Jump to content

இன்று மாவீரர் நாள் 27 /11 /2012


Recommended Posts

இன்று மாவீரர் நாள் 27 /11 /2012

தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்ச்சியத்தை உயிர் மூச்சாய் கொண்டு களமாடி வித்தாகி போன எங்கள் காவல் தெய்வங்களை நெஞ்சங்களில் நிறுத்தி பூசிக்கும் நாள்

தமிழினத்திற்கு என்று அடையாளம் தந்து உறங்கி கொண்டிருக்கும் புனிதர்களின் நாள்

அடக்கு முறைக்கு எதிராக ஆயிரம் ஆயிராமாய் வெகுண்டெழுந்து ஆலமரமாய் எங்கள் நெஞ்சங்களில் இருக்கும் ஆத்மாக்களின் நாள்

காடு மலை மேடு பள்ளம் புயல் மழை என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழினத்திற்கு வெற்றி தேடி தந்த எங்கள் கண்மணிகளின் நாள்

தங்கள் ஆசைகள் கனவுகள் எல்லாம் சுதந்திர தமிழ் ஈழமே என்ற உன்னதமான கனவுகளுடன் உறங்கிப்போன எமது தேசப்புதல்வர்களின் நாள்

இந்த உன்னத மான புனிதமான நாளிலே அந்த மாவீரர்களை எமக்குள் நிறுத்தி தமிழ் இனத்தின் விடுதலையை அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க யாழ் கள உறவு ஆகிய நான் மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்துகொள்கின்றேன்.

  • Like 4
Link to comment
Share on other sites

இந்த உன்னதமான புனிதமான நாளிலே அந்த மாவீரர்களை எமக்குள் நிறுத்தி தமிழ் இனத்தின் விடுதலையை அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க யாழ் கள உறவு ஆகிய நான் மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்துகொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

Link to comment
Share on other sites

[size=1]

[size=5]எமதினத்தின் மனித உரிமைகளுக்கான சுயநிர்ணய உரிமையை மீண்டும் பெற்றுத்தர தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்த மாவீர செல்வங்களுக்கு சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!![/size][/size]

[size=1]

[size=5]நாம் ஒற்றுமையாக உழைத்து தமிழீழ அரசை நிறுவுவோம் என உறுதி எடுத்துக்கொள்ளுகின்றோம்.[/size][/size]

[size=1]

[size=5]தமிழினத்தின் தாகம் தமிழீழ தாயகம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரித்த இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

உலகமே தமிழனத்தை திருப்பி பார்க்க வைத்த மாவீரர்களே உங்களுக்கு வீர வணக்கங்கள்.

உங்கள் இலட்சிய கனவுகள் நிறைவேறும் நாள் வெகு தூரமில்லை

Link to comment
Share on other sites

உங்கள் இலட்சியத்தை சிலுவையாக சுமந்து நாம் எம்முயிர் உள்ளவரை பயணிப்போம்

உயிர் கொடுத்த மாவீரர்ளுக்கு வீரவணக்கம்

Link to comment
Share on other sites

561620_441341472612405_1861635727_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை நோக்கிய பாதையில்,

விதையாகி வீழ்ந்து விட்ட,

வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும்,

சிரம் தாழ்த்திய, வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

தமது இன்னுயிரை தமிழ் மண்ணுக்காக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

இந்தப்புனிதமான நன்னாளில் அப்பழுக்கற்ற மண்ணின் மைந்தர்களை எந்த அமைப்பு என்ற குறுகிய வட்டத்துள் ஒடுங்காமல் நினைவு கூறுவோம்.

எந்த அமைப்பைச் சேர்ந்தோராயினும் உங்கள் தியாகங்களுக்கு தலை வணங்குகிறேன்.

உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக உணர்வுடன் புறப்பட்டீர்.

அஞ்சலிகள். அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

தமிழர் விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தேசத்தின் வீரப் புதல்வர்களே விழிநீர் சிந்தி உங்களை வணங்குகின்றோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

[size=4]தமிழர் விடுதலைக்காக போரா[/size][size=4]டி[/size][size=4]ய [/size][size=4]மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maaveerar_2012_pa.gif

கொண்ட கொள்கையில்... இறுதிவரை, உறுதியாக நின்று... தம் இன்னுயிரை தாயக விடுதலைப் போருக்கு...

அர்ப்பணித்த மாவீரச்செல்வங்களின் கனவு நிறைவேற.. ஒற்றுமையாக உறுதி பூண்போம்.

Link to comment
Share on other sites

த‌மிழ்வீர‌ம் மாவீர‌ர்க‌ளுக்கு வீர‌வ‌ண‌க்க‌ங்க‌ள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]காலத்தால் செதுக்க பட்ட சிலைகள் அல்ல நீங்கள்.[/size][size=1]

[size=4]ஒரு காலத்தை செதுக்கிய சிற்பிகள்![/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது சுதந்திர வேள்வியின் தூண்களாய் நிற்கும் மா வீரர்களே!

உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகிறது.

உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகிறது .

உங்கள் தியாகத்தால் எங்கள் தேசம் உருவாக்கம் பெறுகிறது.

உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகிறது.

எங்கள் தேச சுதந்திரத்தின் சிற்பிகளாகிய உங்களை

சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்.

உம் வழியில் நாமும் ஒற்றுமையாக எமது தேச விடுதலைக்கு

உழைப்போமென இந்த உன்னத நாளில் உறுதி பூணுகிறோம்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள், முகம் தெரியா கரும்புலிகள், நாட்டு பற்றாளர்கள், இதுவரை வெளியிடபடாத மாவீரர்கள், இறுதி போரில் போராளிகள் தோள் நின்று தங்களை மாய்த்த பொதுமக்கள் அனைவருக்கும் எனது மாவீரர் நாள் நினைவு வீர வணக்கங்கள் ..!!

Link to comment
Share on other sites

தமிழினத்தின் விடுதலைக்காய் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.