Jump to content

மாவீரர்தினம் எதற்காக.....


Recommended Posts

[size=5]யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. [/size]

[size=5]உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. [/size]

[size=5]சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?.

விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும்.

போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.[/size]

[size=5]ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்படலாம்..ஆனால் விடுதலைக்கான போராட்டம் நிறுத்தப்படக்கூடாது என்பதனை நினைவுறுத்தும் நாள்தான் இந்த மாவீரர்தினம்.

எமை அழிக்கும் சிங்களமும், போர்க்குற்றத் தடியேந்தும் வல்லரசாளர்களும் ஒன்று சேர்ந்து , சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டை கைவிடுங்களென்று வலியுறுத்துவதை, ஏற்கமாட்டோமென உறுதிபூணும் நாளே இம்மாவீரம்தினம்.

மாவீரர்கள் போராடிப்பெற்ற இறைமையை, உலகறியச் செய்வோம் என்பதனை உரத்துச் சொல்லும் நாள் இது.

13 இற்குள் இணைந்து போதல், 19 இற்குள் சரிந்து போதல் சரியென்று வாதிடுவோர் மாவீரர்களை நினைவுகூரத் தேவையில்லை.

77 இல் மக்கள் இட்ட ஆணை, போர்நிறுத்த காலத்தில் அங்கீகரிக்கப்படாத அரசாக பரிணாமம் அடைந்தது. அதன் இறைமையை ,சமாதானம் பேசிய வல்லரசாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இருப்பினும் ,போராடிப்பெற்ற இறைமையை, பேசிக்கொண்டே அழித்தார்கள். 'முழு நாட்டிற்குமான சிங்களத்தின் இறைமை' என்கிற பேரினவாத அரசியல் கருத்தியல், தமது பிராந்திய நலனுக்கு தேவையாக இருப்பதால், தமிழ்தேசிய இனத்தின் இறைமையை சிதைப்பதற்குத் துணை போனார்கள்.

ஆனாலும் அழிக்கப்படவில்லை எம்மினம் போராடிபெற்ற இறைமை.

இதன் நீட்சியே தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்ட நகர்வாக இருக்க வேண்டும்.

அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு என்பன தேசிய இன முரண்நிலையைத் தீர்க்கும் என்போர் , தமிழ் தேசத்தின் இறைமையை மறுப்பவர்களாகவே கருத வேண்டும்.

சிங்களத்தின் இறைமையைப் பகிர்ந்து கொள்வதுதான் அதிகாரப்பகிர்வா?.[/size]

[size=5]ஒற்றையாட்சி என்பது , சிங்களத்தின் முழு இலங்கைக்குமான இறைமையை ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்படுவது.

ஆகவே ,'சிங்களத்தின் ஒற்றையாட்சிக்குள் சுயாட்சி' என்பது அடிப்படையில் தவறான அரசியல் கருத்தியல் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமல்ல .[/size]

[size=5]இறைமையுள்ள இரு தேசங்கள் என்பதன் அடிப்படையில் சுயாட்சி பற்றி பேசலாம். ஆனால் அதற்கும் சிங்களம் இணங்காது என்பதைப் புரிந்து கொள்ளாமல் ,இணக்கப்பாட்டு அரசியல் முயற்சிகளில் ஈடுபடும் தமிழர் தரப்புக்கள் ,எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதனை பல ஒப்பந்தக் கிழிப்புகள் எமக்கு உணர்த்துகின்றன.[/size]

[size=5]விலைபோகாத கல்லறைகள் எமக்கு இடித்துரைக்கும் செய்தி இதுதான்.

'போராடினால் பெறுவாய் விடுதலை' என்பது வரலாறு எமக்களித்த வரம்.[/size]

[size=5]'சுயநிர்ணய உரிமை கோரும் பயங்கரவாதிகள் ' என்பதே வல்லரசாளர்கள் எமக்கு வழங்கும் கலாநிதி பட்டம்.[/size]

[size=5]ஆகவே கல்லறைச் செய்திகள் சொல்லும் , எளியோரை வலியோராக்கும் சாத்தியங்களைத் தேடுங்கள்.[/size]

[size=5]மக்கள் சக்தியின் முன்னால் , மாபெரும் சாம்ராஜ்யங்கள் அடிபணிந்து போனதை கவனியுங்கள்.[/size]

[size=5]இயங்காமல் இருப்பது மாற்றத்தைக் கொண்டு வராது. இயங்கு தளத்தினை அழிப்பதுதான் ஒடுக்குமுறையாளனின் நோக்கம்.[/size]

[size=5]அடிபணிவு அரசியல் முழு இனத்தையும் அழித்துவிடும். எம்மினம் அழியப்போகிறதா ,இல்லையேல் மீண்டும் நிமிரப்போகிறதா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருப்பது தவறு. அதைவிடத் தவறு , ஒடுக்குபவனின் தோளைப் பற்றிப் பிடித்து எழுவது.

நம் மாவீரர்கள் பற்றிப்பிடித்தது, ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமையை.

அவர்களின் இலட்சியம் தோற்கடிக்கப்படவில்லை. இலட்சியம் நிறைவேறும் போதுதான் அவர்களை வரலாறு பதிவு செய்யும்.[/size]

[size=5]அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?.[/size]

[size=5]- ஆக்கம் இதயச்சந்திரன் [/size]

  • Like 1
Link to comment
Share on other sites

[size=5]மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை

மண்ணாய் நிலைகுமையா

ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில்

அனலே முளைகுமையா[/size]

252375_351944738234429_1154724371_n.jpg

[size=5](முகநூல்) [/size]

[size=5]புழுதி நடனங்கள் காலில் உருவாக்கி

ஊர்கள் உருவெடுத்து போகும்

இன்னும் நேரப்போழுதாகி தீப ஓளி வெள்ளம்

தாயின் மடிஎங்கும் பரவும் ...[/size]

483592_351917444903825_169089907_n.jpg

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

[size=5]நாளை தமிழீழ தேசம் ஆவதென்று

கூறிக் களமாடினார்கள்

இவர் மூடும் குழிக்குள்ளே தேசப் படம்

ஒன்றை கீறி உயிர் வாழ்கிறார்கள்[/size]

602476_351918798237023_1918292631_n.jpg

[size=5]புயலாகி மானத்தின் புலியானவர்கள்

வேங்கையாகி பகை மீது நெருப்பனவர்கள்

அழகான மலராகி உறவாகினார்கள்

இன்று எம்மை அழவைத்து பிரிந்தாகினார்கள்[/size]

155937_351939218234981_1913567844_n.jpg

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Edited by விசுகு
Link to comment
Share on other sites

https://www.youtube.com/watch?v=TGHgOEtpRUE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.