Jump to content

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது


SUNDHAL

Recommended Posts

எல்லா இந்தியப் பெண்களையும் பர்தா அணியச் சொல்கிறார் மதுரை ஆதீனம்! 

[sunday, 2012-12-30 17:31:04]
madurai-aadheenam-301212-150.jpg

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன்மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.  

இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

 

 

இருந்தாலும் மதுரை ஆதீனத்தை பார்க்கும் ஆண்கள் விழுப்புரம் அரவான் கோவில் பக்கத்தர்களாக மாறப்போகிறார்கள். அடுத்த தானத்தில் ஒரு சேட் வாங்கிக்கொடுத்தால் எப்படி? :D

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

இசை: அங்கு போராடுபவர்கள் எல்லா பெண்கௌக்குமாக தான் போராடுகிறார்கள்..என்று நினைக்கிறென்..செத்த பெண் ஒரு அடையாளம்..

Link to comment
Share on other sites

இசை: அங்கு போராடுபவர்கள் எல்லா பெண்கௌக்குமாக தான் போராடுகிறார்கள்..என்று நினைக்கிறென்..செத்த பெண் ஒரு அடையாளம்..

 

இந்த பொண்ணுக்கு இது நடந்தபின்னர் எல்லோருக்கமாக ஆரம்பிக்காலாம் என்று காத்திருந்தாங்க போலை.

 

அப்ப டெல்கியில் நடந்த அடுத்த பெண்ணின் படத்தையும் துக்கி பிடித்து மரண தண்டனை கேட்கிறாங்களா அல்லது, எல்லா  சிவன் கோவில்களும் இந்த ஒரு சிவலிங்கம் போதும் என்று விட்டுவிட்டங்களா?

Link to comment
Share on other sites

இந்த பொண்ணுக்கு இது நடந்தபின்னர் எல்லோருக்கமாக ஆரம்பிக்காலாம் என்று காத்திருந்தாங்க போலை.

 

அப்ப டெல்கியில் நடந்த அடுத்த பெண்ணின் படத்தையும் துக்கி பிடித்து மரண தண்டனை கேட்கிறாங்களா அல்லது, எல்லா  சிவன் கோவில்களும் இந்த ஒரு சிவலிங்கம் போதும் என்று விட்டுவிட்டங்களா?

 

குற்றம் செய்தவன்கள் மடப்பசங்கள்..! பஸ்ஸில இருந்து தூக்கிப் போட்டிருக்காட்டில், இப்பவும் பஸ் ஓடிக்கொண்டிருப்பான்கள்..! :D

Link to comment
Share on other sites

குற்றம் செய்தவன்கள் மடப்பசங்கள்..! பஸ்ஸில இருந்து தூக்கிப் போட்டிருக்காட்டில், இப்பவும் பஸ் ஓடிக்கொண்டிருப்பான்கள்..! :D

 

மட இந்தியாவில் இதுவே நடந்திருக்கும்..

அந்த பெண் இரண்டிருக்காவிட்டால் அந்த 6 மிருகங்களும் வெளியே தான் திரிந்திருக்கும்

Link to comment
Share on other sites

டில்லியில் பாலியல் பலாத்காரத்தால் மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி

புதுடில்லி:"டில்லியில், பாலியல் பலாத்காரத்தால், உயிரிழந்த மருத்துவ மாணவியின் குடும்பத்துக்கு, 15 லட்சம் ரூபாய், நிதி உதவி அளிக்கப்படும்; அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு, அரசு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்' என, டில்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

டில்லியில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான மருத்துவ மாணவி, சமீபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து, ஆலோசிப்பதற்காக, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையில், அமைச்சரவை கூட்டம், நடந்தது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:

உயிரிழந்த மாணவி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். மாணவியின் தந்தை, சொத்துக்களை விற்று, அவரை படிக்க வைத்துள்ளார். தற்போது, மாணவி இறந்ததால், அந்த குடும்பம், பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.அந்த குடும்பத்திற்கு உதவும் வகையில், 15 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். மேலும், மாணவியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு, அரசு வேலை அளிக்கப்படும்.இவ்வாறு, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை தயார்:இதற்கிடையே, மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும், டில்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த வழக்கில், 30 பேர், சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, 1,000 பக்கங்களை உடையை, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி, முடிவடைந்துள்ளது. டில்லி, சாகேட் கோர்ட்டில், இன்னும் சில நாட்களில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

இந்த குற்றப்பத்திரிகையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, ஆறு பேரும், எந்த மாதிரியான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், குற்றவாளிகளுக்கு, அதிகபட்ச தண்டனையாக, மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும், கோர்ட்டில் வலியுறுத்துவோம்.இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

கருத்து கேட்கிறது மத்திய அரசு:"டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்து, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.இதையடுத்து, "ஒவ்வொரு மாநில அரசும், இது தொடர்பாக, தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்' என, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, விசாரித்து வரும், நீதிபதி வர்மா தலைமையிலான குழு, 30 நாட்களுக்குள், அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதால், மாநில அரசுகள், அதற்கு முன்பாக, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, தன் கடிதத்தில், சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

Dinamalar

Link to comment
Share on other sites

பெண்கள் போன் செய்தால் போதும்:"கவனிக்க' அடியாட்களை அனுப்புகிறது சிவசேனா

மும்பை:டில்லியில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்டதை அடுத்து, பெண்கள் பாதுகாப்பிற்காக, சிவசேனா இளைஞர் அணி, பெண்களுக்கான, "ஹெல்ப் லைன்' துவக்கியுள்ளது. மறைந்த பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அந்த தினத்தன்று, இளம் ஜோடிகளை அடித்து விரட்டிய அந்த கட்சி, இப்போது, பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.

பால் தாக்கரேயின் பேரன், ஆதித்ய தாக்கரே தலைமையிலான, "சிவசேனா யுவ சேனா' அமைப்பு, மும்பை பெண்களுக்கான, 24 மணி நேர, ஹெல்ப் லைனை ஏற்படுத்தியுள்ளது.

பிறரால் தங்களுக்கு தொந்தரவு என கருதும் பெண்கள், இந்த எண்களை தொடர்பு கொண்டால் போதும், அந்த இடத்தில் வந்திறங்கும் சிவசேனா கட்சியினர், தொந்தரவு செய்பவர்களை, நன்கு, "கவனித்து' விடுவர்.

டில்லி சம்பவத்தை அடுத்து, சில நாட்களுக்கு முன் தான், மும்பையில் இந்த வசதியை, ஆதித்ய தாக்கரே ஏற்படுத்தியுள்ளார். தினமும், 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக கூறப்படுகிறது.அதுபோலவே, சிவசேனாவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து, முன்னணி தலைவராக விளங்கும், முன்னாள் முதல்வரும், இப்போதைய, மாநில அமைச்சருமான, நாராயண் ரானேயின் மகன், நிதேஷ் ரானே நடத்தி வரும், "சுவாபிமான் சங்கத்னா' அமைப்பும், பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.

இது பற்றி, ரானேயின் அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறியதாவது:எங்களுக்கு அழைப்பு வந்த உடனேயே அந்த இடத்தில் உள்ள எங்கள் கட்சியினரை உஷார்படுத்தி, சம்பவ இடத்திற்கு அனுப்பி, அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குவோம். அடுத்த சில நிமிடங்களில், போலீசுக்கும் தகவல் தெரிவித்து, அவர்களும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்வோம்.தொடர்ந்து சில நாட்களுக்கு அந்த விவகாரத்தை கண்காணிப்போம். இதனால் அந்த பெண்ணுக்கு, முழு அளவில் பாதுகாப்பு கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Dinamalar

Link to comment
Share on other sites

ஆறுபேர் நடத்திய பாலியல் வேட்கைக்கு 15 லட்சம் கூலி கொடுத்திருக்கிறார் ஷீலா தீட்சித். அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.

 

அவ்வளவு பாசம் இருந்தால் பதவியை விட்டு விலகலாமே..

Link to comment
Share on other sites

arrow.png
 
 
புதுடில்லி பெண் தொடர்பில் அக்கறை கொள்ளும் தகமை எமது நாட்டுக்கு இல்லை
PostDateIcon.pngதிங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012 16:14
lg-share-ta.gif

baskara.jpgபுது டில்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயமடைந்து மரணமான  இந்திய பெண் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என முன்னணியின் ஊடக செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ். பாஸ்கரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

புதுடில்லி பெண்ணின் பாலியல் வல்லுறவு கொலை தொடர்பாக, ஐதேகவின் மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாநகரசபை ஐதேக உறுப்பினர்களின் பிரதான பங்குபற்றலில் ஒரு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெறப்பட்ட கையெழுத்து மனு இலங்கையிலுள்ள இந்திய  தூதுவரிடம் கையளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. 

மாநகரசபை முன்றலில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் கட்சி தலைவர் மனோ கணேசன் அவர்களது அறிவுறுத்தலின் பேரில் நமது கட்சி உறுப்பினர்கள் எவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வில்லை.

புதுடில்லி பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் தொடர்பாக நாம் அக்கறை கொண்டுள்ளோம் அதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.  ஆனால், புதுடில்லி பெண் தொடர்பில் இந்திய தூதுவரிடம் மனு கையளிக்கும் நிலைமையும்,  தகைமையும்  நமது நாட்டில் நிலவுவதாக நாம் நம்பவில்லை. இந்த நாட்டில் இன்று தமிழ் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம், புதுடில்லி பெண்களின் நிலைமையைவிட  பல மடங்கு பாரதூரமானதாகும் என்பது எமது நிலைப்பாடாகும். குறிப்பாக இன்று வன்னியிலே நிர்க்கதியாயுள்ள தமிழ் பெண்கள் பெரும் உடல், உள துன்பங்களை சந்திக்கின்றனர். நடந்து முடிந்த போரின் போதும், போர் முடிந்து அகதிமுகாம்களில் அடைப்பட்டிருந்தபோதும் நமது பெண்கள் மிகபெரும் அவலங்களை சந்திக்கின்றனர். இந்த அவலங்கள் இன்றும் தொடர்கின்றன.

எனவே நமது பெண்கள் அவல நிலையில் வாழும் பொழுது, அதை அறியாதது போல் புதுடில்லி பெண் தொடர்பாக நாம் செயல்பட முடியாது. நம் நாட்டு தமிழ் பெண்களின் அவல நிலையை ஐதேக பெண்கள் சங்கத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஐதேகவினருக்கு நாம் எடுத்து கூறியுள்ளோம். 

 

http://www.tamilleader.com/prathanaalias/8387-2012-12-31-10-47-56.html

Link to comment
Share on other sites

Bomb found near home of Delhi rape suspect

AAP

January 01, 2013 7:04PM

INDIAN police have arrested a man who was allegedly trying to plant a crude bomb near the home of one of the accused in the New Delhi gang-rape and murder case.

The 37-year-old man was arrested on Tuesday in the narrow bylanes of Ravi Dass Camp, a slum in southwest Delhi where four of the six accused lived, an officer in the city police control room said.

The low-grade device was filled with explosives usually used in firecrackers, he said.

Two of the other accused come from outside Delhi, according to police.

The incident reflects growing anger across the country since the 23-year-old medical student was repeatedly assaulted and violated with an iron bar while being driven around in a bus on the night of December 16.

The suspects, some of whom were reportedly attacked in jail last week, are to be formally charged with rape and murder on Thursday.

Thanks to news.com

Link to comment
Share on other sites

டெல்லி: டெல்லியில் இளம் பிசியோதெரப்பி மாணவியை ஓடும் பஸ்சில், பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்குக் காரணமானவர்களில் ஒருவரான பஸ் டிரைவர் ராம் சிங்கின் வீடு மீது வெடிகுண்டு வீச வந்தவர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து சாலையில் தூக்கி வீசியது. இதில் அந்த மாணவி கடும் காயமடைந்தார்.பெரும் உயிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவரது வாழ்க்கை சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் மருத்துவமனையில் முடிந்து போனது.

இந்தக் கொடுமையான சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் ராம்சிங் உள்ளிட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ராம்சிங்கின் வீடு உள்ள ஆர்.கே.புரம் ரவிதாஸ் குடிசைப் பகுதிக்கு 3 பேர் வந்தனர். அங்கு ராம்சிங்கின் வீடு எங்குள்ளது என்று அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அப்பகுதி மக்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டபோது, நாங்கள் வெடிகுண்டு வீச வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். இதையடுத்து 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒரே ஒரு நபர் மட்டும் சிக்கினார். அவரிடமிருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Thatstamil

Link to comment
Share on other sites

டில்லி மாணவி பாலியல் வல்லுறவு குறித்த கருத்தால் சர்ச்சை : மத்திய அமைச்சர் சசி தரூருக்கு கண்டனம்

புதுடில்லி: டில்லியில் பாலியல் கொடுமைக்கு ஆளான 23 வயது இளம் பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அப்பெண்ணின் முழு அடையாளத்தையும் வெளியிட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் சசி தரூரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

டிசம்பர் 16-ம் தேதி டில்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி தனது ஆண் நண்பருடன் சென்ற போது 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது. மாணவிகள், மகளிர் அமைப்பினர் கடந்த 10 நாட்களாக டில்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அம்மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பார்லிமென்ட்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் ஆவேசப்பட்டனர். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து பாலியல் வல்லுறவு குற்றத்திற்கு கடுமையான சட்டம் கொண்டு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் சசிதரூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. தனது டுவீட்டரில் சசிதரூர் கூறுகையில், பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த பெண் யார்?, என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் ‌அவரது பெற்ற‌ோரின் சம்மதத்துடன் வெளியிட வேண்டும். மேலும் பாலியல் வல்லுறவுக்கு எதிராக கொண்டு வரப்படும் புதிய சட்டத்திற்கு , அம்மாணவியின் பெயரை வைக்கலாம். இது அம்மாணவிக்கு நாம் செலுத்தும் கவுரவம் .இவ்வாறு அவர் கூறினார். இவரின் கருத்திற்கு தேசிய மகளிர் கமிஷன், பா.ஜ. உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Dinamalar

உ.பி.,யில் மருத்துவ மாணவி பெயரில் பள்ளி

பாலியா( உ.பி): டில்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, சிங்கப்பூரில் மரணமடைந்த மருத்துவ கல்லூரி மாணவியின் சொந்த ஊரான உ.பி.,யின் பாலியா மாவட்டத்தில் உள்ள மெட்வார் காலன் கிராமத்தில் உள்ள துவக்க பள்ளிக்கு, அந்த மாணவியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் எடுக்கப்பட்டதாக கிராம தலைவர் கூறினார். விரைவில் பஞ்சாயத்து கூட்டப்பட்டு பெயர் சூட்டுவதற்கான ஒப்புதல் பெறப்படும் என கூறினார். கிராமத்தில் மாணவியின் நினைவாக கட்டடம் மற்றும் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என மருத்துவ மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Dinamalar

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.