Jump to content

பெண்கள் ஏன் இப்படி..??!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்காக விடையாகவே அநாவசிய இடங்களில் அநாவசிய கதை தவிர்ப்படுதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்லது என்பது சொல்லப்பட்டது. இது ஒரு கருத்து. இதற்குள் ஆணாதிக்க வெளிப்பாடு என்பது பெண்களின் தவறுகளை இன்னும் ஆணாதிக்கப் போர்வையால் மூடிமறைக்க முற்படுவதன் விளைவு என்றே தோன்றுகிறது

இந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்றது இவ்வளவு தாமதமாய் வருகுதே ஏன்.. முதல் பெண்கள் கட்டுப்படுத்தப்பழகவேணும் ஆசைக்கு அளவுகோல் இடவேண்டும்... கம்பனி தேடிறார்கள் அப்படி என்ற கருத்துக்கள் உங்களாலையே வைக்கப்பட்டிருக்க.. நாங்கள் கேட்டதெல்லாம்.. அதென்ன பெண்கள் மட்டும் தங்களை கட்டுப்படுத்தோணும்.. அளவுகோல் இடவேணும்.. ஆண்களுக்கு கிடையாதா என்றது தானே..?? அதைத்தான் ஆணாதிக்கம் என்றோம்.. இந்த தலைப்பில சேந்து அரட்டை அடிச்ச அந்த மேலதிகாரிக்கும் தண்டனை கொடுக்கோணும்..அது தான் நியாயமாய் இருக்கும்.. :wink: :P

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற கருத்துக்களைப் பார்த்தால் நாம் தான் நாரதர் வேலையைத் தொடக்கி வைச்சு விவாதம் சூடு பிடிக்கின்றது போல கிடக்குதே! :roll:

Link to comment
Share on other sites

இதுவரை ஏன் யாரும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை

ஆணாதிக்கம் காரணமாகத்தானே சம்பள விடயத்தில ஏற்றத் தாழ்வு

தமிழ் அக்கா அன்ட் குருவி அண்ணா விவாதம் நல்லாயிருக்கு

Link to comment
Share on other sites

வருகின்ற கருத்துக்களைப் பார்த்தால் நாம் தான் நாரதர் வேலையைத் தொடக்கி வைச்சு விவாதம் சூடு பிடிக்கின்றது போல கிடக்குதே! :roll:

என்ன தூயவன் சமையல் வேலையில பிஸியா இரண்டுநாளா அதிகம் காண முடியவில்லையே களத்தில அதுதான் :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஏன் யாரும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை

ஆணாதிக்கம் காரணமாகத்தானே சம்பள விடயத்தில ஏற்றத் தாழ்வு

ஓ. நீஙகள் கேள்வி கேட்டனீங்களா? பலர் அப்புக்காத்துவிடம் வாயைக் கொடுப்பான் ஏன் என்று மௌனமாக இருக்கினம் போல. :wink: :P

Link to comment
Share on other sites

நித்திலா எழுதியது:

இதுவரை ஏன் யாரும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை

ஆணாதிக்கம் காரணமாகத்தானே சம்பள விடயத்தில ஏற்றத் தாழ்வு

ஏன் சகோதரம் - சட்டத்துறையில் பயிலும் நீர் - வேணுமென்றே - இந்த கேள்வியை கேக்கிறீரா?

இல்லை வெறுப்பேத்தவா?

சிம்பிள் லொஜிக்-

வருமான ஏற்றத்தாழ்வு என்பது - பெரும்பாலும் - அடிமட்ட தொழிலாளரிடையேதானிருக்கும் ஆண் - பெண்ணிடை!

காரணம் - கடிமான வேலைகளை செய்ய - ஆண்கள் பணிக்கமர்த்தப்படுகிறார்கள் - உருவாக்கப்படும் - பொருளோ - சேவையோ - அதை - பூரணப்படுத்தும் - கடைசி கட்ட முயற்சிகளில் - பெண்கள் - பணியிலிருப்பார்கள் - !

ஊதியமும் - அதற்கேற்றவாறு - பகிரப்படலாம்!

தகமை பெற்றவர்களிடை - அது பெரும்பாலும் இருப்பதில்லை!

எந்த நாடுகளிலும்!

ஊரில - பாடசாலை அதிபரா- நிறை பெண்கள் இருக்கிறார்கள் -!

அவர்கள் பெறும் ஊதியம் - ஒரு ஆசிரியரை விட குறைவானதா?

கிளிங்டன் பதவியிலிருந்த போதும் சரி இல்லாத போதும் சரி - கில்லரி - பல நிறுவனங்களின் கணக்காய்வாளரா இருந்து பெற்ற ஊதியம் - ஓவர்!

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் எங்களுக்குள்ளையே விடை இருக்கு - அது......

எந்த நிர்வாக துறையிலும் - பெண்கள் ஆதிக்கமே நிலவும் - பெரும்பாலும் - அப்போ - அவர்களுக்கு கீழ வேலை செய்யுறவங்களை விட - சம்பளம் குறைவா? 8)

Link to comment
Share on other sites

இல்லை வர்ணன் அண்ணா

நீங்க சொல்லுற கூலி உடல் வலு அடிப்படையானது

ஆனால் நான் கேட்டது சட்டத்துறையிலயே இந்த வேறுபாடு இருக்கு அதைவிட இங்க இங்கிலாந்தில மற்ற துறைகளிலுமே இப்படியான சம்பள ஏற்றத்தாழ்வு இருப்து பலரால வெளிப்படையா ஒப்புக்கொள்ளப்பட் விடயம் ஆணாதிக்கம் இல்லை என்பவர்களால இதுக்கு உரிய பதில தர முடியுமா :roll:

தயவு செய்து ஹில்லாரி க்ளின்டன் செரி பிளேயர் போன்றவர்களை உதாரணம் காட்டாதீங்க அவர்கள் சாதாரண உழைக்கும் பெண்கள் என்ற பிரிவில வராயினம்

இது பற்றிய இணைப்பு தாறன் வாசியுங்க :arrow:

http://www.fawcettsociety.org.uk/index.asp?PageID=256

http://www.isi.salford.ac.uk/gris/depict/G...nderPayGap.html

http://www.aut.org.uk/media/pdf/j/n/equali...iesnews1104.pdf

http://news.bbc.co.uk/1/business/4753360.stm

Link to comment
Share on other sites

மேற்கோள்:

ஆனால் நான் கேட்டது சட்டத்துறையிலயே இந்த வேறுபாடு இருக்கு அதைவிட இங்க இங்கிலாந்தில மற்ற துறைகளிலுமே இப்படியான சம்பள ஏற்றத்தாழ்வு இருப்து பலரால வெளிப்படையா ஒப்புக்கொள்ளப்பட் விடயம் ஆணாதிக்கம் இல்லை என்பவர்களால இதுக்கு உரிய பதில தர முடியுமா

பலருக்கும் தெரிந்த விசயமும் ஒண்ணு இருக்கு -

அது -வேலைக்கு போகாமல் இருக்கும் பெண்களை ஃகவுஸ் வைஃவ் எண்ணுறாங்க -

ஃகவுஸ் கஸ்பண்ட் - எண்டு எங்கயும் கேள்வி பட்டு இருக்கிறீரா?

ஸோ- ஆண்களே - எல்லா குடும்ப சுமையையும் தாங்கும் நிலையில் - முதல் நூற்றாண்டு முதல் இருந்ததால் -

அதே சட்டப்பிரிவு - இன்னும் தொடருதோ என்னமோ?

இன்றுவரை -குடும்பமாய் இருந்தவர்கள் - விவாகரத்து பெற்றால் - ஆணிடம் இருந்துதான் - ஜீவனோஜபாய கட்டாய உதவி -அறவீடு -செய்யப்படுகிறது !

பெண்ணிடம் இருந்து அது நடக்குதா?

ஒரு சில புற நடைகள் தவிர்த்து?

மத்தும்படி - பெண்ணுரிமை என்பது - இன்றும் எங்க அம்மா அப்பா வை கேட்டு அறியும் தூரத்தில்தான் - மேற்குலகம் கூட வழங்கி இருக்கு - !

நூற்றாண்டு - எண்ணிக்கையில் - கணிப்பிடும் அளவுக்கு -நடந்தது அல்ல எண்டு நினைக்கிறன்!

சுருக்கமா சொல்லபோனா - பெண்ணாதிக்கம் - இன்னும் ஆண்கள் மேல தொடருது - சட்ட வடிவில் -!

என்று சொல்லலாமோ ? :wink: :roll: 8)

Link to comment
Share on other sites

ம் கூம் இன்னும் முடியவில்லையா ?

குருவிகள் என்ன நீங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பெண்கள் எதிர்ப்பாளராகவே இருக்கின்றீர்கள்.

அலுவலக அரட்டை காரணமாகத்தான் அந்தப் பெண் பதவியிறக்கம் செய்யப்பட்டாரா ? உங்களது கருத்துக்களை பார்க்கும் போது அதிகாரியில்தான் ஏதோ தவறு இருப்பதாக தோன்றுகின்றது. நீங்கள் கூறிய இன்னொரு கருத்துடன் ஓப்பிடும்போது இந்த அதிகாரியும் ஏதாவது எதிர்பார்த்து அந்த பெண்ணுடன் அரட்டை அடித்திருப்பார். அங்கு அவருடை எதிர்பார்ப்பு தோல்வியடைந்த சந்தர்ப்பத்தில் அவர் அந்த பெண் அரட்டையடிக்கின்றார் என்று கூறி பதவியிறக்கம் செய்திருக்கலாம்.

பெண்கள் கதைப்பார்கள்தான். நான் இல்லை என்று சொல்லவில்லை. தெரியாக ஆண்களுடன் எந்தப் பெண்ணுமே அரட்டை அடிக்க மாட்டாள். நன்றாக பரிச்சயமான ஒருவர் என்றால் நன்றாக கதைப்பார்கள். அதில் தவறும் இல்லை.

ஓருவரின் பலவீனத்தை மற்றவர் தனது பலமாக பாவிப்பது ஆண்களின் பக்கம் நிறைய இருக்கின்றது ( ஆண்கள் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள். நான் கண்ட கேட்ட சில தகவல்களின் அடிப்படையில் சொல்கின்றேன்) பெண்கள் என்றால் அவர்களை சகோதர உணர்வுடன் பார்க்கும் பக்குவம் ஆண்களிடம் இருப்பது குறைவு. அதுவும் பதவியில் இருப்பவர்கள் நாங்கள்தான் கடவுள் நாம்தான் எல்லோரையும் படைத்தோம் என்ற மமதையில்தான் வாழ்கின்றார்கள். ( ஓரு சில தீயவர்கள்தான்)

எந்த ஒரு பெண்ணும் ஆணும் தங்கள் பால்காhரரைப் பற்றி எதிர்ப்பாலர் தரக்குறைவாக கதைப்பதை பொறுத்திருக்கமாட்டார்கள். அந்த பெண் அரட்டைக்கு காரணமாக இப்போது இங்கு அரங்கேறிக்கொண்டிருக்கும் பெண்கள் தரக் குறைவானவர்கள் என்ற விவாதம் அந்த மேலாளருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே நிகழ்ந்திருக்கலாம். அதனால் அந்த பெண் நிறைய நிறைய கதைத்திருக்கலாம். ஆண்கள்தானே எதையுமே பொறுமையுடன் கடைப்பிடிக்கமாட்டோம். சறுக்குகின்றோம் என்று தெரிந்தால் எதிராளியை மட்டந் தட்டி விடுவோமே

Link to comment
Share on other sites

நன்றி பரணி அண்ணா நீங்க சொல்வது உண்மைதான் அதேபோல பெண்களிலும் சரி ஆணடகளிலும் சரி நீங்க சொல்லுற மாதிரி கெட்டவர்களும் இருக்கினம் நல்லவர்களும் இருக்கினம்

வர்ணன் அண்ணா நீங்க சொல்லுற மாதிரி பெண்களுக்கு மட்டும் தான் விவாக முறிவுக்கு பிறகு மெயின்டனன்ஸ் (நீங்க சொன்னது இது தானே) கொடுக்க படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து

திருமணமோ அல்லது சிவில் பார்ட்னர்சிப்போ(for same sex couples or people who do not want to get married but have financial dependancy on each other) முடிவுக்கு வரும் போது ஒருவர் தனது துணையிடம் இருந்து (வடிவா பாருங்க ஆண் பாலோ பெண்பாலோ பாவிக்கவில்லை :wink: )மெயின்டனன்ஸ் பெற விரும்பினால் கோட்டுக்கு அப்ளை பண்ணலாம்

கோர்ட் இருவரது நிதி நிலமை வருமானம் கடன் பென்சன் அரேன்ஜ்மென்ட் இவற்றை ஆராய்ந்து முடிவு எடுக்கும்

இங்க எந்த இடத்திலும் பெண்ணுக்கு மட்டும்தான் சார்பாக எதுவும் சொல்லப்படவில்லையே :roll:

அடுத்து என்ன கேட்டீங்க ஹவுஸ் ஹஸ்பண்டா ஆண்களில எத்தனை பேர் வேலைக்கும் போய் வீட்டிற்கு வந்து வீட்டு வேலை செய்யினம் :?:

பெண்கள் மட்டும்தானே இரண்டு வேலையும் செய்யவேண்டும் (புலத்தில நிலமை கொஞ்சம் மாறி வருகுது தான் கடையில சாப்பாடு வாங்கலாம் :oops: ஆனால் மற்ற வேலைகள் இருக்கும் தானே) :wink: :P

Link to comment
Share on other sites

உந்த சமைகிற விசயத்தை ஒத்துக் கொண்டதற்கு நன்றி ,இன்னும் மிச்சம் இருகிறது பிள்ளை பெறுறது ,

மட்டும் தான் எண்டு நினக்கிறன்.ஏனெண்டா ஏற்கனவே உடுப்புத்துவைக்க,சுத்தம் செய்ய மெசின் இருக்கு இல்லாட்டி கணவர் மார் இருக்கினம்.

உதையும் ஆண்கள் செய்யிற மாதிரி இருந்தா சமத்துவம் தான்... :wink: :lol:

Link to comment
Share on other sites

நீர் சொன்ன முதல் விடயமும் - சட்ட பூர்வமா - அங்கீகரிக்க - படவில்ல !-

இன்றும் கூட - வளர்ந்து விட்ட நாடுகளில் !

அதை விடுவம் .........

அடுத்த விசயம் - திருமணம் செய்ய விரும்பாதவர்கிளிடமும் -

நிதி விடயத்தில் - தங்கி வாழும் - நிலமை

ஒருவரில் ஒருவர் -இருக்கு!

அதைதானே சொல்ல வந்தீர்?

அதைதானே முக்கி முக்கி சொன்னன் சகோதரம் - ஒரு சில புற நடைகள் தவிர்த்து என்று! :? :roll: 8)

Link to comment
Share on other sites

வர்ணன் அண்ணா எது சட்டபூர்வமா அங்கீகரிக்கப்படவில்லை மெயின்டனன்ஸ் கொடுக்கிறதா

ஆணும் பெண்ணும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழ்வது (நிதி விடயததில) பிழை எண்டு நான் சொல்லவில்லையே நீங்க சொல்லுற மாதிரி பெண்கள் மடடுமே ஆண்களில தங்கி வாழ்வதாக சொன்னது தான் பிழை என்கிறேன்

Link to comment
Share on other sites

பொதுவாக பெண்கள் தங்கள் பக்க தவறுகளை நோக்காமல் தவறு செய்துவிட்டு ஆண்கள் மீது ஏன் பழியைப் போட்டு தப்பிக்க முயல்கின்றனர்..அல்லது தங்களை சுத்தவாளிகளாக காட்ட முயல்கின்றனர்..!

1000¾¢ø ´Õ Å¡÷ò¨¾ :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணும் பெண்ணும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழ்வது (நிதி விடயததில) பிழை எண்டு நான் சொல்லவில்லையே நீங்க சொல்லுற மாதிரி பெண்கள் மடடுமே ஆண்களில தங்கி வாழ்வதாக சொன்னது தான் பிழை என்கிறேன்

எங்கையம்மா! பெண்கள் ஆண்களில் தங்கிவாழ்வது சொல்லப்பட்டிருக்கின்றது! என் கண்ணுக்குள் வர்ணன் அப்படிச் சொன்னது காணவே இல்லையே!! :roll: :roll:

Link to comment
Share on other sites

எங்கையம்மா! பெண்கள் ஆண்களில் தங்கிவாழ்வது சொல்லப்பட்டிருக்கின்றது! என் கண்ணுக்குள் வர்ணன் அப்படிச் சொன்னது காணவே இல்லையே!! :roll: :roll:

உஙகட கண்ணில ஏதும் பிழையோ தெரியேல்லை எதுக்கும் ஒரு நாளைக்கு ஒரு கரட் சாப்பிட்டு பாருங்க அப்பவும் தெரியாட்டி கண்வைத்தியரை பாருங்க (அவராவது உங்கட கண்ணுக்கு தெரிஞ்சா சரி இல்லாட்டி ஒரு கறுப்பு கண்ணாடியும் கைதடியும் வாங்குங்க ) :wink: :P

Link to comment
Share on other sites

இன்னும் மிச்சம் இருகிறது பிள்ளை பெறுறது ,

மட்டும் தான் எண்டு நினக்கிறன்.

உதையும் ஆண்கள் செய்யிற மாதிரி இருந்தா சமத்துவம் தான்... :wink: :lol:

காசு இருக்கிறவை எதிர்வரும் காலங்களில் The Island படத்தில் வந்த மாதிரி subcontract பண்ண வேண்டியது தானே. :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.