Jump to content

தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டு


Recommended Posts

பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகை (Acting after due Consideration , Manière d'agir en connaissance de cause. 460 - 470 )

 

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 461

 

ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அச்செயலைச் செய்வதால் நன்மை, தீமைகளையும் செய்து முடித்தபின் வரும் பயன்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

எனது கருத்து:

 

சிலபேரை பாத்தியள் எண்டால் எடுத்தன் கவுட்டன் எண்டு வேலையளை செய்யிறது . பேந்து அதிலை பிரச்சனையள் வரேக்கை கிடந்து முழிக்கிறது . முதலே பிளான் பண்ணி செய்தால் எடுத்த காரியம் வெற்றிதான் .எப்பிடி அமெரிக்கா ஒரு அனியாயமான விசையத்திக்கு மற்றவையை தன்ரை பக்கம் கொண்டுவந்து ஈராக்கை அடிச்சுதோ , அப்பிடி செய்யவேணும் பாருங்கோ.

 

Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed.

 

Peser d'abord les conséquences désastreuses d'une entreprise, puis les avantages, enfin le profit qui peut résulter de ceux-ci et agir.

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல். 462

ஒருசெயலைச் செய்வதற்கு முன் அறிவுடையவரோடு கலந்து ஆராய்ந்து செய்யின் அவர்க்குப் பெறுவதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.

எனது கருத்து:


ஐயா எல்லாம் பக்காவாய் பிளான்பண்ணி நாலைஞ்சு கூட்டோடை கூட்டுவைச்சு ஒரு வேலையை செய்தாலும், காலமும் கைகுடுத்தால்தான் எந்த செயலையும் செய்யலாம். இல்லாட்டில் கஸ்ரம் பாருங்கோ.

 

With chosen friends deliberate; next use the private thought;

Then act. By those who thus proceed all works with ease are wrought.

U n'y a pas de bien rare que ne puisse obtenir (le Roi) qui agit, après eu avoir délibéré avec son conseil choisi et après y avoir réfléchi lui-même, en particulier.

Link to comment
Share on other sites

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். 463


பின்னே கிடைக்கக் கூடிய இலாபத்தை எதிர்நோக்கி மூலதனத்தை இழந்துவிடும் காரியத்தை அறிவுடையோர் மேற்கொள்ளார்.

எனது கருத்து:


ஐயன் நீங்கள் சொன்னது உங்கடை காலத்திலை சரியாய் இருக்கலாம் . ஆனால், இப்பபாருங்கோ எல்லா வியாபாரியளும் இருக்கிற சாமானுகளை அழியப்பண்ணிறதுக்கு " ஒண்டு எடுத்தால் மற்றது பிறீ " . இதுதான் அவையின்ரை வேலை . அப்ப இவையெல்லாம் அறிவில்லாத ஆக்களோ ???


To risk one's all and lose, aiming at added gain,

Is rash affair, from which the wise abstain.

Les hommes intelligents ne s'engagent pas, en escomptant un profit éventuel, dans une entreprise qui peut faire perdre le capital actuel.

Link to comment
Share on other sites

தெளிவில் அதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். 464

 

தமக்கு இழிவாகிய குற்றம் உண்டாதலைக் கண்டு அஞ்சுகின்றவர்கள், தெளிவில்லாத செயல்களைச் செய்யத் துணிய மாட்டார்கள்.

 

எனது கருத்து:

 

நெஞ்சில ஈரமும் மனச்சாட்சிக்குப் பயப்பிட்டவனும் சோலி சுறட்டுகளுக்கு போகமாட்டாங்கள் .அப்ப ஏன் மகிந்தாவும் அவனின்ரை கூட்டாளியளும் எங்களுக்கு இவ்வளவையும் செய்தாங்கள் எண்டால் , அவங்களிட்டை அரக்க குணம்தான் கிடந்திது.

 

A work of which the issue is not clear,

Begin not they reproachful scorn who fear.

 

Ceux qui craignent le ridicule ne commencent pas d'agir,
sans une mûre délibération préalable.

 

Link to comment
Share on other sites

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதுஓர் ஆறு. 465

 

நனகு ஆராய்ந்து பாராமல் ஆரம்பிப்பது, பகைவரை வளர்க்கும் வழியாகும் .

 

எனது கருத்து:

 

சிலபேரை பாத்தியள் எண்டால் " கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு திரிவினம் " . இவையளாலை ஒருசதத்துக்கும் பிரையோசனமில்லை . ஒருத்தன் இப்பிடியே போனானல் அவினின்ரை பங்காளியிள் வலு சிம்பிளாய் அவனுக்கு பெட்டி கட்டி அடிப்பினம் பாருங்கோ .

 

With plans not well matured to rise against your foe,

Is way to plant him out where he is sure to grow!

 

Partir en guerre, sans avoir minutieusement pesé et arrêté en détail, tous les moyens est une voie de fortifier l'ennemi sur un terrain soigneusement préparé.

Link to comment
Share on other sites

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். 466

 

ஒருவன் தனது நிலமைக்குத் தகாத செயல்களைச் செய்தாலும், செய்யத்தக்க செயல்களைச் செய்யாது விடுவதாலும் கேடு அடைவான் .

 

எனது கருத்து:

 

ஒருத்தன் செய்யிற நேரத்திலை செய்யாமல் விடுகிறதாலை பெரிய அழிவு வரும். இதை எங்கடை இனம் வகைதொகையாய் அழிஞ்சதை சொல்லலாம் . அதேமாதிரி ஒருத்தன் என்ன செய்யக்கூடாதோ அதை செய்யிறிதாலையும் அழிவுதான் . எப்படியெண்டால் மகிந்து குறூப் மாதிரி இப்ப நித்திரையில்லாமல் ஓடித்திரியிறான் .

 

'Tis ruin if man do an unbefitting thing;

Fit things to leave undone will equal ruin bring.

 

(Le Roi) se perd en faisant ce qu'il ne doit pas faire; il se perd également, en ne faisant pas ce qu'il doit faire.

 

Link to comment
Share on other sites

எண்ணித் துணிக கருமம் ;துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 467

 

செய்யத் தொடங்கும் எச்செயலையும் நன்கு ஆராய்ந்தே தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கிய பின்பு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும்.

 

எனது கருத்து:

 

சிலபேரைப் பாத்தியள் எண்டால் ஏகாந்தம் ஏணாட்டத்திலை வேலை செய்யத் தொடங்குவினம். கடைசியிலை பாத்தால் அவை செய்யிற வேலையள் ஒண்டும் உருப்படாது . இதைத்தான் பெரிசுகள் "எண்ணித் துணிக கருமம்" எண்டு திருத்திச் சொல்லியிருக்கினம் .

 

Think, and then dare the deed! Who cry,

'Deed dared, we'll think,' disgraced shall be.

 

Que l'on entreprenne une action, après avoir réfléchi aux moyens de la faire aboutir Commencer d'abord, et réfléchir ensuite sont une faute.

 

Link to comment
Share on other sites

ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். 668

 

தகுந்த வழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக இருந்து காத்தாலும் முடியாமல் தவறிவிடும்.

 

எனது கருத்து:

 

இதைத்தான் பெரிசுகள் இப்பிடிச் சொல்லுவினம் . " ஊர்கூடித் தேர் இழுத்தாலும் , முட்டி போடிறவன் ஒழுங்காய் முட்டி போடாட்டில் தேர் இருப்புக்கு வராது " எண்டு . இதிலை அவை முட்டி போடிறது எண்டு சொல்லிறது திட்டம் போடிறதை கண்டியளோ .

 

On no right system if man toil and strive,

Though many men assist, no work can thrive.

 

L'effort fait. sans avoir réfléchi au moyen de mener une entreprise à bonne fin, est perdu même si plusieurs viennent en aide.

 

Link to comment
Share on other sites

நன்றுஆற் றல்உள்ளும் தவுறுஉண்டு அவர்அவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை. 669

 

ஒருவர்க்கு நன்மை செய்யும் போதும் அவரவர் இயல்பறிந்து பொருத்தமாகச் செய்ய வேண்டும். இயல்பு அறியாமல் செய்தால் குற்றம் உண்டாகும்.

 

எனது கருத்து:

 

ஒருத்தனுக்கு நாங்கள் உதவி செய்ய வெளிக்கிட்டால் முதல் அவனின்ரை குணம் குறையளை வடிவாய் யோசிச்சுத் தன் உதவி ஒத்தாசையள் செய்ய வெளிக்கிடவேணும் . இல்லாட்டில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கணக்காய் போடும் பாருங்கோ .

 

Though well the work be done, yet one mistake is made,

To habitudes of various men when no regard is paid.

 

Le Bien que l'on fait à autrui peut mal tourner, si l'on n'agit pas conforménent à son secret penchant.

Link to comment
Share on other sites

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும், தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. 470

 

அரசர் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வார் ஆயின், உயர்ந்தோர் அவரை இகழ்வர் . ஆதலால் உயர்ந்தோர் இகழாத வகையில் நல்லவனவற்றையே ஆராய்ந்து செய்தல் வேண்டும் .


எனது கருத்து:


சரி இப்பிடி சொல்லுறியள் ஐயன் . இந்த மகிந்தா வந்து மக்களாலை தானே , ஒண்டில்லை ரெண்டாம் முறையும் ஜனாதிபதியா வந்திருக்கிறான் ?? உலகமும் பாத்துக் கொண்டுதானே ஐய்யன் இருந்தது . இந்தக் காலத்த்திலை நேர்மைக்கு காலம் இல்லை . சும்மா கடுப்படியாதையுங்கோ ஐயன் .

 

Plan and perform no work that others may despise;

What misbeseems a king the world will not approve as wise.

Le monde blâme les mesures que l'on prend et qui sont incompatibles avec sa position. Qu'on recherche les mesures qui. soient à l'abri du blâme et qu'on agisse ensuite.

 

 

Link to comment
Share on other sites

பொருட்பால் - அரசியல் - வலி அறிதல் ( The Knowledge of Power , Discernement de la force. 471 - 480 )

 

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். 471

 

செயலின் வலிமையையும் , தன் வலிமையையும் , பகைவனின் வலிமையையும் , துணை செய்பவர்களின் வலிமையையும் நன்கு ஆராய்ந்து அச்செயலைச் செய்யவேண்டும் .

 

என்கருத்து:

 

இந்த பெரிசுகளைப் பாத்தியள் எண்டால் எப்பவும் சொல்லுவினம் " எதுக்கும் நாலுவளத்தாலையும் யோசிச்சு செய்யுங்கோடாப்பா எண்டு " . அது இப்பத்தான் எனக்கு விழங்குது .

 

The force the strife demands, the force he owns, the force of foes,

The force of friends; these should he weigh ere to the war he goes.

 

Considérer d'abord les difficultés de l'entreprise, peser ses propres forces, celles de, l'ennemi et celles des alliés ; agir ensuite.

Link to comment
Share on other sites

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். 472

 

தன் சக்தியால் என்ன செய்யமுடியும் என்பதையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்து செயல்பாட்டில் தளராமல் இருந்து முயல்கிறவர்களுக்கு முடியாத பொருள் எதுவும் இல்லை.

 

என்கருத்து:

 

எண்ணிய காரியம் சிதறாது எண்டு சொல்லுவினம் . ஆனால் ஒருத்தன் என்னதான் ஆள்ளணியள் துணையோடை பக்காவாய் ஒரு பிளானைப் போட்டு செய்தாலும் , அவனுக்குமேலை விதி எண்ட ஒண்டு இருக்கல்லோ ஐயன் ???இப்ப பெரிய பெரிய சர்வாதிகாரியளின்ரை முடிவுகளை பாத்தாலே தெரியுதே .

 

Who know what can be wrought, with knowledge of the means, on this,

Their mind firm set, go forth, nought goes with them amiss.

 

II n'y a pas de succès impossible à ceux qui savent ce qu'ils peuvent faire, qui calculent pour cela leurs forces, qui mûrissent leur projet, y persistent et qui agissent seulement ensuite.

 

Link to comment
Share on other sites

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். 473

 

தனது வலியின் அளவை அறியாமல், மன எழுச்சியால் போரைத் தொடக்கி வினையை முடிக்க இயலாமல் அழிவடைந்த அரசர் பலர் ஆவர் .

 

என்கருத்து:

 

இதை பெரிசுகள் விசும்புக்கு வேட்டையாடுறது எண்டு சொல்லுவினம் . தங்கடை தகுதிதராதரம் தெரியாமல் ஒரு அலுவலை தொடங்கி போட்டு தாங்கள் தோக்கப்போகினம் எண்டு தெரிஞ்சாலும் தோக்காதமாதிரி நடிப்பினம் .

 

Ill-deeming of their proper powers, have many monarchs striven,

And midmost of unequal conflict fallen asunder riven.

 

Nombreux ont été ceux qui, sans se rendre très bien compte de leur capacité de chef, ont attaqué par présomption et qui ont été vaincus au milieu (de l'action).

Link to comment
Share on other sites

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். 474

 

அயல் வேந்தரோடு சமாதானம் செய்து கொள்ளாமல் தன் வலிமையையும் அறியாமல் தற்பெருமை கொள்ளும் அரசன் , விரைவில் அழிந்து விடுவான் .

 

என்கருத்து:

 

இந்தக்குறளைப் பாக்க எனக்கு சதாமின்ரை ஞாபகம் வருகிது . ஏனெண்டால் தன்ரை ஒறிஜினல் பவறை தெரியாமல் மற்றவனோடை சேந்து நடக்கமால் , தன்னைபத்தி கெப்பராய் பப்படாக் கதையள் கதைச்சுக் கொண்டு திரிஞ்சவர் . கடைசியிலை பங்கருக்குள்ளை சீவியம் நடத்தி தூங்கி சாகவேண்டி வந்திது .

 

Who not agrees with those around, no moderation knows,

In self-applause indulging, swift to ruin goes.

 

(Le Roi) qui sans vivre en bonne harmonie avec ses voisins et sans connaître ses propres forces, est seulement plein de lui-même pour encourir leur haine, consomme promptement sa ruine.

 

Link to comment
Share on other sites

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். 475

 

மிக மென்மையான பொருளான மயில் இறகாக இருந்தாலும் வண்டியில் அளவுக்கு மேல் ஏற்றினால் ,வண்டியின் அச்சு முறிந்துவிடும் .

 

என்கருத்து:

 

என்னதான் ஒருத்தர் இலட்சிய பயணத்தில் முழு மூச்சாய் இருந்தாலும் ,அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சேருகின்ற வேலை பழுக்கள் கடைசியிலை அவரையே முடிச்சு போடும் .

 

With peacock feathers light, you load the wain;

Yet, heaped too high, the axle snaps in twain.

 

L'essieu de la charrette, même chargée de plumes de paon, se brisa si le fardeau est plus lourd qu'il ne peut supporter.

 

Link to comment
Share on other sites

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஉறுதி ஆகி விடும். 476

 

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறி நின்றவர் அந்த அளவையும் கடந்து , மேலும் செல்ல முயல்வாராயின் அம்முயற்சி அவர் உயிருக்கு அழிவைத் தந்து விடும்.

 

என்கருத்து:

 

இதைத்தான் பெரிசுகள் பப்பாவிலை ஏத்தி கவிண்டு கொட்டுண்ட கதை எண்டு சொல்லுவினம் . தன்ரை ஏறுபட்டி தளநார் தெரியாமல் , ஓவர் பில்டப்பிலை போய் கடைசியிலை அட்ரஸ்சே தெரியாமல் போனவை கனபேர் கண்டியளோ .

 

Who daring climbs, and would himself upraise

Beyond the branch's tip, with life the forfeit pays.

 

L'effort fait par ceux qui sont montés sur la cime d'un arbre, pour monter encore plus haut, amène la fin de leur vie.

 

Link to comment
Share on other sites

ஆற்றின் அளவுஅறிந்து ஈக; அப்பொருள்
போற்றி வழங்கும் நெறி. 477

 

தமக்குள்ள வருவாயின் அளவை அறிந்து அதற்கேற்ப கொடுக்கவேண்டும். அங்கனம் ஈவது செல்வத்தைப் பாதுகாக்கும் வழியாகும் .

 

என்கருத்து:

 

ஆத்திலை போட்டாலும் அளவு அறிந்து போடவேணும் எண்டு ஒரு சொலவடை இருக்கு . இல்லாட்டில் இருக்கிற முதலும் இல்லாமல் போய் நடுறோட்டிலைதான் நிக்கவேணும் . ஆனால் இப்ப வெறும் விலாசத்துக்கு காசுபணம் இல்லாட்டிலும் கடன் எடுத்தெண்டாலாவது தறுமம் செய்யிற கோஸ்ரியள்தான் இப்ப கூட .

 

With knowledge of the measure due, as virtue bids you give!

That is the way to guard your wealth, and seemly live.

 

Que celui qui fait la charité, donne en connaissance du quantum de ses Biens: c'est le moyen de. les conserver et d'en user.

Link to comment
Share on other sites

ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக் கடை. 478

 

ஒருவனுக்கு பொருள் வரும் வழியின் அளவு சிறியதாக இருந்தாலும், செலவு பெரிதாகத போது அதனால் அவனுக்கு கேடு உண்டாகாது.

 

என்கருத்து:

 

இண்டையான் நிலமையில புலத்திலை பிச்சை எடுத்தாலும் தாயகத்திலை பண்ணையாராய் தங்களை காட்டிக் கொள்ளுறதிலை சில கோஸ்ரியளுக்கு அற்ப சந்தோசம் பாருங்கோ . ஆனால் இவையளைப் பாத்தியள் எண்டால் தங்கடை நாலைஞ்சு சந்ததியளுக்கும் கடனுகளை வைச்சுக் கொண்டு இருப்பினம் . அப்பிடி இல்லாமல் விரலுக்கு ஏத்த வீக்கமாய் கட்டுச் செட்டாய் இருந்திட்டால் சேதாரம் குறைய கண்டியளோ .

 

Incomings may be scant; but yet, no failure there,

If in expenditure you rightly learn to spare.

 

Il n'y a pas de mal a ce que le canal alimentaire du budget soit étroit, pourvu que l'écluse des dépenses ne soit pas agrandie.

 

 

 

Link to comment
Share on other sites

அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். 479

 

தன்வருவாயின் அளவை அறிந்து செய்து வாழாதவனுடைய வாழ்க்கை , இருப்பது போலவேயிருந்து இல்லாமல் ஒழிந்துவிடும் .

 

என்கருத்து:

 

சிலபேர் காசுபணத்தை கண்டவுடனை இருந்த நிலமை தெரியாமல் தலைகீழாய் நிண்டு பெரிய பண்ணையாராய் இருப்பினம் . இதுகளை பாக்கிற சனம் நிலமை தெரியாமல் இவையளை பாத்து வாயூறுங்கள் . கொஞ்சக்காலத்துக்கு பிறகு இந்த பண்ணையாருகள் இருந்த இடம் தெரியாமல் போடுவினம் கண்டியளோ .

 

Who prosperous lives and of enjoyment knows no bound,

His seeming wealth, departing, nowhere shall be found.

 

La richesse d'un homme qui vit, en n'en connaissant pas le montant, semble bien exister, mais elle finit par ne plus exister et son apparence même disparait.

Link to comment
Share on other sites

உளவரை தூக்காத, ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும். 480

 

தன் செல்வத்தின் அளவை ஆராய்ந்து பாராமல் பிறர்க்கு உதவி செய்யும் தன்மையால், ஒருவனது செல்வத்தின் அளவு விரைவில் அழிந்துவிடும் .

 

என்கருத்து:

 

கிட்டடியிலை ஒரு செய்தி பாத்தன் . அதிலை என்னெண்டால் , இந்தியா இலங்கைக்கு ஏராளமான கடனுதவியள் , வீடமைப்பு திட்டங்கள் செய்ததாம் . குடிக்கிறது கஞ்சி கொப்பிளிக்கிறது பன்னீர் எண்ட கதையாய் , உதவி செய்த நாடு தன்ரை மக்களையே சரிவர பாக்கேலாமல் முழிபிதுங்குது . இதுக்குள்ளை பண்ணையார் வேலையள் . இதாலை இந்தியாவின்ரை செல்வம் என்னம் குறைஞ்சு அழிஞ்சு போகும் . இதைத் தான் ஐயனும் சொல்லிறார் .

 

Beneficence that measures not its bound of means,

Will swiftly bring to nought the wealth on which it leans.

 

La charité de celui qui ne calcule pas le montant de sa fortune amène promptement sa ruine.

Link to comment
Share on other sites

  • 3 months later...

பொருட்பால் - அரசியல் - காலம் அறிதல் ( Knowing the fitting Time , Des la connaissance de l'Opportunité. )

பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481

காகம் தன்னைக் காட்டிலும் வலிமையுடைய கோட்டானை அதற்கு கண் தெரியாத பகற்பொழுதில் போரிட்டு வெல்லும். அதுபோலப் பகைவருடன் போரிட்டு வெல்லக் கருதும் அரசர்க்கு ஏற்ற காலம் இன்றியமையாதது .

எனது கருத்து:

உலகத்திலை எங்கையாவது சண்டை நடக்குதெண்டால் ஏதோ ஒரு இரவலை முடிவு எடுத்து நடக்கிறது எண்டு நினைக்கப்படாது . கிட்டமுட்ட ஐஞ்சாறு வரியத்துக்கு முதலே எல்லாம் பிளான் பண்ணி பழம் நல்லாய் பழுக்க விட்டு ஒரே அடி , ஆள் அரக்காது . ஈராக்கிலை அமெரிக்கா பாஞ்ச மாதிரி .

A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.


Le corbeau triomphe du hibou pendant qu'il fait jour, ainsi il faut un temps opportun au Roi qui désire vaincre ses ennemis.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு. 482

அரசன் , காலத்தோடு பொருந்தத் தொழிலைச் செய்தல் செல்வத்தைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டி வைக்கும் கையிறு ஆகும் .

எனது கருத்து:

இதைத்தான் எங்கடை பெரிசுகள் பருவத்தே பயிர் செய் எண்டு சொல்லியிருக்கினம் . எந்த இடத்திலும் நேரம்பாத்து அடிக்காட்டில் சேதாரம் கூட கண்டியளோ .

The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.


Faire chaque chose en temps opportun est la corde qui retient chez soi. l'inconstante fortune.

Link to comment
Share on other sites

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். 483

தகுந்த கருவிகளோடு காலம் அறிந்துசெயல்பட்டால் வெற்றியடைவதற்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை

எனது கருத்து:

அப்பிடித்தான் எல்லாரும் நினைச்சு செய்யினம் . ஆனால் கடைசியிலை கவுண்டு கொட்டுண்டு அல்லோ போகினம் . ஏனெண்டால் தங்களுக்கை இருக்கிற கோரைப் புல்லுகளை நம்பிறதாலை தான் இந்த நிலமையள் கண்டியளோ .

Can any work be hard in very fact, If men use fitting means in timely act?

Y a-t-il quoi que ce soit d'impossible (au Roi) qui sait employer l'armement approprié et profiter du moment opportun ?

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.484

ஒருவன் தன்னைக் காலமறிந்து, ஏற்ற இடம் அறிந்து ஒரு செயலைச் செய்வானாயின் அவன் இவ்வுலகத்தையே ஆளக்கருதினாலும் அது கைகூடும் .

எனது கருத்து:

நீங்கள் இப்பிடி சொல்லுறியள் ஐயன் . உங்கடை கதையைப் பாத்தால் உலகத்திலை சந்தோசம் மட்டுமல்லோ இருக்கவேணும் ?? எல்லாரும் ஒண்டுக்கு பத்து தரம் யோசிச்சுத்தான் செய்யிறாங்கள் . ஆனால் இதுகளுக்கு மேலை ஒரு அப்பன் இருக்கிறான் , அதுதான் விதி எண்டு சொல்லிறன் .

The pendant world's dominion may be won, In fitting time and place by action done.

Le désir d'avoir l'hégémonie du monde se réalise, si l'on choisit le moment opportun et le terrain propice.

Link to comment
Share on other sites

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். 485

உலகம் முழுவதையும் கைக்கொள்ளக் கருதுபவர் வலிமையுடையவராயினும் அவ்வலிமையைப் பெரிதாகக் கருதாமல் தக்க காலத்தையே எதிர்பாத்துக் காத்திருப்பர் .

எனது கருத்து:

இந்த குறளை நான் படிக்கிற நேரம் , " ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு " எண்ட சொலவடைதான் ஞாபகம் வருகுது . இதை ஏன் சொல்லுறன் எண்டால் , கொக்குக்கு மீன் பிடிக்கத் தெரியாமல் எண்டில்லை அதின்ரை கண் எப்பவும் உறுமீனிலைதான் இருக்கும் .

Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.


Le Roi qui désire régner immanquablement sur tout l'univers attend avec patience le moment opportun.

ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.486

முயற்சியுடையவன் அடங்கியிருப்பது , சண்டையில் ஆட்டுக்கடா , தாக்குவதற்கு வேகம் பெறுவதற்காக பின்னால் செல்வதைப் போன்றது.

எனது கருத்து:

பொறுத்த நேரத்திலை ஒருத்தன் ஏன் பம்முறான் எண்டதை விசையம் விளங்காத சில பேர் நினைப்பினம் , பெடி பயத்திலை விட்டிட்டு போறான் எண்டு . ஆனால் புலி எப்பவும் பம்மி பொறுத்து இருந்துதான் பாயும் எண்டிறதை புத்திசாலியள் விளங்கிக் கொள்ளுவங்கள் .

The men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.

Attendre le moment propice, quand on a une armée forte, ressemble au mouvement du bélier, qui recule pour prendre l'élan.

 

Link to comment
Share on other sites

பொள்என ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487

அறிவுடைய அரசர் , பகைவர் குற்றம் செய்தவுடன் வெளிப்படையாகக் கோபம் கொள்ளமாட்டார் . அவரை வெல்லும் தக்க காலம் வரும் வரை மனதுக்குள்ளேயே சினத்தை அடக்கிக் கொண்டிருப்பர்.

எனது கருத்து:

ஒருத்தர் உங்களுக்கு பிழை விடுகிற நேரம் , எடுத்ததுக்கெல்லாம் அவரிலை நீங்கள் கோபப்பட்டியள் எண்டால் உங்கடை கோபத்துக்கே மரியாதை இல்லாமல் போடும் . நீங்கள் இடம் , பொருள் , ஏவல் பாத்து உங்கடை கோபத்தை அவரிலை காட்டுங்கோ அந்தாள் சீவியத்திலை உங்களை மறவாது .

The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow.


le Roi intelligent ne manifeste pas sa colère au moment même où il est insulté, mais l'entretient dans son coeur, en attendant le moment propice.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்குஆம் தலை. 488

பகைவரைக் கண்டால் பொறுத்திருக்க வேண்டும் அப்பகைவர் அழியும் காலம் வந்தால் அவரது தலை கீழே போகும்

எனது கருத்து:

ஒருத்தன் உங்களுக்கு கேம் கேட்டால் நீங்களும் ஏட்டிக்கு போட்டியாய் நிக்காமல் பொறுத்துப்போங்கோ . முடிவுகாலம் எண்ட ஒண்டு , காலம் எண்ட அப்பனாலை வரேக்கை உங்களிட்டை கேம் கேட்டவர் அடரஸ்சே இல்லாமல் போவார் .

If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there.


si tu rencontres l'ennemi, supporte-le ; le jour de sa fin venu, sa tête tombe par terre.

Link to comment
Share on other sites

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல். 489

பகைவரை வெல்லக் கருதும் அரசர் , நல்ல காலம் வந்து சேர்ந்த போதே செய்வதற்கு அரியசெயல்களைச் செய்து முடித்துக் கொள்ள வேண்டும் .

எனது கருத்து:

ஓரு வேலையை செய்யுறதுக்கு காலநேரம் எல்லாம் சரிவந்தால் பேந்துபின்னை எண்டு நில்லாமல் சட்டுப்புட்டு எண்டு செய்யவேணும் கண்டியளோ .

When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.


Le temps propice arrivé, il faut en profiter pour tenter même l'impossible.

கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து. 490

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில் கொக்கைப் போலக் காத்து இருந்து காலம் வாய்த்தபோது கொக்கு மீனைக் கொத்தினாற் போலத் தவறாமல் செய்யவேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும்.

எனது கருத்து:

உறுமீன் வாறவரைக்கும் கொக்கர் எப்பிடி இருக்கிறாரோ அப்பிடி இருந்து ஒரே அடி........... மாற்றர் குளோஸ் . ஆனால் எங்கடை விசையத்திலை மட்டும் ஏன் பிழைச்சது ???? எனக்கு இண்டுமட்டும் விழங்கேலை . உங்களுக்கு ஏதாவது விளங்கீச்சுதோ ????

 

As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

 
Pendant le temps défavorable, il faut imiter l'inaction patiente du héron et agir au moment opportun, avec la rapidité de son coup de bec.




 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.