• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

யாழ்அன்பு

19.12.12 திருவெண்பாவை ஆரம்பம்

Recommended Posts

[size=2]

[size=1]19.12.12 [/size]திருவெண்பாவை[size=1] ஆரம்பம் புதன்;மாலை 23.12.12 சுவர்க்கவாசல்ஏகாதேசி [/size]...[size=1] 28.12.12 [/size]திருவெண்பாவை[size=1] பூர்த்தி வெள்ளி;மாலை மாதசதுர்த்தி [/size]...[/size][size=2]

a1(1082).jpg[/size][size=2]

[size=3]மார்கழி மாதத்தில் இந்துக்களால் சிவனை நினைத்து திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்ற பத்து நாட்களிலும் கோவில்களில் அதிகாலை வேளையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், மார்கழி மாதம் பீடை நிறைந்த மாதமாக கருதப்படுவதால் திருவெண்பாவை விரத நாட்களில் வைகறையில் துயிலெழுந்து நீராடி இறைவனை தரிசித்த பின் திருவெண்பாவைப் பாடல்களை இசைத்தவாறு ஊர்கள் தோறும் சென்று பள்ளியெழுப்புவது இத்திருவெண்பாவையின் அனுஷ்ட்டான முறைகளில் ஒன்றாகும்.[/size][/size]

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது

வையநிகழ் பல்லவர் தங் குலத்து வந்த

மாமணிவா நிலமுழுது மகிழ்ந்து காக்கு

மையடிகள் காடவர்கோ னருளா னூல்க

ளறிந்தரசு புரிந்திடுத லமையு மென்றே

பொய்யனைய வுடல்வாழ்வு கழியு மாறு

பொருந்தியிடும் புகழ்வெண்பா புலியூர் மேவுஞ்

செய்யதிரு வடிமுதலாப் பதிக டோறுஞ்

செப்பினா ரென்வினைக டப்பி னாரே.

[size=3]

தொண்டைமண்டலத்திலே, காஞ்சிபுரத்திலே, பல்லவர் குலத்திலே, சைவத்திருநெறி வாழும்படி அரசியற்றும் ஐயடிகள் காடவர்கோனாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் எவ்வுயிர்களும் இம்மைமறுமையின்பங்களையும் முத்தியையும் அடைதல்வேண்டும் என விரும்பி, பிறதேசங்களையுந் தமக்கு அதீனப்படுத்தி, சைவந்தழைத்தோங்க அரசர்களும் பணிசெய்ய அரசியற்றினார். சிலகாலஞ்சென்ற பின், அரசாட்சி துன்பமயமெனக் கருதி, அதனை வெறுத்து, அப்பாரத்தை இறக்கித் தம்முடைய புத்திரன்மேல் ஏற்றி, பூமியிலுள்ள சிதம்பரமுதலாகிய சிவஸ்தலங்கடோறுஞ் சென்று, சுவாமிதரிசனம்பண்ணி, திருப்பணிசெய்து, ஒவ்வொரு திருவெண்பாப் பாடினார். இந்தப் பிரகாரம் நெடுங்காலந் திருத்தொண்டு செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.[/size][size=3]

திருச்சிற்றம்பலம்.[/size]

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. தேவாரவாய்மை திருத்தொண்டர் புராண உண்மையிற் பிரதிபலித்தல

[size=3]

திருத்தொண்டர் புராண உண்மைகள் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் அடக்கம். இத்திருவந்தாதியுண்மைகள் திருத்தொண்டத் தொகையிலடக்கம். திருத்தொண்டத் தொகை உண்மைப் பொறுதி சுந்தரமூர்த்தி நாயனாரில் அடக்கமாம். அது, சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய தொகைக்கு விரிவாக நம்பியாண்டார்நம்பி இயற்றியருளிய திருவந்தாதிக்கு விருத்தியாகச் சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர் புராணம் இயற்றியருளினார் என்றுள்ள வரலாற்றுண்மையாற் பெறப்படும். இச்சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தினை நகர்த்திருப்பதிகத்திற் பின்வரும் வாய்மை யொன்றைப் புலப்படுத்தியுள்ளார். பெறுதற்கரிதாகிய மானுட சரீரமானது முடிமன்னராய் உலகாண்டு அறபரிபாலனஞ் செய்யும் உயர்பெரு மகிமை தாங்குதற்கு முரியதாகும். ஆனால், இச்சரீரத்தோடு உயிர்க்குள்ள தொடர்பானது நாளொரு விதமாய்த் தேய்ந்து தேய்ந்து போய் ஒரு கட்டத்தில் உயிர் உடலை விட்டு அறுதியாக விலகியேவிட வேண்டிய அவலநிலையும் மேல் மேல் எடுக்க விருக்குஞ் சரீரந்தோறும் மீளமீள அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கும் அநர்த்தமும், தவிர்க்கமுடியாத வகையில் உளதாகும், அங்ஙனம் நிலையில்லாமையாகிய இப்பொய்ம்மையோடு கூடிய இந்த உடலுயிர் வாழ்க்கைப் பற்றை, மனமே, நீ அறவிட்டொழிவாயாக. விட்டதும் பாம்பை வைத்தாட்டுந் திருக்கரத்தினரும் பரமபதியும் திருமுருகன் தந்தையுமாயுள்ளவரும் திருத்தினை நகரில் எழுந்தருளி யுள்ளவருமாகிய சிவக்கொழுந்தீசனைச் சென்றடைவாயாக என்பது அவ்வாய்மை. அது நாயனார் வாக்கில், "வேந்த ராயுல காண்டறம் புரிந்து வீற்றிருக்குமிவ் வுடலது தன்னைத் தேய்ந்திறந்துவெந் தூயருழந்திடுமிப் பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே பாந்தளங்கையில் ஆட்டுகந்தானைப் பரமனைக் கடற் சூர்தடிந்திட்ட சேந்தன் தாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே" என வரும். திருத் தொண்டராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாற்றுண்மை இத்தேவார வாய்மைக்கு உருவந் தீட்டியவாறாக அமைந்திருக்கும் நயங்குறிப்பிடத்தகும்.[/size][size=3]

பிரசித்தமான பல்லவ அரசமரபில் தோன்றி நாடெங்குந் தருமநெறி தழைத்து எவ்வுயிரும் பெருமையுடன் வாழ்தற்காம் பாங்கில் சைவநெறி தழுவி யரசாண்டு பேர்புகழ் மிக்குத் திகழ்ந்தவர் இந்த நாயனார். இருந்தும் மேற்கண்டவாறான உடலுயிர் வாழ்வின் விளைவாம் அல்லலைத் தீர்த்தற்கு அது எவ்வகையினும் பரிகாரமாக மாட்டாமையினால் அதற்கு ஏற்ற பரிகாரமாகத் தக்கதென அறியப்பட்டுள்ள சிவதொண்டு புரிந்து கொண்டு வாழும் சிவனடியார் வாழ்க்கையே சிறந்ததெனத் துணிந்து அவ்வாழ்க்கை மேற்பற்று மீதூரப் பெற்றவ ராயினார். அதனால், அரச பாரத்தைத் தன் மகன்மேல், இறக்கிவிட்டுச் சிவனடியாராகித் தலயாத்திரை செய்து ஆங்காங்கு இயலுமளவு, திருத்தொண்டாற்றுவதும் தமது தெய்வஞானப் புலமையால் உடலுயிர் வாழ்விழிவும் உடையானாகிய சிவனைச் சார்ந்தொழுக வேண்டியதன் இன்றியமையாமையும் புலப்படச் செய்யுளிசைப்பதுமாக வாழ்ந்து சிவபதப்பே றெய்துவாராயினர். அது அவர் புராணத்தில், "மன்னவரும் பணிசெய்ய வடநூல் தென்றமிழ் முதலாம் பன்னுகலைப் பணிசெய்யப் பாரளிப்பார் அரசாட்சி இன்னவென இகழ்ந்ததனை எழிற்குமரன் மேலிழிச்சி நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்" - "தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை யுலகின் கண் அண்டர் பிரானமர்ந் தருளு மாலயங்க ளானவெலாங் கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே வண்டமிழின் மொழிவெண்பா ஓரொன்றா வழுத்துவார்" - "இந்நெறியா லரனடியார் இன்பமுற இசைந்தபணி பன்னெடுநா ளாற்றிய பின் பரமர்திருவடி நிழற்கீழ் மன்னுசிவ லோகத்து வழியன்பர் மருங்கணைந்தார் கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவரையடிகளார்" என வரும்.[/size]

2. சைவஞானநூல்களில் க்ஷேத்திரத் திருவெண்பாவின் நிலை

[size=3]

ஐயடிகள் நாயனார் தமது தலயாத்திரையின்போது தலத்திற் கொன்றாகப் பாடியருளிய திருவெண்பாக்களின் தொகுதி க்ஷேத்திரத் திருவெண்பா என்ற பெயரால் வழங்கும். மெய்யுணர்வு, தலைப்பட்டுச் சிவனைச் சாரும் ஆன்மாவானது அதற்கு முன்னோடி நியமமாம்படி, உண்மை நிலையில் தனக்கு வேறாயிருந்தும் தன்னோடொன்றியிருக்கும் ஒன்றெனத் தோன்றி மயக்கும் தேகாதிப்பிரபஞ்சத்தின் நிலையில்லாமையும் அதன் பொல்லாப்பும் உணர்ந்து அதிலிருந்து விடுபடுதல் கடனாகும். அது, தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சத்தி எனும் உணர்வநுபவ நிலைகளாகச் சைவசித்தாந்தத்தில் வைத்துணர்த்தப்படுவதும் துகளறு போதம் என்ற ஞான நூலிற் பூதப்பழிப்பு, அந்தக்கரண சுத்தி முதலாக அவை விரித்து வர்ணிக்கப்படுதலும் பிரசித்தமாம். அப்பர் சுவாமிகள் தேவாரத்தில், "செத்தையேன் சிதம்ப நாயேன் செடிதலை யழுக்குப் பாயும் பொத்தையே பேணி நாளும் புகலிடம் அறியமாட்டேன்" என்பதாதி யாகவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில், "ஊன்மிசை உதிரக்குப்பை ஒருபொருளிலாத மாயம் மான்மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கு மிந்த மானிடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்" என்பதாதியாகவும் திருவாசகத்தில், "பொத்தையூண்சுவர்ப் புழுப்பொழிந்துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை" என்பதாதியாகவும் வருவன அப்பூதப் பழிப்புச் சார்பான தேகப் பழிப்புண்மை உணர்த்தும் அருளிச் செயல்களாகும். சிவனையடைதலாகிய முத்திப் பேற்றுக்கு மிகவும் இன்றியமை யாததாகிய இந்நெறியையே தமது செய்யுளாக்க நெறியாகக் கொண்டருளிய ஐயடிகள் நாயனார் உடலுயிர் வாழ்வில் நேரும் அவலக் கவலைகளைப் பகிரங்கமாக உணர்த்தும் மூப்புநிலை யிழிவு மரணாவஸ்தைக் கெடுபிடி நிலைமைகளைத் தமது ஞானப் புலமை நலஞ் சொட்டச் சொட்டப் பொருத்தமான சொற்புணர்ப்பும் ஓசைநயமும் பொருளுறுதியும் நகைச்சுவை இழிவரற்சுவை பெருமிதச் சுவை நலங்களுங் கனியும் நேரிசை வெண்பாக்களாற் பாடியருளினார். அநேகமான வெண்பாக்களின் முன்பகுதி குறித்த இப்பொருளமைவினதாகப் பின்பகுதி, அத்தகைய அவலம் நிகழுந் தருணம் வருவதற்கு முன்னாகவே, நெஞ்சே, இன்ன தலத்துச் சிவபெருமானை நினை, அழை, தொழு, சென்றடை என்ற பொருளமைவினதாகப் பொருந்த வைக்குங் கவிதை யுக்தி தழுவப்பட்டிருத்தல் காணலாம். இப்பாடல்களில், திருநாவுக்கரசு நாயனார் அருளிய பலவகைத் திருத்தாண்டகத்தில் வரும், "பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே" - "நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவாப்புலால் தானம் நீக்கலாமே எனவரும் எதுகைச் சொற்சித்திரங்கள் போன்ற சுவைதரும் எதுகைச் சொற்சித்திரங்கள் விரவிவருதல் இரசனையூட்டும் விசேட அம்சமாகும். அது, நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நெஞ்சமே தில்லைச்சிற்றம்பலமே சேர்" - "ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை" - "பாளை, அவிழ்கமுகம் பூஞ்சோலை யாரூரர்க் காளாய்க் கவிழ்கமுகங் கூம்புகவென்கை" - "கஞ்சி யருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சமே திருத்துருத்தியான் பாதஞ்சேர்" - "தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் கட்டி எடுங்களத்தா என்னாமு னேழை மடநெஞ்சே நெடுங்களத்தான் பாதநினை" என்பனவாதியாக வருதல் காண்க. (நல்லச் சிற்றம்பலம் - மயானம் - ஐயாறு வாயாறு பாயாமுன் - சிலேற்பனச் சளிப்பெருக்கு வாய்வழியே பாயாமுன் - கஞ்சி அருத்தொருத்தி கொண்டுவா - கஞ்சி அருத்த (பருக்க) ஒருத்தி கொண்டுவா.) வகை துறையறியாது பிறப்புக்குப் பிறப்பு மாறிமாறி, மூப்பு மரண அல்லல்களுக் குள்ளாகும் உடலுயிர் வாழ்வே கதிமோட்ச மென்றிருந்து மாயும் நம்மனோர் பொருட்டிரங்கி இந்த நாயனார் மாபெரும் ஞானோபதேசமாக நின்று நிலவும் வண்ணம் இப்பாடற் றொதியை அருளிச்செய்தமையும் உயர்ந்த சிவதொண்டாகவே போற்றப்படும். இவர் திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றதற்கு அது விசேடகாரணமாகக் கொள்ளலுந் தகும். மேலும், இந்த நாயனார் அரசபோக வாழ்வைக் கை நெகிழ்ந்து சிவனடியார் ஆதலுக்குபகரித்த அவரது உள்ளநிலை ஒரு வெண்பாவிற் பதிவிருத்தலும் இத்தொகுதிக்கு மற்றோர் சிறப்பாகும். அது, "படிமுழுதும் வெண் குடைக்கீழ்ப் பாரெலா மாண்ட முடியரசர் செல்வத்து மும்மை தொடியிலங்கு தோடேந்து கொன்றை யந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி உண்பதுறும்" என வரும். முடியாட்சி ஐஸ்வரிய அநுபவத்திலும் பார்க்க ஓடேந்திய பிச்சை பெற்றுண்டு சிவதொண்டராய் வாழ்தல் மும்மடங்கு விசேடம் பெறும் என்ற இவர் விவேகமே விவேகமாம் என்க.[/size][size=3]

திருச்சிற்றம்பலம்.[/size]

மாணிக்கவாசகர் மூவருக்கும் முன்னவரா, பின்னவரா..

[size=3]

திவாகர்[/size]

[size=3]

3.”தில்லை மூதூர் ஆடிய திருவடி” என்று கீர்த்தி திருவகல் பாடலை ஆரம்பித்துள்ள மாணிக்கவாசகர், தில்லையை ’மூதூர்’ (மிகப் பழைய ஊர்) என இங்கே சிறப்பாக வர்ணித்திருப்பது கவனிக்கத் தக்கது. கடல்கொண்ட தமிழ்ப்பகுதிகளைக் குறிப்பிட்ட இளங்கோ அடிகள் கூட மதுரையை ‘மூதூர்’ என சிறப்பாக அழைத்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.[/size]

[size=3]

தமிழகத்தைப் பற்றி கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த வரலாற்றினை எந்த சரித்திர ஆசிரியராலும் இந்த நிகழ்ச்சி நடந்தது இப்போதுதான் என அறுதியிட்டுக் கூறமுடியாதுதான் (சமுத்திர குப்தன் பல்லவனை வென்றது தவிர). கல்வெட்டுகள் ஆறாம்-ஏழாம் நூற்றாண்டிலிருந்து அதிகமாக வர வர நாம் சென்றுபோன காலங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு தோராய அளவில் கணக்கிட்டுள்ளோம். அந்த வகையில் தமிழகத்துக்கு களப்பிரர் வருகையும் ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூற்றாண்டு வரை பல சரித்திர ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. களப்பிரர் காலத்தில் சரித்திரசம்பந்தமான எவ்வித ஆதாரமும் சரியாகக் கிடைக்கவில்லை. ஆனால் அபூர்வமான வகையில் ‘நாவலர் சரிதத்தில்’ ஒரு தகவல் கிடைத்துள்ளது,[/size]

[size=3]

மூவேந்தர்களையும் ஒரு சேர வீழ்த்திய களப்பிர அச்சுதராயன் என்பான் ‘தில்லை நகரில்’ முடிசூட்டிக்கொள்கிறான். அவன் அருகே சங்கிலியால் கட்டப்பட்டு சிறைப்பட்ட மேவேந்தர்களும் அவன் புகழைப் பாடவேண்டுமெனக் கட்டளை. சேரன் (தினையும் செந்நெல்லும் நிறைந்த அச்சுதனின் பெரு மாளிகையின் முன்வாசலில் – முற்றத்தில், முர்சுகளும் சங்கும் ஊத தேர்களில் வந்த அரசர்கள் அவனுக்காக காத்திருப்பது) எனப் பாடுகிறான். இரண்டாவதாக சோழன், அந்த முற்றத்தில் காணப்படும் அரசர்களின் காலோசை, அந்த முரசுகளின் ஓசையைக்கூட மட்டுப்படுத்தும் என்று பாடுகிறான். ஆனால் பாண்டியன் இவர்களைப் போல ஒரேயடியாகப் புகழவில்லை. மாறாக அச்சுதனை மட்டம் தட்டிப் பாடுகிறான்.[/size]

[size=3]

“குறையுளார் எங்கிரார் கூர்வேல் விராமன்[/size][size=3]

நிறையாறு திங்களிருந்தான் – முறைமையால்[/size][size=3]

ஆவிக்கும் தானை யலங்குதா ரச்சதமுன்[/size][size=3]

வாவிக்கிளையான் வரை”[/size][size=3]

(குறையிலாத மனிதன் யார்? கூர்வேலையுடைய ராமன் வாலியின் இளையோன் சுக்கிரிவனுக்காக ஆறு மாதம் காத்திருக்கவில்லையா. அதேபோலத்தான் நானும் பெரும்படை கொண்ட அச்சுதனுக்காக இங்கே காத்திருக்கிறேன் (சுருக்கமான விளக்கம்)[/size]

[size=3]

இந்தப்பாட்டின் பொருளால் தன்னை குரங்கினத்தலைவனுக்கு இணையாகவும், பாண்டியணை ராமனாகவும் வர்ணித்தது அச்சுதனுக்குக் கோபத்தை எழுப்பியது. தண்டனையை அதிகப்படுத்த ஆணையிட உடனே அவனை சாந்தப்படுத்தி இன்னொரு பாடலைப் பாடுகிறான் பாண்டியன்.[/size]

[size=3]

“கடகர் குணகடலென்றார்த்தார் குடார்க்[/size][size=3]

கிடவர் வடகடலென்றார்த்தார் – வடகடல்[/size][size=3]

தென்கடலென்றார்த்தார் தென் தில்லை அச்சுதன் நின்றன்[/size][size=3]

முன் கடை நின்றார்க்கு”[/size]

[size=3]

ஒரேயடியாக தடாலடிப்புகழ்தான். அதாவது தென் தில்லையில் அச்சுதன் அரண்மனை முற்றத்தில் இருந்த அரசர்கள் எண்ணமாவது இப்படி இருந்ததாம். அச்சுதன் படையைப் பற்றி மேற்கு நாட்டார் ஏதோ படையின் எல்லை கீழ்க்கடல் வரை நீளும் என்றும் தென்கடல்பகுதியின அது வடகடல் எல்லை வரை நீண்டதாம் எனவும் வடபுலத்தாரோ தென்கடல் வரை நீண்டதாக சொன்னார்களாம்..[/size]

[size=3]

மூவேந்தர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், ஆனால் இங்கே கவனிக்கப்படுவது தென் தில்லை என வரும் ஒரு சொல். இப்பாடல்களை வைத்து அச்சுதன் மூவேந்தர் முன்னிலையில் தில்லையம்பலத்தான் கோயிலில் முடிசூட்டிக்கொண்டதாக பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் தனது நூலில் எழுதியுள்ளார். மேலும் அச்சுதக்களப்பராயன் பற்றி ‘புத்ததத்தா’ எனும் பௌத்தமதப் புலவர் பாலி மொழியில் மிகவும் புகழ்ந்துள்ளார். அவர் எழுதிய வினய வினிச்சாயா எனும் நூலில் அச்சுதன் தமிழகத்தில் குறிப்பாக சோழப்பகுதிகளை ஆண்டதைக் குறிப்பிட்டுள்ளார் (PT Srinivasa Iyengar’s The early History of Tamils).[/size]

[size=3]

தில்லையம்பதி மிகப் பழைய ஊர் என்பதில் வாதபேதம் வராது என்றாலும் தில்லையம்பலத்து இறைவன் பற்றிய் செய்திகள் எப்போது வந்தது என்பதைச் சற்று ஆராயவேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு சிற்பம், அல்லது கிபி முதலாம் நூற்றாண்டு சிற்பம் (மூலம்-விக்கி) என சில சிற்பவரலாறுகள் கூறப்பட்டாலும் அவை சரித்திர நோக்கில் ஆராய்கையில் கால விவரங்களில் குழப்பங்கள்தான் மிஞ்சும்.[/size]

[size=3]

இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஆடலரசனான சிவனை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது..[/size]

[size=3]

திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்[/size][size=3]

பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்[/size][size=3]

செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ்[/size][size=3]

செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும்[/size][size=3]

பாடகம் பதையாது சூடகந் துளங்காது[/size][size=3]

மேகலை யொலியாது மென்முலை யசையாது[/size][size=3]

வார்குழை யாடாது மணிக்குழ லவிழா[/size][size=3]

துமையவ ளொருதிற நாக வோங்கிய[/size][size=3]

விமைய னாடிய கொட்டிச் சேதம் சிலம்பு 28 67 - 75[/size][size=3]

(நன்றி - சைவம் தளம்)[/size][size=3]

அதுவும் உமையவள் அவன் ஆடும் நடத்தினைக் காணும் வர்ணனையும் கவனித்துப் பார்க்கும்போது இது ஆனந்த தாண்டவமாக தில்லையில் ஆடல்வல்லான் ஆடிய நாட்டியம் தான் என்பதும் மறைமுகமாக விளங்கும். இளங்கோ இன்னொரு இடத்தில் மதுரை மாநகரத்து வெள்ளியம்பலத்தான் பற்றியும் சொல்லி இருக்கிறார்.[/size]

[size=3]

அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்[/size][size=3]

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில் வெள்ளியம்பலத்து[/size][size=3]

(பதிகம், 39-41)[/size][size=3]

வெள்ளியம்பலத்தில் ஆடலரசன் இருப்பதற்கு முன்பே தில்லையிலும் ஆனந்த தாண்டவம் ஆடும் கூத்தன் கோயில் கொண்டிருக்கவேண்டும் என்றும் இதன்கண் தெரிகிறது. சரி, இளங்கோ தம் சிலம்பில் திருமலையைப் பற்றியும் திருவரங்கத்தையும் பற்றிச் சொன்னவர் தில்லையையும் நேரடியாகச் சொல்லி இருக்கலாமே எனக் கேட்கத் தோன்றும். ஆனால் திருவரங்கம், திருமலைக் கோயிலைப் பற்றிச் சொன்னது பாதைவழி காட்டுவதற்காக மட்டுமே. அந்தப் பகுதியில் கோவலனும் கண்ணகியும் அடிகளும் பூம்புகாரிலிருந்து மதுரை செல்லும் நடுவழியில் எந்தப் பாதையில் சென்றால் மதுரை வரும் என்பதற்காக போகிற போக்கில் காண்பிக்கப்பட்ட சரித்திரப் பொருத்தமான வார்த்தைகள் இவை. இந்த வழியில் தில்லையம்பதி வருவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லையென்பதால் தில்லையைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஆடலரசனின் ஆனந்த தாண்டவம் பற்றிய அற்புதக் குறிப்பை அவர் கவிதைப் படுத்திய நயம் மிக அருமை.[/size]

[size=3]

ஐந்தாம் நூற்றாண்டு பல்லவமன்னரான ஐயடியார் காடவர்கோன் தன் ஷேத்திரத் திருவெண்பாவில் முதல் பாடலாகக் குறித்திருப்பது தில்லை பொன்னம்பலம் பற்றித்தான். இது பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐயடிகள் பற்றிய செய்தியை சுந்தரரும் தம் திருத் தொண்டத் தொகையில் சேர்த்திருக்கிறார்.[/size]

[size=3]

ஓடுகின்ற நீர்மை ஒழித்தலுமே உற்றாரும்[/size][size=3]

கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று – நாடுகின்ற[/size][size=3]

நல்லச் சிற்றம்பலமே நண்ணாமுன் நல்நெஞ்சே[/size][size=3]

தில்லைச்சிற் றம்பலமே சேர்.[/size][size=3]

(வாழ்க்கை ஓடுகின்றது.. உற்றார் உறவினரும் உம்மை விட்டு பிரிகின்றார். எப்படியும் முடிவில் போய்ச் சேரவேண்டிய மயானத்துக்குப் போவதற்கு முன்பே, நல்ல நெஞ்சே.. திருச்சிற்றம்பலத்தைச் சேர்வாயாக! - சுருக்கமான விளக்கம்)[/size]

[size=3]

ஐயடிகள் தனது சகோதரனான சிம்மவர்ம பல்லவனை திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள திருக்குளத்தில் குளிக்கவைத்து அவன் தொழுநோயைப் போக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இதனால் சிம்மவர்மன் திருச்சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான் என்பர். ஆனால் இதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் சிம்மவர்மன் என்ற பெயரில் மூன்று விதமான காலகட்டத்தில் பல்லவ அரசர்கள் இருந்தனர் என்பதற்கான சில செப்பேடுகள் ஆந்திரத்தில் (கோவூர்-நெல்லூர் செப்பேடு) கிடைத்துள்ளன. இவர்களில் எந்த சிம்மவர்மனின் சகோதரர் ஐயடிகள் என்று தெரியவரவில்லை. ஆனாலும் ஐயடிகள் மகேந்திரனின் தந்தையான சிம்மவிஷ்ணு (550-580) காலத்துக்கும் முற்பட்டவர் என்று வரலாற்றாசிரியர் உடுமலை திரு என்.சுப்பிரமணியன் தனது தமிழ்நாடு வரலாறு – (முதல் பகுதி) நூலில் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=3]

பதினோராம் திருமுறையில் நக்கீரதேவனார் எழுதிய பாடல்களில் பொன்னம்பலம் பற்றிய ஒரு வரி வந்தாலும், நக்கீரதேவர் எந்தக் காலகட்டவர் என்பதை ஆராய இன்னொரு கட்டுரை தேவை என்பதால் அந்தப் பாடலை நாம் இங்கே கொண்டுவரமுடியாது.[/size]

[size=3]

"தூயசெம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்” என்று அப்பர் சுவாமிகளால் ஏழாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தில்லைச் சிற்றம்பலம் அவர் காலத்துக்கு பல நூறு ஆண்டுகள் முன்பேயே இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்றும் சித்தர்களால் வழிபடும் சில தலங்கள் கொல்லி மலைக் காடுகளிலும் மலை மேலும், கடற்கரை ஓரத்திலும் இருப்பதாக அறிகிறோம். தில்லைவனம் என்பதே தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. முதலில் வனங்களுக்கிடையே இருந்த கோயில் காலம் போகப் போக வெளிப்பட்டிருக்கவேண்டும். இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் புராணங்களில் பெயர் பெற்றுள்ளது உண்டு. தில்லைக்கு புலியூர் என்று ஒரு கால கட்டத்திலும் (தேவாரப்பாடல்களுக்கு முன்பு – வியாக்ரபாதர் அல்லது புலிக்கால் பாதர் பூசித்ததால் வந்த பெயர், பெரும்பற்றப்புலியூர் என தேவாரப் பாடல்கள் காலத்துக்கும் பின்னும் (ராஜராஜசோழன், குலோத்துங்கன் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது), சிதம்பரம் என நிகழ்காலத்திலும் காலத்துக்கு ஏற்ப பெயர்கள் மாறிகொண்டே வருகின்றன. சிதம்பரம் எனும் பெயர் திருமூலர் திருமந்திரத்திலும் இடம் பெற்றுள்ளதால், வடமொழிப் பெயரான சிதம்பரம் புராணகாலத்திலும் ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழில் கோயிற்புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம் என்னும் புராணங்கள், வடமொழியில் சூதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான நூல்கள் வடமொழியிலும் புலிக்கால் முனிவரின் வேண்டுதலுக்கேற்ப தில்லை நடராசனின் ஆனந்த தாண்டவமே பொற்சபையில் ஆடப்பட்டதாகத் தெரிவிப்பதால், அரசாண்ட மன்னவர்களும் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டு முதல் அவரது சபை கனகசபையாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு பொன் வேய்ந்திருக்க வேண்டும். அதை சிம்மவர்ம பல்லவன் செய்திருந்தாலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் (பராந்தகன், குலோத்துங்கன் போன்றோர்) தொடர்ந்து வந்தாலும் பொன்னம்பலத்தான் என்ற பெயருக்கேற்ப அரசர்கள் ஆலயத் தொண்டு செய்தார்கள் என்றே சொல்லவேண்டும்.[/size]

[size=3]

ஆக மாணிக்கவாசகர் மனமுருகப் பாடி உருகி, ஆண்டவனுடன் அங்கேயே ஐக்கியமாகிய இந்த ஆனந்த தாண்டவன் ஆடிய கோயில் தேவார காலத்துக்கு முற்பட்டதாக இருந்தது என்பது ஒரு பக்கம் வெளிப்படையாகவே தெரிந்தாலும், மாணிக்கவாசகர் உறுதியாக இந்தப் பழைய காலத்துக்குச் சேர்ந்தவர்தானா என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அத்துடன் அவர் தில்லையில் நிகழ்த்திய வாதம் பற்றிய விவரங்கள் அக்காலகட்டத்திலா என்பதையும் ஆராயவேண்டும். தில்லையில் மட்டும் இல்லை, வாதவூரார் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோயில்கள் எப்போதிலிருந்து வழிபாட்டுக்கு வந்தன என்பதையும் பார்க்கவேண்டும். அவர் சமய வாதிகளை எப்படிக் கையாண்டார், அவர் காலத்தில் உள்ள சமய நிலை எப்படி இருந்தது, என்பதையும் பார்க்கவேண்டும்.. ஆனால் இவை எல்லாவற்றையுமே அவர் பாடல்களிலிருந்தே சற்று சுருக்கமாகவே பார்ப்போம்..[/size]

இரண்யன் நாடகமும் பகத்தூரும்

[size=3]கொங்கு நாடு என்ற பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அருகே உள்ள சிறப்பு பெற்ற ஊரான பக்தியில் சிறந்த பகத்தூர். இந்த ஊர் மக்கள் 600 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலத்திலிருந்து முகமதியர் கொடுமை கண்டு கொங்கு நாட்டுக்கு தன் குலதெய்வத்தை எடுத்துக் கொண்டு சத்தியமங்கலம் டணாய்க்கன் கோட்டை வழியாக மாயாறு தாண்டி வந்து குடியேரினார்கள். [/size]

[size=3]ஆதியில் மாயாறு அருகே குலக்கோயிலையும், ஊரையும் கட்டி வாழ்ந்து வந்தார்கள். அதற்கு பின்பு தீவட்டி கொள்ளைகார்களால் அவ்வூர் அழிக்கப்பட்டு, தற்போது உள்ள ஊருக்கு அருகே ஒபுலட்டி என்ற ஊரை அமைத்து குடியிருந்தார்கள். அந்த இடத்திலும் தொல்லைகள் பல ஏற்படவே ஐதர்அலியின் படைத்தலவைன் பகதூர் என்பவன் துணையோடு தற்போது உள்ள ஊர் உருவாகியது. இப்பகுதியில் கன்னட மொழி பேசும் தேவாங்க சமூக மக்களும் ஒக்கலிக சமூக மக்களும் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். [/size]

iranyanaadagam.jpg

[size=3]இந்த ஊர் பவானி நதியின் கிளை நதியான கமலாநதியின் கிழக்கு கரையில் உள்ள ஊராகும். இம்மக்கள் நெசவுத் தொழிலை முழுமையாக செய்து வருகிறார்கள். இந்த ஊரில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலும், மடமனைக்குச் சேர்ந்த பர்வத மகரிஷி கோத்திரம் கஞ்சள குலதாரின் குலதெய்வம் ஸ்ரீ அகோர வீரபத்திர ஸ்வாமி திருக்கோயிலும் மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில் சூழ்ந்த புண்ணிய பூமியாகும். [/size]

[size=3]இவ்வூரானது பஜனை, கோலாட்டம், கும்மி, இரண்யன் நாடகம் என பல கலைஞர்கள் வாழும் ஊராகும். ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் சீரும்சிறப்புமாக நடத்தி வருகிறார்கள். புரட்டாசி மாதம் விஜயதசமி அன்று திருவீதி உலாவும், நவராத்திரி அம்பாள் அலங்காரமும் ஒன்பது நாள் பூஜையும் சிறப்பாக இருக்கும். இன்னும் மார்கழி மாதம் திருப்பாவை, திருவெண்பாவை பாடி பஜனைகள் நடத்துவார்கள். தை இரண்டாம் நாள் திருவிழாவில் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்திலும், ஸ்ரீ வீரபத்திரஸ்வாமி ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா வரும் காட்சி காண கண்கோடி வேண்டும். [/size]

[size=3]இந்த ஊரில் நரசிம்ம பெருமாளின் இரண்யன் நாடகம் மிகவும் புகழ் பெற்றது. காலம்காலமாக இம்மக்கள் நடித்து வருகிறார்கள். இந்நாடகத்தை தை மாதம் நடத்துவார்கள். இதில் நடிக்கும் நடிகர்கள் பாடி ஆடி மிகவும் தத்ரரூபமாக நடிப்பார்கள். இந்த நாடகத்தை பார்க்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். இன்றுவரை இந்நாடக கலையை காப்பாற்றி காத்துவரும் கலைஞர்கள் பலர் உள்ள இவ்வூரானது கொங்கு நாட்டின் பக்தியில் சிறந்த பகத்தூராகும்.[/size]

(புலம்பெயர் மக்கள் இப்ப ஐயப்பனை வணங்குவதால் திருவெண்பா வை மறந்து விட்டார்கள் அதனாலே இந்த தொகுப்பை வெளிவிடுகிறேன் நன்றி இணயங்கள்)

Share this post


Link to post
Share on other sites