Jump to content

வேப்பம் பூ வடகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேப்பம் பூ வடகம் இதுவரை செய்து பார்க்கவில்லை, இப்பதான் கஷ்டப்பட்டு ஒரு கன்று வளர்த்துவிட்டேன். பூ பூக்க தொடங்கிவிட்டது, செய்முறை தேடி பார்த்தபோது கிடைத்த து, உங்களுக்கு பாவற்றகாய், ..இப்படி ஏதாவதில் செய்யும் முறை இருந்தால் தரவும்

யாழ்ப்பாண மக்களின் உணவு வகைகளில் வேம்புக்கு முக்கியமான இடம் உண்டு. பொதுவாக இலையுதிர் காலத்தில் வேம்பின் இலைகள் முற்றாக உதிர்ந்துவிடும்.

இலை தளிர் காலத்தில் சிறிய சிறிய புதிய வேப்பம் இலைகளோடு கொஞ்சம்.. கொஞ்சமாக வேம்பம் பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது வேப்ப மரங்களைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

வேப்பங் காற்று உடலுக்கும் மனதுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மருத்துவ ரீதியாக சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது என தற்கால விஞ்ஞானிகளால் கூட நிரூபிக்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேம்பு மருத்துவ குணம் கொண்ட ஒரு மரமாகும். அதன் எல்லாப் பாகங்களும் பயன் தர வல்லன.இனி வேப்பம் பூ வடகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கொத்தாகப் பூத்திருக்கும் வேப்பம் பூக்களை பறித்து, பனை ஓலைப் பாயில் நல்ல வெய்யிலில் காய வைத்து, நன்றாக உதிர்த்து எடுக்க வேண்டும்.நல்ல பொல.. பொல…என்று பூ வரும் போது வடகம் போடலாம். தண்ணீர்ப் பதமாக இருந்தால் வடகம் சக்குக் கட்டிவிடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

அடுத்து உழுந்து ஒரு கொத்து எடுத்து நன்றாக ஊறவைத்து, தோல் நீக்கி, கழுவி, வடைப் பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

நன்றாக காய்ந்த வேம்பம் பூவை எடுத்துக் கழுவி, வெள்ளைத் துணியால் தண்ணீர் வடித்து வைக்கவும். உழுந்துக்கு சரிக்குச் சரி வேப்பம் பூ எடுக்கவும்.

அரைத்த உழுந்துடன் தேவையான அளவு உப்பு, கழுவி வடித்து வைத்த வேம்பம் பூ, பெருஞ்சீரகம், சிறிதாக வெட்டிய வெங்காயம் – பச்சை மிளகாய் – கருவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் கைகளால் சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வடைக்குத் தட்டுவது போல தட்டி ( பூவரசம் இலையிலும் வைத்துத் தட்டலாம்) பனை ஓலைப்பாய் அல்லது சுளகில் நிரைக்கு அடுக்கி வைத்து, நல்ல வெய்யிலில் காய வைக்க வேண்டும். நன்றாக திருப்பித் திருப்பிக் காய வைத்தால் வடகம் பழுதடையாது.

04102011kaipakkuvam2.jpg?w=630

குறிப்பு – வெய்யில் காலங்களில் செய்து மண் பானையில் சேமித்து வைத்த வடகங்களை வருடம் முழுவதும் பயன்படுத்துவார்கள். குறிப்பாக மாரி காலங்களில் வடகம், உப்பு மிளகாய், ஊறுகாய் போன்றவற்றின் பயன்பாடு மிகவும் அத்தியாவசியமானதாகும்

http://newpungudutivu.wordpress.com/2011/10/04/வேப்பம்-பூ-வடகம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகம், என்னும் போது... வாயூறுது.

இங்கு... வடகம் என்றால்.. என்ன?

என்று... கேட்டால்...

வட், ஆர்.. யூ ஆஸ்கிங்?

என்று... கேட்கும், காலமிது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், எங்கை தான் இதுகளைத் தேடித் பிடிக்கிறீங்களோ?

அடுத்தது,' பினாட்டு' செய்முறையோ? :D

நானும் ஒரு வேம்பு வளத்தன்! வருசத்துக்கு மூண்டு இல்லை மட்டும்!

அடுத்த வருசத்துக்கு, முதல் மூண்டு இலையையும் கொட்டிப் போட்டு, இன்னொரு மூண்டு இலை!

தகவலுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், எங்கை தான் இதுகளைத் தேடித் பிடிக்கிறீங்களோ?

அடுத்தது,' பினாட்டு' செய்முறையோ? :D

நானும் ஒரு வேம்பு வளத்தன்! வருசத்துக்கு மூண்டு இல்லை மட்டும்!

அடுத்த வருசத்துக்கு, முதல் மூண்டு இலையையும் கொட்டிப் போட்டு, இன்னொரு மூண்டு இலை!

தகவலுக்கு நன்றிகள்!

நன்றி தமிழ்சிறி & புங்கையூரன்.

பனம் பழம் பினைத்து & பினாட்டு ஊரில் சாப்பிட்டனாங்கள் தேங்காய் சொட்டுடன், நாவுறுது, நீங்க ஞாபகப்படுத்த.

புங்கையூரன், குளிர் காலத்தில் பொலித்தீன் சீற்றால் மூடி கட்டிவிடுங்கள், நன்றாக வளரும்.

Link to comment
Share on other sites

நானும் ஒரு வேம்பு வளத்தன்! வருசத்துக்கு மூண்டு இல்லை மட்டும்!

அடுத்த வருசத்துக்கு, முதல் மூண்டு இலையையும் கொட்டிப் போட்டு, இன்னொரு மூண்டு இலை!

வெளிநாட்டில வேம்பு வளர்த்து வடகம் செய்யிறது.. ஊரில பனை வளர்த்து கள்ளுக்குடிக்கிற மாதிரி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், எங்கை தான் இதுகளைத் தேடித் பிடிக்கிறீங்களோ?

அடுத்தது,' பினாட்டு' செய்முறையோ? :D

நானும் ஒரு வேம்பு வளத்தன்! வருசத்துக்கு மூண்டு இல்லை மட்டும்!

அடுத்த வருசத்துக்கு, முதல் மூண்டு இலையையும் கொட்டிப் போட்டு, இன்னொரு மூண்டு இலை!

தகவலுக்கு நன்றிகள்!

தலைமுடியா! :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

என்ன அவுஸ்திரேலியாவில் வேம்பா?! வடகம் வேற..

எங்க வீட்டில் இன்னமும் வேம்புக்கு காலம் வரவில்லை.

ஒவ்வொரு பனியோடும் போய்விடுகிறது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன அவுஸ்திரேலியாவில் வேம்பா?! வடகம் வேற..

எங்க வீட்டில் இன்னமும் வேம்புக்கு காலம் வரவில்லை.

ஒவ்வொரு பனியோடும் போய்விடுகிறது :(

 

தூயாவை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.

 

தூயா, Karratha, WA இல் வேலைக்கு போன இடத்தில் வேப்பமரம், புளியமரம், தேக்கமரம், அருளிமரம், தென்னைமரம்...எல்லாம் நிற்பதைக் கண்டேன்.

 

ஒருநாள் போய் வேப்பமரத்துக்கு கீழிருந்து விழுந்த விதைகளை அள்ளி பொறுக்க வெள்ளைகள் என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு போனார்கள், 3 மணித்தியலத்திற்க்கு மேல் ஆறுதலாக மரத்துடன் பழைய நினைவுகளை சாய்ந்திருந்து மீண்டுவிட்டு, போகிற வழியில் புளியம்பழங்கள் கேட்பாரற்று தொங்கிகொண்டிருக்க அதையும் இன்னுமொரு சொப்பிங் பையில் பிடுங்கிகொண்டு வீடு கொண்டு வந்தேன், அந்த கொட்டைகளில் முளைக்க போட்டு ஒன்று நன்றாக வளர்ந்துவிட்டது இப்ப.

 

Brisbane இலும் இவையிருக்கு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடகம் மிகவும் சுவையானது மட்டுமல்ல தேக ஆரோக்கியத்திற்கு உகந்ததும்.அண்மையில் ஒருவர் தான் வேப்பம் பு+வை இலங்கையில் இருந்து பொதியில் வரவைத்து இங்கு வடகமாக்குவதாக சொன்னார்.எனக்கு மிகவும் பிடித்தமானது வடகம்.

 இணைப்பிற்கு நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • 5 years later...

இலங்கை ஸ்டைலில் வேப்பம் பூ வடகம் செய்வது எப்படி?

இயற்கையின் வரப்பிரசாதமாக கருதப்படும் மரங்களின் ஒன்று தான் வேப்பமரம்.

இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை.

அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவகுணம் அதிகமாகவே உள்ளது.

வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூ அருமருந்தாகும்.

இதனை வடகம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் உகந்தது.

தற்போது இலங்கை ஸ்டைலில் வேப்பம் பூ வடகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

 

 

 

http://news.lankasri.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2012 at 12:04 PM, உடையார் said:

3 மணித்தியலத்திற்க்கு மேல் ஆறுதலாக மரத்துடன் பழைய நினைவுகளை சாய்ந்திருந்து மீண்டுவிட்டு,

ம்ம்ம் ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.