• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கோமகன்

சிந்தனை செய் மனமே !!!!!!!!!

Recommended Posts

அழகும் கொடூரமும்

 

ஓவியர் ஒருவர், உலகிலேயே மனிதருள்  ஒரு அழகான முகத்தையும் , ஒரு கொடூரமான முகத்தையும் வரையவேண்டும் என்று ஆவல் கொண்டார். முதலில் அழகான முகம் வரைவதற்காக அலைந்து தேட ஆரம்பித்தார். நீண்ட நாட்கள் ஆகியும் அவர் எதிர் பார்த்த மனிதன் அகப்படவே இல்லை. திடீரென  அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அழகான முகம் உடையவர்கள் குழந்தைகள்தானே!எனவே குழந்தைகளுள் அழகிய முகம் தேடினார். கடும் உழைப்பிற்குப் பின் அவர் எதிர் பார்த்தபடி ஒரு அழகான ஐந்து வயது சிறுவனைக் கண்டார். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அவர் அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று அக்குழந்தையை தத்ரூபமாக வரைந்து முடித்தார். பின்,கொடூர முகத்தையும் வரைந்து, இரண்டு படங்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று எண்ணினார். கொடூர முகத்தை எங்கு தேடலாம் என்று யோசித்த அவருக்கு ,சிறைச் சாலைகள் தான் அதற்குத் தகுந்த இடம் என்று தோன்றியது. அங்குதானே கொடுஞ்செயல் புரிந்தவர்கள் இருப்பார்கள்! ஆனால் இந்த வேலையும் நினைத்த அளவுக்கு எளிதானதாக இல்லை. அவர் மனதில் கருக் கொண்டிருந்த பாதகன் அவர் கண்ணில் படவில்லை. ஆண்டுகள் பல ஆகின.அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு சிறையில் அவர் எதிர் பார்த்த கொடூரமான முகம் தெரிந்தது. அவருடைய களைப்பு மறைந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது. சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அக்கொடியோனை வரைய ஆரம்பித்தார். வரையும்போது அவனுடைய ஒத்துழைப்புக்கிடைக்க அவனுடன் பேச்சுக் கொடுத்தார். அவன் ஊர்,பேர்,பெற்றோர் பற்றிய விபரங்கள் கேட்டு,  அவன் சொன்னபோது, அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். ஏன்? அவன் வேறு யாருமில்லை. அழகான முகம் என்று எச்சிறுவனின் படத்தை வரைந்தாரோ, அதே சிறுவன்,  இன்று காலத்தின் கோலத்தில் மிகப் பெரிய குற்றவாளியாகக் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழகும் கொடூரமும் குடி கொண்டுள்ளன.அவன் சூழ்நிலைகள்தான்  அவற்றில் ஒன்றை மிகைப்படுத்தியோ,குறைத்தோ காட்டுகிறது.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/12/blog-post_26.html

Share this post


Link to post
Share on other sites

நத்தைக்கூடு

 

இளம் காக்கை ஒன்றிற்கு ஒரு நத்தைக்கூடு கிடைத்தது. ஆனால் அதை உடைத்து சாப்பிடத் தெரியவில்லை. அருகிலிருந்த ஒரு வயதான காக்கையிடம் நத்தைக்கூடை உடைப்பது எப்படி என்று கேட்டது. அக்காக்கையும் சற்று உயரே பறந்து சென்று அங்கிருந்து நத்தைக்கூடை அருகில் இருக்கும் பாறை மீது போட்டால் அது உடைந்து விடும் என்று ஆலோசனை சொன்னது. இளம் காக்கையும் அவ்வாறே செய்தது. ஆனால் கீழே திரும்பி வருமுன்னே முதிய காக்கை உடைந்த கூட்டிலிருந்து வெளி வந்த நத்தையை சாப்பிட்டு விட்டது. இது நியாயமா என்று இளம் காக்கை கேட்க முதிய காக்கை சொன்னது, ''நீ என்னிடம் கூட்டை உடைக்க மட்டும் தானே ஆலோசனை கேட்டாய். அதை சொல்லி விட்டேனே!''என்றது. இக்கட்டான சூழ்நிலையில் போகிற போக்கில் யாரிடமாவது ஆலோசன கேட்கக் கூடாது.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/12/blog-post_14.html

Share this post


Link to post
Share on other sites

இது பிரச்னையா... வாய்ப்பா?

 

'பிராப்ளம்' ! தினப்படி வாழ்க்கையில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் 'நெகடிவ்' சொற்களில் ஒன்று!

'ஆபீஸுக்குப் போனா பிரச்னை..! வீட்டுக்கு வந்தா பிரச்னை...! என்னடா வாழ்க்கை இது?'
- -  இப்படி அலுத்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு.

 

எதுதான் பிரச்னை?

 

இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்:

 

நீண்ட நாட்களாக வேலை தேடித் தேடிச் சோர்ந்துபோன ஓர் இளம் பட்டதாரி அவன் ! பல வருடங்களுக்குப் பிறகு பத்திரிகை ஆபீஸில் அவனுக்கு 'நிருபராய்' வேலை கிடைத்தது! பயபக்தியோடு முதல் நாள் வேலைக்குப் போகிறான்! பத்திரிகை ஆசிரியர் அவனை அழைத்து 'இன்று சுதந்திர தினம். நமது துறைமுகத்தில் கப்பல் படையைச் சேர்ந்த போர்க்கப்பல் ஒன்று வந்திருக்கிறது. அதில் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள். அங்கு போய் செய்தி சேகரித்து வா' என்று இவனை அனுப்பி வைக்கிறார்.

முதல் நாள் - முதல் அஸைன்மெண்ட்!

 

அதனால், ஆசிரியர் சொன்ன அடுத்த நிமிடமே துறைமுகம் நோக்கி ஓடுகிறான்.

அன்று மாலை சுதந்திரதினச் செய்தி சேகரிக்க கோட்டை, கலெக்டர் ஆபீஸ், கட்சி ஆபீஸ் என்று நாலா திசைகளுக்கும் போன நிருபர்கள் அவரவர்கள் சேகரித்த செய்திகளை வேகவேகமாக எழுதுகிறார்கள். ஆனால், நம்முடைய இளை'ன் மட்டும் செய்தி எதுவும் எழுதாமல் சோகமாக உட்கார்ந்திருக்கிறான்! இதைப் பார்த்த சக நிருபர் ஒருவர் 'நீ ஏன் எதுவும் எழுதவில்லை?' என்று பரிவோடு கேட்கிறார்.

 

நம்முடைய இளைஞன், என் கெட்ட காலம், நான் மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது! உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது! என் முதல் நாள் அஸைன்மெண்ட்டே பெரிய பிரச்னைக்குள்ளாகிவிட்டது. கப்பல் படையில் நடக்கும் சுதந்திர நிகழ்ச்சிசகளை கவர் செய்யச் சொல்லித்தான் ஆசிரியர் என்னை அனுப்பினார், என் கஷ்ட காலம்... கப்பலில் எந்தக் கொண்டாட்டமும் நடக்கவில்லை! 'செய்தி இல்லை' என்று ஆசிரியரிடம் எப்படி சொல்வது என்று பயமாக இருக்கிறது' என்று புலம்ப ஆரம்பித்தான்.

 

'அப்படியா! கப்பலில் ஏன் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடக்கவில்லை?' - சக நிருபர் சளைக்காமல் கேட்டார்.

 

'கப்பலில் ஓட்டை இருந்திருக்கிறது, சுதந்திரத்தின ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால், இதை யாரும் கவனிக்கவில்லையாம். திடீரென்று ஓட்டை பெரிதாகி கடல் தண்ணீர் 'குபுகுபு வெனப் புகுந்து கப்பலே ழூழ்கும்படி ஆகிவிட்டது. அதைத் தடுப்பதற்குப் பெரிய படையே பாடுபட்டது. இப்படியிருக்க, சுதந்திர தினக் கொண்டாட்டம் எப்படி நடக்கும்?'

 

சக நிருபர் ஷாக் அடித்த மாதிரி எழுந்து நின்று விட்டார் !

 

'அடப்பாவி! இதுதானே முதல் பக்கச் செய்தியாக வரவேண்டும்!' என்று சொல்லிக் கொண்டே முழு விவரங்களைத் திரட்ட அந்த நிருபர் ஓடினார்.

 

ஆக... 'பிரச்னை' என்று நினைத்து இளைஞன் சோர்ந்து உட்கார்ந்தானே. அது அவன் தன் திறமையை நிரூபிக்க கிடைத்த தங்கமான வாய்ப்பு. அதைத்தான் கோட்டை விட்டிருக்கிறான்.

 

வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை! அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம்!

ஒவ்வொரு பிரச்னையும் நமக்குக் கிடைக்கிற ஒரு வாய்ப்புதான்.

யோகி ஒருவர் காட்டின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். தூரத்தில் விறகு வெட்டிக் கொண்டிருந்த சிலர் விறகு வெட்டிக் கொண்டிருந்த சிலர், யோகி காட்டுக்குள் போவதைப் பார்த்து, 'நில்லுங்கள் 'நில்லுங்கள் ! என்று கத்தியபடி தலைதெறிக்கப் பின்னால் ஓடிவந்தனர்!

 

'அந்தக் காட்டில் ஒரு ராட்சஸி இருக்கிறாள். மனித மாமிசம் சாப்பிடும் பூதகி அவள். எத்தனை மனிதர்களைப் பார்த்தாலும், அவர்களைச் சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்டவர்களின் வலது கை கட்டை விரலை மட்டும் பத்திரமாக எடுத்து வைத்ததுக் கொள்வாள்! இப்படி இதுவரை 999 கட்டை விரல்களை சேகரித்து வைத்திருக்கிறாள் ! ஆயிரமாவது கட்டை விரல் கிடைத்து விட்டால் அத்தனையையும் சேர்த்து கழுத்தில் மாலையாக மாட்டிக் கெர்ளவதுதான் அவள் திட்டம் ! அதனால் காட்டுக்குள் போகாதீர்கள்! போனால் பிரச்னைதான்!' என்று ஊர்மக்கள் எச்சரித்தார்கள்.

 

உங்களுக்கு நன்மை செய்ய இதைவிட நல்ல வாய்ப்பு எனக்கு எங்கே கிடைக்கும் என்று சொல்லிவிட்டு யோகி காட்டுக்குள் சென்றார்.

 

எதிர்பார்த்த மாதிரியே ஆங்காரச் கூச்சலுடன் அங்கிருந்த ஆலமரத்தின் ஒரு பெரிய கிளையை உடைத்துக் கொண்டு புழுதி கிளப்பியபடி யோகியின் எதிரில் வந்து நின்றாள் ராட்சஸி. ஆனால் மற்றவர்களைப் போல ராட்சஸியைப் பார்த்து யோகி பயந்து ஓடவில்லை!

 

'என்னைக் கொல்வதன் மூலம் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும் என்றால் என்னைத் தாராளமாகக் கொல்லலாம். நீ பலசாலி என்பதை ஏற்கிறேன்! ஆனால், ஒரு விஷயம் ஆலமரத்தின் கிளையை உடைக்க உனக்குச் சக்தி இருக்கிறதே தவிர, நீ என்னதான் முயன்றாலும் உன்னால் அந்தக் கிளையை மீண்டும் மரத்தில் ஒட்டவைக்க முடியாது! அழிப்பது சுலபம்! ஆக்குவது சிரமம்! என்று துவங்கி நேருக்கு நேர் பேசத் துவங்கினார் யோகி! அவர் சொன்ன வார்த்தைகளைவிட அவரது குரலில் இருந்த உண்மையும் கரிசனமும் ராட்சஸியைச் சரண் அடையச் செய்தது! அது மட்டுமல்ல பிறகு அந்தயோகியின் சீடராகவே மாறினாள் !

 

இந்தக் கதை உண்மையில் நடந்ததா! இல்லை கற்பனையா என்ற ஆராய்ச்சி முக்கியம் இல்லை! கிட்டத்தட்ட இதே கதை இந்து மத இலக்கியங்களிலும் இருக்கிறது.

நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி மிக எளிமையானது! காட்டுக்குள் நுழைய விரும்பிய அந்த யோகிக்கு, ராட்சஸி ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. ஊர் மக்களைக் காப்பாற்றும் ஒரு வாய்ப்பாக இருந்தது!

 

ஆனால், சிலருக்கு சின்ன விஷயங்கள் பூதாகரமான பிரச்னையாக தெரியும் ! அப்படி ஒரு பெண்மணியை நான் சென்னையில் சந்தித்தேன்...

 

http://tamilnanbargal.com/tamil-books/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE...-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

Share this post


Link to post
Share on other sites

பத்ருஹரி

 

ஒரு முனிவருக்கு மாம்பழம்  கிடைத்தது.அந்த மாம்பழம் சாப்பிட்டவர்கள் நீண்ட  நாட்கள் வாழ்வர்.முனிவர் அம்மாம்பழத்தை தான் சாப்பிடுவதை விட மக்களுக்கு நல்லது செய்யும் மன்னன் பத்ருஹரி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி மன்னனிடம் கொடுத்தார்.மன்னனோ,அதைத் தான் சாப்பிடுவதை விட தன்  மீது உயிரையே வைத்திருக்கும் மனைவி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி அவளிடம் கொடுத்தான்.அவளோ மாம்பழத்தைத் தான் உண்ணாது தன்  ஆசை நாயகனான நொண்டியும் கூனனுமான குதிரைக்காரனிடம் கொடுத்தாள்.அவனோ,அவன் மனைவி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கருதி அதை மனைவியிடம் கொடுத்தான்.அந்தப் பெண் மிக நல்ல பெண்.அவள், தான் நீண்ட காலம் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்,இந்த நாட்டை ஆளும் மன்னன் சாப்பிட்டால் மக்கள் அனைவருக்கும் நல்லது என்று கருதி மாம்பழத்தை அதன் சிறப்பை விளக்கி மன்னனிடம் கொடுத்தாள்.மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.பழம் எப்படித் தன்  கைக்கே திரும்ப வந்தது என்று விசாரித்தான்.அடுத்த நாள் அவன் கூறாமல் சன்யாசம் பூண்டான்.

காதல் ஒரு சில நியாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.முறையற்ற உணர்வுகளைக் காதல் என்று நினைத்தால் சீரழிவுதான்.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/12/blog-post_2886.html

Share this post


Link to post
Share on other sites

ஆசை

 

ஆசை என்ற ஒன்று இருக்கிறது.அது மனிதர்களை ஆட்டிப் படை க்கிறது. ஆணோ,பெண்ணோ ஒருவரையும் அது விட்டு வைப்பதில்லை. ஒரு பொருளின் மீது ஆசை உண்டாகிறது.அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை. ஆசைப்பட்டது கிடைக்காது என்றால் பிரச்சினை இல்லை. கிடைக்கும்,ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது என்ற நிலை வரும்போதுதான்.பிரச்சினை.அப்போதுதான் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது. முடிவு ஏற்படாமல் இப்படி ஒரு இழுபறி நிலை உண்டாகும்போது ஆசைக்குத் தீவிரம் உண்டாகும்.பின் வெறியாக ஆவேசமடைந்துவிடும்.பயம் ஒரு பக்கம், வெறி ஒரு பக்கம் ஆக இரண்டு பக்கமும் பிசையப் பிசையக் குழப்பம் உண்டாகும். தைரியம் எவ்வளவு இருந்தாலும் புத்தி தடுமாறிவிடும்.

 

ஆசை நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற சந்தேகத்தில் ஜோதிடம் பார்ப்பார்கள்.ரேகை சாஸ்திரம் பார்ப்பார்கள்.தங்களுக்குள்ளே ஒரு ஆரூடத்தை உண்டாக்கி அதை வைத்துப் பலனைக் கணிப்பார்கள். புத்தகத்தைப்  பிரித்துப் பார்ப்பார்கள்.பிரித்த பக்கத்தில் விஷயம் நன்றாக இருந்தால் காரியம் கைகூடும் என்று திருப்திப் படுவார்கள்.விஷயம் ஒரு மாதிரியாக இருந்தால் காரியம் கைகூடாதோ என்று பதறுவார்கள். காரியம் கைகூடும் வரை மனம் அதை நோக்கியே ஓடும்.மறப்பதற்கு மனமும் எத்தனையோ தந்திரம் செய்து பார்க்கும்.ஆனாலும் மறக்க முடியாது. அந்த நினைப்பே சுற்றிச் சுற்றி வரும்.

நினைப்பு வந்தால் சும்மா இருக்குமா? அது சம்பந்தமான பாரத்தை வார்த்தைகளாக இறக்கி வைக்கத் துடிக்கும்.மனதிற்குப் பிடித்தவர்களிடம்  அக்காரியத்தைப் பற்றி,விசயத்தைத் தொடாமல் ஜாக்கிரதையாகப் பேச்சுக் கொடுக்கும். சுற்றி வளைத்து பட்டும் படாமலும் விஷயத்தை ஜாடைமாடையாகக் காட்டும். இவ்வளவும் ஆசை காரணமாக வரும் உணர்ச்சிகள். சோர்வு,பயம்,கலக்கம்,தைரியம்,மகிழ்ச்சி இவை யாவும் ஆசையிலிருந்து பிறக்கின்றன.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/11/blog-post_25.html

 

 

 

Share this post


Link to post
Share on other sites

அதிகாரம்

 

அதிகாரம் என்பது ஒவ்வொரு அதிகாரியாலும், தன்னால் கையாளப் படுவதாக நினைத்தாலும் கூட, அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடு தான். உங்களால் அதிகாரம் செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல் கொண்ட கட்டாயம் இருக்க வேண்டும். ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல் திட்டத்துடன் சரியாக இணைந்து கொள்வதன் மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கை வருகிறது. தனித்துச் செல்லும் தோறும் அதிகாரம் இல்லாமல் ஆகிறது.

நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்து கொள்கிறான். கூடவே அது எப்படி  உருவாகிறது என்பதயும் கண்டு கொள்கிறான். மேலும் மேலும் அதிகாரத்திற்காக அவன் மனம் ஏங்குகிறது. அதற்காகத் தன்னை மாற்றிக் கொண்டே  இருக்கிறான். சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறி விடுகிறான். அவன் கொண்டு வந்த கனவுகள் லட்சிய வாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன. மொழி, பாவனைகள், நம்பிக்கைகள் மட்டுமல்ல, முகமும் கூட பிறரைப்போல ஆகி விடுகிறது.
                                    -- ஜெயமோகன் எழுதிய 'நூறு நாற்காலிகள்'என்ற நூலிலிருந்து.

 

http://jeyarajanm.blogspot.fr/2014/02/blog-post_14.html

Share this post


Link to post
Share on other sites

உனக்கென்ன வேலை?

 

ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது,''நான் குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!''
 
கடவுள் சொன்னார்,''பிறந்து கொள்,''
 
பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது,''நான் வளர வேண்டுமே!''
 
கடவுள் சொன்னார்,''வளர்ந்து கொள்.''
 
வளர்ந்த குழந்தை கேட்டது,''நான் படிக்க வேண்டுமே!''
 
கடவுள் சொன்னார்,''படித்துக் கொள்.''
 
படித்த பையன் கேட்டான்,''எனக்கு நல்ல வேலை வேண்டுமே?''
 
கடவுள் சொன்னார்,''தேடிக் கண்டுபிடி,''
 
வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்,''எனக்கு திருமணம் செய்ய வேண்டுமே!''
 
கடவுள் சொன்னார்,''நல்ல பெண்ணாய்ப்பார்த்து திருமணம் செய்துகொள்.''
 
திருமணம் ஆனதும் கேட்டான்,''நல்ல குழந்தை வேண்டுமே!''
 
கடவுள் சொன்னார்,''பெற்றுக் கொள்.''
 
வயதானபின் அவன் கேட்டான்,''நான் நல்ல படியாக இறக்க வேண்டுமே,''
 
கடவுள் சொன்னார்,''இறந்து கொள்.''
 
அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்,''ஆரம்பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் என்றே கூறி வருகிறாய்.அப்புறம் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் வேலை?''
கடவுள் புன்னகையுடன்  சொன்னார்,''இத்தனையிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே அதுதான் நான்.''
 
 

Share this post


Link to post
Share on other sites

அடுத்தவர் கருத்து.

 

நான் ஏன் அடுத்தவரது கருத்துக்களைக் கண்டு பயப்படுகிறேன்?
ஏன் என்றால் நீங்கள் நீங்களாக இல்லை. நீங்கள் மற்றவர்களது அபிப்பிராயங்களைத் தாங்கும் தூணாக இருக்கிறீர்கள். நீங்கள்,மற்றவரது அபிப்பிராயத்தைத் தவிர வேறு இல்லை. நீங்கள்  அழகானவர் என்று  மற்றவர் சொன்னால் , நீங்கள் அழகாக இருப்பதாக நினைக்கிறீர்கள். அவலட்சணமாக இருப்பதாகப் பிறர் சொன்னால், அப்படி இருப்பதாகவே கருதுகிறீர்கள்.

 

இவ்வாறு மற்றவர் கூறும் அபிப்பிராயங்களை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவர் நீங்கள் அழகானவர்  என்று சொல்ல, அடுத்தவர் நீங்கள் அருவருப்பானவர் என்று சொன்னால் , நீங்கள் பின்னவர் சொன்னதை மறக்க நினைக்கிறீர்கள். ஆனால் அதை உங்களால் மறக்க முடியாது. இரண்டு கருத்துக்களும் உங்கள் உள்ளேதான் ஆழமாக இருக்கும். இப்போது நீங்கள் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள். அதாவது, நீங்கள் பல பொருட்களின் கலவையாக இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் ஆன்மாவை அடையவில்லை. உங்களுக்கென்று எந்த தனித் தன்மையும் இல்லை. நீங்கள் வெறும் அடுத்தவரது குப்பைதான். ஆகவே நீங்கள் எப்போதும் பயத்தில் இருக்கிறீர்கள். ஏனெனில் அடுத்தவரது கருத்துக்கள் மாறினால், நீங்களும் மாற வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் அடுத்தவரின் பிடியில் இருக்கிறீர்கள்.

 

முதலில் தைரியமாக உங்களை சார்ந்து இருங்கள். அப்போது உங்களைத்தவிர வேறு யாரும் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாற்ற இயலாது. பொய்யான பிறர் அபிப்பிராயத்துக்கும், நீங்கள் கனவுலகில் சஞ்சரிப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. ஒருவன் உங்களைப் புகழும்போது, அவன் சக்தி மிக்கவனாகத் தெரிகிறான். அவனுடைய புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக் கொண்டால், நீங்கள்தான் அவனுக்கு இரையானவன். இப்போது அவன் உங்களைத் தனது பிடியில் வைத்துக் கொள்ளலாம். அவன் உங்கள் குருவாகவும், நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள்.

 

http://jeyarajanm.blogspot.fr/2014/03/blog-post_24.html

Share this post


Link to post
Share on other sites

அடக்குதல்

 

நீங்கள் உங்கள் பேராசையை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைய முடியும். அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சரியாகப் புரிந்து கொள்ளாத போதுதான் துறவு எண்ணம் வருகிறது.
சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் அதைக் கண்டு அஞ்சுகிறான். ஒருவன் பேராசை கொள்கிறான். இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப் படுகிறார்கள். மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்கவும். அதைப்போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும். இரண்டுமே எலிப்பொறி போலத்தான். மிக்க ஈடுபாடும் அடக்குதலும்  இயந்திரத்தனமானது.

நீங்கள் பேராசை,பாலுணர்வு,கோபம்,பொறாமை....இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது. அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது. மாறாக நீங்கள் அதை அடக்கினாலும், இயந்திரத்தனமாக மிகவும்  ஈடுபட்டாலும், முடிவு ஒன்றுதான்.

முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள். பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள். எதையும் தவிர்க்காதீர்கள். அவற்றின் தேவைகளில் ஆழமாக செல்லுங்கள். அன்புடன் கூர்ந்து கவனியுங்கள். உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள். அப்போதுதான் ஒரு நாள்  அவற்றைக் கடந்து செல்ல முடியும்.

 
 

 

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • Tholar Balan 8 நிமிடங்கள்  ·    •பிரான்சும் இந்தியாவும்! பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்று சேர்ஜியா மகேந்திரன் துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள். பிரான்ஸ்க்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர்களான செல்லப்பா மகேந்திரன் தேவி தம்பதிகளின் புதல்வியான சேர்ஜியா சட்டம் படித்து இன்று துணை முதல்வராக வந்துள்ளார். ஆனால் இந்தியாவில் 1983ம் அண்டு முதல் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர் குடியுரிமை பெறவும் முடியவில்லை. உயர் கல்வி பெறவும் முடியவில்லை. மாறாக இந்த கொரோனோ காலத்திலும் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கும் அவலநிலை. இந்த லட்சணத்தில் இந்திய பிரதமர் மோடி தனக்கு பின்னால் இருப்பதாக சம்பந்தா ஐயா பெருமையாக கூறுகிறார். என்னே கேவலம் இது!              
  • கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே! கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே! வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே! ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே! (கோபியரே கோபியரே) நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே! பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே! சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்! மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்! (கோபியரே கோபியரே) ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்! தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்! நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன் நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!! (கோபியரே கோபியரே)    
  • வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரக் கோரி போராட்டம்! கொரோனா வைரஸ் நிலைமையால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரக்கோரி சுதந்திரத்துக்கான மகளிர் அமைப்பு இன்று (08) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் சேமலாப திணைக்கள முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.     https://newuthayan.com/வெளிநாட்டில்-உள்ள-இலங்கை/  
  • இசைக்கலைஞனை உடனடியாக மேடைக்கு வருமாறு வேண்டப்படுகிறர்.
  • அமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி: சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொற்று   சென்னை மின்துறை அமைச்சர் தங்கமணிக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கூடுதல் டிஜிபிக்கும் தொற்று உறுதியானதை அடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று பரவினாலும் நிவாரணப் பணி, அரசுப் பணிகளில் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, செயல்பட்டு வருகின்றனர். இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பழனி, சதன் பிரபாகர், குமரகுரு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், ஆர்.டி.அரசு, மஸ்தான், தங்க பாண்டியன் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு அம்மன் அர்ச்சுணன், பா.வளர்மதி ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி சிகிச்சையில் குணமான நிலையில், நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அமைச்சர் தங்கமணிக்கும் அவரது மகனுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர், முதல்வர் பழனிசாமியைச் சந்தித்த நிலையில் அமைச்சர் தங்கமணியும் அந்நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. அமைச்சர் தங்கமணி நேற்று முதல்வர் பழனிசாமியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை துறைச் செயலர்கள், மின்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். ஐசிஎம்ஆர் விதிப்படி அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதிக்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இதேபோன்று காவல்துறை கூடுதல் டிஜிபி ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊர்க்காவல்படை கூடுதல் டிஜிபியாக இருப்பவர் ராஜீவ்குமார். இவரது மனைவிக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இவரும் பரிசோதித்துக் கொண்டார். அதில் அவருக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். https://www.hindutamil.in/news/tamilnadu/563321-corona-infection-to-minister-thangamani-chennai-ips-officer-also-affected-1.html