Jump to content

றெயில் பயணம்


Recommended Posts

றெயில் பயணம்

 

800px-Attentat_du_RER_B_%C3%A0_la_statio

http://fr.wikipedia.org/wiki/Fichier:Attentat_du_RER_B_%C3%A0_la_station_Saint-Michel_2.jpg

 

1995 ல் ஓர்  அதிகாலை நேரம் மனோவினது நித்திரைக்கு உலை வைத்தது அவனது அலாரம் . மனோ வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு , இதனால் மனோ  பூனைத் தூக்கத்தை சர்மிளாவின் அணைப்பில் அனுபவிப்பதுண்டு . அவனது கை கட்டிலின் மறுபுறம் துளாவியது . அந்த இடம் வெறுமையாகவே  இருக்க இந்த நேரத்தில் சர்மி எங்கே போய்விட்டாள் ? என்று நினைத்தவாறே அவன் கட்டிலில் இருந்து விலுக்கென்று எழுந்தான் மனோ .  வீட்டின் ஹோலுக்குள் வந்தபொழுது , சர்மை முழுகிவிட்டு பல்கணியில் தனது தலையைத் துவட்டிக்கொண்டிருப்பது கண்ணாடி ஜன்னலுக்கால் தெரிந்தது . அவனுக்கான கோப்பி ஆவி பறந்தபடி குசினிக்குள் காத்திருந்தது .  மனோ கோப்பியை எடுத்துக் கொண்டு பல்கணியில் சர்மிளாவிற்குப் பக்கத்தில் நின்று கொண்டான் . சர்மிளா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள் .

 

மனோவிற்கு நேற்று இரவு இருவரும் வாயால் சண்டைபிடித்தது மனதில் வந்து அவனை அலைக்கழித்தது . இறுதியில் அந்த கலகம் அவளது அழுகையுடன் முடிந்தது . சர்மிளா தனது தம்பியை பிரான்சுக்கு எடுப்பதற்கு அவனுடன் கதைத்தபொழுது தான் இருவருக்கும் பிரச்சனை வந்தது . மனோவிடம் அந்தவேளையில் காசுகள் இருக்கவில்லை . அவன் சிங்கப்பூர் போய் சர்மியை கலியாணம் செய்ய எடுத்த வட்டிக் கடனே இன்னும் முடியவில்லை . சர்மி வந்து ஒருவருடத்திற்குள் பிறென்ஜ் ஐப் படித்து விட்டு வேலைக்கப் போய்க் கொண்டிருக்கின்றாள் . இதில் சர்மிளாவின் தம்பியைக் கூப்பிடுவதென்றால் மனோவிற்கு மிகவும் கடினமான விடையம் . மனோ சர்மிளவை சமாதனப்படுத்தும் எண்ணத்தில் " சர்மீ.........."  என்று வழக்கத்தைவிட தேனைத் தடவினான் . மனோவின் முயற்சி சர்மிளாவிடம் வேகவில்லை .  அவள் நித்திரையால் எழும்பிய நான்கு வயதான மதுமிதாவை பள்ளிக்கூடத்திற்கு விட அவசரமாக வெளிக்கிடுத்தினாள் . நேரம் ஏழுமணியைத் தொட்டுக் கொண்டிருந்தது . மனோவும் தான் குளிப்பதற்கு குளியல் அறைக்குள் நுளைந்தான் . அவன்குளித்து வெளிக்கிட்டு வெளியில் வரும்பொழுது வீடு வெறிச்சோடியிருந்தது . சர்மியும் மதுமிதாவும் இவனிற்காக காத்திராது வீட்டை விட்டு இறங்கியிருந்தனர் . மனோவிற்கு ஆற்றாமையும் கோபமும் தலைக்கு ஏறியது . அவன் விரைவாக  றெயில் நிலையம் நோக்கி நடத்தான் .

 

தூரத்தே சர்மிளா நடந்து போய்க்கொண்டிருப்பது அனது கண்களுக்குத் தெரிந்தது . மனோ தனது நடையை வேகப்படுத்தி சர்மிளாவை நெருங்க முயற்சித்தான் . சர்மிளா விரைவாக  றெயில் நிலையத்தினுள் நுளைந்தாள் . மனோ மூச்சிரைக்க ஓடிவந்து படிகளில் இறங்கும்பொழுது றெயில் வரும் இரைச்சல் கேட்டது . மனோ விரைவாக இறங்கி றெயிலை  நோக்கி ஓடினான் . சர்மிளா இவனக்கு முதல் பெட்டியில் ஏறுவது தெரிந்தது . சர்மிளாவின் ஊமைக் கோபம் மனோவை மிகவும் படாய்படுத்தியது . கலியாணம் கட்டினநாளில் இருந்து மனோ  சர்மிளாவை முகம்கோண வைத்ததில்லை . தான் அவளைக் கண்ணின் இமைபோல் காத்தும் சர்மிளா தன்னைப் புரிந்து கொள்ளாதது அவனது வேதனையை உச்சத்திற்கு கொண்டு வந்தது .

 

றெயில் தனது சுரங்கப் பயணத்தை முடித்துக் கொண்டு , புத்தில் இருந்து வெளியேறும் சாரைப்பாம்பு போல தன்னைத் தரைப்பகுதிக்குக் காட்டியது  .  கோடை காலத்து  ஜூலை மாத வெய்யில் அவனது முகத்தில் மென்மையாக சுட்டது . மேலே ஏறிக்கொண்டிருந்த றெயில் ஓல்னே சூ வூவா ( AULNEY SOUS BOIS ) நிலையத்தைத் தொட மெதுவாக முற்சி செய்து கொண்டிருந்தது . அதனது மெதுவான ஓட்டம் மனோவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது . ஆனாலும் அவனது மனம் அதில் இலயிக்காது சர்மிளாவைச் சுற்றியே வந்தது . அவனது வறண்ட மனதில் தென்றாலாய் வந்தவள் சர்மி . குடும்பத்தில் ஒரு தம்பியை கொண்ட அவளுக்கு பெரிதாக ஆசைகள் எதுவும் இருந்ததில்லை . அவனது ஆறாயிரம் பிராங் சம்பளத்தில் கட்டுச்செட்டாகவே சர்மிளா குடும்பம் நடத்தினாள் .

 

மனோவோ அவளது தேவைகளைப் பார்த்துப் பார்த்து  செய்வான் . பின்னேரம் வேலையால் வரும் பொழுது தனது முன்னாள் அறைக்கூட்டாளி சுபேசிடம் காசு வாங்கி சர்மியின் தம்பியைக் கூப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டான் . ஓல்னே சூ வூவா ( AULNEY SOUS BOIS ) றெயில் நிலையத்தில் நின்ற  றெயில் மின்சாரக்கோளாறால் தனது இயக்கத்தை முற்றாகவே நிறுத்தியது . திறக்கவேண்டிய தானியங்கிக் கதவுகள் மூச்சை நிறுத்தின . வெளியே   புகையிரதமேடை சனத்தால் நிரம்பி வழிந்தது . காலை நேரத்து வேலை அவசரம் எல்லோருக்கும் . றெயில் ஒருவாறு சிக்னலை பெற்றுக்கொண்டு புகையிரத நிலையத்தினுள் ஆடிஅசைந்து நுளைந்தது .  சனங்கள் முண்டியடித்து ஏறியதால் வாசலின் அருகே இருந்த மனோ எழுந்து நிற்க வேண்டியதாகப் போய்விட்டது .

 

சனநெருக்கடியால் அவனுக்கு மூச்சுத்திணறியது . சிக்னல் கோளாறினால் றெயில் நேரடியாகவே பரிஸ்சுக்கு செல்ல இருப்பதாக அதை ஓட்டியவர் அறிவித்தார் .

றெயில் கதவுகளைப் பூட்டியவாறே  பாரிஸ் நோக்கிய தனது பயணத்தை மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் மூசிப் பாய்ந்தது . எதிரும் புதிருமாக றெயில்கள் அவனைக் கடந்து போயின . இன்றும் தனது முதலாளியிடம் நேரம் தவறிப்போவற்கு பேச்சு வாங்குவதை நினைக்க மனோவிற்கு மேலும் கடுப்பாக இருந்தது  . கண்ணிமைக்கும் நேரத்தில் பாரிஸ் கார் து நோர்ட் ( GARE DU NORD ) றெயில் நிலையத்தில் தன்னை நிலைநிறுத்த றெயில் தனது வேகத்தைக் குறைத்தது .

 

கார் து நோர்ட் றெயில் நிலையம் சனவெள்ளத்தில் மிதந்தந்தது . றெயில் நின்றதும் சனங்கள் இறங்குவதற்கும் ஏறுவதற்கும் தள்ளுமுள்ளுப்பட்டார்கள் . இறுதியாக நெடுநெடுவென்ற உயரத்தைக் கொண்ட தலைக்கு முக்காடு போட்ட உருவம் ஒன்று கையில் ஒரு பையுடன் மனோவிற்குப் பக்கத்தில் ஏறி நின்றது . அதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியது . மனோவிற்கு அந்த உருவம் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது . நாற்றம் தாங்கமுடியாமல் மனோ மூக்கைப் பொத்திக் கொண்டான் . சனநெரிசலில் தள்ளுப்பட்ட அந்த உருவம் மற்றய பயணிகளைப் அசட்டை செய்தவாறே நின்றது  . றெயின் கதவைப் பூட்டிக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தது .

 

மனோ இறங்கவேண்டிய நிலையங்கள் இரண்டே இருந்தன . சர்மிளவோ இன்னும் மூன்று நிலையங்களைக் கடக்கவேண்டி இருந்தது . நேரம் காலை நேரம் எட்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது . றெயின் இரண்டாவது நிலையத்தை அடைந்தவுடன் , மனோவிற்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அந்த உருவம் தான் கொண்டுவந்த பையை அவனருகில் வைத்துவிட்டு இறங்கிச் சனத்தினுள் சனமாக மறைந்தது .  மனோ அந்த உருவத்தைக் கூப்பிட எத்தனிக்கையில் றெயிலின் கதவுகள் மூடப்பட்டு மனோ இறங்கவேண்டிய றெயில் நிலையத்தை நோக்கி வேகமெடுத்தது .

 

மனோ றெயில் நிலையத்தில் இறங்குவதற்கு ஆயத்தமாக றெயிலின் வாசல் கதவின் முன்னால் நின்று கொண்டான் . றெயில் செயின் மிசேல் ( SAINT MICHEL ) நிலையத்தில் நுளைந்து கொண்டிருந்தது . கண் இமைக்கும் நேரத்தில் அங்கே பெரும் வெடியோசை கிளம்பியது . எங்கும் புகைமூட்டமும் அலறல் சத்தங்களும் காதைப் பிளந்தன . மனோ திடீரென தனது உடல் இலேசாகி மேலே வான்வெளியில் மிதப்பதுபோல உணர்ந்தான் . அங்கே சர்மிளாவையும் அவன் கண்டான் . அவனால் சர்மியைக் கூப்பிட முடியவில்லை . மதுமிதா ?????????????

 

 

ஜூலை மாதம் 25ம் திகதி 1995 ம் ஆண்டு பாரிசின் இதயப் பகுதியான இந்த நிலையத்தில் , இஸ்லாமிய தீவிரவாதி ஒருவனால் இந்த றெயிலில் குண்டு வைக்கப்பட்டது .உயிரிழப்பு அண்ணளவாக பத்துப்பேர் . காயமடைந்தவர்கள் 100க்கும் மேல் . அதனது தாக்கத்தால் இந்தக்கதையை எழுதினேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை என்பதை நம்பமுடியாத அளவு கதையை நன்றாக எழுதி இருக்கிறீர்கள் கோமகன்.

Link to comment
Share on other sites

வழமையாக கோமகன் அண்ணாவின் கதைகளில் இருக்கும் உப்பு புளி காரம் இந்த கதையில் மிஸ்ஸிங் மொத்தத்தில் ரயில் பயணங்கள் ஏமாற்றமே

Link to comment
Share on other sites

கதை என்பதை நம்பமுடியாத அளவு கதையை நன்றாக எழுதி இருக்கிறீர்கள் கோமகன்.

 

கதை சொல்வதில் நான் என்றுமே சிறிய குழந்தை . உங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பும் பாராட்டுகளுமே என்னை வளப்படுத்தும் . உங்கள் நேரத்திற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் சுமே .

Link to comment
Share on other sites

சூப்பர் ஸ்ரோறிங்க கோமகன் அண்ணன் .ரெம்ப நன்னா றைற் செஞ்சிருக்கீங்க . உங்க ஸ்ரோறிய றெம்பவே லைக் பண்றேங்க அண்ணன்  :)  :)  :) .

Link to comment
Share on other sites

இம்முறை கதையை சுவையோடும் அதேநேரம்  கதையோடு பயணிக்கவும் வைத்திருக்கிறீர்கள். தொடர் எழுத்து நல்ல கதையைத் தந்திருக்கிறது.

 

என்னுடன் படித்த ஒருதோழி சர்மிலா அவள் பரிசில் இருக்கலாமென்ற ஊகம் ஆனால் இதுவரை தேடிப்பிடிக்கமுடியவில்லை கோ இந்தக்கதையின் சர்மிலாவும் நான் நினைக்கிற சர்மிலாவும் ஒரே ஆட்களா ? அந்த சர்மிலாவுக்கு ஒரு ஆண் சகோதரன். :mellow:

Link to comment
Share on other sites

வழமையாக கோமகன் அண்ணாவின் கதைகளில் இருக்கும் உப்பு புளி காரம் இந்த கதையில் மிஸ்ஸிங் மொத்தத்தில் ரயில் பயணங்கள் ஏமாற்றமே

 

றெயில் பயணம் என்றாலே இறுதியில் ஏமாற்றம் வருவதுதானே . நம்பி ஒரு ஃபிகரிடம் கடலையை போடுவோம் . அவளும் ரைம் பாஸ்பண்ணி விட்டு தான் இறங்க வேண்டிய இடத்தில் " அப்ப அண்ணை வரட்டோ " என்று எங்களுக்கு ஆப்படிப்பாள் . வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் சுண்டல் .

Link to comment
Share on other sites

சூப்பர் ஸ்ரோறிங்க கோமகன் அண்ணன் .ரெம்ப நன்னா றைற் செஞ்சிருக்கீங்க . உங்க ஸ்ரோறிய றெம்பவே லைக் பண்றேங்க அண்ணன்  :)  :)  :) .

 

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் சொப்னா .

Link to comment
Share on other sites

றெயில் பயணம் என்றாலே இறுதியில் ஏமாற்றம் வருவதுதானே . நம்பி ஒரு ஃபிகரிடம் கடலையை போடுவோம் . அவளும் ரைம் பாஸ்பண்ணி விட்டு தான் இறங்க வேண்டிய இடத்தில் " அப்ப அண்ணை வரட்டோ " என்று எங்களுக்கு ஆப்படிப்பாள் . வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் சுண்டல் .

ஐயோ பாவம்ணா நீங்க நிறைய பொண்ணுங்க உங்களை வைச்சு டைம் பாஸ் பண்ணிடாங்க போல? சரி விடுங்க இப்ப ஆச்சும் லைப் ல செட்டில் ஆகிடின்களே அத நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் :(:D

Link to comment
Share on other sites

இம்முறை கதையை சுவையோடும் அதேநேரம்  கதையோடு பயணிக்கவும் வைத்திருக்கிறீர்கள். தொடர் எழுத்து நல்ல கதையைத் தந்திருக்கிறது.

 

என்னுடன் படித்த ஒருதோழி சர்மிலா அவள் பரிசில் இருக்கலாமென்ற ஊகம் ஆனால் இதுவரை தேடிப்பிடிக்கமுடியவில்லை கோ இந்தக்கதையின் சர்மிலாவும் நான் நினைக்கிற சர்மிலாவும் ஒரே ஆட்களா ? அந்த சர்மிலாவுக்கு ஒரு ஆண் சகோதரன். :mellow:

 

 

கதாநாயகிக்கு ஓர் பெயர் தேள்வைப்பட்டது . அது சர்மிளாவாக உருப்பெற்றது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக உங்கள் நண்பியின் பெயராகப் போய்விட்டது . மற்றும்படி சம்பவங்கள் என்னமோ உண்மைதான் . பெயர்கள் மாறிய சிறிது கற்பனை கலந்த உண்மைக் கதை . உங்கள் வரவிற்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள் சாந்தி .

Link to comment
Share on other sites

ஐயோ பாவம்ணா நீங்க நிறைய பொண்ணுங்க உங்களை வைச்சு டைம் பாஸ் பண்ணிடாங்க போல? சரி விடுங்க இப்ப ஆச்சும் லைப் ல செட்டில் ஆகிடின்களே அத நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் :(:D

 

 

இது எனக்கு மாத்திரமே நடக்கிது :lol: . அரசியில்லை இதெல்லாம் சகஜம் சுண்டல்  :D  :D . வருகைக்கு நன்றி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.