Archived

This topic is now archived and is closed to further replies.

BLUE BIRD

போரினால் பிரிக்கப்பட்ட குடும்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இணைகிறது – ரைம்ஸ் ஒவ் இந்தியா

Recommended Posts

[size=4]போரினால் பிரிக்கப்பட்ட குடும்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இணைகிறது – ரைம்ஸ் ஒவ் இந்தியா[/size] [size=4][ புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 01:46 GMT ] [ கார்வண்ணன் ][/size]

[size=4]Mulli-2009.jpg[/size]

[size=4]சிறிலங்காவில் போரினால், பிரிந்துபோன தமிழ்க் குடும்பம் ஒன்று ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீள இணையவுள்ளது.

நித்தியா என்ற 31 வயதுடைய பெண், 2006ம் ஆண்டில் தனது இரண்டு பிள்ளைகளுடன் கடத்தப்பட்டதால், கணவர் மற்றும் மூத்த மகளிடம் இருந்து பிரிந்தார்.

இப்போது அவர்கள் நெதர்லாந்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவர்கள் மீள இணைந்து கொள்ளவுள்ளனர்.

கடந்து ஆண்டு தனது இளைய மகள் தாரணி (9), மகன் மதுரன் (7) ஆகியோருடன் சென்னை வந்த நித்தியா, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முகாம்களில் தனது கணவரை சதாசிவம் (33) மற்றும் மூத்த மகள் லவாணி (10) ஆகியோரைத் தேடினார்.

“அவர்கள் உயிருடன் இருப்பதாக சிலர் என்னிடம் கூறினர்” என்றார் நித்தியா.

மண்டபம் முகாமில் உள்ள சிலர் சென்னையில் உள்ள இந்திய செஞ்சிலுவை குழுவை நாடுமாறு கூறினர்.

சென்னையில் உள்ள செஞ்சிலுவை சங்க அதிகாரி கிருஸ்ணமூர்த்தி, பூகோள தேடுதல் வலையமைப்பின் மூலம் தேடுதல் நடத்தியபோது, சதாசிவம் நெதர்லாந்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

நித்தியா முதலில் தனது கணவருடன் தொலைபேசியில் பேசினார்.

“கணவருடன் தொலைபேசியில் பேசிய அன்று, மாலை காணொளி இணையம் மூலம் அவர்களுடன் பேசிய போது எனது கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.” என்றார் நித்தியா.

2006இல்போர் மீண்டும் ஆரம்பமாகியிருந்த போது, அந்தக் குடும்பம் பிரிந்து போனது.

இவர்களின் குடும்பம் தலைமன்னாரில் உள்ள மாமாவின் வீட்டுக்குச் சென்றது.

“ஒருநாள் காலை லவாணி பாடசாலைக்குச் சென்றிருந்த போது, என்னையும், இளைய பிள்ளைகளையும் ஒரு குழுவினர் கடத்திச் சென்றனர்.

வன்னியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில், கண்களைக் கட்டி தடுத்து வைத்திருந்தனர்.

கணவர் இருக்கும் இடத்தை கேட்டனர். அவர் அங்கே இருக்கவில்லை.

ஒரு இருட்டறைக்குள் வைத்து மூன்று ஆண்டுகள் சித்திரவதை செய்தனர். அப்போது எனது மகன் பிறந்து சில மாதங்கள் தான்.” என்றார் நித்தியா.

தடுப்புமுகாமில் நெருப்பால் சுடப்பட்ட காயத்தழும்புகள் அவருடைய கையில் உள்ளன.

“எனது நண்பர் ஒருவர் பணம் கொடுத்து உதவினார். அதையும் என்னிடம் இருந்த நகைகளையும் இராணுவ அதிகாரிகளுக்கு கொடுத்து 2010இல் விடுவிக்கப்பட்டேன்.

கடவுச்சீட்டு எடுப்பதற்கு எமக்கு ஒரு ஆண்டு தேவைப்பட்டது.

நாம் செஞ்சிலுவை குழுவை அணுகி அதன் தலைவர் ஹரிஸ் மேத்தா இறுதியாக நீதி ரீதியாக உதவினார்.

இந்தியாவில் இல்லாவிட்டால், அவர் நெதர்லாந்தில் தஞ்சடைந்திருப்பார் என்று எனக்குத் தெரியும்.” என்றார் நித்தியா.

அதேவேளை சதாசிவத்தின் வாழ்க்கையும் சுலபமானதாக இருக்கவில்லை.

“தனது மனைவியும் பிள்ளைகளும் கடத்தப்பட்டதை அறிந்தவுடன் சதாசிவம் லவாணியை பாதுகாப்பதற்காக பாடசாலைக்கு ஓடினார்.

நித்தியாவும் இரு பிள்ளைகளும் சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நினைத்தார்.

லவாணியுடன் இந்தியா வந்தார். இங்கிருந்து அம்ஸ்ரடாம் சென்றார்.

பின்னர் அவருடன் தொடர்பை ஏற்படுத்தினோம். மாதம் 3000 ரூபாவை அவர் தனது குடும்பச் செலவுக்கு அனுப்பத் தொடங்கினார்.

நெதர்லாந்து அரசினால் அவருக்கு வழங்கப்படும் உதவித்தொகையின் ஒருபகுதியை இவர்களுக்கு அனுப்புவதற்காக அவர் தனது ஒருநேர உணவை தவிர்த்து வந்தார் என்பது அண்மையில் தான் எமக்குத் தெரிந்தது.

நெதர்லாந்தை சென்றடைந்த இறுதிக்குழுவில் அவர் இருந்தார்.” என்றார் செஞ்சிலுவை குழு அதிகாரி கிருஸ்ணமூர்த்தி.

ஆரம்பத்தில், தனது கணவரைத் தேடிக்கண்டு பிடிக்க முடியாது போனால், தற்கொலை செய்து கொள்ளும் மனோநிலையில் இருந்த நித்தியாவுக்கு நாம் ஆலோசனை வழங்கினோம்.

தான் இறந்துபோனால் குழுந்தைகளை யாரிடமாவது கொடுத்து விடுமாறு அவர் கூறினார். அவரை அதிலிருந்து மீட்க சிலகாலம் சென்றது.

ஒரு ஆண்டுகால முயற்சிகளை அடுத்து இந்திய அரசாங்கம் நித்தியாவுக்கு அவரது குழந்தைகளுக்கும் வெளியேறுவதற்கான அனுமதியை அளித்துள்ளது.

அவர்களுக்கு இருமாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து நுழைவிசைவு வந்துவிட்டது.” என்றார் கிருஸ்ணமூர்த்தி.

செஞ்சிலுக்குழுவின் தமிழ்நாடு கிளை உறுப்பினர்களின் நன்கொடை மூலம் பெறப்பட்ட 86 ஆயிரம் ரூபா பெறுமதியான விமானப் பயணச்சீட்டுகள் நித்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நித்தியாவும் அவரது குழந்தைகளும் நாளை காலை அம்ஸ்ரடாமுக்கு புறப்படவுள்ளனர்.

நித்தியா தனது பயணப் பையில் லவாணியின் சட்டையையும், சதாசிவத்தின் ரி-சேட்டையும் கொண்டு செல்கிறார்.

வழிமூலம் - ரைம்ஸ் ஒவ் இந்தியா[/size]

[size=4]மூலம்: [/size]http://www.puthinappalakai.com/view.php?20121121107318

Share this post


Link to post
Share on other sites