Jump to content

முதல் காதல் கடிதம்


Recommended Posts

எத்தினை பச்சை மட்டையால அடிவாங்கினாலும் விடாத விக்கிரமாதித்தன் மாதிரி... உங்கட விடாமுயற்சி பாராட்டுதலுக்கு உரியது.. :D

 

எல்லாம் உங்ககிட்டே இருந்து கத்துகிட்டது தான் அண்ணே .. :lol:  :icon_idea:

 

'காதல்" எப்போது எப்படி உச்சரித்தாலும்.....இனிக்கும்**(அதை உணர்ந்தவர்களுக்கு** :).

 

யாழ்ப்பாணக் கதையிருக்கே....'ஏமலாந்தி,,,,இருக்கிறாளவை.... :) இன்னும் இன்னும் எனக்கு ஊர் நினைவுகளை அப்படியே மீட்டுக்கொண்டு வந்துவிட்டது.

 

நல்ல எழுத்தோட்டம். வாசிக்கும் ஆவல் அதிகரிக்கின்றது. ...தொடருங்கள்!..

 

உண்மைதான் தங்கை, அந்த காலத்தில் இருந்த மன உணர்வை அந்த காலத்து எங்களின் மொழிநடையில் எழுதும்போது, நாங்களும் அந்த காலத்தினூடு பயணிக்கும் ஒரு உணர்வு தானாகவே ஏற்படுகிறது.

 

பெட்டைக்கு மைதானே அடிச்சியள் :lol: :lol: . இதுக்கு பச்சை மட்டையா :o  :o   ?? அட பெட்டையளுக்கு மையும் அடிக்காட்டி நீங்கள் பெடியானாய் இருந்தும் வேலையில்லை எண்டு தெரியாதோ  :(  :(  ??

 

வாழ்துக்கள் சுழட்டல் மன்னா .

 

இதைவிட, 100 கிராம் பச்சை மிளகாய் சாப்பிட்டது,  50 இலையான் பிடிச்சு கொடுத்தது. தவைக்கையை வாய்க்குள் வைச்சு 5 நிமிஷம் செலோடேப் பண்ணின தண்டனை எல்லாம் அனுபவிச்சு இருக்கிறம் ஐய்யா. நாங்கள் செய்த திருகுதாளங்கள் சொல்ல இந்த ஒரு கதை காணாது ..பார்ப்போம். :lol:

 

 சுழட்டல் மன்னா என்ற பட்டம் நல்லா தான் இருக்கிறது. ஆனால் நான் படிக்கும் காலத்தில் காதல் இளவரசன் என்ற பட்டம் எனக்கு இருந்தது என்று சொன்னால் நம்பவா போறீங்க  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் நன்றாகச் செல்கிறது... கிருபன் சொன்ன மாதிரித்தான் முதல்முதல் பிகரைப் பார்ப்பது என்றாலே வேர்த்து மூச்சு முட்டி பெடியங்கள் படுற அவஸ்தையை கண்டிருக்கிறேன்.... நீங்கள் என்ன அந்தப்பதட்டம் ஒன்றுமே இல்லாமல் பம்பலா சைட் அடிச்சிருக்கிறீர்கள்?  கதை எழுதுவதற்காக அந்த உணர்வு பூர்வமான பொழுதை மட்டுப்படுத்திவிட்டீர்களோ? :rolleyes:

Link to comment
Share on other sites

பகலவனின் முதல் காதல் கடிதம் மறந்து போன பல ஊர்களை சந்திகளை தெருக்களை நினைவில் கொண்டு வருகிறது. பழையநாட்களை நினைவுதரும் கதைகளில் தற்போதைய யாழ் தொடர்கதைகளில் உங்கள் கதை மண்வாசம் கனக்கிறது.



இதைவிட, 100 கிராம் பச்சை மிளகாய் சாப்பிட்டது,  50 இலையான் பிடிச்சு கொடுத்தது. தவைக்கையை வாய்க்குள் வைச்சு 5 நிமிஷம் செலோடேப் பண்ணின தண்டனை எல்லாம் அனுபவிச்சு இருக்கிறம் ஐய்யா. நாங்கள் செய்த திருகுதாளங்கள் சொல்ல இந்த ஒரு கதை காணாது ..பார்ப்போம். :lol:

 

தெல்லிப்பழைவிதியில் பலர் பச்சைமிளகாய் சாப்பிட்ட காலமொன்று இருந்தது.....இது அதுக்கும் அடுத்த காலமாக இருக்கு. :lol:

கதையே ஒரு திருகுதாளக்காலமா போகுது இதில சொல்லவா வேணும் அமைச்சரே ? :icon_idea:



ஆனால் நான் படிக்கும் காலத்தில் காதல் இளவரசன் என்ற பட்டம் எனக்கு இருந்தது என்று சொன்னால் நம்பவா போறீங்க  :lol:  :lol:

 

நம்பமாட்டமெண்டு நாங்க சொன்ன நீங்களென்ன நம்பவா போறீங்கள் ?

Link to comment
Share on other sites

பகலவனின் முதல் காதல் கடிதம் மறந்து போன பல ஊர்களை சந்திகளை தெருக்களை நினைவில் கொண்டு வருகிறது. பழையநாட்களை நினைவுதரும் கதைகளில் தற்போதைய யாழ் தொடர்கதைகளில் உங்கள் கதை மண்வாசம் கனக்கிறது.

 

தெல்லிப்பழைவிதியில் பலர் பச்சைமிளகாய் சாப்பிட்ட காலமொன்று இருந்தது.....இது அதுக்கும் அடுத்த காலமாக இருக்கு. :lol:

கதையே ஒரு திருகுதாளக்காலமா போகுது இதில சொல்லவா வேணும் அமைச்சரே ? :icon_idea:

 

நம்பமாட்டமெண்டு நாங்க சொன்ன நீங்களென்ன நம்பவா போறீங்கள் ?

 

அக்கா ஒரு முடிவோடை தான் இறங்கி  இருக்கிறீங்கள். பொக்ஸ்  அடிக்கிற பிளான் ஏதாவது இருந்தால் இப்பவே சொல்லிவிடுங்க அக்கா. எங்கடை படையணி எல்லாத்தையும்  பின்வாங்கி  கொண்டு கண்காணாமல் ஓடிபோய் விடுகிறோம்  :lol:  :lol:

Link to comment
Share on other sites

நல்ல நகைச்சுவையோடு நகர்த்துகிறீர்கள் தொடருங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் படப்பாட்டுக்களை வைத்துக் காதல் கடிதம் எழுதுவார்கள் என்று தெரிந்ததால்தான் நான் காதல் கடிதம் எழுதக் கவிதைகளைப் படிக்கத் தொடங்கினேன். வரிகளை தேவதைகளுக்காக மாற்றி எழுதுவது இலகு..

 

நீ காற்று நான் மரம்.. நீ மழை நான் பூமி.. என்று வைரமுத்து ஆனந்த விகடனில் எழுதிய கவிதையும் உபயோகப்பட்டது. ஆனால் அது பின்னர் பாடலாகவும் வந்து காட்டிக்கொடுத்துவிட்டது!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் ஒரு கிராமத்து பின்னணியில் காமடிப்படம் பார்த்த உணர்வு..

சினிமாத்தனமான வசனங்களை விட்டு இயல்பான ந்கைச்சுவை ரசம் குழைத்து அழகாககத்தொடர்கிறீர்கள்..

தொடருங்கள் ... காதல் மன்னனப்பா நீங்கள். :D

Link to comment
Share on other sites

அக்கா ஒரு முடிவோடை தான் இறங்கி  இருக்கிறீங்கள். பொக்ஸ்  அடிக்கிற பிளான் ஏதாவது இருந்தால் இப்பவே சொல்லிவிடுங்க அக்கா. எங்கடை படையணி எல்லாத்தையும்  பின்வாங்கி  கொண்டு கண்காணாமல் ஓடிபோய் விடுகிறோம்  :lol:  :lol:

 

பயப்பிடாதையுங்கோ RPG அணி உங்களை காக்க தயாராவே இருக்கு. பொக்ஸ்சிலதான் இப்பவே நிக்கிறீங்கள் கதையை எழுதி முடிச்சிட்டா பொதுமன்னிப்பு வழங்கலாமென வழங்கல் பிரிவு தெரிவிக்கிறது. :lol:

Link to comment
Share on other sites

பகலவன் நன்றாகச் செல்கிறது... கிருபன் சொன்ன மாதிரித்தான் முதல்முதல் பிகரைப் பார்ப்பது என்றாலே வேர்த்து மூச்சு முட்டி பெடியங்கள் படுற அவஸ்தையை கண்டிருக்கிறேன்.... நீங்கள் என்ன அந்தப்பதட்டம் ஒன்றுமே இல்லாமல் பம்பலா சைட் அடிச்சிருக்கிறீர்கள்?  கதை எழுதுவதற்காக அந்த உணர்வு பூர்வமான பொழுதை மட்டுப்படுத்திவிட்டீர்களோ? :rolleyes:

 

அதை நான் தவறவிடவில்லை. ஒரு குறிப்பிட்ட நல்ல இடத்துக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன். நிச்சயம் என் கதையில் அந்த படபடப்பு இருக்கும். நன்றி அக்கா உங்கள் பதிவிற்கு.

 

நல்ல நகைச்சுவையோடு நகர்த்துகிறீர்கள் தொடருங்கள். :lol:

 

இப்போ தான் ஒரு மோதிர கையால் குட்டு வாங்கின திருப்தி சாத்திரி.

 

எல்லாரும் படப்பாட்டுக்களை வைத்துக் காதல் கடிதம் எழுதுவார்கள் என்று தெரிந்ததால்தான் நான் காதல் கடிதம் எழுதக் கவிதைகளைப் படிக்கத் தொடங்கினேன். வரிகளை தேவதைகளுக்காக மாற்றி எழுதுவது இலகு..

 

நீ காற்று நான் மரம்.. நீ மழை நான் பூமி.. என்று வைரமுத்து ஆனந்த விகடனில் எழுதிய கவிதையும் உபயோகப்பட்டது. ஆனால் அது பின்னர் பாடலாகவும் வந்து காட்டிக்கொடுத்துவிட்டது!! 

 

நான் கல்யாண வாழ்த்து அட்டையில் இருந்த கவிதைகளை கூட சுட்டு இருக்கிறேன் கிருபன், காதல் கடிதம் எழுதுவது இன்றைய சினிமாவில் டூயட் பாடுவதற்கு ஒப்பானது. அதைவிட கற்பனை உலகில் சஞ்சரிக்க வைக்க கூடியது காதல் கடிதத்தை எழுதுவதும், யாரும் தந்த கடிதத்தை வாசிப்பதும்.

 

உண்மையில் ஒரு கிராமத்து பின்னணியில் காமடிப்படம் பார்த்த உணர்வு..

சினிமாத்தனமான வசனங்களை விட்டு இயல்பான ந்கைச்சுவை ரசம் குழைத்து அழகாககத்தொடர்கிறீர்கள்..

தொடருங்கள் ... காதல் மன்னனப்பா நீங்கள். :D

 

உண்மைதான் ஜீவா. அன்றைய காலத்தில் நாங்கள் செய்ததை இப்போ நினைக்கும் போதோ அல்லது அதை கதை வடிவில் எழுதும்போதோ என்னால் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

ஆமா கெதில எழுதிங்கப்பா.... நம்ம நண்டு அண்ணாவும் ஒரு கடிதம் எழுதி வைச்சிட்டு 25 வருஷமா காத்திட்டு இருக்கார் கொடுக்க உங்களுக்கு கிடைச்ச response வைச்சு தான் அவர் முடிவெடுக்க இருக்கார் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே மீதி ...............விரை வில் தொட ரு ங்கோ............சீரியல் மாதிரி ..............நீளாமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆமா கெதில எழுதிங்கப்பா.... நம்ம நண்டு அண்ணாவும் ஒரு கடிதம் எழுதி வைச்சிட்டு 25 வருஷமா காத்திட்டு இருக்கார் கொடுக்க உங்களுக்கு கிடைச்ச response வைச்சு தான் அவர் முடிவெடுக்க இருக்கார் :(

 

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-kPGqKK3IME

Link to comment
Share on other sites

கறுப்பன் போக்குவரத்து நெரிசல் குறைந்த ஒரு நேரத்தில் எங்களை நோக்கி வந்தான்.

 

கெல்மட்டை கழட்டிவிட்டு, என்னை உற்று பார்த்துவிட்டு,

 

 நீ..யா .??

அந்த கேள்வியிலேயே தெரிந்தது இன்றைக்கு எந்த கிளுவந்தடியோ, பூவரசந்தடியோ தும்பாக போகிறது எண்டு.

மனசுக்குள் ஆயிரம் எண்ண ஓட்டங்கள், என்னத்தை சொல்லி இவனை சமாளிக்கிறது.

திவ்வியாவோ அழுவாரப்போல நிக்கிறாள்.

 

என்னடா எடுத்தனி பொக்கற்றுகுள்ளே இருந்து.?

 

திவ்வியாவின் கண்கள் என் முகத்தை நிலைக்குத்தி பார்த்தன. கறுப்பனுக்கு எப்படியும் திவ்வியாவுக்கு முன்னாலே என்னை மானம் கெடுத்திபோடவேனும் என்று ஒரு குரூர ஆசை.

 

அதுவா... அ....து வ...ந்...து, அவள் வாழ்க்கைத்திறன் (லைப் ஸ்கில் என்று கண்டறியாத பாடம் அப்போ தான் அறிமுகமாகி இருந்தது கண்டியளோ) என்று ஒரு பாடத்துக்கு வண்ணாத்திப்பூச்சி பிடிச்சு தர சொன்னவள்..... அது தான் பிடிச்சு பொக்கற்றுகுள்ளே வைச்சிருந்தனான். அதை தான் குடுக்க வெளிக்கிட்டனான் என்று சொன்னேன்.

 

அவனுக்கு கடுப்பு முகத்துக்கு வந்தது அப்படியே எனக்கு தெரிஞ்சது. சும்மாவே அவன் கறுப்பு, கடுப்பிலே அவன் முகத்தை சொல்லவா வேணும்.

 

எங்க காட்டு என்று என்ர பொக்கற்றை, இழுத்தான்.

 

அது அப்பவே பறந்து போயிட்டு என்று சொன்னேன். திவ்யா கிளுக் என்று சிரிச்சாள்.

அவன்ட முகத்திலே அரைகிலோ அசடு வழிஞ்சது. அவளை போக சொல்லிவிட்டு, ஆஸ்பத்திரி ரோட்டிலே பாலம் என்று சலீம் நடத்தின,ஒரு காயபட்ட போராளிகளை பார்க்கிற ஆட்களை ஒழுங்குபடுத்திற  இடம் ஒன்று இருந்தது (போராளி பரமாரிப்பு மையமோ என்னமோ). அதுக்கு பின்னாலே என்னை கொண்டுபோய் மூன்று பூவரசம் தடி முறிய முறிய தந்தான் கறுப்பன்.

 

அது பறுவாயில்லை அடி தானே, பதினைஞ்சு வண்ணாத்தி பூச்சி பிடிச்சு தந்திட்டு போ என்றான். நானும் அதிலே இருந்த நாயுண்ணி பத்தை எல்லாம் விழுந்து விழுந்து வண்ணாத்தி பூச்சி பிடிச்சு குடுத்தன். அது கூட பரவாயில்லை. பக்கத்திலே இருந்த வேம்படி பள்ளிகூட மாடியிலே இருந்து பெட்டைகள் என்னை கை காட்டி சிரிச்சதை தான் என்னால இன்றைக்கும் மறக்க முடியவில்லை.

 

டேய் கறுப்பா எனக்கொரு காலம் வராமலா போகும் என்று பிலத்து கத்தி சொல்ல வேணும் போல இருந்தது. எங்கே இன்னும் பத்து வண்ணாத்தி பூச்சி பிடிக்க சொன்னாலும் என்று நான் சொல்லவில்லை.

 

கறுப்பனிட்டை இருந்து தப்பினாலும் சனியன் என்னை விடவில்லை என்று பின்னேரமே எனக்கு விளங்கிட்டுது.

 

சித்தி வந்து அம்மாவிடம் போட்டு கொடுத்து இரண்டு பேருமே இரண்டு பக்கத்தாலே வீட்டை சுத்தி சுத்தி , சுழற சுழற அடி என்றால் கேள்விபட்டிருபீங்கள் தானே அந்த அடி. தமிழனின் கலாச்சாரத்தை தாங்கள் தான் கட்டி காப்பத்துறோம் என்ற நினைப்பிலே தான் அவங்கட அடி.

 

இது போதாது என்று எவனோ ஒரு மூதேவி எண்ட பெயரையும் திவ்யாவிண்ட பேரையும் கோயில் சுவத்திலே பெருசா எழுதி (வேற என்ன எண்ட பெயர் + திவ்யா = குழந்தை என்று தான் ) தண்ட வீரத்தை காட்டியிருக்கு. அது போதாது என்று இன்னொரு கோதாரி விழுந்தது குழந்தைக்கு முன்னால 2 என்று போட்டு விட்டு போயிருக்குது. அதை வேற ஐயர் தன்ர  நேர்மையை எண்ட வீட்டிலே காட்டி  இருந்தான். சொல்லவா வேணும் 3 அன்ரிமார், ஒருத்தர் கூட எனக்கு சப்போர்ட் இல்லை. உண்மையா இவைக்கு அந்த கறுப்பனே பரவயில்லை.

 

இரவிரவா கேவி கேவி அழுதும், அடிச்ச தழும்புகளை தடவி பார்த்தும், விக்கலும் மூக்குச்சளியும் மட்டும் தான் வந்தது, யாருமே எண்ட அறையை கூட திரும்பி பார்க்கவில்லை.

 

திவ்யாவிண்ட காதலை அப்படியே விடுவமா என்று மனசுக்குள்ளே யோசிச்ச போதுதான் கடவுள் சிவராத்திரி வடிவில் வந்தான்.

 

எங்கட கோயில் ஐயருக்கு நாடக பைத்தியம். சிவராத்திரிக்கு எப்படியும் ஒரு நாடகம் கோயில்ல போடா வேணும் எண்டு ஒரு குரங்கு ஆசை அவனுக்கு.

எழுத்து வசனம் எல்லாம் அய்யன் தான். இதிலே எண்ட காதல் எங்கே வருது என்று தானே யோசிக்கிறீங்கள். அங்க தான் கடவுள் நிக்கிறான்.

 

எங்கட ஊரிலே கொஞ்சம் உயரமா ஸ்மாட்டா என்றால் நான் தான் ( உண்மையா கொஞ்சம் எண்டாலும் நம்புங்க ப்ளீஸ்),கடவுள் அய்யன் ரூபத்திலே வந்து என்னை அவன்ர நாடகத்திலே சிவபெருமானாக செலக்ட் பண்ணிட்டார். பிறகென்ன உமாதேவியார் வேற யார் ...?  இது கூட விளங்காட்டி நீங்கள் இவ்வளவு நேரமும் எண்ட கதையை படிச்சதே வேஸ்ட்டு.

 

உண்மையா ...ஐய்யன் கொடுத்த நாடக வசனங்கள் எண்ட காதல் கடிதத்தை விட எவ்வளவோ மேல். அப்படி வசனங்கள். ஒரு நாளைக்கு இரண்டு ஒத்திகை, சில வசனங்கள் நான் பாடமாக்காமலே பேசும்போதே ஐயருக்கு தெரிஞ்சிருக்க வேணும் நான் அவளை உமாதேவியாரை லவ் பண்ணுறன் என்று. அது ஒரு குரங்கு.

 

எண்ட லவ் கலந்த நடிப்பை உண்மை என்று நம்பி எல்லாருக்கும் சொல்லித்திரிஞ்சது நான் நல்ல நடிகன் என்று. பிறகு என்ன எனக்கு ஒரு சடாமுடி, கங்கை ஆறு, பாம்பு, புலித்தோல் எல்லாம் அளவெடுத்து தைச்சாச்சு. அவளுக்கும் தான்.

 

கடைசி ஒத்திகை .. நாளைக்கு சிவராத்திரி. எங்கட நாடக அரங்கேற்றம்.

 

இண்டைக்கு காலமை வசனங்களை பேசி ஒத்திகை.

 

வேறு என்ன வேணும் தேவியே. என்னில் உடம்பில் சரி பாதியை உனக்கு தந்தேன். இப்போது கூட உனக்கு புரியவில்லையா..?? இது எண்ட வசனம்.

 

நாதனே இது கூட அறியாமல் பாராளும் பூவுலகிற்கு நான் அன்னையாக முடியுமா இது அவள் 

 

என்று காதல் வசனங்கள். சிவபெருமான் உமாதேவியார் வடிவில்.

 

நாடகம் முடிய அவளிடம் சொல்ல வேணும், நாடகத்திலே சொன்ன வசனங்கள் எல்லாம் உண்மை என்று. அப்படியே எண்ட காதலையும் சொல்லி விட வேண்டும் என்று மனசுக்குள்ளே நினைச்சு கொண்டேன்.

 

மதியம் இரண்டு மணியை தாண்டி இருக்கும். நாளைக்கு நாடகத்துக்காக மேடை போட்டு கொண்டு இருந்தாங்கள் பிள்ளையார் கோயில்லே.

 

வானத்தை கிழிச்சு கொண்டு இரண்டு சியாமா செட்டி என்கிற பொம்மர்கள். அரசியல் துறை முகாமை குறிவைச்சு குத்தி கொண்டு வந்தான்.  திடீர் என்று மொறிஸ் அண்ணை ஆட்களிண்ட பேஸ்ல இருந்து பிப்டி கலிபர் முழங்க தொடங்கினது.

 

அந்த குறுக்கால போன பொம்மர்காரன் குண்டை போட்டால் காணும் என்று, தள்ளிவிட்டு போயிட்டான். ஒரு குண்டுமே அரசியல் துறை காம்புக்குள்ளே விழவே இல்லை. எல்லாம் கோயிலுக்குள்ளே தான்.

 

பின்னேரம் லங்காபுவத் செய்தியிலே, மயில்வாகனம் சர்வானந்தா, விமான படை தளபதி றோகான் குணவர்தனவை மேற்கோள் காட்டி செய்தி வாசிச்சு கொண்டிருந்தார்.

 

இன்று நண்பகல் விமான படைக்கு சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் புலி பயங்கரவாதிகளின் அரசியல் துறை முகாமை தாக்கி அழித்தன. இதில் பதினைஞ்சு பயங்கரவாதிகள் கொல்லபட்டனர் என்று நாக்கூசாமல் வாசிச்சார்.

 

அந்த அறுவாங்களுக்கு தெரியாது, குண்டு விழுந்தது புலிகளின் காம்புக்குள்ளே இல்லை, என்ர காதலுக்கு மேலே என்று.

 

அன்று முதல் ரொஹான் குணவர்த்தன, கறுப்பனோட  சேர்ந்து எண்ட காதல் எதிரிகள் லிஸ்ட்ல சேர்ந்து கொண்டார்.

 

தொடரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவபெருமான் கூடப் பரவாயில்லைப் போல கிடக்கு!

பக்தர்களை, அளவுக்கதிகமாகச் சோதிப்பது கிடையாது! :D

சும்மா ஆத்தில போட்டுக் குளத்தில எடுக்கிறமாதிரி, அலுவலை முடிச்சிடுவார்!

என் எதிரியின் காதலுக்குக் கூட இவ்வளவு சோதனைகள் வரக்கூடாது! :D

கதை நல்லபடியாகத் தான் போகுது! தொடருங்கள், தலிவா! :o

Link to comment
Share on other sites

இரவிரவா கேவி கேவி அழுதும், அடிச்ச தழும்புகளை தடவி பார்த்தும், விக்கலும் மூக்குச்சளியும் மட்டும் தான் வந்தது, யாருமே எண்ட அறையை கூட திரும்பி பார்க்கவில்லை.

 

எனக்கும் இப்பிடி நடக்கிறது  வேறை பிரைச்சனையளுக்கு . ஒண்டும் எட்டிப்பாக்காதுகள் என்ன மனுசரப்பா :D ? உவ்வளவுக்கு உங்களை நாறப்பண்ணின கல்பனா இப்ப எங்கை :lol: ? இந்த தொடர் எழுதேக்கை ஒரு வியாதி வரும் எங்கடை பிள்ளையளுக்கு :icon_mrgreen:  . அது என்னண்டால்  , கதையை பாத்து நாலு கருத்து சொல்ல பஞ்சி .  நல்லா இருக்கு கெதீலை அடுத்ததை எழுதுங்கோ எண்டதுதான்  :lol:  :D  :icon_idea:  .

Link to comment
Share on other sites

இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லை....சிம்பிளா அவள் தோழிடம் கொடுத்து அலுவலை முடிச்சிருக்கலாம், தோழியை எந்தவித பதட்டமுமில்லாமல் சினேகிதம் பிடிப்பது சுலபம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா தான் அண்ணே.. நான் "மண்ணில் இந்த காதல் அன்றி" பாட்டை பாடமாக்கி போட்டு அம்மா, தங்கச்சி, அண்ணா ஒருத்தரும் வீட்ல இல்லாத நேரமாய் பார்த்து கத்தி பாடினேன் பாருங்க, அம்மா அந்த காலத்திலே அறுநூறு ரூபாய் கொடுத்து  வாங்கி கொண்டுவந்த, ஒரு அலுசேசன் குறஸ் நாய் சங்கிலியை அறுத்து கொண்டு ஓடிட்டு. இண்டைக்கு மட்டும் அம்மாக்கு தெரியாது ஏன் நாய் வீட்டை விட்டு ஓடினது என்று. அம்மாவுக்கு நட்டம் 750 ரூபாய். நாய் 600 ரூபாய் சங்கிலி 150 ரூபாய்.

ஐயோ சிரிச்சு வயிறு நோகிறது பகலவன். நன்றாக எழுதுகிறீர்கள். :lol: :lol: :lol:

 

பகுதி 3 முழுவதும் சிரிக்காமல் வாசிக்க முடியவில்லை. :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு தொடருங்கோ

Link to comment
Share on other sites

சரி சரி நோவும் மாறீட்டுது காதலும் தேறீட்டுது மிச்சத்தை எப்ப எழுதப்போறியள் அதை முதல் சொல்லுங்கோ?

அந்தக் கறுப்பனாலை கனபேருக்கு கம்பு முறிஞ்ச பெரிய பெரிய கதையளெல்லாம் இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

பொம்மர்கள் போட்ட குண்டுகளோட என்ர காதலும் சரி என்று நான் இருக்கேக்க தான், குலதீபன் என்று மாணவர் அமைப்பு பொறுப்பாளர் ஒரு திட்டம் கொண்டு வந்தார்.
 
அவர் திட்டத்தை என்ர காதலுக்கு கொண்டு வரேல்ல. படிக்கிற பெடியங்களுக்கு (என்னை மாதிரி ???) இரவிலே பெற்றோல் மக்ஸ் கொளுத்தி படிக்க விடுறது என்று.
 
அந்த திட்டத்திலே எங்கட வீட்டுக்கு  பக்கத்திலே இருந்த ஒரு பத்தாம் வகுப்பு மட்டும் இருக்கிற பள்ளி கூடத்திலே, இரவிலே பெற்றோல் மக்ஸ் கொளுத்தி படிக்க விட்டாங்கள்.
 
ரோஸ் எண்டு நல்ல ரோஸ் நிறத்திலே இருந்த பெடியன்தான் அதுக்கு பொறுப்பு. அந்தகாலத்திலே அவனுக்கு அப்படி பேர் வைச்சதுக்கு பெருமை படவேண்டும். நல்ல கறுப்பன் ஒருத்தனுக்கு வெள்ளைச்சாமி என்று பெயர் வைச்சிருபாங்கள். அதுக்கு இது பரவாயில்லை.
 
பின்னேரம் ஆறுமணிக்கே பெற்றோல் மக்ஸ் கண்ணாடி எல்லாம் துடைச்சு, நீடில் சரி பார்த்து, காத்தடிச்சு அதை அவன்  கொளுத்திறதே ஒரு தனி கலை.
 
நானும் அங்கெ போய் படிச்சேன், வேற என்னத்துக்கு திவ்யாவும் வெண்ணிலாவும் அங்க வாறதுகள் என்ற ஒரே காரணத்துக்கு தான். அவளுகளுக்காகவே படிக்கிற மாதிரி  ஒரு மூன்று மணத்தியாலம் புத்தகத்தை வைச்சு போராடுறது. வேற என்ன ...எங்கட பெடியளை கேட்டால் சொல்லுவாங்கள் புத்தக கிரிகெட் தான்.
 
இரட்டை எண் வார மாதிரி புத்தகத்தை திருப்பி வைச்சிட்டு, சட்டென்று பக்கத்தை திருப்பிறது 2,4,6 வந்தால் அதே ரன்ஸ். 8 வந்தால் 2 ரன்ஸ். 0 வந்தால் அவுட்.இது தான் புத்தக கிரிகெட். நீங்களும் அந்த காலத்திலேயே விளையாடி இருப்பீங்கள் தானே.
 
பிறகு படிச்சு முடிஞ்சு போகேக்க, ஊர் நாய் எல்லாத்தையும்  விரட்டி அவளவைகளுக்கு பாதுகாப்பு கொடுத்து வீடு வரைக்கும் கொண்டே விட்டிட்டு  நாங்கள் வீட்டை  போவோம். எங்கட அம்மாவுக்கு ஒரே சந்தோசம் என்னடா ஒவ்வொருநாளும் ஆறுமணிக்கே புத்தகத்தை தூக்கி கொண்டு பெடி  படிக்க போகுது என்று. என்ற தங்கச்சியும் வருவாள் படிக்க . அவள் தான் அம்மாவிண்ட விசேட வேவுப்பிரிவு.
 
படிக்கிற இடத்திலே ஒருத்தரோட ஒருத்தர் கதைக்க ஏலாது. ஆம்பிளைகள் ஒரு பக்கம் பொம்பிளைகள் ஒருபக்கம் . நடுவிலே ரோஸ் காட்டாமை மாதிரி ச்சே..சீ நாட்டாமை மாதிரி போய் வருவான்.
 

இப்படி நல்லா போய்  கொண்டிருக்கேக்க, ஒரு நாள் நான் கடைசி வாங்கிலே கடைசியாக இருந்தேன், அவள் எனக்கு அடுத்ததாக பொம்பிளைகள் பக்கத்திலே இருந்தாள். நான் டாப்பிலே பதிஞ்சு கொடுத்தா பிறகு அவள் பதிய வேணும். கிடைச்ச சான்சை எவனாவது விடுவானா. டாப்புக்கு நடுவிலே அண்டையான் திகதிக்கு பெயர் பதியிற பக்கத்துக்குள்ளே என்ர  கடிதத்தை வைச்சு டாப்பை அவளிடம் கொடுத்தேன்.

அதுக்குள்ளே எங்கே இருந்து வந்தானோ தெரியல ரோஸ் டாப்பை புடுங்கி போட்டான். நடுவிலே திறந்தால் என்ர கடிதம்.

அப்படியே என்னை ஒரு கையிலயும், என்ர கடிதத்தை ஒரு கையிலேயும் பிடிச்சு கொண்டு, வா... குலதீபன்ர பேசுக்கு என்றான்.

 

இத்தனைக்கும் அவன்ர சைக்கிளை நான் ஓட, அந்த எருமை மாடு என்னை பேசி கொண்டு முன் பார்ல, பெடல்  கூட போடாமல் வந்தது. நேராக சைக்கிளை விட்டன் குளப்பிட்டி குலதீபன்ர பேசுக்கு. ரோஸ் நேரா குலதீபனிட்ட போய் எதோ குசுசுத்து என்ர கடிதத்தையும் கொடுத்தான்.

ரோஸ் போகும்போது, போ ...இண்டைக்கு நல்ல பூசை தான் என்று சொல்லிட்டு வேற போயிற்றான். கொஞ்ச நேரத்திலே குலதீபன் வந்தான். நல்ல ஹீரோ மாதிரி சுருட்டை முடி களையான மீசை நல்ல உடம்பு.

வாடா உள்ளுக்கே என்றான்..

படிக்க வாற பெட்டைகளோட உனக்கு என்னடா சேட்டை. அதுகளை எங்களை நம்பிதானே பெற்றோர் படிக்க விடுகினம். அதுக்குள்ளே உங்களுக்கு சொறிச்சேட்டை.

(பிறகு ஒரு காலத்தில் குலதீபனின் காதல் கடிதத்தை நான் தான் கொண்டு போய் குடுத்தனான் என்ர  நண்பனின் தமக்கை கலைவாணிக்கு....அது வேற கதை )

அது வந்து... அண்ணே... நான் அவளை உயிருக்கு உயிரா விரும்பிறன்....

அவள் அபப்டி ஒரு வடிவு அண்ணே. ...நீங்க பார்த்தாலும் விரும்புவீங்கள் அண்.... சொல்லி முடிக்கவில்லை ஏதோ  மின்னின மாதிரி இருந்திச்சு..

கொஈஈஈஈஈஈஈ  ..எண்டு ஒரு சத்தம் தான் காதிலே கேட்டது.

காதை பொத்தி சாத்துறது என்று கேள்வி பட்டு இருக்கிறீங்களே. அவன்ட ரெயினிங் எடுத்த கையும், எண்ட பிஞ்சு முகமும். எனக்கு என்றால் ஒருபக்க சொக்கை  உள்ளுக்குள்ளே போட்டுது என்று தான் நினைச்சன்.
 
அதோட அவன் விட்டால் பரவாயில்லை. அவங்கட மேல்மாடி பேஸ் முழுக்க கூட்டி கழுவி, யன்னல் கம்பி எல்லாம் தண்ணி போட்டு துடைச்சு, இரவு இடியப்பமும் மாட்டிறைச்சியும், அவங்கள் சாப்பிட்ட கோப்பைகள், வாளிகள் எல்லாம் கழுவவிட்டான்.  இதெல்லாம் என்ன சிம்பிள் என்று நினைகாதேங்கோ. காதலுக்கு முன்னால சிம்பிள் தான் ஆனால் கொழுப்பு படிஞ்ச கோப்பையும், வாளியும், இங்கே மாதிரி டிஸ்க் கிளீனர் இருந்தாலும் பரவாயில்லை, பொச்சு  மட்டை வைச்சு தேய்க்கிறது என்றால்..சொல்லவா வேணும்.
 
அதோட விடுவான் என்று பார்த்தால், கொண்டே ரூமுக்குள்ளே வைச்சு  ஒரு மணித்தியாலம் அரசியல் வகுப்பு. சரி இனி போ ... என்று சொன்னான். போகேக்க கேட்டன்..
 
அண்ணே இயக்கத்திலே சேர்ந்தால் லவ் பண்ணலாமா அண்ணே என்று. ..
 
திரும்ப ஒரு மின்னல் ...இந்த முறை மற்ற பக்கம்.
 
 
நான் வீட்டுக்கு வந்தாலும் எனக்கு அதே நினைப்பு தான். நான் ஏன் இயக்கத்திலே சேர்ந்து அவளை லவ் பண்ண கூடாது. உடனே எனக்கு ஞாபகம் வந்தது தயா..
 
எங்கட பழைய சிற்றூரவை தலைவர் பொன்னம்பலம் வாத்தியிண்ட மகன். போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு என்று வெள்ளை சேட்டும், கறுப்பு ரவுசரும் போட்டு கொண்டு மோட்டசியிக்கிள் வரி பிடிக்கிறதுக்கு நிக்கிறவன். ஒரு நாள் விளையாடி கொண்டு இருக்கேக்க வந்து கேட்டான்... வாறியா...  இயக்கத்துக்கு எண்டு.
 
நீ எல்லாம் படிச்ச பெடியள், வந்தால் புலனாய்வுத்துறைக்கு வேலை செய்யலாம் எண்டு சொன்னான்.
 
குலதீபண்ட பேஸ்ல இருந்து வந்த அடுத்தநாளே பின்னேரம் விளையாடி முடிய போனன் தயாவிண்ட வீட்டுக்கு. இந்த முறை அவன், என்னை பார்ல ஏத்தி கொண்டு சைக்கிள்ளே ஒரு மம்மிற நேரமா போனான். பழைய யாழ்ப்பாண ரயில்வே ஸ்டேசனுக்கு பின்னாலே, வீரகேசரி பத்திரிகை அலுவலகத்துக்கு முன்னால ஒரு கள்ளு  தவறணை சைக்கிள் பார்கிலே சைக்கிளை விட்டான்.
 
என்னடா இவன் இயக்கத்துக்கு என்று கூட்டி கொண்டு வந்து தவறனையிலே விடுறான் என்று பார்க்க, வாடா பின்னாலே என்று விறு விறு என்று தவறணைக்கு உள்ளாலே நடந்தான். ஒரு வீட்டின்  பின்பக்கமாக போய் முன் கோலில் ஒரு கதிரையை காட்டி இருக்க சொன்னான். நல்ல சுத்தமாக துடைச்சு இருந்தது எல்லாமே. நேற்று குலதீபண்ட பேஸ்ஸை துடைச்சது தான் ஞாபகம் வந்தது.

 

நல்ல உயரமும், விறைச்ச பார்வையோட, சேர்ட்டை உள்ளுக்குளே விட்டபடி, கையிலே ஒரு நோட் புக்கோட வந்தார். வாரேக்குள்ளேயே எழும்பி நிக்க வேணும் போல இருந்திச்சு. எழும்பி நிண்டன். தயாவும் கூட வந்தான். இருடாப்பா என்று சொன்னார் அவர். தயாவை உள்ளே போக சொல்லிவிட்டு.

 

என்னிடம் கையை நீட்டி சொன்னார் எனக்கு பெயர் அரவிந்தன். முதல்ல மாணவர் அமைப்பு பொறுப்பா இருந்தனான். இப்போ வேற பிரிவிலே இருக்கிறேன் என்று.

 

எண்ட அப்பா, அம்மா என்று குடும்ப விபரம், உறவினர் விபரம் எல்லாம் எடுத்து அந்த நோட் புக்கில எழுதினார்.

 

எனக்கோ லோங்க்சுக்குள்ளே கால் நடுங்குது. வெளியிலே தெரியாமல் விறைப்பா இருந்தேன். அந்த காலத்திலே ஜீன்சுகள் நல்ல பெக்கி என்ற படியால் நடுங்கினது வெளியிலே தெரியல. கதவை தட்டி போட்டு ஒரு பெடியன் இரண்டு பேருக்கும் பிளேன் ரீ வைச்சிட்டு போனான். இதுவரைக்கும் இயக்க பேசுக்கு அடி வாங்க தான் போயிருக்கிறேன். முதன் முதலாக கதிரையிலே இருத்தி ப்ளைன் ரீ குடிக்க எனக்கே பெருமையா தான் இருந்தது.

 

தம்பி யாரையாவது லவ் பண்ணுறீங்களா ..திடீர் என்று அவர் கேட்ட போது குடிச்ச ப்ளைன் ரீ எனக்கு பிரக்கடிச்சது.

 

என்னடா இது திவ்யாவை லவ் பண்ண தானே இயக்கத்துக்கே வாறன். இந்தாள் லவ் பண்ணுறியா என்று வேற கேட்குது.

 

சொல்லுவமா விடுவமா சொல்லுவமா விடுவமா ..மனம் அலை பாயுது..

 

தம்பி எதையும் மறைக்காமல் சொல்லும்.

 

இல்லை அண்ணே.. அது வந்து நான் ....ஒராளை விரும்பிறன் ஆனால் இன்னும் அவவிட்ட கேட்கவில்லை. கெதியிலெ கேட்பம் என்று இருக்கிறன் எண்டு சொன்னன்.

 

நல்லது கெதியிலெ கேளும் ஆற போடாதேயும் இல்லையெண்டால் யாரும் கொத்தி கொண்டு போய்விடுவாங்கள்  என்று பகிடி வேற விட்டார்.

 

எனக்கு அவரை பிடிச்சு போச்சு. தம்பி இப்போதைக்கு பெருசா வேலை ஒண்டும் இல்லை. ரெனிங்க்கும் எடுக்க தேவை இல்லை. நாங்கள் கூப்பிடேக்க வந்தால் போதும். உமக்கு கிடைக்கிற தகவல்களை தயாவுக்கு ஊடாக தெரியபடுத்தும். கெதியிலெ உம்மை ஒரு முக்கியமான ஆள் சந்திப்பார் என்று வெளிக்கிடேக்க ஒரு பிட் வேற போட்டார்.

 

எனக்கு வழி முழுக்க யாராக இருக்கும். யார் அந்த முக்கியமான ஆள்...

பொட்டம்மான் சந்திக்க போறாரோ....

கிர்ர்ர்ர்ர்.. என்ர  கால் விறைச்சு சைக்கிள் முன் கம்பிக்குள்ளே போட்டுது.

 

 

 

பிறகு என்ன ஊரிலே ஒரே கெத்தாக தான் திரிகிறது.

ஒரு டாங் டாங் சேட் (அதையே தோய்க்காமல் திரும்ப திரும்ப போடுறது வேற கதை), அல்லது உள்ளுக்குள்ளே போட்டிருக்கிற வெள்ளை  பனியன் தெரிகிற மாதிரி ஒரு லைட் நீல கலர்ல  மார்டின் சேட்டு, சோலாபூரி செருப்பு, லேடீஸ் சையிக்கிள் (அது தங்கசியிண்ட), பின் கரியர்ல ஒரு பையில் மட்டை. வட்ட பச்சை தொப்பி. ஊரையே சுத்தி வட்டமடிக்கிறது தான் என்ற வேலை. பெடியள் எல்லாம் மச்சான் அவன் புலனாய்வு துறையடா... என்று என்ர காது பட சொல்லும்போது பெருமையாக இருக்கும்.

 

பட்டிங் பண்ண முதலாவதா விடுவாங்கள், பில்டிங் பண்ண போகும்போது.. மச்சான் ஒரு முக்கியமான சந்திப்பு இருக்கு என்று கழண்டு போய்விடுவேன். திவ்யா என்ர தங்கச்சியிடம் கேட்டாள்... என்ன அண்ணா இயக்கத்திலே சேர்ந்திட்டார் போல என்று. ...அது எனக்கு கெத்தாக இருந்தது.

 

அடிக்கடி திவ்யாவுக்கு முன்னாலே போய் வட்டம் எல்லாம் அடிச்சேன். (செயின் கழண்டு ஒரு நாள் குப்பற விழுந்ததையும் சொல்லி தானே ஆக வேணும்).

 

எல்லாம் நல்லாத்தான் போனது.

 

எல்லாம் அந்த முக்கியமான ஆள் என்னை சந்திக்கும் வரை.

 

 

தொடரும்

Link to comment
Share on other sites

ஆமா கெதில எழுதிங்கப்பா.... நம்ம நண்டு அண்ணாவும் ஒரு கடிதம் எழுதி வைச்சிட்டு 25 வருஷமா காத்திட்டு இருக்கார் கொடுக்க உங்களுக்கு கிடைச்ச response வைச்சு தான் அவர் முடிவெடுக்க இருக்கார் :(

 

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..

 

எங்கே மீதி ...............விரை வில் தொட ரு ங்கோ............சீரியல் மாதிரி ..............நீளாமல்.

 

நிலா அக்கா. சீரியல் மாதிரி இழுக்காமல் முடிக்க தான் ஆசை. என்ன என்ர கந்தலாக போறது இஞ்சே சிலபேருக்கு சந்தோசம். அதை ஏன் நான் கெடுப்பான் என்று தான்..

 

ம்ம்...... கதையை நல்லாய் தான் கொண்டு போறியள் கெதியாய் எழுங்கோ மிச்சத்தையும்

 

நன்றி அலை அக்கா. அது நம்பருக்கு உள்ள குணம் அக்கா..

 

சிவபெருமான் கூடப் பரவாயில்லைப் போல கிடக்கு!

பக்தர்களை, அளவுக்கதிகமாகச் சோதிப்பது கிடையாது! :D

சும்மா ஆத்தில போட்டுக் குளத்தில எடுக்கிறமாதிரி, அலுவலை முடிச்சிடுவார்!

என் எதிரியின் காதலுக்குக் கூட இவ்வளவு சோதனைகள் வரக்கூடாது! :D

கதை நல்லபடியாகத் தான் போகுது! தொடருங்கள், தலிவா! :o

 

கடவுளால கூட என்ர காதலை சேர்க்க ஏலாமல் போட்டுது. உண்மையா சிவபெருமானுக்கு பாதி மேக்கப் போட்ட நிலையிலே, பொம்மர்காரன் வர  கோயிலுக்கு பின்னால இருந்த மதகுக்கு உள்ளே நான் போய் ஒளிக்க, ரோட்டால போற சனம் சொல்லுது சிவபெருமானுக்கே இந்த நிலையா என்று. :lol:  :lol: 

 

 

இரவிரவா கேவி கேவி அழுதும், அடிச்ச தழும்புகளை தடவி பார்த்தும், விக்கலும் மூக்குச்சளியும் மட்டும் தான் வந்தது, யாருமே எண்ட அறையை கூட திரும்பி பார்க்கவில்லை.

 

எனக்கும் இப்பிடி நடக்கிறது  வேறை பிரைச்சனையளுக்கு . ஒண்டும் எட்டிப்பாக்காதுகள் என்ன மனுசரப்பா :D ? உவ்வளவுக்கு உங்களை நாறப்பண்ணின கல்பனா இப்ப எங்கை :lol: ? இந்த தொடர் எழுதேக்கை ஒரு வியாதி வரும் எங்கடை பிள்ளையளுக்கு :icon_mrgreen:  . அது என்னண்டால்  , கதையை பாத்து நாலு கருத்து சொல்ல பஞ்சி .  நல்லா இருக்கு கெதீலை அடுத்ததை எழுதுங்கோ எண்டதுதான்  :lol:  :D  :icon_idea:  .

 

அதுதானே கோ.. ஒரு தொடர்கதையை விட்டு விட்டு எழுதிறது எவ்வளவு கஷ்டம். அதுவும் அதே பாணியிலே வேற வேற நாளிலே எழுதிறது எண்டால் சும்மாவா.. அந்த ட்ரெண்டை அப்படியே மெயிண்டைன் பண்ணுறது அதைவிட கஷ்டம். ஏதோ உண்மையாக நடந்தது என்ற படியால எழுத கூடிய மாதிரி இருக்கு. வாசகர்கள் புரிஞ்சுக்குவார்கள் கோ.

 

 

இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லை....சிம்பிளா அவள் தோழிடம் கொடுத்து அலுவலை முடிச்சிருக்கலாம், தோழியை எந்தவித பதட்டமுமில்லாமல் சினேகிதம் பிடிப்பது சுலபம். :D

 

உண்மையா அதுக்குள்ளே ஒரு sub கதை இருக்கு வந்தி, நண்பனின் தங்கச்சி, அது தான் திவ்யாவின் தோழி வெண்ணிலாவுக்கு  தான் ரூட் விட்டு கொண்டிருந்தனான் திவ்வியாவை காணும் வரை. இந்த அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ கொஞ்சமா. எங்கே கடிதத்தை அவளிடம் கொடுத்தால் என்ர காதல் சேராது என்று தான் நேரடியா இவளிடமே கொடுப்பம் என்று இருந்தேன். :lol: 

 

ஐயோ சிரிச்சு வயிறு நோகிறது பகலவன். நன்றாக எழுதுகிறீர்கள். :lol: :lol: :lol:

 

பகுதி 3 முழுவதும் சிரிக்காமல் வாசிக்க முடியவில்லை. :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

 

அக்கா .. எங்கட கதைக்கு அண்டைக்கு ஊரே சிரிச்சது.  ஏதோ எங்களால நாலு பயபுள்ளைகள் சிரிச்சால் எங்களுக்கு தானே பெருமை  :lol:

 

நல்லாய் இருக்கு தொடருங்கோ

 

நன்றி சஜீவன். நேரம் இருக்கும் போது நிச்சயமாக எழுதுவேன்.

 

சரி சரி நோவும் மாறீட்டுது காதலும் தேறீட்டுது மிச்சத்தை எப்ப எழுதப்போறியள் அதை முதல் சொல்லுங்கோ?

அந்தக் கறுப்பனாலை கனபேருக்கு கம்பு முறிஞ்ச பெரிய பெரிய கதையளெல்லாம் இருக்கு. :lol:

 

அக்கா என்ன  நீங்களுமா..???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இவ்வளவு காலமும் மன சுக்குள்ளே பூட்டி வைக்க முடிந்தது இவ்வள வு மனபாரத்தியும்.

வா ங்கின அ டியும் நகைசுவையும்  அந்த மாதிரி போகிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கேன் தேவையில்லாத வேலையள் நல்ல பகிடியா கதை எழுதிறியள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.