Jump to content

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ????????

Recommended Posts

கோமகன் நீங்கள் உங்கள் அமைப்பின் நிகழ்வுகளை விமர்சியுங்கள் நாம் அதுக்குள் வரமாட்டோம் சம்மந்த மில்லாமல் உங்களுக்கு சம்மந்தம் இல்லாத மாவீரர் தினம் பற்றி இவ்வளவு அக்கறையான கவிதைகள்? முடிந்தால் டக்லஸ் பற்றியோ தியாகிகள் தினம் பற்றியோ கவதை வரையலாமே

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

உங்கள் கருத்துக்களுக்கும் வரவிற்கும் மிக்க நன்றிகள் புங்கையூரான் . மேலும் நான் இந்தக்கவிதையை பொழுதுபோக்குக்காகவோ அல்லது நானும் இருக்கின்றேன் என்று காட்டவோ எழுதவில்லை . எனது கண்ணால் கண்டு வெதும்பி நேரடி ஆதரத்துடன் தான் எழுதினேன் . நிட்சயம் இது எல்லோரையும் கொதிக்கவைக்கும் என்பதும் எனக்குத்தெரியாத விடையமல்ல . மேலும் , மாவீரர்களுடன் சுத்த போலித்தனமான கோயில்களை கொண்டு சென்று நீங்களே ஒப்பிடுவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது . சுத்த போலித்தனங்களும் பிற்போக்குதனங்களும் , ஊட்டி வளர்க்கப்படும் லூசுத்தனமான கோவில்களும் , தன் இனத்துக்காக எல்லாவற்றையும் துறந்து போராடிய புனிதர்களையும் ஒப்பிடுவதா????? அந்த புனிதர்களின் நினைவுகளைக் கொண்டாடும் இடத்தில் றோலும் , பனிசும் சாப்பிட்டு மகிழ்ச்சி விருந்து கொண்டாடுவதா??? அல்லது அவற்றை வித்து காசாக்குவதா???? அந்த இடத்தில் வியாபாரம் செய்வதை எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது???? ஒருமணித்தியாலம் இந்தப் புனிதர்களுக்காக பசி பொறுக்காதவர்கள் தேசியம் பேசுவது முரண்நகை புங்கையூரான் . தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு பக்கத்தில் மாவீரர் நாளில் ஒரு கச்சான் காறியாவது கடலை விற்பதை கண்டிருக்கிறீர்களா??????

நீங்கள் இணைத்த படம் பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடத்திய மாவீரர் தினத்தில் சுபேஸ் அண்ணாவால் எடுக்கப்பட்ட படம்.

நீங்கள் மாவீரர் தினத்துக்கு அதுவும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு நடத்திய மாவீரர் தினத்துக்கு சென்றீர்களா என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க அவ்வாறு சென்றிருந்தாலும் ஒரு மணித்தியாலத்திற்குள் திரும்பி விட்டிருப்பீர்கள் என்பது உங்கள் கருத்திலிருந்து புலப்படுகிறது.

அங்கு என்னென்ன உணவு வகை கொடுத்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஓரளவுக்கு காவி செல்லக்கூடிய, பழுதடையாத உணவுகளை தான் ஓர் நிகழ்வில் விற்க முடியும். அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறார்கள் என்பது உங்கள் பார்வை. மற்றபடி நீண்ட நேரமாக அங்கு நின்ற மக்கள் தமது பசிக்கு அதை உண்கிறார்கள் என்பது தான் சாதாரண மனிதாபிமானமுள்ள ஒருவரின் பார்வை.

மண்டப ஒழுங்குகள், மாவீரர் தின அலுவல்கள் செய்தவர்கள் எல்லாரும் இரவோடிரவாக அங்கு தான் தமது நேரத்தை செலவிட்டிருப்பார்கள். அவர்கள் எல்லாரும் வெளியில் போய் பிட்சா வாங்கி சாப்பிட வேணுமா? ஆக குறைந்தது 9-12 யூரோ கொடுத்து பிட்சா சாப்பிட்டாலும் மாவீரர் தினத்தை நடத்துபவர்களுக்கு காசு போகக்கூடாது. அப்படி தானே? தூர இடத்தில் இருந்தெல்லாம் மக்கள் வந்தார்கள். எத்தனை பேர் வேறு city இலிருந்து மாவீரர் தினத்துக்கு வந்தார்கள் என்பது கூட உங்களுக்கு தெரியாது. அதே போல் காலையில் வந்து இரவு சென்ற மக்களுக்கு பசித்தால் எதை உண்பது? மாவீரர் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு செல்ல 10 நிமிட பிரயாணம் செய்தால் போதும் என்றிருக்கும் உங்களுக்கு தூரத்திலிருந்து வரும் மக்களின் பசி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடைசி மாவீரர் தினத்தை நடத்தியவர்களுக்கு ஏதும் உதவி தன்னும் செய்து கொடுத்தீர்களா? அவ்வாறு விடியவிலிருந்து இரவு வரை அங்கு உதவி எல்லாம் செய்து கொடுத்தும் உங்களுக்கு களைப்பில்லை, பசியில்லை என்றால் உண்மையில் உங்களை பாராட்டியே தீர வேண்டும். அவ்வாறு எதுவும் செய்யாத நீங்கள் அவ்வாறானவர்களை பார்த்து நகைக்க முடியாது.

உங்கள் எழுத்துகளை நாட்டிற்காக பிரயோசனப்படுத்த எவ்வளவோ வழியிருக்கும் போது எப்படா இப்படியான விடயங்கள் அம்பிடும், எப்படா கவிதை எழுதலாம் என்று பார்த்துக்கொண்டிருந்து கவிதை எழுதி பிரசுரிக்கிறீர்கள். நிச்சயமாக இது எல்லோரையும் கொதிக்க வைக்க தான் எழுதியுள்ளீர்கள். ஆனால் உங்களிடமிருந்து எவ்வாறானதொரு கவிதை வரும் என்று தெரிந்த நபர்களுக்கு இது புதிதல்ல.

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் சுண்டல் மேலும் காசடிக்கிறதுக்கு நல்ல சாட்டு .பணம் சேர்க்க வேறுவழிகளை சிந்திப்பதை விட்டு இப்படியா மாவீரர்நாளை கேவலபடுத்தி கொண்டாடவேணும்? இப்படி கேவலப்படுத்தி காசு சேர்த்து கொண்டாடுவதைவிட வேறுவழிகள் பற்றி சிந்திக்கலாம்.

மாவீரர் நிகழ்வை நடத்தும் செலவுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்பதை கூறி விட்டு அவர்கள் காசடித்தார்களா இல்லையா என்பது பற்றி விவாதியுங்கள். அவர்களுக்கு காசடிப்பது தான் நோக்கமாக இருந்திருந்தால் விற்ற பூக்களுக்கும் விலை நிர்ணயம் செய்து விற்றிருப்பார்கள். ஆனால் விரும்பியளவு பணம் தந்து விட்டு பூக்களை வாங்குமாறு கூறினார்கள். சிலர் 30 சென்டி கொடுத்தும் பூக்களை வாங்கினார்கள். இன்னொரு திரியிலும் இதுபற்றி குறிப்பிட்டிருந்தேன்.

இவ்வளவும் சொல்லுறீங்கள், சரி. மாவீரர் தினத்தை நடத்தும் செலவுகளுக்கான முழுப்பொறுப்பையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஆம், என்றால் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் காசடிக்கிறார்கள் என்று மக்கள் (நீங்கள் உட்பட) சொல்லும் காலம் எதிர்காலத்தில் வராது.

Link to comment
Share on other sites

அருமை .......இந்தக்கவிதையில் கீழ் உள்ள வசனங்களை மிஸ் பண்ணப்பட்டுள்ளது .இதையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

ஒண்டுக்கும் ,இரண்டுக்கும் ,இருக்க மலைசல கூடம் ........

நன்றி வரவிற்கும் கருத்திற்க்கும் தமிழ்சூரியன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எல்லாம் நல்லா எழுதாலாம் ஹால் காசும் செக்யூரிட்டி காசும் mic செட் மற்றும் இதரபல செலவுகளுக்கும் கொத்துரொட்டி காசு தான் அன்னை உதவுது......... தாயாக மாவீரர் தினத்திலும் கலை நிகழ்சிகள் நடந்து தான் இருக்கு அதை நாங்கள் நேரிலையும் பாத்திருக்கம் மற்றது

ஒருத்தர் செத்தால் உடன சாப்பாட்டு கொண்டு போய் கொடுக்கிறது தமிழர் பண்பாடு அந்த 31 நாளும் ஒவொரு வீட்டில் இருந்தும் சாப்பாடு வரும்.....

நன்றி சுண்டல்

மற்றும் கோவுக்கு

எழுத ஏதுமில்லை

எல்லோரும் தெளிவுடன் எழுதிவிட்டனர்

ஒன்றை மட்டும் குறிப்பிடலாம்

வள்ளுவன் படத்தை போட்டுக்கொண்டு

செலவைப்பற்றி கணக்கெடுக்காது

வரவை குறி வைப்பதையும்

சாப்பாடு பற்றியும் எழுதுவதைப்பார்க்கும்போது

வள்ளுவனை நீங்கள் இன்னும் படிக்கணும் என்பதே எனது வேண்டுகோள்.

பொய் வெளிச்சமாக பிரகாசமாக இருக்கலாம்

ஆனால் அதை உடைத்து தர்மம் உண்மை ஒருநாள் வெளிவரும்

அப்பொழுது அது எல்லாவற்றையும் சுட்டெரிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் எழுதின கவிதையில் சில வார்த்தைப் பிரயோகங்கள் ஓவராக இருந்தாலும் அவரது கவிதையின் கருப்பொருளில் என்ன பிழை?...மாவீர‌ர் நாள் என்பது தன்னலம் கருதாது எங்களுக்காக,ஒரு நாடு வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுத்த புனிதர்களை நினைவு கூறும் நாள்.அந்த ஒரு நாளாவது அவர்களுக்காக உங்களால் மனத்தையும்,வாயையும் கட்டுப் படுத்தி இருக்க முடியாதா?...சின்னப்பிள்ளைகள்,வயோதிபர்கள்,நோயாளிகள் வீட்டில் இருந்து சான்விச் ஏதாவது கட்டிக் கொண்டு போறது...ஏன் இந்த நாள் கூட‌ உங்களுக்கு சுட‌ச்சுட‌ கொத்துரொட்டியும்,ரோல்ஸ்சும் தான் சாப்பிட‌ வேண்டுமோ?...உண்மையாகவே மனதில் மாவீர‌ர்களை நினைத்து கொண்டு போயிருந்தால் அந்த மண்ட‌பத்திற்குள் இருந்து சாப்பிட‌ மனம் வருமோ?...மாவீர‌ர் தினம் அடுத்த வருட‌ம் கொண்டாட‌ காசு தேவை என்டால் அதை எடுத்துச் சொல்லி மண்ட‌பத்திற்குள்ளே ரிக்கெட் விக்கிறது.கொத்திரொட்டி வித்துத் தான் காசு வரோனும் என்டு இல்லை இப்படி நேர்மையாக சொல்லியும் காசு கேட்கலாம்.மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

மாவீர‌ர் தினம் என்டால் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று கூட‌ வேண்டும் என்டீர்கள்...கூடிக் காட்டினீர்கள் என்ன சாதித்தீர்கள்? ஒரு விட‌யத்தை தவிர‌ இளம் பிராயத்தினருக்கு எமது போராட்ட‌த்தினை பற்றி எடுத்து சொன்னதை தவிர‌ அதுவும் எத்தனை பெற்றோர் தங்கட‌ பிள்ளைகளுக்கு போராட்டம் பற்றிய உண்மையை எடுத்துச் சொன்னார்களோ தெரியாது...மற்றப் படி நீங்கள் சாதித்தது என்ன மாவீர‌ர் தினத்திற்கு போனால் நீங்கள் ஒற்றுமையாய் இருக்கிறீர்கள் என நம்புமளவிற்கு சர்வதேச‌மும்,இலங்கையும் முட்டாள் இல்லை...அப்படி நீங்கள் ஒற்றுமையாய் இருக்கிறீர்கள் என சொல்வதன் மூலம் என்னத்தை சாதித்தனீங்கள்?...எங்களுக்காக போராடினவர்களில் செத்தவர்களை மாவீர‌ர் ஆக்கி நினைவு தினம் அனுஸ்டிக்கிறீங்கள் ஆனால் உயிரோடு இன்னும் முகாம்களிலும்,அகதி முகாம்களிலும்,வீடுகளில் இருந்து சிக்கி சீர‌ழியும் போராளிகளுக்கு என்ன செய்தனீங்கள்?...மாவீர‌ர் தினம் அனுஸ்டிக்கும் அதே வேளை உயிரோடு இருக்கும் போராளிகளுக்கும் ஏதோ செய்யுங்கோ அப்பத் தான் மாவீர‌ர் தினம் அனுஸ்டிப்பதில் ஒரு அர்த்தமிருக்கும் அதே வேளை செத்த போராளிகளது ஆத்மா சாந்தியடையும்,தலைவர் எம்மை நம்பி விட்டுப் போனதை செய்த பலன் இருக்கும்.

மாவீர‌ர் தினத்தில் கொத்துரொட்டி விற்பதை பற்றி இதற்கு முன்னரும் பல பழைய கருத்த‌ளார்கள் நெடுக்கர் உட்பட‌ கண்டித்து எழுதியிருந்தார்கள்...சுண்ட‌ல் இங்கு வெளிப்படையாக சொன்னது போல என்ன எழுதியிருக்குது என பார்க்காமல் யார் எழுதியிருக்கினம் என்று தான் பார்க்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீர‌ர் தினத்தில் கொத்துரொட்டி விற்பதை பற்றி இதற்கு முன்னரும் பல பழைய கருத்த‌ளார்கள் நெடுக்கர் உட்பட‌ கண்டித்து எழுதியிருந்தார்கள்...சுண்ட‌ல் இங்கு வெளிப்படையாக சொன்னது போல என்ன எழுதியிருக்குது என பார்க்காமல் யார் எழுதியிருக்கினம் என்று தான் பார்க்கிறார்கள்

இதில் எனது பெயர் உச்சரிக்கப்பட்டிருப்பதால் இக்கருத்தை இத்தலைப்பில் எழுத வேண்டி இருக்கிறது.

ஆம்.. மாவீரர் தினம் அதற்குரிய மகிமைகளோடு கடைப்பிடிக்கப்படனும் அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. இன்றைய நிலையில் அதில் பல குறைபாடுகள் இருந்தாலும்.. காலத்தின் தேவைக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மைகள் அவசியமாகின்றன.

மேலும் மாவீரர் நாள் உட்பட தாயகப் போராட்ட நினைவலைகளைக் கொண்டு செல்ல.. அவற்றை வரலாறாகக் காவி நிற்க.. உலகத்தமிழினம் சார்ந்த பொது அமைப்பை உருவாக்கி அதற்குள் இந்த நாடுகள் தோறும் உள்ள மாவீரர் தினம் கொண்டாடும் அமைப்புக்களை எல்லாம் உள்வாங்கி எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற பொது விதிகளை நிறுவி.. அவற்றின் கீழ் செயற்பட வேண்டும். அதுமட்டுமன்றி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படாத தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இதன் வழமை கொண்டு வரப்படுதல் அவசியம். தமிழர்களின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் பற்றிய அறிதல் எல்லோரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும். அதேவேளை தமிழர்களின் விடுதலைக்கான தேவையை அவர்களும் உலகமும் உணரச் செய்ய இது உதவவும் வேண்டும்.

அண்மையில் பிபிசி ஒரு செய்தி படித்தேன் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டமே மொடேன் ஆயுதப் போராட்டத்தில் நீண்டது என்று கூறி இருந்தார்கள். குறிப்பாக ஆசியாவில் நீண்டது என்று சொல்லி இருந்தார்கள். அத்தகைய ஒரு போராட்டத்தை தமிழன் தன் விடிவுக்காக எத்தகைய தியாகங்கள் மத்தியில் நடத்தினான் என்பதை அவன் தன் வரலாறு எங்கனும் காவிச் செல்வது கூட அவனுக்கு என்று ஒரு இனம் நிலம் மொழி இருந்தது என்ற எண்ணத்தை விதைக்கும்..! எமது விடுதலைக்கும் வலுச் சேர்க்கும்.

மேலும்.. கோமகன் எழுதிய கவிதையின் கருப்பொருளில் தவறில்லை. ஆனால் அவர் பிரபாகரனுக்கு படையல் செய்து சாப்பிடுபவர்களைப் பற்றி கவிதை எழுத தவறுவது தற்செயலும் அல்ல..!

பிரபாகரன் ஒரு ஆயுத ஏந்திய போராளியாக தன் சாவைப் பற்றி அறிந்தே இருந்தார். தன் சாவைப் பற்றி இந்தியப் படைகள் காலத்திலேயே சொல்லிவிட்டார். தனக்குப் படையல் செய்யச் சொல்லி அவர் போராளிகளுக்குச் சொல்லவில்லை. ஜொனியின் வரலாற்றை யோகி எழுதியதில் இருந்து படித்தால் அது புரியும். ஆனால் விசமத்தனமாக சிலர் தங்கள் சுயசித்தாந்தங்களை புகுத்த.. அவருக்கு படையல் செய்கின்றனர். சமூக வலையில்.. முகநூலிலும் அவற்றைப் பிரசுரிக்கின்றனர். அதனைப் படம் பிடித்து.. ஊருக்கு சொல்கின்றனர். பிரபாகரனோ.. மாவீரர்களோ.. படையல் செய்ய சாதாரண மனிதச் சாவை அல்ல அவர்கள் அடைந்துள்ளனர். பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்று நம்புகின்றவர்கள் அவருக்கு மாவீரர்களுக்கு ஒத்த வீரவணக்கத்தைச் செய்யுங்கள் படையல் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதனை உங்களோடு செய்து கொண்டு உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்..!

ஆனால் படையல் செய்வது மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலி அல்ல. அது அவர்களை அவமதிக்கும் செயல். மாவீரர் தினத்தில் களைப்பில் பசியில் கொத்துரொட்டி.. றோல்.. கூல் ரிங்க்ஸ் சாப்பிடுற மக்கள் செய்யும் அவமதிப்பை விட படையல் செய்வது மோசமானது. ஆனால் அதை பற்றி கோமகன் கவிதை எழுதமாட்டார். எனும் போது.. அவரின் கவிதையில் பக்கச் சார்ப்பு என்பதை மக்கள் காண நேரிடுவது தவிர்க்க முடியாதது..! :icon_idea:

Link to comment
Share on other sites

அந்த ஒரு நாளாவது அவர்களுக்காக உங்களால் மனத்தையும்,வாயையும் கட்டுப் படுத்தி இருக்க முடியாதா?...சின்னப்பிள்ளைகள்,வயோதிபர்கள்,நோயாளிகள் வீட்டில் இருந்து சான்விச் ஏதாவது கட்டிக் கொண்டு போறது...ஏன் இந்த நாள் கூட‌ உங்களுக்கு சுட‌ச்சுட‌ கொத்துரொட்டியும்,ரோல்ஸ்சும் தான் சாப்பிட‌ வேண்டுமோ?...உண்மையாகவே மனதில் மாவீர‌ர்களை நினைத்து கொண்டு போயிருந்தால் அந்த மண்ட‌பத்திற்குள் இருந்து சாப்பிட‌ மனம் வருமோ?...

ரதி,

வாதத்திற்கு நல்லா இருக்கு.. ஆனால் பின்வருவனவற்றையும் ஒருதரம் சிந்தித்துப் பார்ப்போம்.

நிகழ்வுக்கு வந்த ஒரு பொதுமகன் மயக்கமுறுகிறார். உடனே தண்ணீர் தெளித்துப் பார்ப்பார்கள்.. :D அவர் கண்விழிக்கவில்லையாயின் அவசர மருத்துவ ஊர்தியை அழைப்பார்கள்..!

அவர்கள் வருவார்கள். கூடவே காவல்துறையும் வரும். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார்கள். காவல்துறை நிகழ்வு நடக்கும் சூழலை நோட்டமிடும். :unsure:

இத்தனை பேர் வருகிறார்களே.. என்ன வசதி செய்து கொடுத்தீர்கள் என்று கேட்பார்கள். ஒன்றும் சரியான பதில் வராத இடத்தில், அடுத்த வருடம் நிகழ்வை செய்யமுடியாதபடிக்கு மாற்றிவிடுவார்கள். :rolleyes::huh::D

Link to comment
Share on other sites

[size=4]

கோமகன் எழுதின கவிதையில் சில வார்த்தைப் பிரயோகங்கள் ஓவராக இருந்தாலும் அவரது கவிதையின் கருப்பொருளில் என்ன பிழை?..

[/size]

[size=4]சரி என்று ஒருவர் நினைப்பதை பிழையான வழியில் கூறலாம் என்பது தவறு. [/size]

உங்கள் பொன்மொழிகளில் இருந்து.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எனது பெயர் உச்சரிக்கப்பட்டிருப்பதால் இக்கருத்தை இத்தலைப்பில் எழுத வேண்டி இருக்கிறது.

ஆம்.. மாவீரர் தினம் அதற்குரிய மகிமைகளோடு கடைப்பிடிக்கப்படனும் அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. இன்றைய நிலையில் அதில் பல குறைபாடுகள் இருந்தாலும்.. காலத்தின் தேவைக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மைகள் அவசியமாகின்றன.

உங்கட கொள்கையை மாத்திட்டீங்களா? மிக்க மகிழ்ச்சி...மாவீரரை நினைத்துக் கொண்டு மண்டபத்தில் இருந்து கொண்டு கொத்துரொட்டியை வெட்டுங்கோ இறந்த ஆத்மாக்கள் சந்தோசப்படும்...உந்தக் கொத்துரொட்டி கொள்கை அடுத்த வருடம் மாத்தாதேயுங்கோ...நேரத்திற்கு நேரம் உங்களுக்கு உங்கட கொள்கையை மாத்திறதே வேலையாய் போச்சு[உங்கட சுயநலத்திற்காய்]

மேலும் மாவீரர் நாள் உட்பட தாயகப் போராட்ட நினைவலைகளைக் கொண்டு செல்ல.. அவற்றை வரலாறாகக் காவி நிற்க.. உலகத்தமிழினம் சார்ந்த பொது அமைப்பை உருவாக்கி அதற்குள் இந்த நாடுகள் தோறும் உள்ள மாவீரர் தினம் கொண்டாடும் அமைப்புக்களை எல்லாம் உள்வாங்கி எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற பொது விதிகளை நிறுவி.. அவற்றின் கீழ் செயற்பட வேண்டும். அதுமட்டுமன்றி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படாத தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இதன் வழமை கொண்டு வரப்படுதல் அவசியம். தமிழர்களின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் பற்றிய அறிதல் எல்லோரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும். அதேவேளை தமிழர்களின் விடுதலைக்கான தேவையை அவர்களும் உலகமும் உணரச் செய்ய இது உதவவும் வேண்டும்.

அண்மையில் பிபிசி ஒரு செய்தி படித்தேன் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டமே மொடேன் ஆயுதப் போராட்டத்தில் நீண்டது என்று கூறி இருந்தார்கள். குறிப்பாக ஆசியாவில் நீண்டது என்று சொல்லி இருந்தார்கள். அத்தகைய ஒரு போராட்டத்தை தமிழன் தன் விடிவுக்காக எத்தகைய தியாகங்கள் மத்தியில் நடத்தினான் என்பதை அவன் தன் வரலாறு எங்கனும் காவிச் செல்வது கூட அவனுக்கு என்று ஒரு இனம் நிலம் மொழி இருந்தது என்ற எண்ணத்தை விதைக்கும்..! எமது விடுதலைக்கும் வலுச் சேர்க்கும்.

மேலும்.. கோமகன் எழுதிய கவிதையின் கருப்பொருளில் தவறில்லை. ஆனால் அவர் பிரபாகரனுக்கு படையல் செய்து சாப்பிடுபவர்களைப் பற்றி கவிதை எழுத தவறுவது தற்செயலும் அல்ல..!

பிரபாகரன் ஒரு ஆயுத ஏந்திய போராளியாக தன் சாவைப் பற்றி அறிந்தே இருந்தார். தன் சாவைப் பற்றி இந்தியப் படைகள் காலத்திலேயே சொல்லிவிட்டார். தனக்குப் படையல் செய்யச் சொல்லி அவர் போராளிகளுக்குச் சொல்லவில்லை. ஜொனியின் வரலாற்றை யோகி எழுதியதில் இருந்து படித்தால் அது புரியும். ஆனால் விசமத்தனமாக சிலர் தங்கள் சுயசித்தாந்தங்களை புகுத்த.. அவருக்கு படையல் செய்கின்றனர். சமூக வலையில்.. முகநூலிலும் அவற்றைப் பிரசுரிக்கின்றனர். அதனைப் படம் பிடித்து.. ஊருக்கு சொல்கின்றனர். பிரபாகரனோ.. மாவீரர்களோ.. படையல் செய்ய சாதாரண மனிதச் சாவை அல்ல அவர்கள் அடைந்துள்ளனர். பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்று நம்புகின்றவர்கள் அவருக்கு மாவீரர்களுக்கு ஒத்த வீரவணக்கத்தைச் செய்யுங்கள் படையல் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதனை உங்களோடு செய்து கொண்டு உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்..!

ஆனால் படையல் செய்வது மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலி அல்ல. அது அவர்களை அவமதிக்கும் செயல். மாவீரர் தினத்தில் களைப்பில் பசியில் கொத்துரொட்டி.. றோல்.. கூல் ரிங்க்ஸ் சாப்பிடுற மக்கள் செய்யும் அவமதிப்பை விட படையல் செய்வது மோசமானது. ஆனால் அதை பற்றி கோமகன் கவிதை எழுதமாட்டார். எனும் போது.. அவரின் கவிதையில் பக்கச் சார்ப்பு என்பதை மக்கள் காண நேரிடுவது தவிர்க்க முடியாதது..! :icon_idea:

ஏன் உங்களால் போய் சாஸ்திரியின்ட திரியில் உங்கட கருத்தை சொல்ல இயலாமல் போனது? சாஸ்திரிக்கு பயமா?... சாஸ்திரியின் படையலுக்கு எதிராக தனித் திரி தொடங்கி எழுதியிருக்கலாமே ஏன் எழுதவில்லை?...நீங்கள் எழுதாததற்கு ஒரு காரணம் வைத்திருப்பீர்கள்...நீங்கள் எழுதாமல் இருந்து கொண்டு கோமகனை பார்த்து நீ ஏன் எழுதவில்லை எனக் கேட்கிறீர்கள்...இது உங்களுக்கே நியாயமாய் இருக்குதா?...மொத்தத்தில நான் எதிர் பார்த்த மாதிரி ஆட்டுக்குள்ள,மாட்டை செருகின்றதே உங்கட வேலை என மீண்டும் எழுத்தில் காட்டியுள்ளீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

வாதத்திற்கு நல்லா இருக்கு.. ஆனால் பின்வருவனவற்றையும் ஒருதரம் சிந்தித்துப் பார்ப்போம்.

நிகழ்வுக்கு வந்த ஒரு பொதுமகன் மயக்கமுறுகிறார். உடனே தண்ணீர் தெளித்துப் பார்ப்பார்கள்.. :D அவர் கண்விழிக்கவில்லையாயின் அவசர மருத்துவ ஊர்தியை அழைப்பார்கள்..!

அவர்கள் வருவார்கள். கூடவே காவல்துறையும் வரும். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார்கள். காவல்துறை நிகழ்வு நடக்கும் சூழலை நோட்டமிடும். :unsure:

இத்தனை பேர் வருகிறார்களே.. என்ன வசதி செய்து கொடுத்தீர்கள் என்று கேட்பார்கள். ஒன்றும் சரியான பதில் வராத இடத்தில், அடுத்த வருடம் நிகழ்வை செய்யமுடியாதபடிக்கு மாற்றிவிடுவார்கள். :rolleyes::huh::D

சுருக்கமாய் சொன்னால் இது ஒரு களியாட்ட விழா போய் தின்று,குடிச்சு,சொந்தகாரரை,நண்பரை கண்டு கதைத்து மகிழ்ச்சியாய் இருக்கோனும் என சொல்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி...நீங்கள் மேலே எழுதினது நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு என்ட மாதிரி இருக்குது :( உங்கட மனட்சாட்சிக்கே தெரியும் பிழை என்று ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கொள்கையை மாத்திட்டீங்களா? மிக்க மகிழ்ச்சி...மாவீரரை நினைத்துக் கொண்டு மண்டபத்தில் இருந்து கொண்டு கொத்துரொட்டியை வெட்டுங்கோ இறந்த ஆத்மாக்கள் சந்தோசப்படும்...உந்தக் கொத்துரொட்டி கொள்கை அடுத்த வருடம் மாத்தாதேயுங்கோ...நேரத்திற்கு நேரம் உங்களுக்கு உங்கட கொள்கையை மாத்திறதே வேலையாய் போச்சு[உங்கட சுயநலத்திற்காய்]

ஏன் உங்களால் போய் சாஸ்திரியின்ட திரியில் உங்கட கருத்தை சொல்ல இயலாமல் போனது? சாஸ்திரிக்கு பயமா?... சாஸ்திரியின் படையலுக்கு எதிராக தனித் திரி தொடங்கி எழுதியிருக்கலாமே ஏன் எழுதவில்லை?...நீங்கள் எழுதாததற்கு ஒரு காரணம் வைத்திருப்பீர்கள்...நீங்கள் எழுதாமல் இருந்து கொண்டு கோமகனை பார்த்து நீ ஏன் எழுதவில்லை எனக் கேட்கிறீர்கள்...இது உங்களுக்கே நியாயமாய் இருக்குதா?...மொத்தத்தில நான் எதிர் பார்த்த மாதிரி ஆட்டுக்குள்ள,மாட்டை செருகின்றதே உங்கட வேலை என மீண்டும் எழுத்தில் காட்டியுள்ளீர்கள்

எங்கள் கொள்கை மாறவில்லை. நாங்கள் மாவீரர் நாளுக்குப் போய் கொத்துரொட்டியோ.. கூல்ரிங்சோ சாப்பிடுறதில்லை. ஆனால் அதேவேளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிகழக் கூடிய நெருக்கடிகள் பற்றியும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

ஊரில் ஓரிடத்தில் மட்டும் மாவீரர் நாள் கொண்டாடப்படுவதில்லை... வட்டம் கோட்டம் மாவீரர் துயிலும் இல்லங்கள்.. வீடுகள்.. சந்திகள்.. கோவில் முன்றல்கள் என்று மக்களின் வசதிக்கு ஏற்ப அது அமையப் பெறும். மாவீரர் நாள் பந்தல்களில் தூர இருந்து வரும் மக்களுக்கு மக்கள் போராளிகள் தாக சாந்தி அளிப்பர்.

புலம்பெயர் நாடுகளில் அப்படி செய்ய முடியாது. அத்தோடு மக்கள் அதிக தூரம் பயணித்தும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு வரவேண்டிய சூழல் உள்ளதால் எல்லாக் காரணிகளையும் கருத்தில் கொண்டு நெகிழ்வுப் போக்குகளை கடைப்பிடிக்க வேண்டியே உள்ளது.

நல்லூரில் ஆண்கள்.. பெரியாக்கள் சேட்டுக் கழற்றிட்டுப் போக.. சின்னாக்கள் கழட்டாமல் போகலாம். நெகிழ்வுத் தன்மைகளும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க வழி செய்யும். ஏற்பாட்டுச் சூழல்களுக்கு ஏற்ப அது நிகழ்வது அவசியம். நான் பார்த்தவரை மாவீரர் நாள் ஈகைச் சுடர் ஏற்றல் மற்றும் அதன் பின்னரான அக வணக்க நிகழ்வுகளின் போது மக்கள் சாப்பாட்டோடு அலைவதைக் காணவில்லை. அது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

மேலும்.. ஆடம்பர பட்டுடையில்.. நகையில் மாவீரர் அக வணக்கம் செய்வது இப்போது மாற்றம் கண்டு வருகிறது. மக்களில் பலர் நாகரிமான முறையில் மதிக்கத்த உடை அணிந்து மரியாதை செய்ய விளைகின்றனர். மக்களாகவே உணர்ந்து திருந்தினால் அதன் ஆயுள் அதிகம்..!

மேலும்..

தலைவருக்கு படையல் செய்த ஒரு படம்.. முகநூலில் பார்த்தேன். பின்னர் யாழிலும் நாற்சந்தியில் அதைப் பார்த்தேன். அவற்றிற்கு அநாவசிய விளம்பரம் அவசியமில்லை என்பதால் கருத்துச் சொல்லவில்லை. இங்கு அதை ஒத்த ஒரு விடயத்துக்கு மக்களைச் சாடும் போது மக்களில் சிலர் அப்படி செய்வதையும் சேர்த்துச் சாடுவதே சிறப்பு. அதையும் கவிஞர்கள் செய்ய வேண்டும். தங்களுக்கு வேண்டியவை செய்யுறதை மறைச்சு.. மற்றவை செய்யுறதை மட்டும் குறை சொல்வது அல்ல.. சமூக அக்கறை..! :icon_idea:

Link to comment
Share on other sites

ரதி,

வாதத்திற்கு நல்லா இருக்கு.. ஆனால் பின்வருவனவற்றையும் ஒருதரம் சிந்தித்துப் பார்ப்போம்.

நிகழ்வுக்கு வந்த ஒரு பொதுமகன் மயக்கமுறுகிறார். உடனே தண்ணீர் தெளித்துப் பார்ப்பார்கள்.. :D அவர் கண்விழிக்கவில்லையாயின் அவசர மருத்துவ ஊர்தியை அழைப்பார்கள்..!

அவர்கள் வருவார்கள். கூடவே காவல்துறையும் வரும். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார்கள். காவல்துறை நிகழ்வு நடக்கும் சூழலை நோட்டமிடும். :unsure:

இத்தனை பேர் வருகிறார்களே.. என்ன வசதி செய்து கொடுத்தீர்கள் என்று கேட்பார்கள். ஒன்றும் சரியான பதில் வராத இடத்தில், அடுத்த வருடம் நிகழ்வை செய்யமுடியாதபடிக்கு மாற்றிவிடுவார்கள். :rolleyes::huh::D

அப்புறம் என்ன இனிமேல் இந்த நாட்டில் மாவீரர் தினம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு வரும் அதை தான் சில நலன் விரும்பிகள் எதிர் பார்க்கிறார்கள். இங்கு கும்மி அடிப்போர் அதற்கும் ஒரு கவிதை எழுதுவார்கள் தலைப்பு வன்னியில் புலிகள் கதை முடிய புலப் புலிகள் மாவீரர் தினத்தை மறந்தனர் என்று இதற்கு முற்போக்கு போராளிகள் நாங்க எல்லாம் வீட்டிலேயே கொண்டாடுவோம் எண்டு வெட்டி வசனம் எழுத நம்ம திண்ணையும் களை கட்டும். எப்பிடியோ புலம்பெயர் தேசங்களில் மாவீரர் தினத்தை தடை பண்ணிய பெருமையுடன் குள்ள நரிகள் அடுத்த கட்ட நகர்வை தொடருவர். அப்புறம் எதற்கு ஐநா பேரணியில் யூஸ் குடுக்கினம் என்ற கேள்வியும் ஒரு நாள் தண்ணி குடிக்காமல் தமிழன் பேரணியில் கலந்து கொள்ள மாட்டானா என்ற கேள்வியுடன் இனிய கவிதை பிறக்கும் (தாங்கள் நடாத்தும் மே தின ஊர்வலங்களில் விஸ்கி குடுப்பதை மறப்பார்கள். தாங்கள் வீர மக்கள் தினம் மற்றும் தியாகிகள் தினத்தில் கொத்து ரோட்டி கொடுப்பதைப் பற்றி பேச மாட்டார்கள்)
Link to comment
Share on other sites

சுருக்கமாய் சொன்னால் இது ஒரு களியாட்ட விழா போய் தின்று,குடிச்சு,சொந்தகாரரை,நண்பரை கண்டு கதைத்து மகிழ்ச்சியாய் இருக்கோனும் என சொல்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி...நீங்கள் மேலே எழுதினது நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு என்ட மாதிரி இருக்குது :( உங்கட மனட்சாட்சிக்கே தெரியும் பிழை என்று ^_^

அப்படி ஏதும் தெரியவில்லை.. :D

அண்மையில் ஒரு விடயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ரொரான்ரோவின் மேயரை நீதிமன்றம் வீட்டுக்கு அனுப்பிவிட்டது. காரணம் மூவாயிரம் சொச்சத்துக்கு காசு சேர்த்து தனது கால்பந்து அணியை ஊக்குவித்தார் என்பது. ஆகவே, சட்டம் என்று வரும்போது எதையும் பார்க்க மாட்டார்கள். :blink:

இதனடிப்படையில், கடந்த பல வருடங்களாக நல்லமுறையில் மாவீரர் நிகழ்வை நடத்தி வருவதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். :rolleyes:

Link to comment
Share on other sites

[size=4]

இதனடிப்படையில், கடந்த பல வருடங்களாக நல்லமுறையில் மாவீரர் நிகழ்வை நடத்தி வருவதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். :rolleyes:

எங்களால் ஒரு போட்டியை கூட யாழ்களத்தில் நடாத்த முடியவில்லை. அதை ஊக்குவித்தவர்களையே 'பணத்தை அடித்துவிட்டீர்களா? என மொட்டையாக கேட்கும் துரியோதனர்கள் உள்ள களத்தில் ஒரு மாவீரர் தினத்தை சிறப்பாக செய்வது என்பது அதே துச்சாதனர்களுக்கு கடுப்பாகத்தான் இருக்கும். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஏதும் தெரியவில்லை.. :D

அண்மையில் ஒரு விடயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ரொரான்ரோவின் மேயரை நீதிமன்றம் வீட்டுக்கு அனுப்பிவிட்டது. காரணம் மூவாயிரம் சொச்சத்துக்கு காசு சேர்த்து தனது கால்பந்து அணியை ஊக்குவித்தார் என்பது. ஆகவே, சட்டம் என்று வரும்போது எதையும் பார்க்க மாட்டார்கள். :blink:

இதனடிப்படையில், கடந்த பல வருடங்களாக நல்லமுறையில் மாவீரர் நிகழ்வை நடத்தி வருவதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். :rolleyes:

மாவீரர்

நாள் என்பது அஞ்சலியுடன் புலத்தில் முடிந்துவிடுவதில்லை.

அது

[size=5]அமைதி வணக்கம் [/size]

[size=5]மாவீரர் குடும்பங்களை கௌரவித்தல்[/size]

[size=5]பிரச்சாரம் செய்தல்[/size]

[size=5]இளையோருக்கு எமது கலை பண்பாட்டை நுகரச்செய்தல்[/size]

[size=5]செய்திகளையும் தகவல்களையும் வெளிக்கொண்டுவரல்[/size]

[size=5]இசை மற்றும் நடனங்களில் இந்த ஆண்டு வெற்றியீட்டியோருக்கு பரிசு வளங்கல்[/size]

[size=5]அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்தல்[/size]

[size=5]மக்கள் முன் அவர்கள் தமது திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தரல்[/size]

[size=5]தமிழரது கலை பண்பாடு வீரம் என்பனவற்றை உலகறியச்செய்தல்[/size]

[size=5]அறிக்கை வாசித்தல்[/size]

[size=5]முக்கிய பிரமுகர்களது மாவீரர் தின செய்தி வாசித்தல்[/size]

[size=5]பேச்சுக்கள்[/size]

[size=5]புதிய வெளியீடுகளை மக்களுக்கு கொடுத்தல்[/size]

[size=5]அடுத்த கட்ட நிகழ்வுகள் பற்றி அறியத்தரல்[/size]

[size=5]விண்ணப்பங்கள் மற்றும் கையெடுத்து வேட்டைகள் நடாத்துதல்[/size]

[size=5]பல நூறு மைல்கள் அப்பால் இருந்து வரும் மக்களின் சந்திப்புக்கள்.................. [/size]என ஆயிரம் நல்ல விடயங்களை உள்ளடக்கியது.

இவையே எனது கண்களில் பட்டன.

இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் மாவீரர் தின நல்லவிடயங்களை அலசி அதிலுள்ள குறைகளையும் குறிப்பிட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

ஆனால் இது மாவீரர் நன்மைக்காக அல்லாது யாரையோ குறிவைத்து அதற்காக மாவீரர்களை பாவிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அதற்கு சார்பாக இங்கு கருத்து எழுதியோர் எந்த ஒரு மாவீரர் நிகழ்வுக்கும் போகாதவர்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

அடுத்து

இவை எல்லாம் கூடாது வேண்டாம் என ஏதிராக மாவீரர் தினம் செய்தோருடைய மாவீரர் இல்லத்துக்கு போன வருடம் போயிருந்தேன்

அங்கும் ரீயும் வடையும் தந்து எவ்வளவு என்றாலும் போடுங்கள் என்றார்கள். அதையும் இங்கு முன் வைக்கின்றேன்.

சும்மா வெளியில் நின்று கல் எறிவது சுலபம். ஆனால் உள்ளே நிற்பவனுக்கு எல்லாம் தெரியும். அதை மறக்கவேண்டாம். தாயக மக்களுக்காக எல்லாவற்றையும் மௌனமாக கேட்டபடி அவர்கள் பணி தொடரும்.............

Link to comment
Share on other sites

கவிதையில் கொத்துரொட்டி போல சூடும் காரமும் கூடித்தான் போய்விட்டது .

மாவீரரை மதிப்பளிக்க போவர்களை பார்க்கிலும் எதுக்கும் அள்ளுப்படும் பொதுஜனங்கள் என்ற ஒரு வட்டத்தை கவரத்தான் இப்படியான செயற்பாடுகள் எல்லாம் .

அதை நியாயப்படுத்த இங்கு பலர் சொல்லும் காரணங்கள் புல்லரிக்க வைக்கின்றது .மாதக்கணக்கில் காடு, மேடு, கடல், வெளி ,வெயில் ,மழை ,பார்க்காது சுமக்கமுடியாத சுமைகளை தூக்கி பசி பட்டினி இருந்து கடைசியில் உயிரையும் கொடுத்தவர்களு செலுத்தும் அஞ்சலியில் ஒருநாள் பட்டினி இருக்கமுடியாது என்று சொல்பவர்களையும் காலநிலை பற்றி கதையளப்பவர்களையும் நினைக்க வெட்கமாக இருக்கின்றது .

மண்டப வாடகை ,வேறு செலவுகள் என்பதில் ஒருவித நியாயம் இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் பணத்திற்கு இதில் வரும் பணம் ஒரு தூசு . பணம் தான் முக்கியம் என்றால் அடுத்த வருடம் பார் கூட திறப்பார்கள் ,அதை வேறு பலர் வந்து நியாய படுத்துவார்கள் .

இது முற்றுமுழுதாக மக்கள் வருகையின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட எடுக்கும் ஒரு யுக்தியே தவிர வேறொன்றும் இல்லை .அமைதியாக ஆடம்பரமம் இல்லாமல் வந்து ஒரு விளக்கு கொழுத்திவிட்டு போங்கள் என்றால் சொந்தங்களை பறிகொடுதவர்களை விட ஒரு குருவியும் வராது .

தமிழ் நாட்டில் பஸ் பஸ்சாக மக்களை ஏற்ரிவந்து கூட்டம் போட்டு முடிய ஒரு பிரியாணி பாசல் கொடுப்பார்கள். அப்படிதான் இதுவும் .

இதை நடத்துபவர்களுக்கு ஆத்மார்தமாக மாவீரர்களுக்கு கொடுக்கும் மரியாதையை விட அங்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் தான் அக்கறை .எனவே எவராலும் எதுவும் செய்யமுடியாது .

Link to comment
Share on other sites

[size=4]அர்யுன் அண்ணா,[/size]

[size=1]

[size=4]புதிதாக ஒன்றும் இல்லையே? நன்றிகள். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]அர்யுன் அண்ணா,[/size]

[size=1]

[size=4]நீங்கள் போன இடத்தில் தண்ணி வேண்டினேன் அடித்தேன் இல்லை அந்த பார்டிக்கு போனேன் என எழுதும்பொழுது நாங்கள் கேட்பதில்லையே. " ஏன் அந்தப்பணத்தை நாடில் உள்ள வறியவர்களுக்கு கொடுத்தால் என்ன என?" அது நாகரீகம் இல்லை என்பது பெரும்பாலனவர்கள் கருத்து. [/size][/size]

[size=1]

[size=4]அதேபோல் இங்கே இசை கனேடிய சட்டம் பற்றி எழுதி இருந்தார். ரோப் போர்ட்டிற்கு என்ன நடந்தது என தெளிவாக புரிந்த [/size][size=4] நீங்கள் ஏனோ இதில் கண்ணை மூடி பொய்யிற்கு துணை போகிறீர்கள்.[/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

Link to comment
Share on other sites

இவர்களுடைய கதையை பாத்தால் இனி எட்டு சிலவும் வைக்க கூட விதம் விதமா சமைக்க கூடா அந்தியேட்டியும் வைக்க கூடாது போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எப்பவும் மரணமானவர்களின் பெயரால்.. எட்டுச் செலவு என்று ஆடு வெட்டி சாப்பிடுறதையும்.. அந்தியேட்டி என்று வயிறு முட்ட விழுங்கிறதையும்.. வீரமாக் கருதேல்ல. புறநாணுற்றின் படி.. நடுகல் நட்டு வீரமறவர்களை தெய்வமாய்த் தொழுததே அதிகம்.

மாவீரர்கள் அதைக் கூடக் கேட்கவில்லை. தாங்கள் வீழ்ந்த இடத்தில் ஒரு கல்லையாவது நட்டுவையுங்கள் என்று தான் விரும்பினார்கள். தங்கள் இலட்சியத்தை தொடர்ந்து சென்று.. வெல்லுங்கள் என்று தான் சொன்னார்கள்.

அந்தேட்டியப் படையலும்.. திவசச் சாப்பாடும்.. தமிழருக்கு விடிவைக் கொண்டு வரும் என்றால் நீங்கள் அதனை தாராளமாகச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் தேசிய தலைவர் தனக்கு அப்படி எல்லாம் செய்யச் சொன்னதாக எந்தப் பதிவும் இல்லை. மாறாக அவர் கேட்டது இதைத்தான்...

//தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். யோகி ஜொனி பற்றிய வரலாற்றில் எழுதியது//

அவர் இறந்திட்டார் என்று நம்புறவை அவரின் பெரு விருப்பை நிவர்த்தி செய்தியளோ..???! இல்லை இல்ல. பிறகெதற்கு அவருக்கு படையல் வைச்சு குடும்பத்தில் உள்ளவர்களின் பல்சுவை உணவு கேட்கும் வாயை வயிற்றை அவரின் பெயரால் நிரம்புகிறீர்கள்..????!

மூடத்தனங்களுக்கு எதிராக வெட்டி வீழ்த்திறம் என்றவையே முழு மூடத்தனத்தை அதுவும் உலகமே வியந்து பார்க்கும் ஒரு புரட்சியாளனின் பெயரால் செய்கிறார்கள். இவர்கள் என்ன பிரபாகரன் வீட்டு இரத்த உறவுகளா..????! குடும்ப உறவுகள் தான் சம்பிரதாய ரீதியில் இப்படியான மூடத்தனங்களைச் செய்வது.???!

இதை விட ஒரு இன..சமூக விடுதலைக்காக முற்போக்கான சிந்தனைகளோடு.. தன் வாழ் நாளையே அர்ப்பணித்த ஒரு புரட்சியாளனை அவமதிக்கும் செயல் வேறு எதுவுமாக இருக்க முடியாது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையோட சேர்த்து மாவீரர்களின் பெயரால் படையல் வைக்கிறவைக்கும் ஒரு பதில் போடலாம் தானே. சுய முரணாளர்களாக அவர்களே. ஒன்றை மறுக்கிறார்கள்... பின்னர் அதை ஒத்த இன்னொன்றை தாமே செய்கிறார்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மாவீரர் தினத்தில் கொத்துரொட்டி போன்ற சாப்பாடுகளை கொடுப்பது தான் பிழை என்கிறோமே தவிர மாவீரர் தினம் செய்கின்றது பிழை என்றோ அதற்கான ஏற்பாடுகளில் பிழை என்றோ சொல்ல வரவில்லை...மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்கின்ற அமைப்புகளில் ஒருத்தரும் பிழை பிடிக்கவில்லை ஆனால் மாவீரர் தினத்தன்று அந்த மண்டபத்தில் போய் இருந்து கொண்டு உங்களால் கொத்து ரொட்டி சாப்பிடாமல் இருக்க முடியாது என்பது எனக்குத் தெரியாமல் போய் விட்டது அதைத் தான் பிழை என்கிறோம்...அந்தப் போராளிகள் எல்லாவற்றையும் துறந்து எங்களுக்காக போராடி இறந்தார்கள் ஆனால் நாங்கள் இங்கே இருந்து கொண்டு மண்டபத்தில் இருந்து கொண்டு கொ.ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு நாங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு மாவீரர் தினம் செய்கிறோம் தெரியுமா என எழுதுவோம்...அவர்களுக்காக நீங்கள் செய்வது இது ஒன்று தான் இதையும் செய்யாட்டில் நீங்கள் என்ன மனிசர்?...போராளிகள் போராடிப் போட்டு தாங்கள் எவ்வளவு கஸ்ட‌ப்பட்டு போராடினாங்கள் தெரியுமா என எப்பவாவது சொல்லி இருக்கினமா அது என்ன நீங்கள் மட்டும் நாங்கள் எவ்வளவு கஸ்ட‌ப்பட்டு மாவீர‌ர் தினம் செய்தோம் தெரியுமா? என எழுதுகிறீர்கள்...காசு வேண்டுக் கொண்டா செய்கிறீர்கள் சேவை அடிப்படையில் தானே உதவி செய்கிறீர்கள்...பிறகு எப்படி சேவை செய்து போட்டு அதை சொல்லிக் காட்ட உங்களால் முடியுது?

அர்ஜீன் அண்ணா சொன்ன மாதிரி கொ.ரொட்டி விற்காமல் உங்களால் மாவீர‌ர் தினம் நட‌த்த முடியாது அது தான் உண்மை...2009 ம் ஆண்டு கூட‌ பாராளுமன்றத்திற்கு முன்னால் சாப்பாட்டை குடுத்து தானே ஆட்களை கூப்பிட்டவை ...இப்படியான நிலைமைகள் மாற வேண்டும் என்பது தான் எனது விருப்பம் இல்லை எங்கட‌ செத்த வீட்டிலும் நாங்கள் கொ.ரொட்டி சாப்பிடுற ஆட்கள் என்டால் சாப்பிட்டு கொண்டு இருங்கோ...உங்களோட‌ கதைத்து வேலையில்லை நன்றி

Link to comment
Share on other sites

[size=4]உணவு என்பது அடிப்படை மனித உரிமை. [/size][size=1]

[size=4]அதை மறுக்க முடியாது. [/size][/size]

ரதி நீங்க மாவீரர் தினம் போனீங்களா? அங்கு எவ்வளவு நேரம் இருந்திர்கள் ? உங்கள் வீட்டில் இருந்து மண்டபம் எவ்வளவு தூரம்? மண்டபச் செலவிற்கு என எவ்வளவு பங்களிப்பு செய்திர்கள்? இதில் எவ்வளவு பெயர் எடுத்துச் சொல்லி இருக்குறார்கள் இங்கு எவ்வளவு செலவு என்று பல விளக்கம் தந்தும் ஏன் இந்த கேள்விகளை கேட்கிறிர்கள்?

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.