Sign in to follow this  
shanthy

நீங்கள் பிறந்த இந்நாள்

Recommended Posts

(இரண்டு வருடங்களின் முன்னர் இதே நாளில் எழுதிய கவிதையிது)

[size=6]நீங்கள் பிறந்த இந்நாள் [/size]

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Friday, November 26, 2010

Prabaharan01.png

மெளனங்களாய்

உங்கள் நினைவேந்திக்

கரைகிறது இந்நாள்…..

முப்பதாண்டுத் தவம்

முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு

மூச்சறுந்த நிலையில் எல்லாம்

உறைந்து போய்க் கிடக்கிறது……

வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம்

வரலாறாய் பதித்துவிட்டு

வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே

வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில்

இந்த மெளனங்களும் ஊகங்களும்

வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது…..

உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில்

இப்போ நல்ல மழை பெய்கிறது…..

நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை

உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்…..

உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு

உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு

உயிர் கொடுக்கப் போனவர்கள்

தவிர்க்க முடியா நிலையில் தடம்மாறிப் போனதில்

பிழைகாணும் வீர(ண)ர்கள்

இடுகின்ற ஊழைகளில் உண்மையும்

நீதியும் உயிர் சிதைகிறது….

உண்மையாய் வாழ்ந்தோரை

இந்த ஊனக்கண்களும்

உக்கிய வாய்களும்

ஈவிரக்கமின்றிச் சப்பித் தின்கிறது…..

நீங்களாய் மாற நிறையவே நரிகள்

பந்தயமிடுகிறது அங்கும் நீங்களே பொன்வாத்து….

நீங்கள் பிறந்த இந்நாள்

வருடாவருடம் வந்து போன

நாட்கள் போலில்லை…..

என்றுமே உணர்ந்திராத

வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

பொங்கிடும் எண்ணங்கள் பெருக்கெடுக்க

உங்கள் சிரித்த முகம் தாங்கிய ஒளிப்படம் முன்

மெளனக்கண்ணீர் வடிய மெளனமாகிறோம்…..

26.11.10

[size=6]http://mullaimann.blogspot.de/2010/11/blog-post_26.html[/size]

  • Like 6

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் பிறந்த இந்நாள்

வருடாவருடம் வந்து போன

நாட்கள் போலில்லை…..

என்றுமே உணர்ந்திராத

வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

தனது தனிவாழ்வில் தனது பிறந்த நாளையே கொண்டாடாத ஒரு தலைவனுக்கு மற்றையவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது முரண்நகையாக உள்ளது சாந்தி .

Share this post


Link to post
Share on other sites

தனது தனிவாழ்வில் தனது பிறந்த நாளையே கொண்டாடாத ஒரு தலைவனுக்கு மற்றையவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது முரண்நகையாக உள்ளது சாந்தி .

[size=4]தனிப்பட்ட ரீதியில் ஒரு குடிமகன் கொண்டாடுவது இல்லை வாழ்த்துவதில் எந்த பிழையும் இல்லை. அது அவர்கள் சுதந்திரம்.[/size]

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

விழித்தெழும் காலம் வரும் வரைக்கும்,

வலி தானே எங்கள் வாழ்வு!

நன்றிகள், சாந்தி!

Share this post


Link to post
Share on other sites

தனது தனிவாழ்வில் தனது பிறந்த நாளையே கொண்டாடாத ஒரு தலைவனுக்கு மற்றையவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது முரண்நகையாக உள்ளது சாந்தி .

தனக்காக பிறந்தநாளளையோ தனக்கான வாழ்வைவோ நினைக்காது தமிழினத்துக்காக வாழ்ந்தவரை மற்றவர்கள் மதிப்பதும் துதிப்பதும் தவறில்லையே கோமகன். அது ஒவ்வொருவரும் அவர்மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு. காந்தியை தேசத்தந்தையென்கிறது இந்தியா. காந்தியின் பிறந்தநாளை இந்தியா கொண்டாடுகிறது. அதுபோல உலகில் பல தலைவர்களை அந்தந்த இனத்துக்காக வாழ்ந்தவர்களின் பிறந்நாளை அவர்கள் மீதான அன்பின் வெளிப்பாடாகவும் அவர்களை ஞாபகப்படுத்தும் விதமாகவும் கொண்டாடுவது தப்பில்லை.

விழித்தெழும் காலம் வரும் வரைக்கும்,

வலி தானே எங்கள் வாழ்வு!

நன்றிகள், சாந்தி!

வலிகளிலிருந்தே புது வழிகள் பிறக்கிறது. அதுவரை காத்திருப்போம் புங்கையூரான்.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் பிறந்த இந்நாள்

வருடாவருடம் வந்து போன

நாட்கள் போலில்லை…..

என்றுமே உணர்ந்திராத

வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

 

 

நான்கு வருடங்கள் நகர்ந்து போய் விட்டன!

 

ஆனாலும், வலிகள் மட்டுமே,

வாழ்க்கையாகிப் போய்விட்ட நிலையில்,

வாழ்க்கை தொடர்கின்றது! :o

 

இன்றைய தெரிவாக, இதைத் தெரிந்தெடுத்த நியானிக்கும், சாந்திக்கும் நன்றிகள்!

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

(இரண்டு வருடங்களின் முன்னர் இதே நாளில் எழுதிய கவிதையிது)

நீங்கள் பிறந்த இந்நாள்

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Friday, November 26, 2010

Prabaharan01.png

மெளனங்களாய்

உங்கள் நினைவேந்திக்

கரைகிறது இந்நாள்…..

முப்பதாண்டுத் தவம்

முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு

மூச்சறுந்த நிலையில் எல்லாம்

உறைந்து போய்க் கிடக்கிறது……

வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம்

வரலாறாய் பதித்துவிட்டு

வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே

வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில்

இந்த மெளனங்களும் ஊகங்களும்

வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது…..

உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில்

இப்போ நல்ல மழை பெய்கிறது…..

நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை

உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்…..

உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு

உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு

உயிர் கொடுக்கப் போனவர்கள்

தவிர்க்க முடியா நிலையில் தடம்மாறிப் போனதில்

பிழைகாணும் வீர(ண)ர்கள்

இடுகின்ற ஊழைகளில் உண்மையும்

நீதியும் உயிர் சிதைகிறது….

உண்மையாய் வாழ்ந்தோரை

இந்த ஊனக்கண்களும்

உக்கிய வாய்களும்

ஈவிரக்கமின்றிச் சப்பித் தின்கிறது…..

நீங்களாய் மாற நிறையவே நரிகள்

பந்தயமிடுகிறது அங்கும் நீங்களே பொன்வாத்து….

நீங்கள் பிறந்த இந்நாள்

வருடாவருடம் வந்து போன

நாட்கள் போலில்லை…..

என்றுமே உணர்ந்திராத

வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

பொங்கிடும் எண்ணங்கள் பெருக்கெடுக்க

உங்கள் சிரித்த முகம் தாங்கிய ஒளிப்படம் முன்

மெளனக்கண்ணீர் வடிய மெளனமாகிறோம்…..

26.11.10

http://mullaimann.blogspot.de/2010/11/blog-post_26.html

 

நன்றி சாந்தியக்கா, அண்ணனில்லா வேதனைகள்.

"யாதுமானவனே... நீயில்லாக் காலைகளில் களத்திலும் புலத்திலும் நரிகள் தொல்லை தாங்கமுடியவில்லையே...."

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சினைகள் கூட இந்த நிலைமைகளுக்கு காரணமாக இருக்கலாம். சில வைத்தியர்கள் நெல்லியடி போன்ற இடங்களிலுள்ள தனியார் வைத்தியசாலையிகளில் பணத்துக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டு தங்கள் நோயாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சில பரிசோதனைகளை அரச வைத்தியசாலைகளில் இலவசமாக செய்வதாக தெரிகிறது. அதற்கும் அந்த வைத்தியர்கள் பணம் அறவிடுகிறார்களா என்று தெரியவில்லை. சில வைத்தியர்களால் நோயாளர்கள் குறித்த தனியார் வைத்தியசாலைகளில் மட்டுமே மருந்துகளை (கூடிய விலை கொடுத்து வாங்க) வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் கூறுகிறார்கள். வெளியே உள்ள மருந்தகங்களில் குறித்த மருந்துகளின் விலை குறைவு எனவும் கூறுகிறார்கள்.
    • வாழ்த்துக்கள் சேகர் சிங்கம்  தமிழ்நாடு ரோல்க் டொட். கொம் இப்ப வேலை செய்வதில்லை என நினைக்கிறன் 
    • விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.  ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவதுJuvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.  ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.  மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  எனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட). இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு. Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation ஐ குறைக்க உதவும். எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே
    • நான் ஒரு 30 வெண்டி மரங்கள் நட்டுள்ளேன் இனியும் இதான் வேலை அடுத்து பாவை ,கொச்சி , தக்காளி இப்படி வைக்க போறன் ஆனால் காணிதான் இல்லை  உரப்பைகளை பயன்படுத்துகிறேன் 
    • மனிதர்கள் அவ்வப்போது முகத்தைத் தொடுவது ஒரு பொதுப் பழக்கம். முகத்தைத் தொடுதல் என்பது தாடியைத் தடவிக்கொடுப்பது, நெற்றியில் கைவைப்பது, வியப்பிலோ அதிர்ச்சியிலோ வாயில் கைவைப்பது, மூக்கை நோண்டுதல், விரல் நகத்தைக் கடித்தல், கண்ணைக் கசக்குதல் என்று பல்வேறு செயல்களை உள்ளடக்கியது. தற்போது கரோனா கொள்ளைநோயின் பரவலையொட்டி முகத்தில் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளும்படி வலியுறுத்துகிறார்கள். கரோனா தொற்று உள்ள ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அவரைச் சுற்றியுள்ள பரப்பில் போய் அந்தக் கிருமி படியும். அதில் கை வைக்கும் இன்னொருவர் தன்னிச்சையாகத் தனது வாய், மூக்கு, கண்ணுக்குக் கையைக் கொண்டுபோவதால் கரோனா வைரஸ் அவருக்கும் தொற்றிக்கொள்ளும். இதனால்தான், முகத்தைத் தொடக் கூடாது என்பது கரோனா தடுப்பு வழிமுறைகளுள் முக்கியமான ஒன்றாகக் கூறப்படுகிறது. ஒருவர் தன் முகத்தை ஏன் தொட வேண்டும் என்ற அடிப்படையான கேள்விக்கு உளவியலாளர் நடாஷா திவாரி சொல்கிறார்: “நாம் இயல்பிலேயே அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறோம். அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதுகூட சிசுக்கள் தங்கள் முகத்தை அடிக்கடி தொடுகின்றன. முகத்தைத் தொடுவதால் நமக்கு சற்றே ஆசுவாசம் கிடைக்கிறது. சில நரம்புகளுக்கு அழுத்தம் கிடைப்பதால் அழுத்தப் புள்ளிகளை (pressure points) முடுக்கிவிடுகிறோம். அதனால், பாராசிம்பதெட்டிக் நரம்பியல் மண்டலம் ஊக்குவிக்கப்படுகிறது. அதனால்தான், நமக்கு ஆசுவாசம் கிடைக்கிறது. நாய்கள், பூனைகளும் இவ்வாறே செய்கின்றன. அதிர்ச்சி ஏற்படும்போதும், வியப்பு ஏற்படும்போதும், வருத்தமாக இருக்கும்போதும் பெற்றோர் தங்கள் முகத்தில் கை வைப்பதைக் குழந்தைகள் பார்க்கிறார்கள். அதை அவர்களும் அப்படியே பின்பற்றுகிறார்கள்.” ஒரு மணி நேரத்தில் ஒருவர் சராசரியாக 23 தடவை தங்கள் முகத்தைத் தொடுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. சமீபத்தில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் முகத்தைக் கையால் தொடாமல் இருப்பதன் முக்கியத்துவம் பற்றிப் பேசும்போது அவரை அறியாமல் முகத்தைக் கையால் தொட்டுவிட்டார். இந்த அளவுக்கு அது தன்னிச்சையானது. என்றாலும், நமக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நம் முகத்தைத் தொடும் பழக்கத்தை நிறுத்திதான் ஆக வேண்டும்.   https://www.hindutamil.in/news/opinion/columns/548606-why-we-touching-our-faces.html