Jump to content

அஜீவன் அண்ணாவுடன் யாழ் கள உறவுகள் ஓர் இனிய சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய மாலைப் பொழுது மெல்லிய காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. மாலை மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நெடுஞ்சாலைகள் தாண்டி நானும் அருவியும், அஜீவன் அண்ணாவைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம். இடையே ராமாக்காவின் அதட்டல் மிக்க தொலை பேசி தொல்லை தந்தாலும், ஒரு வித பரபப்பான மனதுடன் நாம் சென்றோம். ஏற்கனவே திட்டமிட்டாலும், பலருக்கு அழைப்பு அனுப்பியும் அவர்கள் வராவிட்டாலும் சிறு பதிலாவது போட்டிருக்கலாம். அவர்கள் அதையும் செய்ய வில்லை. மிக குறுகிய காலத்தில் நாம் இதை ஒழுங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில், இறுதியில் ஐவர் மட்டுமே பங்கு பற்ற வேண்டியதாயிற்று. 

அருகிலிருந்து முகமறியாத உறவுகளை நேரில் காண  அஜீவன் அண்ணா உதவியுள்ளார் என்பதில் அவருக்கும், அவரால் நேரே அறிமுகமான எமக்கும் மிக்க மகிழ்ச்சி, அஜீவன் அண்ணாவின் அறிமுகம் அவரின் குறும்படங்களைப் பார்த்து எனக்குக் கிடைக்கவில்லை. “உப்பிலுறைந்த உதிரங்கள்” எனும் தமிழீழ திரைக்காவியத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்ற போது அதில் இருந்த ஒரு நிழல்ப்படத்தில், தான் அஜீவன் அண்ணா அறிமுகமாறினார். அதன் பின்னர், பல படங்களைப் பார்த்தேன், பின்னர் யாழில் இணைந்த பின்னர் யாழ் இணைய உறவாகவும், எம்.எஸ.என் தகவல் பரிமாறியூடாகவும், தொடர்ந்து நட்பாயிருந்தோம்.

அப்படியே கடந்த வருடம் முதல் அஜீவன் அண்ணா கனடா பயணத்திற்குத் திட்டமிட்டிருந்திருந்தார். அப்படியே அவரும் வந்து விட்டார். 

19ho3.jpgபொங்கல் விழா, அது இது என்று யாழ் கள உறவுகள் ஒன்று கூட முனைந்தும் அவை வெறும் வாய்ப்பேச்சில் நின்றதால், நான் அனைவரும் சந்திப்பதைப்பற்றி, முதலில் சிந்திக்கவில்லை. ஆனாலும் கள உறவுகளான, ரமா, இரசிகை, அருவி, சினேகிதி ஆகியோருடன் பேசிய போது அனைவரும் ஒன்றாக சந்திப்பது என்று முடிவாகியது. திட்டமிட்ட படி சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.  நடைபெறுமா? சாத்தியமா? போட்டுத்தள்ள வழியா என்று பலர் பொங்கல் விழா அழைப்பில் சொல்லியிருந்ததை யாழ் இணைய நண்பர்கள் - கனடா முயன்றால் முடியும் முக மூடி தேவையில்லை என்று காட்டியுள்ளனர் எனலாம்.

இனிமையான ஒரு பொழுது

ரொரன்ரோ மாநகரின் -ஸ்காபுரோ நகரத்தில் இந்த சந்திப்பு ராப்ஸ்கோட் அன்ட் மேல்வின் சந்திப்பில் நடைபெற்றது. 5.45 மணியளவில் அஜீவன் அண்ணா தனது தோழருடன் வந்திறங்கினார்.

yarl0pz.jpg

அவரை ரமாக்காவும், இரசிகையும் வரவேற்று அழைத்து வந்தனர். மற்றவர்கள் சில வேலைகளால் சற்று தாமதமாக வரவேண்டியேற்ப்பட்டது கிட்டத்தட்ட 6.00 மணியளவில் நானும் அருவியும், சினேகிதி அதற்கு முன்னரும் சந்திப்பிடத்திற்கு வந்து சேர்ந்தோம். 

dsc006567gk.jpg

வந்த பின்னர், சினேகிதி அவர்கள் அனைவரையும் வர வேற்று தனது நகைச்சுவைப்பண்பால், சிரிக்கவைத்தார். (கடியோ கடியென்று கடித்து விட்டா) பின்னர் எம்மை நாம் அறிமுகப்படுத்தி கொண்டோம்.  ஒவ்வொருவரைப்பற்றியும் அஜீவன் அண்ணா தெரிந்து கொண்டார். பின்னர், அவரது அனுபவங்கள் பற்றி பேசினோம்,  சிறிது பேச்சுக்கு இடைவெளி கொடுத்து, சிற்றூண்டிகளை உண்ண ஆரம்பித்தோம் ஆனாலும் பேச்சு தொடர்ந்தது ( வந்த வேலை முடிஞ்சுது என்று சினேகிதி கிளம்ப ஆயத்தம்) தொடர்ந்து அமெரிக்க, கனடிய சுற்றுலா பற்றி அஜீவன் அண்ணாவிடம் கேட்டறிந்து கொண்டோம்.

dsc006619rc.jpg

பின்னர், யாழ் கள உறவுகள் அஜீவன் அண்ணாவுக்கு வாழ்து தெரிவித்து ஒரு வாழ்த்து மடலை வழங்கினார்கள். இறுதியாக கொஞ்சம் நாட்டு நடப்பு பற்றி கதைத்தோம், அரசியல் தான், அதன் பின்னர் அஜீவன் அண்ணாவுக்கு ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்று  இருந்ததால் பயணமானார். அவரது கனடிய சுற்றுலா தொடர்கின்றது. நாளையும் நாளை மறுதினமும் அவர் ரொரன்ரோவில் தங்கியிருப்பார் திங்கள் அவர் வன்கூவர் நகருக்கு செல்கின்றார். அங்கு ஒரு வாரகாலம் தங்கி விட்டு அவர் மீண்டும்  எதிர்வரும் 9 ம் திகதி சூவிஸ் பயணமாகின்றார்.

dsc006657gy.jpg

சந்திப்பு பற்றி ஏனையவர்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்....

நன்றி

 

Link to comment
Share on other sites

  • Replies 226
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி நிதர்சன்! யாழ்கள பொங்கல் நிகழ்வால் ஏற்பட்ட சில மனஸ்தாபங்கள் நீங்கி எம் உறவுகள் ஒன்று கூடிப் பேசலாம் என்பதற்கான ஆரம்ப முயற்சி இது!

இவ்வாறே ஒரிரு நண்பர்கள் கூடி, கலந்துரையாடி இருந்தாலும் அதையும் மிறிய யாழ் சாதனையாக 6 பேர் கலந்து கொண்டுள்ளீர்கள்!

மற்றய நண்பர்களும் அவ்வாறு கலந்து கொள்ளவேண்டும் என வரவேற்கின்றோம்! பரணியண்ணா கனகாலம் யாழ் வராதபடியால் அவர் மடலைப்படித்திருக்க மாட்டார் என நினைக்கின்றேன்! இருந்தாலும் உறவுகளுக்காக இணைப்பு முயற்சியாக இதைக் கருதி வாழ்த்துகின்றோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarl0pz.jpg

உம்!!

நான் கொடுத்த கரித்துணி மேக்கப் எவ்வளவு எல்லோரையம் வடிவாக வைத்திருக்கின்றது! அஜீவன் அண்ணாவும் அப்படிப் போட்டிருந்தால் நன்றாக இருக்குமே! :wink: :wink: :P :P

பரவாயில்லை! அடுத்த முறை எல்லோரும் அதை முயற்சி செய்யுங்கள்! :wink:

Link to comment
Share on other sites

உம்!!

நான் கொடுத்த கரித்துணி மேக்கப் எவ்வளவு எல்லோரையம் வடிவாக வைத்திருக்கின்றது! அஜீவன் அண்ணாவும் அப்படிப் போட்டிருந்தால் நன்றாக இருக்குமே! :wink: :wink: :P :P

பரவாயில்லை! அடுத்த முறை எல்லோரும் அதை முயற்சி செய்யுங்கள்! :wink:

:P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

நிதர்சனுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கனடேயத் தமிழர் எப்பவும் மற்றவர்களுக்கு முன் நோடிகள் என்று நிரூபித்துள்ளீர்கள்.உதைப்போ

Link to comment
Share on other sites

படிக்கவும், பார்க்கவுமே மகிழ்ச்சியாக இருக்கிறதே...:lol:

Link to comment
Share on other sites

சந்தோசமாக இருக்கின்றது. :P :P :P :P

என்ன எல்லோரும் கறுப்பு உடை அணிந்திருக்கிறியள். இது நல்லதல்ல ஆமா :twisted:

Link to comment
Share on other sites

yarl0pz2xv.jpg

ஒரு ஊகத்தில் எது யாராக இருக்கலாம் என்று போட்டிருக்கன், பிழையெண்டா சண்டைக்கு வராதீங்க :P

சந்திப்பு நடந்திருக்கு , நல்ல மகிழ்ச்சியா இருக்கு.

Link to comment
Share on other sites

நான் நினைக்கவில்லை அருவி ஒல்லியா இருப்பார் என்று, நிச்சயம் குண்டாத்தான் இருப்பர், அவரது சின்னவயது படத்தை அவரூரில் போட்டிருக்கிறார் பாருங்கள், யம்மோ ரசிகை இவ்வளவு குண்டா??? சும்மா பகிடிதான்.

கள உறவுகளை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

நான் நினைக்கவில்லை அருவி ஒல்லியா இருப்பார் என்று, நிச்சயம் குண்டாத்தான் இருப்பர், அவரது சின்னவயது படத்தை அவரூரில் போட்டிருக்கிறார் பாருங்கள், யம்மோ ரசிகை இவ்வளவு குண்டா??? சும்மா பகிடிதான்.

கள உறவுகளை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

சின்னனிலை குண்டா இருந்தா இப்பவும் குண்டா இருக்கணும் எண்டு விதியா என்ன? :P :wink:

Link to comment
Share on other sites

கனடிய யாழ் கள உறவுகள் அஜீவன் மூலமாகவேனும் சந்திப்பு ஒன்று நிகழ்ந்ததையிட்டு மகிழ்ச்சி... :lol:

Link to comment
Share on other sites

குளகாட்டனின் கணிப்பு பிழையானது என எனது கணிப்பு.... ஒவ்வொருதரம் சொல்லுங்கள் பார்க்கலாம்....உங்கள் ஊகங்களை :?: :?:

Link to comment
Share on other sites

சொல்லுறதை கவனிச்சு எழுதுங்க பிறகு ஏன் படத்தைப் போட்டம் எண்டு யோசிப்பினம்.

Link to comment
Share on other sites

Santhippu Niravaium , Mahilvaum Irunthathu.....

Mihavum Iniyavargal........

Innum Santhippu neendu irukkalam Pondra mana nilai.........

Ellorum Neenda Naal Palakkamana

Oru Kudumbam Pondra kuthookalm.........

yarl0pz2xv.jpg

Nandrikal En Iniya Sonthangale...........

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே

அன்பு உறவுகள் சந்திப்பு பார்க்கும் போது மிக்க மகிழ்வாக இருக்கின்றது. உண்மையிலேயே நினைக்க நெஞ்செல்லாம் உவகை ஊசலாடுகின்றது.

விரைவில் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையுடன்

என்றும் அன்புடன் பரணீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl0pz2xv.jpg

இதிற்பாக்க படத்தை போடாமலே விட்டிருக்கலாம் ஆமா.. எனது ஊகம் றமா என்று குறிப்பிட்டிருப்பவர் ரசிகை.. சரியா.. ம் கனடாவாழ் உறவுகள் கலக்கீட்டீங்களே.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிக்கவும், பார்க்கவுமே மகிழ்ச்சியாக இருக்கிறதே...:lol:

அப்பிடியே நீங்களும் ஒரு சந்திப்பு நடாத்தினாலும் மகிழ்ச்சியா இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் நன்றிகள்,

மீண்டு மொருமுறை நாங்கள் சந்திக்கும் போதாவது மீதமுள்ள ரொரன்ரோ வாழ் நண்பர்களை, இணைந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லுறதை கவனிச்சு எழுதுங்க பிறகு ஏன் படத்தைப் போட்டம் எண்டு யோசிப்பினம்.

அப்ப யோசிக்காமல் படத்தை போட்டிட்டினம், என்று சொல்லுறீங்க :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl0pz2xv.jpg

இதிற்பாக்க படத்தை போடாமலே விட்டிருக்கலாம்

இப்ப மட்டும் படம் போட்டு இருக்கு,போஸ்ட் பண்ணியேல்லோ இருக்கு :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl0pz2xv.jpg

இதிற்பாக்க படத்தை போடாமலே விட்டிருக்கலாம் ஆமா.. எனது ஊகம் றமா என்று குறிப்பிட்டிருப்பவர் ரசிகை.. சரியா.. ம் கனடாவாழ் உறவுகள் கலக்கீட்டீங்களே.. :wink: :P

இப்ப மட்டுமென்ன படம் போட்டா இருக்கு? போஸ்ட் எல்லோ பண்ணியிருக்கினம் :roll: அட என்னத்தை அப்பிடி கலக்கினவை? கூலையோ? மாவையோ அல்லது அஜீவனவர்களையோ :roll:

குறிப்பு: பாழாய் போன இடைநிலை அங்கத்துவத்தை இன்னும் தரவில்லை . அதால இருமுறை எழுத வேண்டீயிருக்கிறது. பிழை திருத்த முடியாமையல். இதற்க்காய் பறவைகள் வருந்து கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப மட்டும் படம் போட்டு இருக்கு,போஸ்ட் பண்ணியேல்லோ இருக்கு

இந்த ஆண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.. என்ன பட்டம் தர..?? நக்கல் தானே வேணாங்கிறது.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.. என்ன பட்டம் தர..?? நக்கல் தானே வேணாங்கிறது.. :wink: :P

தமிழினி மெல்ல மெல்ல சாகாது ஏனெனில் தமிழினி தமிழினி(ல்) எழுதுவதால், தமிழினி (ல்) ஒரு பட்டம் தந்தால் தமிழினி(ல்) வாழ்தலாம் :lol:

Link to comment
Share on other sites

குளமண்ணா சொன்னது தான் சரி. முறையே சினேகிதி ரசிகை ரமா அஜீவன் அருவி நிதர்சன். :roll: :P :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளமண்ணா சொன்னது தான் சரி. முறையே சினேகிதி ரசிகை ரமா அஜீவன் அருவி நிதர்சன். :roll: :P :arrow:

அப்ப வெண்ணிலா, இந்த பெயர்களில் ஒன்றுக்கு சொந்த காரியோ? :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.