Jump to content

இது ஒரு புதிய முயற்சி


Recommended Posts

மேற்கோள்:

பூவென்று பாடிய பாவலர்களின்று

புயலென்று கண்டு கொள்வார்கள்

நிலவென்று நிறுவிய கவிஞர்களின்று

அது சுடும் என்று வந்து சொல்வார்கள்

இந்த வரிகளை வாசித்தபோதே - சந்தேகத்துக்கு இடமில்லாமல் - சுஜீந்தன் கவிதையே - பரிசு பெறும் என்று நினைத்தேன் - !

பாராட்டுக்கள் சுஜீந்தன் - ! 8)

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

சேயைப் பெற்று சிறப்பெய்தியவர்கள்

தீயை ஏந்திச் செல்கின்றார் - எம்

நோயைத் தீர்த்து தனித்தமிழீழத்

தாயை ஏந்தி வருவார்கள்.

இது என்னை கவர்ந்த வரிகள்

Link to comment
Share on other sites

சாத்திரி இப்பிடிக் காலை வாரிவிடக் கூடாது.....

பிழையான நேரத்தைக் குறிச்சுத்தந்து ஆதிவாசியை

மண்கவ்வ வச்சிட்டீரே!......

உன்னால் முடியும் தம்பி.....

சுஜிந்தன்!....

என் ஒருவனால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு

இங்கு பதில் கிடைத்திருக்கிறது.....

எழுதுகோல் இருக்கிறது எடுத்து உரசு!...

இருண்ட உள்ளங்கள் வெளிச்சம் நோக்கட்டும்.

எழுத்தை உணராமலா இழுத்துக் கேள்வி தொடுத்தேன்....

புரிகிறதா.... சுஜிந்தன்

இது ஆதிவாசியின் கணக்கு தப்பாது..

......... தழுவிய ஆதிவாசி

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் சுஜிந்தன்...தொடர்ந்து இது போல நல்ல படைப்புகளி எதிர்பார்க்கின்றோம்..

Link to comment
Share on other sites

கவிதை போட்டியில் வெற்றி பெற்ற சுஜிந்தனுக்கு பாராட்டுக்கள்.... கவிதையும் சூப்பர்.... :lol:

Link to comment
Share on other sites

Å¡úòÐì¸û ̓£ó¾ý...

«òмý ±øÄ¡ì ¸Å¢¨¾ôÀ¨¼ôÒ¸Ùõ ¿ýÈ¡¸ þÕ츢ýÈÉ...Á¢¸ ¿ýÚ..!!!

Link to comment
Share on other sites

இது நான் எதிர்பாராத ஒன்று. எல்லோரும் நன்றாக கவிதை புனைந்திருந்தார்கள். இருந்தாலும் எனக்குக் கிடைத்துவிட்டது, செல்வமுத்து ஆசிரியர் அவர்களுக்கும் ரசிகை அக்காவுக்கும் எனது நன்றிகள். :lol: எனக்குப் வாழ்த்துக்கள் தெரிவித்த வர்ணன் அண்ணா கெளரிபாலன் ஆதிவாசி மணிவாசன் அண்ணா நித்திலா தூயா அனிதா யு.கே.பொடியன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். :lol:

உன்னால் முடியும் தம்பி.....

சுஜிந்தன்!....

என் ஒருவனால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு

இங்கு பதில் கிடைத்திருக்கிறது.....

எழுதுகோல் இருக்கிறது எடுத்து உரசு!...

இருண்ட உள்ளங்கள் வெளிச்சம் நோக்கட்டும்.

எழுத்தை உணராமலா இழுத்துக் கேள்வி தொடுத்தேன்....

புரிகிறதா.... சுஜிந்தன்

இது ஆதிவாசியின் கணக்கு தப்பாது..

இந்தக் கவிதை எதாவது நல்லதற்குப் பயன்பட்டால் எனக்கு மகிழ்ச்சிதான். அவ்வாறு நடந்தால் தொடர்ந்து எழுதுவதிலும் ஒரு பயன் உள்ளது. ஆனால் அதற்கான சக்தி உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Å¡úòиû ̓£ó¾ý. ¯ñ¨Á¢§Ä§Â ¿øÄ Åâ¸û.¿¡ý þýÚ ¾¡ý ¿£í¸û ±Ø¾¢Â ¸Å¢¨¾ ÀÊòо¢Õ츢§Èý.

¦¾¡¼÷óÐ ±ØÐí¸û.ÁüÈÅ÷¸Ç¢ý ¸Å¢¨¾¸Ùõ «üÒ¾õ.

«Å÷¸ÙìÌõ À¡Ã¡ðÎì¸û. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சுஜீந்தன்

Link to comment
Share on other sites

சயீவன் வெண்ணிலா சுருதி ஆகியோருக்கு எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

இது நான் எதிர்பாராத ஒன்று. எல்லோரும் நன்றாக கவிதை புனைந்திருந்தார்கள். இருந்தாலும் எனக்குக் கிடைத்துவிட்டது, செல்வமுத்து ஆசிரியர் அவர்களுக்கும் ரசிகை அக்காவுக்கும் எனது நன்றிகள். :lol: எனக்குப் வாழ்த்துக்கள் தெரிவித்த வர்ணன் அண்ணா கெளரிபாலன் ஆதிவாசி மணிவாசன் அண்ணா நித்திலா தூயா அனிதா யு.கே.பொடியன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். :)

ஒருவனால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு

இங்கு பதில் கிடைத்திருக்கிறது.....

எழுதுகோல் இருக்கிறது எடுத்து உரசு!...

இருண்ட உள்ளங்கள் வெளிச்சம் நோக்கட்டும்.

எழுத்தை உணராமலா இழுத்துக் கேள்வி தொடுத்தேன்....

புரிகிறதா.... சுஜிந்தன்

இது ஆதிவாசியின் கணக்கு தப்பாது..

சுஜிந்தன் ஒரு படைப்பாளி முதலில் தன்படைப்புகளில்

முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும்.

அந்த நம்பிக்கைதான் அப்படைப்பாளியை முன்னிலைப்படுத்தும்.

உங்கள் படைப்புகள் சக்தியுள்ளனவாகத்தான் இருக்கின்றன.

நிறைய விடயங்கள் அறிந்தவராக இருக்கிறீர்கள்.

இது உங்கள் முதல்படியாக இருக்கட்டும்.

:P :P :P ஆதிவாசி தோல்வியைத்தழுவியது நம்பிக்கையால்த்தான்

அதாம்பா சாத்திரி குறித்த நேரத்தை நம்பியதால்.......

இனி சாத்திரிக்கு உழைப்பு அமோகமாகும்......!

8) 8) 8)

சாத்திரிக்கு சாதகம் பார்க்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

சாத்திரி எங்கை அடுத்த கவிதைக்கான படம்?

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒன்னயும் காணோம்............

நாச்சார் வீட்டில்...நான் ..அம்மா அப்பா அண்ணா..

நாலு சுவர் வீடு....நான் ..அம்மா அப்பா

தகரக்கொட்டில் நானும் அம்மாவும்

ஓலக்கொட்டிலில் நான் மட்டும்

கடவுள் தேவையறிந்து கொடுப்பாரென.. அப்பா சொன்னது

இதுதானோ....அப்ப

மேலே....அப்பா.. அம்மா...அண்ணா....

ம்

எனக்குத் தெரியும்

நாலு சுவர் வீடு.

Link to comment
Share on other sites

நாடியில் கை வைக்க கூடாதம்

அப்படி யாரு சொல்லுவார் எனக்கு இங்கு? :roll:

அம்மாவின் பாவாடை எனக்கு கதவுச் சீலை :?

அப்பாவின் சாரம் எனக்கு யன்னல் சீலை :?

வெயிலில் என் சட்டை காயும்போது கதவு சீலை எனது மாற்றுடை :?

குளிரில் நடுக்கும் போது யன்னல் சீலை எனது மெத்தை :?

தலை சீவிக் கொள்ளவும் இருக்கின்றது எனது வெண்டைக்காய் விரல்கள் :?

மாற்றிக் கொள்வதற்கு எல்லாமே இருக்கின்றது

பசியாற்றிக் கொள்ளத்தான் எதுவுமில்லை என்னிடம் :cry:

Link to comment
Share on other sites

அருமை... பாராட்டுகள்

வறுமையையும் அதற்கே உரிய கர்வத்தையும்

தொனிக்க வைத்திருக்கறீர்கள்

RAMA

Link to comment
Share on other sites

இப்படித்தான் நான் நினைக்கிறான்....!!!

கன்னத்தில்

கை வைத்து

கவலைகள்

மேல் கொட்ட...

எண்ணத்தை

எங்கோ விட்டு

என்னயிவள்

எண்ணுகிறாள்...???

தங்களுக்கு

வந்த துயர்

என்னவென்றொ

எண்ணுகிறாள்...???

பாழடைந்த

குடிலதனில்

பாவையிவள்

பரிதாபம்...

உற்றம். சுற்ற

உறவிழந்து

உதவுவார்

எவருமின்றி...

தன்னந்

தனியே

இவள்

தவிக்கிறாளோ...??

கோர யுத்தமது

கொடுமைகளை

தானிழைக்க

பாவம்

பிள்ளையிவள்

பரிதபிக்கிறாள்....

இல்லறம்

ஒன்று

கிடைத்ததென்று

இன்றுயவளும்

எண்ணையிலே...

இயற்க்கை

கூட வந்தவளை

துரத்துகிறதே

பாவம்

என் செய்வாள்...??

களைப்படைந்தயவள்

கதிரவனிடம்

வரம்

கேட்க்கிறாள்...

ஊறிப் போன

நிலமதனை

உலர வைக்க...

ஆம்

அப்படித் தான்

நான்

நினைக்கிறேன்....!!!

-வன்னி மைந்தன்-

Link to comment
Share on other sites

யுத்ததின் ஓலங்கள் மடிந்து போனாலும்

பூ இவள் பட்ட காயங்கள் ஆறிடுமோ

வானத்தில் சூரியனும் மறுநாள் உதித்தாலும்

இழந்து விட்ட இவள் உறவுகள் வந்திடுமோ

வழியோரம் விழிவைத்து நீ இருந்தாலும்

உதவும் உள்ளங்கள் உனக்கு உதவிடுமோ

Link to comment
Share on other sites

இனிப்பு வாங்கித் தருவேன் எனக் கூறி கூலி வேலைக்குப் போன அப்பாவையும்

கஞ்சிக்கு அரிசி வாங்கச் சென்ற அம்மாவையும் கானோமே

வழியில் ஆமிதான் மறித்தானே அல்லது

திடீரென ஊரடங்குச் சட்டமே தெரியலையே என்று

நீ நாடியிலே கை வைத்து புலம்புவது இந்த உலகத்துக்கு

புரியலையே!!!!!....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய

கந்தக காற்றோடு போனதாய் - என்

கடந்த காலம்

இன்னும்

என் நினைவுகள் தாங்கி

ஆங்காங்கே தொங்குவதாய்

அன்னை தந்தையின்

கந்தலாடைகள்.

வெள்ளம் மேவாமல் - என்

காலோடோர் கட்டணையுண்டு.

பகை

வெள்ளம் பாயாமல்

அண்ணன் இடும்

கட்டளையுண்டு.

நாளைவரும் பகலாயினும்

விடிந்ததென்ற

சேதி சொல்லுமா?

இல்லை

என் நெஞ்சிறங்கிய

இடியெல்லாம்

பகைகொல்லும்

வெடியாகுமா?

குண்டெறியாமல்

பந்தெறிந்து விளையாடும்

காலமினி எப்போ??

-------------------------------------

தயா ஜிப்ரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வடிவா கவிதை எழுதுகினம். எனக்கும் எழுத ஆசைதான். முடியாமல் இருக்கே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.