Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

புலிகளின் சர்வதேச வலையமைப்பு மூன்றாக பிளவடைந்துள்ளதாம் - குதூகலிக்கிறது சிங்கள ஊடகம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Run_run_escap_seithy150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மூன்றாக பிளவடைந்துள்ளதாக கொழும்பை தளமாகக்கொண்ட சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் கூட்டாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக லண்டனில் மூன்று இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு நிலைமை உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாவீரர் தின நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளை விடவும் தோல்வியடையும்.

ருத்ரகுமாரன் தரப்பு, நெடியவன் தரப்பு மற்றும் விநாயகம் தரப்பு என புலிகள் தனித்தனியாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். ஒன்றிணைந்து நிகழ்வுகளை நடாத்துமாறு அருட்தந்தை இமானுவல் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பிரான்ஸில் வைத்து புலிகளின் தலைவர் பரிதி கொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, புலிகள் வலையமைப்பின் பிளவு அதிகரித்துள்ளதாக குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

Link to comment
Share on other sites

விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

[size=4]தாயகத்தில் மீண்டும் எழுந்துள்ள மாவீரர் உணர்வுகள் எம்மை மீண்டும் பலப்படுத்தி உள்ளன. [/size]

[size=4]புதிய உறுதியையும் ஒற்றுமையையும் தந்துள்ளன. [/size]

Link to comment
Share on other sites

சரியாய் பயப்படுகிறார்கள். வரும் மார்சில் மகிந்தா பக்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று நேருக்கு நேராக கேட்கப்படலாம். அப்போது மகிந்தாவுக்கு தர்ம சங்கடமாகும். நீதி அரசரரை மாற்றி இலங்ககைக்குள் சடையலாம். ஆனல் அது இலங்கைக்கு வெளியில் விரைவில் போக போகின்றது

Link to comment
Share on other sites

பிளவோ என்னவோ? சிங்கள அரச ஊடகமும் எங்கள் ப்ளொக்குகளும் ஆதாரம் இல்லாமல் பிளந்து கட்டுகின்றன.

சிங்கள ஊடகத்தின் நோக்கம் அது தான். ஆனால் எங்கள் தமிழர்களின் ஊடகங்கள் பல தமது பிஸ்னஸ் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக புனைகதைகளை எழுதி மறைமுகமாக சிங்களவர்களுக்கு உதவியாக உள்ளார்கள் என்பது கவலைக்குரிய விடயம். தமிழீழ அக்கறை உண்மையில் இருந்தால் பிரிந்த குழுக்களை ஒற்றுமையாக்க தமது எழுத்துகளை கட்டுரையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

சிங்கள ஊடகத்தின் நோக்கம் அது தான். ஆனால் எங்கள் தமிழர்களின் ஊடகங்கள் பல தமது பிஸ்னஸ் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக புனைகதைகளை எழுதி மறைமுகமாக சிங்களவர்களுக்கு உதவியாக உள்ளார்கள் என்பது கவலைக்குரிய விடயம். தமிழீழ அக்கறை உண்மையில் இருந்தால் பிரிந்த குழுக்களை ஒற்றுமையாக்க தமது எழுத்துகளை கட்டுரையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.

பிளவு பிளவு என கனவு காணும் சிங்களப் பயங்கரவாதிகளின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் வேலையை காலம் காலமாக அரைவேக்காட்டு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் செய்து வருகின்றனர்.

மூன்றல்ல பல பிரிவுகளாக பலமுனைத் தாக்குதல் நடக்கும்போது குதூகலம் காணாமல் போகும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகமோ, சிங்கள அரசாங்கமோ சொன்ன விடயம் உண்மைதான். அதை நாம் மறைத்துவைக்க வேண்டிய அவசியமில்லை. சில இடங்களில் ஒரேநாளில் இரு மாவீரர் நிகழ்வுகள் நடந்துள்ளன. இருபகுதியினரும் ஆளையாள் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாகச் செயற்படுகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். வெளிச்சம் எதுவோ அது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழருக்குத்தான் அது இருள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் மூன்று இடங்களில் மாவீரர் தினத்தை நடாத்தினார்கள் என்பது உண்மையே. எக்ஸெல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், முருகதாசன் திடல் என்று அழைக்கப்பட்ட இடத்தில் தலைமைச் செயலகத்தினரின் சார்பானவர்களும், Mitcham பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்( PFLT) என்று இலண்டனில் கட்சி ஒன்றைப் பதிவு செய்தவர்களும் நடாத்தினார்கள்.

எக்ஸெல் மண்டபத்தில் சந்தித்த ஒருவர் தான் மூன்று இடங்களிற்கும் போனதாகவும், முருகதாசன் திடலில் 1000க்கும் குறைவானவர்களும், Mitcham பகுதியில் 100 க்கும் குறைவானவர்களும் வந்திருந்ததாகவும் சொன்னார். மாவீரர்களுக்குப் பேதம் இல்லையென்பதால் தான் எல்லா இடங்களிற்கும் போனதாகச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

Link to comment
Share on other sites

[size=5]மூன்று மாவீரர்தின அறிக்கைகள் மீதான பார்வை[/size]

[size=4]வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தன்று மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன அவையாவன :[/size]

[size=2][size=4]1. தேசிய மாவீரர்நாள் அறிக்கை 2012 தமிழீழ விடுதலைப் புலிகள்

2. மாவீரர் நாள் அறிக்கை தலைமைச் செயலகம்

3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் அறிக்கை[/size][/size]

[size=2][size=4]இந்த மூன்று அறிக்கைகளையும் தயாரித்தவர்களின் எண்ண ஓட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன, ஆனால் கொழுக்கட்டைக்கும், மோதகத்திற்கும் உள்ள வேறுபாடுபோல உருவ வேறுபாடுகள் மட்டும் தெரிகின்றன.[/size][/size]

[size=2][size=4]இந்த மூன்று அறிக்கைகளிலும் மூன்று முக்கிய பிரிவுகளாக நோக்கலாம் :[/size][/size]

[size=2][size=4]01. அறிக்கையின் முதற் பகுதி விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் புகழ்..[/size][/size]

[size=2][size=4]02. இரண்டாம் பகுதி சிங்கள இனவாதத்தின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் படும் பாடு, இப்போது படும் அவஸ்தை, உரிமைகளைச் சிங்கள இனவாதம் வழங்காது என்ற விரக்தி, ஆகியன வரலாற்று ரீதியாக எடுத்துரைக்கப்படுகின்றன.[/size][/size]

[size=2][size=4]03. மூன்றாம் பகுதியில் உலக சமுதாயம் ஆற்றிவரும் பணிகளும், அவை வெற்றி பெறாவிட்டால் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லி, தமிழீழம் கிடைக்க தொடர்ந்தும் போராடுவோம் என்ற கோஷத்துடன் முடிவடைகிறது.[/size][/size]

[size=2][size=4]அறிக்கைகளை தயாரித்தவர்களை முதலில் பாராட்ட வேண்டும்…[/size][/size]

[size=2][size=4]ஆனால் மூன்று அறிக்கைகளும் போதியவை அல்ல.. இனி அடுத்த ஆண்டு அறிக்கை எழுதும்போது பின்வரும் விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும் :[/size][/size]

[size=2][size=4]01. மூன்று அறிக்கைகளுமே மக்களால் பற்றிக்கொள்ள முடியாத ஓரங்களற்ற, விரல்களில் அகப்படாத வழுகியோடும் பனிக்கட்டிகளாக இருக்கின்றன.[/size][/size]

[size=2][size=4]02. சிங்கள இனவாதத்தின் ஒடுக்குமுறையும், அது நகர்ந்த வரலாறும் தமிழ் மக்கள் அறியாததல்ல… திருத்த முடியாத ஒரு கூட்டத்தைப் பற்றியே இன்னும் எவ்வளவு காலம் அறிக்கை எழுதிச் சலிக்கப்போகிறோம்…?[/size][/size]

[size=2][size=4]03. அதை விடுத்து… நாங்கள் யார்..? நாம் இப்போது என்ன செய்கிறோம்..? கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாம் எடுத்த நகர்வு என்ன..? அடுத்ததாக நமது தெட்டத்தெளிவான நடவடிக்கை என்ன..? அதற்கான துல்லியமான வேலைத்திட்டம் என்ன..? அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்..? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடினால் பிடிக்க முடியவில்லை.[/size][/size]

[size=2][size=4]04. வாய்ப்புக்களை காலமும், உலக சமுதாயமும் நகர்த்தும் அதற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறி, அதேவேளை நகரும் பல்வேறு நகர்வுகளில் எது சரியான வழி என்ற விடயத்தில் தம்மை அடையாளம் காட்டாமல் மதில் மேற் பூனைகளாக குந்தியிருக்கின்றன.[/size][/size]

[size=2][size=4]05. முதலில் போரினால் பாதிக்கப்பட்டு நொந்து நூலாகியிருக்கும் மக்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற பிரகாசமான நம்பிக்கை மொழி அவசியம்.[/size][/size]

[size=2][size=4]06. பாலஸ்தீனம் ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்த்து பெறுவதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. கொசோவா தனிநாட்டு அந்தஸ்த்து பெற்றுவிட்டது, இதில் பாலஸ்தீனத்தைப் போல ஐ.நாவில் கண்காணிப்பாளர் அந்தஸ்தையாவது முதலில் தமிழீழத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட நீங்கள் முன் வைக்கவில்லை.[/size][/size]

[size=2][size=4]07. சர்வதேச சமுதாயம் நம்மைப் பற்றிக் கொள்ள நாமும் கை நீட்ட வேண்டும், இல்லாவிட்டால் சர்வதேச சமுதாயம் ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது.[/size][/size]

[size=2][size=4]08. தமிழீழத்தை அடைவதாயின் முதலில் அடுத்து எட்ட வேண்டிய மிகக் கிட்டிய குறுங்கால இலக்கு என்ன.. அதை அடைய செய்ய வேண்டிய பணிகள் என்ன.. இவைகளை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு மாவீரர் நாள் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.[/size][/size]

[size=2][size=4]09. மாவீரன் சங்கர் தலைவரின் மடியில் மரணிக்கவில்லை தலைவர் அருகில் இருக்க கிட்டுவின் மடியில் வீரச்சாவடைந்தார் என்றும் சிலர் கூறுகிறார்கள் அது ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.[/size][/size]

[size=2][size=4]மாவீரர் நாளில் அறிக்கைகள் வெளியிட்டு கருத்தியலை வழங்கியது பாராட்டுக்குரியது, ஆனால் அதில் ஒரு வளர்ச்சி அவசியம்…[/size][/size]

[size=2][size=4]மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்..[/size][/size]

http://www.alaikal.com/news/?p=117994

Link to comment
Share on other sites

சிங்கள ஊடகத்தின் நோக்கம் அது தான். ஆனால் எங்கள் தமிழர்களின் ஊடகங்கள் பல தமது பிஸ்னஸ் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக புனைகதைகளை எழுதி மறைமுகமாக சிங்களவர்களுக்கு உதவியாக உள்ளார்கள் என்பது கவலைக்குரிய விடயம். தமிழீழ அக்கறை உண்மையில் இருந்தால் பிரிந்த குழுக்களை ஒற்றுமையாக்க தமது எழுத்துகளை கட்டுரையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.

அதற்கு தமிழ் புலனாய்வு எழுத்தாளர்களும் இணையங்களும் விடாது தோழி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கேள்விகள். பிரிந்த மாவீரர் தின நிகழ்வுகள் தமிழ் மக்களின் மீதான அதிகாரத்தை நிலைநிறுத்தவே நடாத்தப்பட்டன. எதிர்காலத்திலும் நடாத்தப்படலாம்.

எக்ஸெல் மண்டபத்தில் உரையாற்றிய ஒரு பிரமுகர் தமிழ் ஒருங்கிணைப்புக் குழுதான் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி என்பதற்கும் குழப்பும் மற்ற அணிகளைக் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்கும் சில மணித்துளிகளைச் செலவழித்தார். மாவீரர் தினத்தை அரசியலாக்கியது வேதனையாக இருந்தது.

Link to comment
Share on other sites

[size=2][size=4]03. அதை விடுத்து… நாங்கள் யார்..? நாம் இப்போது என்ன செய்கிறோம்..? கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாம் எடுத்த நகர்வு என்ன..? அடுத்ததாக நமது தெட்டத்தெளிவான நடவடிக்கை என்ன..? அதற்கான துல்லியமான வேலைத்திட்டம் என்ன..? அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்..? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடினால் பிடிக்க முடியவில்லை.[/size][/size]
Link to comment
Share on other sites

இலண்டனில் மூன்று இடங்களில் மாவீரர் தினத்தை நடாத்தினார்கள் என்பது உண்மையே. எக்ஸெல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், முருகதாசன் திடல் என்று அழைக்கப்பட்ட இடத்தில் தலைமைச் செயலகத்தினரின் சார்பானவர்களும், Mitcham பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்( PFLT) என்று இலண்டனில் கட்சி ஒன்றைப் பதிவு செய்தவர்களும் நடாத்தினார்கள்.

எக்ஸெல் மண்டபத்தில் சந்தித்த ஒருவர் தான் மூன்று இடங்களிற்கும் போனதாகவும், முருகதாசன் திடலில் 1000க்கும் குறைவானவர்களும், Mitcham பகுதியில் 100 க்கும் குறைவானவர்களும் வந்திருந்ததாகவும் சொன்னார். மாவீரர்களுக்குப் பேதம் இல்லையென்பதால் தான் எல்லா இடங்களிற்கும் போனதாகச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றால் இலண்டனில் கருணா குழுவா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றால் இலண்டனில் கருணா குழுவா?

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்று வந்திருக்கவேண்டும். புலிகளின் பெயரில் பலரும் இயக்கங்கள் தொடங்கியதால் வந்த குழப்பம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நல்ல கவிதை👍, மோகண்ணா இல்லாத யாழை நினைத்து பார்க்க முடியவில்லை, அவரின் முடிவை மாற்றி யாழுடன் பயணித்தால் நன்று, 24வயதில் பிள்ளையுடன் கோவித்து விலகலாமா???
  • நல்ல கண்ணன் கவிதை, பாராட்டுக்கள்👏, நானும் முன்னால் தீவிர கண்ணன் பக்தன், பொன்னாலை பெருமாள்தான் அடைக்கலம் அப்போது, இப்ப???
  • கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”நாம் வாழும் இந்த பூமிக்கு இதற்கு முன்னதாக நாம் வந்திருக்கிறோமா என்று நமக்கு தெரியாது, இதற்கு பிறகு மற்றொரு முறை வருவோமா என்பதும் நமக்கு தெரியாது. எனவே இருக்கும் இந்த ஒரு வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும். நம்மை ஈர்க்கும் அனைத்து விஷயங்களுக்குள்ளும் இறங்கி முயற்சித்து விட வேண்டும்” என்கின்றனர் முத்துபாண்டியும், அவரது மகள் ஹரிணியும்.   சென்னை, ரெட் ஹில்ஸ் பகுதிக்கு 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் பண்டிக்காவனூர் ஊராட்சியில், `ஆனந்த இல்லம்’ என்ற பெயரில் ஹெச்.ஐ.வி., குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தை கவனித்துகொள்ளும் பொறுப்பில் 30ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார் முத்துபாண்டி. ஒரு காப்பகத்தைக் கவனித்துகொள்ளும் பொறுப்பில் இருந்துகொண்டே இதுவரை அவர் 5000 பாம்புகளை மீட்டிருக்கிறார்; அவரது மகள் ஹரிணி 19 வயதில் 500 பாம்புகளை மீட்டிருக்கிறார். யார் இவர்கள்? இது எப்படி சாத்தியமானது?     மனம் போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன் ”எனது சொந்த ஊர் தூத்துக்குடி. ஆனால் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போது நான் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தேன். அதேசமயத்தில் சிறு சிறு பத்திரிக்கைகளுக்கு நேர்காணல்கள் எடுத்துகொடுக்கும் வேலைகளும் செய்து வந்தேன். அப்படி நேர்காணலுக்காக நான் சென்ற ஒரு இடம்தான் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்று பிபிசியிடம் பேசத் துவங்குகிறார் முத்துபாண்டி.   அவர் தொடர்ந்து பேசுகையில், “அது 1993ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் அப்போதுதான் ஹெச்.ஐ.வி., பற்றி மக்களுக்கு அறிமுகமாகிறது. அனைவரும் அந்த நோய் குறித்து அச்சமும், வெறுப்பும் அடைந்திருந்த நிலையில் மனோரமா என்ற மருத்துவர் ஒருவர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சிகிச்சையளிக்க வேண்டுமென முயற்சி செய்தார். அவரை நேர்காணல் செய்வதற்காகத்தான் நான் சென்றிருந்தேன். ஆனால் அந்த நேர்காணலில் அவரது கருத்தை உள்வாங்கிய எனக்கு, அவருடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயணிக்க வேண்டுமென தோன்றியது.   அந்த நேர்காணல் முடிந்த பிறகு, `பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியில், நான் உங்களுக்கு இறுதிவரை துணையாக இருப்பேன்` என்று வாக்குறுதியளித்தேன். அதன் அடிப்படையிலேயே இன்றுவரை எனது பயணம் தொடர்கிறது” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியான சூழலில் வளர்வதற்கு, புறநகர் பகுதியில் காப்பகத்தை அமைப்பதற்கு முடிவு செய்து, பண்டிக்காவனூர் ஊராட்சியை தேர்ந்தெடுத்தோம். குழந்தைகள் நிம்மதியாக, அவர்களுக்கு பிடித்த வகையில் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் அது புறநகர் பகுதி என்பதால், அங்கே பாம்புகள் வந்தன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நானே பாம்புகளை மீட்டு வெளியே கொண்டுபோய் விட ஆரம்பித்தேன். தொடர்ந்து அடிக்கடி பாம்புகள் வர ஆரம்பித்தன. அதனால் பாம்புகளை பிடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நுட்பமான விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எங்கள் காப்பகத்திற்கு வரும் பாம்புகளை நான் கையாள்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களது வீடுகளுக்குள் வரும் பாம்புகளையும் மீட்பதற்காக அழைத்தனர். அப்படியே 30கிமீ சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாம்புகளை கண்டால், என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். எனக்கும் இதில் ஈடுபாடு இருந்ததால், இதை ஒரு சேவையாக செய்து வருகிறேன். இதுவரை 5000க்கும் அதிகமான பாம்புகளை பிடித்திருக்கிறேன். கண்ணாடி விரியன், கட்டுவிரியன் போன்ற அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் இதில் அடக்கம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   ”ஏதோ ஒரு சின்ன சின்ன புள்ளியில் துவங்கும் விஷயங்கள் என்னை தொடர்ச்சியாக அடுத்தடுத்த தளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. என் மனம் போகும் போக்கில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.   அப்பாவை போல் பாம்பு மீட்பரான மகள்   தனது தந்தை பாம்புகளை கையாள்வதை சிறு வயதிலிருந்தே கவனித்து வந்த ஹரிணிக்கும், அதன் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தான் சிறுமியாக இருக்கும்போதே, பாம்புகளை கைகளில் பிடித்து பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதாக கூறுகிறார் ஹரிணி.   பிபிசியிடம் பேசிய அவர், “சில நேரம் பாம்புகளை மீட்பதற்காக என் தந்தை செல்லும் இடங்களில், அன்பளிப்பாக பணம் வழங்குவார்கள். ஆனால் அவர் அதை மறுத்துவிடுவார். இந்த வேலையை அவர் ஒரு சேவையாக செய்து வருகிறார். ஒரே நாட்களில் வெவ்வேறு இடங்களில் 2, 3 பாம்புகளைக் கூட அவர் மீட்டிருக்கிறார். அதேபோல் மீட்கப்படும் பாம்புகளை பத்திரமாக எடுத்துச்சென்று, அடர்காட்டுப் பகுதிகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் விட்டுவிடுவார். இதெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு பாம்புகள் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரை பார்த்து நானும் கற்றுக்கொள்ள துவங்கினேன்.   முதலில் விஷமற்ற தண்ணீர் பாம்பு, பச்சை பாம்பு ஆகியவற்றை எனது கைகளில் கொடுத்து பழக்கினார். பாம்புகளை பிடிக்கும் போது கழுத்து பகுதிகளில் பிடித்து லாக் செய்ய வேண்டும், எப்போதும் பாம்பிற்கும் நமக்கும் குறிப்பிட்ட இடைவேளை இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். அப்படியே நானும் பாம்புகளை மீட்பதில் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்துவிட்டேன்” என்று கூறுகிறார் ஹரிணி.   “எனக்கு பாம்புகளை கையாள்வதில் ஒருபோதும் பயம் ஏற்பட்டதில்லை. சிலர் பாம்புகளை பார்த்து அறுவறுப்பு கொள்வார்கள். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு அப்படியான உணர்வு ஏற்பட்டதில்லை. இதுவரை அப்பாவின் வழிகாட்டுதலுடன் 500 பாம்புகளை மீட்டிருக்கிறேன். அப்பா இல்லாத சமயங்களில் நான் மட்டுமே கூட சென்றிருக்கிறேன்” என்று பிரமிப்புடன் கூறுகிறார் ஹரிணி.   `என்னை விட என் மகளுக்கு துணிச்சல் அதிகம்` ”என்னுடைய மகளால் நஞ்சுள்ள பாம்புகளை எளிதாக கையாள முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல பாம்பை மீட்கும்போது, அது என்னை கடித்துவிட்டது. அப்போது சற்று உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்தசமயத்தில் அவளுக்கு 12 வயதுதான். என்னிடம் வந்த அவள், “அப்பா பாம்பு கடித்துவிட்டதற்காக, இனி பாம்புகளை மீட்கும் பணியை விட்டுவிடக்கூடாது. நீ மீண்டும் முயற்சி செய்யவேண்டும். பாம்புகளை மீட்க வேண்டும். குறைந்தது ஒரு பாம்பையாவது நீ மீட்க வேண்டும். அதன்பின் உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு. ஏனென்றால் இப்போது நீ பாம்புகள் மீட்பதை விட்டுவிட்டால், அது உன் வாழ்வில் ஒரு அச்சமாக மாறிவிடும்” என்று அறிவுரை வழங்கினாள்.   அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த சிறு வயதில், இவளுக்குள் எப்படி இத்தனை அளவு பக்குவம் வந்தது என பிரமிப்பாக இருந்தது.   அந்த சம்பவத்திற்கு பின் மீண்டும் நான் பாம்புகளை மீட்கும் பணியில் நம்பிக்கையுடன் வந்ததற்கு என் மகள்தான் முக்கிய காரணம். அதேசமயம், தற்போது பல தற்காப்பு உபகரணங்களுடன் இந்த பணியை கவனமாக செய்து வருகிறோம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “நாங்கள் பாம்புகளை மீட்கச் செல்லும் இடங்களில் என் மகளை ஒரு கதாநாயகி போல அனைவரும் பார்க்கிறார்கள். ஒரு தந்தையாக எனக்கு அது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மனிதத்தையும், இந்த பூமியையும் நேசிக்கிறோம் ”நான் இப்போது எம்.பி.ஏ படிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். அதன்பின் சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு விலங்குகளுக்காக தனி காப்பகம் அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று கூறுகிறார் ஹரிணி.   அவரைத் தொடர்ந்து பேசிய முத்துபாண்டி, “இப்போது எனக்கு 60 வயதாகிறது. இதுவரை எனக்கு என்ன தோன்றியதோ அதை மட்டுமே செய்து வந்திருக்கிறேன். மனிதர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அதே அளவு நேசம், மற்ற உயிரினங்கள் மீதும் இருக்கிறது. ஏனென்றால் ‘இந்த உலகில் மனிதர்கள்தான் கடைசியாகத் தோன்றிய உயிரினம். எனவே மனிதர்களை விட விலங்குகளுக்குத்தான் இந்த பூமியின் மீது அதிக உரிமை இருக்கிறது. அதன் காரணமாகவே அவைகளின் மீது அன்பும், மரியாதையும் எங்களுக்கு இருக்கிறது’.   ஆனால் என் குடும்பத்திற்காக நான் இதுவரை எதுவும் செய்யவில்லை. என்னுடைய முடிவுகள் அனைத்திற்கும் என் மனைவி துணையாகயிருந்தார். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் இப்போது எதிர்காலம் குறித்த அச்சம் எட்டிப்பார்க்கிறது. அதனால் மீண்டும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.   எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், மனிதத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. மீதமிருக்கும் என் வாழ்நாளில் இந்த பிரபஞ்சம் எனக்கு துணையாக வரும் என்று என் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார் முத்துபாண்டி. https://www.bbc.com/tamil/articles/cz4rpnqn4gxo
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.