• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

அண்ணே நாளைக்கு உலகம் அழியப்போகுது….இன்னிக்கே பணத்தை பிடிங்க… சந்தோசமா இருங்க!

Recommended Posts

டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி பரவி வருவதால் தர்மபுரி அருகே ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து எல்லோருக்கும் விநியோகித்து வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயன் காலண்டரில், 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதிக்குப் பின்னர் நாட்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பீதி பரவியுள்ளது. சிலர் ஆங்காங்கே சொந்த பந்தங்களுடன் கூடி உணவருந்து வருகின்றனர். சிலர் கிடாய் வெட்டி கூட விருந்து வைக்கின்றனராம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பரிகார பூஜைகளும், வீடுகளில் பெண்கள் 3 விளக்குகள் ஏற்றியும் உலகம் அழியக் கூடாது என சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த கரும்பு வியாபாரி குழந்தைதம்பி (55), 21ம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்றும் அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறி நேற்று வங்கியில் இருந்து 1 லட்சம் பணத்தை எடுத்து வந்து அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார். நாளையோடு உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள் என்று கூறி பணத்தை கொடுத்தாராம். ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்' என்றும் வேறு கூறியுள்ளார் அந்த நபர். இந்த தகவல் பரவியதையடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரை பார்க்க சென்றனர். அவர் கையில் இருந்து பணம் முழுவதையும் கொடுத்துவிட்டு எங்கேயோ எஸ்கேப் ஆகிவிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 http://tamil.oneindia.in

Share this post


Link to post
Share on other sites

இப்படியும் இருக்கிறார்களே!

உலகம் அழியாவிட்டால் அவரின் கதி!

Share this post


Link to post
Share on other sites
சிலர் ஆங்காங்கே சொந்த பந்தங்களுடன் கூடி உணவருந்து வருகின்றனர். சிலர் கிடாய் வெட்டி கூட விருந்து வைக்கின்றனராம்.

 

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த கரும்பு வியாபாரி குழந்தைதம்பி (55), 21ம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்றும் அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறி நேற்று வங்கியில் இருந்து 1 லட்சம் பணத்தை எடுத்து வந்து அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார். நாளையோடு உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள் என்று கூறி பணத்தை கொடுத்தாராம். 

 

ரணகலத்திலேயும் ஒரு கிளு கிளுப்பு.. :lol:

Share this post


Link to post
Share on other sites

 • Posts

  • ம‌ன‌த‌ள‌வில் துணிவும் வீர‌மும் இருந்தாலும் , க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளின் புகை ப‌ட‌ங்க‌ளை பார்க்கையில்  தியாக‌ங்க‌ளை நினைக்கையில் க‌ண்ணீர் தான் மிச்ச‌ம் , க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ள் இல்லை என்றால் ஈழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ர் ம‌ண்ணோடு ம‌ண்ணாய் போய் இருப்பின‌ம் ,  முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு க‌ரும்புலிக‌ள் தான் அவ‌ர்க‌ளுக்கு புரியும் ப‌டி அவ‌ர்க‌ளின் பாசையில் புரிய‌ வைத்து விட்டு க‌ண் மூடி விட்டார்க‌ள் / வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏
  • சீனாக்காரன் மோடியை பிடிக்க வர அவன் போய் சம்பந்தருடைய வேட்டிக்குள் ஒளிந்தால் சீனாக்காரன் மோடியை பிடிக்க சம்பந்தரின்ட வேட்டியை உருவ மாட்டானா?   அதை விட அங்க மன்னாரில நடக்கிற கூத்தை பார்த்தால் மோடியும் அவரின் பரிவாரங்களும் முழு வீச்சுடன் இயங்குவது புலனாகிறது.
  • ஆழ்ந்த அனுதாபங்கள் இது ஒன்றும் முதல் தடவை அல்ல; எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்து விட்டன. ஓட்டுப்வர்கள் கொஞ்சம் யோசித்து வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதை விடுத்து மின்னல் வேகத்தில் பயணித்தால் .....?  யாழ்ப்பாணம் செல்லும் போது K K S Road ல நின்று பார்த்தால் எம்மவர் வாகனம் ஒட்டும் வேகத்தை பார்த்தாலே பயம் வரும். போரில் இறந்தவன் இறக்க,வெளி நாடு என்று எல்லாரும் செல்ல,புனித மதத்தை பலர் தழுவ ,அகால மரணங்கள் இப்படி நடக்க எமது இனத்தின் முடிவு வெகு தூரத்தில் இல்லை என்பதே எனது கவலை,அதுக்காக எம்மால் மாற்ற முடியாது என்றல்ல... அதில் நாம் அக்கறை காட்டுவதில்லை.
  • வயது போயிட்டுது அறளை பேர்ந்தா இப்படித்தான் மோடி என்ன ட்ரம் கூட நிப்பார் ஒரு பிழையான முடிவை தெரிந்தே எடுத்த பெருமைக்குரியவர் tna க்குள் வந்த சுமத்திரன் பேய் கடைசியில தமிழரசு கட்சியையும் அழித்துவிட்டுத்தான் அடங்கும் பாருங்க .