Archived

This topic is now archived and is closed to further replies.

கிருபன்

ராஜீவ் காந்தியை றோ உளவுப் பிரிவு பிழையாக வழிநடத்தியது – அருண் தம்பிமுத்து

Recommended Posts

ராஜீவ் காந்தியை றோ உளவுப் பிரிவு பிழையாக வழிநடத்தியது – அருண் தம்பிமுத்து

20 நவம்பர் 2012

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, அந்நாட்டு உளவுப் படைப் பிரிவான றோ பிழையாக வழிநடத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் இராணுவக் குழுக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் றோ உளவுப் பிரிவு, ராஜீவ் காந்தியை பிழையாக வழிநடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய முறைமை ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய பாராளுமன்ற முறைமை தொடர்பிலும் திருப்தி கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அமைச்சராகும் கனவில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் 50 அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், இதில் 25 அமைச்சர்கள் அபிவிருத்தி தொடர்பாகவும், ஏனைய 25 பேரும் மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும் செயற்படக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் அது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிவினைவாத கோட்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் தரப்பினர் தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களின் போது கூடுதல் நிதானம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபை முறைமைகளில் நாட்டுக்கு நன்மை ஏற்படும் எனக் கருத முடியாது என அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85605/language/ta-IN/article.aspx

Share this post


Link to post
Share on other sites

ராஜீவ் மட்டுமில்லை இந்திய வெளியுறவு கொள்கையே இலங்கை விடையத்தில் தவறாக தான் வளிநடத்தப்படுகின்றது.

அருண் தம்பிமுத்து யார்?

Share this post


Link to post
Share on other sites

அருண் தம்பிமுத்து யார்?

சாம் தம்பிமுத்துவின் மகன்!

Share this post


Link to post
Share on other sites

அருண் தம்பிமுத்து யார்?

379851_102430376546955_1647594217_n.jpgநீலச்சட்டைக்காறர்.சாம் தம்பிமுத்துவின் மகன்.

Share this post


Link to post
Share on other sites

சாம் தம்பிமுத்துவின் மகன்!

சாம் தம்பிமுத்து யார் எண்டும் சொல்லி விடுங்கோ (போட்டா வெட்டுறாங்க )

Share this post


Link to post
Share on other sites

சாம் தம்பிமுத்து யார் எண்டும் சொல்லி விடுங்கோ (போட்டா வெட்டுறாங்க )

என்ன நேபால் பரிசு வெண்டவராகா இருக்க போகிறார்? :D

மட்டுல ஒரு துரோகி கொழும்பில வைத்து சுட்டுக் கொள்ளப்படவர்,

Share this post


Link to post
Share on other sites

இப்ப அருண் தம்பி முத்துவ இலங்கை உளவுப்படை பிழையா வழிநடத்திது

Share this post


Link to post
Share on other sites

ஜனாதிபதியின் ஆலோசகராவதற்கு வேண்டிய தகமை தமிழருக்கு ஒருவகையில் துறோகம் செய்திருக்க வேண்டுமென்பதே.

Share this post


Link to post
Share on other sites

அருண் தம்பிமுத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் மனிதவுரிமைகள் தொடர்பான புலம்பெயர் நாடொன்றில் இடம்பெற்ற விவாதத்தில் இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி அப்படியொன்றும் மனிதவுரிமைகள் இடம்பெறவில்லை, புலிகள்தான் எல்லாவற்றையும் செய்தனர், தனது தகப்பனாரைக் கூடக் கொன்றனர் என்று வாதாடினார். சனாதிபதியின் தற்போதைய ஆலோசகர்களில் ஒருவர்.

இவரின் தகப்பனார் 1988 - 89 களில் வடக்குக் கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தலில் இந்திய பொம்மை அரசான இ.பி.ஆர். எல்.எப் தலமையிலான வரதராஜப்பெருமாள் அமைப்பில் தேர்தலில் போட்டியிட்டவர். அந்த நாட்களிலேயே துரோகத்தனத்துக்குப் பெயர் போனவர். பின்னர் புலிகளால் கொல்லப்பட்டார்.

Share this post


Link to post
Share on other sites

சிறி லங்கா சனாதிபதிக்கு எத்தனை ஆலோசகர்கள்?  இவர்களுக்கு எவ்வளவு சம்பளம்?  

நாடு கடனில் போகும்போது ஏன் இந்த கூத்து?

ரெண்டு மில்லியன் சிங்கள பெண்மணிகள் அரபு தேசத்தில் மலக்கூடம் கழுவி அனுப்பிய பணத்தை வீணடிக்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

சாம் தம்பிமுத்து யார் எண்டும் சொல்லி விடுங்கோ (போட்டா வெட்டுறாங்க )

சாம் தம்பிமுத்து றால்பண்ணை வைச்சிருந்து பெரிய சேக்கஸ் காட்டினவர்.

Share this post


Link to post
Share on other sites

நீலச்சட்டைக்காரரைப் பார்த்தா பன்சலயில இருந்து ஓடிவந்த ஆமத்துறு மாதிரி இருக்கு...

Share this post


Link to post
Share on other sites

இவர்களை எல்லாம் ஏன் துரோகிகள் என்றார்கள் என்பதற்கு சந்ததிகள் கடந்தும்.. அவர்களே சாட்சிகளாகி நிற்கின்றனர்..! இவர்களுக்கு முக்கியம் அளித்துக் கருத்துச் சொல்வதே வீண். இனத்துக்கு ஒரு 1% உபயோகமற்ற கூட்டம். இன்று எமது மக்களின் போராளிகளின் இரத்த ஈரத்தில் இருந்து.. சிங்கள அடிவருடி அரசியல் செய்ய முளைக்கின்ற நச்சுக் காளான்கள்.. இவர்கள்.

Share this post


Link to post
Share on other sites

[size=4]சாம் அல்ல ... ஆம் தம்பிந்த்துவின்...மகன் என்றும் சொல்லலாம்....இவருக்கு அடிப்படை வசதி எல்லாம் நல்லா கிடைக்குது போலை....ஆளை ஒருக்கால் கொலஸ்த்ரொல் செக் பண்ண சொல்லுங்கப்பா.......எங்கடை இனத்துக்கு தேவையான மனுசன்.....[/size]

Share this post


Link to post
Share on other sites