Jump to content

இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்?[/size]

109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இலங்கையிலிருந்து ஒரு கடிதம். இதற்கு என்ன செய்யலாம் என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இனியொரு கருத்தாளர்களிடன் இதே கேள்வியக் கேட்கிறோம். உங்கள் ஆலோசனைகளை முன்வையுங்கள்.

109 தமிழ் பெண்கள் சீறி லங்கா இராணுவத்தில் சேர்ந்த கதை தெரிந்திருக்கும். கிளிநொச்சியின் பாரதிபுரம், கணேசபுரம் (1977, 1983 இனக்கலவரங்களை அடுத்து மலையகத்திலிருந்து குடியேறியவர்களின் பரம்பரை) ஆகிய கிராமங்களில் வீடு வீடாய் சென்ற பாதுகாப்பு படையினர், வீட்டுக்கு ஒரு பெண் இராணுவத்துக்கு தேவை என கூறி உருவ எடுப்பென கொள்ளப்படுபவர்களை பலாத்காரமாக வாகனங்களில் ஏற்றி, பாடசாலைகளுக்கு சென்று அவர்களது விடுகை பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு (இல்லாவிட்டாலும்) கிராம அலுவலரின் சான்றிதலையும் பெற்றுக்கொண்டு இராணுவ முகாம்களுக்கு கொண்டு சென்றுள்ளனர் ( விடுதல் புலிகள் ஆட்சேர்த்தது போன்று).

அவர்களை இராணுவத்தில் பலாத்காரமாக சேர்த்து கடந்த ஞாயிறு அன்று ஆட்சேர்ப்பு வைபவத்தையும் கிளிநொச்சியில் நடத்தியுள்ளனர். சேர்க்கப்பட்ட பெண்கள் எல்லோரும் கண்ணீர் வடித்ததை காணக்கூடியதாக இருந்தது(ஆனந்த கண்ணீர் அல்ல, மீட்சியடைய முடியாத முறை சார் விபச்சாரத்துக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளோம் என்ற கவலையும் வெறுப்பும்)

அறுக்கப்பட வேண்டிய ஆடுகளுக்கு மாலையிட்டு குங்குமம் இட்டு கொண்டு செல்வது வழமை. இங்கு ஆடுகளான பெண்களின் பெற்றார்களுக்கு குங்குமம் இட்டு மாலையிட்டு அவரிகளது பிள்ளைகளை அவர்களிடமிருந்து அபகரிக்கும் விழா நடந்தேறியிருக்கிறது.

இங்கு கிருஷ்ண பரமாத்மாவொ அல்லது அவரின் வாரிசுகளோ வரவில்லை. குரலெழுப்ப வேண்டிய தமிழ் பற்றாளர்கள் குமிறியதாக கூட தெரியவில்லை.

மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி இராணுவ சிப்பாய்கள் தமிழ் யுவதிகளை திருமணப்பதிவு செய்து கொள்கின்றனர். இதில் எந்த சட்ட நிபந்தனைகளும் நிறைவேற்றப்டுவதில்லை என்று விவாகப் பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணப்பதிவுக்கு உட்படுத்தப்பட்ட த்மிழ் பெண்களை கேட்டால் ஒரு நாளைக்கு 10-15 பேருடன் போராடுவதை விட ஒருவனுடன் இருந்துவிட்டு போய்விடட்டுமே என்ற நப்பாசைதான் இதற்கு காரண்ம் என தெரிவிக்கின்றனர்.

விகடன் கதை உண்மையோ இல்லையோ தெரியாது, இங்கு சொன்னவைகள் உண்மை.

என்ன செய்யலாம்?

எப்படி தலையிடலாம்?

http://inioru.com/?p=31599

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( விடுதல் புலிகள் ஆட்சேர்த்தது போன்று).

இதில சமூக அக்கறையைக் காட்டிலும் புலி வாந்தி தூக்கலா இருக்குது.

ஏன் பெண்களை கட்டாயப்படுத்தி.. புளொட் கொண்டு போகல்லையா.. ஈபி ஆர் எல் எவ் கொண்டு போகல்லையா.. ஈபிடிபி கொண்டு போகல்லையா.. ஈ என் டி எல் எவ் கொண்டு போகல்லையா.. அவர்கள் அப்படிக் கொண்டு போய் போராடக் கூட விடல்ல.. தங்கள் பாலியல் தேவைகளுக்கும் விபச்சாரத்திற்கும் எதிரி இராணுவத்திற்கும் சப்பிளை செய்தனர். இன்றும் செய்கின்றனர்.

போராட்ட காலங்களில் இராணுவ நெருக்கடிகள் தோன்றும் போது கட்டாய பயிற்சி என்பது ஒன்றும் உலகில் புதிதல்ல. புலிகள் பிடிச்சு விபச்சாரம் செய்யவில்லை. மாறாக.. அந்தப் பெண்களின் பாதுகாப்பை அவர்களே உறுதி செய்ய முயற்சி செய்தார்கள். இன்று வன்னிக்கான போர் நடவடிக்கை ஒருவேளை புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தால்.. இந்த நிலை வந்திருக்குமா..??! வலுக்கட்டாயமாக கொண்டு போனவர்கள்.. தாமே போய் எதிரியை அவன் வாசலில் வைத்தே சந்தித்திருந்தால் இந்த நிலை பற்றி கருத்துக் கேட்டுக்கொண்டிருக்கும் நிலைதான் வந்திருக்குமா..??! இன்னொரு என்ற இணையத்தின் இருப்புத்தான் தேவைப்பட்டிருக்குமா..??! நிச்சயம் இல்லை.

இன்று புலிகள் இல்லை. ஆனால் மிச்ச இயக்கங்களின் சொச்சங்கள் இருந்தும்.. அவர்களால் சொந்த மக்களின் விமோசனத்திற்காக 1% கூட செயற்பட முடியவில்லை. இந்த இடைவெளியில்.. புலிகள் மீதான குற்றச்சாட்டு அபந்தமானது.

ஒரு சிறிய கமாஸ் இயக்கத்தோடு போராட.. இஸ்ரேல் 75,000 ரிசேவ் படைவீரர்களை உடனடியாகத் தயார் செய்கிறது. இப்படி ஒரு நிலையை தமிழீழம் அன்று அடைய மக்கள் ஒத்துழைத்திருந்தால்.. இன்று 1,00,000 சிங்கள சிப்பாய்களின் இருப்புக்கு எமது தேசம் ஆட்பட்டிருக்காது. எம் பெண்களுக்கு இந்தக் கதியும் வந்திராது..??!

ஒரு காலத்தில் புலி அழிப்புக்கு முக்கியவர்கள் இன்று.. புலி கட்டாயமாப் பிடிச்சதை கதைச்சுக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி நீலிக்கண்ணீரும் வடிக்கின்றனர். இவர்களுக்கு இவை பிழைப்பு வாதங்கள். அங்கோ மக்களுக்கு பிழைக்க முடியாத நிலை. எதிரிகளை விட துரோகிகளின் ஆக்கினையே அதிகம். அவற்றையும் இவர்கள் ஏன் எழுதுகிறார்கள் இல்லை. அவற்றை திட்டமிட்டு மறைப்பவர்கள்.. போராட்டத்தை மழுங்கடிக்க மட்டும் இவ்வாறான விடயங்களைப் பயன்படுத்திக் கொள்வது ஏன்..??! இதில் உண்மையான சமூக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை..??!

புலிகள் தோன்ற முன்னரே எமது பெண்கள் மீது வன்முறைகளை சிங்களம் கட்டவிழ்த்துவிடத் தொடங்கிவிட்டது. இன்று அது உச்ச அளவை அடைந்திருக்கிறது. காரணம்.. புலிகளை குருட்டுவாக்கிற்கு எதிர்த்தவர்கள் அழிக்க விரும்பியவர்கள்.. மக்களைப் பற்றி அவர்களின் பாதுகாப்பைப் பற்றி கிஞ்சிதமும் அக்கறை செய்யாமையே..! அதன் தொடச்சி இன்னுமொருவாக வலம் வருகிறது. இதனை விட இதில் கருத்துச் சொல்ல என்ன இருக்குது...??!

இந்தப் பெண்களை விடுவிக்க.. அமைச்சர் டக்கிளஸ் தேவனந்தாவோ.. முரளிதரனோ.. சம்பந்தனோ.. சுமந்திரனோ.. எவருமே.. முயலவில்லையே... ஏன்..????! புலிகள் கட்டாயப்படுத்தியதை பற்றி கதைக்கிறவை.. இவர்களை நோக்கி ஏன் கேள்வியை எழுப்பல்ல..???????????! :icon_idea:

இந்த கேள்வியை கேட்ட நீங்கள் இந்த 109 பெண்களில் உங்கள் வீட்டுப் பெண்களும் அடங்கியிருந்தால் என்ன செய்வீர்களோ அதை செய்யுங்கள்.

பெண்ணிற்கும் பெண்மைக்கும் புதிய வரைவிலக்கணம் கொடுத்த புலிகளுடன் மற்றைய வக்கிர மனித மிருகங்களை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

ஓரு வேண்டுகொள் விரும்பினால் கவனத்தில் கொள்ளவும்.

மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிப்பதாக நினைத்து துரோகிகளின் செயற்பாடுகளுக்கு இடம் அமைத்துக் கெடுக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

[size=4]இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் ஏன் அவசரஅவசரமாக இணைப்பு? - சந்தேகம் வெளியிடுகின்றன பெண்கள் அமைப்புகள் -

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-11-18 11:09:35| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1]

[size=4]தமிழர்களுக்குத் தேவையான முக்கிய விடயங்கள் எதனையும் பூர்த்தி செய்யாத நிலையில் இராணுவத்தில் மாத்திரம் அவசர அவசரமாக பெண்களைச் சேர்ப்பது குறித்து தமக்கு சந்தேகம் நிலவுவதாக சில பெண்கள் அமைப்புகள் கூறியுள்ளன. [/size][/size]

[size=1]

[size=4]இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 109 தமிழ் இளம் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்த வைபவம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் கோலாகல வைபவமாக நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்றிருக்கிறது. 18இற்கும் 22 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். சிவில் வேலைக்காகவே தம்மைச் சேர்த்துள்ளதாகவும் தங்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும் இராணுவத்தில் இணைந்துள்ள பெண்கள் தெரிவித்தனர். [/size][/size]

[size=1]

[size=4]சிங்கள மொழிப் பயிற்சி உட்பட மூன்று மாதப் பயிற்சியின் பின்னர் தமது கிராமத்திலேயே தொழில் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். குடும்ப வறுமை, தொழிலின்மை என்பன காரணமாகவும் 30 ஆயிரம் ரூபாய் மாதாந்த சம்பளம் மற்றும் வசதிகள் தரப்படும் என கூறியிருப்பதனால் தாங்கள் இதில் சேர்வதற்கு முன் வந்துள்ள போதிலும் இராணுவப் பயிற்சியயன்றால் தங்களுக்கு விருப்பமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். [/size][/size]

[size=1]

[size=4]இதேவேளை இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களில் ஒருவீதமேனும் ஆர்வத்துடன் இணைந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. [/size][/size]

[size=1]

[size=4]தமிழ் இளம் பெண்கள் வேலை வாய்ப்புக்காக இராணுவத்தில் அதுவும் தேசிய இராணுவத்தில் இணைவதை ஒரு சாதகமான நிலையாகவே தான் நோக்குவதாக தெரிவித்த பாரதிபுரம் அருட்தந்தை டிக்ஷன், கடந்த காலங்களில் இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு நிலைமைகளில் தமது பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர் இந்தச் சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளைப் பிரிந்தபோது கண்ணீர் விட்டு அழுததைக் கண்டதாகக் கூறினார். [/size][/size]

[size=1]

[size=4]முதல் தடவையாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைவதற்கு முன்வந்தமையானது அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கையின் முன்னேற்றத்தைக் காட்டுகின்றது என்று இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.[/size][/size]

[size=1]

[size=4]அதேவேளை தமிழர்களுக்கான ஏனைய விடயங்கள் எதுவும் இதுவரை சரியாக பூர்த்தியாகாத நிலையில் இராணுவத்துக்கு மாத்திரம் பெண்கள் சேர்க்கப்படுவதை சில தமிழ் பெண்கள் அமைப்புக்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றன. அதுவும் குறிப்பாக கடந்த காலங்களில் பெண் போராளிகள் விடயத்தில் இராணுவம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறும் அவர்கள் அப்படியான இராணுவத்தில் சரியான மாற்றங்கள் எதுவும் வராமல் அதற்கு முன்னதாகவே பெண்கள் சேர்க்கப்படுவது குறித்து கரிசனையும் தெரிவித்துள்ளனர்.[/size][/size]

[size=1]

http://valampurii.com/viewnews.php?ID=35526[/size]

Link to comment
Share on other sites

[size=5]இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்?[/size]

109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இலங்கையிலிருந்து ஒரு கடிதம். இதற்கு என்ன செய்யலாம் என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இனியொரு கருத்தாளர்களிடன் இதே கேள்வியக் கேட்கிறோம். உங்கள் ஆலோசனைகளை முன்வையுங்கள்.

விகடன் கதை உண்மையோ இல்லையோ தெரியாது, இங்கு சொன்னவைகள் உண்மை.

என்ன செய்யலாம்?

எப்படி தலையிடலாம்?

http://inioru.com/?p=31599

[size=4]#1 : என்ன உண்மை? வறுமை உண்மை. [/size]

[size=4]#2 : வறுமையை போக்க என்ன செய்யலாம்? வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். [/size]

[size=4]#3 : வேலை வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம்? : முதலீடுகள், சந்தை வாய்ப்புக்கள், கல்வி வாய்ப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும். [/size]

[size=4]#4 : யார் இதை செய்யவேண்டும் இல்லை செய்ய அனுசரிக்க வேண்டும்? : அரசு, சிங்கள அரசு. [/size]

[size=4]#5 : ஏன் அதை சிங்கள அரசு செய்யவில்லை? : இதைத்தானே அறுபது வருடமாக கேட்கிறோம் :wub:[/size]

[size=4]அரசியல் தீர்வு மூலம் மட்டுமே எமது மக்களின் வறுமை உட்பட பல பிரச்சனைகளை அணுகமுடியும். [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.