சோகத்திலும் இராமனின் முகம் பிரகாசமாகியது. "ஒரு சலவைத் தொழிலாளி சீதையைப் பற்றி தவறாகப் பேசினான், அதனால் காட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட வேண்டியதுதான்". இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது.

காட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒரு முறை சீதையை பார்க்க நினைத்தான். அந்தப்புரத்தை நோக்கி சத்தம் போடாமல் நடந்தான். சீதைக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அருகில் குழந்தை விழித்தபடி படுத்திருந்தது. கிட்ட நெருங்கினான் இராமன். குழந்தை தனது பத்து தலைகளாலும் இராமனை நிமிர்ந்து பார்த்து அழகாகச் சிரித்தது.

- வி.சபேசன் (22.05.06)

குறிப்பு: தி டாவின்சி கோட் திரைப்படம் குறித்து பேசிக் கொண்டிருந்த பொழுது தோன்றிய சிந்தனையில் உருவான சிறுகதை. சிலவேளைகளில் உண்மையாகவும் இருக்கலாம்.

நன்றி: வெப் ஈழம்

Link to comment
Share on other sites

ஓஹோ டாவின்ஸி கோட் போல தி இராவணன் கோட் டா? ம்ம் எழுத்தாளர் நல்லாதான் எழுதி இருக்கிறார். இணைப்புக்கு நன்றி மதுரன்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

"தி இராவணன் கோட்டா" உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.... ஏனெனில் அது நன்றாக இருக்கிறது. :-)

Link to comment
Share on other sites

இந்தக் கதையை ஆரம்பத்தில் நான் யாழ்களத்தில் இணைத்த பொழுது நீக்கித்தான் விட்டார்கள். பின்பு மதுரன் இணைத்த பொழுது நீக்கவில்லை. மதுரனுக்கு என்னுடைய நன்றிகள்.

இந்தக் கதையை தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "உண்மை" இதழிலும் பிரசுரித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • 6 years later...

இக்கதைக்கும் சீதைக்கு கோவில் நுவரெலியாவில் கட்டுவதற்கும் சம்பந்தமுண்டு போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கு எழுத்தாளர்களின் கற்பனையும்,சிந்தனையும் தாங்க முடியவில்லை..... :D

Link to comment
Share on other sites

மிக அருமையான கதை. பதிவுக்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது.  /////

 

இந்தக்கதையை முன்பு சபேசனின் வெப்ஈழத்திலும் , பின்பு கருத்துக்களத்திலும் படிக்கநேர்ந்தது . கதை சிறியதானாலும் சபேசனின் தனிப்பட்ட முத்திரைகள் என்னைக் கவர்ந்தன . என்னைப்பொறுத்தவரையில் ஒரு கதையைப் பலவருடங்கள் கழித்து பார்கும்பொழுது அதில் சொல்லப்பட்ட விடையங்கள் சமகாலநிகழ்வுடன் பொருந்திவருமானால் அதுவே காத்திரமான வெற்றிப்படைப்பு என்பேன் . அந்தவகையில் தி இராவணன் கோட் மிகச்சிறந்த வெற்றிப்படைபே . இந்தக் கதையை இன்றய தெரிவுக்கு தெரிவு செய்த நிர்வாகத்துக்குப் பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.