Jump to content

இராவணனுக்கு வீர வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நேற்று முழுவதும் தீபாவளி வாழ்த்துக்களே எங்கு பாத்தாலும்.எனது தொலை பேசியில் ஐம்பதுக்கும் அதிகமான மடல்கள். நான் திரும்ப எவருக்கும் வாழ்த்து அனுப்பவில்லை.தொலைபேசியில் நேரில் வாழ்த்தியவர்களுக்கு மட்டும் காரசாரமான சொற்பொழிவு. பலர் பொல்லுக் குடுத்து அடி வாங்கிறது என்றால் இதுதான் என்று கூறி தொலை பேசியை வைத்தும் விட்டனர். ஒருவர் இராவணனின் படத்தோடு நரகாசுரனுக்கு வீரவணக்கம் என அனுப்பினார்.

இதில் மனவருத்தத்துக்கு உரிய விடயம் என்னவெனில் தமிழ் மன்னன் இராவணன் இராமனால் கொல்லப்பட்ட நாளை, ஆரியர்கள் எம்மைக் கொண்டே கோலாகலமாகக் கொண்டாட வைத்திருப்பது அவர்கள் திறமை தான். இது பற்றி அறிந்தபின் கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகளாக நானோ எனது குடும்பத்தவரோ தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.

முன்னர் எனக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஆரியர்களை எதிர்க்கவென்றே தமிழ்ப் பெரியோர்கள் ஓர் கட்டுக்கதை கட்டிவிட்டுள்ளனரோ என்று. கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் வாசித்த வரலாற்று நூல்கள் எம்மவர் பொய் சொல்லவில்லை என்பதை எனக்கு உணர்த்தின. பிரித்தானியப் பாடசாலைகளில் சமத்துவம் என்று கூறிக்கொண்டு அனைத்து விழாக்களையும் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பார். இதில் தீபாவளி பற்றி அறியாத மாணவர் இருக்கமாட்டார். அதுகும் எல்லாப் பிள்ளைகளும் ராமன் ராவணனைக் கொன்ற கதையை அழகாகச் சொல்வார்கள். பாடசாலையில் உள்ள புத்தகங்கள், வாசிக சாலையில் கூட இராவணனைக் கொன்ற கதைகளுடன் புத்தகங்கள் இருக்கின்றன.

வால்மீகி இராமாயணத்தின் மூலப் பிரதியில் இராமன் மாமிசம் உண்ணும் ஓர் கொடிய அரக்கனாகச் சித்தரிக்கப் பட்டுள்ளதோடு , இராவணன் பற்றி மிகவும் உயர்வாக கலைகள் பல தெரிந்தவனாக, ஒழுக்கத்திற் சிறந்தவனாக, வீரமும் பக்தியும் கொண்ட மிக உயந்த பண்புடைய மன்னனாகவே சித்தரிக்கப் பட்டுள்ளான். பின்நாளில் கம்பன் என்னும் தமிழ் அரசவைக் கவிஞன் மொழிபற்றி யோசியாது மீண்டும் இராமாயணத்தை இலகுவாக்கி எழுதும்போது கவி நயத்துக்காக பல புனைவுகளைப் புகுத்தி எழுதிவிட்டான்.கம்பனின் கவிநயத்திலும் தமிழ் நயத்திலும் கவரப்பட்டு எம் தமிழ் அறிஞர்களும் அவரை ஆகா ஓகோ எனப் புகழ்ந்ததில் எல்லோரும் அதை நம்பி இராமனை ஒரு சிறந்த நாயகனாகவும் இராவணனை கொடியவனாகவும் மனதிருத்திக் கொண்டுவிட்டோம். அதன் பயனாய் வெட்கம் சிறிதுமின்றி தீபாவளி கொண்டாடுகின்றோம். இதை அறிந்தபின் ஆவது கொண்டாடாது விட்டோமெனில் நாம் பகுத்தறிவுள்ள மனிதர். இல்லையேல் ??????.

தமிழர்களின் விழா எது என ஒருவர் என்னைக் கேட்டார். தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது விவசாயம். தமிழர்களின் வாழ்வு இயற்கையோடு இயைந்ததாக இருந்தது. அவர்கள் இயற்கையை மதித்தனர்,வழிபட்டனர். அதனால் கதிரவனை நினைந்து தைப்பொங்கலையும் நெல் விதைப்புக்கான முதல் மழை பெய்யும் மாதமான அடியில் ஆடிப் பிறப்பையும், இரவில் ஒளிதரும் சந்திரனுக்கு விழா எடுத்து கடலாடு விழாவாக கொண்டாடினர் என வரலாறுகள் கூறுகின்றன. கடலாடு விழாவையே ஆரியர் காதலர்களுக்கான களியாட்டு விழாவாகவும் ஆக்கி இந்திர விழா என மாற்றினர்.

இது என் அறிவுக்கு எட்டிய வரை நான் எழுதுகின்றேன். அறிவிற் சிறந்தோர் எவராவது நிறையத் தெரிந்திருந்தால் நீங்களும் இதுபற்றிய அறிவை எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம்.[/size]

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றிகள் சுமேரியர் அக்கா.. என்னுடைய கேள்வி என்னவென்றால், இந்த இராமாயணத்தில் சொல்லப்படுகின்ற நிகழ்வுகள் நடைபெற்றதற்கான பௌதீகவியல் சான்றுகள் உள்ளனவா? அல்லது வெறும் புனைவா? :rolleyes:

Link to comment
Share on other sites

[size=4]தங்கள் முப்பாட்டன் நரகஅசுரன் கொல்லப்பட்டமையை 'தீபாவளி' விழாவாக கொண்டாடும்...ஈனப்பிறவிகளை என்னவென்று சொல்ல... மானம் ரோசம்....அற்றவர்கள்தான் தீபாவளி கொண்டாடுவார்கள்....[/size]

[size=4]இனி வரும் காலங்களில் பெற்றதாய் செத்த நாளையும் விழாக கொண்டாடுவார்கள் போல...

பி.கு: தயவு செய்து எனக்கு யாரும் தீபாவளி வாழ்த்து கூறாதீர்கள். நான் என் மூதாதையரை மதிப்பவன்.[/size]

[size=4](முக நூல் ஊடாக) [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் கண் முன்னால் வாழ்ந்த சூரியப்புதல்வர்களை கௌரவிப்பதிலேயே எத்தனை முரண்பாடு

இதற்குள்

சூரன்

இராவணன்

இராமன்.....................????????????? :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இராமாயணம் என்னும் காப்பியம் எழுதப்பட்ட காலம் யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. நான் இராவண காவியம் வாசித்துக் கன நாள். மீண்டும் வாசித்துவிட்டு சரியாக எழுதுகிறேன். எதோ ஒரு போர் நடைபெற்று இருக்கிறது. அதை வைத்துப் புனைந்து எழுதப்பட்டதே இது என எண்ணுகிறேன்.எதற்கும் ஆதாரத்தோடு சொல்வது தானே சிறந்தது பொறுத்திருங்கள் இசை. [/size]

Link to comment
Share on other sites

இது போன்ற பரப்புரைகளை நான் 2008 வரை மிகத் தீவிரமாக செய்து வந்தேன். 2008இல் பலர் நாட்டின் நிலைமையக் காட்டி, இதை சற்றுக் குறைக்கும்படி கேட்டார்கள். என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருவதாக சொன்ன பூசகர்களும் நாட்டு நிலைமையை காரணம் காட்டியே ஓடி மறைந்தார்கள்.

நான் மிக நம்பிக்கையோடு பரப்புரைகளை முன்னெடுத்தேன். விடுதலைப் புலிகளின் தலைமையிடமும் இது போன்ற கருத்துக்கள் இருப்பது பற்றி நான் அறிந்தே இருந்தேன். தேசியத் தலைவர் அவர்களும் "இலங்கை மண்" என்னும் நூலுக்கு வழங்கிய முன்னுரையில் இது பற்றி பேசியிருக்கிறார்.

பல தளபதிகளிடமும் இது பற்றிய தெளிவு இருந்தது.

நாடு விடிவடையும் போது ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களுக்கு என்னைப் போன்றவர்களின் பரப்புரைகளும் துணை புரியும் என்கின்ற நம்பிக்கை என்னிடம் பெரியளவில் இருந்தது.

ஆனால் எங்களின் விடுதலை மிகத் தொலைவு போனதன் பிற்பாடு, இது பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது சரியான யுக்தியா என்கின்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆகவே இது போன்ற பரப்புரைகளை சற்றுத் தள்ளிப் போட்டிருக்கிறேன்.

அதே வேளை இங்கே பலர் இது பற்றி பேசுவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இத்தனை காலம் ஆனபின்னும் எவ்வித அதுபற்றிய அறிவுமின்றி தீபாவளி கொண்டாடும் ஒருவராவது என்[/size][size=5]திரி யைப் பார்த்துத் திருந்த மாட்டாரா என்னும் நப்பாசையில் எழுதியதே தவிர வேறு இல்லை . ஒன்றும் எழுதாமல் அப்படியே கொண்டாடட்டும் என்று விட்டுவிடச் சொல்கிறீர்களா விசுகு.[/size]

[size=5]சபேசன் எந்தப் பயனும் இல்லை என நாமாகவே எண்ணிக்கொண்டு ஒரு விடயத்தைச் செய்யாமலோ அல்லது கூறாமலோ விடுவது தவறு. எம்மால் முடிந்தவரை பரப்புரைகளைச் செய்ய வேண்டும். நல்லது நடந்தால் சரி. இல்லை என்றால் உங்கள் சித்தனையும் நேரமுமே விரயம் தவிர வேறு நட்டம் ஒன்றும் இல்லைத் தானே.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் கண் முன்னால் வாழ்ந்த சூரியப்புதல்வர்களை கௌரவிப்பதிலேயே எத்தனை முரண்பாடு

இதற்குள்

சூரன்

இராவணன்

இராமன்.....................????????????? :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் பல,

இதில் ஒன்றைக்கவனியுங்கள்,

கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொல்றார்.

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள். பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியைனக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப் – பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சரந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொரு வரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகி விடும். ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.

தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை, தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள். தீபாவளி என உணர்க. தீபங்களில் ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்பது ஞான சம்பந்தர் திருவாக்கு.’ -என்று குறிப்பிடுகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். இது உண்மைக்கு உத்திரவாதம் தருகிறதாகவே தோன்றுகிறது.

நன்மையின் வெற்றி. தீமையின் அழிவு என்பதைத்தான் கிருஷ்ண பகவான் நரகாசுரன் கதை கூறுகிறது என்கின்றனர். தீபாவளிக்கு முன்னரே வரும் நவராத்திரியின் போதும், பின்னர் வரும் கந்த சஷ்டியின் போதும் இந்தக் கருத்துத்தான் வலியுறுத்தப்படுகிறது. இந்த இரண்டு விழாக்களிலும் அரக்கர்கள் அழிக்கப்படுகின்றனர். நன்மை வெற்றி கொள்கிறது, தீமை அழிகிறது. இந்தக் கருத்து பண்டைய இந்துக்களை ஈர்த்திருக்க வேண்டும். ஆகவேதான் ஒன்றன் பின்னர் ஒன்றாக வரும் பண்டிகைகளில் அதை வலியுறுத்தியுள்ளனர் போலும். மேற்குறிப்பிட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் அதனை சமூக ரீதியாகப் பார்ததால் என்ன? மனிதன் மகிழ்ந்திருப்பது அவனின் இயல்பு. குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மற்ற இனத்தவருடனும், சமயத்தினருடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு நாள் தீபாவளி.

Link to comment
Share on other sites

தீபாவளி என்பதற்கு தீபம் + ஆவளி என்கிறோம்.. தீபம் என்பதே வடமொழிச் சொல்தானே (தீபா, தீப்)? அப்ப இது என்ன கணக்கு? :huh:

போக, இந்திக்காரன் தீபாவளியை டிவாலி (Diwali) என்கிறான். தமிழில் இருந்து உருவினான் என்பதை நம்ப முடியாமல் இருக்கு. டிவாலி என்பதற்கு என்ன அர்த்தம்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்

நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201

Link to comment
Share on other sites

.

இதிகாசங்கள் இராமனையும் கிருஷ்ணரையும் கருமை நிறமானவர்களாகச் சொல்கிறது. ஆரியர்களின் நிறம் கருமை அல்லவே.

அதோடு இராவணனும் ஏனைய அசுரர்களும் தமிழர் என்பதற்கு என்ன ஆதாரம் ?

இராமாயன‌த்தில் வரும் லங்காபுரி இன்றைய இலங்கை அல்ல என்பார்கள். அது அயோத்திக்கு தெற்கே இருக்கும் ஒரு சதுப்பு நிலம்.

Link to comment
Share on other sites

Esan அண்ணா இங்க கொஞ்ச பேருக்கு வேற வேலை இல்லை எப்ப பாத்தாலும் ஒண்ட சொல்லி தனிலற குழப்பி அடிக்கிறது தான் இவையளோட வேலை

இவையள் சொல்லுறத பெரும்பாலான தமிழர் ஏற்க்க போவதே இல்லை என்பது வேறு விடையம் :D

இது சுமேரியர் தான் தமிழர் என்று சொல்லும் கதை தான் :D

Link to comment
Share on other sites

இவர்தான் திருவாளர் நரகாசுரன். இவரின்ரை படம் ஒரு பேப்பர் காரரிடம் மட்டும்தான் இருக்கு . நான்தான் நரகாசுரனை படமெடுத்தனான். அதனால் இதன் காப்புரிமைஒரு பேப்பர் காரரிற்கு மட்டுமே சொந்தமானது. யாரும் களவெடுக்கக் கூடாது

அதெல்லாம் கிடக்கட்டும் இராவணன். இராமாயணம். நராகாசுரன் தீபாவளி இதெல்லாத்தையும் போட்டு குழைத்து குளப்புறாங்களே. வைரவரே நீ தான் காப்பாத்த வேணும்.

paper.jpg

Link to comment
Share on other sites

.

இதிகாசங்கள் இராமனையும் கிருஷ்ணரையும் கருமை நிறமானவர்களாகச் சொல்கிறது. ஆரியர்களின் நிறம் கருமை அல்லவே.

அதோடு இராவணனும் ஏனைய அசுரர்களும் தமிழர் என்பதற்கு என்ன ஆதாரம் ?

இராமாயன‌த்தில் வரும் லங்காபுரி இன்றைய இலங்கை அல்ல என்பார்கள். அது அயோத்திக்கு தெற்கே இருக்கும் ஒரு சதுப்பு நிலம்.

நல்ல வேலை . நீங்கள் எழுதி விட்டீர்கள். நான் எழுதல்ல்ம் என இருந்தேன். நான் எழுதி இருந்தால் ஒட்டு மொத்த யாழ் களமும் வந்து என்னை விழுந்து வ்ழுந்து தூற்றியிருக்கும்

tumblr_mcc5hnBqwZ1ra2nh0o1_500.gif

Link to comment
Share on other sites

உண்மையில் சாதாரண தர பரீட்சைக்காக பாடசாலையில் இராமாயணத்தை படித்த நினைவு ............அது கதையா......., கற்பனையா...உண்மையா..... என்பதை எல்லாம் ஆராய்ந்து அறியும் பக்குவம் எனக்கு அப்போ இருக்கவில்லை ............ எனது முழு நோக்கமுமே பரீட்சையில் சித்திம் அடையும் நோக்கத்தை கொண்டே இருந்தது .................ஆனால் இப்போ அதை ஆராய்ந்து அறியும் தகமை ஓரளவிற்கு இருந்தும் நேரமின்மை ,படித்த பலவற்றை மறந்த நிலையிலும் .எந்தக்கருத்தையும் நான் கூறவிரும்பவில்லை ....................ஆனால் ஒரு சில விடயங்களை சிந்திப்போம் ஆனால்................................................................................

இன்றைய எம் காலத்தில் கருணாக்களும் ,டக்ளசுகளும் .கேப்பிகளும் ,போன்ற கொடிய தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது .............ஏன் இராவணன் போல் ஒரு கொடிய தமிழன் அந்தக்காலத்தில் வாழ்ந்திருக்கமுடியாது .............................

Link to comment
Share on other sites

அனுமார் பறந்தார்.. மேருமலையைத் தூக்கினார் என்றெல்லாம் இதிகாசம் கூறுகிறது.. :huh: இதைச் செய்யக்கூடிய வல்லமை படைத்தவர்கள் ஏலியன்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.. :icon_idea:

ஆகவே இராமர், கிருஷ்ணர், இராவணன், அனுமார் எல்லோருமே ஏலியன்கள்தான் யுவர் ஆனர்..! :D

Link to comment
Share on other sites

அனுமார் பறந்தார்.. மேருமலையைத் தூக்கினார் என்றெல்லாம் இதிகாசம் கூறுகிறது.. :huh: இதைச் செய்யக்கூடிய வல்லமை படைத்தவர்கள் ஏலியன்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.. :icon_idea:

ஆகவே இராமர், கிருஷ்ணர், இராவணன், அனுமார் எல்லோருமே ஏலியன்கள்தான் யுவர் ஆனர்..! :D

இல்லவே இல்லை ....... புஷ்பக விமானத்திலேயே மலை தூக்கப்பட்டது என நினைக்கிறேன் ..................விமானம் கூட வெள்ளைக்காரன் கண்டுபிடிக்கவில்லை ........முன்பே கண்டுபிடிக்கப்பட்டது .......என நினைக்கிறேன் ...............யுவராணர் .................. :D

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சூரியன் எமக்கு இராவணன் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஆனால் திருகோணமலையில் இருந்த கல்வெட்டுக்களையும்,பல எட்டுச் சுவடிகளையும் ஆராய்ந்து பல கற்றவர்கள் எழுதிய நூல்களை நான் வாசித்தேன்.சிங்கள நூலான சூளவம்சத்தில் கூட இதுபற்றி இருப்பதாக்க ஒரு பேராசிரியர் கூறினார். அதில் எதிலுமே இராவணன் பற்றி கொடுமை மிக்கவனாகச் சித்தரிக்கப்படவில்லை. எம்மனதில் எது முதலில் ஆழமாகப் பதிகிறதோ அதை எம்மால் மறுதலிப்பது கடினம். இது மனித இயல்பு. உங்களுக்கு இளவயதில் கற்றது பதிந்து விட்டது. என் போன்றே ஆசிரியரிடம் இரு நாள் கல்விகற்றீர்கள் என்றால் மனதில் இருக்கும் பதிவுகள் தானாக அழிந்துவிடும். ஆனால் எனக்குத்தான் கற்ப்பிக்க நேரம் இல்லை :D

நல்ல காலம் ஈசன் இராவணன் சிங்களவன் என்று கூறாமல் தமிழர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டீர்கள். கல்வெட்டுக்கள் தமிழன் என்றுதான் சொல்வதாகக் கேள்வி. சிங்களவன் அல்லது வேற்று இனத்தவன் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் கூறலாம்.

தமிழ்ப் பயித்தியம் எக்கருத்தாயினும் துணிவுடன் கூறுவதுதான் அழகு. உங்கள் கருத்துக்கு யாழில் தலையையா சீவிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

தமிழ்ச் சூரியன் எமக்கு இராவணன் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஆனால் திருகோணமலையில் இருந்த கல்வெட்டுக்களையும்,பல எட்டுச் சுவடிகளையும் ஆராய்ந்து பல கற்றவர்கள் எழுதிய நூல்களை நான் வாசித்தேன்.சிங்கள நூலான சூளவம்சத்தில் கூட இதுபற்றி இருப்பதாக்க ஒரு பேராசிரியர் கூறினார். அதில் எதிலுமே இராவணன் பற்றி கொடுமை மிக்கவனாகச் சித்தரிக்கப்படவில்லை. எம்மனதில் எது முதலில் ஆழமாகப் பதிகிறதோ அதை எம்மால் மறுதலிப்பது கடினம். இது மனித இயல்பு. உங்களுக்கு இளவயதில் கற்றது பதிந்து விட்டது. என் போன்றே ஆசிரியரிடம் இரு நாள் கல்விகற்றீர்கள் என்றால் மனதில் இருக்கும் பதிவுகள் தானாக அழிந்துவிடும். ஆனால் எனக்குத்தான் கற்ப்பிக்க நேரம் இல்லை :D

நல்ல காலம் ஈசன் இராவணன் சிங்களவன் என்று கூறாமல் தமிழர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டீர்கள். கல்வெட்டுக்கள் தமிழன் என்றுதான் சொல்வதாகக் கேள்வி. சிங்களவன் அல்லது வேற்று இனத்தவன் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் கூறலாம்.

தமிழ்ப் பயித்தியம் எக்கருத்தாயினும் துணிவுடன் கூறுவதுதான் அழகு. உங்கள் கருத்துக்கு யாழில் தலையையா சீவிவிடுவார்கள்.

நன்றி அக்கா உங்கள் விளக்கத்திற்கு ...............

நீங்கள் இது சம்பந்தமான ஒரு வராற்று தொடரை இங்கே ஆரம்பித்தால் நாம் நேரம் இருக்கும் போது படித்துக்கொள்ளலாம் .................. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி.ஒண்டுமில்லாததுக்கு இந்தப் படம் ........... போகட்டும்.

Link to comment
Share on other sites

அயோத்திக்கு தெற்கிலே உள்ள ஒரு நிலப் பகுதிதான் இலங்காபுரி என்றால் எதற்காக இராமர் பலாம் இருப்பதாகக் கூறி சில இந்துத்துவ வானரக் கூட்டம் சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்துக் கொண்டு நிற்கிறது?

Link to comment
Share on other sites

நான் 10 வருடங்களாக தீபாவளி கொண்டாடுவதில்லை. என் மனையும் இப்ப கொண்டாடுவதில்லை. ஆனால் வாழ்த்து சொல்லுபவர்களின் இம்சை பெரிய இம்சை. என் Facebook இல் "ஆரியன் தமிழனை அழித்த தினமான தீபாவளியை நான் கொண்டாடுவதில்லை, எனவே எவரும் வாழ்த்துச் சொல்ல வேண்டாம்" என்று போட்டிருந்தும் வாழ்த்து சொன்னவர்களும் இருக்கின்றார்கள்.

இதே வழக்கம் நீடித்தால் எதிர் காலத்தில் தமிழர்கள் மே 17, 18 ஆகியவற்றையும் கொண்டாடுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தீபாவளி கொண்டாடுவதில்லையாகையால் வாழ்த்துக்கள் வந்தால் திரும்ப வாழ்த்துக்கள் சொல்லுவதில்லை! ஆனாலும் நேற்று வேலையிடத்தில் உள்ள வட இந்தியப் பெண்கள் தமது கலாச்சார உடையில் வந்து தீபாவளி வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் தந்தபோது அவர்களின் அன்புத் தொல்லையை தட்டிக் கழிக்க முடியாமல் நாங்களும் தீபாவளி எல்லாம் அந்தமாதிரி வெடிவிட்டுக் கொண்டாடுவோம் என்று சொல்லவேண்டி வந்துவிட்டது! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.