Archived

This topic is now archived and is closed to further replies.

akootha

பால் தாக்கரே காலமானார்

Recommended Posts

காலம் காலமாக முஸ்லிம்களின் படையெடுப்பால் அடிமைப்பட்டு கிடந்த மாரட்டிய இந்துக்களை மீட்டவர்

அடிச்சா திரும்ப அடி

உதைச்சா உதை இது தான் அவரின் கொள்கை அகிம்சை எல்லாம் காந்தி காலத்தோட சரி என்று கூறியவர்

Mgr க்கு கூடிய கூடத்தை விட அதிகம் இவரின் இறுதி சடங்கிற்கு இதுவே சாட்சி இந்துகள் இவர் மேல் வைத்த பற்றிற்கு

Share this post


Link to post
Share on other sites

எனதருமை மராட்டிய மக்களே எனது உயிரினும் மேலான மராட்டிய இளைஞனே,

வீரப்புதல்வன் மன்னாதி மன்னன் சிவாஜி ஆண்ட மண்ணல்லவா இது, எனது அன்பு சகோதர்களே நாம் அடிமைப்பட்டு கிடக்கலாமா? அடங்கி போகலாமா?

தோழர்களே, தோழியரே, நாம் விழித்தெழ வேண்டாமா?

வன்முறையையும் அடக்கு முறையையும் கண்டு நாம் பொங்கி எழ வேண்டாமா?

வன்முறைக்கு பதில் அகிம்சை தான் சரிவருமா?

இது எமது மண் நாம் தான் ஆளவேண்டும் இது எமது மதம் நாம் தான் காப்பாற்ற வேண்டும்

முதலில் வீட்டில் உள்ளவனுக்கு வேலை கொடு உணவு கொடு பின்பு விருந்தினருக்கு கொடுக்கலாம்

என்று தெருத்தெருவாக முழங்கிய குரல் ஓய்ந்து போய் அக்கினியுடன் சங்கமமாகி விட்டது சென்று வாருங்கள் ஐயா

Share this post


Link to post
Share on other sites

ஐந்து வருடங்கள் முன்பு ................................................................... நீங்கள் பாஜக கூட்டணி . பிரதிபா பாட்டிலை ஆதரிக்கிறீர்களே ???

BJP GO TO HELL. PRATIBA IS MARATHI.

ஐந்து வருடங்கள் கழித்து.........................................................................

நீங்கள் பாஜக கூட்டணி . பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறீர்களே ??? இப்போது என்ன பதில் ???

THIS TIME ALSO BJP GO TO HELL. THATS IT.

Share this post


Link to post
Share on other sites

அரசியல் சாணக்கியம் தெரிந்தவர் அரசியல் சதுரங்கத்தில் வல்லவர் ஜெயிக்கின்ற குதுரியல் பணம் கட்டி மாநிலத்திற்கு தேவையான நலன்களை பெறக்கூடிய அரசியல் மேதை

Share this post


Link to post
Share on other sites

எங்கட‌ மதம் அகிம்சை,தியாகம்,அமைதி,மன்னித்தல்,பாவம் பார்த்தல்,ஜீவ காருண்யம்,நேர்மை போன்ற அட‌ங்கிப் போகின்ற,ஏமாளியாக இருக்கின்ற குணங்களைப் போதிப்பதால் தான் நாம் அட‌ங்கிப் போகின்றோம்.இதிலிருந்து விதி விலக்காக பால்தாக்ரே போன்றவர்களும் அவசியம்

Share this post


Link to post
Share on other sites

தேர்தலைச் சந்திக்காமலே மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயற்பட்ட தலைவர். அவர் அவருடைய மக்களுக்கு செய்தவைக்கு மக்கள் நன்றி செலுத்துகின்றனர்..! இவர் ஈழத்தில்.. இந்துக்கள் மீதான சிங்களத்தின் கொடுமைகளை சரிவர கண்டிக்கவில்லை. அந்த வகையில்.. இவரின் அரசியல்.. செல்வாக்கு.. மராட்டிய எல்லைக்குள் மட்டுமே..! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

நிச்சயமா நெடுக்ஸ் அண்ணா என்ன செய்யா அந்தளவு மாரட்டிய இந்துக்களையும் இளைஞர்களையும் விழித்தெழ வைப்பதில் அவர் காலம் போய் விட்டது அனால் இன்று ஒரு இந்து அங்கு அடி வாங்கமாட்டான் அடித்தால் திருப்பி அடிப்பான் அந்த தைரியத்தை கொடுத்தவர் இவர் அதனால் தான் இவளவு கூட்டமும் ஆனாலும் கூட உங்களுக்கு இருக்கும் அதே மனநிலை எனக்கும் உண்டு

Share this post


Link to post
Share on other sites

பால்தகரேயின் ஆட்டத்தை இலங்கையில் சம்பந்தரோ, SJV yO ஆடியிருந்தால், இந்தியா இரசாயனக்குண்டு போடத்தற்கு பதிலாக சர்வதேசம் தமிழருக்கு மேலே அணுகுண்டு போட்டிருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் இந்த திரியில் பேசுவது பால்தாக்கரே என்ற மனிதனைப்பற்றி மற்றவர்களை பற்றி அல்ல

Share this post


Link to post
Share on other sites

இதையும் கொஞ்சம் பாருங்கோ.. :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111527

Share this post


Link to post
Share on other sites

[size=3]தாக்கரேவுக்கு ஏன் அஞ்சலி செலுத்தமுடியாது? - மார்கண்டேய கட்ஜு[/size]

[size=3]அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் முண்டியடித்து மறைந்த பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.[/size][size=3] பிரபலங்களிடம் இருந்து புகழஞ[/size]

[size=3]்சலிகளும் நினைவஞ்சலிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எனது மாறுபட்ட கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.[/size]

[size=3]இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இத்தகைய விதிகளைக் காட்டிலும் என் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.[/size]

[size=3]பால் தாக்கரேவின் பண்பு என்று எதைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து மண்ணின் மைந்தன் (பூமிபுத்ரா) என்னும் அவருடைய தேச விரோதக் கோட்பாடுதான்.[/size]

[size=3]இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1(1) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியா, அதாவது பாரத் மாநிலங்களின் யூனியனாக இருக்கும்.’ அதாவது, இந்தியா என்பது கூட்டுக்குழு அல்ல, யூனியன்.[/size]

[size=3]இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 19(1)(e) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தங்கவும், குடியமரவும் அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது.’[/size]

[size=3]ஒரு குஜராத்தியோ, தென் இந்தியனோ, பிகாரியோ, உத்தரப் பிரதேசத்துக்காரரோ அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் இருப்பவராக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவுக்குக் குடிபெயரலாம். இது அனைவருக்குமான அடிப்படை உரிமை. (சில வரலாற்றுக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மிர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவ்வாறு குடியேறுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.)[/size]

[size=3]ஆனால், பூமிபுத்ரா கோட்பாட்டின்படி, மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கு மட்டுமே உரியது. குஜராத்திகள், தென் இந்தியர்கள், வட இந்தியர்கள் ஆகியோர் ‘வெளியில் இருப்பவர்கள்’. நாம் மேலே கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு நேர் எதிரான கோட்பாடு அல்லவா இது! இந்தியா என்பது ஒரு தேசம். மராத்தியர் அல்லாதாரை அயல்நாட்டினரைப் போல் மகாராஷ்டிராவில் நடத்தமுடியாது.[/size]

[size=3]தாக்கரே தோற்றுவித்த சிவ சேனா, அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் தென் இந்தியர்களைத் தாக்கி, அவர்களுடைய வீடுகளையும் உணவிடங்களையும் அழித்தொழித்தது. மும்பையில் செய்தித்தாள்கள் விற்பவர்களாகவும் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் இருந்த பிகாரிகளையும் உத்தரப் பிரசேத்துக்காரர்களையும் 2008ல் தாக்கினார்கள். அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டன. ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் தாக்கப்பட்டார்கள். இஸ்லாமியர்கள் வில்லன்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.[/size]

[size=3]இவையனைத்தும் ஓட்டு வங்கிகள் உருவாக தாக்கரேவுக்கு உதவி செய்தன. வெறுப்புணர்வின் அடிப்படையில் திரண்ட வங்கிகள் இவை. ஹிட்லரும் இப்படித்தான் செய்தார் என்பதையும் தாக்கரே ஹிட்லரை நேசித்தவர் என்பதையும் இங்கே நினைவுபடுததிக்கொள்ளவேண்டும்.[/size]

[size=3]தாக்கரோவை நான் விமரிசிப்பதற்குக் அவருடைய தேச விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கோட்பாடு மட்டும் காரணமல்ல. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.[/size]

[size=3]What is India? என்னும் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா என்பது வட அமெரிக்காவைப் போல குடியேறிகளால் உருவான ஒரு நாடு. இன்று இங்கு வசிக்கும் 92 முதல் 93 சதவிகித மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் அல்லர். அவர்கள் குடியேறிகளின் வழிவந்தவர்கள். நல்ல வாழ்வு தேடி வட மேற்குப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள். இதுபற்றி மேலும் விரிவாக அறிய என் வலைப்பதிவுக்குச் செல்லுங்கள். இந்தியாவின் அசலான பூர்வகுடிகள் (பூமிபுத்ராக்கள்) ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்ட திராவிட பழங்குடிகளுக்கு முந்தையவர்கள். (கோண்டுகள், சாந்தல்கள், தோடாக்கள் போன்றவர்கள்.) இப்போது அவர்களுடைய மக்கள்தொகை 7 அல்லது 8 சதவிகிதம் மட்டுமே.[/size]

[size=3]பூமிபுத்ரா கோட்பாட்டை நிர்தாட்சண்யமாக அமல்படுத்தவேண்டுமானால், 92 முதல் 93 சதவிகிதி மகாராஷ்டிரியர்களை நாம் அந்நியர்களாக மதிப்பிடவேண்டியிருக்கும். இவர்களுள் தாக்கரே குடும்பத்தினரும் அடக்கம். மகாராஷ்டிராவைப் பொருத்தவரை உண்மையான பூமிபுத்ராக்கள் எனப்படுவோர் பழங்குடிகள் (Bhils போன்றவர்கள்). இவர்கள் தற்போது 7 முதல் சதவிகிதம் வரையிலேயே இருக்கிறார்கள்.[/size]

[size=3]இப்படிப்பட்ட பல பிரிவினைவாத சக்திகள் இன்று இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டுகளாக உடைப்பதே இவர்கள் குறிக்கோள். நாட்டுப்பற்று உள்ள அனைவரும் இவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.[/size]

[size=3]நாம் எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும்? ஏனென்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமானால் மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்த்தாகவேண்டும். விவசாயத்தால் மட்டும் இதனை நம்மால் சாதிக்கமுடியாது. நமக்கு நவீனத் தொழிற்சாலைகள் தேவை. நவீனத் தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய சந்தை தேவைப்படுகிறது. ஒன்றுபட்ட இந்தியாவால்தான் இப்படிப்பட்ட மிகப் பெரிய சந்தையை அளிக்கமுடியும். வறுமையை ஒழிக்கவேண்டுமானால், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டுமானால், பிற சமூக அவலங்களை ஒழிக்கவேண்டுமானால் நவீன தொழிற்சாலைகள் தேவை. நவீன கல்விமுறையையும், நல்ல மருத்துவ வசதிகளையும் நாம் உருவாக்கவேண்டும். அதற்கு நாம் ஒன்றாக இருக்கவேண்டியது அவசியம். உலகின் முன்னேறிய நவீன நாடுகளில் ஒன்றாக இந்தியா வளரவேண்டும்.[/size]

[size=3]எனவே, திரு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு நான் வருந்துகிறேன்.[/size]

[size=3](கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).[/size]

Share this post


Link to post
Share on other sites

பால் தக்கரே ராஜபக்ஷா, கிட்லர் பாணியில் வெறியூட்டி மகாராஸ்டிராவை பிடிக்க முனைந்தவர். அப்பிளையும் தோடம் பழத்தையும் ஒன்றென மயங்கும் யாழின் "அறிவிலி-கள்" பால் தக்கரை சிவாஜி, சுபாஸ், தலைவர் பிரபா போன்ற உண்மையான வீரர்களுடன் ஒப்பிடுகிறார்கள்.

கோளைகள் மக்களுக்கு வெறியூட்டி தாம் விரும்பியதை செய்பவர்கள். வீரரகள் தாம் விரும்பிதை தாமே செய்து கொள்பவர்கள்.

Share this post


Link to post
Share on other sites

தக்கர் கிந்தியனோடு முரண்பட்டாலும், கிந்தி ரத்தத்தில்தான் பிறந்தவர். கிந்தி போலவே, நடப்பவர், கிந்திபோலவே கூவுபவர். இவர் கிந்தியர் மட்டுமல்ல, மத வெறியரும். ஈழத்து தமிழர் தமிழ்நாட்டாருக்கு எதிரான துரோகளிடம் ஆதரவு எதிர் பார்க்கக்கூடாது.

Share this post


Link to post
Share on other sites

தேர்தலைச் சந்திக்காமலே மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயற்பட்ட தலைவர். அவர் அவருடைய மக்களுக்கு செய்தவைக்கு மக்கள் நன்றி செலுத்துகின்றனர்..! இவர் ஈழத்தில்.. இந்துக்கள் மீதான சிங்களத்தின் கொடுமைகளை சரிவர கண்டிக்கவில்லை. அந்த வகையில்.. இவரின் அரசியல்.. செல்வாக்கு.. மராட்டிய எல்லைக்குள் மட்டுமே..! :icon_idea:

உண்மை நெடுக்ஸ் நாங்க எப்பிடி எங்க இனத்திற்கு விழிப்புணர்வை கொண்டுவர முடியலையோ அப்பிடியே அவரும். அவர் மாநிலத்திலேயே அவர் வாழ்க்கை முடிந்து விட்டது. நாம் இத்தின வருட அகிம்சை ஆயுதப் போராட்டத்தித்ன் பின்னும் இன்னும் எம் மக்களுக்கு விடுதலையின் தேவை குறித்து கத்த வேண்டி இருக்கே.

இந்துத்வா கொள்கையில் தீவிரமாக இருந்த பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர் என்ற ஆச்சரியமான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தாக்கரேவின் உடல்நலனை கவனித்துக்கொண்ட மருத்துவரின் பெயர் ஜலீல் பார்க்கர் என்று தெரியவந்துள்ளது.

இந்துத்துவா கொள்கை, மண்ணின் மைந்தர் கோஷம் இவை பால் தாக்கரேவின் அடையாளங்கள்.

பாகிஸ்தான் மீதுள்ள எதிர்ப்பினால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை நடத்த விடாமல் செய்தார் தாக்கரே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் நலனை இஸ்லாமிய டாக்டர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தார் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தாக்கரே பற்றிக் குறிப்பிடும் பார்க்கர், நான் சந்தித்ததிலேயே மிகவும் இளகிய மனதும் அன்பும் கொண்ட ஒருவர் தாக்கரே என்கிறார்.

தாக்கரேவின் மறைவுச் செய்தியை கண்களில் நீர் துளிகளோடு அறிவித்தார் பார்க்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எப்பிடி இந்திய நாளிதழ்களில் வரும் செய்திகளை வைத்து எமது போராட்டத்தை ஒப்பிட முடியாதோ அதே போல தான் சிவசேனாவின் போராட்டமும் இருட்டடிப்பு, பொய்ச் செய்திகளை இந்திய மற்றும் தமிழக செய்திகள் வெளியிடும். இதை வைத்து நாம் அவர்களை தப்பா எடுக்க முடியாது. அவர் பாகிஸ்தான்,இந்திய உளவு நிறுவனங்கள் மற்றும் நரிகளான காங்கிரஸ் முஸ்லிம்கள் கிந்தியருக்கு எதிரா போராடியவர். அந்த அந்த மாநிலங்கள் அந்த அந்த மொழி பேசுவோருக்கே முன்னுருமை என்று செயல் படுத்திக் காட்டியவர். இந்திய யாம்பவான் கிந்தி அமிதாப் பட்ச்சனையே மும்பைக்குள் வர வேண்டாம் என்று கூறியவர். கன்னட ரஜனிய தமிழ் நாட்டிலை யாராவது வர வேண்டாம் என்று துணிவாய் சொல்லுவார்களா?

Share this post


Link to post
Share on other sites

ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் நலனை இஸ்லாமிய டாக்டர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தார் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது ஒரு சுயநல நடத்தை. இதை பல சிங்களத்தலைமைகளும் செய்தன. அமெரிக்காவின் மூடப்பட்ட கூலியன் ஃபினாஸ்தான் ரணிலுக்கும், ராஜபக்ஷாவுக்கும் ஒரே நேரத்தில் முதலீட்டு ஆலோசகர்களாக இருந்தார்கள் என்பது கேள்வி. இதனால் தான் இவர்கள் அமெரிக்காவில், "புலிகளுக்கு உதவினார்கள்" என்று தண்டிக்கப்பட்டும், இலங்கை அரசு இவர்களின் முதலீடுகளை இலகையில் பாதுகாத்து அவர்கள் இலங்கையில் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்று அறிக்கைவிட்டது. பலகாலமாக பல தமிழ் ஆலோசகர்களும், தொழில் துறை வல்லுநர்களும், தனிபட்ட சிங்களவர்களின் சேவையில் இருந்தார்கள். நீலன் திருச்செல்வம் சந்திரிக்காவின் ஆலோசகர். JVP கண்டியை தாக்கிய போது இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தான் சிறிமாவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டத்தாகவும், அவர் சிங்கள் பாதுகாப்புகளை தவிர்த்தார் எனபதும் கேள்வி.

தாக்கரே பற்றிக் குறிப்பிடும் பார்க்கர், நான் சந்தித்ததிலேயே மிகவும் இளகிய மனதும் அன்பும் கொண்ட ஒருவர் தாக்கரே என்கிறார்.இந்திய யாம்பவான் கிந்தி அமிதாப் பட்ச்சனையே மும்பைக்குள் வர வேண்டாம் என்று கூறியவர். கன்னட ரஜனிய தமிழ் நாட்டிலை யாராவது வர வேண்டாம் என்று துணிவாய் சொல்லுவார்களா?

இதனால் வன்முறையாளர் ஆகிய பால் தக்கர் நல்லவராக, சுத்த வீரனாக, வரமுடியாது.

Share this post


Link to post
Share on other sites

முஸ்லிம் டாக்டர் ஒருவரை அவர் வைத்திருந்ததற்கு காரணமே ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல ஆனால் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் வன்முறையை தூண்டுபவர்களுக்கு எங்கள் பதிலும் அப்பிடியே இருக்கும் மற்றும்படி அவர்களுடன் பழகுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்பதை உணர்த்த

சிங்கள சமுதாயத்தின் அடக்கு முறைகளுக்கு எதிரா போராடின நடேசன் அண்ணாவின் மனைவி ஒரு சிங்களவர்

தமிழர்களின் போராட்டம் சரியானதே என்று கூறும் விக்க்ரமபாகு கருணாரத்தின ஒரு சிங்களவர்

Doctor பிரைன் சென்வரத்தின ஒரு சிங்களவர்

Share this post


Link to post
Share on other sites

[size=5]பால்தாக்கரே இறுதி ஊர்வலத்தில் 20 இலட்சம் பேர் திரண்டனர் - மும்பையே முடங்கியது! [/size]

funeral-191112-150.jpg

தாதர் சிவாஜி பார்க்கில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பொது மேடையில் சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. தாக்கரேயின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே நேற்று முன்தினம் பிற்பகல் 3.33 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் இறுதிச்சடங்கு நடைபெற்ற சிவாஜி பார்க் மைதானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பாந்த்ரா மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் பிற்பகல் 3 மணிக்கு தாதரில், சிவசேனா தலைமையகம் அமைந்துள்ள சிவசேனா பவன் சென்றடைந்தது.பால் தாக்கரே உடல் வைக்கப்பட்டிருந்த ஊர்தியில் உத்தவ் தாக்கரே மற்றும் குடும்பத்தினரும், மனோகர் ஜோஷி, திவாகர் ராவ்தே, சஞ்சய் ராவுத், நீலம் கோரே, சுபாஷ் தேசாய் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் பா.ஜ. தலைவர் கோபிநாத் முண்டே உள்ளிட்டோரும் இருந்தனர். சிவசேனா பவனில் பால் தாக்கரேயின் உடலுக்கு கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்திய பிறகு உடல் அங்கிருந்து அருகில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் நடந்தன.

தாக்கரேக்கு மிகவும் பிடித்த சிவாஜி பார்க்கில் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு பால் தாக்கரேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பால் தாக்கரே சிதைக்கு மகன் உத்தவ் தாக்கரே தீ மூட்டினார். முதல்வர் பிருத்விராஜ் சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பா.ஜ. தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், அமிதாப் பச்சன், பா.ஜ. தேசிய தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சாலையின் இரு புறத்திலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் நின்று மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். சிவாஜி பார்க் மைதானத்தில் அவரது இறுதிச் சடங்கு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தாக்கரே குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை ஏற்று முதல்வர் பிருத்விராஜ் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த மைதானத்தில் தாக்கரேயின் இறுதிச் சடங்கு நடத்த அனுமதி அளித்ததாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுதந்திர இந்தியாவின் மும்பை பொது இடத்தில் தலைவர் ஒருவரிடன் உடல் தகனம் செய்யப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

பால் தாக்கரேயின் மரணத்தை தொடர்ந்து மும்பையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இது தவிர மாநில ரிசர்வ் போலீசின் 15 படைப்பிரிவுகள் மற்றும் விரைவு நடவடிக்கை படையின் 3 படைப்பிரிவுகளும் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டன.

இறுதிச்சடங்கையொட்டி மும்பை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. டாக்சி, ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் எதுவுமே ஓடவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதுமே நேற்று அறிவிக்கப்படாத பந்த் அனுசரிக்கப்பட்டது. கடைகள், ஓட்டல்கள், மால்கள், தியேட்டர்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பால் மற்றும் காய்கறிகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதற்கிடையே, பால் தாக்கரே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று மகாராஷ்டிரா முழுவதும் பந்த் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=70424&category=IndianNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

"மகாராஸ்டிரா மகாராஸ்டிரருக்கே." என்ன ஒரு பகிடி சேட்டைகதை. மதவெறியர் பால் தக்கர் மகாராஸ்டிரன் என்றால் அப்படி இருக்க வேண்டும் என்று வரவிலக்கணம் எழுதி வைத்தாரா? எந்த கொடுமைகளை தப்ப முடியாமல், கான்சி மகமூட் போன்றவர்களால் இந்துக்கள் மதம் மாற்றப்பட்டர்கள் எனது நினைவிருக்கா?

உங்களில் எந்தனை பேர், இன்றய சிங்கள வன்மைமுறைகளில் சிக்கிய தாயையும் அவளுடை பிள்ளையையும் அழித்துவிடவேண்டும் என்று வாதிடுகிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites

அத்து தான் ஏற்க்கனவே சொல்லிட்டமே தெளிவா

முதல்ல வீட்டில இருக்கிறவனுக்கு சாப்பாடு வேலை கொடு அப்புறம் விருந்தினர கவனி இது தான் கொள்கை

தொழிற்சாலை தொடங்க போறியா வா தரலாமா தொடங்கு நல்ல விஷயம் ஆனா வேலை கொடுக்கும் போது முதல்ல என்னோட மாநில இளஞன கவணி அவன் பசியோடையும் பட்டிநியோடையும் தெருவில சுத்திட்டு நிக்க முடியா என்னோட மாநிலத்திக்கு வந்த நீ என்னோட மொழிய படி அதற்க்கு முன்னிரிமை கொடு simple.

What's wrong with that?

Share this post


Link to post
Share on other sites

இந்த அம்புலிமாமா கதைகள் அரசியல் அல்ல. ராஜபக்ஷ மனித உரிமைகள் சபைக்கு பயணம் போய் உரிமைகளுக்காக வாதிட்டவர். புலிகள் போராட பணம் கொடுத்தவர். நோர்வேயிற்கு தேர்தலில் வென்றவுடன் புலிகளுடன் பேசுதாக கூறி தேர்தலை குழப்பாமல் பார்த்துகொண்டவர்.

அப்பிளையும் தோடையையும் இனம் காண வேண்டும். . நடேசன் மணம் முடிக்க ஆயிரம் தமிழ் பெண்கள் இருந்திருக்கலாம். இளமையில், காதலில், சிங்கள பெண் ஒருவரை மணம் முடித்தார் நடேசன். இதன் தாற்பரியதை மனித வாழ்கையை உணர்ந்தோரே உணர்வார். இதற்காக தன்னை 90 வயது வரைக்கும் காப்பற்றிகொள்ள கள்ளத்தனத்தில் முஸ்லீமை தனது குடும்பவைத்தியராக வைத்திருக்கும் தக்கர், நடேசன் ஆக மாட்டார். நடேசன் போன்ற ஒரு தலைவன் ஆகி விடமுடியாது. புலிகளின் தலைமைகள் முடிவு அவர்கள் தெரிந்து எடுத்ததாகி இருக்கும் போது எஞ்சிய போராளிகளை காப்பாற்ற என்று எதிரியிடம் வெள்ளை கொடியுடன் போய் சித்திரவதை பட்டு இறந்தவன் நடேசன்.

தக்கர் சிவாஜின் பெயரை பயன்படுத்த முடியாது. மகிந்தா துறவி மகிந்தரின் பெயரை பயன்படுத்த முடியாது.

அத்து தான் ஏற்க்கனவே சொல்லிட்டமே தெளிவா

முதல்ல வீட்டில இருக்கிறவனுக்கு சாப்பாடு வேலை கொடு அப்புறம் விருந்தினர கவனி இது தான் கொள்கை

தொழிற்சாலை தொடங்க போறியா வா தரலாமா தொடங்கு நல்ல விஷயம் ஆனா வேலை கொடுக்கும் போது முதல்ல என்னோட மாநில இளஞன கவணி அவன் பசியோடையும் பட்டிநியோடையும் தெருவில சுத்திட்டு நிக்க முடியா என்னோட மாநிலத்திக்கு வந்த நீ என்னோட மொழிய படி அதற்க்கு முன்னிரிமை கொடு simple.

What's wrong with that?

வெறிதனத்துக்கு பேர் வெறித்தனம்.

Share this post


Link to post
Share on other sites

போராளிகளை காப்பாற்ற நடேசன் அண்ணா எப்பிடி வெள்ளைக்கொடி எடுத்தாரோ அதே போல மும்பை வாழ் இந்துக்களை காக்க தாக்கரே என்ற கார்டூனிஸ்ட் காவி உடை தரித்தான் வெகுண்டு எழுந்தான் சீறினான் பாடம் புகட்டினான் இறுதி வரை மக்கள் தலைவனாக மக்கள் வெள்ளத்தில் மிதந்து தான் நேசித்த சிவாஜி மைதானத்தில் அக்கினியுடன் சங்கமமாகினான் அவருக்கும் மக்கள் ஆதரவு இருக்கின்றதனால் தான் எந்த ஒரு தலைவனுக்கும் கிடைக்காத sivaaji மைதானத்தில் தகனம் என்ற பெரும் பாக்கியம் பெற்றான் மக்கள் கடல் அலையன திரண்டு வந்து அவரை வழியனுப்பி வைத்திருகின்றனர் அதுவும் பெரும்பாலும் இளஞர் கூட்டம் யாருக்கையா இப்பிடி ஒரு இறுதி மரியாதையை கிடைக்கும்? தி மு கா வில் கூட முதியோர் தான் கூட இது அத்தனையும் இரத்த துடிப்பு மிக்க இளைஞர்கள்

Share this post


Link to post
Share on other sites

ஆனாலும் சீசன் தக்கருக்கு குருமார் கிட்டலருக்கும், ராசபக்சாவுக்கும் கிடைத்த ஆதரவு இல்லை. ஒரு நாளும் ஆட்சிகட்டிலில் ஏறவில்லை. தக்கரை தீதியில் போட்டு துவேசத்தை தூய்மை படுத்தியிருக்கிறார்கள். மகாராஸ்டிராவில் சினசேனை வெகுவிரைவில் தனது சிதைக்கு தீமூட்டும். BJP படுகிற பாட்டுக்குள் மகாராஸ்டிரர் தங்கள் பொருளாதாரத்தை தாங்கள் அழிக்க தயாரக இல்லை. கொழுத்தி எரிஞ்சு முடிஞ்ச வாணக்கட்டையாக கடைசி நாட்களை கழித்தார் தக்கர். மானிலத்திற்கு நிறைய செய்தும் மோடி மேலே வரமுடியாமல்த்தான் தவிக்கிறார்.

Share this post


Link to post
Share on other sites

வரலாறு தெரியமா பேசக்கூட 1996 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி ஆட்சியப்பிடித்தது அதற்காக தனித்து பிடிக்கவில்லை என்ற உங்களின் ஒண்டுக்கும் உதவாதா வாதத்தோடு வராதிற்கள்

Share this post


Link to post
Share on other sites

வரலாறு தெரியமா பேசக்கூட 1996 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி ஆட்சியப்பிடித்தது அதற்காக தனித்து பிடிக்கவில்லை என்ற உங்களின் ஒண்டுக்கும் உதவாதா வாதத்தோடு வராதிற்கள்

அதுதான் எல்லத்திற்கும் தேவையான வாதம் என்பதால்த்தான் அதை நான் வைக்க முன்னர் தானே வைத்து அந்த விவாதம் வந்தால் அதற்கு பதில் என்னிடம் இல்லை என்று சொல்லி முடிப்பதும்.

அண்ணதுரை தி.மு.காவை பதவிக்கு கொண்டுவரும் போது பெரியாரை கூட துணைக்கு அழைக்காமல்த்தான் வந்தார்.

தமிழ் காங்கிரசும் UNP யுடன் சேர்ந்து இலங்கை ஆண்டது. தமிழரசுக்கட்சியும் இலங்கையை ஆண்டது. தக்கர் தன் பின்வளத்தை தூக்கி அடிச்சு கொளுத்திய வாணக்கட்டையாக மாறி இருந்தவரால் மேலே எழும்ப போக முடியவில்லை.

பேடி தக்கருக்கு ஜனநாயக பாணியில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க பயம். அதனால் தானே தன் சிவசேனையை கொலை செய்துவிட்டுத்தான் தன் சிதையில் படுத்தார்.

Share this post


Link to post
Share on other sites

அண்ணாத்துரை ராமசாமியைக் கொண்டுவரவில்லை. ஏனென்றால் ராமசாமி பெண் பொறுக்கி என்று சொல்லுக் கொண்டு பிரிந்து வந்ததால், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனாலும் திராவிடம் என்பதின் அரசியல்வாரிசாகத் தன்னை இனம் காட்டிக் கொண்டார். தமிழர் முதுகில் ஏறிச் சவாரியும் செய்தார். பால் தாக்ரேக்கு முதுகில் ஏறிச் சாவரி செய்யும் தேவை இல்லாததால் தன் கட்சி வெற்றி பெற்றபோதும், பதவியி;ல ஏறி அமரவில்லை. தன் குடும்பத்தினரையும் மந்திரிப் பதவிக்கு அனுப்பி ஊழல் செய்யவில்லை.

Share this post


Link to post
Share on other sites