Jump to content

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது

SUNDHAL

Recommended Posts

நான் அறிந்தே ஒரு டஜன் பெண்களின் வாழ்க்கைக் கதைகள் மட்டுமே பல சோக காவியங்கள் எழுதக் கூடிய அளவிலான கொடூரங்களைக் கொண்டதாக உள்ளன. உலகம் முழுவதும் எத்தனை எத்தனை அப்பாவி பெண்கள் எத்தனை எத்தனை துயரங்களை அனுபவிக்கக் கூடும். 
 
ஊர்வலங்கள், கூக்குரல்கள், அழும் அரசியல்வாதிகள், குமுறும் சமூக ஊடகங்கள், மவுனிக்கும் மதவாதிகள், அடுத்தது என்ன என்பது மட்டுமே கேள்விக் குறியாக மிஞ்சுகின்றது.

***** தனது இந்து சமய எதிப்பை கட்ட பொரிந்து தள்ளியிருக்கிறார்.
 
மதவாதத்தில் திளைக்க முயலும் மானம் கெட்ட பிறப்புக்கள்.
 
இந்த கொலையிலும் தனி அலகு கேட்கிறார்கள்?
 
அப்ப இந்த கோடங்கிக் கோணங்கி முஸ்லீம் பெண்விடுதலை போராளியாகிவிட்டது? :rolleyes:
 
இதைதான் சொல்வது கோழி திண்ட கள்ளனார் கூட நின்று தேடுகிறார் என்று.
 
நியானி: ஒரு இழிவான பதம்/சில வரிகள் தணிக்கை.
 
Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

சிங்கப்பூர்: டில்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி உடல் துவாரகாவில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவர் வசித்த மகாவீர் என்க்ளேவ் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகிய‌ோர் மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று அதிகாலையில் இறந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புதுடில்லி விமான நிலையத்திற்குவந்தது. புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்த போது மாணவியின் உடலை பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ‌காங்.,. தலைவர் சோனியா மட்டும் வந்தனர். உடல் எத்தனை மணிக்கு வருகிறது எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை ரகசியமாகவே வைத்திருந்தனர்.உள்ளூர் எம்.பி., மற்றும டில்லி பா.ஜ., தலைவர் விஜேந்தர்குப்தா ஆகியோருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. துவாராகா மயானத்திற்கு உடல் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்த நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இந்நேரத்தில் ரகசியமாக தகனம் முடிக்கப்பட்டது. உடல் மக்கள் பார்வைக்கு வைக்கும்போது கூடுதல் பதட்டம் ஏற்படும் என்பதால் மத்திய உளவுத்துறை அறிவுரையின்படி டில்லி போலீசார் தகனத்தை ரகசியமாக முடித்து விட்டதாக ‌டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

சிறப்பு வக்கீல் நியமனம்:

இதற்கிடையில் மாணவிக்கு வ்னகொடுமை செய்த குற்றவாளிகள் மீது 3ம்தேதி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வழக்கில் மாணவி சார்பில் ஆஜராக சிறப்பு வக்கீலை அரசு நியமித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கொந்தளி்ப்பான நிலை நிலவுவதால், இந்த வழக்கை விரைவில் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு:

டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா கேட், ரைசினா ஹில்ஸ் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ராஜ்பத், விஜய் சவுக், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதைகள்மூடப்பட்டதுடன.

Dinamalar

Congres redy to draft anti-rape law proposes | அதிரடி தண்டனை தர மத்திய அரசு தீவிர சுறுசுறுப்பு Dinamalar

புதுடில்லி:டில்லியில், மருத்துவ மாணவி ஆறு பேர் கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, மரணம் அடைந்ததை அடுத்து, இதுபோன்ற குற்றங்கள் இனிமேல் நிகழ்ந்தால், அதிரடி தண்டனை தரும் வகையில், சட்டங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், டில்லி அவமான சம்பவத்தில் இருந்து மீள முயற்சி மேற்கொண்டுள்ளது.

டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி, வெறிக் கும்பலால், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. "பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும், ஒரே குரலில் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில் குழுவை, மத்திய அரசு ஏற்கனவே அமைத்துள்ளது. இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, ஆகியோரின் வீடுகளுக்கு முன், பெண்கள் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மாணவர்களும், சமீபத்தில், முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேசிய, சோனியா, "பாலியல் வல்லுறவு குற்றவாளி களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான, அனைத்து முயற்சிகளும், மத்திய அரசு சார்பில் எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார்.இது தொடர்பாக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டியும், சோனியா ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய, காங்., செய்தி தொடர்பாளர் ரேணுகாசவுத்ரி உள்ளிட்டோர், "ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போல், நம் நாட்டிலும், பாலியல் வல்லுறவு குற்றங்களில்

ஈடுபடுவோருக்கு, ரசாயன காயடிப்பு தண்டனை வழங்கலாம்' என்ற, யோசனையை முன் வைத்தனர்.

இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, புதிய சட்ட வரைவு, காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பாலியல் வல்லுறவு குற்றச் சாட்டுகளில், குற்றங்கள் நிரூபிக்கப்படுவோருக்கு, ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போன்ற, ரசாயன காயடிப்பு முறை மற்றும் 30 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும்.

பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளை, விரைவு கோர்ட்டுகள் மூலம் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட, பல விதிமுறைகள் சேர்க்கப் பட்டுள்ளன.மேலும், சிறார்களுக்கான வயது வரம்பை குறைக்கவும், 15 வயதுக்கு உட்பட்டோரை மட்டும்,சிறார் சட்ட வரம்புக்குள் வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணா திராத் தலைமையிலான, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்ச கமும்

, இதுகுறித்து, பல்வேறு தரப்பினரிடமும், கருத்துக்கள் கேட்டு, ஒரு முடிவுக்கு வந்துள் ளது. இதன்படி, ரசாயன காயடிப்பு உள்ளிட்ட விஷயங்களை, சட்ட வரைவாக தயாரித்து, அதை, நீதிபதி வர்மா தலைமையிலான குழுவிடம் அளிக்கவும், திட்டமிடப் பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், சட்ட திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamalar

Link to comment
Share on other sites

தலைநகரில் மீண்டும் பாலியல் கொடுமை: அரசு பஸ் கண்டக்டர் சிக்கினார்

புதுடில்லி:மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு எதிராக, டில்லியில் கடும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அங்கு மீண்டும், ஒரு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. இதற்கு காரணமான, அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், காமக் கொடூர கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். இதை கண்டித்து, டில்லி மாநகரில் வரலாறு காணாத வகையில், போராட்டம் நடந்து வருகிறது. இந்த எழுச்சியைப் பார்த்தாலே, இனி குற்றம் செய்பவர்களுக்கு பயம் ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர்.

ஆனால், அவர்களின் கூற்றுக்கு மாறாக, டில்லியிலேயே நேற்று முன்தினம் இரவு, ஓடும் பஸ்சில் பெண்ணிடம், கண்டக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு முயன்றுள்ளார். டில்லியில், இரவு, 9:30 மணிக்கு கயாலாவில் இருந்து லஜ்பத் நகருக்கு, டில்லி நகர பேருந்து சென்றுள்ளது. இதில், ஒரு இளம் பெண் பயணித்துள்ளார்.இந்த பஸ், மண்டி ஹவுஸ் வந்த போது, பணி முடித்து வந்த, அரசு பஸ் கண்டக்டர் ரஞ்சித் சிங் ஏறியுள்ளார். அவர், பஸ்சில் இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனால், அப்பெண் கூச்சல் போட்டு உள்ளார். உடனே, டிரைவர் பஸ்சை நிறுத்தியுள்ளார். அப்பகுதியில் ரோந்து வந்த போலீசாரிடம், பஸ் டிரைவர் புகார் செய்தார்.இதையடுத்து, கண்டக்டர் ரஞ்சித் சிங்கை கைது செய்தனர். மேலும், அப்பெண் வீட்டில் கோபித்துக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையில், மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், டோம்பிவில்லில் இளம்பெண் ஒருவர், போலீஸ் ஸ்டேஷனில் தன் தந்தை மற்றும் சகோதரன் மீது பாலியல் வல்லுறவு புகார் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட, 19 வயதான அந்த பெண், போலீசாரிடம் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:என் தந்தையிடமிருந்து தாய் விவாகரத்து பெற்று சென்றதும், தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, மகள் என்றும் பாராமல், தந்தையான மகேஷ் பிரசாத், தொடர்ந்து கற்பழித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, சகோதரனான ஹர்திங், 20, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.இவ்வாறு அப்பெண் புகாரில் கூறியுள்ளார்.

தந்தை மற்றும் சகோதரனின் பாலியல் கொடுமைகளை, இரண்டு ஆண்டுக்கு மேல் பொறுத்து வந்த பெண், மேலும் பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு புறப்பட்டு, டோம்வில்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அவரது நண்பர்களும், தன்னார்வ அமைப்புகளும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யும்படி ஆலோசனை கூறியதால், செயலில் இறங்கினார்.இதையடுத்தே, தந்தை மற்றும் சகோதரனின் இழிவான செயல் வெளியே தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Dinamalar

Link to comment
Share on other sites

புதுடில்லி:மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு எதிராக, டில்லியில் கடும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அங்கு மீண்டும், ஒரு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. இதற்கு காரணமான, அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

இதுதான் இந்தியா.. :rolleyes:

Link to comment
Share on other sites

இப்பொழுது நிறைய பெண்கள் பொய் புகார்களும் கொடுப்பார்கள் அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் u know about girls :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சினிமாவில் உள்ள கதாநாயகர்களைப்போல் நிஜவாழ்க்கையிலும் உருவாக வேண்டும்.இந்த மாணவியின் கொடூர சம்பவத்தைப்போல் சினிமாவில் அதிகம் பார்த்து விட்டோம்.கற்பிணிகளின் வயிற்றில் தடியால் தாக்குவது போன்ற காட்சிகளும் பார்த்து விட்டோம். எல்லாம் இப்போது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிட்டது.
 
இந்த சம்பவம்  சாருக்கான்,ரஜனி,அஜித் போன்றோர் முன்னிலையில் நடந்திருந்தால் அந்தப்பெண் நிச்சயம் காப்பாற்றப்பட்டிருப்பார். இப்படியான விபரீதங்களுக்கு விதைவிதைப்பதே இந்திய சினிமாக்கள் தான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

188759_191603780979580_1639414404_n.jpg

Link to comment
Share on other sites

ஏன் நிறையபேர் இங்கே குத்தி முறிகிறார்களோ தெரியவில்லை..
இரண்டு விடயத்திலுமே குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட்டுள்ளார்கள்..
தமிழ்நாட்டில் பிடிபட்டவனுக்கும் தூக்கு தான்..டெல்லியில் பிடிபட்டவனுகளுக்கும் தூக்கு தான்...

"இந்த தண்டனை தானே - எங்களுக்கும் பிடிச்சது"

இங்கே எல்லாரும் இந்தியாவில் உள்ள ஊழழ்களை பற்றி குறைகூறுகிறார்கள் , அந்த (இந்திய) ஊழழ் தான் "நாங்களும்" தமிழீழத்தில் கொஞ்சகாலமாவது வாழமுடிந்தது..
இந்தியாவில் உள்ள ஊழழ் இந்தியனுக்கு தான் problem , மற்ற எல்லோருக்கும் "No Problem"
ஊழழ் உள்ள இந்தியா தான் "மற்ற" எல்லோருக்கும் நல்லது....

Link to comment
Share on other sites

பாலியல் வல்லுறவு: உயிரிழந்தவருக்கு இறுதிச்சடங்கு

இந்தியத் தலைநகர் தில்லியில் பேருந்தில் வைத்து பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இறந்து போன இளம் பெண்ணுக்கு இறுதிக்கிரியைகள் நடந்து முடிந்தன.

http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121230_rapefuneral.shtml

Link to comment
Share on other sites

அதிகரிக்கும் சிறு சிறு கைகலப்புகள்

Link to comment
Share on other sites

நோயாளியை சிங்கபூருக்கு அனுப்பிவைத்தது இறக்க போகிறா என்பதும், அதை சாமாளிக்க முன்கூட்டிய அடுக்கும் மாதிரித்தான் படுகிறது. சிங்கப்பூர் வைத்தியர்கள் டெல்கி வைத்தியத்தை தரம் குறைத்தும் பேசியிருந்தார்கள். 

Link to comment
Share on other sites

எல்லா இந்தியப் பெண்களையும் பர்தா அணியச் சொல்கிறார் மதுரை ஆதீனம்! 
[sunday, 2012-12-30 17:31:04]
madurai-aadheenam-301212-150.jpg

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன்மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.  

இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மாணவியின் இறப்புக்கு காரணமானவர்களை தூக்கிலிடவும்: சிங்கப்பூர் அமைச்சர்
திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012 10:51 
பாலியல் வல்லுறவு மற்றும் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த டில்லி மாணவியின் இறப்புக்கு காரணமானவர்களை தூக்கிலிடவேண்டும். என்று சிங்கப்பூரின் சட்டம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் காசிவிசுவநாதன் சண்முகம் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் தனது இணையதள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  டில்லி மாணவியை கற்பழித்து கொல்லுமளவிற்கு கொடூர தாக்குதலையும் அந்த கும்பல் செய்துள்ளது. இந்த சம்பவம் இந்திய மக்களையே பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது.
 
சிங்கப்பூரில் மரணதண்டனையை விரும்பாத மக்களிடையே இதுகுறித்து நான் பேசினேன். இறக்கும் அளவிற்கு உடம்பில் காயத்தை ஏற்படுத்தியுள்ள அந்த கொடூரக்கும்பல், மரணதண்டனையை சந்திக்க வேண்டும் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் ஒத்துக்கொண்டனர். 
 
சிங்கப்பூரில் இதுபோன்ற கொடூரச்செயலுக்கு மரண தண்டனை என்பதை தவிர்க்கமுடியாது எனவே அவர்கள் தூக்கிலிடப்படவேண்டும்.
 
மரண தண்டனை இருக்கவேண்டும். இல்லையேல் இது போன்ற வழக்குகளில் நீதியை நிலைநாட்ட முடியாது என்றார்.
 
பாலியல் வல்லுறவு மற்றும் தாக்குதலினால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்திய மாணவி சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபத் மருத்துவமனையின் சேர்க்கப்பட்டார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Link to comment
Share on other sites

எல்லா இந்தியப் பெண்களையும் பர்தா அணியச் சொல்கிறார் மதுரை ஆதீனம்! 

[sunday, 2012-12-30 17:31:04]
madurai-aadheenam-301212-150.jpg

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன்மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.  

இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

நல்ல யோசனை. எப்படி எத்தனைபேர் வாகனங்களை நொருக்கி கடைகளை உடைத்து எதி்ப்பைத் தெரிவித்தாலும் ஆதீனங்களே சரியான தீர்வை சொல்லக்கூடியவர்களாக இருக்கினறனர்.

முன்னர் ஒரு புத்தகத்தில் படித்தது. "அரபு நாடுகளில் பர்தா போட்ட பெண்ணின் பாதங்கள் சற்றுத் தெரிந்தால்  அதை நூறுகண்கள் உற்றுப்பார்க்குமாம் அதே அமெரிக்காவில் பிகினி உடையில் ஒருத்தி நீச்சல் அடித்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை " என்று படித்த ஞாபகம். மூடி மறைக்க மறைக்கவே அதற்குள் தேடுதலின் வெறி அதிகமாகின்றது.

இந்தியர்கள் மேலைநாட்டு மோகத்துடன் காமவெறியை தூண்டுபவர்களாகவும் தமது கலாச்சாரம் என்ற கோமாளித்தனங்களை கொண்டு அதை தடுப்பவர்களாகவும் கத்திமேல் நடக்கும் விழையாட்டை செய்கின்றார்கள். இதில் காயங்களும் மரணங்களும் எதிர்பார்க்கவே வேண்டும்.

ஒரு மிக வெளிப்படையான உடலுறவுக் காட்சி காமத்தை தூண்டுவதில்லை. ஆனால் உடலுறவுக் காட்சிகளை தாயர்படுத்தி உணர்ச்சிகளை தூண்டும் விதமாக செய்கைகளை காண்பித்து இறுதியில் மூடிமறைத்து கலாச்சாரத்தை காப்பாற்றிக்கொள்ளும் சினிமாக்கள். அடுத்தது என்ன நடந்திருக்கும் என்று மாதக்கணக்காக சிந்திக்கவைப்பார்கள். அதற்கொரு விழைவிருக்கும். பசியை தூண்டிவிடுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள் தீனி போடுவதில் அதை விட மோசமாக தடுக்கின்றார்கள்.

இந்த ஏழுபேரையும் தூக்கில் போடுவது ஒரு சாதராண விடயம். இதன் மூலம் மரணபயத்தை காட்டி ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்க முடியாது. காமம் என்ற இயற்கையான உணர்வு எப்படி வெறித்தனமாக மாறுகின்றது அல்லது மாற்றப்படுகின்றது என்றே திசையில் சென்றாலே பிரயோசனம் கிடைக்கும். தவிர இந்த பெண்ணின் துயர நிலைக்கு எதிராக டெல்லியில் கோசம் போடும் ஆண்களில் பலரே சந்தர்ப்பம் கிடைத்தால் பெண்களை பலாத்காரம் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Quote :"முன்னர் ஒரு புத்தகத்தில் படித்தது. "அரபு நாடுகளில் பர்தா போட்ட பெண்ணின் பாதங்கள் சற்றுத் தெரிந்தால்  அதை நூறுகண்கள் உற்றுப்பார்க்குமாம் அதே அமெரிக்காவில் பிகினி உடையில் ஒருத்தி நீச்சல் அடித்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை " என்று படித்த ஞாபகம். மூடி மறைக்க மறைக்கவே அதற்குள் தேடுதலின் வெறி அதிகமாகின்றது" 

கஷ்டம், ஒரு மாத த்தில் சிவசேனையின் கட்சி அரைவாசிப்பேரை பதம் பார்த்துவிடுவார்கள். ஆண்களா பார்த்து திருந்தாவிட்டால், இதை ஒழிக்க முடியாது, இலவச பொம்மைகளை இந்த காட்டுமிரண்டிகளுக்கு வழங்க வேண்டும். அடுத்த வேலை சோற்றுக்கு ஏதிர்பார்ப்பவனுக்கு இந்த யோசனை வராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல யோசனை. எப்படி எத்தனைபேர் வாகனங்களை நொருக்கி கடைகளை உடைத்து எதி்ப்பைத் தெரிவித்தாலும் ஆதீனங்களே சரியான தீர்வை சொல்லக்கூடியவர்களாக இருக்கினறனர்.

முன்னர் ஒரு புத்தகத்தில் படித்தது. "அரபு நாடுகளில் பர்தா போட்ட பெண்ணின் பாதங்கள் சற்றுத் தெரிந்தால்  அதை நூறுகண்கள் உற்றுப்பார்க்குமாம் அதே அமெரிக்காவில் பிகினி உடையில் ஒருத்தி நீச்சல் அடித்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை " என்று படித்த ஞாபகம். மூடி மறைக்க மறைக்கவே அதற்குள் தேடுதலின் வெறி அதிகமாகின்றது.

இந்தியர்கள் மேலைநாட்டு மோகத்துடன் காமவெறியை தூண்டுபவர்களாகவும் தமது கலாச்சாரம் என்ற கோமாளித்தனங்களை கொண்டு அதை தடுப்பவர்களாகவும் கத்திமேல் நடக்கும் விழையாட்டை செய்கின்றார்கள். இதில் காயங்களும் மரணங்களும் எதிர்பார்க்கவே வேண்டும்.

ஒரு மிக வெளிப்படையான உடலுறவுக் காட்சி காமத்தை தூண்டுவதில்லை. ஆனால் உடலுறவுக் காட்சிகளை தாயர்படுத்தி உணர்ச்சிகளை தூண்டும் விதமாக செய்கைகளை காண்பித்து இறுதியில் மூடிமறைத்து கலாச்சாரத்தை காப்பாற்றிக்கொள்ளும் சினிமாக்கள். அடுத்தது என்ன நடந்திருக்கும் என்று மாதக்கணக்காக சிந்திக்கவைப்பார்கள். அதற்கொரு விழைவிருக்கும். பசியை தூண்டிவிடுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள் தீனி போடுவதில் அதை விட மோசமாக தடுக்கின்றார்கள்.

இந்த ஏழுபேரையும் தூக்கில் போடுவது ஒரு சாதராண விடயம். இதன் மூலம் மரணபயத்தை காட்டி ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்க முடியாது. காமம் என்ற இயற்கையான உணர்வு எப்படி வெறித்தனமாக மாறுகின்றது அல்லது மாற்றப்படுகின்றது என்றே திசையில் சென்றாலே பிரயோசனம் கிடைக்கும். தவிர இந்த பெண்ணின் துயர நிலைக்கு எதிராக டெல்லியில் கோசம் போடும் ஆண்களில் பலரே சந்தர்ப்பம் கிடைத்தால் பெண்களை பலாத்காரம் செய்வார்கள்.

செய்துட்டு பிடிபடாமல் இருக்க வேஷம் போடுபவனே அதில் இருக்க கூடும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் வர வர அநாகரிகமாய் போகிறது 

Link to comment
Share on other sites

புத்தாண்டை கொண்டாடவில்லை சோனியா

டில்லியில் கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு சிங்கப்பூரில் மரணமடைந்த மருத்துவ மாணவியின் மரணத்தினால்புத்தாண்டை கொண்டாட போவதில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறினார்.

http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AF%8D-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-074900641.html

Link to comment
Share on other sites

அந்த

பெண்ணின் இறுதி சடங்கு படத்தை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது தாயார் அந்த முகத்தை வாஞ்சை பாசம் பொங்க இறுதியாக அள்ளி முத்தம் இடுகின்றார் மனதை எதோ செய்தது.... யாரவது கள உறவுகளும் அந்த படத்தை பாத்திருந்தால் இணைத்துவிடவும்......

மாணவி படித்த கல்லூரி அவர் படிப்பதற்காக இதுவரை கட்டிய பணத்தை திரும்ப குடும்பத்தினரிடம் கொடுத்து விடபோவதாக அறிவித்திருக்கின்றதாம்

Link to comment
Share on other sites

இந்த ஒரு கேடுகெட்ட செயலுக்கு எதிர்வினையாக... இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சியைப் பார்த்தால்.. :rolleyes:

இது ஒண்ணுதான் பொண்ணு..

மற்றதெல்லாம் மண்ணு.. எண்டு சொல்லுறமாதிரி இருக்கு.. :D

Link to comment
Share on other sites

இசை: எங்களுக்கு சிங்களவன் 50களில் அடிக்க வெளிக்கிட்டாலும், நாங்கள் 70லே தானே ஒரு சரியான போராட்டத்தை  தொடங்கினாங்கள்..
அது மாதிரி தான் இந்த போராட்டங்களும்..எல்லோருக்கும் இப்போது தான் "சுட" தொடங்கி இருக்கும்..

உங்களது கருத்தை பார்த்தா..ஏன் இதுக்கும் போராடுகிறார்கள் போல இருக்கிறது..இதையும் லூசிலே விடவேண்டியது தானே என்பது போல் உள்ளது..

போராட்டம் இருக்கத்தான் வேண்டும்.

ஆனால் இதில் கங்கையிலில் தொடங்கி காவிரிவரை பொங்கி பிரவாக்கிக்கிறது. இந்திய உப கண்டமே பொங்கி எழுகிறார்களே. அதுதான் பார்க்க பியமிப்பாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

வியட்நாம் போராட்டத்தில் கூட பல உயிர்கள் இழந்தாலும் அந்த ஒரு சிறுமியின் புகைப்படத்தை பாத்து தான் மக்கள் கிளர்ந்தார்கள் ஆக மக்களின் மனதை பாதிக்கின்ற மாதிரி ஆள் மனதில் ஆழக்குத்துகின்ற மாதிரி ஒரு செய்தி ஒரு படம் ஒரு விம்பம் தேவைப்படுகின்றது நான் இங்கு கதைப்பது மனிதர்களை பற்றி தமிழர்களை பற்றி அல்ல

Link to comment
Share on other sites

இசை: எங்களுக்கு சிங்களவன் 50களில் அடிக்க வெளிக்கிட்டாலும், நாங்கள் 70லே தானே ஒரு சரியான போராட்டத்தை  தொடங்கினாங்கள்..

அது மாதிரி தான் இந்த போராட்டங்களும்..எல்லோருக்கும் இப்போது தான் "சுட" தொடங்கி இருக்கும்..

உங்களது கருத்தை பார்த்தா..ஏன் இதுக்கும் போராடுகிறார்கள் போல இருக்கிறது..இதையும் லூசிலே விடவேண்டியது தானே என்பது போல் உள்ளது..

போராட்டம் மிகமிக அவசியம்.. ஆனால் அதைத் தாக்குப் பிடிக்கப் போகிறார்களா.. ஒரு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்களா என்பதுதான் முக்கியம். இருந்து பார்க்கத்தானே போகிறோம்.?! :D

ஒரு பெண்ணின் கதையை மட்டும் தூக்கிப் பிடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படியானால் மற்றப் பெண்களை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை என்று அர்த்தமாகிறது.

சுண்டலின் கருத்தையும் உள்வாங்கிக் கொள்கிறேன். வியட்நாமில் ஒரு சிறுமியின் படம் அமெரிக்காவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் மிகுதி 23,000 சொச்சம் பெண்கள் பற்ரிய கதை பிரபலமாகவில்லை என்பது உடன்பாடானதே..

ஆனால் போராடுபவர்கள் அவர்களையும் உள்வாங்கி தமது போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதுதான் ஒரு சிறு ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா இந்தியப் பெண்களையும் பர்தா அணியச் சொல்கிறார் மதுரை ஆதீனம்! 

[sunday, 2012-12-30 17:31:04]

madurai-aadheenam-301212-150.jpg

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன்மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.  

இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

அதைவிட வக்கிரபார்வை பார்க்கும் ஆண்கள் அனைவரின் கண்களை எடுத்து விட வேண்டும், இதனால் பெண்கள் ஆண்களின் வக்கிர பார்வையில் இருந்து தப்ப முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.