Archived

This topic is now archived and is closed to further replies.

SUNDHAL

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது

Recommended Posts

மன்னிக்க வேண்டுகிறேன்

(டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவமாணவி இறப்பதற்கு முன்பு குமுதம் வாரஇதழில் வெளியான கட்டுரை)

அன்புள்ள.............................!

a_delhi_demo.jpgஉன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.

டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு,  எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.  உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர்  பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.

உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய்.  நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும்  உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும்,  பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.

உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர்  மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய  எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.

மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.

படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

நாங்கள்தான் – we the people of Indiaதான்.  காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.

படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை  வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.

அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது.  மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண்  பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.

உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.

உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம்  காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம்  உனக்கு -  உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.

delhi_demo-1.jpgநியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.

பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.

குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இதுஸ.

படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல்  வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.

இந்த சூழலில் படித்தவனாக இருந்தால்  அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ?  வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க,  பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.

மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்.  ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.

அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.

இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்.  நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.

அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன்  வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.

அன்புடன்

ஞாநி

சக இந்தியர்கள் சார்பாக.

குமுதம் 26.12.2012

Share this post


Link to post
Share on other sites

எது என்னவாக இருந்தாலும் ஒரு பெண் மனித இனம் வெட்கம் அடையும் வகையில் சிதைக்கப்பட்டிருக்கின்றாள். அது டெல்லியில் நடந்தால் என்ன தமிழ்நாட்டில் நடந்தால் என்ன உலகின் வேறு எந்த மூலையில் நடந்தால் என்ன கண்டிக்கப்படவேண்டியது.

 

இந்த நாகரிகம் மிகுந்த உலகில் பெண்கள் மீது ஆண்களால் மேற்கொள்ளப்படும் காட்டுமிராண்டித் தனமான பாலியல் வன்முறைகள் குறித்து, ஓர் ஆண் என்ற வகையில் வெட்கித் தலைகுனிகிறேன்.

 

இவ்வாறான பேர்வழிகளுக்கு தண்டனையாக அவர்கள் கொல்லப்படக்கூடாது நிரந்தரமாக அண்ணகர்களாக்கப்பட்டு அந்த வலியுடன் வாழவிடப்படவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

418007_236320963166712_25797953_n.jpg

- முகநூல்

ஏன் இந்த மனிதாபிமான வேறுபாடு என அருந்ததி ராய் சனல் நாலிற்கு கூறுகின்றார்:

அதில் ஒன்று - ஆயுதமாக பயன்படுத்தப்படுவது.

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bckey=AQ~~%2CAAAAAEabvr4~%2CWtd2HT-p_VhJQ6tgdykx3j23oh1YN-2U&bctid=2049927601001

 

 

தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு என்ன நடந்தது என சரியா தெரியவில்லை?...அவரும் கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருந்தால் உடனே கிளர்ந்து எழுந்திருக்க வேண்டியது முதலில் தமிழ் நாட்டு மக்களே!...அப்போது வாயை மூடி பேசாமல் இருந்து போட்டு டில்லிப் பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நட‌ந்தவுட‌ன் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்ட‌ம் அது,இது என முதலில் செய்ய வெளிக்கிட்டவுட‌ன் தமிழ் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்யாமல் டில்லிப் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறீர்களே என சண்டை பிடிக்கிறீங்களே வெட்கமாய் இல்லை...தமிழ் பெண்ணுக்கு என்ன நட‌ந்தது என்பதே ஊட‌கங்களில் அதுவும் தமிழ் ஊட‌கங்களில் பெரிதாக வர‌வில்லை அப்படி இருக்கும் போது மக்களுக்கு எப்படி தெரிய வரும்?
 
இந்தியாவில் ஒவ்வொரு நிமிட‌த்திற்கு ஒவ்வொரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த டில்லிப் பெண்ணுக்கு நட‌ந்தது வித்தியாச‌ம்...ஓடும் பேருந்து,6 பேர்,ஆண் நண்பரை தாக்கி போட்டு இப்படி அந்த பெண்ணுக்கு நட‌ந்திருக்குது,வன்புணர்ந்து முடிந்த பின்னரும் அந்த பெண்ணினது உறுப்புக்களை சிதைத்திருக்கிறார்கள் இதற்கு பேசாமல் கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம்...  கேவலத்திலும்,கேவலமான வக்கிர‌ மனம் படைத்தவர்களாலேயே இப்படி செய்ய முடியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Share this post


Link to post
Share on other sites

சபாஷ் ரதி டெல்லி பெண்கள் பொறுத்தது போதும் என்று கிளர்ந்தெழுந்து போராட்டம் நடாத்துக்கின்றார்கள் அகூதா அண்ணா போன்றவர்கள் அதுக்குள்ளும் புகுந்து அரசியல் செய்கின்றார்கள் மிகவும் கேவலமான விடையம்

யாழ்ப்பாணத்தில நாலு வயசு பொண்ணு பாலியல் பாலத்த்காரம் செய்து கொலப்பட்டால் அதுக்கு yethira போராட யாழ்ப்பான பொண்ணுங்களுக்கு வாக்கில வந்திட்டாங்க இந்திய பொண்ணுங்களா குறை சொல்ல

தமிழ் நாட்டில் ஒரு மாணவி கொள்ளப்படதர்க்கு தமிழ் நாட்டு மாணவர் அமைப்புக்கள் ஆல்லாவா போராடி இருக்கணும் அதுவும் இல்ல டெல்லில நடக்கிற கொடுமைக்காக அவங்க போராடுறாங்க அதுக்குள்ளே ஆட்டுக்குள்ள மாட்ட கொண்டுவந்து விட்டுகிட்டு

விட்டா சொல்லுவான்கையா இலங்கையின் வடக்கு கிழக்கில் நடை பெரும் இராணுவ ஆட்சிக்கு எதிராவும் எகிப்து மாணவர்கள் போராடி புரட்சி செஞ்சிருக்கணும் என்று :D

Share this post


Link to post
Share on other sites

டில்லியில் இதுவரை 635 வன்புணர்வு ; 1க்கு மட்டும் தண்டனை

 

இந்திய தலைநகர் டில்லியில் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 635 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதியப்பட்டதாகவும், இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளி என தண்டனை கிடைத்ததாகவும் தற்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

 

2012 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான வழக்கு தொடர்பான இந்த அறிக்கையின்படி 635 பாலியல் வல்லுறவு வழக்குகள் தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 403 பேர் கோர்ட் இறுதி விசாரணையின கீழ் இருந்து வருகின்றனர். 348 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளனர். 2 பேர் விலக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம் பெண்களிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக 624 வழக்கு, ஈவ்டீசிங் தொடர்பாக 193 வழக்குகள் , 111 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 128 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு புள்ளி விவரங்களை பார்க்கும் போது சராசரியாக 10 சதம் குற்றம் அதிகரித்து வந்துள்ளதை காட்டுகிறது. வழக்கு, விசாரணை,

தண்டனை என்ற போதிலும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பது வேதனையான விஷயம்.

 

ஆண்டு வாரியாக விவரம் : @@

 

கடந்த ஆண்டில் பதிவான பாலியல் வல்லுறவு வழக்குகள் விவரம் வருமாறு: ஆண்டு அடைகுறிக்குள் வழங்கப்பட்டுள்ளது . 572 வழக்குகள் ( 2011 ), 507 ( 2010 ) , 469 ( 2009 ) , 466 ( 2008) .

 

கடந்த 2011 ல் மட்டும் 745 பேர் பாலியல் வல்லுறவு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குற்றவாளிகளாக கோர்ட் தீர்ப்பளித்தது. 34 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 597 பேர் விசாரணை கட்டத்தில் உள்ளனர். 86 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணை, 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

2010 ல் 685 பேர் கைது செய்யப்பட்டு 37 பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது. 107 பேர் போதிய ஆதாரம் இல்லாமல் தப்பித்து விட்டனர் . 518 பேர் வழக்கு விசாரணைக்குள் இருக்கின்றனர். 13 பேர் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. 2009 ல் 675 பேரும் , 2008 ல் 604 பேரும் கைது செய்யப்பட்டு , மொத்தம் இரு ஆண்டும் சேர்த்து 134 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%B5%E0%AE%B0-635-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-104000034.htmlTamil_News_large_616581.jpg

Share this post


Link to post
Share on other sites

பாலியல் வல்லுறவு: உயிரிழந்தவருக்கு இறுதிச்சடங்கு

 

இந்தியத் தலைநகர் தில்லியில் பேருந்தில் வைத்து பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இறந்து போன இளம் பெண்ணுக்கு இறுதிக்கிரியைகள் நடந்து முடிந்தன.

 

http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121230_rapefuneral.shtml

Share this post


Link to post
Share on other sites

இதே வேளை எல்லாவற்றுக்கும் இணங்கி விட்டு ஐயையோ என்ன கெடுத்திட்டாங்க என்று சொல்லும் பெண்களும் மற்றும் போலி புகார் கொடுக்கும் பெண்களும் இருக்காங்க அவங்களையும் தூக்கி உள்ள போட்டு முட்டிக்கு முட்டி தட்டனும்

Share this post


Link to post
Share on other sites

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ...............

குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து ,நீதியும் சமத்துவமும் நிலை நாட்டி இப்படியான எந்த சம்பவங்களும் உலகில் ஒருவர்க்குமே நடக்க கூடாது என்பதே எனது அவா.......................

புரட்சி சொல்வது போல் நான் கூட பேச விரும்பவில்லை .அப்புறம் புலிப்பயங்கரவாதிகளுக்கும் ,இதற்கும் தொடர்பு உள்ளதென பிளேட்டை மாத்தினாலும் மாத்துவான்கப்பா. ................சோ .....நீதி கிடைக்க ,உண்மை நிலை நாட்டப்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்

Share this post


Link to post
Share on other sites

Tamil_News_large_616581.jpg

 

396829_315349025242272_1713720858_n.jpg

Share this post


Link to post
Share on other sites

SHE was due to marry her boyfriend in a matter of weeks, was the apple of her father's eye and her friends were convinced she would achieve great things after completing her medical studies.

While India has seen an outpouring of grief for the 23-year-old who suffered fatal injuries when she was gang-raped on December 16, those who actually knew her paint a portrait of a young woman who was both in love and much loved.

Although not formally engaged, it was well-known by her friends that she was planning to marry the boyfriend who also suffered serious injuries in the same attack that would ultimately lead to her death.

Meena Rai said that she had been shopping with the unnamed victim for wedding outfits and the contents of a wedding box.

"She was supposed to get married in February to the same guy who was attacked on the bus with her," said Rai, who lived next door in Mahavir Enclave, a neighbourhood in southwestern New Delhi.

Thanks to telegraph

Share this post


Link to post
Share on other sites

ஒரே மகிழ்ச்சி.. தமிழகத்தில் பெரிய நினைவேந்தல் ஏதும் நடைபெறவில்லை. மலையாள, ஐயர்வீட்டும் மாமிகள் சற்று இறுக்கத்துடனும், சில சிறுமிகள் புன்சிரிப்புடனும் காட்சியளித்தது மட்டும்தான் நடந்தது. :rolleyes:

 

தமிழகத்தின் சிந்தனைப்போக்கில் ஏற்பட்ட மாற்றமாகவே இதனைக் கருதுகிறேன். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

The young couple had spent the evening together at a mall watching The Life of Pi before they boarded a bus they thought would take them home.

Her parents sold their small piece of land in rural Uttar Pradesh in order to fund their daughter's education, often limiting their own meals to little more than rotis with namak (bread with salt), according to friends.

தங்களிற்கு என்று இருந்த ஒரு சின்ன காணித்துண்டை விற்று தாங்கள் ரொட்டியும் பாணும் சாப்பிட்டு கொண்டு தங்கள் பெண்ணை படிக்க வைதிஉகின்ட்ரார்கல் அந்த பெண்ணிற்கும் அந்த பையனுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க கூட இருந்ததாம்

ஒரே மகிழ்ச்சி.. தமிழகத்தில் பெரிய நினைவேந்தல் ஏதும் நடைபெறவில்லை. மலையாள, ஐயர்வீட்டும் மாமிகள் சற்று இறுக்கத்துடனும், சில சிறுமிகள் புன்சிரிப்புடனும் காட்சியளித்தது மட்டும்தான் நடந்தது. :rolleyes:

தமிழகத்தின் சிந்தனைப்போக்கில் ஏற்பட்ட மாற்றமாகவே இதனைக் கருதுகிறேன். :rolleyes:

தமிழ் நாட்டு காரங்களா விடுங்க அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பொண்ணு கற்பளிக்கபட்டா கூட வீதி க்கு வர மாட்டாங்க அப்பிடியே ஜென்னல திறந்து வைச்சிட்டு அதுக்குல்லாலா ரோடு ல என்ன நடக்கிதின்னு எட்டி பாப்பாங்க

Share this post


Link to post
Share on other sites

சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (வயது 20) என்ற பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததோடு கடுமையாக தாக்கி சம்பவம் நடந்த 3-வது மாடியில் இருந்து வீசி இருக்கிறார்கள். இதனால் சந்தியாவுக்கு தலையில் பலத்த படுகாயத்ததால் இரத்தப்போக்கு அதிகரித்து ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் வாக்குமூலத்தில், 'தன்னை 3 பேர் பலாத்தராத்திற்கு உட்படுத்தி மாடியில் இருந்து வீசியெறிந்தாக கூறி இருக்கிறார்.' அதற்கு பின் சில மணி நேரத்தில் இறந்திருக்கிறார். ஆனால் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தன.

 

சமீப காலமாக பெண்கள் மீது தொடரும் பாலியல் குற்றங்கள் இன்னும் அதிகரித்திருக்கிற நிலையில் சட்டமும், அரசும், ஊடகங்களும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செயல்படாமல் குற்றவாளிகளை பாதுகாக்கும் பொருட்டு கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு சமூக விரோத செயலை ஊக்குவிப்பது சர்வாதிகார ஆட்சியில் கூட ஏற்க முடியாத அநீதியாகும்...!!!

டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக போராடும் தமிழ்நாட்டு மக்கள் இந்த அநீதிக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம் ???

 

383609_396289817123215_1551322027_n.jpg

 

- from: fb -

Share this post


Link to post
Share on other sites

கூலித்தொளிலாளியாக டெல்லி விமான நிலையத்தில் வேலை செய்யும் அந்த பெண்ணின் தந்தை கூறுவாராம் நான் எனது மகளை கஷ்டப்பட்டு உழைத்து படிக்க வைகின்றேன் எனக்கு வயசானதும் அவள் என்னை பாத்துக்கொள்ளுவா என்று அதற்க்கு எற்றா போல அந்த மாணவியும் மிகவும் திறமை சாலியாம் நன்றாக உழைத்து தந்தையின் அந்த காணியை மீட்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுவாராம் தன்னுடைய நண்பர்களிடம்

Share this post


Link to post
Share on other sites

இன்று காலை நினைத்துக்கொண்டிருந்தேன்..

 

டெல்லி பஸ்ஸில் பாலியல் வல்லுறவு செய்தவர்கள் அந்தப்பெண்ணை குத்திக் கொலை செய்திருந்தார்கள் என்றால் இவ்வளவு பெரிய விடயமாகியிருக்குமா என்று. :unsure:

 

அதுபோல ஓடும் பேருந்தில் இருந்து தள்ளியிருக்காவிட்டால்??

 

அதுபோல அடித்து சிதைத்திருக்காவிட்டால்??

 

இப்போது துளசி இணைத்த சந்தியாவின் கதையைப் படித்தபோதுதான் விளங்குகிறது..  இடம், இனம் பார்த்தே செய்திகளும் பிரபலமாகின்றன என்பது.. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

சும்மா மற்றைய இனங்களையும் ஜாதிகளையும் நாடுகளையும் குற்றம் சாட்டாமல் முதலில் அவர்கள் போராடவேண்டும் இன்று தமிழ் நாட்டில் எத்தனை தலித் அமைப்புகள் கட்சிகள் இருக்கின்றன ஏன் அவர்கள் ஒன்றிணைந்து அந்த பொன்னுன்க்காக போராட கூடா?

Share this post


Link to post
Share on other sites

548689_567751656573022_2106938264_n.jpg

 

- from fb -

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் இந்த டெல்லி மாணவியின் உயிரிழப்பு மிகத் துயர் மிக்கதே. அது கடும் தொனியில் கண்டிக்கப்படத்தக்கது மட்டுமன்றி தடுக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் இதே காரணங்களோடு ஈழத்தில் சிங்கள இனவெறி அரசாலும்.. இந்திய அமைதிப்படையாலும்.. தமிழ் பெண்கள் திட்டமிட்டு பாலியல் ஆயுதம் கொண்டு.. அதுவும் கோத்தபாய போன்றவர்களின் பகிரங்க முழக்கத்துடன்.. அழிக்கப்பட்ட போது.. ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை..???!

 

இன்று இந்த மாணவிக்கு இரங்கும் கருணாநிதி.. பிரணாப் முகர்ஜி.. மன்மோகன் சிங்.. சோனியா காந்தி போன்றவர்கள்.... அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட..(கோத்தாவின் வெளிப்படையான முழக்கமான தமிழ் பெண்கள் எமது படையினருக்கு (சிங்களப் படையினருக்கு).. தமிழ் ஆண்கள்.. நந்திக் கடலுக்கு என்று சொல்லிச் சொல்லி) முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்னரும் இன்று வரையும் தொடரும்.. மிகக் கொடூர பாலியல் வன்புணர்வுக் கொலைகளையும்.. ஏனைய தமிழினப் படுகொலைகளையும்.. அன்று மட்டுமன்றி..இன்று வரை கண்டிக்காத நிலையைக் காண்கிறோம். இந்த அரசியல் பச்சோந்திகளின் அரசியல் நீலிக்கண்ணீருக்கு.. ஆதாயத்திற்கு ஒரு அப்பாவி மாணவியின் உயிரும் அவலச் சாவும் தானா கிடைத்தது..???!

 

உண்மை தான்.

 

இந்த படத்தையும் பாருங்கள். :( :( :(இளகிய மனமுடையோர் பார்க்க வேண்டாம்.

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/206467_455338661192919_1196882580_n.jpg

 

- பட மூலம்: முகநூல் -

 

Share this post


Link to post
Share on other sites

முடியல்லாப்பா முடியல்ல

548689_567751656573022_2106938264_n.jpg

- from fb -

Share this post


Link to post
Share on other sites

முதல்ல டெல்லி மாணவர்கள் மாதிரி இலங்கையில் இருக்கும் உங்கள் மாணவர்களையும் தமிழர்களையும் திரண்டு வீதிக்கு வந்து போராட சொல்லுங்க

Share this post


Link to post
Share on other sites

டெல்லி மாணவி மரணத்துக்கு பான்கீ மூன் இரங்கல் #
BAN-Ki-Moon Condoles death of rape victim #

 


....you, one of the reason, for the rape & killing of thousands of innocent tamil women in srilanka. You stand with Srilankan govt in all their atrocities against women and children & You joined the Srilankan Govt's victory parade of their genocidal war.. A CRIMINAL's CROCODILE TEARS....

 

- திருமுருகன் காந்தி -முதல்ல டெல்லி மாணவர்கள் மாதிரி இலங்கையில் இருக்கும் உங்கள் மாணவர்களையும் தமிழர்களையும் திரண்டு வீதிக்கு வந்து போராட சொல்லுங்க

 

டெல்லியில் இலங்கை போன்று இராணுவ அடக்குமுறை இல்லை.

Share this post


Link to post
Share on other sites
தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு என்ன நடந்தது என சரியா தெரியவில்லை?...அவரும் கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருந்தால் உடனே கிளர்ந்து எழுந்திருக்க வேண்டியது முதலில் தமிழ் நாட்டு மக்களே!...அப்போது வாயை மூடி பேசாமல் இருந்து போட்டு டில்லிப் பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நட‌ந்தவுட‌ன் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்ட‌ம் அது,இது என முதலில் செய்ய வெளிக்கிட்டவுட‌ன் தமிழ் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்யாமல் டில்லிப் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறீர்களே என சண்டை பிடிக்கிறீங்களே வெட்கமாய் இல்லை...தமிழ் பெண்ணுக்கு என்ன நட‌ந்தது என்பதே ஊட‌கங்களில் அதுவும் தமிழ் ஊட‌கங்களில் பெரிதாக வர‌வில்லை அப்படி இருக்கும் போது மக்களுக்கு எப்படி தெரிய வரும்?
 
இந்தியாவில் ஒவ்வொரு நிமிட‌த்திற்கு ஒவ்வொரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த டில்லிப் பெண்ணுக்கு நட‌ந்தது வித்தியாச‌ம்...ஓடும் பேருந்து,6 பேர்,ஆண் நண்பரை தாக்கி போட்டு இப்படி அந்த பெண்ணுக்கு நட‌ந்திருக்குது,வன்புணர்ந்து முடிந்த பின்னரும் அந்த பெண்ணினது உறுப்புக்களை சிதைத்திருக்கிறார்கள் இதற்கு பேசாமல் கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம்...  கேவலத்திலும்,கேவலமான வக்கிர‌ மனம் படைத்தவர்களாலேயே இப்படி செய்ய முடியும்.

 

இவ்வளவு பேசிற நீங்க.. தமிழச்சி தானே. பெண் தானே. ஏன் இன்னும் பெண்கள் மீதான இவ்வளவு கொடுமைகள் கண்டும்..கிளர்ந்து எழேல்ல...??! முதலில் உங்களைத் திருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியா இருக்கிற துணிவை வளர்த்துக் கொள்ளுங்க... அப்புறம்.. தான் மற்றவனைப் பார்த்து.. மற்றவன் என்ன செய்யனுன்னு  சொல்ல உங்களுக்கு தகுதி வரும்.

 

உலகமே ஆச்சரியமாப்.. அதிர்ச்சியோடு.. பார்க்கும் இந்தச் சம்பவத்தினூடு.. உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு நடத்தப்பட்ட.. நடத்தப்படும் பெண்கள் மீதான இதை விட மோசமான கொடுமைகளை..  பாலியலை ஆயுதமாக்கும் ஆட்சியாளர்களின் கொடுமைகளைச் சொல்வது ஒரு எந்த வகையில் கேவலம்..??! அதைக் கேவலம் என்று சிந்திக்கிற நீங்கள் தான் சொல்லனும்.. எப்படி அந்தக் கொடுமைகளுக்கு உலகின் கவனத்தை ஈர்ப்பது என்று. அதைச் சொல்லிட்டு திட்டுங்கள். எதிலும் சும்மா நாலு பேரின்.. கவன ஈர்ப்புக்கு மாற்றி எழுதினாப் போல.. அது எல்லாம் ஆரோக்கியமான கருத்தாகாது. :icon_idea::(

Share this post


Link to post
Share on other sites

டெல்லி மாணவி மரணத்துக்கு பான்கீ மூன் இரங்கல் #

BAN-Ki-Moon Condoles death of rape victim #

....you, one of the reason, for the rape & killing of thousands of innocent tamil women in srilanka. You stand with Srilankan govt in all their atrocities against women and children & You joined the Srilankan Govt's victory parade of their genocidal war.. A CRIMINAL's CROCODILE TEARS....

- திருமுருகன் காந்தி -

டெல்லியில் இலங்கை போன்று இராணுவ அடக்குமுறை இல்லை.

அடக்கு முறை இருந்தாலும் அதையும் மீறி போராடலாம் எகிப்ப்தில மாணவர் புரட்சி அப்பிடி தான் நடந்திச்சு லட்சக்கணக்கில் மக்கள் திரளும் போது என்ன பண்ணிவிட முடியும் அத விட்டிட்டு இதுக்குள்ள வந்து அரசியல் பண்ணிட்டு

Share this post


Link to post
Share on other sites
சும்மா மற்றைய இனங்களையும் ஜாதிகளையும் நாடுகளையும் குற்றம் சாட்டாமல் முதலில் அவர்கள் போராடவேண்டும் இன்று தமிழ் நாட்டில் எத்தனை தலித் அமைப்புகள் கட்சிகள் இருக்கின்றன ஏன் அவர்கள் ஒன்றிணைந்து அந்த பொன்னுன்க்காக போராட கூடா?

 

இந்தப் பெண் மீதான கொடுமை மோசமானது. அதன் மீது கடும் நடவடிக்கைகள் அவசியமும் கூட. அதற்கு மாற்றுக் கருத்தில்லை. அதேபோல்..

 

இந்தப் பெண் மீது நடந்த கொடுமைகளை விட மோசமான கொடுமைகளை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளார்கள். நூற்றுக்கணக்கில் உயிரையும் விட்டுள்ளனர். போராடியும் உள்ளார்கள். ஏன் அப்போது எவருக்கும் அவர்கள் மீது மனிதாபிமானம் வரல்ல..???! பாங்கி மூனுக்கு அனுதாபம் பிறக்கல்ல..???! சோனியாவுக்கு.. அக்கறை வரேல்ல..????!

 

இந்தப் பெண்ணின் விடயத்தில் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டவர்கள்.. மீனவர்கள் சாவில் கடிதம் எழுதிக்கிட்டு ஏன் காலத்தைக் கழித்தார்கள்..???!

 

அதுபோக.. ஈழத்துப் பெண்கள் மீதான படுகொலைகளை தமிழகம் கூடிக் கண்டித்தது. போராட்டங்கள் நடத்தின..!! ஏன் அதைப் பற்றி ஹிந்திய ஊடகங்கள் எதுவும் பேசல்ல. கருணாநிதியின் ஊடகம் ஊமையானது..???! சனல் 4 லு காணொளியை இன்று வரை கருணாநிதியின் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்திருக்கின்றனவே..???! ஆனால் இந்தப் பெண்ணின் விடயத்தில் மட்டும் எங்கிருந்து பாசம் கிளர்ந்தது. சொர்க்கம் தங்கம் சோனியா இல்வோல்ட் ஆனதாலா..??! அல்லது சொர்க்கத்தங்கம் ஆட்சியில் இருக்கும் தலைமையிடம் அங்கு உள்ளதாலா..???!  அல்லது இது அவரின் ஆட்சிக்கு நெருக்கடி ஆவதோடு.. பெண்களின் வாக்கு வங்கியை சிதைக்கும் என்பதாலா..???! :icon_idea::(:rolleyes:

Share this post


Link to post
Share on other sites