Jump to content

அன்ரொய்ட் இயங்கு தளம்


Recommended Posts

[size=4]உலகிலேயே சிறந்த மனிதனுக்கான விருதினை அள்ளி மனிதர்களில் சிறந்த மனிதன் என்ற உயரிய இடத்தினை மனிதர்கள் வழங்கும் அளவிற்கு மக்களின் தோள் கொடுக்கும் தோழனாய் இருக்கும் கணனிக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக இயங்குதளமே அன்ரொய்ட்.

ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் அனுபவிக்கும் வகையில் வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்தினால், எம்மவருக்கு இன்று சந்தையில் புதிய வரவு முதற்கொண்டு அதில் எது மக்களின் மனதை கொள்ளைகொள்ளுகின்றது என்பது வரையிலும் எளிதில் தெரிந்துகொள்ளும் வண்ணம் தம்மை தயார் நிலையிலேயே வைத்துள்ளனர்.[/size]

[size=3]

[size=4]இருப்பினும் நம்மிடையே சர்வசாதாரணமாக உறவாடிக் கொண்டிருக்கும் சில விடயங்கள் பற்றி தெரியாமலேயே அவற்றுடன் உறவாடிக்கொண்டிருக்கின்றோம். அதில் ஒன்றுதான் இந்த 'அன்ரொய்ட்' இயங்குதளம். [/size][/size]

[size=3]

[size=4]ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் கணனிகளுக்கான சிறந்த இயங்குதளம் எது என்றால் பள்ளிக் குழந்தைகள் போல ஒருமித்து அதிகமானோர் கூறும் பதில் அன்ரொய்ட். ஆனால் இந்த இயங்குதளம் தொடர்பான அடுத்தடுத்தடுத்த கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு தயாராக இருப்பவர்கள் வெகுசிலரே.[/size][/size]

[size=3]

[size=4]உண்மையில் இயங்குதளம் என்பது குறித்த ஒரு சாதனத்தின் உயிர் எனலாம். உடலிலிருந்து உயிர் நீங்கினால் அல்லது நீக்கினால் உடல் இயக்கம் பூச்சியமாகவிடும். இது போன்றே மேற்படி குறித்த சாதனங்களின் உயிர் நாடியாக இந்த இயங்குதளங்களும் உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு இயங்குதளமே அன்ரொய்ட் இயங்கு தளம்.[/size][/size]

[size=3]

[size=4]இவ்வியங்குதளத்தின் சொந்தக்காரன் இணையத்தில் தனக்கென தனியிடம் பதித்துள்ள தேடல் பொறி இணையத்தளமான கூகுள் நிறுவனமே. ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் கணனிகளின் அறிமுகத்தின் போதே கூகுள் நிறுவனம் அவற்றின் வளர்ச்சி பின்னாளில் அசாதரமாணமாக இருக்கும் என்பதனை உணர்ந்து அவற்றிற்கான சந்தையில் தம்மை நிலைபடுத்திக்கொள்ள தகுந்த தருணத்தை பார்த்துக்கொண்டிருந்தது. அப்போதே இந்த அன்ரொய்ட் இயங்குதளம் மூலம் நுழைவதே சிறந்த வழி எனக் கண்டுகொண்டு அன்ரொய்ட் இயங்குதளத்துடன் சேர்ந்து கூகுள் நிறுவனமும் 2007 நவம்பர் 5ஆம் திகதி சந்தையில் அறிமுகமானது.[/size][/size]

[size=3]

[size=4]அன்ரொய்ட் இன்க் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு பின்னர் கூகுள் நிறுவனத்தினால் வாங்கப்பட்டு அண்மையில் கூகுளினினால் நிர்வகிக்கப்படும் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸால் நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3]

[size=4]ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் கணினிகளுக்கென பிரத்தியேகமாக லினக்ஸ் கேணல் அடிப்படையில் ஜாவா மொழியில் எழுதக் கூடிய ஒரு திறந்த மூல (Open Source) இயங்கு தளமே அன்ரொய்ட்.[/size][/size]

Link to comment
Share on other sites

[size=3]

[size=4]

Playbook_android_apps.jpg[/size]

[size=4]ஓப்பன் சோர்ஸ் இயங்கு தளம் என்பனால் இலகுவில் வளர்ச்சியடையக்கூடிய சாதக தன்மையை அன்ரொய்ட் கொண்டுள்ளது. மேலும் இதன் மூலம் 'Apps' எனக் கூறப்படும் 450 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்ளிகேசன்களை கூகுள் நிறுவனத்தினால்; நிருவகிக்கப்படும் அன்ரொய்ட் மார்க்கெட் எனும் இணையத்தளத்தில் இன்று தரவிறக்கம் செய்யக் கூடியதாக உள்ளது.[/size][/size]

[size=3]

[size=4]இவ்விணையத்தளத்தில் சில எப்ஸ் இலவசமாகவும் சில எப்ஸ் கட்டணத்திற்கும் பெறக்கூடியதாக இருக்கின்றது. மேலும் அன்ரொய்ட் இயங்கு தளத்தினை கொண்ட சாதனங்களை பயன்படுத்த அன்ரொய்ட் மார்க்கட்டில் இணைய வேண்டும். அவ்வாறு இணையும் பட்சத்திலே அங்கே காணப்படும் எப்ஸ்களை தரவிறக்க முடியும்.[/size][/size]

[size=3]

[size=4]பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யும் எப்ஸ் பயனருக்கு பிடிக்கவில்லையாயின் கொள்வனவு செய்து 15 நிமிடத்திற்குள் எப்ஸ் இனை திருப்பிச்செலுத்தி பணத்தினையும் மீளப்பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த எபஸ்களை அன்ரொய்ட் மார்க்கெட்டில் மட்டுமல்லாது மூன்றாம் தரப்பு இணையத்தளங்களிலும் பெறலாம்.[/size][/size]

[size=3]

[size=4]இவ்வாறு பயனருக்கு இலகு வழிகளை ஏற்படுத்தியுள்ளதனால் தற்போதைய நிலவரத்தின் படி ஒரு நாளைக்கு 850 ஆயிரத்திற்கு மேற்பட்ட அன்ரொய்ட் சாதனங்கள் புதிதாக செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே அன்ரொய்ட் ஏற்படுத்தியிருக்கும் அதன் தேவையை சற்று எண்ணிப்பாருங்கள். காரணம் கணனிகளுக்கான இயங்கு தளமும் இதே ஓப்பன் சோர்ஸ் மூலமே திருங்கள் மேற்கொள்ளப்படும் லினக்ஸ் இயங்கு தளத்தின் பயனர்கள் வெறும் 5% ஆனோரே. [/size][/size]

[size=3]

[size=4]ஏ.ஆர்.எம், எம்.ஐ.பி.எஸ், X86 போன்ற வன்பொருள் ஆதாரத்திற்கு ஆதரவளிக்கும் அன்ரொய்ட் இயங்குதளமானது. பீட்டா பதிப்பிலிருந்து தற்போது ஐஸ் கிரீம் சேன்விச் 4.0.3 பதிப்பு வரையிலும் பயனர்களின் தேவைக்கேற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து வெளியிட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் ஜெல்லி பீன் எனும் ஒரு புதிய பதிப்பை அஸுஸ் ஸ்மார்ட் போனில் முதன்முறையாக பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளியான ஒவ்வொரு பதிப்பும் அதன் முன்னைய பதிப்பின் குறைபாடுகள் பலவற்றை திருத்தம் செய்தே வெளியானது.[/size][/size]

[size=3]

[size=4]வெளிவரும் புதிய பதிப்புக்களை நினைத்தவுடன் பயனர்கள் புதிப்பித்துக்கொள்ள முடியாது. பயனர்கள் கைவசம் உள்ள ஸ்மார்ட் போன் அல்லது டெப்லட் கணனி மாதிரிக்கு குறித்த நிறுவனங்கள் புதிய பதிப்பின் வசதியினை வழங்கும் போதே இதனை பழைய பயனர்கள் புதிப்பித்துக்கொள்ள முடியும்.[/size][/size]

[size=3]

[size=4]இது வரையில் வெளியான அன்ரொய்ட இயங்கு தளத்தின் குறிப்பிடத்தக்க பதிப்புகளாக அன்ரொய்ட் 1.0, கப் கேக் (அன்ரொய்ட் 1.5), டொனட் (அன்ரொய்ட் 1.6), ஈகிளயர் (அன்ரொய்ட் 2.0, 2.1), புரொயோ (அன்ரொய்ட் 2.2), ஜின்ஜர்பிறட் (அன்ரொய்ட் 2.3), கொனிகொம்ப் (அன்ரொய்ட் 3.0), ஐஸ் கிரீம் சேன்விச் (அன்ரொய்ட் 4.0) வெளிவந்துள்ளது. பதிப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் கூகுள் இனிப்பான உணவின் பெயர்களையே சூட்டிவருகின்றது. [/size][/size]

Link to comment
Share on other sites

[size=3]

[size=4]இவ் அன்ரொய்ட் இயங்கு தளத்தின் மூலம் பயனர்கள் அனுபவிக்ககூடிய பல வசதிகள் ஏனைய இயங்கு தளத்திலிருந்து சற்று மேம்பட்டதாக உள்ளது. தற்போதுள்ள அன்ரொய்ட் இயங்குதளத்திலுள்ள விஷேட அம்சங்களாக [/size][/size][size=3]

[size=4]*** இதன் ப்ளட் போம் பெரிய அளவு வீ.ஜி.ஏ, 2டி, 3டி போன்றவற்றிற்கு இணங்கும் வண்ணம் அமைந்துள்ளமை[/size][/size][size=3]

[size=4]*** அதிகளவிலான கோப்புகளை சேகரிக்கக்கூடிய வசதி[/size][/size][size=3]

[size=4]*** குறுந்தகவலிற்கு (SMS) புதிய உருவம் கொடுத்துள்ளது. த்ரட்டட் (threaded SMS) எனப்படும் நவீன குறுந்தகவல் அனுப்பும் முறையில் செயற்படும் தன்மை.[/size][/size][size=3]

[size=4]*** க்ளௌட் தொழில்நுட்பம் (Cloud Technology) அறிமுகம் செய்யப்பட்டது.[/size][/size][size=3]

[size=4]*** GSM/EDGE, IDEN, CDMA, EV-DO, UMTS, Bluetooth, Wi-Fi, LTE, NFC and WiMAX போன்ற தொடர்பாடல் முறைமைகளுக்கு ஆதரவளிக்கும் திறன்[/size][/size][size=3]

[size=4]*** அதிக மொழிகளுக்கு இணங்கும் ஆற்றல்[/size][/size][size=3]

[size=4]*** Multi touch மற்றும் Multi task முறையை கையாளக்கூடிய வசதி[/size][/size][size=3]

[size=4]*** ஜாவாவிற்கு இசைவதுடன் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட வீ.எம் அமுலாக்கத்தை சிறப்பாகக் கொண்டுள்ளது.[/size][/size][size=3]

[size=4]*** WebM, H.263, H.264 (3GP இல் அல்லது MP4), MPEG-4 SP, AMR, AMR-WB, AAC, HE-AAC(MP4 இல் அல்லது 3GP), MP3, MIDI, OGG வோர்பிஸ், WAV, JPEG, PNG, GIF, BMP போன்ற வடிவங்களுக்கு ஆதரவளிக்கின்து[/size][/size][size=3]

[size=4]*** திறந்த மூல வெப்கிட் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண் உலவி காணப்படுகின்றது. அசிட்3 சோதனையில் இந்த உலவி 93/100 மதிப்பெண்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது[/size][/size][size=3]

[size=4]*** வீடியோ/நிழற்பட கேமராக்கள், தொடுதிரைகள், ஜிபிஎஸ், வேக அளமானிகள், காந்தவியல்மானிகள், (வன்பொருள் திசைஅமைவு, வரிசை படுத்துதல், பிக்சல் வடிவ நிலைமாற்றத்துடன்) துரிதப்படுத்தப்பட்ட 2டி பிட் பிலிட்கள் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட 3டி கிராபிக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளமை[/size][/size][size=3]

[size=4]*** ஸ்க்ரீன் சொட் வசதி[/size][/size][size=3]

[size=4]*** குரல் வளி கட்டளை வசதி[/size][/size][size=3]

[size=4]என இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களை அன்ரொய்ட் இயங்குதளம் கொண்டுள்ளமையால் ஏனைய இயங்கு தளத்துடன் இருந்து சற்று விலகி மேம்பட்ட ஒரு இயங்கு தளமாகவே இது காணப்படுகிறது.[/size][/size]

Link to comment
Share on other sites

[size=3]

[size=4]பயனர்களின் தேவைகள் பலவற்றை உணர்ந்து அதற்கேற்ற வகையில் பல உத்திகளின் மூலம் நிறைய வசதிகளை தன்னகத்தே கொண்டிருந்த போதும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது.[/size][/size][size=3]

[size=4]*** தற்போது அன்ரொய்ட் இயங்குதளமானது, அனிமேட்டட் .gif கோப்புகளுக்கு ஆதரவளிப்பதில்லை[/size][/size][size=3]

[size=4]*** ஜாவா SE மற்றும் ME போன்ற நிலைநாட்டப்பட்ட ஜாவா தரங்களை பயன்படுத்துவதில்லை. ஜாவா இயங்கு தளங்களுக்காக மற்றும் அன்ரொய்ட் இயங்கு தளங்களுக்காக எழுதப்பட்ட ஜாவா பயன்பாடுகள் பலவற்றுள் ஒத்தியல்பைத் தடுக்கிறது[/size][/size][size=3]

[size=4]*** உள்ளார்ந்த பாதுகாப்பு பிரச்சினைகள காரணமாக, ஒரு SD கார்டில் இருந்து பயன்பாடுகளை நிறுவதற்கு அன்ரொய்ட் அதிகாரபூர்வமாக இடமளிப்பதில்லை, அதுமட்டுமல்லாமல் இயக்கவும் இடமளிப்பதில்லை[/size][/size][size=3]

[size=4]*** அன்ரொய்ட் பல்வேறு பதிப்புகளில் வேலை செய்யும் பயன்பாடுகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என உருவாக்குனர்கள் தெரிவித்தனர், ஏனெனில் பதிப்புகள் 1.5 மற்றும் 1.6க்கு இடையே பல்வேறு தகுதியுடைமை பிரச்சினைகள் உள்ளன.[/size][/size]

[size=3]

[size=4]இது போன்ற மேலும் சில குறைபாடுகளுடன் இந்த அன்ரொய்ட் இயங்கு தளம் காணப்பட்டபோதும் மிகப்பெரியளவில் இன்று மக்களை தன்வசம் ஈர்த்துள்ளது. [/size][/size]

[size=3]

[size=4]மேலும் இவ்வியங்கு தளமானது ஓப்பன் சோர்ஸ் என்பதனால் விரைவில் குறித்த குறைபாடுகளை அடுத்தடுத்த பதிப்புக்களில் திருத்தம் செய்து வெளிவரும் என நம்பலாம்.[/size][/size]

[size=3]

[size=4]இன்றைய தலைமுறையினரின் உள்ளங்கவர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் போன்ற இலத்திரனியல் சாதனங்களில் இவ் அன்ரொய்ட் இயங்கு தளத்தினையே பெரிதும் எதிர்ப்பார்ப்பதனால் வரும் நாட்களில் தற்போதைய இடத்தினை விட மிகப் பெரும் இடத்தினை தக்க வைக்கும் ஆற்றல் அன்ரொய்ட் இற்கு உண்டு என்பதனால் பயனர்கள் அனைவரும் முடிந்தளவு இவ்வியங்குதளத்தின் சாதக பாதக நிலைமைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் இதனை அனுபவித்து மகிழலாமே...![/size][/size]

[size=3]

http://aachariyam.blogspot.ca/2012/09/blog-post.html[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள அப்ஸ் பற்றியும் தெரிவித்தால் பலரும் பயன் அடையலாம்.

Link to comment
Share on other sites

பயனுள்ள அப்ஸ் பற்றியும் தெரிவித்தால் பலரும் பயன் அடையலாம்.

நன்றி அகூதா, நல்ல பதிவு. எனக்கும் தெரிய பல விடயம் இன்றுதான் அறியக் கூடியதாக இருந்தது.

கறுப்பி தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வாக்கியத்தைவிட இப்ப Google இல் தேடுங்கள் கொடுக்கப்படும் என்ற வசனமே பிரபல்யம். தேடுங்கள் தேடிக்கொண்டேயிருங்கள், கிடைக்காமலா போயிடும்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அன்ரொய்டில் புராஜெக்ட் கொடுத்தால் பண்ணக்கூடிய திறமைசாலிகள், இலங்கையில் இருக்கின்றார்களா? கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கின்றதா; பல்கலைக்கழகங்களில், இன்றைய நவீன தொழிற்நுட்பங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றதா? இன்றைய  வளரும் இலங்கையினைப்பற்றி அறிய இணையதளங்கள் இருக்கின்றனவா?

Link to comment
Share on other sites

ஒரு திட்டத்தை ஆரம்பித்து, தாயகத்தில் பத்திரிக்கை வாயிலாக விளம்பரத்தை போட்டு பார்த்தால் நிலைமையை அறியக்கூடியதாக இருக்கும்.

 

உதாரணத்திற்கு தமிழ் படிக்க சில "அப்சுகள்" வடிவமைக்கப்படலாம்.

' ப ' என்ற எழுத்தை வைத்து அதற்கு மேல் குத்துப்போட்டால் 'ப்' வரும் இல்லை விசிறி போட்டால் 'பி' வரும் போன்ற விளையாட்டு மாதிரியான கற்கை.

 

இல்லை

பல இயங்கு தளங்களை  வடிவமைத்து கொடுத்தல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரொய்டில் புராஜெக்ட் கொடுத்தால் பண்ணக்கூடிய திறமைசாலிகள், இலங்கையில் இருக்கின்றார்களா? கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கின்றதா; பல்கலைக்கழகங்களில், இன்றைய நவீன தொழிற்நுட்பங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றதா? இன்றைய  வளரும் இலங்கையினைப்பற்றி அறிய இணையதளங்கள் இருக்கின்றனவா?

:icon_mrgreen:

 
Link to comment
Share on other sites

>> உதாரணத்திற்கு தமிழ் படிக்க சில "அப்சுகள்" வடிவமைக்கப்படலாம். ' ப ' என்ற எழுத்தை வைத்து அதற்கு மேல் குத்துப்போட்டால் 'ப்' வரும் இல்லை விசிறி போட்டால் 'பி' வரும் போன்ற விளையாட்டு மாதிரியான கற்கை.

 

மிகச்சிறந்த யோசனை. ஆண்ட்ராய்ட் புரவுசரில், தமிழ் வெப்சைட் படிக்க இயலாது. அந்த தேவையை நிறைவேற்றினால், அது மிகவும் பயனுள்ளதாக அமையும். தமிழகம், சிங்கப்பூர் அரசாங்க வேலைகளுக்கு பயன் உள்ளதாக அமையும். இதை ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொள்ளலாம்.  தமிழ் மொழியில் எழுத, படிக்க, - ஆண்ட்ராய்ட்டில் முடிந்தால், அது பல்வேறு கதவுகளை திறந்துவிடும்.

 

 

Link to comment
Share on other sites

>> உதாரணத்திற்கு தமிழ் படிக்க சில "அப்சுகள்" வடிவமைக்கப்படலாம். ' ப ' என்ற எழுத்தை வைத்து அதற்கு மேல் குத்துப்போட்டால் 'ப்' வரும் இல்லை விசிறி போட்டால் 'பி' வரும் போன்ற விளையாட்டு மாதிரியான கற்கை.

 

மிகச்சிறந்த யோசனை. ஆண்ட்ராய்ட் புரவுசரில், தமிழ் வெப்சைட் படிக்க இயலாது. அந்த தேவையை நிறைவேற்றினால், அது மிகவும் பயனுள்ளதாக அமையும். தமிழகம், சிங்கப்பூர் அரசாங்க வேலைகளுக்கு பயன் உள்ளதாக அமையும். இதை ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொள்ளலாம்.  தமிழ் மொழியில் எழுத, படிக்க, - ஆண்ட்ராய்ட்டில் முடிந்தால், அது பல்வேறு கதவுகளை திறந்துவிடும்.

 

யாராவது இணைந்தால், நானும் இணைந்து  வேலை செய்யலாம்  :D 

 

ஒரு மென்பொருள் மூலம் மற்றை தளங்களுக்கும் மாற்றலாம், உதாரணம் iOS

Link to comment
Share on other sites

ஆண்ட்ரொய்ட் தள வடிவமைப்பிற்கு தேவையான மென்பொருள்:  http://developer.android.com/index.html



வடிவமைப்பு செய்பவர்களுக்கு உதவும் தளம் : http://developer.android.com/develop/index.html



உங்கள் முதலாவது "அப்சை" மென்பொருளை வடிவமைக்க : http://developer.android.com/training/basics/firstapp/index.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
அன்ராயிட் சாதனங்களில் பயன்படுத்தி பயன்பெறக்கூடிய Offline டிக்சனரி - 'Word Learn Dictionary'... 
[sunday, 2013-01-27 09:06:49]
 
டிக்சனரிகள் இன்றும் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. பல புதிய வார்த்தைகளின் பொருள்களை நமக்கு அறிமுகப்படுத்தும் இது மிக முக்கியமான ஒன்றும் கூட. அந்த வகையில் இன்று ஆன்ட்ராய்ட் போனுக்கு ஒரு அருமையான டிக்சனரியை பார்ப்போம். Word Learn Dictionary என்ற பெயரில் உள்ள இது ஆங்கிலம் - ஆங்கிலம் டிக்சனரி. கடினமான நிறைய ஆங்கில வார்த்தைகளை மிக எளிதான ஆங்கில வார்த்தைகள் மூலம் நமக்கு விளக்க இது உதவுகிறது. அதை விட முக்கிய விஷயம் இதை டவுன்லோட் செய்ய மட்டுமே நமக்கு இணைய இணைப்பு அவசியம், பயன்படுத்த தேவையில்லை. ஆம் இது ஒரு Offline டிக்சனரி.   
 
சிறப்பம்சங்கள்:
 
Auto Word Suggestion வசதி
ஏற்கனவே அர்த்தம் தேடிய வார்த்தைகளை எளிதாக மீண்டும் பார்க்கும் வசதி
Voice recognition வசதி
அர்த்தங்களை Copy and Share செய்யும் வசதி
இன்னும் பல .....
தகவல்கள்:
 
தேவையானது - ஆன்ட்ராய்ட் 2.2 or Later
விலை - இலவசம்
மெமரி - 19MB
டவுன்லோட் செய்ய: இங்கே கிளிக் செய்யுங்கள்
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சாவை அடித்து துன்புறுத்த  இங்கே

 

BEAT YOUR BOSS 

https://play.google.com/store/apps/details?id=com.masontravelling.beatyourboss&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5tYXNvbnRyYXZlbGxpbmcuYmVhdHlvdXJib3NzIl0.

Link to comment
Share on other sites

 
 
புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லெட்
 

 

512 எம்பி ரேம் வசதி, 1 GHz ப்ராசெசர் மற்றும் 4 ஜிபி உள்நினைவகத்துடன் கொண்ட இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லெட்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 
 
இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் ஐபட்டி என அழைக்கப்படும். இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் 7 அங்குல திரைகொண்டதாக இருக்கும். 
 
அதாவது 17.7 செமீ அங்குலம். இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளத்துடன் வருகிறது. 
 
2 எம்பி காமெரா கொண்ட இதில் Wi-Fi, 3ஜி மற்றும் ப்ளுடூத் ஆகிய வசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://therinjikko.blogspot.com/2013/02/blog-post_7.html#ixzz2KkN5GPYg

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசிகளில் அரட்டை அடிப்பதற்கான அப்பிளிகேஷனை வெளியிட்டது சம்சங் நிறுவனம்! 

[sunday, 2013-03-03 09:17:18]
 
மொபைலில் அரட்டைக்கு உதவும் Whatsapp அப்பிளிகேஷனே அனைவரது ஸ்மார்ட் தொலைபேசிகளையும் ஆக்கிரமித்துள்ளது. தற்போது அந்த இடத்தை பிடிக்க சாம்சங்க் நிறுவனமும் களமிறங்கியுள்ளது. ChatON என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த App ஐ ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயனாளர்கள் நிறுவியிருந்தால் அவற்றின் மூலம் இலவச அரட்டை அடிக்கலாம். முன்னர் whatsapp எப்படி அறிமுகமாகியதோ அதேபோன்று பெருமளவு செலவு செய்து விளம்பரங்களை உருவாக்கியுள்ளது சாம்சங்க் நிறுவனம். மேலும் அனிமேஷன் சாட்டிங்க் என்ற புதி வசதியையும் இதன் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.