Jump to content

சிந்தனை செய் மனமே !!!!!!!!!


Recommended Posts

கோபத்திலிருந்து விடுதலை

 

கோபம் என்பது ஒரு அரக்ககுணம். ஒருவருக்கொருவரிடையே உள்ள மன வேறுபாட்டினாலும் , மற்றவர்களின் பேச்சை,செயலை ஏற்றுக் கொள்ள முடியாத போதும் மற்றவர்கள் செய்யும் தவறுகளையும், பலவீனங்களையும் பார்த்து சகித்துக் கொள்ள முடியாததாலும் மனிதனுக்கு கோபம் வருகிறது. அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?


* மற்றவர்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத போதும்,ஏற்றுக் கொள்ள இயலாத போதும், எதிர்க்கும் போதும் அன்புடன் அவர்களுக்கு விளக்கி சொல்லி திருத்த முயல வேண்டும்.


* உங்கள் கோபத்தை உங்களாலேயே அடக்க முடியாதபோது அடுத்தவர்களின் குறைகளை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்? கோபித்துக் கொள்வதை விடுத்து அவர்களைத் திருத்த முயற்சி செய்யலாமே?


* விரோதிகளிடம் பேசும்போது கூட அன்பான வார்த்தைகளைப் பயன் படுத்துங்கள். இதனால் உங்கள் கோபம் தலை தூக்காது. மற்றவர்களின் கோபமும் தணிந்து விடும்.


* அதிக வெப்ப நிலையில் உள்ள இரும்பைக்கூட குளிர்ந்த இரும்பு வெட்டி விடுகிறது. ஆகவே காரசாரமாகப் பேசுபவரிடம் அமைதியாகப் பேசினால் உறுதியாக வெற்றி கிடைக்கும்.


* மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கும்போது நாமும் துன்பம் அடைகிறோம் என்பதனை உணர வேண்டும். அமைதியாக காரியங்களை செய்து வெற்றி காண வேண்டும்.


* சிறு கோபமோ, பெரிய கோபமோ முதலில் ஏதோ பலன் கிட்டியதுபோலத் தோன்றினாலும் நன்கு யோசித்தால் அதில் நிரந்தரப் பயன் ஏதும் இல்லை என்பது விளங்கும். எல்லாவற்றிற்கும் மேல் கோபத்தினால் நாம் விலை மதிப்பற்ற நமது நிம்மதியை இழந்து விடுகிறோம்.


* மற்றவர்கள் நம்மீது கோபித்தால் அது நமக்குப் பிடிக்கிறதா? அதேபோல நமது கோபமும் அடுத்தவர்களுக்குப் பிடிக்காதல்லவா? ரோஜாவாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? அதை விடுத்து ஏன் ரோஜாவின் முள்ளாக இருக்க வேண்டும்? தீர்க்கமாக சிந்தித்தால் கோபம் நம்மைவிட்டு தானாகவே ஓடிவிடும்!

 

http://jeyarajanm.blogspot.fr/2012/12/blog-post_13.html

Link to comment
Share on other sites

  • Replies 208
  • Created
  • Last Reply
சரியான மனப்பயிற்சி...இனி உங்களின் ஆட்சி!
 
ஒரு நாட்டை மன்னர் ஒருவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போதுள்ள நடைமுறைப்படி
அரசனுக்குப் பின் அவனது வாரிசுக்குதான் அரசுரிமை கிட்டும். ஒருவேளை மன்னனுக்கு
வாரிசு இல்லாவிட்டால் அவனது உறவினருக்கு அந்தப் பதவி கிட்டும். அப்படியும் யாரும்
இல்லையயென்றால், பட்டத்து யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து வீதியில் ஊர்வலம் வரச்
செய்வார்கள். அப்போது யானை அந்த மாலையை யாருடைய கழுத்திலாவது போடும். அதனை தெய்வீக
அடையாளமாகக் கருதி அவரையே மன்னராக ஏற்பார்கள். அப்படி ஒரு நிலைமை அங்கு ஏற்பட்டது.
அந்த நாட்டு அரசர் வாரிசு யாரும் இன்றி இறந்துபோனார். நடைமுறை சட்டத்தின்படி
பட்டத்து யானையை அனுப்ப முடிவு செய்தார்கள். இப்படி ஒரு நிலைமை வரும் என்பதை முன்
கூட்டியே உணர்ந்திருந்தான் யானைப் பாகன். அதனால் அவன் ஒரு சூழ்ச்சி செய்திருந்தான்.
அரசர் நோய்வாய்ப்பட்ட நாள் முதலே அவன் யானைக்குப் பயிற்சி அளிக்க
ஆரம்பித்திருந்தான்.

குறிப்பிட்ட நாளில் யானையை அனுப்புவார்கள் அல்லவா?
அப்போது யானை, அவனது மருமகனுக்கு மாலை இடவேண்டும் என்பதற்காக தந்திரமாக அந்தப்
பயிற்சியைக் கொடுத்தான். அதனால் தினமும் தன் மருமகனை யானை முன் நிற்க வைத்து
அவனுக்கு மாலை இடும்படி கட்டளையிட்டான். யானையும் தவறாமல் மாலையை அவன் கழுத்திலேயே
போட்டது. பயிற்சியும் தொடர்ந்தது. ஒருநாள், அவன் வழக்கம் போல் பயிற்சி அளித்துக்
கொண்டிருந்தபோது, இளைஞன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவன் சிறந்த கல்விமான்,
பண்பானவன் என்பதெல்லாம் அவனைப் பார்த்ததுமே புரிந்தது. அரசரைப் பார்த்து வேலை
ஏதாவது கேட்க வந்திருந்தான் அவன். ஆனால் அவனால் தன் ரகசியத் திட்டம்
அம்பலமாகிவிடுமோ என நினைத்தான் யானை பாகன். அதனால் இந்தப் பக்கமாக வராதே போ...!
என்பதுபோல் அவனை நோக்கி சைகை காட்டினான். இளைஞன், யானைதான் கோபமாக இருக்கிறதுபோலும் என் நினைத்து ஒதுங்கிப் போனான்.

குறிப்பிட்ட நாளில் பட்டத்து யானை நகர வீதிகளில் கையில் மாலையுடன் சுற்றிவர ஆரம்பித்தது. யானைபாகன் தன் ஆவலை மறைத்துக் கொண்டு அதன் பின்னாலேயே நடந்தான். இன்னும் கொஞ்சம் நேரம்தான் அவன் யானைபாகன். அவனது திட்டப்படி யானை அவன் மருமகன் கழுத்தில் மாலையைப் போட்ட விநாடி முதல் அவன் அரசனின் மாமனார் ஆகிவிடுவான். சந்தோஷக் கனவு அவன் மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. ஆடி அசைந்து வலம் வந்த யானை மெதுவாக ஓரிடத்தில் நின்றது. மெல்ல துதிக்கையை உயர்த்தி பிறகு தாழ்த்தி மாலையை அந்தப் படித்த இளைஞனின் கழுத்தில் போட்டது. மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள் மக்கள். யானை பாகனோ திகைத்து நின்றான். எப்படி நடந்தது இது என்று
புரியாமல் குழம்பினான். ஒரு முறை பயிற்சி நடந்த இடத்தின் பக்கமாக அந்த இளைஞன்
வந்தபோது யானைபாகன் ஏதோ சைகை செய்தான் அல்லவா? அதை யானையும் பார்த்தது. மாலையை அந்த இளைஞனுக்குப் போடுவதற்காகத்தான் பயிற்சி அளிக்கப்படுவதாக அதன் மனதில் பதிந்தது.
அதனால் மாலையை இளைஞனின் கழுத்தில் அணிவித்தது.
 
மனிதனுடைய மனமும் யானையைப் போன்றது. அதனை சரியாகப் பழக்கினால்தான் அது பலமாக இருக்கும். தவறினால், அதுவே பலவீனம் ஆகிவிடும். எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கூறி அவர்களது மனதைப் பழக்குங்கள். அப்பொழுது தான் அவர்களது மனம் பலவீனம் ஆகிவிடாமல் பலமாக இருக்கும்.
 
Link to comment
Share on other sites

தடைகளைக் தாண்டுவது எப்படி ?

 

கணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதலிடத்தில் நிற்பது காசோ, பணமோகூட இல்லை ! வார்த்தைகள். உச்சரிக்கிற அந்தக் கணமே காற்றில் கரைந்து போகிற வார்த்தைகள்தான். கணவன் - மனைவி உறவில் கசப்பு வளர்வதற்கு முதல் காரணம் ! இந்த வெறும் வார்த்தைகள்தான் பல தம்பதிகளை கோர்ட வாசல் வரை கொண்டு போயிருக்கின்றன ! இந்த வெறும் வார்த்தைகள் தான் பல தம்பதிகளை ஒரே வீட்டுக்குள் அந்நியர்கள் போலவும் வாழவைக்கிறது !

இந்த இடத்தில் ஒரு சின்ன கதை !

 

தன் மனைவிக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது பற்றி அவன் கவலைப்படுவதே இல்லை ! கணவனுக்குப் பொருத்தமான மனைவி என்பதால் அவளும் கணவன் மாதிரிதான் ! ஒரு நாள், கணவன் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியும் கணவனைப் பற்றிக் கவலைப்படாமல் தூங்கப் போய்விட்டாள். நள்ளிரவு நெருங்கும் நேரம் வீட்டின் கதவு தட்டப்பட்டது. மனைவி கதவைத் திறந்தாள். கணவன் தான். ஒரு குரங்கை கொண்டு வந்திருந்தான். தான் கொண்டு வந்த குரங்கைப் மனைவி பக்கத்தில் படுக்க வைக்க... மனைவியால் கோபத்தை அடக்க முடியவில்லை. என் பக்கத்தில் குரங்கைப் படுக்க வைக்கிறீர்களே ! நாற்றத்தைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவே இல்லையா ?

கணவன் சொன்னான், கல்யாணமான புதிதில் நாற்றத்தை சமாளிப்பது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், போகப்போக எனக்குப் பழகி விடவில்லையா ? அதே மாதிரிதான், கொஞ்ச நாளில் குரங்குக்கும் பழகிவிடும்...

 

அவ்வளவுதான், கணவனின் இந்தக் குத்தலாக வார்த்தைகள் மனைவியைக் காயப்படுத்திவிட்டன. இவர்களின் தாம்பத்திய வாழ்க்கையும் அந்த இரவோடு முறிந்துவிட்டது !

இந்த இடத்தில் தலாய்லாமா சொன்ன வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்ப்பது அவசியம்.

நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள். அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை ! ஆனால், யாரையும் புண்படுத்திவிடாதீர்கள் ! ஆனால், இன்று சில வீடுகளில் நடப்பது என்ன ? கணவனும் மனைவியும் ரணமாகும் வரை ஒருவரை ஒருவர் வார்த்தைகளாலேயே காயப்படுத்திக் கொள்கிறார்கள். சிந்தித்துப் பார்த்தால் விசித்திரமாகக்கூட இருக்கிறது ! மனித குலத்தின் அறிவு, வளர்ச்சி ஆகியவை வளர வளரத்தான் விவாகரத்து விகிதமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது ! இதற்கு என்ன காரணம் ? இதற்குப் பதில் அறிவு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தில இருக்கிறது !

 

சரி, அறிவு என்பது என்ன ? அறிவு என்பது புத்தகங்களில் இருக்கும் வார்த்தைகளில் இல்லை ! அறிவு தென்படுவது மனிதனின் நடவடிக்கையில் !

 

நிர்வாக இயலில் இப்போது அழுத்தம் கொடுத்துப் பேசப்படும் சப்ஜெக்ட் - Inter personal skills ! ஒருவன் தன் சக ஊழியர்களிடம், மேலதிகாரிகளிடம், தனக்குக் கீழே வேலை செய்பவர்களிடம், வாடிக்கையாளர்களிடம் என்று அனைவரிமும் எப்படி செம்மையான உறவை ஏற்படுத்திக் கொள்வது என்று சொல்லித் தருவது தான் இந்த Interpersonal skills ! பார்க்கும் வேலையில் எத்தகைய குணாதிசயம் நிறைந்தவர்கள் வேகமாக முன்னுக்கு வருகிறார்கள் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது ! இந்த சர்வேயின் முடிவு என்ன தெரியுமா?

 

ஒருவன் முன்னுக்கு வர, சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட் பற்றிய அறிவு 35 சதவிகிதம் இருந்தால் போதும். ஆனால், இன்டர் பர்சனல் ஸ்கில்ஸ் 65 சதவிகிதம் வேண்டும் ! அதாவது, உறவை எப்படிப் பலப்படுத்துவது என்று தெரிந்தவனால்தான் எந்தவொரு தடையையும் எளிதாகத் தாண்டி, செய்யும் தொழிலில் முன்னுக்கு வரமுடியும் ! சம்பளத்துக்காக வேலை செய்யும் இடத்திலேயே உறவுகளை வளர்க்கும் திறன் முக்கியம் என்றால், வீட்டிலே இது எந்த அளவுக்கு முக்கியம் என்று யோசித்துப் பாருங்கள்.

 

ஒருவர் தவறே செய்திருந்தாலும் நீ செய்ததும் தவறு என்று எப்போதும் கூறாதீர்கள். மாறாக எது சரி ? என்று அவர் புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள் ! - இதுதான் இன்டர் பர்சனல் ஸ்கில்ஸின் பாடம் ! இது அலுவலக நடைமுறைக்கு மட்டுமல்ல, இல்லத்தின் இனிய உறவுமுறைக்கும் பொருந்தும்.

 

இன்று பலரின் வீட்டில் கணவன் - மனைவி உறவு என்பது உயிரற்ற கல் மாதிரி இருக்கிறது ! ஆனால், இதில் விசித்திரம் என்னவென்றால், நமது நாட்டின் ரிஷிகள் கற்களில் செதுக்கி வைத்த கஜுராஹோ சிலைகளில் கூட காதல் ரசம் சொட்டுகிறது ! உயிர் இருக்கிறது !

 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF

Link to comment
Share on other sites

தூணிலே ஒரு பூனை

 

பிரார்த்தனை என்பது என்ன ?

 
இந்த இடத்தில் கடவுள் என்ற விஷயத்துக்கு நான் போகவில்லை. ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நம்மையே நாம் முழுமையாக உணர்ந்து கொள்வதுதான் பிரார்த்தனையின் சாரம். வார்த்தைகளிலோ, உருவ வர்ணனைகளிலோ, சத்தங்களிலோ மட்டும் பிரார்த்தனை இல்லை முக்கியமாக உணர்வதில்தான் இருக்கிறது.
 
சம்பிரதாய சடங்குகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல், அதற்குள் போய்ச் சிக்கிக் கொள்வது அல்லது பிரார்த்தனை. இந்த இடத்தில் வருத்தமான ஒரு விஷயத்தை நான் சொல்லவேண்டும் -
சமீபத்தில் நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, வித்தியாசமான ஒரு சுப்ரபாதத்தைக் கேட்டேன்.
 

கௌசல்யா சுப்ரஜா... அலமேலு பால் பொங்குது. காஸை நிறுத்துடி... ராம பூர்வா... சந்த்யா... கோபு... ஃபேன் ஏன் வீணா
சுத்திட்டு இருக்குது... ப்ரவர்த்ததே... உத்திஷ்ட்ட....
இதை நான் நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை.... பிரார்த்தனை என்பது மட்டுமல்ல, காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுதல்... மாவிலை கட்டுதல்... ஆராதனை செய்தல் போன்ற ஆன்மீகமான விஷயங்களையும் இப்போது அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமலே வெறும் சம்பிரதாயங்களாகவே பலர் செய்து வருகிறோம்.
 
நான் சொல்வது எல்லா சமுதாயத்தினருக்கும், இனத்தருக்கும் மதத்தினருக்கும் பொருந்தும்.
 
வேதம், உபநிஷத்துகள் என்று எல்லாவற்றிலும் தேர்ந்த ஞானம் கொண்ட சாமியார் ஒருவர் இருந்தார். ஒருமுறை அவர் தனது சீடர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, பூனை ஒன்று சாமியாருக்கு எதிரே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் அந்த சாமியாரின் கவனம் சிதறவில்லை. ஆனால், சீடர்கள் சிலரின் கவனம் சிதறியது. ஆகவே பூனையைப் பிடித்துப் பக்கத்திலிருந்த தூணில் கட்டும்படி சாமியார் சொல்ல, பூனையும் தூணில் கட்டப்பட்டது. அடுத்த நாள், அதற்கும் அடுத்த நாள் என்று அடுத்தடுத்து வந்த நாட்களிலும் பூனை தொந்தரவு கொடுத்ததால் சாமியார் பாடம் எடுக்கும்போதெல்லாம் தவறாமல் பூனை தூணிலே கட்டப்பட்டது.
 
சில வருடங்களில் சாமியார் இறந்துவிட்டார். சீடர் ஒருவர் அந்த ஆசிரமத்தின் புதிய சாமியார் ஆனார். அவர்சீடர்களுக்கு பாடம் எடுக்கும்போதும் பூனை தவறாமல் தூணில் கட்டப்பட்டது.
 
சில மாதங்களில் அந்தப் பூனையும் இறந்துவிட்டது. அடுத்த நாள் பாடம் எடுப்பதற்காக வந்த அந்தச் சாமியார், பாடம் எடுக்கும்போது தூணிலே ஒரு பூனைகட்டப்பட வேண்டும் என்று தெரியாதா ? உடனே போய் ஒரு புதிய பூனையைப் பிடித்து வந்து தூணில் கட்டுங்கள்என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
 
சிலபேர் கிருஷ்ண பக்தர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வார்கள் கிருஷ்ணன் என்பது யார் ? மகிழ்ச்சி, உவகை, ஆனந்தம், கொண்டாட்டம் என்று எல்லாம் சேர்ந்தவன்தானே கிருஷ்ணன். ஆனால், கிருஷ்ண பக்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர், உம்மென்ற முகத்துடன் சதா சோகமாக இருப்பதை நீங்களும் கூட பார்த்திருக்கலாம். ஒரு கட்டத்தில் அன்பும் அரவணைப்பும் போய், பக்தி என்பதே முரட்டுத்தனமாக மாறிவிட்டது.
 
உணர்ச்சிகளை மறந்து விட்டு வெற்று வார்த்தைகளை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்குவதால்தான் மதத்தின் பெயரால் இப்போது கலவரங்கள் நடக்கின்றன . இப்படிச் சொல்வதால் நமது முன்னோர்கள் எற்படுத்தி வைத்த சம்பிரதாயங்களை மதிக்காதீர்கள் என்று சொல்லவில்லை. அதற்கு எதிராகச் செயல்படுங்கள் என்று தூண்டவில்லை. செய்வது எதுவாக இருந்தாலும் அர்த்தத்தை உணர்ந்து, உணர்ச்சிகளை அனுபவித்து முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள் .
 
சிலர் என்னிடம் வந்து, என் வீட்டில் தனி பூஜை அறை இல்லை பக்கத்தில் டமார் டமார் என்று சத்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொழிற்சாலை இருக்கிறது. சதா குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றன. மனைவி நை நை என்று நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். அதனால் பிரார்த்தனை செய்ய என்னால் முடியவில்லை என்று சொல்கிறார்கள்.
 
பிரார்த்தனை செய்யவோ, தியானம் செய்யவோ அமைதி நமது உடம்புக்கு வெளியே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைதி நமக்கு உள்ளே இருந்தால், மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் சொல்லாமல்கூட பிரார்த்தனை செய்ய முடியும்.
 
எப்படி ?
 
அது ஒரு பொட்டல் வெளி பிரதேசம். வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அங்கே முருகப்பெருமானுக்கு கோயில் கட்டும் பனி நடந்து கொண்டிருந்தது. உச்சி வெயிலில் செங்கற்களைச் சுமந்துசென்று கொண்டிருந்தார்கள்.
 
ஒருவனை அழைத்து, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? என்று கேட்டார்.
அதற்கு அவன், பார்த்தால் தெரியவில்லையா ? கல் சுமந்து கொண்டிருக்கிறேன் என்றான்.
 
இதே கேள்வியை பக்கத்திலிருந்த இன்னொருவனிடமும் கேட்டார் சாமியார்.
அதற்கு இரண்டாமவன், நான் என் குடும்பத்துக்கான உணவைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்.
 
சாமியார் இன்னொருவரிடமும், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? என்ற அதே கேள்வியைக் கேட்டார்.
அதற்கு மூன்றாமவன், நான் தெய்வத்துக்குக் கோயில் கட்டும் புண்ணிய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன் என்றான்.
 
நம் எல்லோருக்குமே கோயில்கட்டும் வேலை கிடைத்து விடாது. ஆனால் செய்யும் வேலை எதுவானாலும் கோயில் கட்டும் வேலையைப் போல முழு ஈடுபாட்டுடன் லயித்து செய்தால் அதுவே சிறந்த பிரார்த்தனைதான்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான மனப்பயிற்சி...இனி உங்களின் ஆட்சி!
 
ஒரு நாட்டை மன்னர் ஒருவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போதுள்ள நடைமுறைப்படி

அரசனுக்குப் பின் அவனது வாரிசுக்குதான் அரசுரிமை கிட்டும். ஒருவேளை மன்னனுக்கு

வாரிசு இல்லாவிட்டால் அவனது உறவினருக்கு அந்தப் பதவி கிட்டும். அப்படியும் யாரும்

இல்லையயென்றால், பட்டத்து யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து வீதியில் ஊர்வலம் வரச்

செய்வார்கள். அப்போது யானை அந்த மாலையை யாருடைய கழுத்திலாவது போடும். அதனை தெய்வீக

அடையாளமாகக் கருதி அவரையே மன்னராக ஏற்பார்கள். அப்படி ஒரு நிலைமை அங்கு ஏற்பட்டது.

அந்த நாட்டு அரசர் வாரிசு யாரும் இன்றி இறந்துபோனார். நடைமுறை சட்டத்தின்படி

பட்டத்து யானையை அனுப்ப முடிவு செய்தார்கள். இப்படி ஒரு நிலைமை வரும் என்பதை முன்

கூட்டியே உணர்ந்திருந்தான் யானைப் பாகன். அதனால் அவன் ஒரு சூழ்ச்சி செய்திருந்தான்.

அரசர் நோய்வாய்ப்பட்ட நாள் முதலே அவன் யானைக்குப் பயிற்சி அளிக்க

ஆரம்பித்திருந்தான்.

குறிப்பிட்ட நாளில் யானையை அனுப்புவார்கள் அல்லவா?

அப்போது யானை, அவனது மருமகனுக்கு மாலை இடவேண்டும் என்பதற்காக தந்திரமாக அந்தப்

பயிற்சியைக் கொடுத்தான். அதனால் தினமும் தன் மருமகனை யானை முன் நிற்க வைத்து

அவனுக்கு மாலை இடும்படி கட்டளையிட்டான். யானையும் தவறாமல் மாலையை அவன் கழுத்திலேயே

போட்டது. பயிற்சியும் தொடர்ந்தது. ஒருநாள், அவன் வழக்கம் போல் பயிற்சி அளித்துக்

கொண்டிருந்தபோது, இளைஞன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவன் சிறந்த கல்விமான்,

பண்பானவன் என்பதெல்லாம் அவனைப் பார்த்ததுமே புரிந்தது. அரசரைப் பார்த்து வேலை

ஏதாவது கேட்க வந்திருந்தான் அவன். ஆனால் அவனால் தன் ரகசியத் திட்டம்

அம்பலமாகிவிடுமோ என நினைத்தான் யானை பாகன். அதனால் இந்தப் பக்கமாக வராதே போ...!

என்பதுபோல் அவனை நோக்கி சைகை காட்டினான். இளைஞன், யானைதான் கோபமாக இருக்கிறதுபோலும் என் நினைத்து ஒதுங்கிப் போனான்.

குறிப்பிட்ட நாளில் பட்டத்து யானை நகர வீதிகளில் கையில் மாலையுடன் சுற்றிவர ஆரம்பித்தது. யானைபாகன் தன் ஆவலை மறைத்துக் கொண்டு அதன் பின்னாலேயே நடந்தான். இன்னும் கொஞ்சம் நேரம்தான் அவன் யானைபாகன். அவனது திட்டப்படி யானை அவன் மருமகன் கழுத்தில் மாலையைப் போட்ட விநாடி முதல் அவன் அரசனின் மாமனார் ஆகிவிடுவான். சந்தோஷக் கனவு அவன் மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. ஆடி அசைந்து வலம் வந்த யானை மெதுவாக ஓரிடத்தில் நின்றது. மெல்ல துதிக்கையை உயர்த்தி பிறகு தாழ்த்தி மாலையை அந்தப் படித்த இளைஞனின் கழுத்தில் போட்டது. மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள் மக்கள். யானை பாகனோ திகைத்து நின்றான். எப்படி நடந்தது இது என்று

புரியாமல் குழம்பினான். ஒரு முறை பயிற்சி நடந்த இடத்தின் பக்கமாக அந்த இளைஞன்

வந்தபோது யானைபாகன் ஏதோ சைகை செய்தான் அல்லவா? அதை யானையும் பார்த்தது. மாலையை அந்த இளைஞனுக்குப் போடுவதற்காகத்தான் பயிற்சி அளிக்கப்படுவதாக அதன் மனதில் பதிந்தது.

அதனால் மாலையை இளைஞனின் கழுத்தில் அணிவித்தது.

 
மனிதனுடைய மனமும் யானையைப் போன்றது. அதனை சரியாகப் பழக்கினால்தான் அது பலமாக இருக்கும். தவறினால், அதுவே பலவீனம் ஆகிவிடும். எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கூறி அவர்களது மனதைப் பழக்குங்கள். அப்பொழுது தான் அவர்களது மனம் பலவீனம் ஆகிவிடாமல் பலமாக இருக்கும்.
 

 

//மனிதனுடைய மனமும் யானையைப் போன்றது. அதனை சரியாகப் பழக்கினால்தான் அது பலமாக இருக்கும். தவறினால், அதுவே பலவீனம் ஆகிவிடும். எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கூறி அவர்களது மனதைப் பழக்குங்கள். அப்பொழுது தான் அவர்களது மனம் பலவீனம் ஆகிவிடாமல் பலமாக இருக்கும்.//
 
பாகன் பல நாள் வைத்துப் பழக்கியவனுக்கு யானை மாலை போட‌வில்லை ஆனால் ஒரு நாள் பாகன் சைகை காட்டியவுட‌ன் புதியவனுக்கு யானை மாலை போட்டுட்டுதாக்கும் :) 
 
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை :unsure:
Link to comment
Share on other sites

பொய்

நம் அனைவருக்கும் கற்பனைத்திறன் இருக்கிறது என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டு, பொய் சொல்வதுதான்.
பொய் சொல்பவன் தன கற்பனையைப் பயன் படுத்தத் துவங்குகிறான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் மனம் கற்பனையான நிகழ்வை உருவாக்குகிறது.பொய்யின் வெற்றியே அதன் உடனடித் தன்மைதான். பொய்யின் விதைகளாக இருப்பவை சொற்களே.


ஒத்திகை பார்த்து சொல்லப்படும் பொய்கள் பெரும்பாலும் இளித்து விடுகின்றன. உண்மை வெளியாகப் பல காலம் தேவைப்படுகிறது. பொய் எப்போதும் நம் நாக்கின் நுனியில் காத்துக் கொண்டிருக்கிறது. உலகில் அதிகம் பயன் படுத்தப்படும் பொருள் பொய். இதில் மொழி, தேசம், உயர்ந்தவர், தாழ்ந்தவர்,வயது என்ற பேதம் இல்லை.


பொய் என்பது ஒரு ருசி. அது இளம் வயதில் நமக்கு அறிமுகமாகிறது. பொய்யை மெய்யில்இருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாத வயது என்பதால் பொய்யை அப்படியே நம்பி விடுகிறோம். அது பொய் என்ற விபரம் தெரிந்ததும், நாமும் அசை ஆசையாய் பொய்களை உருவாக்கத் துவங்குகிறோம்.
நாம் வளர வளர பொய்களும் நம்மோடு வளர்கின்றன. பொய்யை உண்டாக்கவும், உபயோகிக்கவும் தெரிந்தவுடன் அதன் பெயரை திறமை, சாதுரியம், தொழில் தர்மம் என்று பொலிவுடன் கூறுகிறோம்.
பொய் சொல்லத் தயங்காத நாம் மற்றவர்களால் பொய் சொல்லி ஏமாற்றப்படும்போது மட்டும் ஏன் கோபப்படுகிறோம்?


எல்லாப் பொய்களும் ஒரு தற்காலிகமான மகிழ்வையும் தப்பித்தலையும் ஏற்படுத்துகிறது. பொய் என்ற ஒன்று இல்லாதிருந்தால் வாழ்வு சுவாரஸ்யம் இன்றிப் போகுமோ?


அற்பப் பொய்கள் கண்டு பிடிக்கப் படுகின்றன. வரலாறு பதிவில் உள்ள பொய்கள், மதத்தின் பேரால் சொல்லப்பட்ட பொய்கள், வணிக நிறுவனங்கள் சொல்லும் பொய்கள், அரசு சொலும் பொய்கள் யாவும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அங்கீகரிக்கப் படுகின்றன. பொய்யைத் தவிர்ப்பது இயலாது. ஆனால் பொய் சொல்ல வேண்டிய வாய்ப்புகளை குறைப்பது நம் கையில்தான் இருக்கிறது. பொய்யைப் பொய் என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் வேண்டும்.
--எஸ்.ராமகிருஷ்ணன்..

 

http://jeyarajanm.blogspot.fr/2012/07/blog-post_3322.html

 

Link to comment
Share on other sites

அது நிபத்தனைக் காதல் !

 

 

ஹைதராபாத்தில் பன்னாட்டு வங்கி ஒன்றில் பெரிய பதவியிலிருக்கும் இளைஞர் ஒருவர் என்னைச் சந்தித்தார் -

சுவாமி

! நான் ஓர் இந்து. வேறு மதத்தை சேர்ந்த பெண்ணைக் கல்யாணம் செய்து

கொண்டேன். இப்போது எங்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை இருக்கிறது !

காதலிலும் சரி, கல்யாண வாழ்க்கையிலும் சரி... மதம் எங்களுக்கு

முட்டுக்கட்டையாகக் குறுக்கே வந்தது இல்லை ! ஆனால், என் மனைவி நெற்றியில்

சிவப்புப் பொட்டு வைத்துக்கொண்டால், பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பாள் என்று

சமீபகாலமாக எனக்குப் படுகிறது ! என் மனைவியிடம் இந்த ஆசையைச் சொன்னேன்.

அவளோ உங்களின் மத வழக்கத்தை என் மேல் திணிக்காதீர்கள் ! என்கிறாள். சுவாமி,

சத்தியமாகச் சொல்கிறேன். பொட்டு என்பதை நான் மதம் சார்ந்த விஷயமாகவே

பார்க்கவில்லை ! இந்த பொட்டு பற்றி எங்களுக்குள் தினம் தினம் நடக்கிற

விவாதங்கள் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே வருகிறது ! கோபத்தில் நிலையிழந்து

நேற்று நான் அவளைப் பார்த்து உன் குடும்பத்தைப் பற்றித் தெரியாதா ? என்று

வாய்தவறிச் சொல்லி விட்டேன். உடனே அவள் ஒரு கத்தியால் விரலைக் கீறி வழிந்த

ரத்தத்தால் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு... இப்போது உங்களுக்குத்

திருப்திதானே என்று ஆங்காரமாகக் கேட்டாள். நான் என் மனைவியை இங்கே அழைத்து

வந்திருக்கிறேன். நீங்கள் தான் அவளுக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டும்.

நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன். நீங்கள் சொல்வதிலிருந்து ஒரு விஷயம்
தெளிவாகப் புரிகிறது. நீங்கள் இருவருமே ஆரம்பத்திலிருந்தே ஒருவரையொருவர்
காதலித்ததாகச் சொல்வது பொய் ! இருவருமே நான் சொன்னதைக் கடுமையாக
மறுத்தார்கள்.

 

கணவனைப் பார்த்து நான் சொன்னேன் - இந்த பெண்ணைக் காதலித்த நாளிலிருந்து நீங்கள்
சொன்ன எல்லா விஷயங்களையும் இந்தப் பெண் ஒப்புக் கொண்டாள் ! அதனால்தான் இவளை
நீங்கள் காதலித்தீர்கள். சொன்னதை ஒப்புக் கொண்டதால் வருகிற பிணைப்புக்குப்
பெயர், காதல் இல்லை ! அது நிபந்தனைக் காதல் ! இப்போது பொட்டு விஷயத்தில்
நீங்கள் சொல்லும் நிபந்தனைகளை உங்கள் மனைவி கேட்கவில்லை. அதனால்,
உங்களுக்கு காதல் போய்விட்டது.

 

உங்கள் காதலை வேறு கோணத்திலிருந்து பார்க்கலாம்.

 

நீங்கள் சொல்லும் விஷயங்களைக் கேள்வியே கேட்காமல் உங்கள் மனைவி ஏற்றுக் கொள்வாள்
என்று அவர் மீது இத்தனை நாளும் நீங்கள் அபிப்பிராயம் வைத்திருந்தீர்கள் !
உங்கள் மனைவியும் உங்கள் அபிப்பிராயத்திலிருந்து கொஞ்சமும் விலகாமல்
இருந்தாள் ! ஆக... நீங்கள் உங்கள் மனைவியைக் காதலித்தீர்கள் என்பதை விட,
உங்கள் மனைவி மீது நீங்கள் வைத்திருந்த அபிப்பிராயத்தைக் காதலித்தீர்கள்
என்றுதான் சொல்லவேண்டும்.

 

வாழ்க்கை என்பது ஓர் இசைக் கருவி மாதிரி ! சம்பிரதாயம், உறவு... இந்த இரண்டும்
இதிலே இருக்கும் இரண்டு அம்சங்கள் ! சம்பிரதாயத்தை அடக்கியும், உறவைத்
தூக்கலாகவும் வாசித்துப் பாருங்கள் ! இசை அற்புதமானதாக இருக்கும் !

 

தம்பதி அதன்பின் பொட்டு விஷயத்தில் மோதியிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

சுவாமி ! என் காதலி என்னை ஏமாற்றிவிட்டாள் ! என்று சமீபத்தில் இன்னோர் இளைஞர் வந்தார். அவரிடமும், இதே கருத்தைத்தான் சொன்னேன்-

 

காதலி உன்னை ஏமாற்றவில்லை ! ஒட்டாண்டியானாலும், ஒடிந்து போனாலும் அவள் உன்னைத்
தொடர்ந்து காதலிப்பாள் என்று நீ நம்பினாய் ! நீ வியாபாரத்தில் நொடித்துப்
போனதும், அவள் மீது நீயாக உருவாக்கிக் கொண்ட நம்பிக்கை !

 

சரி, கணவன் - மனைவி இருவரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ என்னதான் வழி ?

 

இதற்கு முதல் தேவை, Unconditional Love. பொட்டு வைத்தாலும் சரி, வைக்காவிட்டாலும்
சரி.. . வேலைக்குப் போனாலும் சரி. .. போகாவிட்டாலும் சரி, சுவையாகச்
சமைத்தாலும் சரி, சமைக்கவே இல்லை என்றாலும் சரி.. . கணவன் தன் மனைவியைக்
காதலிக்க வேண்டும். இதே நிபந்தனையற்ற காதலை மனைவியும் தன் கணவனிடம் செலுத்த
வேண்டும்.

 

இரண்டாவது, உங்கள் கணவனிடம் (அல்லது மனைவியிடம்) என்ன இல்லை என்று பார்க்காதீர்கள்.
பணம் இல்லாமல் இருக்கலாம்.. . பரிவு இருக்கிறதா, ஓகே ! அதைப் பார்த்து
சந்தோஷப்படுங்கள் ! குடும்பம் என்னும் மலரிலிருந்து தேன் என்னும் இனிமையை
அப்போதுதான் பெற முடியும் !

 

மிக முக்கியமான இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன். கோபம், கழிவிரக்கம், குற்ற
உணர்வு போன்ற பல உணர்ச்சிகள் நமது நரம்புகளில் ஆங்காங்கே அடைபட்டு,
சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெளியே வரத் திணறிக் கொண்டிருக்கின்றன ! இதற்கு
Energy clots என்று பெயர். வெடிகுண்டுத் திரியில் நெருப்புப் பட்டால், அது
எப்படி உடனே வெடிக்குமோ அதேபோலத்தான் சில வார்த்தைகள் பட்டால், வெடிக்கச்
செய்யுமோ அதைத் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள் !

 

தத்தக்கா பித்தக்கா என்று நடக்கும் சின்னக் குழந்தை தடுக்கிவிழுந்தால் - அப்பா,
அம்மா யாருமே அருகில் இல்லையென்றால் தன்பாட்டுக்கு எழுந்து போய்விடும்.
அதுவே, அப்பா, அம்மா எதிரில் தடுக்கி விழுந்து விட்டால், ஓவென்று அழுது
குழந்தை ஊரையே கூட்டிவிடும். வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டவர்களுக்கும்
குழந்தையின் இந்தக் குணநலன் உண்டு.

 

என்னைக் கவனி, என்னைக் கவனி என்றுதான் ஒவ்வொரு மனைவியும் தன் கணவனைப் பார்த்து
மௌனமாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள் ! அவர்களுக்குத் தேவை, கவனிப்பு...
Attention கணவன்மார்களே, இதைப் புரிந்துகொண்டு கவனிப்பு என்னும் ஜன்னலை
தாராளமாகவே உங்களின் மனைவிக்காகத் திறந்து வைத்திருங்கள்.


 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

 

Link to comment
Share on other sites

கிணற்றுத்தவளை

 

கிணற்றில் இருக்கிற தவளை எப்படித் தன் வாழ் நாள் முழுவதையும் அந்தக் கிணற்றிலேயே கழித்து விடுகிறதோ அதைப்போல பல மனிதர்கள் தங்கள் வாழ் நாள் முழுமையையுமே ஒரு சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு முடித்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறார்கள். அவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கலாம். வெளியே செல்லத் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் இருக்கிற உலகத்தைக் காட்டிலும் இனிமையானதாக வேறொரு உலகம் இருக்க முடியாது என்று நினைக்கிறார்களே, அந்த எண்ணம் தான் தவறானது.


கடலில் இருந்து வந்த தவளை கிணற்றுத் தவளைக்கு கடலைப் பற்றி விளக்கிச் சொல்ல முடியாது. காரணம், விவரங்களுக்கு அப்பாற்பட்டதாகக் கடல் வியாபித்து நிற்கிறது. எனவே அந்தக் கடலிலேயே வாழ்ந்தாலும் கடலைப்பற்றி அந்தக் கடல் தவளைக்கு முழுவதும் தெரியாததில் வியப்பில்லை. ஏனென்றால் அதன் பயணம் குறுகியதாகத்தான் இருக்க முடியும். நிச்சயம் கிணற்றைக் காட்டிலும் கடல் பெரியது என்கின்ற ஒன்று மட்டும் தெரியும். இதுபோலவே ஒரு மாபெரும் மகானுடன் வாழ்கின்ற பலர் அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதுண்டு.


கிணற்றில் இருக்கும் தவளையை எவ்வளவு வற்புறுத்தினாலும் அது கடலுக்கு வர சம்மதிக்காது. ஏனெனில் கிணற்றில் அலை இல்லை , புயல் இல்லை, ஆபத்துக்கள் இல்லை.  பல நேரங்களில் உண்மை நம் கண் முன்னே போகும்போது நாம் கண்களை இறுக மூடிக் கொள்கிறோம். உண்மையைச் சந்திப்பது என்பது நமக்குப் பயத்தைத் தருகிறது. அதன் பிரம்மாண்டத்தின் முன் நாம் காணாமல் போய்விடுவோம் என்கின்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.

 

கிணற்றுத் தவளையாக இருப்பதில் கூடத் தவறில்லை. யார் கிணற்றில் இருந்து கொண்டு கிணற்றைக் கடல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட முடியுமே தவிர பரிகாரம் செய்ய முடியாது.


------வெ.இறையன்பு எழுதிய உள்ளொளிப்பயணம் என்ற நூலிலிருந்து.

Link to comment
Share on other sites

கர்வம் கூடாது...

 

ஒரு ஊரில், ஒரு பெரிய மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் தனது ஊர்க்காரர்கள்
விசேஷங்களுக்கு தான் செல்லாமல், தனது செருப்பை மட்டும் அனுப்பி வைப்பாராம். தனது
செருப்பு வந்தால், தான் வந்ததுக்குச் சமானம் என்பது அவரது நிலைப்பாடு. அந்த
அளவுக்குக் கர்வம். அவர் இறந்தபோது, ஊரார் எவரும் அவரின் வீட்டில் இல்லை. அவரது
இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதற்கு அடையாளமாக, அவரின் வீட்டைச் சுற்றி, ஊரில்
உள்ளவர்களின் செருப்புக்களே கிடந்தன ! தான-தருமங்கள் செய்யும் பலரில், ஒரு சிலர்
மட்டும் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்வார்கள். அது கர்வத்தின் வெளிப்பாடு.
கோயில்களில் வெளிச்சத்துக்காக உபயமாக வழங்குகிற டியூப்லைட்டுகளில் கூட தங்களின்
பெயர்களை எழுதி, புகழுக்கு வெளிச்சம் தேடிக் கொள்பவர்களும் இருக்கின்றனர். எல்லை
மீறாத கர்வம், எவருக்கும் எரிச்சலைத் தராது.

தீமை பயக்கும் கர்வத்தைக் கொண்டுள்ள மனம், பிறரை மதிக்காது . அவர்களின் வெற்றிகளை அலட்சியப்படுத்தும்,  மட்டம் தட்டிப் பேசும் , சகிப்புத்தன்மை என்பது மருந்துக்கும் இருக்காது , கூட்டு
முயற்சியில் கைகோக்காமல், விலகியே இருக்கும்; எங்கும் , எதிலும் தன்னையே
முன்னிலைப்படுத்தி அலட்டிக்கொள்ளும். ஒரு மனிதனின் அனைத்து துர்க்குணங்களுக்கும்
அஸ்திவாரம் , கர்வம்தான் !

 

குருஷேத்திர யுத்தம் முடிவுக்கு வந்தது. அர்ஜுனன் மனதுக்குள், அவன் பெற்ற வெற்றி உற்சாகத்தை தர... அடுத்த கணம், அதுவே கர்வமாக உருவெடுக்கிறது. எத்தனை பாணங்களை எய்தோம்; எத்தனை எதிரிகளை வென்றோம் ! இதோ.... இன்று தன்னிகரில்லாத வீரனாக நிற்கிறோம் ! என்று இறுமாப்புடன் யோசித்தவன், தேரில் இருந்து இறங்க முனைந்தான் . கைலாகு கொடுத்துத் தேரில் இருந்து இறங்குவதற்குச் சாரதி உதவவேண்டும் என்பது மரபு. கிருஷ்ணா, கொஞ்சம் கை கொடேன். தேரை விட்டுக் கீழிறங்க வேண்டும் என்றான்.

அவனது மனஓட்டத்தை அறியாமல் இருப்பாரா ஸ்ரீகிருஷ்ணர் ? !
மனதுக்குள் சிரித்துக் கொண்டார். இத்தனைக் காலம் தேரினைச் செலுத்தி,
களைப்பாகிவிட்டேன் நீயே இறங்கிக்கொள்ளேன் என்றார். அர்ஜுனனும் சம்மதித்தான். ஆனால்
கர்வம் மட்டும் இறங்கினபாடில்லை. வெற்றி மமதையுடன் கீழே இறங்க... அவனையடுத்து
ஸ்ரீகிருஷ்ணரும் கீழே இறங்கினார் அவ்வளவுதான்.. தேர் குபீரென்று தீப்பிடித்து
முற்றிலுமாக எரிந்துபோனது. அதிர்ந்துபோனான் அர்ஜுனன். மெல்லப் புன்னகைத்தார்
ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனா ! உனக்கு நினைவிருக்கிறதா ? போரில் உன் மீது கர்ணன்
நாகாஸ்திரத்தை எய்தபோது, உடனே தேரை கீழே அழுத்தினேன்; உன் தலை தப்பியது. அந்த
பாணத்தின் பாதிப்பை, கொடியில் இருந்த அனுமன் இதுவரை ஏற்றிருந்தான். இப்போது தேரை
விட்டு நான் இறங்கியதும், அனுமனும் இறங்கிவிட்டான். அஸ்திரம் தனது வேலையைக்
காட்டிவிட்டது. இதோ, தேர் சாம்பலாகிப் போனது ! என்றார். எரிந்து சாம்பலானது தேர்
மட்டுமா ? அர்ஜுனனின் கர்வமும்தான் ! ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டான்.


மற்றவர்கள் அனைவரும் தான் என்ற அகந்தையோடு இருக்கிறார்கள். நான் அவர்களைப் போல
அல்லாமல், தன்னடக்கத்தோடு இருக்கிறேன் என்று ஒருவன் தன்னைப் பற்றியே பெருமையாக
நினைத்துக் கொள்கிறான் என்றால் அவனும் கர்வம் பிடித்தவன் தான்.

 

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=14493.45

Link to comment
Share on other sites

அவர்களுக்கு அது ஹாரர்ஸ்கோப்

 

நமது வாழ்க்கை பல நேரம் பயத்தில்தான் கரைகிறது.

வீட்டிலிருக்கும் இருட்டை விரட்டுவதற்காக ஒருவன், வாளி வாளியாக இருட்டை மொண்டு கொண்டுவந்து வீதியில் கொட்டிக் கொண்டிருந்தானாம். எத்தனை ஆண்டுகள் இப்படிச் செய்தாலும் இருட்டைச் சுற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் இருட்டை வெளியேற்ற முடியாது.

 

ஒளி இல்லாமை என்பதுதான் இருட்டு. அதனால் ஒரு சின்ன விளக்கை ஏற்றி வைத்தால், இருட்டு ஓடிவிடும். பயமும் இருட்டு மாதிரிதான். அன்பு இல்லாமைதான் பயம். அன்பு என்ற விளக்கை ஏற்றி வைத்தால், பயம் மறைந்துவிடும்.

 

புரியவில்லை என்றால், அன்பின் ஒருவகையான, காதலை எடுத்துக் கொள்ளுங்கள் காதல் எப்படி மலர்கிறது...? ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்மீது இன்னொருவர் கொள்ளும் நம்பிக்கையில்தானே காதல் பிறக்கிறது ?

 

ஒரு பெண்ணின்மீது ஆணுக்கோ அல்லது ஆணின் மீது பெண்ணுக்கு நம்பிக்கை வராவிட்டால், அங்கே காதல் என்ற அன்பு கிடையாது .

 

சுஃபி இலக்கியத்தில் வரும் முல்லா நஸ்ருமீனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால், இந்த தத்துவம் உங்களுக்குச் சுலபமாக விளங்கக்கூடும்.

 

முல்லா நஸ்ருதீனுக்கு அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. அன்றிரவு நதியைக் கடந்து, மறுகரைக்கு முல்லா நஸ்ருதீனும் அவரது இளம்மனைவியும், உறவினர்களோடு படகில் போய்க் கொண்டிருந்தார்கள்.

 

அப்போது திடீரென்று புயல் அடித்தது. நதியிலே வெள்ளம் கரை புரண்டது. இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு பேயாட்டம் ஆடியது. மணப்பெண் உட்பட படகில் இருந்த அத்தனை பேரையும் மரண பயம் தொற்றிக்கொண்டது. ஆனால், முல்லா மட்டும் பயமேதும் இல்லாமல் இருந்தார்.

இதைப் பார்த்த புது மணப்பெண், "உங்களுக்கு பயமாகஇல்லையா?" என்று கணவரை ஆச்சரியத்தோடு கேட்டாள். அதற்கு முல்லா நஸ்ருதீன் பதில் சொல்லாமல் தன் இடுப்பிலே சொருகியிருந்த கத்தியை எடுத்து மனைவியின் குரல்வளையைக் குத்துவது போல் ஓங்கினார். மனைவியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை அப்போது முல்லா நஸ்ருதீன் தன் மனைவியைப் பார்த்து, கத்தி என்றால் உனக்குப்
பயமாக இல்லையா ? என்று கேட்டார்.

 

அதற்கு அவரது மனைவி, "கத்தி வேண்டுமானால் அபாயகரமானதாக இருக்கலாம். ஆனால், அதைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், என் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் என்
கணவர். அதனால் நான் பயப்படவில்லை..." என்றாள்.

 

"அதேபோலத்தான் எனக்கும். இந்த அலைகள் வேண்டுமானால் ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால், இதை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் அன்புமயமானவர். அதனால் எனக்குப் பயம் இல்லை" என்றாராம் முல்லா நஸ்ருதீன்.

 

முல்லா நஸ்ருதீனுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கை இருந்தது. அதனால் அன்பு இருந்தது. அல்லாஹ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையென்றால் அன்பும் இருந்திருக்காது. அன்பு இல்லையென்றால், படகில் பயணித்த மற்றவர்களைப்போல முல்லா நஸ்ருதீனும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பார்.

இதே உண்மையை நம் வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்கலாம். நமக்குப் பயம் ஏற்படுகிறது என்றால், நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள்.

 

நான் கடவுளுக்குப் பயந்தவன்.. என்று பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இது அபத்தமானது. கடவுளிடம் நாம் செலுத்த வேண்டியது அன்புதானே தவிர, பயம் இல்லை.

நமது உபநிஷத்துக்கள் சொல்லும் மிகப்பெரிய விஷயமே, பயம் இல்லாமல் இருங்கள் என்பதுதான்... என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.

 

சிலர் தங்களின் ஜாதகத்தைத் தூக்கி கொண்டு, எனக்கு மரணம் எப்போது வரும் ..? என்று தெரிந்துகொள்ள ஜோசியர் மாற்றி ஜோசியராகப் போய்க் கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் ஹாரர்ஸ்கோப் (ஜாதகம்) என்பது ஹாரர்ஸ்கோப்.

 

இம்மாதிரி நபர்கள், வாழும்போது என்ன செய்யலாம் என்பதைவிட, எந்த நேரம் இறந்துவிடுவோமோ என்ற பீதியிலேயே உருகி உருக்குவலைந்து கொண்டிருப்பார்கள்.

மரண பயம் பற்றி தாகூர் சொல்லும்போது

"நீ இந்தப் பூமியிலே வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக, உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன்.. . நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையேகூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும் அதனால் நம்பிக்கையோடு இரு..."

என்கிறார்.

பயப்படுபவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல முடியும்.

எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிடுங்கள்... தவறில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற கற்பனைகளில் பயப்படுவதால் உங்கள் மகிழ்ச்சி தான் பாழாகும். பணம் திருடுபோகாமல் இருக்க, அதை எங்கே, எப்படி வைப்பது... மீறி திருட்டுப் போனால் இன்ஷூரன்ஸ் மூலம் எப்படி பாதுகாப்புப் பெறுவது என்று திட்டமிடுங்கள். இதில் எதையும் செய்யாமல் சும்மா நின்று பயப்படுவதில் அர்த்தமில்லை. பரீட்சையில் ஃபெயிலானால்.. என்று விபரீதமாகக் கற்பனை செய்யாதீர்கள். உங்களை நீங்களே பலவீனமாக்கிக்கொள்கிற அந்த நேரத்தைப் பரீட்சையில் எப்படி பாஸாவது என்பது பற்றிச் சிந்திப்பதில் செலவிடுங்கள்.

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D

Link to comment
Share on other sites

யாருக்குப் பரிசு?

 

மன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,

 

''இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன். இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது. இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ, அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,''

 

அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் கொண்டு அடுத்த கையில் ஊசியை வைத்து அடுத்தவர் பலூன்களை உடைக்க முயற்சித்தனர். சிறுவர்களைப் போல அவர்கள் ஓடியும், தாவியும், நாற்காலிகளின் மேல் ஏறியும் இந்தப் போட்டியைத் தொடர்ந்தனர். இருபது நிமிடம் ஆயிற்று. அப்போது ஒரே ஒருவரின் பலூன் மட்டும் உடையாதிருந்தது. அவர் குழந்தையைப்போல ஆர்ப்பரித்தார். பேராசிரியர் எல்லோரிடமும் கேட்டார்,

 

''பலூன் உடையாது வைத்திருக்கும் இவரை வெற்றியாளராக அறிவித்துப் பரிசினைக் கொடுத்து விடலாமா?''

 

என்று கேட்டார். எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர். அப்போது அவர்,

 

''பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி. நான் முதலில் என்ன சொன்னேன்? பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்? ஒவ்வொருவரும் அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல், தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமே!''

 

என்று சொன்னவுடன் ஒவ்வொருவருக்கும் சிறு குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது. பேராசிரியர் தொடர்ந்தார்,

 

''இப்படித்தான் வாழ்விலும்,நாம் நம்மிடம் உள்ளதைக் கவனித்து முறைப்படி வாழ்ந்தாலே நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கலாம். ஆனால் நாம் அடுத்தவர்களையே கவனித்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு, அவர்களை  அழிக்க, ஒடுக்க முயற்சித்து நம் மகிழ்ச்சியைக் காணாமல் போக்கி விடுகிறோம்.''

 

http://jeyarajanm.blogspot.fr/2011/06/blog-post_14.html

 

Link to comment
Share on other sites

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?
 
கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன்
கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை.
அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன்
உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கர்ணன், நீ செய்த
தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை
எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு
அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு
நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக்
கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து
எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம்
தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த
தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத்
தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான்.
வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான்
இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள்
உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே
கொடுத்து விட்டேன்.
 
மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்.
 
 
Link to comment
Share on other sites

எது சந்தோஷம் ?

 

சுஃபி இலக்கியத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமான முல்லா நஸ்ருதீன் ஒரு நாள் சோகமாக உட்கார்ந்திருந்தார். முல்லாவைப் பார்க்க வந்திருந்த நெருங்கிய சிநேகிதன் “ஏன் சோகமாக இருக்கிறாய் ?“ என்று கேட்க, முல்லா அழ ஆரம்பித்துவிட்டார்.

 

“என் மாமா, தன் பெயரிலிருந்த சொத்துக்களை என் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு, போன மாசம் இறந்துவிட்டார். அதை நினைத்தேன்... அழுகிறேன்...“ என்றார் முல்லா.

 

“உன் மாமாவை எனக்குத் தெரியும். அவருக்கு எண்பது வயதாயிற்றே... மரணம் இயற்கையானதுதானே... அதற்கென்ன இத்தனை பெரிய சோகம் ? உண்மையில் பார்த்தால், அவரது திரண்ட சொத்து கிடைத்தற்காக நீ சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும் “

 

என்று முல்லாவுக்கு நண்பன் ஆறுதல் சொல்ல முயன்றான்...

 

முல்லாவோ,

 

“என் சோகம் உனக்குத் தெரியாது நண்பா, போன வாரம்தான் என் சித்தப்பா, என் பெயரில் ஒரு லட்ச ரூபாய் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுச் செத்துப்போனார்“ என்று சொல்லிவிட்டு, இன்னும் பெரிதாகச் சத்தம் போட்டு அழத்தொடங்கினார்.

 

நண்பனுக்குக் குழப்பம் “உன் சித்தப்பாவையும் எனக்குத் தெரியுமே... அவருக்கு எண்பத்தைந்து வயது... பணம் வந்ததை நினைத்துச் சந்தோஷப்படாமல் முட்டாளைப்போல இப்படி அழுகிறாயே ?“ என்று நண்பன் எரிச்சலுடன் கேட்டான்.

 

“என் சோகம் இன்னும் அதிகம். எனது நூறு வயது தாத்தா இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலே என் பெயரில் சொத்து எழுதி வைத்துவிட்டு நேற்று இறந்துவிட்டார் “ என்றார் முல்லா.

 

வெறுத்துப்போன நண்பன், “எனக்குப் புரியவில்லை. நீ ஏன்தான் அழுகிறாய் ?“ என்றான்.

முல்லா கண்களைத் துடைத்தபடியே சொன்னார். “செல்வந்தர்களான என் மாமா, சித்தப்பா, தாத்தா மூவருமே இறந்துவிட்டார்கள். இனிமேல் என் பேரில் சொத்து எழுதி வைத்துவிட்டுச் சாக உறவினர்கள் யாருமே இல்லையே “

 

மிக முக்கியமான ஒரு கருத்தை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் கதைதான் இது.

சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது.

எல்லைகளை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் விரிவடையச்செய்து கொண்டே போனால், எந்தச் சந்தோஷமும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது.


ஓட்டைவாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ, அதேமாதிரி இதுபோல திருப்தியற்ற மனம் உடையவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தங்காது. அவர்களின் மனம் சோகமயமாகவே இருக்கும். தன்னிடம் இல்லாததை நினைத்தே கஷ்டப் படும். வாளியில் உள்ள ஓட்டையை அடைத்துவிட்டால் ஒரு அளவு தண்ணீர் ஊற்றியதும் நிரம்பிவிடுவது போல், மனதில் இருக்கும் கரும் புள்ளிகளை (Blind spots) அழித்துவிட்டால் மகிழ்ச்சி நிரம்பும்.

 

“இது கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும்“ என்று மண்டைக்குள் சில விஷயங்களை நம் மனது ஏற்றுக் கொள்கிறது. அந்த “இது“ கள்தான் மனதில் கரும் புள்ளிகள்.

சில இளைஞர்கள் சந்தோஷம் என்றால் அமெரிக்கா என்று அர்த்தம் பண்ணிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.


அவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கா போக விசா கிடைத்தால், அதுதான் சந்தோஷம். அதாவது “விசா கிடைக்கும்வரை நான் சந்தோஷப்படுவதை ஒத்தி வைத்திருக்கிறேன்...“ என்று அர்த்தம்.

ஆம்... வருங்காலத்தில் நடக்கப்போகும் ஒரு விஷயம் மட்டுமே சந்தோஷம் கொடுக்கப்போகிறது என்று சொல்லிக்கொண்டு, நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தோஷங்களை ஓட்டை வாளியைப் போல, இவர்கள் கீழே விட்டுவிடுகிறார்கள் .

 

இப்படிப்பட்ட “பிளைண்ட் ஸ்பாட்“ மனமுடைய இளைஞர்களுக்கு, அமெரிக்கா போக விசா கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது. விசா கிடைத்த மறுகணமே, “அமெரிக்காவில் வேலை கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும்“ என்று ஏதாவது இன்னொரு காரணத்தைச் சொல்லி, இவர்களே தங்களின் சந்தோஷங்களை மீண்டும் ஒத்திப் போட்டுவிடுவார்கள்.

 

சரி... அமெரிக்காவில் வேலையும் கிடைத்துவிட்டது. அப்போதாவது சந்தோஷப்படுவார்களா ? “கிரீன் கார்ட் கிடைக்கும்வரை சந்தோஷம் இல்லை“ என்பார்கள். அதுவும் கிடைத்துவிட்டால். “அமெரிக்க வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. அப்பா, அம்மா, அக்கா, தங்கை, மாமா, உறவினர்கள், உற்றார்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரும் இருக்கும் இந்தியாவில்தான் சந்தோஷம் இருக்கிறது“ என்று சொல்லி, மீண்டும் தங்களின் சந்தோஷத்தை ஒத்திப்போட்டுவிடுவார்கள்.

 

இன்னும் சிலர் இருக்கிறார்கள்... அவர்கள், சந்தோஷம் என்பது “கடைகளில் விற்பனையாகிறது“ என்ற கருத்து உடையவர்கள். ஆம்... அவர்களுக்கு சிகரெட், மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப் பார்க்கும்போது, ரமண மகரிஷி சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது.

வசதியான மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் திருப்தி இல்லை. அந்த வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள்கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம். ரோட்டில் ஏற்கெனவே திரிந்துகொண்டிருந்த நாய்களுடன் சண்டை போட்டுத் தெருவோர எச்சிலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டுஎலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால், அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய் கல் போல ஆகியிருந்தது. ஆனாலும் அது தெரியாத நாய், அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருசித்த நாயோ, ரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர்,

 

“மட நாயே அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் “ என்று சொல்ல... வழிப்போக்கரைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது.

 

“இத்தனை நாள் வரை - இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும்வரை - என் நாக்கு ரத்தம் சுவைத்ததில்லை. இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் ரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே, இந்த ரத்தம் எலும்புத் துண்டிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது “ என்று சொல்லி, காய்ந்த எலும்பைப் மேலும் ஆவேசமாக கடிக்க ஆரம்பித்தது.

 

தன்னையே அழித்துக்கொண்டு, ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத் தேடி ஓடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் Dog’s logic என்று சொல்கிறோம்.

சிந்தித்துப் பாருங்கள்... காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷத்துக்கும் சிகரெட், மது போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக்கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

 

மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்...

 

அவன் மாபெரும் செல்வந்தன். சந்தோஷம்தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குப் போய்ப் பார்த்தான். சந்தோஷம் கிடைக்கவில்லை. மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பார்த்தான்... மனம் மகிழ்ச்சியே அடையவில்லை.

‘துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும்‘ என்று யாரோ சொல்ல... அதையும் அவன் முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான். தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம்
என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு போய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு...

 

“ஸ்வாமி இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன். இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் நாடிவந்திருப்பது அமைதியையும் மன சந்தோஷத்தையும் மட்டுமே“ என்று யோகியிடம் சரணடைந்தான். அந்த யோகியோ அந்த செல்வந்தன் சொன்னதைக் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக்கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்துத் தன் தலையில் வைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

 

செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி ‘அடடா இருந்திருந்து ஒரு போலிச் சாமியாரிடம் போய் நம் செல்வத்தை ஏமாந்து கோட்டை விட்டு விட்டோமே’ என்ற துக்கம்... ஆத்திரமாக மாற... அந்தச் செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான். யோகியின் ஓட்டத்துக்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, கடைசியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கு வந்து நின்றார். மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக்கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி,

 

“என்ன பயந்துவிட்டாயா ? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள் “ என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.

 

கைவிட்டுப் போன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டது என்பதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத சந்தோஷம். அப்போது அந்த யோகி, செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார்.

 

“இங்கே வருவதற்கு முன்னால்கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம்தான் இருந்தன.

ஆனால், அப்போது உனக்குச் சந்தோஷம் இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே தங்கமும் வைரமும்தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது “

 

இதிலிருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான். சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை; மனதில்தான் இருக்கிறது. இந்த உண்மை, செல்வத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரிந்த செல்வந்தனைப் போலவே நம்மில் பலருக்கும்கூடத் தெரியவில்லை. அதனால்தான் நாம் பல சமயங்களில் நமது சந்தோஷத்துக்காகப் பிறரைச் சார்ந்து இருக்கிறோம். மேலதிகாரி, “சபாஷ், நீ நன்றாக வேலை செய்கிறாய் “ என்று பாராட்டினால் நாம் சந்தோஷத்தில் மிதப்போம். அதே மேலதிகாரி, நம்மை ஒரு வார்த்தை திட்டிவிட்டால் சந்தோஷம் ஒட்டுமொத்தமாகப் போய்விடும். போதை தலைக்கேறும் வரை குடித்துவிட்டு வீதியிலே விழுந்து கிடந்த ஒருவனிடம் அவனது குறும்புக்கார நண்பன்,

 

“டேய் உன் வீட்டுக்குப் போயிருந்தேன். இன்று சாயங்காலம் உன் மனைவி விதவையாகிவிட்டாள். அதனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் உன் மனைவிக்கு ஆறுதல் சொல்“ என்று பொய்யாகப் பதறினான்.

 

இதைக்கேட்டு “ஐயையோ... என்மனைவி விதவையாகிவிட்டாளாமே “ என்று அந்தக் குடிகாரன் அழ ஆரம்பித்தான். நம்முடைய அறியாமை இந்தக் குடிகாரனின் அறியாமை போன்றதுதான்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இப்படி ஒரு குடிகாரன் இருக்கின்றான். உண்மை இல்லாத பல விஷயங்கள்தான் நம்மைப் பல சமயங்கள் சோகத்தில் பிடித்துத் தள்ளுகின்றன. வேறு பல சமயங்களில் முக்கியம் இல்லாத சமாசாரங்கள் நம் சந்தோஷத்தைப் பறித்துவிடுகின்றன.

இளம் பெண்மணி ஒருத்தி தன் குழந்தையுடன் கடற்கரைக்குப் போயிருந்தாள். கடல் அலைகளிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைத் திடீரென்று ஓர் அலை இழுத்துச் சென்றுவிட்டது.

“ஐயையோ... என் குழந்தை போய்விட்டதே“ என்று அந்தப் பெண் கண்ணீர்விட்டு அழுதாள்.

அந்தப் பெண்ணின் அழுகை உருக்கமாக இருந்ததால் கடல் தெய்வம், குழந்தையை மீண்டும் உயிருடன் கரைக்கு அனுப்பியது தன் குழந்தைக்கு ஏதும் ஆகாதது கண்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டாள். குழந்தையின் கன்னங்களில் மாறி மாறி முத்தம் இட்டவள் எதேச்சையாக குழந்தையின் காலை கவனித்தான். குழந்தையின் ஒரு காலில்தான் செருப்பு இருந்தது. இன்னொரு காலில் இருந்த செருப்பைக் காணவில்லை. உடனே அந்தப் பெண்ணின் மிகிழ்ச்சி பறந்துவிட்டது. ஐயையோ செருப்பு போய்விட்டதே என்று அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

 

இதற்கும் ஒரு படி மேலே ஒரு ரகம் உண்டு. சந்தோஷமான விஷயம்கூடச் சிலருக்குக் கவலையைக் கொடுத்துவிடும். அந்த அளவுக்கு எதிலுமே திருப்தியடையாத மனிதர்களாக இருப்பார்கள்.

அவன் ஒரு விவசாயி. ஒரு பருவத்தில் அவனது தோட்டத்தில் அமோகமாகத் தக்காளி விளைந்திருந்தது.

ஆனால், விவசாயி கவலையோடுதான் உட்கார்ந்திருந்தான்.

 

“ஏன் கவலையாக இருக்கிறாய் உன் தோட்டத்தில்தான் இந்த வருடம் நல்ல விளைச்சலாயிற்றே...“ என்று ஊர்க்காரர்கள் அவனைக் கேட்க, அதற்கு அவன், “நான் என் தோட்டத்தில் விளையும் தக்காளிகளில் சொத்தைத் தக்காளிகளை எடுத்து என் பன்றிகளுக்குப் போட்டுவிடுவது வழக்கம். இந்த முறை எல்லா தக்காளிகளுமே நன்றாக இருக்கின்றன. ஒரே ஒரு சொத்தைத் தக்காளிகூட இல்லை. பன்றிகளுக்கு எதைப்போடுவேன் ? அதுதான் கவலையோடு இருக்கிறேன்“ என்றானாம்.

 

எளிமையாகக் சொல்லவேண்டும் என்றால், சந்தோஷம் என்பது ஒரு பூட்டு மாதிரி. அறிவு என்பது சாவியைப் போல. அறிவுச் சாவியை எதிர்ப்பக்கம் திருப்பினால் அது சந்தோஷத்தைப் பூட்டிவிடும். அதே சாவியைச் சரியான பக்கம் திருப்பினால் சந்தோஷக் கதவுகளைத் திறந்துவிடும்.

 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

காணும் இடமெல்லாம் கடவுள்!
 

துறவி ஒருவர், புத்த மடாலயத்தில் தங்கி இருந்தார். அங்கு மூன்று புத்தர் சிலைகள்
இருந்தன. இரவு நேரம் என்பதால் குளிர் அதிகமாக இருந்தது. துறவியால் குளிரைத்
தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவர்
கண்களில் அங்கே இருந்த புத்தரின் மரச்சிலைகள் பட்டன. அதில் ஒரு மரச்சிலையை எடுத்து,
தீ மூட்டி குளிர் காயத் துவங்கினார். தீ ஜுவாலையின் ஒளியைக் கண்ட மடாலய பூசாரி,
ஓடோடி வந்தார். பதறிப் போனார். நீ புத்தமத துறவி என்பதால் தான் உனக்கு இங்கே தங்க
இடம் கொடுத்தேன். ஆனால் நீ நாத்திகனா ? புத்தரின் சிலையை எரித்து விட்டாயே என்று
திட்டினார். அப்போதும் அந்தத் துறவி, சிலையின் எரிந்த சாம்பலில் ஏதோ தோண்டிக்
கொண்டிருந்தார். என்ன தேடுகிறாய் ? சாம்பலில் புத்தரின் எலும்புகள் இருக்கிறதா
என்று பார்க்கிறேன் ! பூசாரிக்குக் கடும் கோபம் வந்து விட்டது. முட்டாளே, லூஸா நீ ?
மரச்சிலையில் எங்கேயாவது எலும்பு இருக்குமா ? அப்படியானால் மற்ற புத்தர்
சிலைகளையும் இங்கே கொண்டு வா. குளிர் அதிகமாகிவிட்டது. அதனால் என் உள்ளே இருக்கும்
பகவான் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் துறவி. பூசாரிக்குக் கோபம்
பொத்துக் கொண்டு வந்தது. உடனே அந்தத் துறவியைத் துரத்தி விட்டார்.

மறுநாள் காலை, பூசாரி, மடாலயத்தின் வெளியே வந்த போது, அந்தத் துறவி, சாலை ஓரத்தில் இருந்த
வழிகாட்டிக் கல்லின் மீது மலர்களை வைத்துப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்.
பூசாரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பைத்தியமாய்யா நீ ? இரவு என்னடாவென்றால் புத்தர்
சிலையை எரிக்கிறாய். ஆனால் இப்போதோ வழிகாட்டிக் கல்லை வழிபடுகிறாய் என்றார்.
புன்னகைத்த துறவி,

 

எங்கே தலை சாய்க்கப்படுகிறதோ அங்கே கடவுளும் நியமனம் ஆகிறார்.
என்றார். என்றைக்கு உண்மையான பிரார்த்திக்கும் கலை உங்களுக்கு வந்துவிடுகிறதோ,
அன்றைக்கு நீங்கள் எந்தக் கோயிலையும் தேடப் போவதில்லை. அன்றைக்கு நீங்கள் எங்கே
இருக்கிறீர்களோ, கோயிலும் அங்கேயே இருக்கும். உங்கள் கோயில், உங்களைச் சுற்றியே
சுழன்று கொண்டேயிருக்கும் அது உங்களுக்கான ஒளிமண்டலமாக மாறிவிடும். எங்கெங்கே
உண்மையான பக்தன், கால் பதிக்கிறானோ அங்கே ஓர் இறை இல்லம் உருப்பெற்றுவிடுகிறது.
மனதுக்குள் கடவுள் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தால். சர்வ வல்லமை பெற்றவர்கள்
ஆகிவிடுவோம்.

 

http://www.no1tamilchat.com/no1chat/index.php?PHPSESSID=f31b3b7250a23f12797169b3034e6740&topic=14493.60

Link to comment
Share on other sites

குறை

 

ஒரு பெண்மணி,தன் வீட்டுத் தேவைக்கு சற்று தொலைவிலிருந்து தினம் தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். ஒரு கம்பில் இரு முனைகளிலும் இரு பானைகளை தொங்கவிட்டுக் கொண்டு சென்று தண்ணீர் எடுத்து வருவார்.  இரண்டு பானைகளில் ஒரு பானையில் தண்ணீர் கொஞ்சம் ஒழுகும் . இதனால் வீட்டிற்குச் செல்லும்போது அதில் பாதி அளவிற்குத்தான் தண்ணீர் இருக்கும். ஒரு நாள் நல்ல நிலையிலிருந்த பானை ஓட்டைப் பானையைப் பார்த்து கிண்டல் செய்தது,

 

''உன்னால் முழு உபயோகம் இல்லையே,''

 

அந்த ஓட்டைப் பானைக்கும் தன் மீதே வருத்தம் வந்தது. அது அந்தப் பெண்மணியிடம் வருத்தத்துடன் சொன்னது,

 

''அம்மா, என்னால் உனக்கு பாதிப் பானை தண்ணீர் வீணாகிறது. என்னால் உனக்குத் தொல்லை. பேசாமல் என்னை கழட்டிவிட்டு வேறு பானையை உபயோகியுங்கள்,

 

''அந்தப் பெண்மணி சிரித்துக் கொண்டே சொன்னாள், ''உன்னால் பயன் இல்லை என்று ஏன் எண்ணுகிறாய்?''


நான் வரும் பாதையைப் பார்த்தாயா? உன் பக்கம் தண்ணீர் ஒழுகியதால் நான் அந்தப் பக்கம் சில பூச் செடிகளை நட்டேன். தினமும் தண்ணீர் விழுந்ததால் அச்செடிகள் நன்கு வளர்ந்து இப்போது பூத்துக் குலுங்குகின்றன. எனக்கு நிறைய பூக்கள் கிடைக்கின்றன,

 

''அந்தப் பானைக்கு தன்னாலும் பயன் இருக்கிறது என்பது தெரிந்து மகிழ்ச்சி ஏற்பட்டது.


இதுபோலத்தான் நம்மிடையே குறை இல்லாத மனிதர்களே கிடையாது யாரிடம் என்ன குறை இருந்தாலும் அக்குறையுடன் அவர்களை ஏற்றுக் கொள்ளப் பழகினால் அதுதான் உண்மையான நட்பு. உண்மையான பாசம்.

 

http://jeyarajanm.blogspot.fr/2012/03/blog-post_06.html

 

Link to comment
Share on other sites

உன் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி

 

ஒரு ஊரில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய இளம் வீரன் ஒருவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற வில் வித்தையில் சிறந்த ஒரு ஜென் துறவியைப் பற்றி தெரிந்ததும், தன்னை விட இந்த உலகில் யாரும் வில் வித்தையில் சிறந்தவராக இருக்க முடியாது என்று அந்த துறவியிடம் சென்று தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்டான்.

அதற்கு அந்த துறவியும் ஒப்புக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே பல போட்டிகள் நடந்தன. இருவருமே வெற்றி பெற்று முன்னேறி வந்தனர்.

அந்த போட்டியில், தூரத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் கண்ணை ஒரு அம்பால் அடித்து, பின் மற்றொரு அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து, சாதனை செய்து காட்டினான் இளம் வீரன்.

அதைப் பார்த்த அந்த துறவி 'அருமை' என்று சொன்னார். பின் அவர் அந்த இளம் வீரரை அழைத்து, "என்னுடன் ஒரு இடத்திற்கு வா, அங்கு வெற்றி பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று கூறினார். அந்த வீரனும் அவருடன் ஆவலோடு சென்றான்.

துறவியோ அவனை, பெரிய மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு அவனிடம், இரண்டு மலைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும் சிறிய மரப்பாலத்தின் நடுவில் நின்று, துரத்தில் ஒரு மரத்தில் இருக்கும் கனியை அடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அந்த பாலமோ ஒருவர் மட்டும் செல்லக் கூடியதாய், பாலத்தின் கீழே பார்த்தால் பாதாளம். விழுந்தால் மரணம் என்பது போல் இருந்தது. பின் அந்த துறவி பாலத்தின் நடுவே சென்று, தன் அம்பை எடுத்து, அந்த பழத்தை சரியாக அடித்தார்.

பின்பு இளம் வீரனிடம் "இப்போது உன் முறை" என்று சொல்லி மலைப்பகுதிக்கு சென்று விட்டார். அவனுக்கோ கை, கால்களெல்லாம் உதறியது. அதனால் அவனால் அந்த பழத்தை சரியாக அடிக்க முடியவில்லை.

அதைக்கண்ட துறவி வீரனை தடவிக் கொடுத்து, "உன் வில்லின் மேல் இருந்த உறுதி, உன் மனதில் இல்லை" என்று சொல்லிச் சென்றார்.

இதிலிருந்து "மற்றவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையை விட உன் மீது நம்பிக்கை வைத்தால், வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்" என்பது புரிகிறது

 

http://vasukimahal.blogspot.fr/2012/07/blog-post_30.html

Link to comment
Share on other sites

இன்னும் ஒரே ஒரு நாள்...

 

ஆசைகளைப் பற்றி நமது வேதங்கள் விரிவாக விவாதித்திருக்கிறது ! ஆசைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று - அடிப்படையான ஆசைகள், ஆதாவது, குரனேயஅநவேயட னுநளசைநளஇ இரண்டாவது - அவ்வப்போது வரும் ஆசைகள். அதாவது, என்பது என்ன ?

இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறோம். சாப்பிடுகிறோம் ! டி.வி. வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வாங்குகிறோம் ! இதெல்லாம்தான் டாபிக்கல் ஆசைகள் !

அடிப்படையான ஆசைகளுக்கு வருவோம். இவைதான் மிக முக்கியமானவை ! இதில் மூன்று ஆசைகள் அடக்கம். இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்று தெரிந்தால், இன்னும் ஒரே ஒரு நாளாவது கூடுதலாக நாம் உயிர்வாழ மாட்டோமா ? என்று ஓர் ஆசை எல்லோருக்குமே பிறக்கும். இதுதான் முதல் ஆசை !

இந்த இடத்தில் ஒரு சின்ன பிரேக்.. . நான் முதன் முதலாகக் கீதையைப் பற்றிச் சொற்பொழிவாற்றப் போனபோது, இந்தக் கூட்டத்தில் முதல் நாள் பேச்சை முடித்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டேன். அன்றிரவு நான் தங்கியிருந்த ஓட்டல் அறையின் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த போது, ஓர் இளம்பெண் எதிரில் நின்றிருந்தாள் !

 

நான் என்ன ? என்று கேட்பதற்கு முன்பே, அந்தப் பெண் படபடவென்று பேச ஆரம்பித்தாள். நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இன்று என் கொடுக்மைக்கார மாமியாரின் வீட்டைவிட்டுக் கிளம்பினேன் ! கடற்கரையில் ஜனசந்தடியாக இருந்தது. சரி இன்னும் ஒன்று இரண்டு மணி நேரம் கழித்துத் தற்கொலை செய்து கொண்டால் யாரும் என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இனி ஒரே ஒருநாள் கூட வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை ! என் உயிரை மாய்த்துக் கொள்ள, இப்போது நேராக கடகற்கரைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறேன்.. . என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே நடக்க ஆரம்பித்தாள்.

 

சந்நியாசியான என்னை ஓர் இளம்பெண் நள்ளிரவில் சந்தித்துவிட்டு, நேரடியாகக் கடற்கரைக்குப் போய்த் தற்கொலை செய்து கொண்டால் என்ன ஆகும்.. .?

வேகமாகக் கிளம்பி அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி, நான் சொல்ல வந்ததில் பாதியைத்தான் இன்று சொற்பொழிவில் சொன்னேன்.. . சொல்ல வேண்டியது இன்னும் மீதி இருக்கிறது ! நாளை வரை காத்திருந்து நான் சொல்லப் போவதையும் கேட்டுவிடு.. . என்றேன்.

அடுத்த நாள் கீதை சொற்பொழிவை, நான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். அங்கே நான் சொன்ன விஷயம் இதுதான் -

 

எல்லோருக்குமே ஒரே நாள் கூடுதலாக வாழ்ந்துவிட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இதை நமது வேதம் சத் என்று குறிப்பிடுகிறது. ஆனால், கூடுதலாக வாழப்போகிற அந்த நாள் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்றே அனைவரும் ஆசைப்படுகிறோம் ! இதை வேதம் ஆனந்தம் என்கிறது. நிரந்தர தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் என்னைச் சந்தித்த பெண் உட்பட ! (அதன் பிறகு நான் அந்தப் பெண்மணியைப் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்.)

 

மனிதனுக்கு உள்ள மூன்றாவது நிரந்தர ஆசை, தனது வாழ்நாளில் நிறைய தகவல்களை - அறிவைச் சேகரிக்க வேண்டும் என்பது ! இந்தக் கருத்தை எங்கே சொன்னாலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்புவது வழக்கம் ! என் மகனுக்குப் பத்து வயதுதான் ஆகிறது. அவனுக்குப் பள்ளிக்கூடப் பாடங்களிலேயே ஈடுபாடு இல்லை ! ஆனால் நீங்களோ, ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவைச் சேகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ! என்கிறீர்கள். அது எப்படி ? என்று சிலர் கேட்கலாம். ஒருவனுக்குப் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரப்படும் பாடத்தின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கு அர்த்தம், எந்த வகையான அறிவைச் சேகரிப்பதிலுமே அவனுக்கு ஆசை இல்லை என்பது கிடையாது.

 

ஒரு முக்கியமான ரகசியம் ! இது உனக்குத் தெரியக்கூடாது ! என்று யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிப் பாருங்கள் ! அது என்ன ரகசியம் என்று அறிய, அடுத்த நாள் வரை அவரால் காத்திருக்க முடியாது. புதிது புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசைதான், மூன்றாவது நிரந்தரமான ஆசை ! இந்த ஆசையைத்தான் நமது வேதங்கள் சித் என்று குறிப்பிடுகின்றன !

 

ஆக - சத் எனப்படும் வாழ்கிற ஆசை.

அடுத்து ஆனந்தம் என்ற ஆசை.. . வாழ்கின்ற நாள் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பது.

மூன்றாவதான சித் எனப்படும் அறிவைச் சேகரிக்கும் ஆசை.

இதைத்தான் நமது வேதம் சத்-சித்- ஆனந்தம் என்று மொத்தமாகச் சொல்கிறது ! பேச்சுத் தமிழில் சொன்னால், சச்சிதானந்தம் !

 

சத், சித் ஆனந்தம் என்ற மூன்று ஆசைகளையும்தான் வாழ்க்கைப் பெருங்கடலில் மூச்சை இழுத்தப் பிடித்துக்கொண்டு முத்தெடுப்பவன் போல தேடிக் கொண்டேயிருக்கிறோம்.

 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D...

Link to comment
Share on other sites

பிரச்சனைகளை பிரித்தால் பிரச்சனை தீரும்

 

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை . யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.


''யானையின் எடையை எப்படி அறிவது?'' என்றுஅமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன்,
 
''நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'' 
 
என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.
 
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு,யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி,
 
''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத் தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான் . எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு,அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்துமுடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.
 
Link to comment
Share on other sites

சாதுரிய மனிதர்கள்.

 

சாதுரியமாக நடக்கக் கற்றுக் கொண்டவர்கள் தங்களைத் தலைவர்களாகவும் செல்வந்தர்களாகவும் உயர்த்திக்கொண்டு வளமான வாழ்க்கை வாழ்வார்கள். யாரும், தங்கள் மீது கருத்தைத் திணிப்பதை விரும்புவதில்லை. ஒருவன் தான் விரும்புவதை மற்றவர்களின் கருத்தாக அவர்களிடம் இருந்தே வெளிவரும்படி சாமர்த்தியமாகப் பேசுவதுதான் சாதுரியம்.சரியான நேரத்தில் சரியானதைப் பேசுவதும், செய்வதும் சாமர்த்தியமே. மற்றவர்கள் கோபம் கொள்ளாதபடி தன கருத்துக்களை அமைதியாக மென்மையாக எடுத்து சொல்லும் கலையே சாதுரியம்.


சாதுரியக்காரர்கள் தங்கள் பேச்சினாலும் செய்கையாலும் தாங்கள் சந்திக்கும் அனைவரையும் தங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களாக மாற்றிக் கொண்டு விடுவார்கள். இவர்கள் யாருடைய மனமும் புண்படும்படி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார்கள். யாருடைய சுய கௌரவத்தையும் பாதிக்கும்படியாக ஒரு சிறு செய்கை கூட செய்ய மாட்டார்கள். மற்றவர்களின் உணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் மதித்து நடப்பார்கள். இப்படிப்பட்டவர்களுடன் பேசி மகிழும் சந்தர்ப்பத்தை மற்றவர்கள் ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். இவர்களுடைய முயற்சிகளுக்கு ஒத்துழைக்க அனைவரும் ஓடி வருவார்கள்.


சாதுரியமாக நடந்து கொள்வது என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கும் வரப்பிரசாதம் அல்ல. கடுமையான பயிற்சி கொண்டு அனைவரும் அடைய முடியும்.தன வாயிலிருந்து ஒரு வார்த்தை வருமுன் , ஒரு செய்கை செய்யுமுன்,அவற்றின் எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சிந்தித்து கெடுதல் தரும் வார்த்தைகளையும் செயல்களையும் தவிர்ப்பவர்கள் அனைவரும் சாதுரிய மனிதர்களே!

 

http://jeyarajanm.blogspot.fr/2013/01/blog-post_4.html

Link to comment
Share on other sites

வாழ்க்கையில் ஒப்பீடு வேண்டாமே

 

இளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தான். அப்போது,அந்த ஊரின் பிரபலமான இதய சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது காரை செப்பனிடுவதற்காக அங்கு வந்தார்.

அவரை அருகில் அழைத்த இளைஞன், ''பார்த்தீர்களா... இந்த இன்ஜின்தான் காரின் இதயம். இந்த உதிரி பாகங்கள்அனைத்தும் வால்வுகள். நானும் உங்களைப்போல ஒவ்வொரு நாளும் இந்த வால்வுகளை இணைத்து ரிப்பேர் செய்கிறேன். உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், எனக்குச் சம்பளம் வெறும் இருநூறு ரூபாய்; உங்களுக்கோ பல ஆயிரங்கள்''என்றவன், நீண்டதொரு பெருமூச்சு விட்டுப்பொருமினான்.


 அந்த மருத்துவர் ஒரு விநாடிகூடத் தயங்காமல், ''உண்மைதான். நீயும் அறுவை சிகிச்சைதான் செய்யறே! ஆனா... கார் ஓடிக்கிட்டிருக்கும்போது செஞ்சு பாரு!'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

வாழ்வில், உண்பதும் உறங்குவதும்போல ஒப்பிடுவதும் வெகு இயல்பாக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

வாழ்வில் எல்லாம் இருந்தும், மகிழ்ச்சியின்றிப் பலர் தவிப்பதற்குக் காரணம், பொறாமை எனப்படும் வயிற்றெரிச்சல்தான். வள்ளுவரின் மொழியில் சொல்லவேண்டுமானால், அழுக்காறு!
பொறாமை அகற்றி மனத்தை தூய்மையாக வைத்திருந்தால், அதுவே தெய்வம் வாழும் ஆலயமாகும்!

 

http://vasukimahal.blogspot.fr/2012/07/blog-post_7701.html

Link to comment
Share on other sites

மன்னிக்க முடியாது.

 

காட்டில் பயங்கரமான நோய் பரவியது . நிறைய விலங்குகள் இறந்தன. பல சாகும் தருவாயில்
இருந்தன. விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது.

 

''காட்டில் பாவம் அதிகரித்து விட்டது. இந்தக் காட்டில் யார் அதிக பாவம் செய்தார்களோ,
அவரைக் கண்டுபிடித்து பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்,''

 

என்று சொன்னது சிங்கம். ஒருவரும் பேசவில்லை. சிங்கம் தான் நிறைய ஆடுகளைக் கொன்று
பாவம் செய்ததாகவும், தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது. உடனே நரி
சொன்னது,

 

''மாண்பு மிகு அரசே, நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறீர்கள். கேவலம், இந்த ஆடுகளை நீங்கள் சாப்பிட்டதெல்லாம் ஒரு பாவமா?''  என்றது .

 

எல்லா விலங்குகளும் கைதட்டி நரியின் பேச்சை ஆமோதித்தன. அதன்பின் புலி, கரடி,
யானை போன்ற பெரிய விலங்குகளைக் குற்றம் சாட்ட எந்த விலங்குக்கும்
தைரியமில்லை. அப்போது ஒரு கழுதை சொன்னது,

 

''என்னுடைய பேராசையால் எனக்கு உரிமை இல்லாத இடத்தில் புல்லை திருடி சாப்பிட்டு விட்டேன்.''

 

உடனே எல்லா விலங்குகளும் ,

 

''கழுதை செய்தது மிகப் பெரிய பாவம் எனவே அதை பலி கொடுத்துவிடலாம்,''

 

என்று ஒருமித்த குரலில் சொல்லின. இது தானே நாட்டு நடப்பு!

 

http://jeyarajanm.blogspot.fr/2010/08/blog-post_24.html

Link to comment
Share on other sites

டென்ஷன் டென்ஷன்.

 

நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்குச் சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன. பல சமயத்தில் படபடப்பு உச்சக்கட்டத்துக்குப் போய் கைகால்களெல்லாம் உதற ஆரம்பித்து விடுகின்றன. இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக்கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது. ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக்கொள்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன்!

 

பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயங்களால்தான் உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.. .

 

பேராசிரியர் ஒருவர் மாற்றலாகி வேறு ஊரிலிருக்கும் கல்லூரிக்குப் போகிறார்.

அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பணிபுரியும் நான்கு பேராசிரியர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட கொஞ்சம் நேரம் இருக்க.. . பேராசிரியர்கள் பிளாட்பாரத்தில் நின்று ஜாலியாக பேச ஆரம்பிக்கிறார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் நகர ஆரம்பித்துவிட்டதையும் அவர்கள் கவனிக்கவில்லை.

 

சடாரெனப் படபடப்பு வந்துவிடுகிறது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறினாலும் பரவாயில்லை...

அடுத்த ஸ்டேஷனில் சரியான கம்பார்ட்மெண்ட்டுக்கு வந்துவிடலாம் என்று நெரிசலில் முட்டிமோதி நான்கு பேராசிரியர்கள் எப்படியோ ரயிலேறி விடுகிறார்கள். ஆனால், கையில் பெட்டி படுக்கையுடன் இருந்த ஒரு பேராசிரியரால் மட்டும் ரயிலில் ஏற முடியவில்லை. அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட போர்ட்டர் ஒருவர், கவலைப்படாதீர்கள்... பத்து நிமிடத்தில் இன்னும் ஒரு ரயில் இருக்கிறது. அதிலே நீங்கள் போய்விடலாம் என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார். அதற்கு அந்தப் பேராசிரியர், "அடுத்து பத்து நிமிடத்தில் இன்னொரு ரயில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் சக பேராசிரியர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. காரணம், அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். ஆனால், இங்கே ஏற்பட்ட அமளி துமளியில் அவர்கள் ரயிலில் ஏறிவிட்டார்கள்" என்றார்.

இப்படித்தான் படபடப்பும் டென்ஷனும் சாதாரண விஷயங்களைக்கூட நம் கண்ணிலிருந்து மறைத்து விடுகின்றன. நாம் பதட்டத்தில் இருக்கும்போது, எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையைச் செய்தாலும் சரி, அதனால் ஏற்படும் பலன் பெரும்பாலும் பூஜ்யமாகத்தான் இருக்கும்.

 

ஒரு சமயம் நான்கு குடிகாரர்கள் ஒன்றாக மது அருந்தப் போனார்கள். போதை தலைக்கேறும் மட்டும் குடித்த அவர்கள், வீட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்ட நேரத்தில் நன்றாக இருட்டிவிட்டது. ஆற்றைக் கடந்துதான் மறு கரைக்கும் போக வேண்டும் எனவே பரிசல்காரனைத் தேடினார்கள். அவனைக் காணவில்லை. ஆனால் பரிசல் மட்டும் இருந்தது. பரிசலைத் தாங்களே ஓட்டிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், பரிசலில் ஏறி உட்கார்ந்து துடுப்புப் போட ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் ஆனது.. . இரண்டு மணி நேரமானது.. . மூன்று மணி நேரமும் ஆனது ஆனால் மறுகரை மட்டும் வரவே இல்லை. அதற்குள் மெல்லப் பொழுதும் விடிந்து... போதையும் மெல்லத் தளிய... அப்போதுதான் கரையில் இருக்கும் மரத்தில் பரிசல் கட்டப்பட்டிருப்பதை அந்த குடிகாரர்கள் கவனித்தார்கள். குடிகாரர்கள் கண்களை போதையும் இருட்டும் மறைத்தது போல,

 

பதட்டம் நம்முடைய கண்களைப் பலசமயம் உண்மையையும் நிதர்சனத்தையும் பார்க்கவிடாமல் மறைத்துவிடுகிறது. புத்த மதத்தில் ஒரு பிரிவாக விளங்கும் ஜென் இலக்கியத்தில் உள்ள ஒரு கதை இது.

ஒர் அரசர் தன் நாட்டுக்கு முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். சம தகுதிபெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால், ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார். ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து,

 

”என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞானப் பூட்டைத் திறக்க நாளை காலை உங்கள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். யார் இந்தப் பூட்டைக் குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர் ”

 

என்று அறிவித்தார். முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், அன்று இரவு முழுதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும் கணிதம் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள். எதுவும் கிடைக்கவில்லை. அந்த நால்வரில் ஒருவர் மட்டும், ஒரு சில ஓலைச்சுவடிகளைப் புரட்டிவிட்டுத் தூங்கப் போய்விட்டார்.

 

மறுநாள் அரசவையில். . . கணிதத் தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை அரசரின் சேவகர்கள் தூக்கிக் கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள். எதிரே அரசர் வீற்றிருந்தார்.

பூட்டின் பிரமாண்டம் எல்லோரின் படபடப்பையும் இன்னும் அதிகரித்தது. கையோடு எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.

ஆனால், கணிதப் பூட்டைத் திறக்கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். இரவிலே நன்றாகத் தூங்கிய அந்த ஓர் அமைச்சர், கடைசியாக எழுந்து வந்தார். அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார். என்ன ஆச்சரியம் பூட்டு பூட்டப்படவே இல்லை. சாவியே இல்லாமல், சூத்திரமே இல்லாமல் அவர் பூட்டை எளிதாகத் திறக்க, அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.

 

பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால், முதலில் பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மனம் பதட்டம் இல்லாமல் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D.

Link to comment
Share on other sites

குதிரையும்……. ஆடும்………

 

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்த துறவி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் அவரிடம் "குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர் "குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்த கதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.

 

அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

 

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து,

 

"எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

 

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

 

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம்

 

"என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார்.

 

பின் அவர்களிடம்  "பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே 

 

இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்."

 

என்று இறுதியில் சொல்லி விடைபெற்றார்.

 

http://karikaalan.blogspot.com/2012/11/blog-post_9.html

 

Link to comment
Share on other sites

கால்பந்து

 

யானைகளுக்கும், பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன. இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான் (நூறு கால் பூச்சி) இறங்கியது. உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது. பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது. ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது. விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது, யானைக் குழுவின் தலைவன், பூச்சிக் குழுவின் தலைவனிடம்,

 

''உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?''

 

பூச்சித்தலைவன் சொன்னது,

 

''அதுவா, பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.''

 

http://jeyarajanm.blogspot.fr/2010/08/blog-post_7604.html

Link to comment
Share on other sites

நிதானம்

 

எத்தனை முறை அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கிறோம்! அதற்கான தண்டனையை எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்! ஆனாலும் நாம் சாமானியமாய் மாறுவதில்லை. எந்த ஒரு பிரச்சினையானாலும் அதற்கு முரட்டுத்தனமான தீர்வையே முதலில் மேற்கொள்கிறார்கள், சில பேர். வேறு வழியே இல்லாவிடில் கடைசி பாணமாக அதை வைத்துக் கொள்ளலாம் என்று ஏனோ அவர்களுக்குத் தெரிவதில்லை.

ஒரு பிரச்சினை வந்ததுமே அதைத் தீர்க்க என்னென்ன வழியெல்லாம் உண்டு என்று சிந்திக்கத் துவங்குபவனே புத்திசாலி. ஒவ்வொரு வழியையும் தீர ஆலோசித்து அது எப்படி முடியும் என மறுப்பு அசை போட்டு கடைசியில் எது சிறந்த வழியோ அதையே நடைமுறைப் படுத்த வேண்டும்.

 

உடலில் கொசு உட்கார்ந்ததும் அதைப் பட்டென்று அடிப்பதுபோல ஒவ்வொரு விசயத்திலும் முடிவு எடுத்தால் வரும் தொல்லை முன்னிலும் பலம் அதிகரித்து இருக்கும். பிரச்சினைக் கோட்டையிலிருந்து வெளிவர ஒரே வழிதான் என்று நம்புபவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நான்கு புறங்களிலும் வழிகள் இருக்கின்றன. அவற்றுள் எது ஆபத்துக் குறைவான வழியோ அதைத்தான் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

மிக எளிதாக இருக்கிறதே என்று பலர் ஆபத்தான வழிகளைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். சற்றே சுற்றிப் போனாலும் பரவாயில்லை என்று நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியம்.

பரபரப்பு அடைவதாலும் அவசரப் படுவதாலும் ஒரு வேலையும் ஆவதில்லை. அப்படி தப்பித்தவறி ஆகிற வேலையும் அபத்தமாகவோ, ஆபத்தனமானதாகவோதான் இருக்கும். இந்தப் பரபரப்பிலும் குழப்பத்திலும் இருப்பவர்கள்தான் 'எனக்கு ஒன்றும் புரியவில்லை,''என்றும்,'எனக்குக் கையும் ஊட வில்லை, காலும் ஓடவில்லை'என்றும் புலம்புகிறார்கள். இது கூடத் தேவலை சிலர் நிதானத்தை இழக்கும்போது நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.

 

தோன்றியதைச் செய்துவிடுவோம், அப்புறம் வருவது வரட்டும் என்கிற மன நிலையும் தவறு. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் செயலாலும் சொல்லாலும் நிதானத்தை இழந்து விடக் கூடாது. நிதானத்தை இழக்காதவர்கள், மற்ற அனைத்தையும் காப்பாற்றத் தெரிந்தவர்கள்.

 

http://jeyarajanm.blogspot.fr/2012/11/blog-post_21.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.