Jump to content

'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, - எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது.


Recommended Posts

  • Replies 90
  • Created
  • Last Reply

64568_482413461818311_843161031_n.jpg

 

66117_482413391818318_1500006649_n.jpg

 

 

184333_482413525151638_1477377983_n.jpgகனடாவில் ட்ரினிட்டி ஈவண்ட்ஸ்(Trinity Events ) நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கு ’’எங்கேயும் எப்போதும் ராஜா’’ மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா குழுவினர் கனடா வந்திறங்கினர்.

எங்கேயும் எப்போதும் ராஜா மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் 70 கலைஞர்கள் கனடா வந்திறங்கினர். மாலை 4.30 மணியளவில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.

எற்கனவே கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ம் திகதி நடக்கவிருந்த இவ் நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டது யாவரும் அறிந்ததே.

இளையராஜா அவர்களுடன், நடிகர் பார்த்திபன், பார்த்திபனின் மகள் நடிகை கீர்த்தனா (கன்னத்தில் முத்தமிட்டால்), பாடகர் சத்யன், பாடகி ரம்யா, அனிதா, பிரியா ஹிமேஷ் ஆகியோருடன் இசைநடத்துனர் பிரபாகரும் வந்து சேர்ந்துள்ளர்கள். இசைக்குழுவினர்களில் ஒரு பகுதியினரும் வந்தடைந்தனர். தற்பொழுது வந்துள்ளவர்கள் ஒரு பகுதியினர் மட்டுமே, மீதமுள்ளவர்கள் சிறு குழுக்களாக அடுத்தடுத்த விமானங்களில் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த இளையராஜா இது ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியை வழங்குவதற்காக எனது வாத்தியக் குழுவுடன் வந்திருக்கிறேன். நிச்சயமாக என்னால் என்னுடைய சிறந்த இசையைக் கொடுக்க முடியும். நிச்சயம் உங்களை நான் இசை வெள்ளத்தில் பரவசமடையச் செய்வேன். அதற்காக நாங்கள் மிகவும் தயாராக இருக்கிறோம்.

நீங்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசை மழையில் நனைந்து பரவசம் அடைய வேண்டும் என இளையராஜா கேட்டுக் கொண்டார்.

மேலும் அங்கு வந்திருந்த பார்த்தீபன் கருத்து தெரிவிக்கும் போது:
இவ் இசை நிகழ்ச்சியில் பல குண்டக்க மண்டக்க நகைசுவை நிகழ்வை நான் உங்களுக்காக தருவேன் இசையோடு நகைச்சுவையும் கலந்து இந் நிகழ்வு அமையப் போகின்றது. எனவே நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு சந்தோசத்தில் மகிழ வேண்டும் என பார்த்தீபன் கேட்டுக்கொண்டார்.

மற்றும் இந் நிகழ்ச்சிக்காக மேலும் 30 கலைஞர்கள் வருகை தந்து பல நிகழ்வுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலர்தினம் (Valentine Day), மற்றும் கனடா குடும்ப தினங்ளை (Family Day Long weekend) ஒட்டி இந்நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றும் வரை பொறுமை காத்த அனைத்து ரசிகர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, இந்நிகழ்ச்சிக்கு எல்லோரையும் வருகவென வரவேற்கிறார்கள் ட்ரினிட்டி இவன்ட்ஸ் குழுவினர்.

மேலும் இவ் நிகழ்விற்கு மீடியா அனுசரனையை லங்காசிறி மற்றும் விஜய் ரி.வி நிறுவனத்தினர் வழங்குகின்றர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி முக நூல்

Link to comment
Share on other sites

கரும் புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றப்பட்டடு கருமையடிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை யார் பன்னீர் தெளித்து புனிதமாக்கியது

பணத்திற்காக பிணம் சுமப்பவர்களா?

Link to comment
Share on other sites

சிறிலங்கா அரசின் அனுசரணையில் நடைபெறுகிறது என்று சில மாதங்களுக்கு முன் திரிக்கு திரி எழுதியவர்கள் எங்கே? .இந்த முறை எப்படி சிறிலங்கா அரசின் அனுசரணை இல்லாமல் போனது? அல்லது பெருந்தொகை பணம் கை மாறி விட்டதா??
Link to comment
Share on other sites

சிறிலங்கா அரசின் அனுசரணையில் நடைபெறுகிறது என்று சில மாதங்களுக்கு முன் திரிக்கு திரி எழுதியவர்கள் எங்கே? .இந்த முறை எப்படி சிறிலங்கா அரசின் அனுசரணை இல்லாமல் போனது? அல்லது பெருந்தொகை பணம் கை மாறி விட்டதா??

 

உலகம் புரியாத பய :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இந்த விழாவிலும் ரஹ்மானின் விழாவில் நடந்தது போல் தமிழ் நிகழ்ச்சிகளை  குறைத்து விட்டார்கள் என்றால் என்ன செய்வது?

TrinityEvent தான் NewJersey இலும் நடத்துகிறதா? அப்படி நடத்தினால் atleast ஒரு $3,000, 000 ஆவது தேறுமே

CRA (CAN)  க்கும் இரஸ் (US) க்கும் போட்டு குடுக்கதான் இருக்கு

Link to comment
Share on other sites

நீங்கள் காசு கொடுத்தவர்கள் அதை  முடக்கி வைத்திருக்கின்றார்கள் என நீங்கள் உறுதியாக நம்பினால் உங்கள் நாட்டின் காவல்துறையிடம் முறையிடுங்கள்.

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா இப்பிடியா?  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  கட்டுரையை ஆதாரத்தோடு போடுறது!!!!

 

ஏன் ராசா

ஏற்கனவே ஒரு கட்டுரைக்கு விளக்கம் கேட்டவர் பேசியது பதியப்பட்டு காவல் துறையிடம் போட்டுக்கொடுத்து வழக்கு நடக்கு.

இதில  அடுத்ததா???? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ராசா

ஏற்கனவே ஒரு கட்டுரைக்கு விளக்கம் கேட்டவர் பேசியது பதியப்பட்டு காவல் துறையிடம் போட்டுக்கொடுத்து வழக்கு நடக்கு.

இதில  அடுத்ததா???? :(  :(  :(

 

இது என்ன புதுக்கதையா கிடக்கு விசுகு.....

Link to comment
Share on other sites

66117_482413391818318_1500006649_n.jpg

 

 

184333_482413525151638_1477377983_n.jpg

 

பார்த்திபனோடு நிற்க்கும் பெண்ணும்  இளையராஜா கூடவா வந்தார்?  பெரிய   ஆளாக இருப்பாவா? பாக்க மனசு பதறுது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தாமதம்?

 

எப்படி சுருட்டியவன் காசைத்தரப் போவதில்லையோ அதே போலத்தான் அகூதா அண்ணா குடுத்தவனும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம்,

 

எம்மில் பலர் சோஷலில் இருந்து கொண்டும்,களவாக வேலை செய்தும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களையே தான் குடுத்துள்ளார்கள், இவர்கள் போய் சட்டரீதியாக கேள்வி கேட்க காவல்துறையையோ,அல்லது நீதிமன்றத்தையோ நாடும் போது இவர்களது வருமான விபரமும்,வரிஏய்ப்பும் தெரிய வந்தால் பாதிப்பு அவர்களுக்கு தான், இதுவும் ஒருவகையில் கறுப்புபணம் தான் அப்படி இருக்க எப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க?

 

எப்படி சீட்டுப்போட்டு ஏமாத்திக் கொண்டு போறவனுக்கு எதிரா ஒன்றும் செய்ய முடியாதோ அதே போல இதுக்கும் ஒன்றும் செய்ய முடியாது, இதைத்தான் ஏமாற்றுபவர்களும் தமக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.

 

கோயில் கணக்கு என்று போட்டிட்டு போய் வேலையைப் பார்ப்பது தான் நல்லது. அல்லது அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய குடுக்கல்,வாங்கல் செய்தால் மோசடி வழக்கு போன்ற ஏதும் பிரிவுகளின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

பார்த்திபனோடு நிற்க்கும் பெண்ணும்  இளையராஜா கூடவா வந்தார்?  பெரிய   ஆளாக இருப்பாவா? பாக்க மனசு பதறுது.

 

 

..நேக்கும்தான்....ஹ்ம்ம்ம்ம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன புதுக்கதையா கிடக்கு விசுகு.....

 

18.01.2013

 

 என்னடா  நீண்ட காலமாய்  ஒருத்தனுமே   போனிலை திட்டவில்லையே என்கிற கவலை  இன்று தீர்ந்தது.   எனது பங்கு பிரிப்பும்  படுகொலையும் தொடரில் ஒரு  உணவு விடுதிக்காரரை பற்றி எழுதியிருந்தேன். தொலைபேசியெடுத்தர் வெட்டுவன் பல்லை உடைப்பன்  என்றுதொடர்ந்தவர் அவரே தனது வாயால் தன்னுடையதுதான்  அந்த உணவு விடுதி என சொல்லும் வரை பொறுமையாக அனைத்தையும்  பதிவு செய்ததோடு  காவல்துறையில்  புகாரும் கொடுத்துவிட்டு  வேலைக்கு போவதற்கு நேரமாகி  விட்டது.  காவல்த்துறையின் விசாரனை யில் இறுதிநேர  நிதி சேகரிப்பு பற்றியும் அவரிடம் விசாரணை நடத்தாலம் என எதிர் பார்க்கிறேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92191&page=41

Link to comment
Share on other sites

..நேக்கும்தான்....ஹ்ம்ம்ம்ம்....

 

இதையாவது எனக்கு விட்டு வைக்க தோனவில்லையா? :D  நான் நினைக்கிறேன் உங்களுக்கும் என்னைபோல நல்ல ரசனைகள் என, :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

66117_482413391818318_1500006649_n.jpg

 

பொடியள் ஆராய வெளிக்கிட்டுட்டாங்கள்????? :lol:

Link to comment
Share on other sites

66117_482413391818318_1500006649_n.jpg

 

பொடியள் ஆராய வெளிக்கிட்டுட்டாங்கள்????? :lol:

 

 

 

இந்த படத்தை பார்த்ததும் வைரமுத்து எழுதிய  பாடல் ஒன்று தான் ஞாபகத்துக்கு வந்தது,.

 

 

முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்து விட தோணுதடி எனக்கு"
 

 

Link to comment
Share on other sites

இளையராஜா ஏ.ரி.என்(ATN) கலையகத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். தனது வாழ் நாளில் கலையகத்தில் வந்து பேட்டி கொடுத்தது இது தான் முதல் தடவையாம். மற்றும் படி தொலைக்காட்சிகள் தானாம் தன்னிடம் வருவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வலண்டைன் தினப்பரிசாக இசைஞானியின் நிகழ்வுக்குச் செல்வதற்கான விவிஐபி ரிக்கெட் கிடைச்சிருக்கு........... :rolleyes::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வலண்டைன் தினப்பரிசாக இசைஞானியின் நிகழ்வுக்குச் செல்வதற்கான விவிஐபி ரிக்கெட் கிடைச்சிருக்கு........... :rolleyes::wub:

அப்ப நீங்கள் முந்தி ரிக்கற் வித்தமுட்டம் வாங்கேல்லையோ????? :blink:  :blink:  :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் முந்தி ரிக்கற் வித்தமுட்டம் வாங்கேல்லையோ????? :blink:  :blink:  :blink:

 

முன்னர் பதிவு செய்த நிலையில் இருந்தது கையில் எடுக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் பதிவு செய்த நிலையில் இருந்தது கையில் எடுக்கவில்லை.

 

கண்ணகியின் கையில் வந்ததும் வலண்டையின் பரிசாக மாறிவிட்டதடி இளயராஜாவினது காட்சியின் பற்றுச்சீட்டு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகியின் கையில் வந்ததும் வலண்டையின் பரிசாக மாறிவிட்டதடி இளயராஜாவினது காட்சியின் பற்றுச்சீட்டு :lol:

 

ஐயோ கு.சா அண்ணை :o  :huh:

அன்றும் இன்றும் நான் ஒரே மாதிரித்தான் இருக்கிறேன். எப்போது இசைஞானியின் நிகழ்வை எதிர்த்தேன்?????. எதிர்த்தவர்களை...., அவர்கள் கூறிய காரணங்களைத்தான் நான் எதிர்த்தேன் வேணுமென்றால் பழைய திரியைத் தேடிப்பாருங்கோ..... :rolleyes:

 

 உந்தாளுக்கு வயசு போட்டுதோ இல்லை தங்கச்சியோட இராத்துப்படுறாரோ :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

45766_10151500046959553_457836070_n.jpg

551332_10151500047014553_27386705_n.jpg

படங்கள் முகநூலில் பெறப்பட்டவை - நன்றி முகநூல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.