• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
அபிராம்

இது அவன் தான்....

Recommended Posts

கணவரை இழந்த அந்த அம்மாவின் சொந்தமாக இப்போ அந்த வீட்டில் இருப்பது அவளின் கடைசி மகளும், கடைசி மகனை நம்பி ஓடிவந்த மருமகளும் தான்.
 
இராணுவ கட்டுப்பாடு பகுதியில், இரவு நேரத்தில் ஆண்கள் வீட்டில் இருந்தாலும் தங்க பயப்படும் காலத்தில், அவர்களுக்கு துணிவும் நம்பிக்கையும் இருந்தமைக்கு அந்த அம்மாவின் கடைசி மகன் தான் காரணம்.
 
தங்களுக்கு ஏதும் நடக்க அவன் விடமாட்டான். 
 
மூத்த மகன், கொழும்பில் நடந்த காட்டி கொடுப்பில் சிறைபட்டு ஆறுமாதம். இரண்டாவது மகன் புலிசேனையில் அண்ணனுக்கு பக்கபலமாக, ஒரு வருடத்துக்கு இரு முறை தான் பேசுவான்.
இருந்த ஒரே ஆறுதல் அவவின் கடைசி மகன்,  கொள்ளி  போட கூடவே வைத்திருந்தாள் அந்த அம்மா.
 
அவனோ அண்ணன்கள் வழியில், புலிகளின் மறைமுக நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக யாழ் மாவட்டத்திலே பல தாக்குதல்களை வழி நடத்துவது கூட தெரியாமல், அன்னை மடியில் படுத்திருந்து சோறு உண்பது கூட அந்த தாய்க்கு அவன் சாகுமட்டும், ஏன் இன்று மட்டும் தெரியாது.
 
திடீர் என்று வீட்டை விட்டு போவான், எப்படியும் வருவான் என்று அம்மா காத்திருப்பா, நிச்சயமாக இரவுக்குள் வீடுக்கு வருவான். இது கொஞ்ச காலமாக மாறி போயிருந்தது. சில நாட்கள் வாராமலே இருந்தான்.
 
நாட்கள் வாரங்களாக மாதங்களாக அவன் எப்போ வரு வான் என்று அம்மாவுக்கும் தெரியாத காலமானது.
 
அவனது மனைவி அப்போ 8 மாத கர்ப்பம். ஒரு முறையாவது தந்து மனைவியை பார்த்திட வேண்டி அனுமதிக்காக காத்திருந்ததை அவனுடைய ஆசை மனைவியோ, அம்மாவோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
அவன் இரண்டு கைகளாலும் துப்பாக்கி சுடும் வல்லமை உள்ளவன். நேருக்கு நேராக அவனை யாருமே எதிர் கொள்ளமுடியாது என்று அவனது பயிற்சி ஆசிரியர் சங்கீதன் 19 முகாமில் அடிக்கடி கூறுவார்.
 
புதுவருடம் பிறந்து சில நாட்களில் அவன் வீடுக்கு வந்திருந்தான். மாலை மங்கும் நேரத்தில். ஒரு மணி நேரத்தில் போய்விடுவேன் என்று கூறி தாயின் கையால் சோற்றை உண்டு, தங்கை கூட செல்ல சண்டை போட்டு, மனைவி வயிற்றை தடவி என் புலிக்குட்டி என்ன சொல்லுகிறான் என்று நேரம் போவதே தெரியாமல் விளையாடி கொண்டிருந்தான். தன்னை சுற்றி நடக்கும் சதிவேலை கூட அன்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 
பள்ளி நாட்களில் இருந்தே வீட்டை விட்டு வெளியில் போகும்போது தாயின் கால்களை தொட்டு வணங்கும் பழக்கமுடைய அவன், அன்றும் அவன் குனிந்து வணங்கும் போது கயவர்களின் முதலாவது சூடு கழுத்தை பதம்பார்த்தது. பீறின  இரத்தம் தாயின் பாதங்களை கழுவும் பொது இரண்டாவது அவன் மக்களை தாயை நேசித்த நெஞ்சிலே வீழ்ந்தது.  இன்று வரை அவன் புலி என்றே தெரியாத அந்த வீர தாயின் மடியில் தன் உயிரை விட்டான்.
 
பின்னொரு நாளில் ஒரு மறைமுக இடத்தில் நடந்த வீர வணக்க உரையில், அவன் தாயை குனித்து வணங்காவிட்டால் எதிரியை அவன்தான் சுட்டிருப்பான் என்று.
 
இன்று அவனது குழந்தை, அவனது அம்மாவை அம்மா என்று தான் கூப்பிடுகிறது. பேத்தியை அம்மா என்று கூப்பிடும் அதிசயம் என்று ஊரே நம்ப முடியாமல் தவிக்க, அவனது மனைவி  மட்டும் உறுதியாக நம்புகிறாள்.
 
இது அவன் தான். 
 
(இந்த உண்மை கதை வாழும் புலம் பகுதியில் எழுதிய இப்படியும் ஒரு தாய் என்ற கதையை வாசித்த போது  எனக்கு தெரிந்த அம்மாவின் ஞாபகமாக எழுதிய உண்மை கதை ) 
 • Like 4

Share this post


Link to post
Share on other sites
நீண்ட‌ நாட்களுக்கு பிறகு எழுத்தினூடாக அபிராமை காண்பதையிட்டு மகிழ்ச்சி
 

Share this post


Link to post
Share on other sites

இப்படியான, எமது வாழ்நாளில், எண்ணி முடிக்கக முடியாத, உண்மைக்கதைகள் நிரம்ப உண்டு!

கதையைக் கண் முன் கொண்டுவந்ததற்கு நன்றிகள், அபிராம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Share this post


Link to post
Share on other sites
இப்படி எத்தனை பெயர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்தார்கள்.
 
பகிர்விற்கு நன்றி அபிராம். 
 

Share this post


Link to post
Share on other sites
நீண்ட‌ நாட்களுக்கு பிறகு எழுத்தினூடாக அபிராமை காண்பதையிட்டு மகிழ்ச்சி
 

 

ஒரு நோயின் தாக்கமும், மன உளைச்சலும் தான் மீண்டும் எழுதும் படி தூண்டியது. 

 

இப்படியான, எமது வாழ்நாளில், எண்ணி முடிக்கக முடியாத, உண்மைக்கதைகள் நிரம்ப உண்டு!

கதையைக் கண் முன் கொண்டுவந்ததற்கு நன்றிகள், அபிராம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

 

இந்த கதைக்கும் என் சொந்த வாழ்க்கைக்கும் நிறைய தொடர்புண்டு புங்கையூரான். நன்றி உங்கள் பகிர்வுக்கு.

 

இப்படி எத்தனை பெயர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்தார்கள்.
 
பகிர்விற்கு நன்றி அபிராம். 
 

 

அவர்களின் கனவு நிச்சயம் நனவாகும். நன்றி தமிழரசு.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள்களுக்கு 6 மாதம் சிறை... நாடாளுமன்றத்தில் சட்டம்.! ரெல்லி: மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள் மற்றும் மருமகன்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் , மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் தண்டனை அளிக்கும் வகையில் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் இருந்தது.இந்த சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு அவல நிலையில் தான் வாழ்கிறார்கள். புதிய சட்டம் திருமணம் ஆன உடன் தனிக்குடித்தனம் செல்லும் மகன்கள் பெற்றோரை அப்படியே கைவிட்டு விடுகிறார்கள். இதையடுத்து அந்த சட்டத்தில் திருத்தம் செய்து நாடாளுன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகன் மற்றும் மருமகள்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பெற்றோர் பராமரிப்பு பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் திருத்த மசோதா 2019 சட்டத்தை லோக்சபாவில் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் தவார் சந்த் கெலாட், தங்கள் பராமரிப்பில் உள்ள பெற்றோர் அல்லது முதியவரை துன்பறுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மனரீதியாக காயம் பெற்றோரை திட்டுதல், பணம் தராமல் துன்புறுத்துதல், காயம் ஏற்படுத்துதல், உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், பெற்றோரை கைவிடுதல் போன்ற வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றங்களை செய்யும் மகன்கள் அல்லது மக்கள் மட்டுமின்றி இனி மருமகள்கள், மருமகன்கள், பேரன் மற்றும் பேத்தி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். புகார் தரலாம் இந்த புதிய சட்டப்படி 80வயதுக்கும் மேற்பட்ட முதியோர் அல்லது பெற்றோர் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற தீர்ப்பாயத்தை நாடி புகார் தெரிவிக்கலாம். இந்த தீர்ப்பாயம் புகார்களை 60 நாளில் விசாரித்து தீர்வு தரும்.80 வயதுக்கு கீழ் என்றால் 90 நாளில் விசாரித்த தீர்வு தரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோருக்கான சிறப்பு போலீஸ் பிரிவு அமைக்கப்படும். டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரி இதன் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்றார். https://tamil.oneindia.com/news/delhi/now-includes-son-in-law-and-daughter-in-law-will-jailed-who-not-maintain-parents/articlecontent-pf421555-371168.html
  • விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் ``தன் டி.என்.ஏ தமிழகத்தைச் சேர்ந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார். விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்ஸன் 1950-ம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். தற்போது 69 வயதாகிறது. இவரின், விர்ஜின் குழுமம் டெலிகாம், உணவுத்துறை, ஏர்லைன்ஸ், விண்வெளிப் பயணம் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது. இந்தியாவில் மும்பை முதல் புனா வரை ஹைப்பர்லூப் திட்டம் அமைக்கப்படவுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமை யிலான மகாராஷ்டிர அரசு புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர்லூப் திட்டங்களைக் கைவிடும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.   ஹைபர்லூப் திட்டம் இதைத் தொடர்ந்து, பிரான்ஸன் மகாராஷ்டிரா வந்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயை இன்று அவர் சந்திக்கிறார். ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்களையும் சந்திக்கவுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய பிரான்ஸன், தனக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். அப்போது, ``தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக தன்னுடையை டி.என்.ஏ வைப் பரிசோதித்தபோது இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் 1793- ம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது, என்னுடைய மூதாதையர் தமிழகப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். ``இந்தியர்களை நான் சந்திக்கும்போதெல்லாம், `ஒருவேளை நாம் இருவரும் உறவினர்களாக கூட இருப்போம்' என்று விளையாட்டாக கூறுவது உண்டு'' என்றும் பிரான்ஸன் கூறினார்.   விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் பிரான்ஸனின் மூதாதையர்களில் ஒருவரான ஜான் எட்வர்ட் 1793- ம் ஆண்டு முதன்முறையாக சென்னை வந்துள்ளார். இங்கிருந்து அவரின் குடும்பம் கடலூருக்கு நகர்ந்துள்ளது. இவரின் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. https://www.vikatan.com/business/news/virgin-founder-richard-branson-says-about-tamil-nadu-connection?fbclid=IwAR2kB85kfYlnjZXTTed3ZfYJk17xkq00PUK4bldBR4ROuncFmbEJNaoFrmI
  • நாங்களும் மத்தள விமான நிலையத்தினை வாங்குறதா ஐடியா இல்லை - ராசவன்னியன்! 🤣 தமிழ் நாடு  
  • ஏற்கனவே பசுமை தானே பாதி லைட் எரியாது. காவாசி லைட் மின்னி மின்னி எரியும்.