Jump to content

தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டு


Recommended Posts

வணக்கம் வாசகர்களே கள!!!!! உறவுகளே !!!!!!!

 

சிறிது இடைவெளியின் பின்பு தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டின் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன் . பலர் கருத்திடத் தவறினாலும் ,  பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைந்தது எனது முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் . அது தந்த உந்துதலினால் இரண்டாவது பாகத்தை ஆரம்பிக்கின்றேன் . இந்தத் தொடரில் உங்கள் கருத்துக்களுக்கு என்று நான் தனியாகத் திரி திறக்கவில்லை . இதிலேயே உங்கள் கருத்துக்களை தேவயற்ற அரட்டைகளைத் தவிர்த்துப் பதிந்தால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன் . வழமைபோலவே உங்கள் ஆதரவினையும் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன் .

 

நேசமுடன் கோமகன்

 

பாகம் ஒன்றிற்கு இங்கே அழுத்துங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96394

 

******************************************************************************

 

 

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி ( The Greatness of a King ,Des qualités du Roi 380- 381 )

 

படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. 381

 

படையும், செல்வமும், கூழும்,( குடிமக்கள் )அமைச்சும் , நட்பும் , அரணும் ,( கோட்டை ) என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசருள் ஆண்சிங்கம் போன்றவன்.

 

என்கருத்து:

 

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் இந்த ஆறு விசையதிலையும் ஒரு அரசு முழுமையாய் இருந்தால் தான் அது ஒழுங்கான அரசு எண்டு ஐயன் சொன்னாலும் , இந்த அரசுகளுக்கு கோமாளியள் அல்லோ ஐயா அரசர்மாராய் வாறாங்கள் . அரசரும் மண்டையுக்கை சரக்கு இருக்கிற அரசர் வந்தால்தானே அரசும் ஒழுங்காய் இருக்கும் .

 

An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings.

 

C’est un lion parmi les Rois, que celui qui est doté des six choses suivantes : armée, territoire peuplé, richesse, ministre, alliance et fortresse.

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

என்ன செய்யிறது கோமகன் பலனை எதிர்பாராமல் உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள். நிச்சயம் ஒரு நாள் பலன் கிட்டும்.

Link to comment
Share on other sites

என்ன செய்யிறது கோமகன் பலனை எதிர்பாராமல் உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள். நிச்சயம் ஒரு நாள் பலன் கிட்டும்.

 

முதல் பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றீர்கள் . உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் மயூரன்  :)  :)  .

Link to comment
Share on other sites

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்குஇயல்பு. 382

மனவுறுதி , கொடை , அறிவு , ஊக்கம் எனப்படும் நான்கு சிறிதும் குறையாதிருத்தாலே அரசர்க்கு இயல்பாகும் .

என்கருத்து:

ஐயன் நீங்கள் சொல்லுறியள் நெஞ்சிலை துணிவும் , சனத்துக்கு தேவையான உதவியளை செய்யிறது , வாற பிரச்சனையளை முதலே அறியிற புத்தி , ஆபத்து வந்தாலும் அதைக்கண்டு பயப்பிடாமல் முன்னுக்கு வைச்ச காலை பின்னுக்கு வைக்காமல் முன்னேறிற குணமெல்லாம் , எங்கடை தம்பிக்கு இருந்திது . ஆனால் நீங்கள் முதல் குறளிலை சொன்ன " துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு " எண்ட நசலைப் பாவிச்சுதான் ஐயா கவிட்டாங்கள் .

 

Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermore.


Voici les quatre qualités naturelles du Roi : vaillance, libéralité, sagesse et énergie.

Link to comment
Share on other sites

தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. 383

 

நாட்டை ஆளும் அரசனுக்கு ஒரு செயலைச் செய்வதில் காலம் தாழ்த்தாமை. கல்வி , துணிவு ஆகிய மூன்றும் எப்போதும் நீங்காமல் இயல்பாக இருத்தல் வேண்டும் .

 

என்கருத்து:

 

இப்பிடியான அரசர்களை நானுந்தான் தேடிறன் , கிடைச்சால்தானே ? இப்பத்தையான் அரசர்மார் லெக்சன் நேரத்தில மட்டும்தான் சனத்திட்டை வருவினம் . தாங்கள் போட்ட காசுகளை வளக்கிற அலுவலுகளை தங்கடை ஆட்சிக்காலத்திலை பாத்துக்கொள்ளுவினம் ஐயன் .

 

A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belong.


Trois vertus sont inhérentes à ceux qui gouvernent terre : l’activité, l’instruction et la décision.

Link to comment
Share on other sites

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையதுஅரசு. 384

 

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி ,வீரத்தில் குறைவுபடாது மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான் .

 

என்கருத்து:

 

இண்டையான் திகதியிலை இந்த மூண்டுக்கும் எதிராய் நடக்கிற அரசர்மார்தான் ஐயன் சீவிக்கினம் . அவைக்குத் தான் சனமும் சப்போர்ட் பண்ணிது . லெக்சன் நேரத்திலை இப்பிடியான அரசர்மார் இல்லாதபொல்லாத பொய்யளைச் சொல்லி சனங்களை செம்மறிக்கூட்டங்களாய்தான் நடத்துவினம் .

 

Kingship, in virtue failing not, all vice restrains, In courage failing not, it honour's grace maintains.


Ne pas faillir à la vertu, abolir ce qui n’est pas vertueux, garder l’honneur en ne manquant jamais aux lois de la bravoure : voilà le propre du Roi.

 

Link to comment
Share on other sites

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லதுஅரசு. 385

 

பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும் , வரும் பொருளைச் சேமித்தலும் , பாதுகாத்தலிலும் தக்க வழியில் செலவிடுதலிலும் வல்லதே அரசே .

 

என்கருத்து:

 

இதிலை இப்பத்தையான் அரசர்மார் முதல் ரெண்டையும் வலுகிளீனாய் செய்யினம் . ஆனால் மூண்டாவதை மட்டும் தங்களுக்குத்தான் செய்யினம் . குடிமக்கள் எப்பிடிபோனாலும் இவைக்கு கவலை இல்லை பாருங்கோ .

 

A king is he who treasure gains, stores up, defends, And duly for his kingdom's weal expends.


Celui qui a le pouvoir de développer les moyens des revenues, de les thésauriser, de les préserver et des les dépenser dignement est le Roi.

 

Link to comment
Share on other sites

காட்சிக்குஎளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். 386

 

அரசன் தன்னைக் காண வருபவர்க்கு எளியனாகவும் , கடுஞ்சொல் பேசாதவனாகவும் இருப்பானாயின் அவன் நாட்டை உலகத்தார் உயர்த்திப் புகழ்வர் .

 

என்கருத்து:

 

இதுக்கு எதிர்மாறாய் இருக்கிற அரசைத்தான் ஐயன் இண்டைக்கு உலகம் புகழிது . நாங்களும் நீதி கேக்கிறம் . எங்களுக்கு நடந்த அனியாயம் உலகத்துக்கே தெரியும் . ஆனால் உலகமோ அல்லது இந்த அரசர்மாரோ நீங்கள் சொன்னபடியோ நடக்கீனம் ??

 

Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swells.


 

Si le roi est d’un abord facile et s’il n’use pas de paroles dures,
son royaume sera considéré parmi tous les autres.

Link to comment
Share on other sites

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டு அனைத்துஇவ் உலகு. 387

 

இனிமையான சொல்லோடு துன்புறுவோர்க்கு வேண்டியதைக் கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசன் தன் மனதில் கருதியவாறே உலகமும் அமையும் .

 

என்கருத்து:

 

சரி ஐயன்........ தமிழருக்கு துன்பங்கள் இண்டைக்கு நேற்றைக்கு வரேலை . எங்கடை பரம்பரையே அழிஞ்சிது . ஒரு நல்ல சொல்லையோ , எங்கடை துன்பத்துக்கோ எந்த சிங்க அரசர்களும் செய்யேலை . எப்பிடி ஐயா அவைக்கு நினைச்ச மாதிரி உலகம் அமைஞ்சுது ??

 

With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his command.


Si le Roi a le pouvoir de donner avec des paroles gracieuses et de protéger (ses sujets), ce monde est rempli de sa gloire et il obtient tous les Biens qu’il souhaite.

Link to comment
Share on other sites

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும். 388

 

நீதி செலுத்தி பகைவர் வருந்தாமல் பாதுகாத்து வரும் மன்னன் மக்களால் கடவுள் என்று சிறப்பித்து மதிக்கப்படுவான் .

 

என்கருத்து:

 

இந்த நீதி வழங்கிறதுக்கும் ,அரசுக்கும் எட்டில வியாழன் கண்டியளோ . றோட்டிலை பஸ்சில பெண்பிரசுகள் போகேலாது . கொலையை செய்யிறவன் , சனங்களிட்டை காசுகளை ஆட்டையை போடிறவன் ராசாவாய் திரியிறான். அப்பாவியள் பேருக்கு சிறையிலை இருக்கிதுகள் . ஒருகாலத்தில நீங்கள் சொன்ன இலக்கணங்களோடை ஒரு அரசர் இருந்தவர் . எல்லாரும் சேந்து அவரையும் போட்டுத்தள்ளியாச்சு . நீங்கள் சொல்லிற சனத்தால கடவுள் எண்டு சொல்லிற அரசர்மார் ஒருத்தரும் இப்ப இல்லை .

 

Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people reigns.


Le Roi qui’ en leur rendant la justice, protège (ses sujets) est considéré comme Dieu par les hommes.

Link to comment
Share on other sites

செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389

 

அமைச்சர் முதலியோர் கூறும் உறுதிப் பொருள்கள் வெறுப்பாயிருந்தாலும் அவற்றின் பயன் கருதி அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் நற்பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகமே தங்கும் .

 

என்கருத்து:

 

இப்பிடியான அரசுகளையும் அரசர்களையும் மியூசியத்திலை தேடினாலும் கிடைக்காது கண்டியளோ . ஈராக்குக்கு மேலை படையெடுக்காதையெண்டு எல்லாரும் தலைகீழாய் நிண்டாங்கள் . கேட்டாரோ அமெரிக்க அரசர் . இவரோடை லண்டன் சிங்சாக் வேறை . ரெண்டு கள்ளரும் ஈராக்கை ஆட்டையைப் போட்டதுதான் மிச்சம் .

 

The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure.


Le monde restera (d’une façon permanente) sous l’ombrelle du Roi,
qui a la force de supporter les paroles (de son ministre) qui blessent les oreilles.

Link to comment
Share on other sites

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி. 390

 

கொடையும் , இரக்க குணமும் , நீதி தவறாமையும் , ஏழ்மையான மக்களைக் காத்தலும் ஆகிய நான்கையும் உடைய வேந்தன் வேந்தர்க்கெல்லாம் ஒளிமிக்க விளக்காவான் .

 

என்கருத்து:

 

இப்பிடியான வேந்தருகளுக்கு இந்தக்காலத்திலை மதிப்பு இல்லை ஐயன் . மொள்ளைமாரியளுக்கும் முடிச்சவிக்கியளுக்கும் தான் ஐயன் காலம் . நீங்கள் சொன்ன இலக்கணங்களோடை ஒரு வேந்தர் இருந்தவர்தான் . ஆனால் நல்லவனை எல்லா மொள்ளைமாரியளும் சேந்து சீவிக்கவிடமாட்டாங்கள் , போட்டுத்தள்ளிப்போட்டாங்கள் .

 

Gifts, grace, right sceptre, care of people's weal; These four a light of dreaded kings reveal.


Le Roi qui a ces quatre qualités: faire des libéralités, accueillir avec grâce, appliquer équitablement les lois et recouvrer l’impôt suivant la capacité contributive du contribuable, est une lumière parmi les Rois.

Link to comment
Share on other sites

                பொருட்பால் - அரசியல் - கல்வி ( Learning , De l’Instruction.  )

 

கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 391

 

ஒருவன் கற்றற்குரிய நூல்களை ஐயம் திரிபு ஆகிய குற்றங்கள் நீங்கக் கற்கவேண்டும் அங்கனம் கற்றபிறகு அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுக வேண்டும்

 

எனது கருத்து :

 

ஐயா ஒருத்தன் எல்லா காலத்திலையும் படிக்கிறான் . ஒரு காலத்திலை பூமி தட்டை எண்டு அவன் படிச்ச கல்வி சொல்லீச்சுது . கொஞ்சக்காலம் போக இல்லை பூமி உறுண்டை எண்டு அதே கல்வி சொல்லீச்சுது . அப்பிடி பாத்தால் கல்வி கற்றல் எண்டதே மாறுகின்ற விசையம்தானே ?? இந்த கல்வியில் " ஏன் " " எப்பிடி" எண்ட கேள்வியள் வந்ததாலைதானே இண்டைக்கு இவ்வளவு தூரத்துக்கு முன்னேறினம் .

 

So learn that you may full and faultless learning gain,

Then in obedience meet to lessons learnt remain.

Etudiez (les ouvrages). Etudiez-les de maniêre à détruire les doutes injustes. A près les avoir étudiés, conformez votre conduite à leur doctrine.

 

Link to comment
Share on other sites

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.. 392

எண் என்று சொல்லப்படுவனவும் , எழுத்து என்று சொல்லப்படுவனவுமாகிய இரண்டினையும் மக்கள் உயிர்க்குக் கண்கள் என்பர் கற்றறிந்த பெரியோர்கள் .

எனது கருத்து :

ஐயா நீங்கள் சொல்லுஇறது சரிதான் . ஆனால் ஒருத்தன் எண்ணையும் எழுத்தையும் படிச்சால மட்டும் காணாது , வாழ்கையிலை அனுபவம் எண்டதையும் படிக்கவேணும் . இல்லாட்டில் அவனினரை எண்ணும் எழுத்தும் ஏட்டு சுரக்காயா போடும் .

 

The twain that lore of numbers and of letters give

Are eyes, the wise declare, to all on earth that live.

Ce qu’on appelle nombre et lettre: tous les deux sont les yeux du genre humain.



 

Link to comment
Share on other sites

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். 393

கல்வி கற்றாரே உண்மையில் கண்களையுடையவர்கள் என்று உயர்த்திச் சொல்லப்படுவர் . கல்லாதவர்கள் முகத்தில் புண்கள் இரண்டு உடையவராக இழித்துக் கூறப்படவர் .

எனது கருத்து :

இதிலை கற்றவர் எண்டால் ஆர் ??? படிச்சு பட்டம் எடுதவன் கற்றவனா ?? அப்பிடி பாத்தால் இந்தக்குறள் சொல்லிற கருத்து பக்கசார்பாய் இருக்கு . இண்டைக்கு படிச்சு பட்டம் பெற்றவை எல்லாம் " அனுபவம் " எண்ட கல்வி இல்லாமல் படிச்ச கோமாளியளாய் இருக்கினம் . வாழக்கை அனுபவத்தாலை படிச்ச கல்விமான்கள் எவ்வளவோ பேரை சரித்திரம் கண்டிருக்கு . அப்ப அவையும் இந்த குறளின்படி இரண்டு புண்களை கொண்டவையோ ??

 

Men who learning gain have eyes, men say ;

Blockheads' faces pairs of sores display.

 

Ceux qui l’on dit avoir des yeux, sont les hommes instruits;
ceux qui ne sont pas instruits ont deux plaies au visage.

 

Link to comment
Share on other sites

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். 394

 

பலரும் மகிழுமாறு அவர்களுடன் கூடிப்பழகி , பின்னர் இவரை இனி எப்போது காண்போமோ என்று அவர்கள் எண்ணி ஏங்குமாறு அவர்களை விட்டுப் பிரிதலே கற்றறிந்த புலவர் தொழிலாகும்.

 

எனது கருத்து :

 

இண்டைக்கு படிச்சவை சந்திச்சால் " போத்தில் " அதிலை கட்டாயம் இருக்கும் . இல்லாட்டில் அது அவைக்கு மரியாதைக் குறைச்சல் . முதலிலை பம்பலாத்தான் போகும் பேந்து போகப் போக சுதி ஏற படிச்சவை தலைகீழாய் நிண்டு ஏன்ரா சந்திச்சம் எண்ட அளவுக்கு போகும் . என்னை பொறுத்தவரையிலை மற்றவனை சந்தோசப்படுத்த படிப்பு தேள்வையில்லை . மனுசனை மனுசன் மதிக்கிற குணம் இருந்தாலே காணும் .

 

You meet with joy, with pleasant thought you part; Such is the learned scholar's wonderous art!

 

La conduite des hommes instruits a le don de rejouir tous ceux qui les approchant et d’attrister tous ceux qui prennent congé d’eux.

 

Link to comment
Share on other sites

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். 395

 

செல்வர் முன்பு வறியவர் ஏங்கி நின்று யாசித்தல் போலக் கல்வி உடையவர் முன்பு வணக்கத்தோடு பணிந்து நின்று கற்பவர்களே உயர்ந்தவராவர் . அவ்வாறு கல்லாதவர் தாழ்ந்தவரேயாவர்.

 

எனது கருத்து :

 

ஒரு பணக்காறனுக்கு முன்னாலை ஒரு கஸ்ரப்ட்டவன் எப்பிடி கூனிக்குறுகி நிக்கிறானோ , அதுமாதிரி தன்ரை ஆசிரியரிட்டை பணிவோடை கற்றவைதானாம் உயர்ந்தவை . அப்பிடி படிக்காதவை கல்லாதவை எண்டு நீங்கள் சொன்னாலும் , இண்டைக்கு ஆர் வாத்திமாரை மதிக்கினம் ?? வாத்திமாரை இண்டைக்கு கொமடி பீசாக்கி போட்டாங்கள் பிள்ளையள் .

 

With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place.

 

Les hommes instruits se tiennent devant les possédants comme des pauvres, dans la même attitude humble (qu’ils ont eue devant leur Maître) tandis que ceux qui ne sont pas instruits (parce qu’ils ont eu honte d’observer une telle attitude) sont les derniers des hommes.

Link to comment
Share on other sites

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்குக்
கற்றனைத்துஊறும் அறிவு. 396

 

மணற்பங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர் , தோண்டும் அளவுக்கு ஏற்பச் சுரக்கும் . அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும் .

 

எனது கருத்து :

 

எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் , சட்டியிலை இருக்கிறதுதான் அகப்பையிலை வருமெண்டு . இதைமாதிரித்தான் ஒருத்தன் எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறானோ அவ்வளவுக்கு அறிவிலை உயருவான் .

 

In sandy soil, when deep you delve, you reach the springs below;

The more you learn, the freer streams of wisdom flow.

 

La source jaillit dans le sable dans la mesure, où celui-ci est creusé; la connaissance jaillit chez les hommes, dans la mesure où ils ont étudié.

Link to comment
Share on other sites

யாதானும் நாடாமால், ஊர்ஆமால் ,என்ஒருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. 397

கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகும் ; எந்த ஊரும் சொந்த ஊராகும் . அப்படியிருக்க ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமல் இருப்பது எதனால் ?

எனது கருத்து :

நல்ல கேள்வி ஐயன் . ஒருத்தன் படிக்காமல் விடுகிறதுக்கு எக்கச்சக்கம் காரணங்கள் இருக்கு . சில இடங்களில சாதி , கன இடங்களில படிக்க காசு இல்லை , அதுகளையும் தாண்டி இந்தக்காலத்திலை படிச்சால் நிறபேதம் எண்ட விசையத்தாலை ஒருத்தனை தரம் பிரிக்கிற அலுவலும் நடக்கிது . என்னைக்கேட்டால் வாழ்க்கையைப் படிச்சவன் உலகத்திலை எந்த மூலையிலையும் வெட்டி ஆடுவான் .

 

The learned make each land their own, in every city find a home;

Who, till they die; learn nought, along what weary ways they roam!

Pour l’hommes instruit, un pays quelconque est le sien; une ville quelconque est la sienne. Pourquoi donc ne pas s’instruire jusqu’à la mort.

 

Link to comment
Share on other sites

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. 398


ஒருத்தனுக்கு அவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவியோடு போகாது . ஏழு பிறவிகளிலும் தொடர்ந்து சென்று உதவும் இயல்பு உடையதாகும் .

எனது கருத்து :

உங்கடை கதைப்படிபாத்தால் ஒருத்தன் படிச்சால் அவன்ரை சந்ததியளும் படிச்சு அறிவாளியாகும் எண்டு . அது எத்தினை சதவீதம் ஐயன் ? பாட்டன் அப்பன் பெரிய படிச்சவங்களாய் இருப்பாங்கள் . பேரப்பெடி தலைகீழாய் நிக்கும் . அதின்ரை பெடி வேறை வழியாலை நிக்கும் . இதை ஏன் சொல்லிறன் எண்டால் ஒருத்தன்றை கல்வி அறிவை அவனின்றை சுற்றம் சூழல்தான் முடிவு செய்யும் .

 

The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains.

 

L’instruction reçue dans une existence a l’avantage de servir à l’homme pendant ses sept naissances.

 

Link to comment
Share on other sites

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காம்உறுவர் கற்றறிந் தார். 399

 

கற்றறிந்தவர் தாம் இன்பமடையக் காரணமாகிய கல்வியால் , உலகத்தினரும் இன்பமடையும் சிறப்பைக் கருதி அக் கல்வியை மேலும் விரும்பிக் கற்பர் .

 

எனது கருத்து :

 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எண்டு பெரிசுகள் தெரிஞ்சுதான் சொல்லியிருக்கினம் . படிக்கிறது நல்ல விசையம்தான் . ஆனால் வாழ்க்கை முழுக்க படிச்சுக் கொண்டிருந்தால் எப்ப வேலை செய்யிறது ?? தொடர்ந்து படிச்சு கொண்டிருந்தா வேலையில்லாத பிரச்சனையள் வராதோ ஐயன் ??

 

Their joy is joy of all the world, they see; thus more The learners learn to love their cherished lore.


Le hommes instruits se délectant à l’étude et constatent que le monde s’y délecte également: aussi désirent-ils s’instruire davantage.

 

Link to comment
Share on other sites

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. 400

 

ஒருத்தனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். ஏனைய மணி , பொன் முதலிய செல்வங்கள் அழியக்கூடியன ஆதலால் அவை செல்வங்கள் ஆகா

 

எனது கருத்து :

 

நீங்கள் சொல்லிறது நூறுவீதம் ஞாயம் எண்டாலும் , இண்டைக்கு காசு எண்டிற அழியிற செல்வம்தான் , அழியாத கல்வியை கட்டி அவுக்கிது . எல்லாரும் காசு உழைக்கவேணும் எண்டிறதுக்காக கல்வி எண்ட சாமானை புறோக்கறாய் வைச்சிருக்கிறாங்கள் ஐயன் . இது கொஞ்சம் குழப்பமாய் இருந்தாலும் இண்டைக்கு அதுதான் உண்மை .

 

Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy.


La richesse glorieuse et impérissable d’un homme est l’instruction;
tous les autres Biens ne sont pas biens.

 

Link to comment
Share on other sites

பொருட்பால் - அரசியல் -கல்லாமை (  Ignorance , Du Défaut d'Instruction. )

 

 

அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல். 401

 

நிரம்பிய நூல் அறிவு இல்லாமல் ஒருவன் அறிவுடையோர் சபையில் சென்று பேசுதல், அரங்கம் இல்லாமல் வட்டாடுதல் போன்றதற்கு ஒப்பாகும்.

 

எனது கருத்து:

 

இதைத்தான் ஆழம் அறிஞ்சு காலை விடவேணும் எண்டு சொல்லுவினம் . ஒரு இடத்திலை ஒருவிசையத்தை பத்திக் கதைக்கவேணுமெண்டால் அதுசம்பந்தமய் சரியா தெரியவேணும். ஆனால் இந்த குப்பையில கிடக்கிற குண்டுமணி போலை இருக்கிற அறிவாளியளை எந்தவகையிலை சேர்க்கிறது ?? அவை எந்தப் புத்தகத்தை படிச்சவை ??

 

Like those at draughts would play without the chequered square, Men void of ample lore would counsels of the learned share.

 

Discourir dans une réunion, sans avoir une instruction pleine et entière,
c'est jouer aux dés sans damier.

Link to comment
Share on other sites

கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்றுஅற்று. 402

 

கல்லாதவன் தானும் அவையில் பேசவேண்டும் என்று விரும்புதல் , இரண்டு முலைகளும் இல்லாத ஒருத்தி பெண்மையை விரும்பியது போலாகும்

 

எனது கருத்து:

 

ஐயன் இதிலை நல்லாய் குளப்பிறர் . படிக்காதவன் படிச்ச இடத்திலை பேச ஆசைப்படுகிறது , மார்பகம் இல்லாத ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறதை போல எண்டு . ஏன் மார்பகம் இல்லாதவள் உடலுறவு கொள்ள முடியாதா ?? இது தாய்குலத்தை கேவலப்படுதிற மாதிரி இருக்கு . அதோடை பணம் எண்ட விசையம் தான் படிக்காதவனையும் படிச்சவனாக்குது ஐயன் .

 

Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words display.


Prendre plaisir à écouter les paroles d'un homme sans instruction, c'est ressembler à la femme qui, privée des deux seins, désire exercer les attributs de la femme (plaire aux hommes).

Link to comment
Share on other sites

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.403

 

கற்றவர் முன்னிலையில் ஒன்றையும் பேசாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் , கல்லாதவர்களும் நல்லவரேயாவர் .

 

எனது கருத்து:

 

இதை இப்பிடியும் சொல்லலாம் , பச்சோந்தி வேலை எண்டு . அதாவது எல்லாருக்கும் நல்லபிள்ளையாய் இருக்கிறது . ஒருத்தனுக்கு கடவுள் ஐஞ்சு புலனையும் குடுத்தது , தான் நினைச்சதை மற்றவனோடை பகிர வேணுமெண்டதுக்காக . ஒருத்தன் படிச்சவனோ இல்லையோ எண்டதை அவனை சுத்தியிருக்கிற சனம் சொல்லவேணும் .

 

Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words display.


Même, les hommes sans instruction se rendent meilleurs, en s'abstenant de parler, dans une assemblée d'hommes instruits.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.