Jump to content

அமெரிக்காவின் ஏகாதிபத்யக் கனவும் ஈழப் போராட்டமும்


Recommended Posts

இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தினை ஒரு இறுக்கமான நிலமைக்குள் தள்ளியுள்ளது. சுதந்திரத்துக்காக அவாவுறும் இனத்தின் அபிலாஷகளை கருத்தில் எடுக்காத எந்தத் தீர்வுத் திட்டமும் அப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியாது.

தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டமும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டமும் இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

இதே உதாரணம் மீண்டுமொரு முறை புதுப்பிக்கப்படும் வகையிலேயே இலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேசத்தின் அணுகு முறை தொடர்கின்றது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாத வகையிலும் குறை மதிப்பீடான அலட்சியப் போக்கிலும் எடுக்கப் படும் நடவடிக்கைகள் இவ்வாறான பாரிய தவறினை மீண்டும் அரங்கேற்றப் போகின்றது.

சர்வதேச நாடுகள் என்ற கோதாவில் ஈழப்பிரச்சனையில் தலையிடும் நாடுகளின் தலமைப் பொறுப்பை வலிந்து ஏற்றுக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா தன் ஏக ஏகாதிபத்தியக் கனவுகளை வலிந்து திணித்து பிராந்தியங்களின் அரசியல் பலத்தினைத் தீர்மானிக்கும் முனைப்புடன் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றது.

பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற அமெரிக்காவிற்கு அட்சயபாத்திரமாக அனைத்து அனுகூலங்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும் வரை இந்த அவலம் தொடரத் தான் போகின்றது.

இன்று அமெரிக்காவின் அதிரடி ஆட்டங்களுக்கு முண்டு கொடுக்கும் சர்வதேச நாடுகள் வரலாற்றில் தலை குனிந்து நிற்கப் போகின்ற காலம் ஒன்று வரத்தான் போகின்றது.

ஈழப்போராட்டத்தின் தலைமைச் சக்திகளான விடுதலைப் புலிகளைத் தடை செய்த அமெரிக்கா தன் நட்பு நாடுகளையும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைகளைக் கொண்டு வர நிர்ப்பந்தித்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது. அந்த வரிசையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் தன் நட்பு நாடுகளான பிரித்தானியா, ஒஸ்ரியா போன்ற நாடுகளின் மூலம் தன் எண்ணத்தை ஈடேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணியப் போகின்ற ஐரோப்பிய ஒன்றியம் என்ன காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அக்கொள்கையில் இருந்து விலகி அமெரிக்காவின் எடுபிடியாகவே செயற்படப் போகின்றது. தன்னிடம் இருந்து கைநழுவிப் போன உலகின் பொருளாதார அரசியல் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் முதன்மைச் சக்தி என்னும் நிலையை மீண்டும் அமெரிக்காவிடம் இருந்து மீட்டெடுக்கும் ஐரோப்பாவின் கனவு ஈடேறாமலேயே போகப் போகின்றது. அமெரிக்காவின் அபிலாஷைகளுக்கு எவ்வளவு தூரம் ஐரோப்பிய ஒன்றியம் பலியாகியுள்ளது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

'' இலங்கைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். அரசியல் பன்மைத்துவமும் மாற்று ஜனநாயகக் குரல்களையும் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அனைத்து இன மக்களின் நலன்களும் பாது காக்கப் படும்."

"ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் தமிழர்களிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகலால் மேற்கொள்ளப் படுகின்ற கட்டாய அறவிடலை ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தங்களால் இயன்றளவிற்கு தடை செய்ய வேண்டும் "

"கடல் சார் நடவடிக்கைகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பாரிய அளவில் மீறியுள்ளனர். குறிப்பாக மே 11 ஆம் திகதி கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் பலர் கொல்லப் பட்டுள்ளனர். கண்காணிப்புக் குழுவினரும் பேராபத்திற்குள்ளாகியுள்ளனர

Link to comment
Share on other sites

'' அமைதிப் படையைப் போல ஐ.நாடுகள் படை ...இன்னுமொரு அநுபவக் களமாகப் போகின்றதா?

"உயிர்க்குலை உலைக்களமாகும்

தணல் வீரம் தமிழரின் வீரம்.."

அகாசியின் அங்கலாய்ப்பு புஸ்ஸின் புதுத் தந்திரம் என்று தான் கொள்ள வேண்டும்.

புலம் பெயர் தமிழர்களுக்கு காத்திரமான பணி கொட்டிக் கிடக்கின்றது.

புலம்பிக் கொண்டு இருப்பதை விட எங்கள் நியாயத்தை விளம்பிக் கொண்டிருப்பதும் ஆதரவுச் சக்திகளை ஒருங்கிணைப்பதும் காலத்தின் தேவை.

காலம் காத்திருப்பதில்லை... நினைவு நனவாக வேண்டுமென்றால் ..... செயல்...செயல் செயல் ஒன்று தான் வழி....

கருத்துகளை பகராமல் கள உறவுகள் கண் மூடிக் கிடப்பது ஏனோ..? நமக்கில்லை என்று கண்மூடிப் பால் குடிக்கின்றார்களோ...?

செய்யத் துடிக்கும் செயல் வீரத்துடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா எல்லாளா சும்மா துடிக்காதே உன்னையும் கவிட்டவன் தானே துட்டகைமுனு.வாழ்க துட்டன் வளர்க தமிழ்......

நக்கலுடன் புத்தன்

Link to comment
Share on other sites

ஜநா படை அமைதிகாக்கும் படை என்று உட்புகுவதற்கு போர்புரியும் 2 தரப்பும் ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? 2 இல் 1 தரப்பாயினும் ஏற்றுக் கொள்ளாமலே வருவது சண்டையை எதிர்கொள்ள வருகிற ஆக்கிரமிப்பு படையாகத்தான் இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் ஈராக்கின் இன்றைய நிலையில் ஜரோப்பிய ஒன்றிய நாடுகளோ, பிரித்தானியாவே அமெரிக்காவே படைகளை அனுப்ப தயாரா? அந்தநாட்டு மக்களிடம் தமது பிள்ளைகளை இன்னுமொரு யுத்தகளத்திற்கு அனுப்புவதை நியாயப்படுத்த முடியுமா?

கிழக்கு திமோரில் பிணக்கில் உள்ள 2 தரப்பிற்கிடையே இராணுவ வலுச்சமநிலையிருக்கவில்லை. எனவே கிழக்கு திமோர்காரர்களை இந்தோனேசிய படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்களிடம் இருந்து பாதுகாக்கும் தேவைக்காக ஜநா படைகள் சென்றன.

எமதுவிடையத்தில் கண்காணிப்புக்குழுவின் நடவடிக்கைகள் விரிவாக்கம் ஸ்திரப்படுத்தல் என்று ஏதாவது முயற்சிக்கலாம்? இதற்கு ஒரு (சர்வதேசச் சதி) தந்திரம் பாவிக்கப்படலாம் போர்நிறுத்த உடன்படிக்கையில் சில மாற்றங்களை கொண்டுவருவதாக, அதாவது புலிகளிற்கு சார்பான முறையில் யுத்தநிறுத்த ஒப்பந்த விதிமுறைகளில் (உதாரணத்திற்கு கடற்புலிகள் விடயங்கள் போன்றவற்றில்) மாற்றங்களை கொண்டுவருவதாக ஏமாற்றலாம். இதற்கான முன்னோடியாகத்தான் நடுநிலையாளர்களுடனான ஒஸ்லோ பேச்சுக்களுக்கான அழைப்பாக கூட இருக்கலாம்.

சிங்கள இனவாதம் இயலுமானவரை பிரச்சனையை சர்வதேசமயப்படுத்தாது பார்க்க முயலும். இலங்கையின் இறைமைக்கு ஆபத்து வெற்றி கொள்ள முடியாது தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்தவுடன் அதை தமிழரிடம் பறிகுடுக்காது வேறொரு 3ஆம் தரப்பிற்கு தாரைவார்க்கத்தான் முயலும்.

Link to comment
Share on other sites

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மேலாதிக்கத்தை பெற்றுக் கொள்வதற்கு கோர்ஸியாத் தீவிலிருக்கும் படைத்தளைத்தைப் போல் அமெரிக்காவிற்கு இன்னுமொரு வலுவான தளம் ஒன்று இந்து சமுத்திரத்திப் பிராந்தியத்தில் தேவையாக இருக்கின்றது.

பிரித்தானியாவின் ஆலோசனையின் படி (பிரித்தானியாவின் ரோயல் நேவி இரண்டாம் மகாயுத்த காலத்தில் திருகோணமலைத் துறைமுகத்திலிருந்தே தூர கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய படை நகர்வினை மேற்கொண்டது) இலங்கையின் திருகோண மலையைப் பயன்படுத்த நினைக்கின்றது. அதுவும் பிரிவு படாத இலங்கை அதன் நோக்கம்.

இதன் அடிப்படையில் அமெரிக்காவின் இன்றைய நடவடிக்கைகளை விளங்கிக் கொள்ள முயலலாம். பால்கன் குடியரசான யூகோஸ்லாவியாவில் நடந்ததையும் நாம் நினைவு கொள்ள வேண்டும். நேட்டோவின் இராணுவம் யூகோஸ்லவாக்கிய இராணுவத்துடன் முழு அளவிலான யுத்தத்தைப் புரிந்தது.

நேட்டோ இராணுவம் , ஐ நா அமைதிப் படை என்பன அமெரிக்கா சார்ந்த நாடுகளின் ஆலோசனையிலும் அவர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளிலுமே ஈடுபடுத்தப்படுகின்றது என்பதில் வேறு கருத்து இருக்க முடியுமா?

ஐ நாடுகள் படைகள் இலங்கையில் இறங்கினால் தமிழருக்கும் பெப்பே... சிங்களவருக்கும் பெப்பே...தான் கிடைக்கப் போகின்றது. அப்படியொரு இக்கட்டு நிகழாமல் அரசியல் போக்கினை மாற்றிச் செல்வதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.

சியோனிஸ இஸ்ரவேலுடன் கூட கூட்டுச் சேரக்கூடிய மனநிலையில் இருக்கும் அமெரிக்காவின் ஆதரவை நாம் ஏன் பெற்றுக் கொள்ள முயலக்கூடாது? இது இப்போது ஒரு கேள்வியாகவே இங்கிருக்கின்றது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை ஒத்துக் கொண்டால் சிங்களவர்,இந்தியா (நாங்கள் ஒத்துக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அவர்கள் சொல்வது) அமெரிக்கா சார்ந்த சர்வதேசம் இப்பொழுது எங்களுக்கு எதிரிடையாகவே செயற்படுகின்றார்கள்.

இதில் இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள விரயமாக்கும் நேரத்தில் அமெரிக்காவுடன் முயற்சி செய்யலாம் என்பது எனது எண்ணம். அது நீண்ட காலப் பயன்பாடு உள்ளதாக இருக்கும். சில விட்டுக்கொடுப்புகள் இருந்தாலும் தமிழ் ஈழத்திற்குச் சேதமிருக்காது.

ஆழ்ந்த யோசனையுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

புத்தா! உனக்குப் பிச்சைப் பாத்திரத்தை விட்டால் கதியேது?

அதில் கூட "நக்கலுடன்' தான் திரிகின்றாயா? உனது பக்த கேடிகள் தானம் கூட நிறைவாகப் போடுவதில்லையா?

நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத் தண்ணீ தான் என்று சொல்வார்கள். உனது அருமையான ஆனந்த மார்க்கம் "சிங்கத்திற்குப் பிறந்த சிங்களக் குட்டிகளிடம் " (மேற்கோள் உபயம் பிருந்தன் :oops: :oops: )இருக்கும் வரை "நக்கு" தான் உனக்கு.

தந்தைக்கே பெண்கள் அணியும் ஆடை ஆபரணங்களை அணிந்தொ கொள்ள அனுப்பிய மகன் "துட்டன்'' என்று பெயர் பெற்றான். தந்தையோ மகனாலேயே பேடி என்று அழைக்கப் பட்டான்.

உன் பக்த கேடிகளின் சரித்திரம் இங்கு தான் ஆரம்பிக்கின்றது. அவர்களின் ஹீரோ இந்த துட்ட மன்னன் தான் ....சீ வெட்கம்....

இந்து மதத்தவனான புத்தனுக்காக கவலைப் படும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மேலாதிக்கத்தை பெற்றுக் கொள்வதற்கு கோர்ஸியாத் தீவிலிருக்கும் படைத்தளைத்தைப் போல் அமெரிக்காவிற்கு இன்னுமொரு வலுவான தளம் ஒன்று இந்து சமுத்திரத்திப் பிராந்தியத்தில் தேவையாக இருக்கின்றது.

பிரித்தானியாவின் ஆலோசனையின் படி (பிரித்தானியாவின் ரோயல் நேவி இரண்டாம் மகாயுத்த காலத்தில் திருகோணமலைத் துறைமுகத்திலிருந்தே தூர கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய படை நகர்வினை மேற்கொண்டது) இலங்கையின் திருகோண மலையைப் பயன்படுத்த நினைக்கின்றது. அதுவும் பிரிவு படாத இலங்கை அதன் நோக்கம்.

இதன் அடிப்படையில் அமெரிக்காவின் இன்றைய நடவடிக்கைகளை விளங்கிக் கொள்ள முயலலாம். பால்கன் குடியரசான யூகோஸ்லாவியாவில் நடந்ததையும் நாம் நினைவு கொள்ள வேண்டும். நேட்டோவின் இராணுவம் யூகோஸ்லவாக்கிய இராணுவத்துடன் முழு அளவிலான யுத்தத்தைப் புரிந்தது.

நேட்டோ இராணுவம் , ஐ நா அமைதிப் படை என்பன அமெரிக்கா சார்ந்த நாடுகளின் ஆலோசனையிலும் அவர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளிலுமே ஈடுபடுத்தப்படுகின்றது என்பதில் வேறு கருத்து இருக்க முடியுமா?

ஐ நாடுகள் படைகள் இலங்கையில் இறங்கினால் தமிழருக்கும் பெப்பே... சிங்களவருக்கும் பெப்பே...தான் கிடைக்கப் போகின்றது. அப்படியொரு இக்கட்டு நிகழாமல் அரசியல் போக்கினை மாற்றிச் செல்வதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.

சியோனிஸ இஸ்ரவேலுடன் கூட கூட்டுச் சேரக்கூடிய மனநிலையில் இருக்கும் அமெரிக்காவின் ஆதரவை நாம் ஏன் பெற்றுக் கொள்ள முயலக்கூடாது? இது இப்போது ஒரு கேள்வியாகவே இங்கிருக்கின்றது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை ஒத்துக் கொண்டால் சிங்களவர்,இந்தியா (நாங்கள் ஒத்துக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அவர்கள் சொல்வது) அமெரிக்கா சார்ந்த சர்வதேசம் இப்பொழுது எங்களுக்கு எதிரிடையாகவே செயற்படுகின்றார்கள்.

இதில் இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள விரயமாக்கும் நேரத்தில் அமெரிக்காவுடன் முயற்சி செய்யலாம் என்பது எனது எண்ணம். அது நீண்ட காலப் பயன்பாடு உள்ளதாக இருக்கும். சில விட்டுக்கொடுப்புகள் இருந்தாலும் தமிழ் ஈழத்திற்குச் சேதமிருக்காது.

ஆழ்ந்த யோசனையுடன் -எல்லாள மஹாராஜா-

ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் உருப்படுமா?

இது நான் கேள்விப்பட்டதுதான், உண்மை பொய்தெரியாது,

போராட்டகாலத்தில் ஒருகட்டத்தில் அமெரிக்கா விடுதலைப்புலிகளை அனுகியதாகவும், திருகோணமலையை தமது பாவனைக்கு தருவதாக இருந்தால், தமிழீழம் அமைய தாம் உதவுவதாக பேரம்பேசப்படதாகவும், குறுகியகாலத்துக்கு இது அனுகூலமாக இருந்தாலும் நீண்ட காலத்துக்கு இது தொண்டையில் சிக்கிய முள்ளாக இருக்கும் என்பதற்காகவும், வெளிநாட்டவரின் தலையீட்டை எந்த காலத்திலும் அனுமதிக்கமுடியாது என்பதால் விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்படதாக அறிந்தேன்.

Link to comment
Share on other sites

பிருந்தன்!

சில யதார்த்தங்களுடன் நாங்களும் ஒத்துத்தான் போக வேண்டும்.

அமெரிக்காவின் அனுசரணையுடன் தான் இஸ்ரவேல் இன்று வரை ஜீவித்திருக்கின்றது.

தீவிர வாதிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் சவூதி அரேபியாவிற்கும் இரண்டாவது இடம் பாகிஸ்தானுக்குமே உண்டு. இது உலகெங்கும் தெரிந்த உண்மை.

இருந்தாலும் அமெரிக்காவின் நண்பர்களாக அதன் அனுசரணையுடன் ஜீவித்திருக்கின்றார்கள்.

பாகிஸ்தானை அணுகுண்டு பரிசோதனை செய்யும் அளவிற்கு அனுமதித்திருந்தது. இஸ்ரவேலை அணு ஆயுத நாடாகும் வரை ஆதரவு கொடுத்திருக்கின்றது.

இது தான் உண்மை. நீங்கள் அமெரிக்கா வேண்டாம் என்றால் உங்களுக்கு ஓடி வந்து உதவி செய்ய யார் இருக்கின்றார்கள்.

இந்தியாவின் இதயத்தில் இடம் பிடிக்க எத்தனை அழைப்புகள் அனுப்பியாகி விட்டது. ஒரு தலைவரின் இழப்பு என்று சொல்லிக் கொண்டு இன்றும் இறுக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

வேறு எந்த நாடு உங்களுக்கு உதவி செய்யும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். உலக அரங்கத்தில் நாங்கள் இன்னும் அரசியல் அநாதைகளே.

பலஸ்தீனத்துக்கோ , கொசவோவாவிற்கோ. கிழக்குத் தீமோருக்கோ ஆதரவாக தங்கள் கரங்களை உயர்த்துவதற்கு ஒரு சில நாடுகள் ஆவது இருக்கின்றது. எங்களுக்கு..?

சர்வதேச மயப்பட்டது எங்கள் பிரச்சனை என்று சொல்லும் போது எங்களைக்கடிவாளம் இடுவதற்கு மட்டும் நாடுகள் இருப்பது துர்ப்பாக்கியமான நிலமை.

எங்களை ஆதரிக்கவும் அரவணைக்கவும் நாடுகள் வேண்டும். வெளிப்படையாக ஆதரிக்கும் அரசுகள் எவை?

தமிழீழத்தை பிரகடனப் படுத்தினால் ஒரு நாடாவது எங்களை அங்கீகரிக்க முன்வருமா?

இதனால் தான் சொல்லுகின்றேன் .முதலில் எங்களை ஆதரிக்க உதவ முன்வரக்கூடிய சக்திகளை இனங்கண்டு அவர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றுள்ள சக்திகளில் அமெரிக்காதான் கொள்கை பற்றி இறுக்கிப் பிடியாது தன் நலனுக்கு ஏற்றதென்றால் யாருடனும் கூட்டுச் சேரும்.

இந்தியாவுடன் இருக்கக் கூடிய குறைந்த பட்ச மனத்தாங்கலும் அமெரிக்கர்களுடன் எங்களுக்குக் கிடையாது.

திருகோணமலையை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பது உண்மைதான். எங்கள் தேசத்தை மீட்டெடுப்பதற்காக கொடுக்கக் கூடிய விலையாக அதுதான் இருக்கின்றது.

ஆசிய மனப்பான்மையான கட்டுப்பெட்டி மனப்பான்மையில் சிந்திப்தை விட திறந்த மனப்பான்மையில் சிந்திப்பது பயனுள்ளது. அமெரிக்காவை எதிர்த்தவர்கள் தான் ஆட்சியையும் நாட்டையும் தொலைத்து விட்டு நடு ரோட்டில் நிற்கின்றார்கள்.

அமெரிக்காவுடன் அனுசரித்துள்ளவர்கள் தங்கள் தங்கள் இடத்தில் ராஜாக்களாகவே இருக்கின்றார்கள்.

எல்லோரையும் பகைப்பதை விட யாருடனாவது கூட்டுச் சேர்ந்து எங்கள் தேவையை அடைவதே புத்திசாலித்தனம்.

(இன்னும் எழுத வேண்டும் போல் இருக்கின்றது அதுவே ஒரு கட்டுரையாகி விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

இதுதான் ஒரே தீர்வென்று நான் கூற வரவில்லை. இதுவும் ஒரு தீர்வாக இருக்கக் கூடும்

மூச்சுவாங்கலுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அப்பு எல்லாளன் ஏன் பிருந்தன் சுருக்கமாக சொன்னதை சோடிச்சு சொல்லி மூச்சுவாங்கிரீர். அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளிற்கு ஒத்துப்போவது குறுகிய காலத்தில் அனுகூலமாக இருந்தாலும் நீண்ட நோக்கில் அது தொண்டையில் சிக்கிய முள்ளாகிவிடும் என்பது நியாயமாக படவில்லையா?

"There is no free lunch" அதுவும் அமெரிக்கா போன்றவர்கள் ஆதரிப்பதாக கூறினால் அதற்கு விலை என்ன என்பதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் - உள்நாட்டு பொருளாதாரத்தில் - மிக பெரும் சரிவோ- அல்லது -

அமெரிக்கா-சண்டித்தனம் காட்டும் நாடுகளில் - அதன் படைகள் ஏதாவது - ஒரு பேரழிவையோ சந்திக்கும் வரை - இந்த நிலமை தொடருமோ? :roll: 8)

Link to comment
Share on other sites

தம்பி குறுக்ஸ் !

( உம்மடை பேரைக் கூப்பிட தர்ம சங்கடமாக இருக்கின்றது எனக்கு.. ஏதோ அபஸ்வரமாகத் தோன்றவில்லையா? மகிழ்ச்சியான வார்த்தைகள் எவ்வளவோ இருக்கின்றது. இது எனது அபிப்பிராயம் மட்டுமே)

ஏதாவது ஒரு வெளிச்சக்தியை உபயோகித்துக் கொள்வது தற்போதைய நிலமையில் பயனுள்ளது.

இந்தியா எங்களுடன் ஒத்துப் போக மறுக்கின்றது.

அமெரிக்கா ஒத்துப் போகலாம். அது தமிழீழம் தன் ஆதரவு நாடாக இருக்கும் வரை சேர்ந்தே வரும். உதவிகள் செய்யும்.

உதாரணங்கள் நிறைய உண்டு. ஈரான் - ஷாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா ஈரானின் மிகப் பஎரிய நண்பன். இன்று எதிரி.

பாகிஸ்தான் - என்றும் நண்பன்

ஜப்பான் -முதலில் எதிரி இன்று நண்பன்

ஈராக் - முதலில் நண்பன் இன்று எதிரி

சவூதி - என்றும் நண்பன்

இவை நண்பர்களாக இருக்கும் வரை அமெரிக்கா உதவியாகவே இருக்கும். எத்தனை உலகின் எதிர்ப்பு இருந்தாலும் அந்த அந்த நாடுகளைக் காத்து வருவது அமெரிக்கா.

மிகப் பரிய உதாரணம் இஸ்ரவேல்.

இன்று இஸ்ரவேல் பண பலத்திலும் படைபலத்திலும் வளர்ந்து விட்டது.

அதே போல அமெரிக்காவின் உதவியுடன் நாங்களும் வளர முடியும். எம் தலைவரிடம் அதற்கான மதிநுட்பம் இருக்கின்றது.

நாங்கள் செய்ய வேண்டியது சிறிய உதவியே.எதிர்காலத்தில் இந்திய சீன நாடுகளின் உலக வல்லரசு ஆதிக்கத்தைச் சிதைக்க அமெரிக்காவிற்கு துணை நிற்பது... இஸ்ரவேல் அரபு உலகில் செய்வது போல்.

அமெரிக்காவினது படை தங்கி நடவடிக்கைகளிலீடு பட

திருகோணமலையைக் கொடுப்பது.

கிடைக்கக் கூடிய அனுகூலங்கள் இவ்வாறு இருக்கக் கூடும்.

வேறு எந்த நாடும் வாலாட்ட முடியாது தமிழ் ஈழம் நிறுவப் படும்.

சிங்களவரின் எல்லைகளை ஒதுக்கி மேற்கில் நீர்கொழும்பு ,சிலாபம் முதல் தெற்கே மாத்தறை வரை மலைநாடு அடங்கிய தமிழ் ஈழம் சாத்தியப் படும்.

நியாயம் என்பது எமக்கிருக்கக் கூடிய பலத்தினடிப்படையில்

உருவாக்கப் படுவது.

அதுவே சரித்திரம் என்றும் வரலாறு என்றும் ஆக்கப் படுவது தான் நடந்து கொண்டிருக்கின்றது.

எல்லா நாடுகளும் அதையே செய்கின்றன. இஸ்ரவேல் செய்ய வில்லையா? அமெரிக்கா செய்யவில்லையா? ரஷ்யா செய்யவில்லையா?

எல்லா உலக நாடுகளும் வாய்ப்புக் கிடைத்தால் அதையே செய்யும்.

நியாயம் அநியாயம் என்பது செய்து முடித்த பின்னால் சொல்லப் படுவதே தவிர செய்வதற்கு முன்னால் கதைப்பதல்ல.

ஈராக் யுத்தத்தை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் நியாயப்படுத்துகின்றன.

சில நாடுகள் அநியாயப் படுத்துகின்றன.

ஆனால் காரியங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. சரித்திரம் இதைத்தான் சரி என்று சொல்லும்.

அதை விட்டு மீனாவது முள்ளாவது. கட்டுப் பெட்டித்தன ஆசியச் சிந்தனை என்று நான் குறிப்பிடுவது இதைத்தான்.

உலகின் போக்கை நன்கு கவனியுங்கள் . வேண்டு மென்றால் கலி காலம் என்று சொல்லுங்கள்.

ஆனால் காரியங்கள் நடை பெற வேண்டும். அது எங்களுக்கு சரியானதாய் தேவைப்பட்டதாய் வேண்டியதாய் இருக்க வேண்டும். இது தான் உலகின் புதிய நீதி.

உண்மையுடன் -எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

வர்ணன் !

அமெரிக்கா சண்டித்தனம் காட்டும் நாடுகளில் பெரும் அழிவு?..... அதனால் என்ன? அமெரிக்காவிற்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. தன் படைகளை விலக்கிக் கொள்ளும். உதாரணம் வியற்நாம்.

அமெரிக்காவைத் துரத்தி வந்து அமெரிக்காவில் சண்டையை யாரும் தொடர முடியாது. அதனால் அமெரிக்காவை ஒன்றும் செய்ய முடியாது.

அமெரிக்காவின் பொருளாதாரம் இன்று சரிந்து தான் இருக்கின்றது. ஆனால் அதனை விட உயர்ந்த சக்திகள் யாருமில்லை. ஆகவே அது தொடர்ந்தும் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

சிலர் சொல்கின்றார்கள் ஈராக்கில் அமெரிக்காவின் பிரசன்னம் எண்ணெய்த் தேவை மட்டுமே என்று.

அது மட்டுமல்ல காரணம்... அமெரிக்காவிற்கு சில உளவியல் தேவைகளும் இருந்தது. அதற்கான ஆக்கிரமிப்பு தான் ஈராக்.

எண்ணெய் மட்டுமே தேவை என்றால் நம்பர் வண் எண்ணெய் நாடான சவூதியை ஆக்கிரமித்திருக்கலாமே?

தம்பி வர்ணன் ! கனவுகள் சுகமானவை தான் .ஆனால் அதிலேயே வாழ முடியாது. வாழ்வதற்கான போராட்டத்தில் நீதி நியாயம் என்பதெல்லாம் நாம் உயிருடன் இருக்கின்றோமா ? என்பதற்குப் பின்னால் தான்....

சோஸலிஸம் ,சொர்க்கலிஸம் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் பூமியில் கால் பதிக்காதவர்கள். இவர்களின் வாழ்க்கையே விரயம் என்று தான் சொல்வேன்.

அழகுணர்ச்சி இருக்கத் தான் வேண்டும். வாழ்க்கை இருந்தால் தான் அதை அனுபவிக்கலாம்.

துரோகிகள் கூட அதைப் புரிந்திருப்பதால் தான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துரோகத்தனம் செய்கின்றார்கள்.

இதைப் புரிந்து கொள்ளாமல் ஜனநாயகம் நடு நிலமை என்று பேசுபவர்களை குப்பைக் கூடையில் போடுங்கள். இவர்கள் உலகத்திற்குப் பாரமானவர்கள்.

கடுப்புடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.