Jump to content

இது ஒரு புதிய முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பஞ்சர் வீட்டு பலாச்சுளையும், பனங்காட்டு பொந்து தேனும், நாட்டுக்கோழி முட்டையும், செக்கிழுத்த நல்லெண்ணையும்......

"புது வருசத்திற்கு நாங்கள் குடுத்த சாரமும், பற்றிக் கவுனும், எங்கட பொடியளிண்ட ஸ்டைலுக்கு இல்ல போல,

பேரபொடியன்களும் குடுத்த களிசானுகளை களட்டி எறிஞ்சு போட்டு ஓடிதிரியராங்கலாம்" சிரித்தார்கள் சம்பந்திகள்.

"கடைசியா பொடியன் ஏன் தெரியாது, அய்யா எனக்கு பஞ்சர் மாமா வீட்டு பலாப்பழம் சாப்பிடனும் போல இருக்கெண்டான்,

நானும் நாலு கட்டை சைக்கிள் மிதிச்சு பஞ்சர் மரத்தில இருந்த நல்ல பழமா பாத்து வெட்டி நல்ல சுளைகளை கொண்டு வாறன்"

பாசத்தோடு சொன்னார் பொடியனின் அய்யா.

"அட.. கடைசியா என்னட்டையும் பெட்டை, அப்பா எனக்கு பனங்காட்டு பொந்து தேன் சாப்பிடனும் போல இருக்கெண்டாள்,

நானும் வைரவ கோயில் பனங்காட்டில சாறத்தால போத்து கொண்டு போய் நாலு அடை எடுத்து கொண்டு வாறன்"

தேனீ கடியை தடவிக்கொண்டு சொன்னார் பெட்டையின் அப்பா.

"தேனில தொட்டு பலாப்பழம் தின்ன போயினமோ?" சிரித்தார்கள் சம்பந்திகள்.

"மூத்த பேர பொடியன், நல்லா மெலிஞ்சு போய் இருக்கிறான், வீட்டைச்சுத்தி ஓடி ஒரே விளையாட்டு, சும்மா நிக்க மாட்டான்,

அதான் அடை காத்த நாட்டு கோழிக்கு மூக்கில சிறகு குத்தி, முட்டை இட வைச்சு , நல்ல பெரிய முட்டைகளா எடுத்து கொண்டு வாறன்"

பாசத்தோடு சொன்னார் அப்பம்மா.

"ரெண்டாவதும் மூத்ததொட சேர்ந்து ஒரே குழப்படி, எப்பவும் வெய்யிலில சுத்தி திரிஞ்சு வருத்தம், சும்மா நிக்க மாட்டான்,

அதான் காலமை எள்ளை கொண்டு போய் சின்னதம்பி வீட்டில செக்கிழுத்து, சூட்டை தணிக்க நல்லெண்ணெய் எடுத்து கொண்டு வாறன்"

கை படிந்த எண்ணையை தலையில் தடவிக்கொண்டு சொன்னார் அம்மம்மா.

"எண்ணையில போட்டு முட்டை பொரிக்க போயினமோ?" சிரித்தார்கள் சம்பந்திகள்.

"இவை ரெண்டு பெரும் இந்த அரத பழைய சைக்கிள மிதிச்சு நாங்கள் எப்ப போய் பொடியள பாக்க போறம்?" சிரித்தார்கள் பேர்த்திமார், முறைத்தார்கள் பேரன்மார்!

முடக்கு திரும்பினர்......

"ஏன் வீட்டுக்கு முன்னால சனம் கூடி நிக்குது?" விளித்தார்கள் பேர்த்திமார், வாழ்க்கையிலேயே வேகமாக பெடலை மிதித்தார்கள் பேரன்மார்!

பஞ்சர் வீட்டு பலாச்சுளையும், பனங்காட்டு பொந்து தேனும், நாட்டுக்கோழி முட்டையும், செக்கிழுத்த நல்லெண்ணையும்......, இரத்த சகதியாக கிடந்தது!

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திரப்

போராட்டம் என்று

சொல்லப்பட்டு

கொலைசெய்யப்பட்டன

பச்சிளம் குழந்தைகள்...

சுதந்திர காற்று

சுவாசிக்க முடியாமல்

சூழ்ச்சிக்கு

இரையாகி போனது

தமிழ்க்குடும்பம்

என்ன பாவம் செய்தார்கள்

இவர்கள்

தமிழர்களாய்

பிறந்ததை தவிர...

இறந்தபின்

பிணத்தை பார்த்து

சொன்னான்

சிங்களவன்...

சிரித்த வண்ணம்

தமிழனின் ரத்தமும்

சிவப்பு என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தபின்

பிணத்தை பார்த்து

சொன்னான்

சிங்களவன்...

சிரித்த வண்ணம்

தமிழனின் ரத்தமும்

சிவப்பு என்று... ........................நன்றி பாராட்டுக்கள் மேலும் தொடர்க

Link to comment
Share on other sites

  • 2 months later...

வணக்கம் சாத்திரி..!

மன்னித்து விடுங்கள்,மனதின் இடுக்குகளில் ஆங்காங்கே மறைந்திருந்த​ கொஞ்ச​ நஞ்ச​ கவிதை உணர்வுகளும் இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் மரணித்துப் போய் விட்டன​.. ........வேண்டாமே...!

எம்மக்களின் துயர் சொல்ல​ ஏராளம்,ஏராளம் உயிரை உருக்கும் காட்சிகளும்,உயிர் சாட்சிகளும் உள்ளன​.. வெளிக் கொண்டு வாருங்கள்...!

நிருபா

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருநிமிட வலி-உங்களது

ஆயிரம் சிலுவைசுமந்த

வலி எங்களது

எத்துணை அன்பாய்

வாழ்ந்திருப்பீர்கள்

எல்லாம் முடிந்தது -ஓர்

ஓர் கணப்பொழுதில்

முதலில் மாற்றுக்கருத்து

மாந்திரிகர்களே

இதற்கும் -ஒரு விளக்கம்

கூறுங்களேன் .

இல்லாக்கடவுளரிடம்

கேட்க முடியாது

எனினும் எமக்குமட்டும் -ஏன்

இந்த வலிசுமக்கும்

வாழ்வுதந்தாய்

அந்த இரு கவிதைகளையும்

கவிதைகளைத்தந்த

கவிதைகளையும்

இவ்வளவு கொடுமையை

வதைத்துப்பிரித்தொரே '

நிங்களும் உங்கள்

தலைமுறையும்

நீடுழி வாழ வீண்டும்

நன்றாகவிருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும்.

முதலில் போடவேண்டிய தாமதமாக இணைத்ததற்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.