Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, - எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களின்போது சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்கள். �முள்ளிவாய்க்கால் போர் இறுதிக் கட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 500 கிலோ தங்கம் எங்கே? மேலும் பிடிபட்டதாகக் கூறிய பணம் எங்கே? கே.பி.யிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபதாயிரம் கோடி ரூபாய் பணம் எங்கே? என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த விபரங்களை அறிவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ சம்பந்தனோ ஏன் ஆர்வம் காட்டவில்லை? அவ்வாறு ஐ.தே.க. கூறுவதில் உண்மை இருந்தால், அந்தப் பணம் புலம்பெயர் தமிழர்களுடையது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இலங்கை அரசின் சிலருக்குக் கிடையாது. அந்தப் பணம் முழுவதும் தாயகத் தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்பதை புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, இது குறித்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாத சம்பந்தன் தமிழரின் வாழ்வுரிமைப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வெளியிடுவதில் ஏன் குறியாக இருக்கின்றார்.



http://www.yarl.com/forum3/index.php?showtopic=113149

Link to post
Share on other sites
  • Replies 93
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காலமும் நம்பியிருந்த சனங்களின் நம்பிக்கையை வைத்து, சொல்ல மாட்டார்கள் எனக் கணக்குப் போடலாம். அதற்குள் பணம் கை மாறியிருக்கும் என்பதும் உண்மை. போராட்டத்திற்குச் சேர்த்த பணம், போராளிகளுக்குப் போய்ச் சேரக் கூடாதென்பதில் இவ்வளவு காத்திரமான எதிர்ப்பு ஏன்?

 

 

கனடாப் புலனாய்வுத்துறையினர் ஏற்கனவே இவர்களைக் கண்காணிப்பில்தான் வைத்திருந்தார்கள்.  அந்த வகையில் பார்க்கும்போது அவர்களிடம் இவை பற்றிய விபரங்கள் நிச்சயமாக இருக்கும்.  அவற்றுள் கைமாறிய விபரங்களும் இருக்கும்.  ஆனால் அவர்கள் காலம் எடுத்துத்தான் நடவடிக்கைகள் எடுப்பது வழமை.  ஆகவே, இவ்விபரங்கள் வெளிவருவதற்கும் நாம் இன்னும் கொஞ்சக் காலம் பொறுக்க வேண்டியிருக்கும்.  ஒருசில விடயங்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன.  மற்றைய விபரங்களும் விரைவில் வெளிவரும் என நினைக்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to post
Share on other sites
  • 1 month later...
டொரோண்டோ இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி!

raja-flyer.jpg

February 16th, 2013 at Rogers Centre, Toronto, Canada

For Tickets, Call Riaz at 647-866-3160

For more information: www.trinityeventsonline.com

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

64568_482413461818311_843161031_n.jpg

 

66117_482413391818318_1500006649_n.jpg

 

 

184333_482413525151638_1477377983_n.jpgகனடாவில் ட்ரினிட்டி ஈவண்ட்ஸ்(Trinity Events ) நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கு ’’எங்கேயும் எப்போதும் ராஜா’’ மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா குழுவினர் கனடா வந்திறங்கினர்.

எங்கேயும் எப்போதும் ராஜா மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் 70 கலைஞர்கள் கனடா வந்திறங்கினர். மாலை 4.30 மணியளவில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.

எற்கனவே கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ம் திகதி நடக்கவிருந்த இவ் நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டது யாவரும் அறிந்ததே.

இளையராஜா அவர்களுடன், நடிகர் பார்த்திபன், பார்த்திபனின் மகள் நடிகை கீர்த்தனா (கன்னத்தில் முத்தமிட்டால்), பாடகர் சத்யன், பாடகி ரம்யா, அனிதா, பிரியா ஹிமேஷ் ஆகியோருடன் இசைநடத்துனர் பிரபாகரும் வந்து சேர்ந்துள்ளர்கள். இசைக்குழுவினர்களில் ஒரு பகுதியினரும் வந்தடைந்தனர். தற்பொழுது வந்துள்ளவர்கள் ஒரு பகுதியினர் மட்டுமே, மீதமுள்ளவர்கள் சிறு குழுக்களாக அடுத்தடுத்த விமானங்களில் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த இளையராஜா இது ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியை வழங்குவதற்காக எனது வாத்தியக் குழுவுடன் வந்திருக்கிறேன். நிச்சயமாக என்னால் என்னுடைய சிறந்த இசையைக் கொடுக்க முடியும். நிச்சயம் உங்களை நான் இசை வெள்ளத்தில் பரவசமடையச் செய்வேன். அதற்காக நாங்கள் மிகவும் தயாராக இருக்கிறோம்.

நீங்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசை மழையில் நனைந்து பரவசம் அடைய வேண்டும் என இளையராஜா கேட்டுக் கொண்டார்.

மேலும் அங்கு வந்திருந்த பார்த்தீபன் கருத்து தெரிவிக்கும் போது:
இவ் இசை நிகழ்ச்சியில் பல குண்டக்க மண்டக்க நகைசுவை நிகழ்வை நான் உங்களுக்காக தருவேன் இசையோடு நகைச்சுவையும் கலந்து இந் நிகழ்வு அமையப் போகின்றது. எனவே நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு சந்தோசத்தில் மகிழ வேண்டும் என பார்த்தீபன் கேட்டுக்கொண்டார்.

மற்றும் இந் நிகழ்ச்சிக்காக மேலும் 30 கலைஞர்கள் வருகை தந்து பல நிகழ்வுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலர்தினம் (Valentine Day), மற்றும் கனடா குடும்ப தினங்ளை (Family Day Long weekend) ஒட்டி இந்நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றும் வரை பொறுமை காத்த அனைத்து ரசிகர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, இந்நிகழ்ச்சிக்கு எல்லோரையும் வருகவென வரவேற்கிறார்கள் ட்ரினிட்டி இவன்ட்ஸ் குழுவினர்.

மேலும் இவ் நிகழ்விற்கு மீடியா அனுசரனையை லங்காசிறி மற்றும் விஜய் ரி.வி நிறுவனத்தினர் வழங்குகின்றர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி முக நூல்

Link to post
Share on other sites

மீண்டும் செந்தியா (படம்1). :icon_mrgreen:  படம் எடுக்க என இவர் பிறந்துள்ளார்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கரும் புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றப்பட்டடு கருமையடிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை யார் பன்னீர் தெளித்து புனிதமாக்கியது

பணத்திற்காக பிணம் சுமப்பவர்களா?

Link to post
Share on other sites
சிறிலங்கா அரசின் அனுசரணையில் நடைபெறுகிறது என்று சில மாதங்களுக்கு முன் திரிக்கு திரி எழுதியவர்கள் எங்கே? .இந்த முறை எப்படி சிறிலங்கா அரசின் அனுசரணை இல்லாமல் போனது? அல்லது பெருந்தொகை பணம் கை மாறி விட்டதா??
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசின் அனுசரணையில் நடைபெறுகிறது என்று சில மாதங்களுக்கு முன் திரிக்கு திரி எழுதியவர்கள் எங்கே? .இந்த முறை எப்படி சிறிலங்கா அரசின் அனுசரணை இல்லாமல் போனது? அல்லது பெருந்தொகை பணம் கை மாறி விட்டதா??

 

உலகம் புரியாத பய :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விழாவிலும் ரஹ்மானின் விழாவில் நடந்தது போல் தமிழ் நிகழ்ச்சிகளை  குறைத்து விட்டார்கள் என்றால் என்ன செய்வது?

TrinityEvent தான் NewJersey இலும் நடத்துகிறதா? அப்படி நடத்தினால் atleast ஒரு $3,000, 000 ஆவது தேறுமே

CRA (CAN)  க்கும் இரஸ் (US) க்கும் போட்டு குடுக்கதான் இருக்கு

Link to post
Share on other sites

உலகம் புரியாத பய :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

ஒரு  கட்டுரையை ஆதாரத்தோடு போடுறது!!!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் காசு கொடுத்தவர்கள் அதை  முடக்கி வைத்திருக்கின்றார்கள் என நீங்கள் உறுதியாக நம்பினால் உங்கள் நாட்டின் காவல்துறையிடம் முறையிடுங்கள்.

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா இப்பிடியா?  :icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  கட்டுரையை ஆதாரத்தோடு போடுறது!!!!

 

ஏன் ராசா

ஏற்கனவே ஒரு கட்டுரைக்கு விளக்கம் கேட்டவர் பேசியது பதியப்பட்டு காவல் துறையிடம் போட்டுக்கொடுத்து வழக்கு நடக்கு.

இதில  அடுத்ததா???? :(  :(  :(

Link to post
Share on other sites

ஏன் ராசா

ஏற்கனவே ஒரு கட்டுரைக்கு விளக்கம் கேட்டவர் பேசியது பதியப்பட்டு காவல் துறையிடம் போட்டுக்கொடுத்து வழக்கு நடக்கு.

இதில  அடுத்ததா???? :(  :(  :(

 

இது என்ன புதுக்கதையா கிடக்கு விசுகு.....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

66117_482413391818318_1500006649_n.jpg

 

 

184333_482413525151638_1477377983_n.jpg

 

பார்த்திபனோடு நிற்க்கும் பெண்ணும்  இளையராஜா கூடவா வந்தார்?  பெரிய   ஆளாக இருப்பாவா? பாக்க மனசு பதறுது.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தாமதம்?

 

எப்படி சுருட்டியவன் காசைத்தரப் போவதில்லையோ அதே போலத்தான் அகூதா அண்ணா குடுத்தவனும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம்,

 

எம்மில் பலர் சோஷலில் இருந்து கொண்டும்,களவாக வேலை செய்தும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களையே தான் குடுத்துள்ளார்கள், இவர்கள் போய் சட்டரீதியாக கேள்வி கேட்க காவல்துறையையோ,அல்லது நீதிமன்றத்தையோ நாடும் போது இவர்களது வருமான விபரமும்,வரிஏய்ப்பும் தெரிய வந்தால் பாதிப்பு அவர்களுக்கு தான், இதுவும் ஒருவகையில் கறுப்புபணம் தான் அப்படி இருக்க எப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க?

 

எப்படி சீட்டுப்போட்டு ஏமாத்திக் கொண்டு போறவனுக்கு எதிரா ஒன்றும் செய்ய முடியாதோ அதே போல இதுக்கும் ஒன்றும் செய்ய முடியாது, இதைத்தான் ஏமாற்றுபவர்களும் தமக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.

 

கோயில் கணக்கு என்று போட்டிட்டு போய் வேலையைப் பார்ப்பது தான் நல்லது. அல்லது அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய குடுக்கல்,வாங்கல் செய்தால் மோசடி வழக்கு போன்ற ஏதும் பிரிவுகளின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கலாம்.

Link to post
Share on other sites

பார்த்திபனோடு நிற்க்கும் பெண்ணும்  இளையராஜா கூடவா வந்தார்?  பெரிய   ஆளாக இருப்பாவா? பாக்க மனசு பதறுது.

 

 

..நேக்கும்தான்....ஹ்ம்ம்ம்ம்....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன புதுக்கதையா கிடக்கு விசுகு.....

 

18.01.2013

 

 என்னடா  நீண்ட காலமாய்  ஒருத்தனுமே   போனிலை திட்டவில்லையே என்கிற கவலை  இன்று தீர்ந்தது.   எனது பங்கு பிரிப்பும்  படுகொலையும் தொடரில் ஒரு  உணவு விடுதிக்காரரை பற்றி எழுதியிருந்தேன். தொலைபேசியெடுத்தர் வெட்டுவன் பல்லை உடைப்பன்  என்றுதொடர்ந்தவர் அவரே தனது வாயால் தன்னுடையதுதான்  அந்த உணவு விடுதி என சொல்லும் வரை பொறுமையாக அனைத்தையும்  பதிவு செய்ததோடு  காவல்துறையில்  புகாரும் கொடுத்துவிட்டு  வேலைக்கு போவதற்கு நேரமாகி  விட்டது.  காவல்த்துறையின் விசாரனை யில் இறுதிநேர  நிதி சேகரிப்பு பற்றியும் அவரிடம் விசாரணை நடத்தாலம் என எதிர் பார்க்கிறேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92191&page=41

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

..நேக்கும்தான்....ஹ்ம்ம்ம்ம்....

 

இதையாவது எனக்கு விட்டு வைக்க தோனவில்லையா? :D  நான் நினைக்கிறேன் உங்களுக்கும் என்னைபோல நல்ல ரசனைகள் என, :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

66117_482413391818318_1500006649_n.jpg

 

பொடியள் ஆராய வெளிக்கிட்டுட்டாங்கள்????? :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

66117_482413391818318_1500006649_n.jpg

 

பொடியள் ஆராய வெளிக்கிட்டுட்டாங்கள்????? :lol:

 

 

 

இந்த படத்தை பார்த்ததும் வைரமுத்து எழுதிய  பாடல் ஒன்று தான் ஞாபகத்துக்கு வந்தது,.

 

 

முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்து விட தோணுதடி எனக்கு"
 

 

Link to post
Share on other sites

இளையராஜா ஏ.ரி.என்(ATN) கலையகத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். தனது வாழ் நாளில் கலையகத்தில் வந்து பேட்டி கொடுத்தது இது தான் முதல் தடவையாம். மற்றும் படி தொலைக்காட்சிகள் தானாம் தன்னிடம் வருவது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வலண்டைன் தினப்பரிசாக இசைஞானியின் நிகழ்வுக்குச் செல்வதற்கான விவிஐபி ரிக்கெட் கிடைச்சிருக்கு........... :rolleyes::wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வலண்டைன் தினப்பரிசாக இசைஞானியின் நிகழ்வுக்குச் செல்வதற்கான விவிஐபி ரிக்கெட் கிடைச்சிருக்கு........... :rolleyes::wub:

அப்ப நீங்கள் முந்தி ரிக்கற் வித்தமுட்டம் வாங்கேல்லையோ????? :blink:  :blink:  :blink:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் நிர்வாகம், தயவுசெய்து பின்வரும் குறைகளை நிவர்த்தி செய்வீர்களா? 1) பச்சைப்புள்ளிகள் வழங்கும் தெரிவு மற்றயோரின் கருத்துக்கள், தகவல்களின் கீழே தென்படவில்லை.  2) தனிமடல் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை. (இக்குறைகளைத் தனிமடலில் நிர்வாகத்துக்குத் தெரிவிக்க முயன்றும், அதையும் செய்ய இயலவில்லை!) 😆 3) திண்ணைப் பகுதி என் கண்களில் தென்படவில்லை. (வெளியிலும் நான் திண்ணையைப் பார்த்ததில்லை) 4) எனக்கு யார் பச்சை தந்தார்கள் என்பதைப் பார்க்க முடியவில்லை. (Somebody reacted என்று வருகிறது.) யார் பச்சை தந்தார்கள் என்பது தற்போது எல்லாருக்கும் மறைக்கப்பட்டுள்ளதா?  நன்றி 😊
    • வன்னியரே இவர் சொல்வது கொஞ்சம் தான்.இன்னும் சொன்னால் திறந்த வாய் மூடவே மாட்டீர்கள்.
    • நிவர் புயல் : மீனவர்களுக்கு எச்சரிக்கை! வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக சென்னை உள்ளிட்ட  கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டிருக்கும் இந்த புயல்  நாளை மறுநாள் எதிர்வரும் 25ம் திகதி பிற்பகலில் மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் புயல்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நிவர்-புயல்-மீனவர்களுக்/
    • உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்! ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் முதல் தவணையாகப் போட்டப்பட்ட தடுப்பூசியின் முடிவின்படி 70.4 வீதம் பயனளித்துள்ளது. அத்துடன், இரண்டாம் தவணையாகச் செலுத்திய தடுப்பூசியின்படி 90 வீதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், இன்றைய நாள் கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமானது எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், உலகம் முழுவதும் இந்தத் தடுப்பூசியைக் குறைந்தவிலையில் கொண்டு சேர்ப்பதில் ஒரு அடி முன்னேறினால் போதும் என பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அஸ்ட்ராஜெனிக்காவுடன் இணைந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் மூன்று பில்லியன் மக்களுக்காவது தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே தங்களின் இலக்கு என ஒக்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 23 ஆயிரம் பேர் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர் எனவும் ஆகையால் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நிறைவான தரவுகள் உள்ளன என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள், நிதியுதவி செய்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என நிறையப் பேரின் பங்களிப்பு உள்ளது என்றும் அவர்களின் பங்களிப்பு இலாமல் இந்தத் தடுப்பூசி சாத்தியமில்லை எனவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/உலக-மக்களுக்கு-மகிழ்ச்சி/
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.