Jump to content

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது


SUNDHAL

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா சாமி எனக்கு தூக்கம் வருது... ஆளை விடுங்கோ பிளீஸ்.. இந்த திரி மூன்றுபக்கம் தாண்டி இருக்கு.. ஆனால் உங்கட பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு திரி அனுதாபதிற்காக வேனும் அட்லீஸ்ட் ஒரு திரி கூட தாண்டவில்லை..

டிஸ்கி:

ஆக மொத்தம் நீங்களே உங்கட ஆக்க்களை மதிக்கிக்கிறது கிடையாது... டில்லி வாலாக்களுக்கு அவ்வளவு மரியாதை..? ம்ம்ம்... புரியுது எல்லாம் அரசியல் ராஜ தந்திரம்..  இப்படியே இந்த கதையை வேறிடம் சொன்னால் காறிட்டு துப்புவான்.. நமக்கு எதற்கு இந்த  வில்லாங்கம் ஐயாம் சிலீப்பிங்கு... :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

எனக்கு பக்கத்து வீட்டில் இழவு விழுந்தால் என்னுடையை வீட்டு இழவையும் பொருட்படுத்தாது ஓடி சென்று உதவும் அனுதாபப்படும் பரம்பரை எமது தமிழ் பரம்பரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு மிஞ்சினால்தான் தர்மம் என்பது இந்த  தமிழனின் வாதம்..  (தெலுங்கு செப்பெஸ்குண்ணாரு எந்து வெளி எவரு மாட்லாடொக்கொச்சு)

டிஸ்கி:

முதலில் நாம் நம்மை பார்ப்பம் .. நம்ம கோவணம் முக்கியம்.. அப்புறம் அடுத்தவனுக்கு போலாம்.. அதுவும் அவர்கள் நமக்கு எந்த  அளவுக்கு உதவி இருக்கிறார்கள் என்பதை பொறுத்து..

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து நியாயமாக இருந்தாலும் கூட மனிதாபிமானம் என்பது அவர்கள் எங்களுக்கு என்ன செய்தார்கள் என்ன தந்தார்கள் என்பதை வைத்து வருவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

isaipriya_killed.jpg

 

 

நல்ல கருத்து..இதே போல இசைப்பிரியா  கொஞ்சம் வருத்தமாக இருக்கு  (... ) போது  தமிழர் நாட்டை தவிர்த்து  .. கிந்தியாவின் புளூ கிராஸ் அமைப்புக்கூட  கண்டனம் தெரிவிக்க வில்லை.. நிலமை அந்த அளவுக்கு கேவலமா கிடக்கு...

டிஸ்கி:

முதலில் அடிப்படை ஒன்று உங்களுக்கு  தெரியவில்லை.. நீங்கள் வேறு அவர்கள் வேறு.. அவர்கள்  ஆள பிறந்தவர்க்ள் நீங்க .. அனுதாபம் தெரிவிக்க பிறந்தவர்கள்.

 

அவர்கள் தேவலோக பிறவிகள்..!!!   கூட்டம் கூடுகிறது ... நமக்கு  ..??   விட்டத்தை பார்த்து நின்றால் காக்கா குருவி வரும்... !!!

Link to comment
Share on other sites

ஆனால் அவர்கள் உதவி எமக்கு தேவையே அவர்கள் உதவாமல் ஒரு தீர்வுக்குள் வர முடியாது என்பது தான் ஜதார்த்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முகப்புத்தகத்தில் அந்த பெண்ணது பட‌ம் போட்டு இருந்தார்கள் அழகான,கெட்டிக்கார‌,வாழ வேண்டிய பெண் அவர‌து ஆத்மா சாந்தியடையட்டும்.
 
கொலைகார‌ரை தூக்கில் போட்டால் அவர்கள் செய்த குற்றத்தின் வலி அவர்களுக்கு தெரியாது ஆகையால் இருட்டு,பாதாள சிறையில் சாகும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
 


அவரின்ட நண்பர்  ஸ்டெடஸ் ..?  இருவரும் நண்பர்கள் .. அர்த்த ராத்திரியிலும் எங்கிட்டாவது சுத்திட்டு திரியட்டும் அது நமக்கு கவலை இல்லை.. அதை பற்றி அவர்கள் கவலை பட்டு இருக்கணும் ..  டில்லி அரசாங்கம் கவலை பட்டு இருக்கணும்  இவுங்களுக்காக நீங்க மாய்ந்து மாய்ந்து குரல் கொடுத்தாலும் ..  ஒட்டுறதுதான் ஒட்டும் (இனம்)

டிஸ்கி:

மறுபடியும் இந்திகாரங்களிடம் "டமில் இலம்" என்று ஆரம்பியுங்களேன்..  ஆக்கியுளி ...கெமிக்களி.. சைக்காலிஜிக்களி... மெண்டலி....  "ராஜிவி காந்திஜீ" ஈஸ் என்று

 

 

இது அப்பட்டமான ஆணாதிக்க கருத்து...குற்றம் செய்த ஆண்களுக்கு வக்காலத்து வாங்கும் விதமாகவே இக் கருத்து அமைந்துள்ளது...தூ....காலம்,காலமாய் ஆண்கள் என்ன குற்றம் செய்தாலும் பழியை பெண்கள் போடுவதே வழமை
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒருவரிடம் தொங்குவதால் தான்  ஒருவரின் முக்கியதுவம் அதிகரிக்கபடுகிறது..  தனியாக கழற்றி விட்டு பாருங்கள் ..

இனம் குலம் கோத்தரம் .. வரலாற்று ரீதியான தொடர்பு என தொங்கிட்டு வருவார்கள்..


அவர்கள் பெரிய புடுங்கிகள் கிடையாது.. அவர்கள் சாணக்கியர்கள் என்றால் அதற்கும் மேல் நமக்கு  மூளை வேண்டும்.. உக்கார்ந்து ரூம் போட்டு யோசிக்கணும்.. எல்லாம் மேற்குலக நாடுகளில் இருக்கிறீர்கள்.. அங்கிட்டு ஸ்கெட்ச் போட்டால் இங்கிட்டு அதிரும்.. இவங்களுக்கு அனுதாபம் தெரிவித்தால் .. ஏதும் ஆக போவது கிடையாது .. 10+1 11 அவ்வளவுதான்.. நீங்க கண்டிக்கிறம் மெண்டிக்கிறம் என்று கீச்சு மூச்சு என்று கத்தினாலும் உங்கள் குரலை எல்லாம் பதிவு செய்து கிந்திய பேப்பரில் போட போவது இல்லை... எங்கிட்டு இருந்து இந்த கண்டனம் வந்தது என்ற போதே  கட் பண்ணி போடுவான் மூளை ..  மூளை ... அதை யூஸ் பண்ணணும்   அது ஏனோ  1953 இல் இருந்து தொங்கிட்டுதான் திரியீறீங்க. ஏதாவது ஒரு பாசிட்டிவ் ரிசல்ட் கிந்தியாகரனின்டம் இருந்து வந்திருக்கா..

டிஸ்கி:

கோவிக்க வேண்டாம் நீங்கள்  கிந்திய பாதுகாப்பிற்காக தென்பிராந்தியத்தில் யூஸ் செய்கிற ஒரு கிடா மாடுகள்.. அதான் உண்மை .. தேவையானல் யூஸ் பண்ணுவார்கள்.. தேவையில்லையென்றால் போட்டுவிடுவார்கள்... மீண்டும் தேவையென்றால் மீண்டும் வளர்த்து எடுப்பர்கள்..  ஆனால் நாம் அந்த நிலையை தாண்டி மனிதர்கள் நாங்களும் என்று மூளையை யூஸ் பண்ணி... சாதிக்கணும்... ஆப்பு வைக்கணும்... சாரி இந்த திரி..  வெற ரொப்பிக்கு.  தலைப்புக்கு சம்பந்தம் அற்ற விடயம் எனின் நீக்கவிடவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அப்பட்டமான ஆணாதிக்க கருத்து...குற்றம் செய்த ஆண்களுக்கு வக்காலத்து வாங்கும் விதமாகவே இக் கருத்து அமைந்துள்ளது...தூ....காலம்,காலமாய் ஆண்கள் என்ன குற்றம் செய்தாலும் பழியை பெண்கள் போடுவதே வழமை
 
 

 

இந்த நாடு காம வெறி பிடித்த மிருகங்கள் அலையும் நாடு.. இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.. நிலமை இப்படி இருக்கும் போது.. பாதுகாப்பாக இருப்பதுதான் நல்லது..

டிஸ்கி

:

ல்ண்டனில் சேப்ப்டிடாகக் இருப்பது போல இங்கிட்டு கிடையாது..பெண்ணியம் குண்னியம்   அறிக்கை அக்கபோர் செய்வதைவிட்டு... அங்கிட்டு அல்ல்து இங்குட்டு ஒக்கார்ந்து நோகாம ரைப்படிபது ஈசியாகதான் இருக்கம்... இங்கிட்டு வந்து போராடி உரிமைய வாங்கிதாங்க.. பிளீஸ்.. தூத்தேறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒருவரிடம் தொங்குவதால் தான்  ஒருவரின் முக்கியதுவம் அதிகரிக்கபடுகிறது..  தனியாக கழற்றி விட்டு பாருங்கள் ..

இனம் குலம் கோத்தரம் .. வரலாற்று ரீதியான தொடர்பு என தொங்கிட்டு வருவார்கள்..

அவர்கள் பெரிய புடுங்கிகள் கிடையாது.. அவர்கள் சாணக்கியர்கள் என்றால் அதற்கும் மேல் நமக்கு  மூளை வேண்டும்.. உக்கார்ந்து ரூம் போட்டு யோசிக்கணும்.. எல்லாம் மேற்குலக நாடுகளில் இருக்கிறீர்கள்.. அங்கிட்டு ஸ்கெட்ச் போட்டால் இங்கிட்டு அதிரும்.. இவங்களுக்கு அனுதாபம் தெரிவித்தால் .. ஏதும் ஆக போவது கிடையாது .. 10+1 11 அவ்வளவுதான்.. நீங்க கண்டிக்கிறம் மெண்டிக்கிறம் என்று கீச்சு மூச்சு என்று கத்தினாலும் உங்கள் குரலை எல்லாம் பதிவு செய்து கிந்திய பேப்பரில் போட போவது இல்லை... எங்கிட்டு இருந்து இந்த கண்டனம் வந்தது என்ற போதே  கட் பண்ணி போடுவான் மூளை ..  மூளை ... அதை யூஸ் பண்ணணும்   அது ஏனோ  1953 இல் இருந்து தொங்கிட்டுதான் திரியீறீங்க. ஏதாவது ஒரு பாசிட்டிவ் ரிசல்ட் கிந்தியாகரனின்டம் இருந்து வந்திருக்கா..

டிஸ்கி:

கோவிக்க வேண்டாம் நீங்கள்  கிந்திய பாதுகாப்பிற்காக தென்பிராந்தியத்தில் யூஸ் செய்கிற ஒரு கிடா மாடுகள்.. அதான் உண்மை .. தேவையானல் யூஸ் பண்ணுவார்கள்.. தேவையில்லையென்றால் போட்டுவிடுவார்கள்... மீண்டும் தேவையென்றால் மீண்டும் வளர்த்து எடுப்பர்கள்..  ஆனால் நாம் அந்த நிலையை தாண்டி மனிதர்கள் நாங்களும் என்று மூளையை யூஸ் பண்ணி... சாதிக்கணும்... ஆப்பு வைக்கணும்... சாரி இந்த திரி..  வெற ரொப்பிக்கு.  தலைப்புக்கு சம்பந்தம் அற்ற விடயம் எனின் நீக்கவிடவும்..

 

 

புரட்சி, நீங்கள் சொல்வது... எமக்கு விளங்காமலில்லை.

இது, ஒரு.. ஆத்மபூர்வமான கண்டிப்பு.

என்ன... செய்வது, தமிழர் நாம்... அப்படி வளர்க்கப் பட்டு விட்டோமே...

புலிகள், சர்வ பலத்ததுடன் மோதிய போது கூட... தனிச் சிங்களவனை நண்பனாகவே.. பாவித்தார்கள். அநியாயமாக... சாதாரண சிங்களவர் சாவதை... பெரும் பிரயத்தனப்பட்டு, தங்கள் இலக்குகளை... எதிரியின் மீதே... வைத்தார்கள்.

நல்லதுக்கு, காலமில்லை. இது,தான்.. உலகம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

418087_4109698187122_181383205_n.jpg

 

இது ஒரு வழக்கு எண் 18/9-ன் கதை..
--------------------------
--------------------------

-------

``அப்பா நான் செத்துப்போறேன்ப்பா..” கீழ்பாக்கம் ஆதித்யா மருத்துவமனை அறை எண் 114-லிலிருந்து இப்படிதான் ஒலிக்கிறது அந்தக் குரல். அது வினோதினியின் குரல். வினோதினிக்கு தான் எவ்வளவு அழகான முகம். வண்ணத்துப் பூச்சியாகச் சிறகடித்துப் பறந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஒரே நாள் இரவில் கொடூரன் ஒருவனால் தலைகீழாகிப்போனது.

உடல் முழுக்கக் காட்டுப்போட்ட நிலையில் இருந்த வினோதினியால் பேச முடியவில்லை. மகளின் நிலையைப் பார்த்து அழுது அழுது கண்ணீர் வற்றிப்போய் நின்றிருந்த வினோதினியின் தந்தை ஜெயபாலனிடம் பேசினோம்.

``எனக்குப் பூர்வீகம் திருக்கடையூர். வினோதினி என்னோட ஒரே செல்லப் பொண்ணு. என் பொண்ணு படிப்புக்காகத்தான் காரைக்காலுக்கே வந்தோம். தனியார் ஸ்கூல்ல செக்யூரிட்டியா வேலை. அந்த வருமானத்துலதான் என் சக்திக்கு மீறி கடன் வாங்கி என் பொண்ண படிக்க வச்சேன். அவளும் என் நிலமை புரிஞ்சு நல்லா படிச்சு பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சா. எல்லாம் நல்லபடியாத்தான் போச்சு சார்.. திருவட்டக்குடி ஊர்கார சுரேஷ்ங்கிற அந்தப் பையன் எனக்கு அறிமுகமாகுறவரை. வேறொரு ஃப்ரெண்ட் மூலமா தான் எனக்கு அறிமுகமானான். ஆரம்பத்துல நல்லாத்தான் பழகுனான்.

ஆனா போகப்போகத்தான் அவன் தப்பான நோக்கத்துல தான் எனக்கு அறிமுகமாகியிருக்கான்னு தெரிஞ்சது. என் பொண்ண விரும்புறதா தெரிஞ்சவங்கக்கிட்ட பொய்யா தகவல் பரப்பிருக்கான். இது என் பொண்ணுக்கு தெரிஞ்சதும் என்னைச் சத்தம் போட்டா. நானும் அவனைக் கூப்பிட்டு, என் வீட்டுப்பக்கம் வராதேனு கண்டிச்சேன். ஆனாலும் அவன் தொடர்ந்து தொந்தரவு பண்ணதால போலீஸ்ல புகார் கொடுத்தோம். அவங்களும் அவனைக் கூப்பிட்டு கண்டிச்சாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் பிரச்னை இல்லாம இருந்தது. என் பொண்ணுக்கும் தனியார் கம்பெனில வேலைக்கிடைச்சு சென்னைக்குப் போய்ட்டதால நிம்மதியா இருந்தோம். ஆனா அவன் வன்மத்தோட இருந்துருக்கான்னு அப்போ தெரியல.

தீபாவளி லீவுக்கு ஊருக்கு வந்துட்டு மறுநாள் சென்னைக்குக் கிளம்பினாள். பஸ் ஏத்திவிட நானும் கூடப் போனேன். திடீர்னு வழிமறிச்சு `எனக்கு கிடைக்காத இந்த முகம்.. யாருக்கும் கிடைக்கக்கூடாதுனு’ சொல்லிட்டே என் பொண்ணு முகத்துல ஆசிட் வீசிட்டான்யா அந்தக் கொடூரன்..” என்று சொல்லும்போதே அந்தத் தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிந்து பேசமுடியாமல் திணறுகிறார்.

சிறிது இடைவெளிவிட்டு ``கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததுனே தெரியலங்கையா. என் பொண்ணு வலி தாங்க முடியாம கீழ விழுந்து புரளவும் அவளை மடில தூக்கி வச்சேன். அப்போ அவ உடம்புல பட்டு வடிஞ்ச ஆசிட் எம்மேலயும் பட்டு எனக்குக் கைலயும் நெஞ்சுலயும் வெந்துப்போச்சு. என்னாலயே அதைத் தாங்க முடியல.. ஐயோ என் புள்ள எப்படியெல்லாம் துடிச்சா தெரியுமாங்கைய்யா.. ஆசிட் பட்டதால ரெண்டு கண்லயும் பார்வைப் போயிருச்சுனு சொல்றாங்க.. இப்போ வலி தாங்க முடியாம.. `அப்பா இந்த முகம் வேணாம்.. நான் செத்துப்போறேன்.. கொன்னுடுங்கப்பா’னு கதறி அழுறா.

`அப்பா.. இனி நீங்க செக்யூரிட்டி வேலைக்குப் போக வேணாம்ப்பா.. நான் சம்பாதிக்குறேன்.. சென்னைக்கு வந்துருங்க.. நான் உங்களைப் பார்த்துக்குவேன்ப்பா’னு என் பொண்ணு கடைசியா என்கிட்ட சந்தோசமா பேசுன வார்த்தை இதுதாங்க.. ஆனா என் புள்ள கனவு எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்டான்யா அந்தப்பாவி. சிகிச்சையளிக்கக்கூடப் பணம் இல்லாம இருக்குற நான் இனி என் புள்ளைய எப்படிக் காப்பாத்துவேனு தெரியலையே” என்று கையறு நிலையில் நிற்கும் தந்தையாகக் கதறி அழுகிறார் ஜெயபாலன்.

இறுதியாக அங்கிருந்து கிளம்பிய நம்மிடம், ``எனக்கு ஏற்பட்ட இந்த நிலமை வேற எந்தப் பொண்ணுக்கும் ஏற்படக்கூடாது சார்.. அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்.. ஆதுக்காகவாவது நான் உயிர் வாழணும்னு இப்போ ஆசைப்படுறேன் சார்” என்று உறுதியாக ஒலிக்கிறது வினோதினியின் குரல். ஒருதலைக்காதலின் பெயரால் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசும் சுரேஷ்கள் திருந்தினால் மட்டுமே இந்த `இந்த வழக்கு எண்’ முடிவுக்கு வரும்.

---------------------------------------------------------------------------------------------------

ஆசிட் வீசப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வினோதினிக்கு சிகிச்சையளிக்கும் கேம்.எம்.சி.யின் ஓய்வுப்பெற்ற தலைமை மருத்துவர் ஜெயராமனிடம் பேசினோம். ஆசிட் சாதாரணமாக எல்லா ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கிறது. அதைத் தான் இப்படிப் பயன்படுத்துகிறார்கள். ஆசிட் மேலேப்பட்டதும் மிக முக்கியமாகச் செய்ய வேண்டியது அந்த இடத்தில் பாலை ஊற்ற வேண்டும் என்பது தான். அதன் பிறகு தீக்காயங்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளுக்கு அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆசிட் பட்ட இடங்களை முற்றிலும் நீக்கியே ஆக வேண்டும். அதன்பிறகே உடலின் மற்றப் பாகங்களில் இருந்து தோலை எடுத்துப் பாதிக்கப்பட்ட இடங்களில் பொருத்தி சரி செய்ய முடியும். அதுவும் முழுமையாகப் பழைய நிலை வராது. ஓரளவுக்குத் தான் சரி பண்ண முடியும் என்றார்.

ஆண்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?
-----------------------------------------------------------
டாக்டர்.ருத்ரன்
மனநல மருத்துவர்

தனக்குக் கிடைக்காத அந்தப் பெண்ணின் அழகு வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற வக்கிரமன நிலையிலிருந்து செயல்பட்டிருக்கலாம். இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மனநோயாளிகள் என்று குறிப்பிட முடியாது. இது ஒருவகையான பொறுக்கித்தனமான செயல்பாடு. பெண்கள் மீது ஆசிட் வீசும் விசயம் என்றில்லை, இவர்கள் எல்லா விசயங்களிலும் சமூகத்திற்கு எதிராகத்தாகத்தான் இருப்பார்கள். அதுப்பற்றி அவர்களுக்குக் குறைந்தபட்ச வருத்தம் கூட இருக்காது. பிறப்பிலிருந்து வரும் வக்கிரமான இந்தக் குணத்தைத் திருத்தவும் முடியாது. சிறுவயதிலேயே இதைக் கண்டுபிடித்துத் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப் படுவாய் என்று எச்சரிக்கலாம்.

-ஞானபாலா
படங்கள்: ம.செந்தில்நாதன்

நன்றி: குமுதம்

--------------------------------------------------------------
வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் ஒருவர் வினோதினியின் சிகிச்சைக்கான பண உதவி பெற உதவும் வகையில் இந்த இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்.. அவருக்கு நன்றி


http://www.helpvinodhini.com/

 


JAYAPALAN
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037

 

[ முகநூல்: குறிப்பு: இதில் வழங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு பற்றிய விபரங்களுக்கு உத்தரவாதம் இல்லை. எனவே இப் பெண்ணின் பரிதாப நிலையை உணர்ந்து உதவி செய்ய விரும்புபவர்கள்.. தயவுசெய்து இவற்றை உடனடியாகப் பாவிப்பதில் இருந்து உங்களை தவிர்த்துக் கொண்டு சரியான விபரங்களை நீங்களாகவே நம்பிக்கையானவர்களிடம் இருந்து சேகரித்து பின் உதவி செய்யுங்கள்.]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயகத்தின் பெயரால் வாக்குப் போட்ட மக்கள் கொடுத்த.. தான் கொண்டுள்ள அதிகாரத்தினாலும்.. சட்டத்தினாலும்.. நீதி நிர்வாகத்தினாலும் வாக்குப் போட்ட மக்களையே பாதுகாக்க முடியாத ஹிந்திய ஆட்சியாளர்கள்.. தங்களின் ஊழல்கள்.. தவறுகள் வளர்த்தெடுத்த சண்டியர்களின் காமவெறியாட்டத்திற்கு.. கொலைக்கரத்திற்கு.. ஒரு அப்பாவிப் பெண்ணை பலியிட்டுவிட்டு அவளுக்கு வீரமகள் பட்டம் சூட்டி அரசியல் செய்யும் கேவலத்திற்கு பலியான மானிடப் பெண்ணும் மருத்துவத்துறை மாணவியுமானவர் இவர் தான்..!

 

531897_392437487508548_1694411162_n.jpg

 

கண்ணீரஞ்சலிகள்.

 

படம்: நன்றி: முகநூல்

Link to comment
Share on other sites

மனிதாபிமானம் என்றால் என்ன?

இலங்கையை சுனாமி தாக்குகின்றது கிழக்கு மாகாணத்திலே போராளிகளும் படையினரும் பாதிக்கப்படுகின்றார்கள் மீட்ப்பு பனி நடக்கின்றது அங்கெ படகுகளில் போராளிகளை படையினர் ஏற்றுகின்றார்கள் படையினரை போராளிகள் ஏற்றுகின்றார்கள் இத்தனைக்கும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் நேரடியாக மொதுபட்டவர்கள் அவற்றையும் தாண்டி மனிதாபிமானம் என்ற ஓன்று அங்கு வென்று நிண்டது நீ

என்னை சுட்டணி தானே என்றுவிட்டு படையினரும் போகவில்லை நீ எண்கள் இனத்தை அழித்தவன் தானே என்று விட்டு போராளிகளும் போகவில்லை

பாகிஸ்தானிலே மிகேப்பெரிய பூகம்பம் வருகின்றது மக்கள் பல்லாயிரக்கணக்கில் மடிகின்றார்கள் என்ன தான் எதிரி நாடக இருந்தாலும்

மருந்து உணவுபொருட்களை இந்தியா அனுப்புகின்றது அங்கெ வென்று நின்றது மனிதாபிமானம்

சில விடையங்களில் லாப நட்ட கணக்கு போடா முடியாது புரட்சியாரே

நல்லெண்ணத்தை வெளிப்படுத்துகின்ற ஒவொரு சந்தர்பத்திலும் நல்லெனத்தை வெளிப்படுத்த வேண்டும்

Link to comment
Share on other sites

மனிதாபிமானம் என்றால் என்ன?

இலங்கையை சுனாமி தாக்குகின்றது கிழக்கு மாகாணத்திலே போராளிகளும் படையினரும் பாதிக்கப்படுகின்றார்கள் மீட்ப்பு பனி நடக்கின்றது அங்கெ படகுகளில் போராளிகளை படையினர் ஏற்றுகின்றார்கள் படையினரை போராளிகள் ஏற்றுகின்றார்கள் இத்தனைக்கும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் நேரடியாக மொதுபட்டவர்கள் அவற்றையும் தாண்டி மனிதாபிமானம் என்ற ஓன்று அங்கு வென்று நிண்டது நீ

என்னை சுட்டணி தானே என்றுவிட்டு படையினரும் போகவில்லை நீ எண்கள் இனத்தை அழித்தவன் தானே என்று விட்டு போராளிகளும் போகவில்லை

பாகிஸ்தானிலே மிகேப்பெரிய பூகம்பம் வருகின்றது மக்கள் பல்லாயிரக்கணக்கில் மடிகின்றார்கள் என்ன தான் எதிரி நாடக இருந்தாலும்

மருந்து உணவுபொருட்களை இந்தியா அனுப்புகின்றது அங்கெ வென்று நின்றது மனிதாபிமானம்

சில விடையங்களில் லாப நட்ட கணக்கு போடா முடியாது புரட்சியாரே

நல்லெண்ணத்தை வெளிப்படுத்துகின்ற ஒவொரு சந்தர்பத்திலும் நல்லெனத்தை வெளிப்படுத்த வேண்டும்

 

அதுபோல ஈழத்தில் இலட்சம் கொலைகள்.. யாரும் திரும்பிப் பார்க்கவில்லை..

 

ஆகவே மனிதாபிமானத்திலும் கூட அரசியல் உள்ளது.

Link to comment
Share on other sites

இதுவரை மௌனமாக மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டங்களே நடக்கின்றது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்... இப்போது,
சிங்கள‌ அரசியல்வாதி, பௌத்த மத‌ குரு, சாதாரண‌ ஒரு சிங்களவனாவது, புலிகள் காட்டிய மனிதாபிமானத்தை நடத்த முனைகிறார்களா? போய்த்தொலைய‌ட்டும்... அவ‌ன் வேறு இன‌ம். எங்க‌ளுட‌ன் இருந்த‌... ஒட்டுக்குழுக்க‌ள், புலி அழியும‌ட்டும்... வீணீர் வ‌டித்துக் கொண்டிருந்ததே...
‌இப்போ... அதுகளும்... சேர்ந்து த‌மிழ‌னை... அழிக்குதே....
இப்ப‌டி, ஒரு இன‌ம், உல‌க‌த்தில்... இனி... உருவாக‌வே... கூடாது. நாச‌மாய்ப் போன‌... நாதாரிக் கூட்ட‌ங்க‌ள்.
 

Link to comment
Share on other sites

அவர்கள் திரும்பி பார்க்கவில்லை என்பதற்காக நாங்கள் திரும்பாமல் இருக்க முடியாது கடமயை செய்வோம் பலனை எதிர்பாராது கால தேவதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றாள் என்றோ ஒருநாள் விடிவு வரும் அதுவரை நாங்கள் எல்லோரையும் அரவணைத்து பயணிப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் திரும்பி பார்க்கவில்லை என்பதற்காக நாங்கள் திரும்பாமல் இருக்க முடியாது கடமயை செய்வோம் பலனை எதிர்பாராது கால தேவதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றாள் என்றோ ஒருநாள் விடிவு வரும் அதுவரை நாங்கள் எல்லோரையும் அரவணைத்து பயணிப்போம்

 

உதுகள் திருந்திற கூட்டம் மாதிரி தெரியவில்லை.

நக்குற நாயை... நடுக்கடலில் விட்டாலும், நக்கித்தான் குடிக்கும். தேவாங்குகள்.

Link to comment
Share on other sites

  • இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
  • சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
  • தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
  • அப்படியே ஊடகங்களின் கவனம் கிடைத்தாலும் கூட அவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைத்துவிடும் வாய்ப்புகளும் மிகக்குறைவு.

http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121229_indianrapes.shtml

Link to comment
Share on other sites

418007_236320963166712_25797953_n.jpg

- முகநூல்

ஏன் இந்த மனிதாபிமான வேறுபாடு என அருந்ததி ராய் சனல் நாலிற்கு கூறுகின்றார்:

அதில் ஒன்று - ஆயுதமாக பயன்படுத்தப்படுவது.

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bckey=AQ~~%2CAAAAAEabvr4~%2CWtd2HT-p_VhJQ6tgdykx3j23oh1YN-2U&bctid=2049927601001

Link to comment
Share on other sites

டெல்லி சம்பவம்: The End

 

** இன்னொரு போராட்ட அலை இதன் பொருட்டு எழுந்துவிடக்கூடாது என்பதற்கும், உறங்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் ஆன்மாவை யாரும் தட்டியெழுப்பிவிடக்கூடாது என்பதற்கும் சேர்த்துதான் லத்தி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கி சகிதம் டெல்லியைக் காவல்துறை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது.

 

** பெண்களை எப்படிப் பாதுகாப்பது, குற்றவாளிகளை எப்படித் தண்டிப்பது, இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக பலரும் எழுதப்போகிறார்கள், மணிக்கணக்காக டிவியில் பேசப்போகிறார்கள், மெழுகுவர்த்தி ஏற்றி, பதாகைகள் பிடித்து குரல் கொடுக்கப்போகிறார்கள். பிடிபட்ட குற்றவாளிகளை Castration செய்யவேண்டுமா, தூக்கிலிடவேண்டுமா, ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டுமா என்று விவாதிக்கப்போகிறார்கள்.

 

** வாகனங்களில் சிசிடிவி பொருத்துவது, பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே கொடுப்பது, போலிஸ் பேட்ரோல் அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல யோசனைகள் உதிர்க்கப்படவிருக்கின்றன.
 

** எல்லாம் ஓய்ந்த பிறகு,  டெல்லியில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும். இந்தியா தனது துக்கத்தை உதறித்தள்ளும். மெழுகுவர்த்திகள் அணைக்கப்படும். அறுந்த செருப்புகளையும் சிதறிய காகிதங்களையும் கிழிந்து தொங்கும் பதாகைகளையும் டெல்லி முனிசிபில் தொழிலாளர்கள் பெருக்கிச் சுத்தப்படுத்தி அகற்றுவார்கள். டிவி ரிப்போர்டர்கள் டெல்லியில் இருந்து விடைபெறுவார்கள்.

 

http://www.tamilpaper.net/?p=7276

Link to comment
Share on other sites

 “வீரம் மிகுந்த அந்த மாணவி…” – மன்மோகன்  :wub:


“இந்தியாவின் தைரியமான மகள்..”.-பிரணாப்  :rolleyes: 

 

 

 “குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை: மன்மோகன், சோனியா உறுதி”  :icon_idea:

 

Gang-Rape-Mother-India.jpg

Link to comment
Share on other sites

டெல்கியில் கோமாளிகள் கூட்டத்திலிருந்த யரோ ஒரு அப்பாவி, அழகிய பொண்ணு ஒன்று இறந்து போவிட்டது. அறிவாளியும் கூட. வாழ்க்கையில் லக்காக தனது மனதுக்கு பிடித்த ஒரு போய் பிரண்டுகூட. எல்லாம் போவிட்டது. சுதந்திரம் என்பது எல்லோருக்கும் சமனாக இருக்க வேண்டுமென்பதில்லையா? மேட்டுக்குடி, காடுக்குடி, ஆண், பெண், கோமளி, ஒழுங்கானவன், கிழடு, இளசு..... எல்லோருக்கும்தான். அந்த ஒரு கோமாளிதனதுக்காகத்தான் ஒரு ஜனநாயக அரசு எல்லா பொதுமகன் வீடுக்கும் மேலே கூரையாக இருக்க வேண்டும்.  தனி ஒரு மனிதனுக்கு இரவு 11 மணிக்கு படம் பார்க்க போக முடியாதென்றால் சகல படத்தியேட்டர்களும் அடித்து மூடப்படவேண்டும். அபோதுதான் சுதந்திரம் எல்லோருக்கும் சமனாகும்.

 

கோமாளிக் கிந்திய அரசில் அது இருக்கவில்லை. 22,000 ல் 22001 ஒன்றாக தன் வாழ்கையை அனுபவிக்க ஆரம்பித்த இளசு பரதவிக்க பரதவிக்க படுகொலை பண்ணப்பட்டுவிட்டது. கொலைகாரர்கள் அந்த கோமாளிகள் அரசில் தண்டனை அனுபவிப்பதில்லை. சென்ற வருடம் 22,000 பெண்களும் எதையோ செய்ததிற்கு தலா ஒருவரை தூக்க வேண்டி வந்தாலும் இந்தியாவுக்கு கயிறு ஏற்றுமதி செய்வது நல்ல வியாபாரமாக மாறியிருக்கும். இந்த வன்புணர்வு கோமாளிகள் எப்படியோ தப்பித்துவிடுகிறார்கள். இதில் ஆழும் கட்சி, எதிர்க்கட்சி, மேடுக்குடி, காட்டுக்குடி என்ற பேதம் ஒன்றும் கிடையாது. இந்த கோமாளிகளுக்கு இருக்க வேண்டியது கில்லாடித்தனம் மட்டும்தான். 

 

ஆனால் கங்கிரஸ் கில்லாடிகள் எட்டுப் பத்துவருசம் பதவியில் இருந்து மக்களைப் படுத்தாத பாடு படுத்திவிட்டாங்கள்.  அதற்கு எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கும் நல்ல சந்தர்பம் இது. அவங்க இதை அரசியலாக்கி விட்டாங்கள். 22,000 பெண்களுக்கும் ஒருத்தன் எழுந்து நிற்கவில்லை. யாரு இந்த பொண்ணு? பிரியங்காவின் சகோதரியா? ஆயிரம் ஆயிரமாக இரவு பகலாக திரள்கிறாங்கள். இதை நாம் ஒருதடவை  பேசப் போனால், நாம் தான் அரசிலாக்குவதாக எதிர்க்கட்சி கோமாளிகள் நம்ம வாயை அடைத்துவிடுவாங்கள். இந்த பொண்ணுக்கு நடந்த துரோகத்தை வைத்து யாரோ ஒரு ப.ஜ.க கூட்டம் டெல்கியில் மன்மோகன் சிங் மீதும், சோனியா மீதும் நிறையத்தான் விட்டு எறிகிறாங்கள். இந்த சமாசாரம் சாயமுதல் காங்கிரஸ் வீழ்ந்திட வேண்டும்.  அதற்கு காங்கிரஸ்காரங்கள் மன்னிப்பு கேட்கிறாங்கள். அதே நேரம் இன்னொரு தொகுதியில் இன்னொரு ப.ஜ.க. பெண்கள் தூண்டித்தான் பெண்கள் மீது பாலியல் வக்கிரம் நடக்கிறது என்று பேசுகிறான். அதை எதிர்க்க காங்கிரஸ்காரன் இந்த பாலியல் வக்கிரம் அப்படி ஒன்றும் பெரியதல்ல; இவங்க எதிர்க்கட்சிகள் இப்போ கிளறிவிட்ட தில்லுமுல்லுத்தான் இது எங்கிறார்கள்.

 

பெண்கள் தூண்டிவிட்டு தான் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள் என்றல், இந்திய கோவில் தூபிகளையும் ராஜா கோபுரங்களியும் இடித்து நொறுக்க தயாராக இருக்கிறாங்களா இந்த பா.ஜ.கவுகள். பள்ளி போகும் சிறுமிகளைப்பார்த்தே கட்டுககடங்காமல் வலிப்பெடுக்கும் இந்த பா.ஜ.கவுகள், தாம் பதவிக்கு வந்தால்,  கிளுகிளுப்புப் போலி வூட்டு, காலி வூட்டுக்கு கடைகளை மூடிக்கட்டி அந்த கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பத்தயாரா? அதை தேர்தல் விஞ்ஞாபனமாக வைத்து போட்டியிடுவார்களா?  பள்ளிபுள்ளைகலே சலவார் கமிசு அணிந்துதான் பள்ளி போக வேண்டும் என்று கேட்டால் பின்னர் எதற்காக கன்னட பா.ஜ.க மந்திரிகள் சட்டசபையில் வைத்து புளு பிலிம் பாங்கிறாங்களோ.  

 

அந்த பொண்ணுக்கு இதை செய்தவங்களுக்கு, தூக்குத்தான் இந்திய சட்டமாக இருந்தால் (நான் எந்த நாட்டிலும், அமெரிக்கா அடங்கலாக, தூக்கு தண்டணைக்கு எதிரானவன்), சட்டத்தை நிறைவேற்றினால் அதை குறைகூற முடியாது. ஆனல் நாம் கும்பலில் கோவிந்தா போடுவதில்லை. நமது வழமை, குரல் இல்லாதவனுக்கு குரல் கொடுப்பதுதான்.இவனுகள் எல்லோரும் அதை கேட்கும் போது இந்த கோமாளிநாடு மற்றைய 22,000 பேயரையும் தண்டித்து 22,001 ஆக்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. எதற்கும் ஒருதடவை - இந்த கோமாளிகள் நாட்டு விவகாரம் நமக்கு தேவையா? இதைத்தான் ஔவை சொன்னாரா?

 

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார் சொற் கேட்பது வுந்தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ (டு)
இணங்கி இருப்பதுவுந் தீது.

 

அப்புறம் எதற்கு கிந்திய கோமாளிகளின் விவகாரம் நமக்கு?

Link to comment
Share on other sites

மன்னிக்க வேண்டுகிறேன்

(டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவமாணவி இறப்பதற்கு முன்பு குமுதம் வாரஇதழில் வெளியான கட்டுரை)

அன்புள்ள.............................!

a_delhi_demo.jpgஉன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.

டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு,  எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.  உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர்  பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.

உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய்.  நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும்  உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும்,  பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.

உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர்  மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய  எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.

மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.

படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

நாங்கள்தான் – we the people of Indiaதான்.  காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.

படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை  வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.

அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது.  மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண்  பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.

உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.

உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம்  காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம்  உனக்கு -  உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.

delhi_demo-1.jpgநியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.

பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.

குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இதுஸ.

படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல்  வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.

இந்த சூழலில் படித்தவனாக இருந்தால்  அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ?  வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க,  பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.

மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்.  ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.

அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.

இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்.  நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.

அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன்  வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.

அன்புடன்

ஞாநி

சக இந்தியர்கள் சார்பாக.

குமுதம் 26.12.2012

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.