Jump to content

இன்றைய... பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன் நீங்கள் இணைத்த, பாடல் எமது நாட்டில் ஒளிபரப்ப முடியாது, தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேற் பாட்டு இருந்தால், போடுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 2.1k
  • Created
  • Last Reply

அர்ஜுன் அண்ணா இணைத்தது ஒரு புதிய பாடல் போல் உள்ளது..

 

இந்தத் திரியின் முழுநேர ஒலிபரப்பாளர் தமிழ்சிறி அவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என நேயர்கள் நாங்கள் விருப்பப்படுகிறோம்..! :D ஒருவேளை அவர் விடுமுறையில் செல்வாராகில், அவர் நியமிக்கும் ஒலிபரப்பாளர்கள் (புங்கை, நுணா போன்றவர்கள்) அந்த வெற்றிடத்தை நிரப்பலாம் என விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலையும், கருத்தையும்... பகிர்ந்து கொண்ட அர்ஜூனுக்கும், இசைக்கலைஞனுக்கும் நன்றி. :) 
"கௌரவம்" படத்திலிருந்து. "யமுனா நதி இங்கே...."

இசையமைப்பு: எம்.எஸ். விஸ்வநாதன்.
பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம் & சுசீலா.
நடிகர்கள்: சிவாஜி & உஷா நந்தினி.

 

http://www.youtube.com/watch?v=eNT6UzC2ehI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துள்ள பாடல், தமிழ் சிறி!

 

ஆனால், இந்த உஷா நந்தினி, ஒரு தாரகையாக மின்னாமல், 'மின்மினி' போல வந்ததும், தெரியாமல், போனதும் தெரியாமல் போய் விட்டாரென நினைக்கின்றேன்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த புங்கையூரானுக்கு.... நன்றி. :) 
"ஆளுக்கொரு வீடு" படத்திலிருந்து, "அன்பு மனம் கனிந்த பின்னே..."

இசையமைப்பு: விஸ்வநாதன் & ராமமூர்த்தி.
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ் & சுசிலா.
நடிகர்கள்: சத்யன் & விஜயலக்ஷ்மி.


http://www.youtube.com/watch?v=BAWmheI4YhU

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை இன்றுதான் முதன்முதல் கேட்கிறேன். தெரியாத பாடல்களை அறிமுகம் செய்வதற்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகராஜா பாகவதர், காலத்துப் பாடல் போல கிடக்கு! :D

 

ஆனால். பாடல் நன்றாக உள்ளது! நன்றிகள்!

Link to comment
Share on other sites

யமுனா நதி இங்கே.. மற்றது அன்புமனம் கனிந்த பின்னால்..

 

இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்கள்..! நன்றிகள் ஐயா..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த உடையார், வந்தியத்தேவன், சுமோ, புங்கையூரானுக்கு நன்றி. :) 
"நீதிக்குப் பின் பாசம்" திரைப்படத்திலிருந்து, "மானல்லவோ... கண்கள் தந்தது..."

இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள்: பி.சுசீலா – டி.எம்.சௌந்திர ராஜன்.
நடிகர்கள்: எம்.ஜி.ராமச்சந்திரன் & சரோஜாதேவி.


http://www.youtube.com/watch?v=m28yTMbNwu4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரோஜாதேவி அழகாக இருக்கிறார். எனக்குத் தெரியாமல் இன்னும் எத்தனை பாடல்கள் இருக்கின்றனவோ? அருமையான பாடல் சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முதல் தரம் தான், இந்தப் பாடல்!

 

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி! :D

 

தமிழ் சிறி, எனக்கு மூப்பா? அல்லது இளைப்பா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்ததுடன், கருத்துக்களையும் பகிர்ந்த... வந்தியத்தேவன், சுமோ, புங்கையூரானுக்கு நன்றி. :D 
"எங்கம்மா சபதம்" படத்திலிருந்து, "அன்பு மேகமே.... இங்கு ஓடி வா..."

இசையமைப்பு: விஜயபாஸ்கர்.
பாடியவர்கள்: வாணிஜெயராம் & பாலசுப்பிரமணியம்.
நடிகர்கள்: சிவகுமார் & ஜெயசித்ரா.

 

http://www.youtube.com/watch?v=sQk0I6lch5E

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல், தமிழ் சிறி! 

 

பின்னணி இசை அதிகம் இல்லாத பாடல்கள், கேட்பதற்கு நல்ல விருப்பம்! ஆங்கிலப் பாடல்கள், விதிவிலக்கு!

 

ஏனெனில், நாலுதரம் கேட்டபிறகுதான், வரிகளே விளங்கும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் பலதடவை பாடலைக் கேட்டுள்ளேன். இன்றுதான் காட்சி பார்த்தேன். நன்றி சிறி.

 

Link to comment
Share on other sites

அருமையான பாடல் "அன்பு மேகமே.."

 

இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் திறமையானவர்.. இன்னும் சில நல்ல பாடல்களையும் தந்திருக்கிறார்..!

Link to comment
Share on other sites

பாடல்: கண் போன போக்கிலே
படம் : பணம் படைத்தவன்
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி
 
பாடலில் வரும் பியானோ இசை விஸ்வநாதன் அவர்களாலும் வயலின் இசை ராமமூர்த்தி அவர்களாலும் வாசிக்கப்பட்டது.
 
அருமையான பாடல் வரிகளை தந்தவர் வாலி அவர்கள்.
 
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும், நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும், ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும், உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும். பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம், புரியாத பல பேர்க்கு இது நாகரீகம், முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம், முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம், வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜீ.ஆர்., சிவாஜி கணேசன் காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக.... கண்ணதாசனும், வாலியும் மறக்க முடியாத அருமையான தத்துவப் பாடல்களை எழுதிக் குவிப்பார்கள். அப்பாடல்கள் காலத்தால் அழியாது என்றும் ஒலித்துக் கொண்டே... இருக்கும். இப்போ அப்படியான பாடல்கள் வராமலிருப்பது கவலைக்குரிய விடயம்.
இப்பாடலில்.... "திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம், வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்" பிடித்த வரிகள். இணைப்பிற்கு நன்றி... நுணாவிலான். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை ரசித்த... உடையார், புங்கையூரான், சுமோ, இசைக்கலைஞன், நுணாவிலான், வந்தியத்தேவன் ஆகியோருக்கு நன்றி. :)
"உரிமைக்குரல்" படத்திலிருந்து, "விழியே... கதை எழுது"  இன்றைய பாடலாக ஒலிக்கின்றது.

இசையமைப்பு: மெல்லிசை மன்னனர் விஸ்வநாதன்.
பாடியவர்கள்: ஜேசுதாஸ் & சுசீலா.
நடிகர்கள்: எம்.ஜீ.ஆர். & லதா.

 

http://www.youtube.com/watch?v=NZb1PRmxjm4

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்களை , ரசனையுள்ள பாடல்களை தேடிப்பிடித்து இணைப்பதற்கு நன்றி சிறித்தம்பி.........என்னுடைய வயதினருக்கு ஏற்ற பாடல்கள்  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், தான் நடிக்கும் படங்களில் உள்ள பாடல்களில், தனிக்கவனம் எடுப்பாராம்!

 

அப்படியான பாடல்களில் இதுவும் ஒன்றாகும்! நன்றிகள், தமிழ் சிறி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.