Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தி இராவணன் கோட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தி இராவணன் கோட்" (The Ravana Code) - சிறுகதை

அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவே நினைத்துக் கொண்டான்.

இனி எப்படி வெளியே தலை காட்டுவது? இதற்கா இத்தனை இழப்புக்களும்? சனம் கை கொட்டிச் சிரிக்குமே? தம்பிமார்கள் கேட்டால் என்ன சொல்வது? சீதையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அனுமன் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இராமனின் மனதில் பல சிந்தனைகள் ஓடி அவனை மேலும் குழப்பின. "இருவரையும் கொன்று விடுவோமா?" இராமன் யோசித்தான். "வேண்டாம், கொன்று விட்டால் விசயம் எல்லோருக்கும் தெரிந்து விடும்". தனக்குத்தானே பேசிக் கொண்டான் ராமன். "கொல்வது என்றால் பணிப்பெண்ணையும் அல்லவா கொல்ல வேண்டும்". சிந்திக்க தலையே வெடித்துவிடும் போலிருந்தது இராமனுக்கு.

அப்பொழுது அந்தப் பணிப்பெண் நடுங்கியபடி இராமனின் அருகில் மெதுவாக வந்தாள். "மாகாராஜா! என்னைக் எதுவும் செய்து விடாதீர்கள்! நான் இதை யாரிடமும் வெளியில் சொல்ல மாட்டேன்! சத்தியம் மகாராஜா! என்னை நம்புங்கள்!" கதறி அழுதாள் பணிப்பெண். "சத்தம் போடாதே! யாராவது வந்து விடப் போகிறார்கள்" இராமன் பணிப்பெண்ணின் வாயைப் பொத்தினான். "நான் தண்டிப்பது என்றால் சீதையை அல்லவா தண்டிக்க வேண்டும்! நீ பயப்படாமல் போ!" வெறுப்போடும், இயலாமையோடும் சொன்னான் இராமன். அந்த அழகான பணிப்பெண் கொஞ்சம் நம்பிக்கையோடும், கொஞ்சம் சந்தேகத்தோடும் திரும்பி நடந்தாள். திடீரென்று இராமனுக்கு ஒரு எண்ணம். "பழிக்குப் பழியாக நானும் இந்தப் பணிப்பெண்ணுடன்......". ஒரு முடிவோடு பணிப்பெண்ணை நோக்கிச் சென்ற இராமன் சட்டென்று நின்றான். "வேண்டாம், என் தந்தை போன்று நானும் இருக்க வேண்டாம்". அந்த நேரத்தில் இராமனுக்கு ஏற்பட்ட நல்ல சிந்தனை பணிப்பெண்ணைக் காத்தது.

ஆனால் இப்பொழுது சீதையால் ஏற்பட்டிருக்கும் விபரீதத்திற்கு என்ன செய்வது என்று இராமனுக்கு புரியவில்லை. சீதை கர்ப்பமாக இருக்கின்றாள் என்று பணிப்பெண் ஓடி வந்து சொன்ன பொழுது இராமன் பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஓடி வந்த செய்தி சொன்ன அதே பணிப்பெண் பிரசவமும் பார்த்தாள். அழகான குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் இராமனின் மகிழ்ச்சி தொலைந்து விட்டது. "என்ன செய்யலாம்? கடுமையாக சிந்திக்கத் தொடங்கினான் இராமன். சில நிமிடங்கள் கடுமையாக சிந்தித்த பிறகு அவனது மனதில் ஒரு திட்டம் உதித்தது. "விசயம் வெளியே தெரிவதற்கு முன்பு சீதையையும் குழந்தையையும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்". முடிவு எடுத்து விட்டதால் சோகத்திலும் இராமனின் முகம் பிரகாசமாகியது. "ஒரு சலவைத் தொழிலாளி சீதையைப் பற்றி தவறாகப் பேசினான், அதனால் காட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட வேண்டியதுதான்". இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது.

காட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒரு முறை சீதையை பார்க்க நினைத்தான். அந்தப்புரத்தை நோக்கி சத்தம் போடாமல் நடந்தான். சீதைக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அருகில் குழந்தை விழித்தபடி படுத்திருந்தது. கிட்ட நெருங்கினான் இராமன். குழந்தை தனது பத்து தலைகளாலும் இராமனை நிமிர்ந்து பார்த்து அழகாகச் சிரித்தது.

- வி.சபேசன் (22.05.06)

குறிப்பு: தி டாவின்சி கோட் திரைப்படம் குறித்து பேசிக் கொண்டிருந்த பொழுது தோன்றிய சிந்தனையில் உருவான சிறுகதை. சிலவேளைகளில் உண்மையாகவும் இருக்கலாம்.

நன்றி: வெப் ஈழம்

Link to comment
Share on other sites

ஓஹோ டாவின்ஸி கோட் போல தி இராவணன் கோட் டா? ம்ம் எழுத்தாளர் நல்லாதான் எழுதி இருக்கிறார். இணைப்புக்கு நன்றி மதுரன்.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

"தி இராவணன் கோட்டா" உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.... ஏனெனில் அது நன்றாக இருக்கிறது. :-)

Link to comment
Share on other sites

இந்தக் கதையை ஆரம்பத்தில் நான் யாழ்களத்தில் இணைத்த பொழுது நீக்கித்தான் விட்டார்கள். பின்பு மதுரன் இணைத்த பொழுது நீக்கவில்லை. மதுரனுக்கு என்னுடைய நன்றிகள்.

இந்தக் கதையை தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "உண்மை" இதழிலும் பிரசுரித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • 6 years later...

இக்கதைக்கும் சீதைக்கு கோவில் நுவரெலியாவில் கட்டுவதற்கும் சம்பந்தமுண்டு போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கு எழுத்தாளர்களின் கற்பனையும்,சிந்தனையும் தாங்க முடியவில்லை..... :D

Link to comment
Share on other sites

இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது.  /////

 

இந்தக்கதையை முன்பு சபேசனின் வெப்ஈழத்திலும் , பின்பு கருத்துக்களத்திலும் படிக்கநேர்ந்தது . கதை சிறியதானாலும் சபேசனின் தனிப்பட்ட முத்திரைகள் என்னைக் கவர்ந்தன . என்னைப்பொறுத்தவரையில் ஒரு கதையைப் பலவருடங்கள் கழித்து பார்கும்பொழுது அதில் சொல்லப்பட்ட விடையங்கள் சமகாலநிகழ்வுடன் பொருந்திவருமானால் அதுவே காத்திரமான வெற்றிப்படைப்பு என்பேன் . அந்தவகையில் தி இராவணன் கோட் மிகச்சிறந்த வெற்றிப்படைபே . இந்தக் கதையை இன்றய தெரிவுக்கு தெரிவு செய்த நிர்வாகத்துக்குப் பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிக்க தீர்மானம்! அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாய்களாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக மேலெழுந்துள்ள நிலைமையில் அரச வருமானம் குறைவடைந்தமையும், சுகாதாரத் துறையின் செலவும் சமூகத்தில் வருமானம் இழந்தவர்களின் சமூகப் பாதுகாப்பு, தமது வருமானத்தில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வருமானம் இழக்கப்பட்டமையால் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்காக மேலதிக நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு நேரிட்டமையாலும், இதர துறைகளில் ஏற்பட்ட செலவு அதிகரிப்பாலும் 2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லையை அதிகரிப்பதற்கு நேரிட்டுள்ளது. அதற்கமைய 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள 2,997 பில்லியன் ரூபாய்கள் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாய்களாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர் ;  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://www.samakalam.com/அரசாங்கத்தின்-கடன்-பெறும/  
    • அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் September 22, 2021 அவுஸ்திரேலியாவின்  கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்நாட்டு நேரப்படி  புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் பலமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தொிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மரிசன் அவுஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை எனவும் . அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார்.   https://globaltamilnews.net/2021/166331    
    • தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டன! September 22, 2021 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு 540 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 12 தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21.09.21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுர சிறைச்சாலைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை ஆடியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைக்கப்பட்டவர்களிடமே இவ்வாறு லொஹான் ரத்வத்தை இவ்வாறு நடந்து கொண்டிருந்துள்ளார். இவர்களுக்கு எதிரான வழக்குகள் எதுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால் 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பே அவர்கள் குற்றமற்றவர்கள் எனவிடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் இதன்போது கூறினார். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் லொஹான் ரத்வத்தை செய்த குற்றச்சாட்டுகளுக்காக அவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் லொஹான் ரத்வத்தைக்கு துணைநிற்கிறதா? என்கிற சந்தேகம் ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். லொஹான் ரத்வத்தவிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலிருந்தும் அவரை வெளியேற்றி சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். சம்பவம் நடைபெற்று 6 நாள்களுக்குப் பின்னரே சிறைச்சாலைகள் அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றால், 6 நாள்களாக இந்த விசாரணைகளை தடுத்தவர் யார்? எனவும் அவர் இதன்போது வினவினார். பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர். 540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள், பல்வேறு கொடூரமான சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்து உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.   https://globaltamilnews.net/2021/166314        
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.