Jump to content

இன்னும் இரு நாள்கள்....


Recommended Posts

இன்னும் இரு நாட்கள் தான் இருக்கிறது புதிய ஆண்டு பிறக்க 

இதை  நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றவேண்டும்.

 

புதிய எண்ணங்கள், புதிய திட்டங்கள், புதிய பாதைகள் பிறக்கவேண்டும்.

நீ நல்லாக வாழவேண்டும், மற்றவரையும் வாழவைக்கவேண்டும்

உன் குடும்பத்தை நேசிக்கவேண்டும்,   நீ உன்னை நேசிக்கவேண்டும்,

அதன் பின் - உன்னைப்போல் பிறரை நேசிக்கவேண்டும்.

 

இந்த நாடு,  இந்த உலகம் உனக்காக மட்டுமல்ல, எல்லோருக்காகவும் தான்,

இந்த வாழ்வு உனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவும் தான்.

அது தான் திருமணம் முடிக்கிறாய், பிள்ளை பெறுகிறாய், சந்ததி பெருக்குகிறாய்

எலலோருக்கும் இடமுண்டு, வாழ்த்தான் வருகிறார்கள். தனித்து யாரும் வாழமுடியாது.

 

இது உனக்காக மட்டுமல்ல, உலகத்திற்காகவும்,

உன் புகழ் வாழ, அந்த பிள்ளைகள் வரவிற்கு நீ - தந்தையாகிறாய், சொந்தமாகிறாய்.

இவ்வாறு ஒரு வாழ்க்ககைச் சக்கரமே சுற்றுகிறது.

இது இறைவன் சக்தியின் திட்டமே!

 

நாம் நடிகர்கள், திறமையாக, சரியாக நடித்துவிட்டு போகவேண்டும்.

எனவே! வாழ்வு மாயம் தான், அதன் முடிவு புரியாத புதிர்.

எனவே!  உள்ள காலம் வரை அன்பாக வாழ்ந்து,

பண்பாக வாழ்ந்து, ஒற்றுமையாக வாழ்ந்து,

நின்மதியாக இயற்கை மரணம் அடைய

ஒவ்வொருவரும் நல்ல சிந்தையோடு வாழவேண்டும்!

 

தீமை செய்யாதே நீ இறந்தால் உன் முன் நிற்கப்போவது

நீதி மன்ற மல்ல, தீர்ப்பின் முடிவு,

மரணம் மறுபிறப்பிற்கான ஒரு தண்டனை தான்.

அங்கு தான் உன் பிறப்பு, நிர்ணயிக்கப்படுகிறது.

 

நல்லது செய்தால் நல்லது நடக்கும்.

இவ்வுலகில் அமைதியும், மறு உலகில் நின்மதியும் அடைய

நல்ல திட்டத்தை, நல்ல எண்ணத்தை கருத்தில் கொண்டு

புதிய ஆண்டில் காலடி எடுத்து வை!

 

அன்பும், சமாதானமும் அடுத்த ஆண்டு மக்கள் மத்தில் பிறக்க

நீ தான் உன்னை முதலில் மாற்று! நீ இவ்வுலகிற்காகவும்,

இறப்பின் பின் மறு உலக வாழ்க்கைக்காவும்

இங்கு வாழும் வாழ்வை புனிதமாக்கவேண்டும்.

நன்மை செய்வதில் நன்மையுண்டு, தீமை செய்வதில் உனக்கு என்ன நன்மை, அல்லது மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைப்போல் பிறரை நினைத்துப்பார்.

புத்தன், யேசு, சொன்னதெல்லாம் ஒரு உண்மையை உனக்குப் புரியவைக்கும்.

மாறு....மனதை நல்லதாக மாற்று...

 

அருள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரு நாட்கள். .........வரவேற்போம். பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.