Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மனதை தொட்ட காட்சிகள்


Recommended Posts

 • 4 months later...
 • 1 month later...
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

சாக்ரடீஸ் நாடகம்
முதல் காட்சி
சாக்ரடீஸ்:
உன்னையே நீ அறிவாய்!!
உன்னையே நீ அறிவாய்!!
கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல
அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயலுவது புண்ணுக்கு புனுகு தடவு வேலையை போன்றது
அதனால் தான் தோழர்களே சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன்
அறிவு! அறிவு! அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்
உன்னையே நீ அறிவாய்!!
இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன்

ஏற்றமிகு ஏதன்சு நகர எழில்மிக்க வாலிபர்களே!
நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமிழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்!
வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால்
தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மட்டும் போதாது தீரர்களே
இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்து கொள்ளுங்கள்
அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி

மெலிடஸ்:
ஹஹ ஹஹ.. அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம்
குமுறும் எரிமலை கொந்தளிக்கும் கடல் இவைகளை விட பயங்கரமானவன் சாக்ரடீஸ்
அவன் தரும் அறிவாயுதம் கிரேக்கத்திலே தயாரகுமானால் நாமெல்லாம் தலை தூக்கவே முடியாது அணிடஸ்
என்ன சொல்கிறீர்

அணிடஸ்:
மெலிடஸ் நாம் கீறிய கோட்டை தாண்டாத இந்த கிரேக்க மக்களுக்கு அந்த கிழவன் அறிவுக்கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும்

மெலிடஸ்:
ஆமாம் அது தான் சரி
சாக்ரடீஸ் நீ கைது செய்யப்படுகிறாய் ம்..

இரண்டாம் காட்சி
மெலிடஸ்:
சாக்ரடீஸ்

அணிடஸ்:
நாட்டிலே நடமாடக்குடாத ஒரு ஆத்மா
ஜனநாயக அரசாங்கத்தை குறைகூறும் அந்த ஜந்து உடல் முழுதும் விஷம் கொண்டது
கேட்டார் பிணிக்கும் சொற்களால் கேளாரும் வேட்பமொழி வார்த்தைகளால் கேடு விளையும் கருத்துக்களை அள்ளி வழங்கி அரசாங்கத்துக்கு விரோதமாக ஆண்டவனுக்கு விரோதமாக சட்டத்துக்கு விரோதமாக இளைஞர்களை தூண்டிவிடும் இழிகுண கிழவன்

சாக்ரடீஸ்:
ம்ம்ம்ம்....

நீதிபதி:
என்ன சிரிப்பு!! என்ன காரணம்!!

சாக்ரடீஸ்:
ஒன்றுமில்லை தலைவா ஒன்றுமில்லை
ஆத்திரத்திலே அணிடஸ் தன்னை மறந்து என்னை பார்த்து கிழவன் என்று கேலி செய்கிறான் ம்ம்ம்ம் கேலி செய்கிறான் ம்ம்ம் அதை நினைத்தேன் சிரித்தேன்
கடல் நுரை போல் நரைத்துவிட்ட தலை எனக்கும் அணிடசுக்கும் இல்லையா சகோதரர்களே?
என்ன அணிடஸ் உண்மை தானே?

மெலிடஸ்:
சாக்ரடீஸ் வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரின் தலையை பற்றியதல்ல அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்

ம்ம்ம்ம் மிகவும் நன்றி மெலிடஸ் மிகவும் நன்றி
ஆனால் ஒன்று எண்சான் உடம்புக்கு தலையே பிரதானம் போல் இந்த வழக்கிற்கும் தலை தான் பிரதானம்
என் தலையிலே இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு
அதை அழிக்க கவிஞனாகிய உன் தலையிலே இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனைகள் அரசியல்வாதி அணிடஸின் தலையிலே இருந்து பீறிட்டெழும் அதிகார ஆணவம்
இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனை போராட்டம் அதன் விளைவு தான் மெலிடஸ் இந்த வழக்கு

மெலிடஸ்:
பார்த்தீர்களா!! சட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான் இப்படித்தான் இளைஞர்களையெல்லாம் கெடுத்தான்

சாக்ரடீஸ்:
ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களை கெடுக்க முடியும்
நான் என்ன வாலிபருக்கு வலைவீசும் விலைமாதா
பருவ விருதளிக்கும் பாவையா

மெலிடஸ்:
ம் மாதரிடமில்லாத மயக்குமொழி
வாலிபருக்கு வலைவீசும் வனிதையரும் பெற்றிடாத வசீகர சொல்லலங்காரம் வார்த்தை ஜாலம் அடுக்கு தொடர் இப்படி பல மாயங்கள் கற்றவர் நீர்

சாக்ரடீஸ்:
மந்திரவாதி என்றுகூட சொல்வாய்
அன்புள்ள இளைஞனே ஏதன்சு நகரிலே நான் ஒருவன் மட்டும் தான் இளைஞர்களை கெடுக்கிறேன் அப்படித்தானே

மெலிடஸ்:
ஆமாம்

சாக்ரடீஸ்:
நீ கெடுக்கவில்லை

மெலிடஸ்:
இல்லை

சாக்ரடீஸ்:
அணிடஸ்

மெலிடஸ்:
இல்லை

சாக்ரடீஸ்:
டித்திலைகன்

மெலிடஸ்:
இல்லை

சாக்ரடீஸ்:
இந்த நீதிபதி

மெலிடஸ்:
இல்லை

சாக்ரடீஸ்:
யாருமே இளைஞர்களை கெடுக்கவில்லை எல்லோருமே இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள் என்னை தவிரஅப்படித்தானே

மெலிடஸ்:
ஆமாம் ஆமாம்

சாக்ரடீஸ்:
ஹஹஹா அத்தனை பேரும் ஏன் ஏதன்சு நகரமே அவர்களை திருத்தும்போது நான் ஒருவன் எப்படியப்பா அவர்களுடைய பாதையை திருப்ப முடியும்?

அணிடஸ்:
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்

சாக்ரடீஸ்:
ஏன் இப்படியும் சொல்லலாமே இருண்ட வீட்டிற்க்கு ஒரு விளக்கு
என்ன மெலிடஸ் திகைக்கிறாய்
சபையோர்களே! வாலிபர்கள் என்னை சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம் என்னுடைய வார்த்தை அலங்காரமல்ல வளம் குறையா கருத்துக்கள் தரம் குறையா கொள்கைகள் இந்த தரணிக்கு தேவையான தங்கம்நிகர் எண்ணங்கள் ம்ம்ம்ம்...
அழகுமொழியால் அலங்கார அடுக்குகளால் அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்று சொல்கிறார்களே அவர்களை நான் கேட்கிறேன்!
அந்த மொழி எனக்குமட்டும் சொந்தமல்லவே
அவர்கள் அதை பேசக்கூடாது என்று நான் தடை போட்டது கிடையாதே
பேசிப்பார்க்கட்டுமே அவர்களும் ஆம் பேசித் தோற்றவர்கள் ம் பேசி தோற்றவர்கள்

நீதிபதி:
சாக்ரடீஸ் பேச்சை நிறுத்தும் விளக்கம் தேவையில்லை
இந்த நீதிமன்றத்தின் அதிகப்படியான உறுப்பினர்களின் வாக்களிப்பின்படி நீர் விஷம் சாப்பிட்டு மரணதண்டனைக்கு ஆளாக வேண்டுமென்று தீர்ப்பளிக்கிறேன்

மூன்றாம் காட்சி
சாக்ரடீஸ்:
பார்த்தாயா பயனற்ற தத்துவ விசாரணையில் காலத்தை கழிக்கிறேன்
வீண் வாதம் புரிந்து தொல்லை படுகிறேன் என்றெல்லாம் கோபித்து கொண்டாயே
இப்போது பார் உனது கணவன் அகிலம் புகழும் வீரனாக
தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான்
அன்புள்ள எக்ஸ்சேந்துபி நீ மிகவும் பாக்கியசாலி
பணபலம் படைபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப்போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி ஹஹஹா...
குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துகொள்
அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறி நடப்பார்களேயானால் நான் உங்களை திருத்த முயன்றதுபோலவே நீங்களும் அவர்களை திருத்த முயலுங்கள்
நேரமாகிறது காவலர்கள் கோபிப்பார்கள் நீ போய் வா

கிரீடோ இவர்களை அனுப்பி வை

கிரீடோ உனக்கு தெரியுமல்லவா இன்றோடு முப்பதுநாள் சிறைவாசம் முடிந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விஷம் சாப்பிட்டு சாக வேண்டிய நாள் இதுதான்

கிரீடோ:
அருமை நண்பா 

சாக்ரடீஸ்:
அழாதே அதோ வந்துவிட்டது அமுதம்
சிறைக்காவலா இதை என்ன செய்யவேண்டும் முறைகளை சொல்

சிறைக்காவலன்:
பெரியவரே விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும்
பிறகு இங்குமங்கும் நடந்துகொண்டே இருக்க வேண்டும்
கால்கள் மறத்து போகும் வரையிலே அப்படியே நடக்க வேண்டும்
பிறகு உட்காரலாம் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டு கொண்டே வரும் பிறகு படுத்துவிட்டால் 

சாக்ரடீஸ்:
ஆனந்தமான நித்திரை
கனவுமங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை
சிறைக்காவலா கொடு இப்படி

கிரீடோ:
நண்பா சிறிது நேரம் பொறுத்துக்கூட சாப்பிடலாம்
சிறைச்சாலையிலே அதற்க்கு அனுமதி உண்டு

சாக்ரடீஸ்:
ம்ம்ம்... ஹ ஹ.. கிரீடோ கிரீடோ உனக்கு மிகமிக அற்ப ஆசை மிகமிக அற்ப ஆசை
இந்த விஷத்தை நான் இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்து கொள்
அதற்குள் என் இருதயம் வெடித்து நான் இறந்தது விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றது?
புதிய சாக்ரடீஸ்ஆ பிறந்து வரப்போகிறான் கூடாது கூடாது
இப்போதே சாப்பிட்டு விடுகிறேன்

கிரீடோ இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல இந்த உடலைத்தான்

கிரீடோ:
ஏதன்சின் எழுச்சிமிக்க சிங்கமே எங்கள் தங்கமே கிரேக்க பெரியாரே
உம்மையும் எம்மையும் இந்த விஷம் பிரிக்கபோகிறதா ஐயகோ நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறதே
நண்பா எனக்கு கடைசியாக ஏதாவது சொல்லு

சாக்ரடீஸ்:
புதிதாக என்ன சொல்லப்போகிறேன்
உன்னையே நீ எண்ணி பார்!
எதையும் எதற்க்காக? ஏன்? எப்படி? என்று கேள்
அப்படி கேட்டால்தான் இந்த சிலைவடிக்கும் இந்த சிற்பி சிந்த்தனை சிற்பியாக மாறினேன்
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்
எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்பாய்
அதைத்தான் உனக்கும் இந்த நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புவது

விஷம் அழைக்கிறது என்னை
இந்தக்கிழவன் கிரேக்க நாட்டு இளைஞர்களை கெடுத்ததாக யாராவது உண்மையாக உளமாக நம்பினால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும் அவர்கள் என்னை மன்னிக்கட்டும்
வருகிறேன் வணக்கம்! ஏ ஜகமே! சிந்திக்க தவறாதே!
உன்னையே நீ அறிவாய்! உன்னையே நீ அறிவாய்! வருகிறேன்
 

 

http://sudhakar-janardhanan.blogspot.com/2015/10/socrates-sivaji-ganesan-plan.html

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் தமிழ் தேசத்தின் இருப்பை அழிக்க உதவுகின்றனவா? Posted on December 8, 2021 by தென்னவள்  19 0 தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான வேலைத் திட்டங்களுக்காகவா உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் இலங்கைக்கு உதவிகளை வழங்குகின்றனவென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு,வன ஜீவராசி கள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீள் காடாக்கம்,வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான கருத்தை முன்வைக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில், வவுனியா வடக்கின் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெடிவைத்த குளம் பகுதியில் 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவம்,ஊர்காவல் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேறி இருந்தார்கள். அந்த மக்கள் மீளவும் அங்கு மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அந்தப் பகுதியில் பெரியகட்டிக் குளம் ஒதுக்கக் காடு என அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னரும் அங்கு மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அப்பகுதியில் கச்சல்சமளங்குளம் என்று சொல்லப்படுகின்ற கிராமத்தின் பெயர் ‘சப்புமல் தென்ன’ மாற்றம் செய்யப்பட்டு அங்கு பெரியதொரு ‘சப்புமல்கஸ்கட’ என்ற விகாரையும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த பெரியகட்டிக்குளத்தையும் அதற்குப் பக்கத்திலிருந்த இன்னொரு சிறிய குளத்தையும் இணைத்து காடழிக்கப்பட்டு ஒரு பாரிய குளம் அமைக்கப்பட்டு தமிழர்கள் விவசாயம் செய்து வந்த 300 ஏக்கர் வயல் நிலங்கள் உருவாக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். அந்த விகாரைக்குச் செல்வதற்காக இப்போது நெடுஞ்சலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண் டோவின் ஆதரவோடு ஒரு கார்பட் வீதியும் அமைக்கப்பட்டு வருகின்றது. காடுகள், ஒதுக்கக் காடுகள் என்ற சட்ட திட்டங்களானது வடக்கு,,கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நிலங்களை பறிமுதல் செய்து பெரும்பான்மை யினத்தவர்களின் தேவைகளுக்காக கொடுத்து ஓர் இனக்கரைப்பு செய்வதன் மூலம் எமது இனத்தை இல்லாமல் செய்யும் ஒரு வேலைத்திட்டமே இங்கு நடைபெறுகின்றது. இந்த விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். தமது பகுதிகளில் தமிழர்கள் முழுமையாக மீளக்குடியமர நீங்கள் அனுமதிக்க வேண்டும். ஒதுக்க காடுகளுக்குள் சிங்களவர்கள் விரும்பியதைச் செய்வதையும் 6 அடிக்கு மேலாக மரங்கள் வளர்ந்துள்ளதால் அவை ஒதுக்க காடுகள் என்றும் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.இது மிக மோசமான திட்டமிட்ட சிங்கள பௌத்தமய செயற்பாடு என்பதை இங்கு பதிவு செய்கிறேன். அடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 23,803 ஏக்கர் ஏனைய காடுகள் என்ற பகுதிக்குள் வரும் காடுகளை ஒதுக்கக் காடுகளாக புதிதாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இது உங்களின் சுற்று நிருபங்களுக்கும் தீர்மானங்களுக்கும் முரணானவை. அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 2021/2ஆம் இலக்க சுற்று நிருபத்தின் பிரகாரம் காணி அமைச்சினால் பிரதேச செயலகங்களுக்கு ஏனைய காடுகள் என்பதை நீங்கள் நிர்வாகம் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சுற்று நிருபம் சொல்கிறது புதிதாக ஒதுக்கக் காடுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தால் அது தொடர்பாக ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டு அந்த வரைபடம் பிரதேச செயலாளரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர்தான் ஒதுக்கக் காடுகளை அறிவிக்க முடியுமெனக் கூறப்படுகின்றது. ஆனால் அதனை மீறி இந்த நடைமுறைகள் எதுவும் இல்லாமல் வடக்கில் பாரிய அபிவிருத்திகளை தேவைப்படக்கூடிய, மக்கள் குடியிருப்புகளை தேவைப்படக்கூடிய பகுதிகள் அவசர அவசரமாக ஒதுக்கக் காடுகளாக அறிவிக்கப்படுவது ஏன்? இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உங்களுக்கு உதவி செய்யும் அமைப்புகளிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால் நீங்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவது தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான வேலைத்திட்டங் களுக்காகவா எனக் கேள்வி எழுப்பினார்.https://www.kuriyeedu.com/?p=376479
  • பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  
  • இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ? இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தி இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கெலிக்கொப்டரே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த கெலிகொப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதிசெய்யப்படாத போதிலும் 5 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கெலிகொப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் இந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில் நிகழ்ந்த இராணுவ கெலிக்கொப்டர் விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  விபத்தில் சிக்கிய இராணுவ கெலிக்கொப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 இராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இறுதி நிலைவரப்படி, முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த எம் ஐ-வகை இராணுவ கெலிக்கொப்டர் தமிழகத்தில் கோவை அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.   https://www.virakesari.lk/article/118650
  • புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என தெரியாது; கைவிரிக்கிறார் மாவை சேனாதிராசா புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என்பது தெரியாது என்பதுடன் அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- December 8, 2021   “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை பிற்போடுமாறு தலைவர் இரா.சம்பந்தனே நேரடியாக இந்தியத் தூதரகத்திடம் கோரியுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கோரினார் என்பது எனக்கு தெரியாது. எனது மகனின் திருமணத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை. நான் பங்கேற்காவிட்டாலும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் நானே கோரியிருந்தேன்.” இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. கூட்டமைப்பின் இந்தியப் பயணம் பிற்போடப்பட்டமைக்கு மாவை சேனாதிராசாவின் மகனது திருமணம்தான் காரணம் எனவும், மாவை சேனாதிராசாவே இந்தப் பயணத்தை பிற்போடுமாறு சம்பந்தனிடம் கூறினார் என்று வெளியாகிய செய்திகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05, 2021 | Weekly Epaper கூட்டமைப்பின் இந்தியப் பயணம் முன்னரே திட்டமிட்ட ஒன்று. எனது மகனின் திருமணமும் முன்னரே திட்டமிடப்பட்டது. எனது மகனின் திருமணத்துக்காக இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு கோர நான் விரும்பியிருந்தால் அதனை தலைவர் சம்பந்தனிடம் முன்னரே கூறியிருப்பேன். கடைசி நேரத்தில் அதனை ஒத்திப்போடுமாறு கோரும் தேவை எனக்கு இல்லை. எனது மகனின் திருமணத்துக்காக தமிழர் நலன் சார்ந்த விடயத்தை தள்ளிப்போடுமாறு கோரும் அளவுக்கு நான் சுயநலன் கொண்டவன் அல்லன். இந்தியப் பயணம் அறிவிக்கப்பட்டவுடன் அதில் என்னால் பங்கேற்கமுடியாது என்பதால் அங்கு நடக்கும் சந்திப்புக்களில் என்னென்ன விடயங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேசுவதற்கும் ஆயத்தம் செய்திருந்தேன். எனது மகனின் திருமணம் என்ற ஒன்றுக்காக தமிழ் மக்களின் நலன் சார்ந்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்றும் நான் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு கூறியிருந்தேன். இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு 7ஆம், 8ஆம் திகதிகளில்தான் நடைபெறவிருந்தது. எனது மகனின் திருமணம் 9ஆம் திகதியே நடைபெறுகின்றது. இந்த சந்திப்பில் நான் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் 7ஆம், 8ஆம் திகதிகளில் சந்திப்புகளில் பங்கேற்றுவிட்டு கூப்பிடு தூரத்தில் உள்ள இந்தியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பி மகனின் திருமணத்திலும் பங்கேற்றிருப்பேன். ஆயினும் இந்த சந்திப்பில் நான் கட்டாயமாக பங்கேற்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால்தான் அவர்களை சந்திப்பில் பங்கேற்கச் செல்லுமாறு கூறியிருந்தேன். இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு இரா. சம்பந்தனே இந்தியத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு கோரினார். அவர் ஏன் அப்படி கோரினார் என்பது எனக்கு தெரியாது. நான் தான் இந்தப் பயணத்தை பிற்போடுமாறு கோரினேன் என வெளியாகும் தகவல்கள் பொய்யானவை” என்றார்.   https://www.ilakku.org/not-known-why-sampanthan-postponed-trip-new-delhi/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.