Jump to content

புதிய தேடலும் கண்டுபிடிப்புக்களும் படைப்புத்திறனும்


Recommended Posts

அறிவியல்-  Dr.T S Subbaraman holds a doctorate in Physics and was a former Head of the Physics department at Anna University, Chennai. This is one side of him. His specialization may be Physics, but his fervor in his heart is inscribed with Tamil. He always had the passion to write dramas, articles and stories in Tamil. He is also an expert in writing poems in English. Dr. Subbaraman has acted in Tamil plays from the age of nine.

 

He has also performed in various TV and radio dramas. He has the credit of making the science show "Maanudam ventradu" aired in All India Radio for three continuous years into scientific drama. Dr. Subbaraman has authored many books. He has also translated Shakespeare's "Hamlet" into Tamil.



Link to comment
Share on other sites

Communicate to Connect - T. Chendil Kumar 



Link to comment
Share on other sites

( தமிழில் ) : Ethics an inseparable part of Life

 

" நீ திறமைசாலியாக இருப்பதை விட நல்லவனாக ரு.

நல்லவன் வல்லனவாக இருக்க வேண்டும்."

 

N.V.Sankaran, known widely as O Pakkangal Gnani, is a writer, journalist, theatre person and a film maker. Founder and Executive editor of 'chutti vikatan' tamil monthly magazine for children, he worked as journalist with Junior Vikatan, Ananda vikatan, Dheemtharikida, Vinn Nayakan for several years. He has to his credit a detailed coverage of Kargil war for vikatan group. He was the Correspondent for Ananda Vikatan and now a columnist for Kumudam. To know more about Gnani and his works, visit http://www.gnani.net

 

 

 

 

Link to comment
Share on other sites

(தமிழில்) கல்வித்திட்டமும் அதில் கணணியின் பங்களிப்பும்

 

 

 

 

Link to comment
Share on other sites

(தமிழில்) கல்வித்திட்டமும் அதில் கணணியின் பங்களிப்பும்

 

"யூட்டியூப்பில்" இருந்து ஒரு பதில்:

nathenpeter7 1 month ago

 

நீங்கள் பேசிய தமிழ் ஆங்கிலம் கலந்திருந்த போதிலும், உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

இன்று கருத்துக்கள் பல வழிகளில் கிடைக்கின்றன.

 

ஆனால், அவை தமிழில் தான் கிடைப்பதில்லை.

 

தமிழில் படைப்பதுதான் இன்றைய  இன்றியமையாத தேவை.

நன்றி.

Link to comment
Share on other sites

Five ideas for Life



Link to comment
Share on other sites

Cartoonist Madhan - Creativity & Innovation(Tamil)
மதன் அவர்களின் அருமையான பேச்சு



Link to comment
Share on other sites

திறமைசாலிகளுக்கு வலைவீசும் சீனா



Link to comment
Share on other sites

தன்னம்பிக்கை - ஜெ சொன்ன குட்டிக்கதை
December 14, 2012


சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னம்பிக்கைதான் வெற்றியை தரும் என்பதை விளக்க அவர் குட்டிக் கதை ஒன்றையும் கூறினார்.


ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார். தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. எனவே, சந்தோஷமாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார்.

 

வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு பாலிதின் கவரில் போட்டு, அதை ஒரு துணி கவரில் சீல் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டார்.
தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார். ஆனால் அதனை வெளியில் எடுக்கமாட்டார். அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார். பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார்.

 

பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலைமை. எல்லாம் அந்த துளையிட்ட காசோட மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.
 

ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது. அப்போது தன் மனைவியைக் கூப்பிட்டு, ரொம்ப நாளைக்குப் பிறகு என்னுடைய அதிர்ஷ்ட நாணயத்தை இன்றைக்கு வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன் என்று கூறினார் அந்த மனிதர்.
 

உடனே மனைவி, இப்ப அதைப் பார்க்க வேண்டாமே என்று மெதுவாக கூறினார். இல்லை, இல்லை! பார்த்தே தீர வேண்டும்! என்று சொல்லி சட்டைப் பையில் கையை விட்டு கவரை திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்படியே குழம்பிப் போய் நின்றார்.
 

அப்பொழுது அவரது மனைவி, உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவில்லாமல் நான் தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று ஜன்னலுக்கு வெளியே உதறினேன். அது தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக வேறு ஒரு நாணயத்தை அதே போன்று கவரில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன் என்று கூறினாள்.
 

இது எப்ப நடந்தது? என்று கேட்டார் அந்த மனிதர். உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது என்றாள் மனைவி. இதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அந்த மனிதருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி.
 

வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. ஆசிரியர்களாகிய நீங்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, மாணவ-மாணவியரிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தால், அவர்களது ஆற்றல் நிச்சயம் வெளிப்படும்.
 

ஓவ்வொருவருக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலை வெளிக் கொணர வேண்டிய கடமை ஆசிரியர்களாகிய உங்களுக்கு இருக்கிறது என்றார் முதல்வர் ஜெயலலிதா. 

 

http://www.alaikal.com/news/?p=118880

 

 

Link to comment
Share on other sites

இன்னும் அந்து வருடங்களில் கணணிகள் என்ன செய்யும்? ஐம்புலன்களுக்கும் உதவும் !
-தொடுதல் -
பார்த்தல் - பார்த்து அவற்றை புரிந்து கொள்ளும்
- நாக்கு -நீங்கள் என்ன உண்ண விரும்புகிறீர்கள் என உங்களை விட கணணிக்கு தெரியும்
- மணம் -











Link to comment
Share on other sites

வருங்கால தொழில்நுட்பம் :

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இலட்சியத்தை எட்டுவது எப்படி?

 

success.gif



தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்க்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.

 

 

 

ஆடை: உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிகையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.

 

 

வேகநடை: வேகநடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.

 

 

நிமிர்ந்த நிலை: எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணி விடுவர். நிமிர்ந்து நிற்பது. தலையை தொங்கப் போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்துப் பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும்.

 

 

கேட்பது: நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 -60 நொடிக்குள் உங்கள் லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்ட வேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.

 

 

 

நன்றி: உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும் அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயங்கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.

 

 

மனதார பாராட்டுங்கள்: நம்மை நாமே "நெகட்டிவ்" வாக நினைக்கும் போது மற்றவர்கள் பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவாக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

 

 

 

உடல்வாகு: நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும், அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்.

 

http://dinamani.com/education/education_articles/article1424284.ece

Link to comment
Share on other sites

லட்சியம் பெரிதாக இருந்தால் யாரும் வெற்றி பெற முடியும்: ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்

 

ஒவ்வொருவரும் லட்சியத்தை பெரிதாக வைத்துக் கொண்டால் வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தெரிவித்தார்.

 

பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியின் வைரவிழா ஆயிர வைசிய சபைத் தலைவர் ராசி.என்.போஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சபையின் செயலாளர் எஸ்.கே.பி. லெனின்குமார், ஆயிர வைசிய மெட்ரிக். பள்ளியின் செயலாளர் பி.என்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் இ.வீரராஜ் வரவேற்று பேசினார்.


விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பள்ளி மாணவ,மாணவிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் பேசியது:

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியடைய முடியும் என்பதே என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம். மாணவர்களாகிய நீங்கள் சிறு லட்சியங்களாக வளர்த்துக் கொள்ளாமல் பெரிய லட்சியங்களாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அறிவு, உழைப்பு, விடாமுயற்சி, தைரியம் இந்த நான்கும் இளைஞர்கள் முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டியவைகளாகும்.


ஒருவர் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அவரிடம்  மனஉறுதி இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். மின்சாரத்தை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், விமானத்தை கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள், தொலைபேசியை கண்டு பிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல், வானமும், கடலும் நீல நிறமாக இருப்பது எப்படி என்று கண்டு பிடித்து நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், ரேடியத்தை கண்டுபிடித்து இருமுறை நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி, கணித மேதை ராமானுஜம் போன்றவர்கள் அனைவரும் அவர்களுக்கே உரிய லட்சியங்களுடன் தனித்தன்மையுடன் வாழ்ந்ததால்தான் வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.

 

இது போன்று ஒவ்வொரு மனிதனும் வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியும். 60 கோடி இளைஞர்கள் இந்தியாவின்

மிகப்பெரிய சொத்தாக இருக்கிறார்கள். இதில் 25 கோடி மக்கள், 6 லட்சம் கிராமங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், எந்தக் கிராமத்தில் வாழ்ந்தாலும் இவர்களது லட்சியம் பெரியதாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நினைத்தது சாதித்து வெற்றி பெற முடியும்.

 

ராமேசுவரம் தீவில் நான் படித்த பள்ளியில் போதிய வசதியில்லை. எனது கணித ஆசிரியர் ஸ்ரீராமகிருஷ்ணனும், அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யரும் என் வாழ்வின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்கள்.


நான் படித்த வகுப்பில் கணக்கில் பலரும் குறைந்த மதிப்பெண் எடுப்பதை அறிந்து அதிக மதிப்பெண் வாங்குவதற்காக ஒரு திட்டத்தை தீட்டி கணிதத்தை அனைவரும் எளிமையாக புரியும்படி செய்து பலரும் அதிக மதிப்பெண் வாங்க காரணமாக இருந்தார் ஆசிரியர். அதன் பிறகு வகுப்பில் எந்த மாணவருக்கும் கணிதத்தின் மீது இருந்த பயம் இல்லாமல் போய் விட்டது. எனவே நமக்கு அறிவைத் தரும் ஆசிரியர்களையும்,பெற்றோர்களையும் நாம் மதித்து நடக்க வேண்டும்.

 

 

நூறு கோடி பேர் உள்ள இந்தியாவில் ஆளுக்கு ஒரு மரக்கன்று நட்டால் அதுவே வரும் காலத்தில் இந்தியா சுத்தமான நாடாக மாறிவிட வாய்ப்பாக இருக்கும். நம் நாட்டில் விவசாயம் அழிந்து விடவில்லை. கடந்த ஆண்டு மட்டும் 250 மில்லியன் டன் அரிசி உற்பத்தியாகிறது. விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார் கலாம்.

 

http://dinamani.com/tamilnadu/article1429175.ece

Link to comment
Share on other sites

வியாபாரத்தில் முன்னேற நினைப்போம்.

 

விடாமுயற்சி இருந்தால் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும்  என்று கூறுகிறார்  இராஜேந்திரன் சண்முகம். வீட்டிற்கு தேவையான தளவாட பொருட்களை கடந்த இருபது  வருடக்காலமாக வியாபாரம் செய்து வருகின்றார். கோலாம்பூர் பந்தாய் டாலாமில் இவரின் கிளை உள்ளது.

 

வியாபாரத்துறை என்பது மிக எளிதல்ல .கஷ்டம் நஷ்டத்தைக் கடந்து வந்த பிறகு தான் இதில் வெற்றி நடைப்போட முடியும்.நம் இனத்தவர்கள் இது போன்ற வியாபாரம் செய்வது மிக குறைவுதான்.
 

வித்தியாசமான துறையைத் தேர்தெடுக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆகையால் இதில் கால்பதித்து தொடர்ந்து நடத்தி வருகின்றேன்.
மிக நவீன முறையில் உருவாக்கப்பட்ட வீட்டின் உபயோகிப்புக்குத் தேவையான அனைத்து பொருட்களும் விற்பனையில் உள்ளது ஒரே நேரத்தில் அனைத்து பொருட்களையும் தேர்வு செய்து மன நிறைவாக வாங்கி செல்லலாம் என்று சொல்கிறார் இராஜேந்திரன்.

 

table1-300x225.jpg

 

வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்குச் சிறந்த பொருட்களை விற்று வருகின்றேன்.அனுபவக்கல்வியைக் கொண்டு இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளேன்.

 

பல துன்பங்கள் வந்ததுண்டு அதையும் கடந்து தொடர்ந்து இத்துறையில் என்னை ஈடுப்படுத்திக்கொண்டேன்.
வாடிக்கையாளர்களின் மனககோணாமல் பொருட்களைப் பாதுக்காப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் மேலும் 10 கிலோ மீட்டர் எனது நிறுவனதிலிருந்து பொருட்களைக் கொண்டு சென்றால் கட்டணம் செலுத்த தேவையில்லை. வியாபாரத்தில் இது போன்ற திறமையைக் கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.

 

sofa1-300x225.jpg

நம் நிறுவனத்திற்கு தேடி வருபவர்களிடம் சிறந்த முறையில் பொருட்களை பற்றி விளக்கி கூற வேண்டும் அதற்காக பொருட்களின் தரத்தை நாம் அறிந்து வைத்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார் அவர்.


அதிக பேர் பொருட்களை வாங்கி கொண்டு ஏமாற்றிச் சென்றுள்ளனர் இதனால் அதிக நஷ்டம் ஏற்பட்டது இவை அனைத்தும் ஓர் அனுபவமாக ஏற்றுக்கொண்டு இந்த நிலைக்கு நான் முன்னேற்றம் கண்டுள்ளேன்.

 

இன்னும் பல கிளைகள் உருவாக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றேன் எனக்குப் பிறகு இத்துறையை எனது பிள்ளைகளுக்குக் கற்று தருவேன்.

 

மனைவி கோகிலவாணி எனக்கு பக்கபலமாக இருந்து வருகின்றார். வீட்டுத் தளவாட பொருட்களைத் தவிர்த்து மின்சாரப் பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றேன்.

 

நம் இனத்தவர்கள் வியாபாரத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் அயராது உழைத்தால் குறுகிய காலத்தில் முன்னேற முடியும்.

 

http://www.velicham.com.my/wp/?page_id=429

Link to comment
Share on other sites

 - "I was raped at the age of 9 "-Oprah Winfrey

 

-"I didn't even complete my university education" - Bill Gates


-"I was sexually, mentally,emotionally and verbally abused by my father as far back as I can remember until I left home at
the age of eighteen" - Joyce Meyer

 

-"I struggled academically throughout elementary school"- Dr Ben Carson

 

-"I used to serve tea at a shop to support my football training" -Lionel Messi

 

-"I used to sleep on the floor in friends' rooms,returning Coke bottles for food, money, and getting weekly free meals at a local temple" - Steve Jobs

 

-"My teachers used to call me a failure"- PM Tony Blair

 

 

- "I was in prison for 27 years"- Retired President Nelson Mandela

 

Though we pass through many difficulties in life, we should not give up because Life is not about what you couldn't do so far, it's about what you can still do so NEVER GIVE UP!

 

 

Visit www.way2usefulinfo.blogspot.com

Link to comment
Share on other sites

பெப்சிக்கு நான் சீல் வைத்த விஷயம்!
----------------------------
உ.சகாயம்.இ.ஆ.ப:

 

 

‘‘நான்காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரியவர், தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். மாதிரியை ஆய்வுக்கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பியதில், மனிதர்கள் குடிக்க இலாயக்கற்ற பானம் என்று அறிக்கை வந்தது.

 

சட்டப்படி பெப்சி நிறுவனம் மேல் என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஓர் அறிக்கை தயாரித்தேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு வட்டாட்சியரிடம் எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

 

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேலாளரிடம் கொடுத்துட்டு, கம்பெனியைப் பூட்டி சீல் வைக்கப் போறோம். எல்லோரையும் வெளியே வரச் சொல்லுங்கன்னு சொன்னோம். அந்த மேலாளரைவிட என்கூட வந்த வட்டாட்சியர் ஆடிப்போயிட்டார். சார், ...பெரிய பிரச்சனை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு பதறினார்.


கலெக்டரைக் கேட்டால் சீல் வைக்க விடமாட்டார். சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்கன்னு அவரை உள்ளே அனுப்பினேன்.

 

ஒரு மணி நேரம் கழித்து இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவர், சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். முதல்வர் கிட்ட பேசுறதாச் சொல்றாங்க, சார். என்ன பண்ணலாம்னு கேட்டார். உள்ளே இருக்கிறவங்களை கைது பண்ணிட்டு சீல் வைக்க வேண்டியதுதான்னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி எட்டு பூட்டுகளையும் போட்டு சீல் வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாமல், ஒரு குக்கிராமத்துக்குப் போய் ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.

 

என் மனைவி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரடரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்குப் போன் பண்ணி இருக்காங்க என்றார்.


நான் திரும்ப கலெக்டர், சீஃப் செக்ரடரி, உள்துறைச் செயலாளர்னு எல்லோருக்கும் போண் பண்ணினேன். யாரைக் கேட்டு சீல் வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, தெரியுமா? என்று எல்லோரும் கேள்வி கேட்டாங்க. நான் என் கடமையைத்தான் சார் செய்தேன். மக்களுக்கு நல்லது செய்ததுக்காக, சஸ்பெண்ட் செய்தால் தாராளமாகச் செய்துகொள்ளுங்கள் என்று சொல்விட்டேன்.

 

மறு நாள் இந்த செய்தி எந்தப் பத்திரிகையிலும் பெட்டி செய்தியாகக் கூட வரவில்லை. பெப்சிக்கு சீல் வைத்த சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை,.


இரண்டு நாள் கழித்து ஜூனியர் விகடன் இதழில் மட்டும் அந்தச் செய்தி விரிவாக வந்திருந்தது,. அதற்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல் வைத்த விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிந்தது.

 

- முகநூல்

Link to comment
Share on other sites

விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி; டாக்டராகி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம்

 

போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் டாக்டராகி, தற்போது அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.

 

ம.பி., மாநில தலைநகர் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியர் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவ்வாறு இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், தற்போது தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் ஒரு டாக்டராக உயர்ந்து நிற்கிறார். அதோடு மட்டுமல்லாமல், தன்னைப் போல் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

 

யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் வசித்து வந்தது முகமது அலி குவாய்சர் குடும்பம். 17 வயதான குவாய்சர் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர். போபால் விஷவாயு சம்பவம் நடந்த போது அவரது முழு குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டது. குவாய்சரின் தாய் இந்த சம்பவத்தில் இறந்து போனார். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற காரணத்தால் குவாய்சர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்பட்டார். தனது தாய் இந்த சம்பவத்தில் இறந்துவிட்டார் என்பதையறிந்த குவாய்சர், தான் ஒரு டாக்டராகி தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்தார்.

 

எனினும் அவருக்கு டாக்டர் படிப்பு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இலவசமாக மருத்துவம் படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வில் இரண்டு முறை தோல்விடைந்த அவர், மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கோட்டா இல்லாத நிலையில், பொதுப்பிரிவில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். பின்னர் எம்.பி.பி.எஸ்., முடித்த குவாய்சர் முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கு பணிபுரிந்தால் தன்னால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இயலாது எனக்கருதி, அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் சம்பாவனா டிரஸ்ட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.


நீங்கள் பணம் தான் வேண்டும் என விரும்பினால் அது உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை. அதனால் தான் பணம் அதிகம் வரும் அரசு டாக்டர் வேலையை விட்டு விட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்கு பணிபுரிகிறேன் என்கிறார் முகமது அலி குவாய்சர்.



http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%B7%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-052600784.html

Link to comment
Share on other sites

கண்டுபிடிப்புகள் கைவந்த கலை : இன்று தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்

 

இன்றைய உலகம் சூரியன் மøந்த பின் இரவிலும், பகலைப் போல மன்னுகிதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர் அமெரிக்காவின் நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தார். இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிரால், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர் அமெரிக்காவில் மட்டும் தன் பெயரில் 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களை பதிவு செய்துள்ளார். சில படைப்புகள், ஏற்கன÷ கண்டுபிடிக்கப்பட்டதை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை.

 


அறிவியல் ஆர்வம்

ஏழாவது குழந்தையாக பிறந்தவர் எடிசன். பள்ளி பருவத்திலேயே காது கேளாமையால் பாதிக்கப்பட்டார். ஆசிரியர் திட்டியதால் பள்ளிக்க செல்வதை நிறுத்தினார். இவரது தாயார் ஆசியை என்பதால், வீட்டிலேயே கல்வி கற்றார். 12வது வயதிலேயே படிப்புக்கு முடிவு கட்டினார். காரணம் அறிவியலில் கொண்ட ஆர்வம். டெட்ராய்ட் ரயில் நிலையத்தில் செய்தித்தாள், காய்கறி விற்றார். அப்போதெல்லாம், தந்திப்பதவு (டெலிகிராப்) மூலம் ரயில் போக்குவரத்து நடந்தது.புள்ளிக் கோடுகளாக பதிவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஆப்பரேட்டர் வேலையில் சேர்ந்தார். 1871ல் திருமணம் செய்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன.

 


முதல் கண்டுபிடிப்பு
டெலிகிராப் ஆப்பரேட்டர் வேலையில் இருந்து விலகில நியூயார்க் சென்றார். அங்கு, போனோகிராப் எனும் ரிகார்டிங் கருவி, ஒலிநாடா, மின் டெலிகிராப் கருவிகளை கண்டுபிடித்தார். டெலிகிராப் மட்டும் 10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விலை போனது. இதன் மூலம் தொழில் அதிபராக உயர்ந்தார்.

 


சரித்திர கண்டுபிடிப்பு
அக்காலத்தில் வாயு விளக்குகள் தான் பயன்பாட்டில் இருந்தன. மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவு. மின் விளக்கு ஆராய்ச்சிக்காக,எடிசன் மின்விக்கு கம்பெனிதொடங்கப்பட்டது. பிரான்சிஸ் அப்டன் என்பவரும் எடிசனின் ஆய்வுக்கூட்த்தில் சேர்ந்தார். இவர்கள் 1879ல், பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை கண்டுபிடித்தனர். பின் எலக்ட்ரிக் மோட்டார், சினிமா கேமரா உள்ளிட்ட கண்டு பிடிப்புகளø உருவாக்கினார். இவரிடம் எப்படி இவ்வளவு கண்டு பிடிப்புகளை உருவாகினீர்கள் என்று கேட்ட போது, படைப்புக்கு தேவை ஒரு சதவீதம் ஊக்கமும் 99 சதவீதம் கடின உழைப்பும் தான் என்றார்.

 


இறுதி மரியாதை
எடிசன், 1931 அக் 18ல் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் மறைந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர், எடிசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் தேவையான விளக்குகள் தவிர மற்ற அனைத்தையும் ஒரு நிமிடம் அணைக்க உத்திரவிட்டார். இவரது கண்டுபிடிப்புகளை போற்றுவோம்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2-231500781.html

Link to comment
Share on other sites

The History of Thomas Edison - a Short Story

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.