Jump to content

தோழர். அப்துல் ரவூப் நினைவு நாள்


akootha

Recommended Posts

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்பணித்த தமிழக வீரன் தோழர். அப்துல் ரவூப் நினைவு நாள் 15-டிசம்பர்.

 

தமிழீழ விடுதலைக்கான போராட்ட பயணத்தில் நமது பங்களிப்பினை தொடர்ந்து செய்து வெற்றி ஈட்டுவோம் என்கிற உறுதியினை நாம் மேற்கொள்வோம். தோழர்களது தியாகம் வீண்போகாது நாம் செயல்படுவோம். தமிழர்கள் நாம் ஒற்றுமையாய் நின்று எதிரிகளை வீழ்த்துவோம்.

 

தோழர். அப்துல் ரவூபிற்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது அவரது குறிக்கோளிற்காய் நாம் நேர்மையாய் பணி செய்வது என்பதே. வெற்று முழக்கங்களை முன்வைக்காமல் செய்து முடிப்பவர்களாய் திகழ்ந்த வெகு சில தமிழகத் தமிழரில் அப்துல் ரவூப்பும் ஒருவர். தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்..

 

மே 17 அமைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி. மறக்கப்பட்ட உறவுகளில் இவரும் ஒருவர். ரவூவ் கக்கீம் கட்சியில் உள்ளவர்களும் இவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

டிசம்பர் 15 அன்று இரவு லண்டன் பிபிசி தமிழ. ஓசையின் மூலம் அப்துல் ரவூப் இறந்ததை அறிந்த உலகத்தமிழர்கள் பெறும் வேதனை கொண்டார்கள். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தியாகி ரவூப்பிற்கு தனது வீர அஞ்சலியை செலுத்தி அறிக்கை வெளியிட்டார். அதில் வெளியுலகத்தில் உலக தமிழினத்தில் இருந்து எமது மூல வேர் ஆழ வேரோடு இருக்கும் தமிழகத்தில் இருந்து எமத மக்களை அந்நியப்படுத்தி அழித்து விட எதிரி சதி செய்தபோதும், தமிழகம் எமது மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவும் அனுதாபமும் காட்டி வருவது எமக்குபெரும் தார்மீக தெம்பையும் மன உறுதியையு்ம தருகின்றது.

 

தமிழகத்தில் கிழர்ந்த உணர்வெழுச்சியின் தீவிர வெளிப்பாடாக அன்மையில் திருச்சியில் எமது போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு இளைஞன் தனக்குத்தானே தீமூட்டி எரித்து உயிர் நீத்து கொண்ட சம்பவத்தை அறிந்து நாம் மிகவும் கவலையும் வேதனையும் கொண்டோம் அந்த இளைஞனின் தமிழினப்பற்றிற்கும் விடுதலை உணர்விற்கும் மதிப்பளிக்கும் அதே வேளை இத்தகைய உயிர்த்தியாகம் அவசியமற்றவை என்பதால் அதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


தமிழீழத்தில் இருந்து ஒலிபரப்பாகும் விடுதலைப்புலிகளின் வானொலி ரவூப்பின் உயிர் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அன்று முழுவதும் சோக கீதங்களை இசைத்தது.

 

தமிழ' ஈழு மண்ணில் மாவீரர்களுக்காக நடுகல்களுக்கு மத்தியில் தியாகி ரவூப்பின் வீரத்தை போற்றும் வகையில் நடுகல் நட்டு அஞ்சலஜ செலத்தி வர தலைவர் பிரபாகரனால் உத்தரவிடப்பட்டது. அதனை தொடாந்து நடுகல் நடப்பட்டு விடுதலைப்புலிகள் அனவைரும் தியாகி ரவூப்பிற்கு அஞ்சலி செலுத்தினர். ஈழ தேசம் எங்கும் ரவூப்பிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.


ஈழம் எரிகிறது! இன்னுமா உறக்கம்?
வீறு கொண்டு எழு ! விரைந்து வா! என்றே!
தமிழினத்தை அழைக்க தன்னையே தீப்பிழம்பாக்கிய தமிழ் மறவனே !! அப்துல் ரவூப்பே!!
விடுதலைப்படையின் வெற்றி முழக்கமாய்
வீடு கொண்ட உனக்கு வீர வணக்கம்!!! -ஜம்பு

 

Link to comment
Share on other sites

கள  உறவு மின்னல் அவர்களின் கடந்த வருட பதிவு:

 

 

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=95584

 

 

Link to comment
Share on other sites

அயலில் உள்ள ஈழமாக இருந்தாலும் தமிழர் தேசம் எனும் கோட்பாட்டின்பால் இருந்த பற்றினால், தன் இன்னுயிரை அர்ப்பணித்த தோழர் அப்துல் ரவூப் அவர்களுக்கு இந்நாளில் சிரம்தாழ்ந்த நினைவுவணக்கம்!

Link to comment
Share on other sites

3848_426785037394874_1146146260_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 நினைவுவணக்கம்

Link to comment
Share on other sites

எமது இதயம் கனத்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

எமது இதய அஞ்சலிகள் 

Link to comment
Share on other sites

நினைவுநாள் வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.