Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தி இராவணன் கோட்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

"தி இராவணன் கோட்" (The Ravana Code) - சிறுகதை

அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவே நினைத்துக் கொண்டான்.

இனி எப்படி வெளியே தலை காட்டுவது? இதற்கா இத்தனை இழப்புக்களும்? சனம் கை கொட்டிச் சிரிக்குமே? தம்பிமார்கள் கேட்டால் என்ன சொல்வது? சீதையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அனுமன் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இராமனின் மனதில் பல சிந்தனைகள் ஓடி அவனை மேலும் குழப்பின. "இருவரையும் கொன்று விடுவோமா?" இராமன் யோசித்தான். "வேண்டாம், கொன்று விட்டால் விசயம் எல்லோருக்கும் தெரிந்து விடும்". தனக்குத்தானே பேசிக் கொண்டான் ராமன். "கொல்வது என்றால் பணிப்பெண்ணையும் அல்லவா கொல்ல வேண்டும்". சிந்திக்க தலையே வெடித்துவிடும் போலிருந்தது இராமனுக்கு.

அப்பொழுது அந்தப் பணிப்பெண் நடுங்கியபடி இராமனின் அருகில் மெதுவாக வந்தாள். "மாகாராஜா! என்னைக் எதுவும் செய்து விடாதீர்கள்! நான் இதை யாரிடமும் வெளியில் சொல்ல மாட்டேன்! சத்தியம் மகாராஜா! என்னை நம்புங்கள்!" கதறி அழுதாள் பணிப்பெண். "சத்தம் போடாதே! யாராவது வந்து விடப் போகிறார்கள்" இராமன் பணிப்பெண்ணின் வாயைப் பொத்தினான். "நான் தண்டிப்பது என்றால் சீதையை அல்லவா தண்டிக்க வேண்டும்! நீ பயப்படாமல் போ!" வெறுப்போடும், இயலாமையோடும் சொன்னான் இராமன். அந்த அழகான பணிப்பெண் கொஞ்சம் நம்பிக்கையோடும், கொஞ்சம் சந்தேகத்தோடும் திரும்பி நடந்தாள். திடீரென்று இராமனுக்கு ஒரு எண்ணம். "பழிக்குப் பழியாக நானும் இந்தப் பணிப்பெண்ணுடன்......". ஒரு முடிவோடு பணிப்பெண்ணை நோக்கிச் சென்ற இராமன் சட்டென்று நின்றான். "வேண்டாம், என் தந்தை போன்று நானும் இருக்க வேண்டாம்". அந்த நேரத்தில் இராமனுக்கு ஏற்பட்ட நல்ல சிந்தனை பணிப்பெண்ணைக் காத்தது.

ஆனால் இப்பொழுது சீதையால் ஏற்பட்டிருக்கும் விபரீதத்திற்கு என்ன செய்வது என்று இராமனுக்கு புரியவில்லை. சீதை கர்ப்பமாக இருக்கின்றாள் என்று பணிப்பெண் ஓடி வந்து சொன்ன பொழுது இராமன் பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஓடி வந்த செய்தி சொன்ன அதே பணிப்பெண் பிரசவமும் பார்த்தாள். அழகான குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் இராமனின் மகிழ்ச்சி தொலைந்து விட்டது. "என்ன செய்யலாம்? கடுமையாக சிந்திக்கத் தொடங்கினான் இராமன். சில நிமிடங்கள் கடுமையாக சிந்தித்த பிறகு அவனது மனதில் ஒரு திட்டம் உதித்தது. "விசயம் வெளியே தெரிவதற்கு முன்பு சீதையையும் குழந்தையையும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்". முடிவு எடுத்து விட்டதால் சோகத்திலும் இராமனின் முகம் பிரகாசமாகியது. "ஒரு சலவைத் தொழிலாளி சீதையைப் பற்றி தவறாகப் பேசினான், அதனால் காட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட வேண்டியதுதான்". இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது.

காட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒரு முறை சீதையை பார்க்க நினைத்தான். அந்தப்புரத்தை நோக்கி சத்தம் போடாமல் நடந்தான். சீதைக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அருகில் குழந்தை விழித்தபடி படுத்திருந்தது. கிட்ட நெருங்கினான் இராமன். குழந்தை தனது பத்து தலைகளாலும் இராமனை நிமிர்ந்து பார்த்து அழகாகச் சிரித்தது.

- வி.சபேசன் (22.05.06)

குறிப்பு: தி டாவின்சி கோட் திரைப்படம் குறித்து பேசிக் கொண்டிருந்த பொழுது தோன்றிய சிந்தனையில் உருவான சிறுகதை. சிலவேளைகளில் உண்மையாகவும் இருக்கலாம்.

நன்றி: வெப் ஈழம்

Link to comment
Share on other sites

ஓஹோ டாவின்ஸி கோட் போல தி இராவணன் கோட் டா? ம்ம் எழுத்தாளர் நல்லாதான் எழுதி இருக்கிறார். இணைப்புக்கு நன்றி மதுரன்.

Link to comment
Share on other sites

 • 4 months later...
 • கருத்துக்கள உறவுகள்

"தி இராவணன் கோட்டா" உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.... ஏனெனில் அது நன்றாக இருக்கிறது. :-)

Link to comment
Share on other sites

இந்தக் கதையை ஆரம்பத்தில் நான் யாழ்களத்தில் இணைத்த பொழுது நீக்கித்தான் விட்டார்கள். பின்பு மதுரன் இணைத்த பொழுது நீக்கவில்லை. மதுரனுக்கு என்னுடைய நன்றிகள்.

இந்தக் கதையை தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "உண்மை" இதழிலும் பிரசுரித்தார்கள்.

Link to comment
Share on other sites

 • 6 years later...

இக்கதைக்கும் சீதைக்கு கோவில் நுவரெலியாவில் கட்டுவதற்கும் சம்பந்தமுண்டு போலுள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கு எழுத்தாளர்களின் கற்பனையும்,சிந்தனையும் தாங்க முடியவில்லை..... :D

Link to comment
Share on other sites

மிக அருமையான கதை. பதிவுக்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது.  /////

 

இந்தக்கதையை முன்பு சபேசனின் வெப்ஈழத்திலும் , பின்பு கருத்துக்களத்திலும் படிக்கநேர்ந்தது . கதை சிறியதானாலும் சபேசனின் தனிப்பட்ட முத்திரைகள் என்னைக் கவர்ந்தன . என்னைப்பொறுத்தவரையில் ஒரு கதையைப் பலவருடங்கள் கழித்து பார்கும்பொழுது அதில் சொல்லப்பட்ட விடையங்கள் சமகாலநிகழ்வுடன் பொருந்திவருமானால் அதுவே காத்திரமான வெற்றிப்படைப்பு என்பேன் . அந்தவகையில் தி இராவணன் கோட் மிகச்சிறந்த வெற்றிப்படைபே . இந்தக் கதையை இன்றய தெரிவுக்கு தெரிவு செய்த நிர்வாகத்துக்குப் பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BABUJI MUTHULIGAM   படக்குறிப்பு, பெண்கள், சிறார்களுக்கு எதிரான வன்முறைக்கு நீதி கோரி பெண் உரிமை ஆர்வலர்கள் பேரணி நடத்தினர். இலங்கை முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய இந்திய வம்சாவளி தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, தீ காயங்களுடன் இறந்த சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல இடங்களில் சிறார் மற்றும் பெண் உரிமைகள் தொடர்பிலான போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமி, கடந்த 3ஆம் தேதி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சமீபத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 15ம் தேதி உயிரிழந்த அந்த சிறுமியின் பிரேதப் பரிசோதனை, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.   அத்துடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பொரள்ளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது ஏன்? சஹரான் இந்தியா செல்ல ரிஷாட் பதியூதீனின் சகோதரனே உதவினார் - ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பு சிறுமி இறந்தது தொடர்பாக இதுவரை சுமார் இருபதுக்கும் அதிகமான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். ரிஷாட் மனைவி கைது இந்த நிலையில், சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் நேற்று (ஜூலை 23) அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். இதேவேளை, ரிஷாட் பதியூதீன் அமைச்சராக பதவி வகித்த 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலத்தில், அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ இல்லத்தில், பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ரிஷாட் பதியூதீன் மைத்துனரை (மனைவியின் சகோதரர்) போலீசார் நேற்று கைது செய்தனர். 22 வயதாகும் மலையக பெண் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். பட மூலாதாரம்,KRISHANTHAN   படக்குறிப்பு, நீதி கேட்டுப் போராட்டம் இது குறித்து காவல்துறை ஊடக பேச்சாளர் கூறுகையில், "16 வயது சிறுமியின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையில் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்தே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார். 4 பேர் நீதிபதி முன் ஆஜர் குறித்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு - புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். காவல்துறை வேண்டுகோளை ஏற்று அந்த நால்வரையும் 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சந்தேக நபர்களை வரும் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணியாற்றிய 11 மலையக பெண்கள், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தகவல் கிடைத்துள்ளது என பிரபல சிங்கள நாளிதழ் திவயின இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி இன்று இலங்கையில் மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. 11 மலையக பெண்களுக்கு என்ன நடந்தது? பட மூலாதாரம்,BABUJI MUTHULIGAM   படக்குறிப்பு, மலையகப் பெண்களுக்கு நடந்தது என்ன? 11 மலையக பெண்களும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும், அவர்களில் இருவர் மர்மமான முறையில் இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், 16 வயது சிறுமி தீ காயங்களுடன் இறந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய இரண்டு மலையக தமிழ் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவல்துறை சிறப்புக் குழுவொன்று மலையகம் சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆண் ஊழியர் தாக்கினார்: சிறுமியின் தாய் இதற்கிடையே, மலையகத்தின் ஹட்டன் - டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி இறந்த விவகாரத்தில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் நிலவுவதாக அவரது தாய் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GNANASANGARY SABTHSANGARY   படக்குறிப்பு, கிளிநொச்சியில் ஒரு போராட்ட வாசகம். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஊழியர், தனது மகளை தும்பு தடியால் தாக்குவதாக தனது மகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டார். எனினும், ரிஷாட் பதியூதீனின் மனைவியை அந்த சிறுமி எதிர்த்துப் பேசியதனாலேயே, தான் அந்த சிறுமியை தாக்கியதாக, குறித்த இளைஞன் தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் கூறியிருந்தார். குடும்ப வறுமை காரணமாகவே தனது மகளை வேலைக்கு அனுப்பியதாகவும் தனது மகளின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி, தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அந்த தாய் வலியுறுத்தினார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பதில் பட மூலாதாரம்,KRISHANTHAN   படக்குறிப்பு, மலையக மக்கள் போராட்டம். ரிஷாட் பதியூதீன் வீட்டில், 16 வயது சிறுமி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பான தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார். அவரது வீட்டிற்கு அருகே அறையொன்றில், அந்த சிறுமி தினமும் இரவு அடைக்கப்பட்டு, அதிகாலை வேலையிலேயே கதவு மீண்டும் திறக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 18 வயதுக்கு குறைவான சிறுமியொருவரை இரவு நேரத்தில் தனியான அறையில் பாதுகாப்பற்ற முறையில் அடைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றம்சாட்டப்படும் நபர்களுக்கு 2 முதல் 10 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, சிறார் விற்பனை, சிறார்களை விலைக்கு வாங்குவது போன்ற செயல்களுக்கும் அதற்கு உடந்தையாக இருப்பது, இலங்கை தண்டனை சட்ட கோவையின் 360சீ ஷரத்தின்படி, சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார். சிறுமிக்கு நீதி கோரி போராட்டம் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் சிறுமி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தலைநகரம், மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும், சிறார் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போராட்டத்தில் குரல்கள் ஒலிக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அரசை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. https://www.bbc.com/tamil/sri-lanka-57954339
  • ஐனநாயகம்  என்று சொல்லிவிட்ட தமழிரிடம்  கொடுப்பது  சாத்தியமில்லை ஆனால்  ஐனநாயகத்தின் அதி  உயர் பலிகள்  சிறுபான்மையினர் என்பதை  அப்பொழுது  அவர்கள்  புரிந்திருக்க  வைய்ப்பில்லை புரிந்தபோது???😭
  • நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 01 July 24, 2021 புதிய நாணய அச்சடிப்பு :   அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ன?  பகுதி 1.        — வி.சிவலிங்கம் —  இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவிட் – 19 தொற்று நோயின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பெருமளவில் உள்நாட்டு உற்பத்தி தளர்ந்து வெளிநாட்டு இறக்குமதியிலும், உல்லாசப் பயணத்துறையிலும், மத்திய கிழக்கு இலங்கையர்களின் வருமானத்திலும் தங்கியிருந்த நாடு அவை பாதித்துள்ள நிலையில் வெளிநாட்டுச் செலாவணியின் பற்றாக்குறை காரணமாக பல பிரச்சனைகளை எதிர்நோக்கி உள்ளது.   உள்நாட்டு உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்து, வெளிநாட்டுக் கடன்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரித்த நிலையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முதலீடுகளை ஊக்குவிக்க முடியாத நிலையில் நாடு உள்ளது. ஏனெனில் அதற்கான அடிப்படை ஏற்பாடுகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலான நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளால் கைவிடப்பட்டுள்ளன. இறக்குமதியும் தடுக்கப்பட்டு, உள்நாட்டு உற்பத்தியும் தடைப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளன. அதிகளவு பணத்தைச் செலவழித்தாலும் பொருட்களைப் பெறமுடியாத நிலை காணப்படுவதால் பணவீக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.   பண வீக்கமும், கடன் பளுக்களும்  நாட்டில் பணவீக்கம் அதிகரிக்குமானால் அதனைத் தொடர்ந்து பல பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்கான அடையாளங்கள் ஏற்கெனவே வேலை நிறுத்தம் மற்றும் ஆங்காங்கே எழும் போராட்டங்கள் என்பற்றின் மூலம் ஆரம்பித்துள்ளன. சில பிரச்சனைகளை நாம் அவதானிப்பின் குறிப்பாக அரச ஊழியர்கள் தாம் பெறும் சம்பளத்தின் மூலம் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளனர். கொரொனா நோயின் தாக்கத்திற்கு முன்பதாக இருந்த பொருளாதார நிலமைகளைக் கருத்தில் கொண்டு பலர் வங்கிகளில் கடன்களைப் பெற்றனர். வர்த்தகம், ஓட்டோமோபைல் வாகனம், மோட்டார் சைக்கிள், புதிய வீட்டுக் கடன், விவசாயக் கடன் என சமூகத்தின் வெவ்வேறு பிரிவினர் கடன் பெற்றனர். தற்போது வேலைவாய்ப்பு அற்ற நிலமைகள், கொரொனா நோயின் ஆபத்துகள், சந்தைகள் மூடப்பட்டதால் விற்பனை முடக்கப்பட்ட நிலமைகள் என வருமானமீட்டும் துறைகள் மூடப்பட்டுள்ளதால் அம் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.  சேமிப்புகள் வற்றிச் செல்லல்  இதற்கிடையில் நாட்டில் ஏற்கெனவே நிலவும் அரச ஊழல்கள், நிதிச் சந்தை மோசடிகள், கறுப்புச் சந்தை வர்த்தகம், கட்டுப்பாட்டு விலை மோசடிகள் போன்றவை மிகவும் துரிதமடைந்துள்ளன. தற்போது பொருட்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு நாணயங்களும் பதுக்கப்படுகின்றன. இலங்கையின் நாணயப் பெறுமதி இறக்கமும், உள்நாட்டில் படிப்படியாக ஏற்பட்டு வரும் பணவீக்கமும் வங்கிகளிலுள்ள சேமிப்பின் பெறுமதிகளைக் குறைத்துள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக் காரணமாக மக்களின் சேமிப்புகள் வற்றி வருகின்றன. இலங்கை ருபாய்களில் சேமிப்பிலிட்டோர் அவற்றை அந்நிய நாணயங்களில் மாற்றி வருகின்றனர். அதாவது இலங்கை நாணயத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர்.    இப் பிரச்சனைகளுக்கு அரசு மட்டும் காரணமா?  இத் தாக்கங்கள் பலவும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் என்பதை விட, அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தாக்கங்களே இக் கொடிய நிலமைகளை ஏற்படுத்தியுள்ளன. ஏற்றுமதி வருமானமும் இல்லாமல், தொழிற்துறைகளுக்கான மூலப் பொருள் இறக்குமதியும் தடைசெய்யப்பட்ட நிலையில் உள்நாட்டு ஏற்றுமதி வர்த்தகத்தில்  அபிவிருத்தியை மேற்கொள்வது எப்படி? என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இவை இலங்கைக்கு மட்டுமே உரிய பிரச்சனைகள் அல்ல. உலகம் முழுவதிலும் குறிப்பாக இலங்கை போன்ற நவதாராளவாத பொருளாதார கட்டுமானத்திற்குள் வாழும் நாடுகளில் பல இவ்வாறான பாரிய நெருக்கடிக்குள் சிக்கி உள்ளன.   இவ்வாறான பொருளாதார சிக்கலில் குறிப்பாக வெளிநாட்டு வருமானங்களில் அதாவது உல்லாசப் பயணத்துறை,ஆடைத் தொழில், தேயிலை, ரப்பர் மற்றும் பாரம்பரிய ஏற்றமதிகளில் தங்கியுள்ள இலங்கை இந்த வருமானங்கள் குறைவடைந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு எவ்வாறான மாற்று ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? என்ற கேள்விகள் எழுகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் ஏற்கெனவே அதிகளவு சேமிப்பை வைத்திருப்பதால் உள்நாட்டு உற்பத்தி,ஏற்றுமதி என்பவற்றால் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு என்பவற்றை ஓரளவு சமாளிக்க முடிந்தது, ஆனால் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரொனா நோய் காரணமாக எழுந்துள்ள உற்பத்திப் பாதிப்பு, நுகர்வு பாதிப்பு, சுகாதார கெடுபிடிகள் போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்வது எவ்வாறு? என்ற கேள்விகள் எழுகின்றன.  அமெரிக்காவில் எழுந்துள்ள நிதிக் கொள்கை விவாதங்கள்  அமெரிக்காவில் அமைந்துள்ள ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தலைமையிலான அரசு பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. அவருக்கு முதல் ஜனாதிபதியாக செயற்பட்ட டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தியது. குறிப்பாக சீனாவிலிருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டமையால் உள்நாட்டு உற்பத்திகளின் விலை அதிகரித்தது. பல ஆண்டுகளாக வருமான அதிகரிப்பு மட்டுப்படுத்த நிலையில் வாழ்ந்த மக்கள் மலிவான சீன இறக்குமதிகளைப் பயன்படுத்தினர். தற்போது அதிக விலை செலுத்துவதால் வருமானப் பற்றாக்குறை மக்களைக் கடன் பளுவுக்குள் தள்ளி வருகிறது.    அமெரிக்காவின் பொருளாதாரம் மிக அதிகளவில் ஏற்றுமதி வர்த்தகத்தில் தங்கியுள்ளது. பல அமெரிக்க நிறுவனங்கள் மலிவான உற்பத்திச் செலவை எதிர்பார்த்து சீனா, பங்களாதேஷ், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தமது உற்பத்தி நிறுவனங்களை நிர்மாணித்தன. இதன் விளைவாக உள்நாட்டில் தொழில்வாய்ப்புக் குறைந்து, அரச கொடுப்பனவுகள் அதிகரித்தன. இப் பின்னணியில் கொரொனா நோயின் தாக்கங்கள் அந் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளன. இக் கொடிய நோய் நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, மக்களின் எதிர்கால சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்றவற்றின் பலவீனங்களையும் அடையாளப்படுத்தியுள்ளது.   கடந்த காலங்களில் திறந்த சுதந்திரமான போட்டிச் சந்தை நடவடிக்கைகள் சுயாதீனமாக இயங்க அனுமதிப்பதன் மூலமே உற்பத்தி அதிகரிப்பையும், விலைக் கட்டுப்பாட்டையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்ற கொள்கைகள் வகுக்கப்பட்டன. ஆனால் உலக அளவிலான உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலிக் கோர்வைகள் தற்போது அறுந்துள்ள நிலையில் சுதந்திர வர்த்தகம் என்பது மிகவும் கேள்விக்குறியாகி ஒவ்வொரு நாடும் தத்தமது உள்நாட்டுப் பொருளாதாரத்தினை மூடிய நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. உதாரணமாக, அமெரிக்கா இறக்குமதி தடைகளை விதித்து, அமெரிக்கர்கள் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். பிரித்தானியா தனது தனித்துவ பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கில் ஐரோப்பிய சந்தையிலிருந்து விலகியுள்ளது. இவ்வாறே பல நாடுகள் தத்தமது பொருளாதாரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு மூடிய நிலைக்கு எடுத்துச் செல்கின்றன.  அமெரிக்காவில் வேலை அற்றோர் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. கொரொனா நோய் காரணமாக பல தொழில் நிறுவனங்கள், உணவு விடுதிகள், உல்லாசப் பயணத்துறை போன்றவை மூடப்பட்டுள்ளதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கு மத்தியதர வர்க்கத்தினரே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாகவே பல  உலக நாடுகள் தத்தமது பொருளாதாரத்தை மூடிய நிலைக்கு மாற்றும்போது ஏற்றுமதி வர்த்தகத்தில் தங்கியிருந்த அமெரிக்க பொருளாதாரம் சீனாவுடனான வளர்ச்சியுடன் போட்டியிட முடியாத அளவிற்கு பிரச்சனைகளுக்குள் சிக்கியுள்ளது.  அமெரிக்காவும், நவீன நாணயக் கோட்பாடும்  அமெரிக்காவில் தற்போது பதவியிலுள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசு ஏற்பட்டு வரும் பாரிய பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க புதிய வழிகளை நோக்கிச் செல்கிறது. கடந்த காலங்களில் வரி விதிப்பு மூலமும், பெரும் பணக்காரர்கள் முதலீட்டை மேற்கொள்ளும் வகையில் வரிச் சலுகைகளையும்  அறிவித்து வந்தனர். தற்போது தனியார்துறையினர் தமது பணத்தை முதலீடு செய்யத் தயங்கி வருகின்றனர். இந் நிலையில் அரசு முதலீட்டை மேற்கொண்டால் மட்டுமே கேள்வியை அதிகரிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறாயின் அரசு சமூக கட்டுமானங்களில் தனது முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது தற்போது கல்வி, போக்குவரத்து, தொழில் நுட்பம், வீட்டு வசதிகள் எனப் பல துறைகளில் முதலீடு செய்து பல மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வறுமையிலிருந்து காப்பாற்றி வருகிறது.   தற்போது அமெரிக்க அரசு உள்நாட்டு வங்கிகளிடம் பாரிய கடன்களைப் பற்று வருகிறது. பாரிய நிதி நிறுவனங்களே மேலும் பணத்தைக் குவிக்கின்றன. இந்த நிலையைத் தடுக்க வேண்டுமெனில் அரசு புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு அதனைக் குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்து வேலைவாய்ப்பை அதிகரித்து வருமானத்தை அதிகரிக்க வேண்டும். எனவே புதிய நாணயத்தை அச்சிட்டு வெளியிடுவது என்பது குறிப்பிட்ட திட்டங்களில் அப் பணத்தை முதலீடு செய்து அபிவிருத்தியை மேற்கொள்வதாகும். அக் கொள்கையின் அடிப்படையில் அதாவது ஏற்கெனவே குறிப்பிட்ட எம் எம் ரி கொள்கையே (நவீன நாணயக் கோட்பாடு – Modern Monetary Theory – MMT) பயன்படுத்தப்படுகிறது.   இலங்கையில் நவீன நாணயக் கோட்பாடு – எம் எம் ரி  இவ்வாறான ஓர் கொள்கையைப் பின்பற்றியே இலங்கை நிதிக் கொள்கையும் மாற்றமடைந்து வருகிறது. இலங்கை போன்ற மேலும் பல நாடுகள் இவ்வாறான மாற்று ஏற்பாடுகளை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் செயற்பட்ட நவதாராளவாத திறந்த பொருளாதார செயற்பாடுகள் உலக அளவில் உற்பத்தியில் அதிகரிப்பை மேற்கொண்ட போதிலும் வருமான ஏற்றத்தாழ்வையும் அதிகரித்துள்ளது. இதனால் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையேயான வருமான ஏற்றத் தாழ்வுகள் மிக அதிகமானவை.   இலங்கையில் நடைமுறையிலுள்ள இந்த நவதாராளவாத பொருளாதாரச் செயற்பாடுகளால் வருமான ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் கடன்பளுவுக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில் குறிப்பாக உலக அளவில் கொரொனா நோயின் தாக்க விளைவுகளால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க புதிய அணுகுமுறை தேவையாகிறது. அதாவது உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை, உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பினை, வருமான அதிகரிப்பினை எவ்வாறு மேற்கொள்வது? ஏற்றுமதியும், இறக்குமதியும் பாதிப்படைந்த நிலையில் தேசிய பொருளாதாரத்தை எவ்வாறு ஊக்குவிப்பது? என்ற கேள்விகள் எழுகின்றன.   புதிய நாணயத் தாள்கள்  இப் பின்னணியிலேயே இலங்கை அரசு மிக அதிக அளவிலான நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. பொதுவாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறான அளவிலேயே நாட்டில் நாணயம் புழக்கத்திலிருக்க வேண்டும். பொருளின் உற்பத்திச் செலவும், அதனை நுகர்வதற்கான செலவும் சமநிலையைப் பேணவேண்டும். அதாவது கேள்வியும், நிரம்பலும் மக்களின் கொள்வனவு சக்திக்கு ஏற்றதான அளவு சமநிலையைப் பேண முடியும்.   பொருளாதாரத்தில் கேள்வியும், நிரம்பலும் (Demand and Supply)   தற்போதுள்ள நிலையில் மக்களின் வருமானப் பற்றாக்குறை காரணமாக கேள்வி குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி குறைய வாய்ப்பு உண்டு. கொரொனா நோய் காரணமாக உற்பத்தியும் குறைந்துள்ளது. எனவே இங்கு கேள்வியையும் அதிகரித்து, வழங்கலையும் அதிகரித்தல் அவசியமாகிறது. பொதுவாகவே எமது பொருளாதாரம் தொடர்பான கல்வியில் கேள்வி அதிகரிக்கும்போது வழங்கல் அதிகரிக்கும் எனவும், கேள்வியும், வழங்கலும் ஒரு புள்ளியை அடையும்போது ஸ்திரமான விலைச் சமநிலை பேணப்படும் எனக் கருதப்பட்டது. கேள்வி அதிகரித்து வழங்கல் குறைவடையும்போது விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும், வழங்கல் அதிகரித்தால் விலை குறைவடையலாம் எனவும் படித்தோம். இருப்பினும் தற்போது நடைமுறையிலுள்ள நவதாராளவாத பொருளாதார ஆதரவு கொள்கையாளர்கள் அரசின் தலையீட்டை அதாவது சந்தைச் செயற்பாடுகளில் அரசின் தலையீட்டை எதிர்த்தனர். அரசின் பணி என்பது சந்தைச் செயற்பாடுகள் சுமுகமாகச் செயற்படுவதை உறுதி செய்வது மட்டுமே என்றனர். இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளில் அரசின் தலையீடு படிப்படியாகக் குறைந்தது. இதனால் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, அம் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் கைவிடப்பட்டது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடுகள், மானியக் கொடுப்பனவுகள் போன்றன நிறுத்தப்பட்டன.   ஆனால் 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதாரச் சரிவு அரசின் தலையீட்டை வேண்டி நின்றது. பல வங்கிகள் திவாலாகும் ஆபத்தை அரசின் தலையீடுகளே தவிர்த்தன. அதாவது மக்களின் வரிப்பணமே வங்கிகளைக் காப்பாற்றியது. இதேபோன்ற நிலையே தற்போதும் ஏற்பட்டுள்ளது. இன்றைய உலக பொரளாதார நெருக்கடிகள் முதலாளித்துவ உலகப் பொருளாதார நெருக்கடிகளால் மட்டுமல்ல, கொரோனா நோயின் தாக்கங்களால் வளர்ச்சி அடைந்த நாடுகளும், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளும் சம காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகள் யாவும் தமது நாட்டின் நிலமைகளுக்கு ஏற்றவாறான மாற்று ஏற்பாடுகளை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரொனா நோய் காரணமாக உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெறுமனே லாப நோக்கில் இயங்கிய தனியார் துறையால் அல்லது பல்தேசிய நிறுவனங்களால் உலகப் பொருளாதாரத்தை மீண்டும் இயக்க முடியவில்லை. இலாபமீட்டுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் தனியார் துறையினர் முதலீடுகளில் ஈடுபடத் தயங்கியுள்ளனர். அந்தந்த அரசுகளே தத்தமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  (தொடரும் )    https://arangamnews.com/?p=5653
  • ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்   கொரோனா தொற்று வேகமெடுத்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுகூடியுள்ள மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் 32 ஆவது போட்டி நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமானது.  ஜப்பான் இதற்கு முன்னம் 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வீர வீராங்கனைகள் பங்கேற்கும் ஒரே விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்தான்.  இத்தனைக்கும் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நாடில்லாமல் அகதிகளாக இருக்கும் வீர வீராங்கனைகளைக் கூட ஒரு அணியக உருவாக்கி ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்குபற்ற செய்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு. இத்தனை சிறப்புக‍ளைப் பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக சற்று தொய்வு நிலையை அடைந்துள்ளது.  கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் வீர வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது கொரோனா காரணமாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு நேற்று ஆரம்பமானது.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக ஆரம்பமானாலும் ஆரவாரமாக இருக்கவில்லை. காரணம் அதனை கண்டு களித்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மைதானத்தில் பார்வையாளர்கள் எவரும் இல்லை. கடும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆர்பமான ஒலிம்பிக் விழாவை நிறுத்தக் கோரி. தொடக்க விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலேயே மைதனத்திற்கு வெளியே மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றுக்கொண்டிருந்தமையும் அவதானிக்கூடியதாக இருந்தது. மூடிய மைதானத்திற்குள் வீரர்களும் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் மட்டுமே இருந்தனர். கிட்டத்தட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு 206 நாடுகளிலிருந்து 11 ஆயித்து 300 வீர வீராங்கனைகளோடு பயிற்சியாளர்கள் அதிகாரிகள் போட்டி மத்தியஸ்தர்கள் என எண்ணிக்கை இன்னும் நீள்கிறது. அத்தோடு 2000 ஆயிரத்திற்குமான ஊடகவியலாளர்களும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை செய்தியிட வருகை தந்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு எப்போதுமே பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். அதில் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள ஜப்பான் நடத்தும் டோக்கியோ ஒலம்பிக்கின் ஆரம்பமாக நிகழ்வும் ஜப்பானின் தொழில்நுட்பத்தையும் அவர்களின் புதுமையையும் பறைசற்றி நின்றது. ஆனால் அதனை நேரடியாகக் காண ஜப்பான் நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒலிம்பிக் ஆரம்பமாவதற்கு முன்னமே கொரோனா பாதுகாப்புக்காகென டோக்கியோ நகரல் அவசரகால நிலைப் பிரகடனப்டுத்தப்பட்டது.  முழு நகரமும் வெறிச்சோடிக் காணப்படும் நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்தவர்கள்தான் ஆங்காங்கே நின்றதை அவதானிக்க முடிந்தது.  ஆனாலும் அவர்களும் தங்கள் விருப்பப்படி எங்கும் செல்ல முடியாது. அவர்களுக்கான மைதானம் அவர்கள் தங்கியுள்ள ‍ஹோட்டலைத் தவிர வேறு எங்கும் செல்ல அனுமதியில்லை, பொதுப் போக்குவத்தை பயன்படுத்தவும் அனுமதியில்லை. கொரோனாவால் துவண்டுபோயுள்ள ஒட்டுமொத்த உலகிற்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒரு புது பிரவேசத்தைக் கொடுத்துள்ளது எனலாம்.  இதனையே ஒலிம்பிக் தொடக்க விழாவிலும் அவர்களின் தொனிப்பொருளாக இருந்தது. புதிய நம்பிக்கை ஒட்டுமெத்த உலகின் நாளைய இலக்கு என்பவற்றை வலியுறுத்தின. இன்று களம் காணும் நம்மவர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் முதல்நாளான இன்று இலங்கை வீரர்கள் மூன்று போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். அதன்படி முதலாவது மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தெஹானி 10 மீற்றர் எயார் ரைவல் பிரிவில் போட்டியிடுகிறார். அடுத்ததாக நீச்சல் போட்டியில் மெத்தியூ அபேசிங்க மற்றும் அனிகா கபூர் ஆகியோர் போட்டியிடுகின்றார். பட்மின்டன் போட்டியில் நிலூக கருணாரத்ன பங்கேற்கின்றார்.   https://www.virakesari.lk/article/109961    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.