Jump to content

'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, - எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
TrinityEvantst-banner-2013-seithy-150.jp

இசைஞானி இளையராஜவின் 'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன், முன்னரே அறிவிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட தெனிந்திய இசை கலைஞர்களும், புதிதாக இன்னும் பல தெனிந்திய திரையுலக நட்சத்திரங்களும் பங்குபெற உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான, நுழைவுச்சீடுக்களை, இப்பொழுது Ticket Master இலும், Rogers Centre Gate 9 அலுவலகத்திலும், மற்றும் தொலைபேசி மூலமாக 1-855-985-5000 எனும் இலக்கத்திலும், ஏனைய ட்ரினிட்டி இவன்ட்ஸ் அனுமதி பெற்ற விநியோகஸ்த்தர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

  

கார்த்திகை மாதம் 3 ஆம்திகதி, 2012 இல்இடம்பெறவிருந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுக்கள், புதியதிகதியில் செல்லுபடியாகும். மேற்கூறிய புதிய திகதியில் இந்த நிகழ்ச்சிக்கு செல்லமுடியாத வாடிக்கையாளர்கள், தங்கள் நுழைவுச்சீடுக்களுக்கான கட்டணங்களை மீழப்பெற்றுகொள்வதற்கான இறுதித்திகதி, தை மாதம் 18, 2013. இந்நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்களைப்பெற, அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 1-855-554-4554, மற்றும் ட்ரினிட்டி இவன்ட்ஸ் உத்தியோகபூர்வ இணையத்தளம்www.trinityeventsonline.com.

காதலர்தினம் (Valentine Day ), மற்றும் கனடா குடும்ப தினங்ளை (Family Day Long weekend ) ஒட்டி இந்நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றும் வரை பொறுமை காத்த அனைத்து ரசிகர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, இந்நிகழ்ச்சிக்கு எல்லோரையும் வருகவென வரவேற்கிறார்கள் ட்ரினிட்டி இவன்ட்ஸ் குழுவினர்.

 

Trinity-Events-Press-Release-_2013-70095

 

 

Trinity-Events-Press-Release-_2013-70079

 

http://www.seithy.com/breifNews.php?newsID=71667&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

 காதலர்தினம் (Valentine Day ), மற்றும் கனடா குடும்ப தினங்ளை (Family Day Long weekend ) ஒட்டி இந்நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றும் வரை பொறுமை காத்த அனைத்து ரசிகர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, இந்நிகழ்ச்சிக்கு எல்லோரையும் வருகவென வரவேற்கிறார்கள் ட்ரினிட்டி இவன்ட்ஸ் குழுவினர்.
 

 

சிறப்பாக நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரியில் வருவதால் இலங்கையின் சுதந்திர தினத்தை ஒட்டி இசைஞானி இளையராஜா கனடாவில் இன்னிசை நிகழ்ச்சியை வைக்கின்றார் என்று பரப்புரை செய்ய யாரும் வரமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரியில் வருவதால் இலங்கையின் சுதந்திர தினத்தை ஒட்டி இசைஞானி இளையராஜா கனடாவில் இன்னிசை நிகழ்ச்சியை வைக்கின்றார் என்று பரப்புரை செய்ய யாரும் வரமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

வாயிருந்தால் வங்காளம் போகலாம்" என்பது உண்மைதான்....ஒருசில நக்கல்களுக்கு தள்ளியிருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

Link to comment
Share on other sites

சீமான் இந்த பேட்டியில்; http://www.yarl.com/forum3/index.php?showtopic=112747 ; இன்று ஏன் இன்று இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் நாட்டிற்கு "ஏற்றுமதி' செய்யப்படுகின்றன? என்ற கேள்விக்கு பதில் வைக்கிறார்.

 

 



எவ்வாறு சினிமா என்ற மோகத்தில் குடிபோதை என்ற பழக்கத்திற்குள் மக்களை அடிமையாக்குவது என்பது சாத்தியப்பட்டதோ, அந்த அணுகுமுறைக்கு புலம்பெயர் தமிழர்களும் விதி விலக்கு அல்ல.

Link to comment
Share on other sites

ஒரு கணக்கு பார்வை :
 
ஏற்கனவே 23000 சீட்டுக்கள் விற்பனை ஆகியுள்ளன என கூறப்படுகின்றது. முழுமையாக 40000 சீட்டுக்களை விற்றால் வரும் தொகை சராசரியாக (அண்ணளவாக) = 40000 x 50                                                                                                                                                     = 2,000,000
அனுசரணையாளர்கள், ஸ்பொன்சர்கள் :                      = 0,050,000
 
 
கிட்டத்தட்ட நூறு பேர் இந்தியாவில் இருந்து வந்தால் ஆளுக்கு 2000 டார்கள் செலவு எனப்பார்த்தால் : 100 x 2000 = 200,000
நடக்கும் இட மற்றும் செலவுகள் :            = 100,000                                                                                                                                                                             

ஏற்கனவே இரத்து  செய்யப்பட்ட செலவுகள் :            = 050,000                                                                                                                                                       

இதர செலவுகள்:                   = 050,000                                                                                                                                                                                                                    

 
மொத்த செலவுகள் :        = 400,000                                                                                                                                                                                                                       

 
இலாபம் :            = 1,650,000                                                                                                                                                                                                                                   

இளையராஜாவிற்கு :      இரண்டு கோடிகள்   (400,000 CAD $)                              
 
நிகர இலாபம் : 1.2 மில்லியன்கள் (அண்ணளவாக )

Link to comment
Share on other sites

இளையராஜா ஒரு இசைஞானி.

 

எதில் இசைஞானி ?தமிழ் இசையில்.

வேறு எந்த மொழியிலும் இல்லை என்றே எண்ணுகின்றேன்.

 

இவரை இவ்வாறான ஒரு பிரமாண்ட நிகழ்விற்காக யார் அணுகமுடியும்?

 

கையில் பணம் உள்ளவர்கள். எவ்வளவு பணம் - குறைந்தது இரண்டு மில்லியன்கள் கையில் உள்ளவர்கள். அதுவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடமே பெற முடியும்.

 

கனடாவில் இந்த நிகழ்வை நடாத்துபவர்கள் யார்? இவர்களிடம் இவ்வளவு பணம் உள்ளதா?
நடாத்துபவர்களில்  முதன்மையானர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை வைத்திருப்பவர், இசையில் சம்பந்தப்பட்டவர் அல்ல.

 

எனவே ஒரு நியாயமான கேள்வி எழுகின்றது.

இதில் கருப்பு பணம் சம்பந்தப்பட்டுள்ளதா?

இந்த பல மில்லியன் டாலர் பெறுமதியான நிகழ்வை நடாத்துபவர்கள் பின்னால் யார் இருக்கக்கூடும்?
 

 

தொடர்பு பட்ட செய்தி : கறுப்பு பணம்: பிரிட்டனில் கைதான தமிழர்களுக்கு பிணை : http://www.yarl.com/forum3/index.php?showtopic=112649

 

இரண்டு மில்லியன்களை வைத்து சிங்களம் தமிழர்களிடமே ஒரு மில்லியனை சம்பாதிக்க முனைகின்றதா?

 

 இல்லை என்றால் நானே முதல் சந்தோசப்படுபவன்  :D

Link to comment
Share on other sites

கார்த்திகையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடாத்த இருந்த சிறிலங்கா அரசு தானாம் மாசியிலும் நடாத்த இருக்கிறது.

Spoiler
Link to comment
Share on other sites

இப்படி ஒரு நிகழ்வை இளையராஜா இல்லை இன்னொரு தமிழக பிரபலம் ஏன் ஈழ மக்கள் துயர் துடைக்க செய்யக்கூடாது?

 

செய்ய மனம் இல்லையா ?


இல்லை சிங்களம் அனுமதிக்காதா?

Link to comment
Share on other sites

சீமான் இந்த பேட்டியில்; http://www.yarl.com/forum3/index.php?showtopic=112747 ; இன்று ஏன் இன்று இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் நாட்டிற்கு "ஏற்றுமதி' செய்யப்படுகின்றன? என்ற கேள்விக்கு பதில் வைக்கிறார்.

 

 

எவ்வாறு சினிமா என்ற மோகத்தில் குடிபோதை என்ற பழக்கத்திற்குள் மக்களை அடிமையாக்குவது என்பது சாத்தியப்பட்டதோ, அந்த அணுகுமுறைக்கு புலம்பெயர் தமிழர்களும் விதி விலக்கு அல்ல.

 

இன்று முதல் சீமான் சினிமா எடுப்பதை நிறுத்தி  தமிழக மக்களுக்கும்  போராட்ட உணர்வை கொண்டுவருவார் என  நம்புவோமாகா.

 

 

  சொஞ்ச படம் எடுத்து  புகழ்(?) பெற்ற சீமான்  தமிழக்க கோடீஸ்வரர்  போல வழம்வருவது சொந்த பணமா இல்லை புலத்து மக்களின் பணமா என  உரிமையாக என்னால் கூற முடியாமைக்கு வருந்துகிறேன் :D

Link to comment
Share on other sites

ஒரு கணக்கு பார்வை :

 

ஏற்கனவே 23000 சீட்டுக்கள் விற்பனை ஆகியுள்ளன என கூறப்படுகின்றது. முழுமையாக 40000 சீட்டுக்களை விற்றால் வரும் தொகை சராசரியாக (அண்ணளவாக) = 40000 x 50                                                                                                                                                     = 2,000,000

அனுசரணையாளர்கள், ஸ்பொன்சர்கள் :                      = 0,050,000

 

 

கிட்டத்தட்ட நூறு பேர் இந்தியாவில் இருந்து வந்தால் ஆளுக்கு 2000 டார்கள் செலவு எனப்பார்த்தால் : 100 x 2000 = 200,000

நடக்கும் இட மற்றும் செலவுகள் :            = 100,000                                                                                                                                                                             

ஏற்கனவே இரத்து  செய்யப்பட்ட செலவுகள் :            = 050,000                                                                                                                                                       

இதர செலவுகள்:                   = 050,000                                                                                                                                                                                                                    

 

மொத்த செலவுகள் :        = 400,000                                                                                                                                                                                                                       

 

இலாபம் :            = 1,650,000                                                                                                                                                                                                                                   

இளையராஜாவிற்கு :      இரண்டு கோடிகள்   (400,000 CAD $)                              

 

நிகர இலாபம் : 1.2 மில்லியன்கள் (அண்ணளவாக )

 

அகூதா   உரிமையில் ஒன்று உங்களில்டம் ஒரு வேண்டு கோள்?

உங்களின் உண்மையான சுயருபத்தை காட்டாமால்  நீங்கள் செய்யும் நல்ல செய்ற்களை மீண்டும் முனெடுங்கள்.

Link to comment
Share on other sites

சசி,
நான் எழுதும் கருத்துக்களை நீங்கள் வாசித்து பல இடங்களில் பதில் கருத்துக்களும் வைப்பது எனக்கு ஒரு நம்பிக்கையை உங்கள்மேல் தருகின்றது.

 

நன்றிகள்.

Link to comment
Share on other sites

நவம்பரில் இந்த நிகழ்வு நடக்க கூடாது என்று ஒரு பிரிவினர் மாவீரர் மாதத்தினைச் சாட்டாக வைத்து கூவும் போது இவர்கள் வியாபார நோக்கில் தான் எதிர்க்கின்றனர் என்று சிலர் கூறியது எவ்வளவு உண்மை என்று இன்று அகூதாவின் பதில்கள் எமக்கு வெளிக்காட்டுகின்றன.

 

அகூதா போன்றவர்கள் தாம் இணைந்து இருக்கும் புலம்பெயர் அமைப்புகளின் பெயரைச் சொல்லி, அவற்றுக்காகத் தான் இங்கு இப்படி எழுதுகின்றோம் என்று உண்மையை கூறினால் நேர்மையாக இருக்கும்.

 

 

ஒரு உறுப்பினர் அண்மையில் இங்கு எழுதும் பலர் தாம் இருக்கும் அமைப்புகளிற்காக முகமூடி இட்டு எழுதுகின்றனர் என்று கூறியது மிகச் சரியாகத்தான் இருக்கின்றது.

 

கறுப்புப் பணம் பற்றி, கள்ளப் பணம் பற்றி அக்கறைப் பட்டால் நேரடியாக கனடிய அரசுக்கு உங்கள் சந்தேகங்களைத் தெரிவியுங்கள்.

 

ஒரு தென் இந்திய கலைஞர் புலம்பெயர் தேசத்துக்கு வந்து நிகழ்வு  செய்யும் போது கறுப்புப் பணம் பற்றி அக்கறைப்படும் இவர்கள் போராட்டத்துக்கு காசு சேர்த்து பதுக்கி வைத்திருக்கும் நபர்களைப் பற்றி எழுதினால் உடனே பொங்கி எழுவார்கள் எனப்தையும் அவதானிக்க் கூடியதாக இருக்கின்றது.

 

தாம் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். தாம் மட்டுமே லாபம் அடைய வேண்டும். தம் பணப்பை மட்டுமே நிரம்ப வேண்டும்.

 

இன்னொருவர் செய்ய முனைந்தால், இன்னொருவர் லாபம் அடைய முனைந்தால் எந்தளவுக்கு அதனை குழப்ப முடியுமோ அந்தளவுக்கு குழப்புவீர்கள். அதுவும் அவர் தமிழனாக இருந்து விட்டால் போதும். வெறித்தனமாக எதிர்பீர்கள்

 

அதுக்காக மாவீரரை இழுத்து கேவலமான அரசியலை செய்யவும் தயங்கமாட்டீர்கள்.

 

 

கெட்டிக் காரன் புளுகுக்கும் கூட எட்டு நாளைக்குதான் கெடு.

 

உங்கள் வேடங்களும் கலையும்.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த நிகழ்விற்கு பின்னால் இருப்பவர் ஒரு பெரிய திறமைசாலி. அவர் முப்பெரும் வாகன நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்பவர்.

 

பல தராதர பட்டங்கள் பெற்று பல தமிழ் இளைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை எடுக்க உதவியவர். மற்றும் இளையோரை மதித்து அவர்களை உற்சாகபடுத்துபவர்.

 

மற்றும் பல தமிழ் அமைப்புகளுக்கு தன் பெயர் தெரியாமல் உதவி வருகிறார்.

 

இந்த நிறுவனம், http://www.trinitytechinc.ca/ , வட அமெரிக்க வாகன உற்பத்தியில் (ஜி.எம். கிரைஸ்லர்,, போர்ட்) ஆகியவற்றுடன் சில வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கூறுகிறீர்கள். ஆனால், நேரடியாக அவர்கள் எந்த ஒப்பந்தமும் செய்தது போன்று தெரியவில்லை.

 

இளையோருக்கு உதவினால், அது மிக நல்ல விடயம். முடிந்தால் எந்த அமைப்பு என்று கூறினால் நன்றாக இருக்கும். TYO, CYTA, CanTYD போன்ற அமைப்புக்களின் நிகழ்வுகளுக்கு சென்ற பொழுது இந்த நிறுவனம் உதவியதாக இல்லை நடாத்துபவர் உதவியதாக கேள்விப்படவில்லை.

நாம் இந்த நிகழ்வை தமிழீழத்தின் பெயரில் தூற்றினால் எமக்கு எதிராக 23,000 பேரை இலகுவாக மாற்றும்.

நான் யாரையும் யார் சார்பாக தூற்றவில்லை. எனது கேள்வி என்பது: எவ்வாறு இவ்வாறான ஒரு நிகழ்வை சமூகத்தில் பிரபலம் இல்லாத ஒருவர் செய்ய முடிகின்றது? இதனால் நாம் ஏமாரவும், எமது சமூகத்திற்கு பயன் இருக்கவேண்டும் என்பதுவுமே.

நாம் இந்த நிகழ்விற்கு ஆதரவு கொடுத்து ஏதாவது தொண்டு நிறுவனத்திற்கு உதவ கேட்கலாம்.

 

நீங்கள் தாரளமாக ஒரு தமிழர் மில்லியன் டொலர் உழைக்கிறார் என்று மகிழ்ச்சி அடையலாம்.

 

ஏற்கனவே பலரு ம்கேட்டதால் தான் இலாபத்தில் தாயகத்தில் ஒரு உதவியை செய்ய முன்வந்ததாக அறிவித்து இருந்தனர். அது நல்ல விடயம்.

 

தமிழர் ஒருவர் ஒரு மில்லியன் உழைப்பது நல்ல விடயம். ஆனால், அது எமது சமுகத்தின் ஊடாக உழைக்கப்ப்படும்பொழுது சமூக நலங்களுக்கும் கொஞ்சம் பயன்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அவர் தமிழரல்லாத சமூகத்தை வைத்து உழைக்கும்பொழுது நான் அவ்வாறு கேட்கமாட்டேன்.

Link to comment
Share on other sites

நவம்பரில் இந்த நிகழ்வு நடக்க கூடாது என்று ஒரு பிரிவினர் மாவீரர் மாதத்தினைச் சாட்டாக வைத்து கூவும் போது இவர்கள் வியாபார நோக்கில் தான் எதிர்க்கின்றனர் என்று சிலர் கூறியது எவ்வளவு உண்மை என்று இன்று அகூதாவின் பதில்கள் எமக்கு வெளிக்காட்டுகின்றன.

 

அகூதா போன்றவர்கள் தாம் இணைந்து இருக்கும் புலம்பெயர் அமைப்புகளின் பெயரைச் சொல்லி, அவற்றுக்காகத் தான் இங்கு இப்படி எழுதுகின்றோம் என்று உண்மையை கூறினால் நேர்மையாக இருக்கும்.

 

நான் எந்த அமைப்பிற்காகவும் எழுதவில்லை, காரணம், நான் எந்த அமைப்பையும் பிரதிநிதித்துவம் செய்யவும் இல்லை.

 

 

ஆனால், பல நல்ல வேலைகளை செய்து பணத்திற்காக கடினப்படும்  அமைப்புக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் உதவினேன் / உதவுகின்றேன்:

 

- CTC - - மாதம் மாதம் உதவுகின்றேன்

- GTF - வருடம் வருடம் உதவுகின்றேன்

- CYTA - வருடம் வருடம் உதவுகின்றேன்

- TYO  - வருடம் வருடம் உதவுகின்றேன்

- ITMO: International Tamil Medical Organization: மாதம் மாதம் உதவுகின்றேன்

- Nesakkaram : இடைக்கிடை உதவுகின்றேன்.

 

இந்த அமைப்புக்கள் எல்லாம் அரசியல் , சமூக சேவைகளை செய்கின்றன. ஆனால், பல நூறு திட்டங்கள் இருந்தும் அவற்றை முன்னெடுக்க முடியாத நிலை. காரணம் $$$$. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரியில் வருவதால் இலங்கையின் சுதந்திர தினத்தை ஒட்டி இசைஞானி இளையராஜா கனடாவில் இன்னிசை நிகழ்ச்சியை வைக்கின்றார் என்று பரப்புரை செய்ய யாரும் வரமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

 

ஞாபகப்படுத்தியதற்கு நன்றி  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியுமா? :o

 

 

முடியல :lol:

முடியல :lol:

முடியல :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பவாதத்திற்காக மாவீரரையும் தமக்கு சாதகமாக பயன்படுத்த தயங்காத கூட்டத்தை இந்தத்திரியே நல்லா அடையாளங்காட்டுது நடக்கட்டும் நடக்கட்டும். இந்தத் திரி நன்றாக வளர்ந்து கொளுந்துவிட்டெரிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இந்த திரியுடன் நேரடியாக சம்பந்தப்படாத ஆனால் சம்பந்தப்பட்ட ஒரு கருத்து:

 

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இப்பொழுது இரண்டாவது தலைமுறையை இந்த புதிய தேசங்களில் வளர்க்கின்றார்கள். அவர்கள் தாமாக சந்தித்த கலாச்சார, வேலை தள அதிர்ச்சிகளுக்கு அப்பால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்பொழுது வித்தியாசமான அதிர்ச்சிக்கு பலரும் முகம் கொடுக்கின்றார்கள், அது - " சுயமாக சிந்தித்தல்".  


ஆம், பிள்ளைகளை கனடாவில் உள்ள பாடசாலை முறைகள் தாயகத்தில் 'கிளிப்பிள்ளைகள்' போன்ற வளர்ந்த எங்களின் பிள்ளைகளை 'சுயமாக சிந்திக்கும்' பண்பை கூறி வளர்க்கின்றார்கள். இதை ஏற்க முடியாத பல பெற்றோர்கள் - பிள்ளைகளுடன் சண்டை பிடித்து - உறவை புண் படுத்திக்கொள்ளுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியுடன் நேரடியாக சம்பந்தப்படாத ஆனால் சம்பந்தப்பட்ட ஒரு கருத்து:

 

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இப்பொழுது இரண்டாவது தலைமுறையை இந்த புதிய தேசங்களில் வளர்க்கின்றார்கள். அவர்கள் தாமாக சந்தித்த கலாச்சார, வேலை தள அதிர்ச்சிகளுக்கு அப்பால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்பொழுது வித்தியாசமான அதிர்ச்சிக்கு பலரும் முகம் கொடுக்கின்றார்கள், அது - " சுயமாக சிந்தித்தல்".  

 

ஆம், பிள்ளைகளை கனடாவில் உள்ள பாடசாலை முறைகள் தாயகத்தில் 'கிளிப்பிள்ளைகள்' போன்ற வளர்ந்த எங்களின் பிள்ளைகளை 'சுயமாக சிந்திக்கும்' பண்பை கூறி வளர்க்கின்றார்கள். இதை ஏற்க முடியாத பல பெற்றோர்கள் - பிள்ளைகளுடன் சண்டை பிடித்து - உறவை புண் படுத்திக்கொள்ளுகிறார்கள்.

 

பிள்ளைகள் மட்டுமில்லை பெரியவர்களும் சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டும் அகூதா.

 

ஆமா உங்களுக்கு இந்த இசை நிகழ்வில் ஆரம்பத்திலிருந்தே ஒரு வித எதிர்ப்பான தன்மைகள் இருக்கின்றன இந்தத்திரியை ஆரம்பித்து வைத்தவருக்கு அடுத்ததாக வாழ்த்து தெரிவித்துவிட்டு தொடர்ந்து உங்களுடைய சுயம் அப்படி என்னால் நினைக்கமுடியவில்லை ஏதோ ஒரு முகமூடிக்குப்பின்னால் நின்று கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் வேறு விடயங்களில் உங்கள் மீதாக உள்ள அளவற்ற மதிப்பு இங்கு நீங்கள் தொடர்ந்தும் கறுப்புப் பணம் என்று சொல்லாடுவதன்மூலம் அடிபட்டுப்போகிறது.  அப்படியே கறுப்புப் பணம்பற்றி எழுத வெளிக்கிட்டால் நிறையவே அது நம்மவர் மத்தியில் இருக்கிறது அதுவும் வெளிப்படையாக நான் சொல்ல விரும்பாத பக்கங்களில் நிறையவே புழக்கத்தில் உள்ளன. அவற்றையும் நீங்கள் எடுத்து வந்தால் உங்களிடம் நேர்மை இருக்கிறது.

 

அப்படியே நீங்கள் கறுப்புப்பணம்பற்றிக் கவலைப்பட்டால் கனடா காவல்துறைக்கு அறிவித்து நேர்மையான கனடாத் தமிழராக உங்களைக்காட்டிக் கொள்ளலாம். தந்திரமாக நீங்கள் கருத்தாடலாம். இன்றைய நிலையில் புற்றீசல்கள்போல் நிறையவே நிகழ்வுகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. இங்கு நடக்கும் எந்த நிகழ்வுக்கும் யாரும் கணக்குக் காட்டுவதில்லை. இப்போது இத்தகைய நிகழ்வுகளை ஒரு தொழிலாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிகழ்வு நடப்பதானால் இவ்வளவு பணத்தை இவர்களுக்கு அல்லது இந்த அமைப்புக்குக் கொடுங்கள் என்று வெளிப்படையாக எழுதினால் அந்த நேர்மையை பாராட்டுவோம். இப்போது வெளிப்படையாகவே இந்தத் திரியில் எந்த அமைப்பிற்கு அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள் என்று தெளிவாக எழுதுங்கள் அவர்களும் இதனை வாசிப்பார்கள்தானே.

Link to comment
Share on other sites

பிள்ளைகள் மட்டுமில்லை பெரியவர்களும் சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டும் அகூதா.

ஆனால் பலரின் பதிகள் அப்படி இல்லை. உங்கள் பதிலிலும் 'முகமூடி' என்கிறீர்கள். ஆனால், அப்படி ஏதும் தேவை இல்லை என மேலே எழுதி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பலரின் பதிகள் அப்படி இல்லை. உங்கள் பதிலிலும் 'முகமூடி' என்கிறீர்கள். ஆனால், அப்படி ஏதும் தேவை இல்லை என மேலே எழுதி உள்ளேன்.

 

கேள்விக்கும் முகமூடி இருக்கிறது பதிலுக்கும் முகமூடி இருக்கிறது என்பதுதான் உண்மை. இதற்குள் பார்வையாளர்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள்.

 

இவற்றையெல்லாம்பற்றி கவலைப்படுவதற்கு ஏதுமில்லை ஏனெனில் இதுவரை காலமும் நாங்கள் பார்க்காத புதிய விடயத்தையா இப்போது பார்க்கிறோம்?

Link to comment
Share on other sites

கேள்விக்கும் முகமூடி இருக்கிறது பதிலுக்கும் முகமூடி இருக்கிறது என்பதுதான் உண்மை. இதற்குள் பார்வையாளர்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள்.

 

நான் கேள்விகள் கேட்பது இது போன்ற விடயங்களில் மக்கள் கேள்விகள் கேட்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே. மாறாக இந்த நிகழ்ச்சியில் இல்லை இதை நடாத்துபவர் மீது எந்த தனிப்பட்ட குரோதமோ இல்லை வெறுப்போ கிடையாது.

நாங்கள் ஒரு சமூக நோக்கமாக சிந்தித்து செயல்படுவது காணாது என்பதே எனது கருத்துக்கள். அதை புரிந்து கொள்ளும் விருப்பம் இல்லாதவர்கள் 'முகமூடி; என்று தம்மை ஏமாற்றி கொள்ளுகிறார்கள்.

 

நான் கேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு யாரும் பதில் தரவில்லை: எவ்வாறு பல மில்லியன்கள் செலவுள்ள நிகழ்வை அதில் சம்பந்தமில்லாத கூட்டத்தால் நடாத்த முடிகின்றது?

Link to comment
Share on other sites

மறுபடியுமா? :o

 

 

முடியல :lol:

முடியல :lol:

முடியல :lol:

 

 இப்போதைக்கு முடிய இது என்ன எமது போரட்டங்களா.

 

 

ஒரு செம்பு தண்ணியை மடக்கு மடக்கு என குடித்துவிட்டு நித்திரைக்கு போகவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.