Jump to content

மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்


Recommended Posts

மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்

annai.jpgosho.jpgconfucius.jpgnapoleon_hill.jpg

1. சிறந்த வழி

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை

2. பெருந்தன்மையே முதல் படி

1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.

2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.

3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.

4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.

- சீனப் பழமொழி

3. பயப்படாதீர்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!

தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!

- நெப்பொலியன் ஹில்

4. மூன்று ஆயுதம் நம்மிடம்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

- கன்ஃப்யூஷியன்

5. துணிவே துணை

ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.

-ஸர் டி.ப்ரௌன்

6. வெற்றிக்கு முதல்படி எது?

மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.

- டாக்டர் ஜான்சன்

( உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்தது. ஆனால் இவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தே முதல் பதிப்பு வெளியானது )

7. அன்பின் நோக்கம்

உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்

- ஸ்ரீ அன்னை

8. விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்

bullet_blue.gifஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.

bullet_blue.gifஎல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.

bullet_blue.gifஎதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.

bullet_blue.gifசெயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே 'வெற்றி' என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.

bullet_blue.gifபெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.

bullet_blue.gifநீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.

bullet_blue.gifநல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.

- பார்பர்

9. அஞ்சா நெஞ்சம் வேண்டும்

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!

- சுபாஷ் சந்திரபோஸ்

10. நல்ல எண்ணெய் எது?

மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.

- அய்டா

11. ஓய்வு எடுங்கள்

'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.

- டப்ஃபீல்டு

12. எளிமைதான் முன்னேற்றம்

எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.

- ஜே.ஆர்.லோவெல்

13. அன்பை அனுப்புங்கள்

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

bullet_blue.gifஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.

bullet_blue.gifகண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

bullet_blue.gifஉங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.

bullet_blue.gifசரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத் துவங்கிவிடும்!.

- ஓஷோ ரஜனீஷ்

14. சூரிய ஒளி போல

யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள்.

- ரீடர்ஸ் டைஜஸ்ட்

15. வாய்மை வெல்லும்

தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு

மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்).

- ஸ்ரீ அன்னை

16. பிரார்த்தனை செய்யலாமா?

இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது

- மாட்டிகாஸ் பெரீன்

17. நல்ல எண்ணமே சிறந்தது

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.

- ஸ்ரீ அன்னை

18. எல்லா உயிர்களையும் நேசியுங்கள்

அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்.

- ரோமெயின் ரோலந்து

( தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக எளிதில் உயர்வீர்கள்)

19. இயற்கை நமது நன்பன்

மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக் கண்டுபிடித்து விடுகிறான்

- அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்

( தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக் கிடைக்கிறது)

20. சிந்தனைக்கு

நாம் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் ஒரு அறியும் சக்தி நம்முள் உள்ளது. நமது சிந்தனைகளை விட நாம் உயர்ந்தவர்கள்.

- ஸ்ரீ அன்னை

( எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நேர்வழியில் வாழ்வோம்)

21. அன்பை வெளிப்படுத்துங்கள்

அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும்.

- ஸ்ரீ அன்னை

22. வாழ்வின் வெற்றி

வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.

- ஸ்ரீ அன்னை

23. தரமே தங்கக்குணம்

முதல் விதியாக இலட்சியத்தில் உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால், இலட்சிய உறுதி வேண்டுமெனில் முதல் தரமான மூன்று அம்சங்கள் தேவை. அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி எனும் இந்த மூன்றும் இருந்தால் முதல் விதி நம்மிடம் இருந்து இலட்சியத்தை வெற்றிபெறச் செய்யும்.

- ஸ்ரீ அன்னை

24. எது உயிர் மூச்சு?

நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.

- நார்மன் வின்சென்ட்டில்

25. அன்பின் சக்தி

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.

- புனித பைபிள் கொரிந்தியர் 1:13

26. அன்பு மயமாக இருங்கள்

அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்

- ஓஷோ ரஜனீஷ்

27. மனஉரம் வேண்டும்

கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.

- ஜார்ஜ் எலியட்

28. யோசனை கூறும் தகுதி

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.

- ஜார்ஜ் எலியட்

29. உறுதி

மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.

- புனித பைபிள்

30. உதவி கிடைக்க

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.

- ஸ்ரீ அன்னை

http://www.tamilkalanjiyam.com/general_knowledge/general_articles/golden_words.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பணத்தைச் சம்பாதிப்பதற்கான அடிப்படை விதிகள்

monsoon+2.jpg

------------------------------------------------------------------------------------------------

பணத்தைச் சம்பாதிப்பதற்கான அடிப்படை விதிகள்

SIX PRINCIPLES OF EARNING MONEY*

1. வரைமுறையோடு வாழ்பவர்கள், வரைமுறையற்ற பணத்தைச் சேர்க்கமுடியாது.

"No point using *limited life* to chase *unlimited money.*

2. வாழ்ந்து முடிப்பதற்குள் செலவழிக்க இயலாத அளவிற்குப் பணத்தைச் சேர்க்க முயற்சிப்பது வீண் வேலை!

"No point* earning so much money you cannot live to spend it* .

3. உங்கள் பணமே உங்களுடையதல்ல, அதை நீங்கள் செலவு செய்யும்வரை! (செலவழிக்காமல் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் உங்களுடையதல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்!)

"Money is not yours until you *spend it.*

4. இளம் வயதாக இருக்கும்போது, உங்களுடைய ஆரோக்கியத்தைப் பணயம் வைத்துப் பணத்தைச் சேர்க்கிறீர்கள். வயதான பிறகு அதே பணத்தை வைத்து உங்கள் ஆரோக்கியத்தைத் திரும்பப்பெற முயற்சி செய்கிறீர்கள். அது முடியாத நிலையில் நீங்கள் தொலைத்த ஆரோக்கியம் மட்டுமே, உங்களை அல்லும் பகலும் படுத்தி எடுக்கும்.

"When you are young, you *use your health to chase your wealth* ; when you are old, you* use your wealth to buy back your health* . Difference is that, *it is too late*.

5

மகிழ்ச்சி என்பது உங்கள் கையிருப்பை வைத்தல்ல. குறைந்த அளவு உங்கள் கைத்தேவை என்ன என்பதைவைத்துத்தான்! அதை உணருங்கள்

“How happy a man is, *is not how much he has but how little he needs*.

6

தன் உறவுகளோடு (மனைவி மக்களோடு) கூடிக் குலாவுவதற்கு நேரம் இல்லாத ஒருவன், அவர்களுக்காகப் பொருள் ஈட்டுவதற்குக் கடுமையாக அந்த நேரத்தைப் பயன்படுத்துவது பயனற்றது. அதாவது வீண்வேலை!

- No point *working so hard to provide for the people you have no time to spend with*.

Link to comment
Share on other sites

அருமையான வரிகள் நுணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான

அருமையான பதிவு

நன்றி நுணா

ஆனால் வாழ்க்கை வேறு

தத்துவம் வேறு.

இரண்டும் இரு நேர்கோடுகள்

இணையமுடியாது........ :(

Link to comment
Share on other sites

தேவையான

அருமையான பதிவு

நன்றி நுணா

ஆனால் வாழ்க்கை வேறு

தத்துவம் வேறு.

இரண்டும் இரு நேர்கோடுகள்

இணையமுடியாது........ :(

நேற்று தன்சானியாவில் :rolleyes: இருந்து குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி ஊழியருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

தன்சானியாவில் ஒரு ஆபிரிக்கர் தங்கள் வீட்டின் அருகில் இருந்த குளத்தில் மீன்பிடித்து விட்டு வந்துகொண்டிருந்தாராம். :unsure:

இவர்: ஏன் மூன்று மீன்கள் மட்டுமே பிடித்திருக்கிறீர்கள்? :huh:

அவர்: இரண்டு எனது குடும்பத்திற்கு. ஒன்று சுகமில்லாத என் நண்பனுக்கு.

இவர்: அதுசரி.. ஆனால் நிறையப் பிடித்தால் மேலதிக மீன்களை விற்றுக் காசாக்கலாமே.. :unsure:

அவர்: காசாக்கி என்ன செய்வது? :huh:

இவர்: காசை சேர்த்தால் விரைவில் ஓய்வு பெறலாமே.. :unsure:

அவர்: ஓய்வா? அதைத்தானே இப்ப நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்??!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தன்சானியாவில் :rolleyes: இருந்து குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி ஊழியருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

தன்சானியாவில் ஒரு ஆபிரிக்கர் தங்கள் வீட்டின் அருகில் இருந்த குளத்தில் மீன்பிடித்து விட்டு வந்துகொண்டிருந்தாராம். :unsure:

இவர்: ஏன் மூன்று மீன்கள் மட்டுமே பிடித்திருக்கிறீர்கள்? :huh:

அவர்: இரண்டு எனது குடும்பத்திற்கு. ஒன்று சுகமில்லாத என் நண்பனுக்கு.

இவர்: அதுசரி.. ஆனால் நிறையப் பிடித்தால் மேலதிக மீன்களை விற்றுக் காசாக்கலாமே.. :unsure:

அவர்: காசாக்கி என்ன செய்வது? :huh:

இவர்: காசை சேர்த்தால் விரைவில் ஓய்வு பெறலாமே.. :unsure:

அவர்: ஓய்வா? அதைத்தானே இப்ப நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்??!! :lol:

இதில்

உண்மை இருக்கு

வரலாறு இருக்கு

தத்துவம் இருக்கு

மனிதாபிமானம் இருக்கு

நட்பு இருக்கு

எதிர்கால சேமிப்பு இருக்கு............

சரி

இதை யாராவது தற்பொழுது பின் பற்றுவார்களா??

பின்பற்ற முடியுமா?????

பின் பற்றினால் அவர்களை நாம் எப்படி அழைப்போம்??

Link to comment
Share on other sites

இதில்

உண்மை இருக்கு

வரலாறு இருக்கு

தத்துவம் இருக்கு

மனிதாபிமானம் இருக்கு

நட்பு இருக்கு

எதிர்கால சேமிப்பு இருக்கு............

சரி

இதை யாராவது தற்பொழுது பின் பற்றுவார்களா??

பின்பற்ற முடியுமா?????

பின் பற்றினால் அவர்களை நாம் எப்படி அழைப்போம்??

விசுகு அண்ணா அறுசுவை உணவு எப்படி ஒரு ஆரோக்கியமான நிறை உணவோ அது போன்றது தான் நீங்கள் சொன்ன அனைத்தும் சேர்ந்தது தான் சந்தோசமான இனிமையான வாழ்க்கை.

பாடப்புத்தகம் என்பது படித்து பரிட்சையில் தேற மட்டுமே. படித்ததை நடைமுறையில் நாம் பயன்படுத்தும் போது பல புதிய மாற்றங்களை காண்போம். ஆகவே படித்ததை அனுபவ ரீதியாக உணரும் போது தான் படித்த பலனை உணருகிறோம்.அனுபவங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நுணா

சரி

இதிலிருந்து ஆரம்பிப்போம்

விருப்புவாக்கை கொஞ்சம் தந்தால் எழுதி மினக்கிடும் நேரத்தை மிச்சம் படுத்துவோமல்லோ........

இதற்கெல்லாம் எழுதவேண்டும் என்று இல்லையல்லவா?

விசுகு அண்ணா அறுசுவை உணவு எப்படி ஒரு ஆரோக்கியமான நிறை உணவோ அது போன்றது தான் நீங்கள் சொன்ன அனைத்தும் சேர்ந்தது தான் சந்தோசமான இனிமையான வாழ்க்கை.

இதற்கு கூட விருப்பு வாக்கு போடமுடியவில்லை.

அருமையான தத்துவம்

Link to comment
Share on other sites

அனுபவத்தில் கூறியுள்ளார்கள். அருமையாக இருக்கிறது. தொடருங்கள் நுணா.

அண்மையில், சின்ன வயதில் விளங்காமல் பாடமாக்கிய அவ்வையாரின் 'ஆத்திசூடி' ஐ வாசிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அற்புதமான அனுபவ வார்த்தைகள்.

Link to comment
Share on other sites

இதில்

உண்மை இருக்கு

வரலாறு இருக்கு

தத்துவம் இருக்கு

மனிதாபிமானம் இருக்கு

நட்பு இருக்கு

எதிர்கால சேமிப்பு இருக்கு............

சரி

இதை யாராவது தற்பொழுது பின் பற்றுவார்களா??

பின்பற்ற முடியுமா?????

பின் பற்றினால் அவர்களை நாம் எப்படி அழைப்போம்??

இப்படி வாழ்பவர்கள் வடக்கு ஒன்ராரியோவிலும் இருக்கிறார்கள். குதிரைவண்டிகளில்தான் போவார்கள். ஆனால் நமக்கு சரிப்பட்டு வராது.

ஆனால் ஊரில் இத்தகைய வாழ்க்கை சாத்தியமானதே. ஆனால் அங்கும் இப்போது இந்தக் கானல்நீரைத் தேடி ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் எங்களால் மூன்று மீன்கள் பிடித்தோ அல்லது ஒரு சிறு தோட்டத்துடனோ வாழமுடியுமானால் (இங்கிருந்து சேமித்துச் சென்ற பணத்துடன் :lol: ) அதுவே சாதனைதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.