Jump to content

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது


Recommended Posts

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைப்பாடலுக்கு நடனமாடினார்கள், மாவீரர்களுக்கு தீபமேற்றி வழிபட்டார்கள், இறுதியாக இராணுவத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். புலிகள் ஆயுத பலமற்ற இந்த காலத்திலும் இவர்கள் உணர்வு, துணிவு தற்பொழுது அதிகரித்து வருகின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயம். இன்னும் எம்மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. :rolleyes:

ஆனாலும் இவர்களுக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே.. :(

பெரிதாக அபத்து வராது.

முன்பு தான் புலிகள் இருந்ததார்கள் செய்தகொலைகளோட்டு செய்யாததையும் சுமக்க.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply

305989_10152298536320068_403078680_n.jpg

561608_387448734663829_214290869_n.jpg

Link to comment
Share on other sites

பெரிதாக அபத்து வராது.

முன்பு தான் புலிகள் இருந்ததார்கள் செய்தகொலைகளோட்டு செய்யாததையும் சுமக்க.

403122_224183364380472_1220119451_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்.....இவ்வளவும் நடந்தும் நம்பாத உங்களை ....யார் உசுப்பேத்திவிட்டது.....எவ்வளவு காசு வந்தது....இந்த விபரங்களையும் சேர்த்து வெளியிடவும்.....

Link to comment
Share on other sites

சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளுக்கு யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர் தின வணக்க நிகழ்வுகள் கலக்கமூட்டுவதை சில கருத்துக்கள் மூலம் உணரக் கூடியதாக உள்ளது.

ஒவ்வொரு வருடமும் மாவீரர் தின வணக்க நிகழ்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் உலகெங்கும் விரிவடைவது சிங்கள - ஹிந்திய அரச பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, பயங்கரவாதிகளின் கைக்கூலிகளுக்கும் கசப்பானது தான்.

தமிழ் மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் சிங்கள அரச பயங்கரவாதிகள் தான் தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது தெரியாமல் உளறுபவர்களை இத்திரியில் இலகுவாக அடையாளம் காணலாம்.

யாழ் மாணவர்களின் வீரச் செயல்களுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

[size=4]கனடிய மாணவர் அமைப்பு அறிவிப்பு யாழ் பல்கலைக் கழகத்தில்இலங்கை இராணுவத்தின் கண்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து புலம் பெயந்த தேசமெங்கும் மாணவர்கள் கண்டனம்.[/size]

[size=4]இச் செயலைக் கண்டித்து பாரிய ஆர்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். [/size]

[size=4]இதே போல் தாய் தமிழகத்திலும் மாணவர்கள் கொந்தளிப்பு புலம் பெயர்ந்த நாடுகளில் பாடசாலைகள் போக்குவரத்துக்குகள் பஸ்கரிப்பு.[/size]

30938_442144862532066_672551984_n.jpg

[size=5](Thanks FB)[/size]

Link to comment
Share on other sites

[size=4]கனடிய மாணவர் அமைப்பு அறிவிப்பு யாழ் பல்கலைக் கழகத்தில்இலங்கை இராணுவத்தின் கண்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து புலம் பெயந்த தேசமெங்கும் மாணவர்கள் கண்டனம்.[/size]

[size=4]இச் செயலைக் கண்டித்து பாரிய ஆர்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். [/size]

[size=4]இதே போல் தாய் தமிழகத்திலும் மாணவர்கள் கொந்தளிப்பு புலம் பெயர்ந்த நாடுகளில் பாடசாலைகள் போக்குவரத்துக்குகள் பஸ்கரிப்பு.[/size]

கண்டனம் தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் - யாழ் மாணவர்களின் உரிமைகளை, பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐ. நா. சபை., UNESCO, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற தரப்பினருக்கும் எழுத்து மூலம் கோரிக்கைகளை காலதாமதம் இல்லாமல் அனுப்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

[size=4]கனடிய மாணவர் அமைப்பு அறிவிப்பு யாழ் பல்கலைக் கழகத்தில்இலங்கை இராணுவத்தின் கண்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து புலம் பெயந்த தேசமெங்கும் மாணவர்கள் கண்டனம்.[/size]

[size=4]இச் செயலைக் கண்டித்து பாரிய ஆர்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். [/size]

[size=4]இதே போல் தாய் தமிழகத்திலும் மாணவர்கள் கொந்தளிப்பு புலம் பெயர்ந்த நாடுகளில் பாடசாலைகள் போக்குவரத்துக்குகள் பஸ்கரிப்பு.[/size]

நிச்சயமாக தாயக மக்களின் பிரச்சினை வெளிக்கொண்டுவரப்பட நாமும் உதவி செய்வோம். அவர்கள் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட வேண்டும்.

கண்டனம் தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் - யாழ் மாணவர்களின் உரிமைகளை, பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐ. நா. சபை., UNESCO, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற தரப்பினருக்கும் எழுத்து மூலம் கோரிக்கைகளை காலதாமதம் இல்லாமல் அனுப்ப வேண்டும்.

நாடுகடந்த அரசாங்கம் ஏற்கனவே ஐ.நா வுக்கு இது விடயமாக கடிதம் அனுப்பியுள்ளார்கள். (நீங்கள் ஏற்கனவே அத்திரியை வாசித்திருந்தாலும் ஏனையோருக்காக இணைப்பை தருகிறேன்.)

http://www.yarl.com/...062#entry829901

Link to comment
Share on other sites

அகூதா, மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கொண்டாட வேண்டாம் என்று இங்கே நான் கூற வரவில்லை. அவரவர் விருப்பத்தின் படி அவர்கள் அஞ்சலி செலுத்த வேண்டிய விடயம் அது.

ஆனால், வழமைக்கு மாறாக இம்முறை புலத்தில் உள்ள அமைப்புக்கள் அங்கே உள்ளவர்களை தூண்டி விட்டுள்ளனர்.

எல்லாப் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் புலத்தில் இருந்து தமிழ் அமைப்புக்கள் பணத்தினை அனுப்பி உசுப்பேத்தி உள்ளனர். (இதனை யாராவது மறுக்கட்டும் பார்ப்போம்)

தமிழர் தாயகம் கொதி நிலையில் இருக்க வேண்டும் என்பதே புலத்தில் உள்ள அமைப்புக்களின் விருப்பம்.

என்னே விபரீத ஆசை. தாம் மட்டும் சொகுசாக வாழ்ந்து கொண் அந்த மக்களை முட்படுக்கையில் வாழ வழி வகுக்கும் வகையில் வன்முறைகளைத் தூண்டும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி கொஞ்ச நாளைக்கு புலத்து ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைக்கும். தொடர்ச்சியாக அங்கே பதற்ற நிலை நீடித்த நிலை இருக்கும் என்றே செய்திகளை வெளியிட்டு 2013 ஆம் ஆண்டினை வரவேற்பார்கள்.

எந்த வானொலியினை திருப்பினாலும் 2009 மே நிகழ்வுகள் போன்று அல்லவா சித்திரிக்கின்றார்கள். இதனைத்தானே இங்கு இருந்து அனைவரும் எதிர்பார்த்தீர்கள் இல்லையா?

ஒரு பேச்சுக்கு புலம்பெயர் மக்கள் காசு தருகிறோம்.தமிழீழத்தில் ஆயுதபோராட்டம் ஒன்றை அங்கு மக்கள் நடாத்துவார்கள் என்ற ரீதியில் உங்கள் கருத்து போகிறது. புலம் பெயர் மக்களின் சொல்லை கேட்டு நடக்க அங்கு வசிக்கும் மக்கள் ஒன்றும் "மொக்கு கூட்டம்" இல்லை என்பதை உங்களால் விளங்க முடியாமல் உள்ளது சாபக்கேடானது அல்லது விளங்காததது போல் நன்றாக நடிக்கிறீர்கள். எந்த ரகம் என்பதை பலர் அறிவர்.

Link to comment
Share on other sites

ஆதாரங்கள் தந்தால் அங்கே உள்ள ஊடகவியலாளர்களையும் எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி நின்று எமக்கு உண்மைத் தகவல்களைத் தந்த மாணவர்களையும் உங்களால் புலத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா?

உங்களை நம்பி தகவல்கள் தந்தவர்களின் பெயர்களை எவ்வாறு நான் தரமுடியும்?

நான் கூறுகின்ற கருத்துக்கள் தவறானது எனில் நீங்களே அங்கே ஊடகவியலாளர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கலாமே. இவ்வளவு எழுதுகின்ற உங்களுக்கு ஒரு ஊடகவியலாளர்களையாவது தெரியாமல் இருக்க முடியாதே.

என்னிடம் ஆதாரம் கேட்பதனை விடுத்து ஐரோப்பிய மற்றும் கனடிய நாடுகளில் இயங்கி வரும் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அங்கே உள்ள மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு மாவீரர் நிகழ்வுகளைச் செய்து அந்நிகழ்வுகளின் படங்களை அனுப்புமாறு கோரி எந்தவித பண உதவி செய்யவில்லை என மறுக்க முடியுமா? (இதுவும் ஒரு உசுப்பேத்தல்தான். தாங்களாக செய்தால் அது வேறு)

தற்போதும் புலத்தில் இருந்து கணனி முன்பாக வீரம் பேசுகின்றவர்கள்தான் நீங்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு தாக்குதலை யாராவது மேற்கொண்டால் பொங்கி எழுவார்கள் அவர்கள். ஆனாலும் பாருங்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல் என்று செய்தி வெளியிட்டனரே தவிர புலத்தில் எந்தவொரு தமிழ் மாணவ அமைப்புக்களாவது வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்களா? (அறிக்கைகளை விட்டு விட்டு அப்படியே அமுங்கி விடுவார்கள்)

அந்த மாணவர்கள் மீது அங்கே தாக்குதல் மேற்கொண்டால் புலத்தில் உள்ள அமைப்புக்கள் ஏன் அந்த அந்த நாடுகள் ஊடாக அழுத்தம் கொடுக்க முடியாது. ஏனெனில், உங்களால் செய்ய முடியாது.

தமிழ்நெட்டைப் பாருங்கள். ஐந்தாவது ஈழப் போர் வெடித்தது போன்று அல்லவா 4 ஆவது லீட் வரை செய்தி போட்டு உள்ளனர். இதனைத்தானே மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கின்றீர்கள். இதில் இருந்தே உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று புரிந்து கொள்ள முடிகின்றதே.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]நிர்மலன்,[/size][/size][size=1]

[size=4]உதயன் பத்திரிகையும் தாக்கப்பட்டு உள்ளதே? கருத்து? [/size][/size]

[size=1]

[size=4]அவர்களையும் புலம்பெயர் மக்கள்தான் உசுப்பேத்திவிட்டனரா? [/size][/size]

Link to comment
Share on other sites

ஆதாரங்கள் தந்தால் அங்கே உள்ள ஊடகவியலாளர்களையும் எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி நின்று எமக்கு உண்மைத் தகவல்களைத் தந்த மாணவர்களையும் உங்களால் புலத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா?

உங்களை நம்பி தகவல்கள் தந்தவர்களின் பெயர்களை எவ்வாறு நான் தரமுடியும்?

ஆர்ப்பாட்டத்துக்கு எதிரானவர்கள் தான் அப்படி ஊடகவியலாளர்களிடம் பொய் சொன்னார்களாம். இதை என்னிடம் சொன்னவர்களின் பெயர்களை வெளிவிடுவதும் ஆபத்து ஆச்சே... எனவே தவிர்க்கிறேன். :)

Link to comment
Share on other sites

உதயன் பத்திரிகையின் இயக்குநர் சரவணபவன் தேவை இல்லாமல் பிரச்சினையினை பெரிதாக்கி உள்ளார். மாணவர்களை உசுப்பேத்தியது புலம்பெயர் அமைப்புக்கள் எனில் அதனை மேலும் உசுப்பேத்தியது உதயன் பத்திரிகை.

யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற பத்திரிகைகளில் உதயனுக்கு மட்டும்தான் தமிழ்த் தேசிய உணர்வு இருக்கின்றதா?

ஏன் பிற பத்திரிகைகளுக்கு இல்லையா?

யாழ். தினக்குரல்

வலம்புரி

போன்ற பத்திரிகைகள் தமிழர்களுக்கு எதிராகவா இயங்குகின்றன? தமிழ்த் தேசியத்தினை குத்தகைக்கு எடுத்தது போன்றே உதயன் பத்திரிகை அன்று தொடக்கம் இன்று வரை செயற்பட்டு வருகின்றது.

சரவணபவன் மகிந்தவுடன் எந்தளவு நெருக்கமாகச் செயற்படுகின்றார் என்பதனை அனைத்து ஊடகவியலாளர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவரைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள்.

எத்தனை தமிழ் இளைஞர்களை சிறையில் இருந்து மீட்டுத் தருகின்றேன் என்று கூறி எத்தனை எத்தனை லட்சங்களை லவட்டிவயவர் இந்த சரவணபவன் என்பதனை அந்த தமிழ் இளைஞர்களின் பெற்றோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

[size=4]

உதயன் பத்திரிகையின் இயக்குநர் சரவணபவன் தேவை இல்லாமல் பிரச்சினையினை பெரிதாக்கி உள்ளார். மாணவர்களை உசுப்பேத்தியது புலம்பெயர் அமைப்புக்கள் எனில் அதனை மேலும் உசுப்பேத்தியது உதயன் பத்திரிகை.

யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற பத்திரிகைகளில் உதயனுக்கு மட்டும்தான் தமிழ்த் தேசிய உணர்வு இருக்கின்றதா?

ஏன் பிற பத்திரிகைகளுக்கு இல்லையா?

[/size]

[size=4]அப்படித்தான் சிங்கள அடக்குமுறை இராணுவமும் கூறுகின்றது .[/size]

Link to comment
Share on other sites

ஆர்ப்பாட்டத்துக்கு எதிரானவர்கள் தான் அப்படி ஊடகவியலாளர்களிடம் பொய் சொன்னார்களாம். இதை என்னிடம் சொன்னவர்களின் பெயர்களை வெளிவிடுவதும் ஆபத்து ஆச்சே... எனவே தவிர்க்கிறேன். :)

இதனை நான் எதிர்பார்த்ததுதான்.

ஏனெனில் நான் பொய்தான் எழுதுகின்றேன் என உங்களில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். அப்படியே நினைத்துக் கொண்டு இருங்கள். அதில் இருந்து இம்மியளவும் பிசகாதீர்கள்.

உண்மைகள் ஒருபோதும் உறங்காது. இங்கே நான் எழுதுவது அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

துளசி, நான் எழுதியதற்கு தாராளமாக நீங்கள் பதிலடி கொடுக்கலாம். ஏனெனில் நான் கூறுவது பொய் என்றால் என்றோ ஒரு நாளைக்கு அது பொய்தான் என்று நிரூபணம் ஆகும்.

ஏனெனில், உண்மைகள் ஒருபோதும் சாகா வரம் கொண்டவை.

Link to comment
Share on other sites

[size=4]நிர்மலன்,[/size][size=1]

[size=4]கீழே உள்ளது உண்மையாக தெரிகின்றத்து சரவணபவான் பற்றி : [/size][/size]

[size=4][size=2][size=4]

இந்தச் சம்பவம் குறித்து மாணவர்கள் அறிவித்ததை அடுத்து அங்கு சென்ற யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் பொலிஸார், படையினர் முன்னிலையில் சிவில் உடையில் இருந்த சிலரால் அடித்து நொருக்கப்பட்டது.[/size][/size][/size]

[size=4][size=2][size=4]மாணவர்கள் தாக்கப்பட்டமை, நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. [/size][/size][/size]

[size=4][size=2][size=4]ஊடகத்துறை மாணவர் உட்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் முதலில் மூன்று மாணவர்களைப் பொலிஸார் விடுவித்தனர். ஊடக மாணவரை அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தனர். அவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊடகத்துறை மாணவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் எடுத்துக் கூறியும் அவரைப் பொலிஸார் விடுவிக்கவில்லை.

[/size][/size][/size]
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரங்கள் தந்தால் அங்கே உள்ள ஊடகவியலாளர்களையும் எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி நின்று எமக்கு உண்மைத் தகவல்களைத் தந்த மாணவர்களையும் உங்களால் புலத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா?

-----ஃஃஃஃஃ

தராளமாகக் காப்பறலாம். யாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்??

http://www.valampuri...ws.php?ID=35700

வலம்புரி

ஐர

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]நிர்மலன்,[/size][/size][size=1]

[size=4]பல கள உறவுகளும் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் மாணவர்களுக்கு இந்த வீர உணர்வை தந்தாக கருத்து எழுதியுள்ளனர். [/size][/size]

[size=1]

[size=4]அதுதான் சரியாக இருக்கும். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]

யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற பத்திரிகைகளில் உதயனுக்கு மட்டும்தான் தமிழ்த் தேசிய உணர்வு இருக்கின்றதா?

ஏன் பிற பத்திரிகைகளுக்கு இல்லையா?

யாழ். தினக்குரல்

வலம்புரி

போன்ற பத்திரிகைகள் தமிழர்களுக்கு எதிராகவா இயங்குகின்றன? தமிழ்த் தேசியத்தினை குத்தகைக்கு எடுத்தது போன்றே உதயன் பத்திரிகை அன்று தொடக்கம் இன்று வரை செயற்பட்டு வருகின்றது.

[/size]

[size=4]வலம்புரிச் செய்தியாளர் மீது படையினர் தாக்குதல்[/size]

[size=4][செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-11-29 10:31:34| யாழ்ப்பாணம்][/size]

[size=4]யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செய்தி சேகரிக்கச் சென்ற வலம்புரியின் செய்தியாளர் உதயராசா சாளின் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், வலம்புரிச் செய்தியாளர் எஸ்.இராஜேஸ்கரன் அங்கிருந்து படையினரால் விரட்டப்பட்டார். [/size]

[size=4]பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் படையினர் தடுத்து நிறுத்திய வேளை செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வலம்புரிச் செய்தியாளர் சாளினை அழைத்த படையினர், அவரிடமிருந்து புகைப் படக் கருவியை கேட்டு அவரைக் கடுமையாகத் தாக்கியதுடன் அவர் வைத்திருந்த செய்தியாளருக்கான அடையாள அட்டையையும் கிழித்தெறிந்தனர். இச் சம்பவத்தின்போது வேறு சில ஊடகவியலாளர்களும் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://valampurii.com/viewnews.php?ID=35704[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக கண்மணிகளா!

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்களும் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களும் 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வு போன்று பாரிய எழுச்சி நிகழ்வினை நடத்தி- வன்னியில் மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்த முயற்சி செய்யுங்கள் என்று கேட்டபோது எத்தனை பேர் அன்று பம்மிக் கொண்டு இருந்தீர்கள். எத்தனை பேர் அன்று உங்கள் செல்லிடப்பேசிகளை நிறுத்தி வைத்தீர்கள்.

இப்போது மட்டும் மாவீரர்களை நினைவு கூர விடவில்லை என்று போராட்டம் நடத்துகின்றீர்கள்.

என்ன உலகமடா சாமி.

அன்று யாழில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த போதும் பம்மிக் கொண்டு இருந்தீர்கள்.

இன்று அத்தகைய படுகொலைச் நிகழ்வுகள் குறைந்து உள்ள நிலையில் வீரம் காட்டுகின்றீர்கள். மீண்டும் படுகொலைக் கலாச்சாரத்தினை நீங்களே உருவாக்குகின்றீர்கள். இதனை புலத்தில் இருந்து செயற்படும் தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் பெரிதாக்குகின்றன.

அங்கே உள்ள கஸ்டப்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக பண உதவி செய்து அவர்களிடம் மேலதிக பணத்தினைக் கொடுத்து இம்முறை மாவீரர் நிகழ்வுகளை உவ்விடம் செய்துவிட்டு படங்களை எமக்கு அனுப்புங்கள் எமது சார்பு ஊடகங்களில் வெளியிடுகின்றோம் என்று உசுப்பேத்தி விட்டுள்ளனர் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள்.

இவ்வாறான நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் வன்னியிலும் அரங்கேற்றி உள்ளனர். தயவுசெய்து அந்த மக்களை இனியாவது நிம்மதியாக வாழ விடுங்கள். உபத்திரங்களை பெற்றுக் கொடுத்து நீங்கள் புலத்தில் மகிழ்வாக இருந்து கொண்டு அவர்களை துன்பத்தில் ஆழ்த்தாதீர்கள்.

இதனை நான் கற்பனையில் எழுதுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு சாரார் அங்கே சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் உள்ளனர். அங்கே உள்ள ஊடகங்கள் இவற்றை வெளியிடாது என்பது யாவரும் அறிந்த விடயம். மாணவர்கள் கொந்தளிப்பு அது இது என்று செய்திகளை வெளியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கும் ஊடகப் பசி இருக்கின்றது அல்லவா.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது பல்கலைக்கழக மாணவர்களிடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்த விடயத்தினை தப்பி வெளியேறி இருக்கக்கூடிய போராளிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

யாராவது இளிச்சவாயர்கள் இருப்பினம் அவங்க‌கிட்ட போய் சொல்லுங்கோ இந்த கதையை அவர்கள் யோரா கை தட்டி உங்களை மகிழ்விப்பினம்...

இன்னும் கொஞ்சம் போனா சொல்லுவீர் போல மாவீரரும் காசுக்கான்டித்தான் போராடா போனார்கள் என்று........உங்கட கதைக்கும் காலம் தான் பதில் சொல்லும்...

Link to comment
Share on other sites

[size=2]

305989_10152298536320068_403078680_n.jpg[/size][size=2]

[size=3]இவன்தான் கூலி படை சிங்கள நாயாளையே பிடிக்க முடியாத மாணவர்களை பிடிச்சு குடுக்குறான். இந்த மாணவர்கள் எவ்வளவு நெறுக்குவாரத்துள் போராட வேண்டியுள்ளது.[/size][/size]

Link to comment
Share on other sites

[size=5]நீங்கள் ஏன் வீணாக கருத்து மோதலில் ஈடுபடுகிறீர்கள்.வெகு விரைவில் சிறீலங்கா அரசுக்கு சார்பற்ற அமைதிபடை குழுவொன்று வடக்கு மற்றும் கிழக்குக்கு செல்லவிருக்கிறது.இதன் முனோட்டம் தான் தற்போதைய ஐ நாவின் விஜயம்.முதலில் சிங்கள ராணுவத்தை வெளியேற்றுவோம்.அமைதியாகவிருங்கள்.வருகிர ஏப்பிரலில் இது சாத்தியமாகும்.அப்போதுதான் சர்வஜன வாக்கெடுப்பு கூட நடைபெறவிருக்கிறது.அதற்கான வேலைத்திட்டங்களை அமெரிக்காவில் உள்ள தமிழர் மற்றும் தமிழர் சாராத பொது அமைப்புகள் முன் எடுத்துகொண்டிருக்கிறார்கள்.அவர்களின் பின்னால் நாமும் அணிவகுத்தால் நல்ல தீர்வு சாத்தியமாகும்.இப்போதைக்கு இவளவும் தான் சொல்லமுடியும்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தை நோக்கி அரசாங்கம் தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றதா?

யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் கண்டன ஊர்வலம் மீதான தாக்குதல், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் மீதான தாக்குதல், ஊடகவியாளர் தேவநாயகம் பிரேம்நாத் மீதான தாக்குதல், பிரதேச சபை தலைவரின் வீடு எரிக்கப்பட்டமை ஆகிய தொடர்ச்சியான வன்முறைகள், வட மாகாணத்தில் 1980ம் வருடங்களில் நடைபெற்ற சம்பவங்களை நினைவூட்டி, இன்று வடக்கில் இலங்கை இராணுவத்தின் ஆட்சி நடப்பதை படம் பிடித்து காட்டுகின்றன.

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இலங்கை அரசாங்கம் மீண்டும், கடந்த காலத்துக்கு செல்வதற்கு தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றதா?

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய ரோகன விஜேவீர 1989ம் வருடம் இராணுவத்தால் கொல்லப்பட்ட நவம்பர் 13ஐ ஒவ்வொரு வருடமும் தமது போராளிகளின் நினைவு தினமாக அனுசரிப்பதற்கு ஜேவிபியினருக்கு தென்னிலங்கையில் இருக்கின்ற உரிமை ஏன் தமிழ் இளைஞர்களுக்கு வடக்கில் இல்லை?

கடந்த காலத்தை நோக்கி தமிழ் இளைஞர்களை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு அழைத்து செல்கிறதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மனங்களில் இன்று எழுந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மன்றத்தில் பிணை வழங்கி காப்பாற்றி வரும் இந்தியா, அமெரிக்கா அரசாங்கங்களும், ஐக்கிய நாடுகள் சபையும், இவற்றுக்கு உரிய பதில்களை பெற்று தர வேண்டும்.

இராணுவம் மாணவர் விடுதிகளுக்கு உள்ளே சென்றதும், அதையடுத்து மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலத்தின்மீது தாக்குதல் நடத்தியதும் அத்துமீறிய செயல்களாகும். அதேபோல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் தாக்கப்பட்டமை அடாவடித்தனமானது.

தென் இலங்கையில், போராளிகளை நினைவு கூறுவதற்கும், ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு ஊர்வலம் நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் அனுமதிகள் வாங்கவேண்டியதுகூட இல்லை. வீதிகளைமூடி, கடைகளை மூடி, விளக்குகளை கொளுத்தி, பெரும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும், இன்று கொழும்பிலும், தென் இலங்கையிலும் தினசரி நடக்கின்றன. இவை ஏன் வடக்கில் நடைபெற முடியாது?

இந்த நாட்டில் தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு என இரண்டு சட்டங்கள் இருக்கின்றனவா?

வட மாகாணத்தில் தமிழ் இளைஞர்களை மீண்டும் தனித்து போராட்ட களத்துக்கு அனுப்பி அழிக்க நினைக்கும் முயற்சிகளை தமிழ் மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும்.

கடந்தகாலங்களை விட இன்று உலகம் இலங்கை தமிழர் இன்னல்களை அறிந்துள்ளது. இன்று உலகின் எரியும் பிரச்சினைகளில் ஒன்றாக ஐநா சபை வரை நமது பிரச்சினை நீண்டுள்ளது. எனவே, இனியும் நமது இளைஞர்களும், மாணவர்களும் மாத்திரம் தனித்து நின்று போராட வேண்டியதில்லை.

இளைஞர்களை போராட தூண்டிவிட்டு அழிக்கும் அரசாங்கத்தின் இந்த நோக்கத்தை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் முடிந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் எந்த வித தீர்வுகளையும் கண்ணில் காட்டாதது மாத்திரம் அல்ல, இருப்பதையும் பறித்து கொள்ளும் அரசாங்கத்தின் கபட நோக்கங்களுக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழ் இனமும் ஜனநாயகரீதியாக போராடவேண்டும்.

மாணவர்களையும், இளைஞர்களையும் மாத்திரம் போராட அனுப்பிவிட்டு, காத்திருக்காமல் தலைவர்களுடன் கரம் கோர்த்து அனைத்து தரப்பு தமிழ் மக்களும் சாத்வீகரீதியாக அணிதிரள்வதன் மூலமாகவே ஒரு இனமாக இந்நாட்டில் நாம் வாழ முடியும். அதற்கான வேளை இன்று வந்துவிட்டது.

-- மனோ கணேசன்

Link to comment
Share on other sites

நிர்மலன் எதையாவது யாழில் எழுத வேண்டும் என்ற நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. வழமையாக எழுத்துகள் விதண்டவாதமாக இருந்தாலும் அவற்றில் ஒரு குறிக்கோளை காணமுடியும். இவற்றில் எதுவும் இல்லாமல் இருபது சில சில ஊகங்களை தூண்ட செய்கிறது.

ஆனால், அதனால் பலன் இல்லாமல் போகவில்லை. நிர்மலன் போன்றவர்களின் இந்த முயற்சியால்த்தால் இப்போது சில இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு தூதுவராலயங்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றன.

மேலும் வடக்கு கிழக்கில் இராணுவத்தை வருடம் 365 நாளும் சுசார் நிலையில் வைத்து சின்ன சின்ன உள்விவகாரமான பல்கலைகழக ஆர்ப்பாட்ங்களை அதனை வைத்து அரசு ஒடுக்கி அழித்தொழிப்பதையும் அவர்கள் பார்த்துத்தான் இருப்பார்கள்.

இதனால் அவர்களால் அரசு இராணுவத்தை வடக்கில் எடுத்துவிட்டத்தாக கூறும் கூற்றை அளவிட்டுக்கொள்ள முடியும். மேலும் 13ம் திருத்தத்தை வைத்து இலங்கையின் இராணுவ அடாவடித்தனங்களை எப்படி சமாளிப்பது என்றும் ஆராய்ந்து பார்ப்பார்கள். அதன் பின்னர் 13ம் திருத்ததை அரசுடன் சேர்ந்துமீளப்பெற்றுவிட்டு சுயநிர்ணயஉரிமையுடன் கூடிய அரசியல் அமைப்பை கொண்டுவருவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.