Jump to content

எனக்காக அழவேண்டாம் ..............

Recommended Posts

அக்காங்களா ! அண்ணனுங்களா !

இது என்னோட ரெண்ணாவது கவிதைங்க . உங்க மாற்றரில நான் கவிதை பாடுறது றைட்டானு எனக்கு கொன்பியூஸ்சுங்க . பட் என்னோட மெசேஜ் எப்பிடீன்னு , கவிதை களத்தில இருக்கிற என்னைய விட பெரீய ஆளுங்க எல்லாம் காமன்ற் தந்தீங்கன்னா , நான் என்னைய கறெக்ட் பண்ண ஹெல்ப்பா இருக்குங்க :) :) . ஓக்கேயா ? சொப்னா ஜூட்டடி :lol: :lol: :D :D .

முறங்கொண்டே புலியை விரட்டிய

தமிழிச்சி வயற்றில் பிந்தவர்களே அழலாமா???

துடையுங்கள் உங்கள் விழிநீரை .......

யார் சொன்னார்கள் நான் இறந்தேன் என்று??

துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ...........

காற்றோடு காற்றாய் நான் கலந்தாலும்,

உங்கள் நாடிநரம்பெல்லாம் பாடுகின்றேன் போர்பரணி....

என்றுமே எமக்கில்லை தலைக்குனிவு,

மனப்பால் இருத்திடுவீர்

துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ...........

என்தங்கையின் என்தம்பியின்

முறுக்கேறிய கைகள் இன்று

சிங்கத்தின் கொட்டடியிலும் ,

வீதியில் இருந்தும் பிச்சை புகுதல் தகுமோ???

எனக்காக அழாதீர்கள் வியாபாரப் பொருளாக்காதீர்கள்.....

இறுக்குங்கள் உங்கள் கைகளை

என்தம்பி தங்கை நோக்கி

துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ...........

நம்பியும் நாராயணனும் தட்டலாம் தங்கள் கைகளை

நான் விழுந்த சேதி கேட்டு

உங்கள் மனதில்

நான் மறு பிறவி எடுத்தது தெரியாத வீணர்கள்

துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ...........

தமிழன் தோத்ததாய் வரலாறு மாயம் செய்யும்

நிஜம் அதுவல்ல வரலாற்றை ,

மாற்றப் பிறந்தவனே தமிழன் .........

துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ...........

படையுங்கள் புதிய சரித்திரம்

எனக்காக அழவேண்டாம் .........

சொப்பனா

Link to comment
Share on other sites

என்தங்கையின் என்தம்பியின்

முறுக்கேறிய கைகள் இன்று

சிங்கத்தின் கொட்டடியிலும் ,

வீதியில் இருந்தும் பிச்சை புகுதல் தகுமோ???

எனக்காக அழாதீர்கள் வியாபாரப் பொருளாக்காதீர்கள்.....

இறுக்குங்கள் உங்கள் கைகளை

என்தம்பி தங்கை நோக்கி

துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ...........

புலத்து மக்கள் விளங்கிக்கொண்டால் சரி . எங்களுக்கு இல்லாத அறிவு வேற்று மண்ணில் பிறந்த உங்களுக்கு வந்திருக்கின்றது . உங்கள் கவிதை சொல்லும் செய்தி துவழும் மனதிற்கு ஔதடம் . கவிதையில் சந்தங்களை சிறிது கவனம் எடுங்கள் . உங்கள் கவியாற்றல் கண்டு வியக்கின்றேன். வளர்க பெண் கவிஞரே !! :) .

நீங்களாச்சும் கொமண்ட் போட்டீங்களே கோமகன் அண்ணன் . சிலவேளைல மத்தவங்களுக்கு என்னோட பொயட் லைக் பண்ணலையோ தெரியலீங்க :( . ரெம்ப தாங்ஸ்சுங்க அண்ணன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழி நீர் துடைத்தெறிய,

விழிகளிலோ ஈரமில்லை!

குருதி வடிந்த மணலிடைகளில்,,

கோரைப் புற்கள் வேரோடுகின்றன!

ஈரம் காய்ந்து போன இதயங்களின்,

மவுனமான துடிப்பின் இசைக்கு,

மத்தளம் வாசிக்கின்றன,

மனிதாபிமானத்தின் கை விரல்கள்!,

நீட்டிய உங்கள் கரங்களைக் கண்களில் ஒற்றிக் கொள்கின்றோம்!

நன்றிகள், சொப்னா !!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐ.................. கவிதையில றிப்பிளை செஞ்ச புங்கையூரான் அண்னுக்கு ஒரு ஓ போடிறேங்க :)  :) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.