Jump to content

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள்


Recommended Posts

 எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள். நீங்களும் உங்களுக்கு விரும்பிய எம்.எஸ்.வியின் பாடல்களை இணையுங்கள்.
 
எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
 
 இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ.....
 
 
 
 
 
எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.
 
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!.
 
நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி.
 
இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!.
மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!
குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!
இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான்!
 
மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம்!
சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!
 
எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!
 
மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!
இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!
`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!
 
தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!
 
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு!
 
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!
 
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார்!
 
`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!
 
இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!
 
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறு சுறுப்பாக இருக்கிறார்!
 
பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள்!
 
வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!
 
`அத்தான்..... என்னத்தான்....’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிரிந்தது அரங்கம்!
தொகுத்து வழங்குபவர்  
திருமதி ஆனந்திராம்குமார் நன்றி 
 
ஆனந்த விகடன்
 
 
 
 


பாடல்: கண்ணிலே என்ன உண்டு
திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
Link to comment
Share on other sites

 • Replies 132
 • Created
 • Last Reply

திரியை ஆரம்பித்த நுணாவுக்கு நன்றிகள்..!

 

பாடல்: கண்ணனை நினைக்காத

படம்: சீர்வரிசை

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா

 

உற்சாகமான குரல்கள் என்றால் அந்த நாளைய எஸ்.பி. பாலா, சுசீலா, ஜானகி போன்றவர்கள்தான். அரங்கில் நின்று பாடுவதுபோல் கேட்கும் சில பாடலில். தொலைவில் நின்று பாடுவதுபோல் இருக்கும் வேறு சில பாடல்களில். அந்த நாளைய ஒலிப்பதிவு மற்றும், குரல் ஏற்ற இறக்கம் மற்றும் வீச்சு காரணம் என நினைக்கிறேன்.

 

இந்தக்காலத்தில் பாடல்கள் காதுக்குள் பாடப்படுவதுபோல் ஒரு பிரமை. இதன் காரணமாக ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

எம்.எஸ்.வி யை சர்வசுந்தரத்தில் "அவளுக்கென்ன அழகிய முகம்" பாட்டில் இளமையாக காணலாம் .இசையே உலகமாக இருக்கும் எனக்கு இவரும் ஒரு கடவுள்தான்.

சாந்தி -யார் அந்த நிலவு

அபூர்வ ராகங்கள் -ஏழு ஸ்வரங்களில்

எனது மிக முதன்மையான தெரிவு .அதைவிட ஆயிரம் இருக்கு .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி. அவரின் இசையில்  நிறையப் பாடல்களைச் சொல்லலாம்.

 

இருந்தாலும் எம்எஸ்வி குரலின் ரசிகன்.

 

சொல்லத்தான் நினைக்கிறேன்

 

 

 

 

'நிலவே நீ சாட்சி' படத்தில் இருந்து

'நீ நினைத்தால் இந்நேரத்திலே' பாடலில் 'எம்எஸ்வி' யின் உணர்வுமிக்க குரல் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

எம்.எஸ்.வி யை சர்வசுந்தரத்தில் "அவளுக்கென்ன அழகிய முகம்" பாட்டில் இளமையாக காணலாம் .இசையே உலகமாக இருக்கும் எனக்கு இவரும் ஒரு கடவுள்தான்.

சாந்தி -யார் அந்த நிலவு

அபூர்வ ராகங்கள் -ஏழு ஸ்வரங்களில்

எனது மிக முதன்மையான தெரிவு .அதைவிட ஆயிரம் இருக்கு .

 

 

 

 

 

 

http://www.youtube.com/watch?v=51YPPoBKllg

Link to comment
Share on other sites

நல்ல திரி. அவரின் இசையில்  நிறையப் பாடல்களைச் சொல்லலாம்.

 

இருந்தாலும் எம்எஸ்வி குரலின் ரசிகன்.

 

 

'நிலவே நீ சாட்சி' படத்தில் இருந்து

'நீ நினைத்தால் இந்நேரத்திலே' பாடலில் 'எம்எஸ்வி' யின் உணர்வுமிக்க குரல் பிடிக்கும்.

 

http://www.youtube.com/watch?v=XtxjgHPf6qE

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பொட்டு வைத்த முகமோ

 

படம்: சுமதி என் சுந்தரி

 

எஸ்பிபி யின் தனிக் குரலோடு, பின்னணியில் ஹம்மிங்கில் பெண் குரல் வருவது கேட்க இனிமை.  

1:18 - 1:24 இல் வரும் இசைக் கருவியை (ஷெனாய் ?) சில பாடல்களில் பயன்படுத்தியிருப்பார். அருமையாக இருக்கும்.

 

http://www.youtube.com/watch?v=kR7_0aSuopg

Link to comment
Share on other sites

பாடல்: சிட்டுக்குருவி  முத்தம் கொடுத்து
படம் : புதிய பறவை
பாடியவர்: பி.சுசிலா

 

 

 

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே

மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே

பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே

பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே

எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே

என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஆ…ஹாஹா

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா

ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா

இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா

இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே

செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

 

 

http://www.youtube.com/watch?v=ZzXjH9xTcbo

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடல்:  எங்கேயும் எப்போதும்

 

படம்: நினைத்தாலே இனிக்கும்

 

பல வருடங்கள் சென்றாலும், எம்எஸ்வி யின் இசையில் இன்றும் நிலைத்து  நிற்கும் துள்ளல் பாடல் 

 

 கடவுள் படைத்த உலகம் இது மனித சுகத்தை மறுப்பதில்லை

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: எனக்கொரு காதலி இருக்கின்றாள்
படம் : முத்தான முத்தல்லவோ
பாடியவர்கள் : spb & msv
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

படம் -----பயணம்

பாடல்

பயணம் பயணம் பயணம்

பத்து மாத சித்திரமொன்று ஜனனம்

அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்

அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்

பயணம் பயணம் பயணம்

ஆரம்பம் பள்ளிக்கு பயணம்

பின்பு அடுத்தது ஆசையின் பயணம்

ஆரம்பம் பள்ளிக்கு பயணம்

பின்பு அடுத்தது ஆசையின் பயணம்

இளம் காதலர் கண்களில் பயணம்

அந்த கலக்கத்தில் கண்ணீரில் பயணம்

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே

எவரை எவர் வெல்லுவாரோ

எவரை எவர் வெல்லுவாரோ

பயணம் பயணம் பயணம்

புகை வண்டி ஓட்டிட ஒருவன்

அது போகின்ற வழி சொல்ல ஒருவன்

அந்த இருவரை நம்பிய மனிதன்

அவன் இடையினில் நினைப்பவன் இறைவன்

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே

எவரை எவர் வெல்லுவாரோ

எவரை எவர் வெல்லுவாரோ

சந்திப்பு வருவது கண்டு

பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு

அவர் சொந்தங்களாவதும் உண்டு

அது தொடர் கதை ஆவதும் உண்டு

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே

எவரை எவர் வெல்லுவாரோ

எவரை எவர் வெல்லுவாரோ

பயணம் பயணம் பயணம்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0MC9AJW6g1k

இத் திரியை தொடக்கிய நுணாவிலானுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மான் கண்ட சொர்க்கங்கள்.........

 

 47 நாட்கள் படத்திலிருந்து...   மெல்லிசை மன்னரின் இசையில். கவிஞரின் வரிகளில் சினிமாவின் கதையைச் சொன்ன பாடல்.

சிவமணியின் ஆரம்பகால அதிர வைக்கும் 'ட்ரம்ஸ்' , எஸ் பி பாலசுப்ரமணியத்தின் வழமையான குழைந்த குரலில் வந்த மனதை அதிர வைத்த பாடல்.

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: துள்ளுவதோ இளமை
திரைப்படம்:   குடியிருந்த கோயில்
பாடகர்கள்:   ஈஸ்வரி, TM. சௌந்தரராஜன்
பாடல் ஆசிரியர்:   வாலி
 
 
பட்டு முகத்து சுட்டி பெண்ணே
கட்டி அணைக்கும் இந்த கைகள்
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள்
ஆஹ்ஹ்..
 
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை
 
மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
நீர் ஆடா ஓடிவா
நீர் ஆடா ஓடிவா
 
வேல் ஆடும் பார்வை
தாளாத பொது
வேல் ஆடும் பார்வை
தாளாத பொது
நோகாமல் ஆடவா
நோகாமல் ஆடவா
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை
 
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
 
தேன் ஊரும் பாவை
பூ மேடை தேவை
தேன் ஊரும் பாவை
பூ மேடை தேவை
நானாக அள்ளவா
நானாக அள்ளவா
தீரத தாகம்
பாடாத ராகம்
தீரத தாகம்
பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவ
நாளெல்லாம் சொல்லவ
 
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை
 
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
 
காணாத கோலம்
நீ காணும் நேரம்
வாய் பேச தொன்றுமா
வாய் பேச தொன்றுமா
ஆணொடு பெண்ண்மை
ஆராகும் பொது
வேர் இன்பம் வேண்டுமா
வேர் இன்பம் வேண்டுமா
 
துள்ளுவதோ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை
 
ஹொய்..பாப்பா
ஹொய்..பாப்பா
Link to comment
Share on other sites

தொடர்ந்து இணையுங்கள் .பார்க்க சந்தோசமாக இருக்கு .

இரவு படுக்கைக்கு முன் யுடிப்பில் நாலு பழைய பாடல்கள் கேட்டுவிட்டு போவதுதான் எனது பழக்கம்.

இணைக்கும் போது பிரச்சனை வருவதால் நான் இணைக்க முயற்சிப்பத்தையே விட்டுவிட்டேன் . 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எம்எஸ்வி தனது இசை சகோதரர் டி கே ராமமூர்த்தியோடு சேர்ந்து இசையமைத்த பாடல்.

 

 

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் இருந்து, மனதை மெல்லியதாகக் கீறிச் செல்லும் இசை.

 

http://www.youtube.com/watch?v=TyPPUBH6otg

 

 

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

 

'பணத்தோட்டம்' படத்தில் இருந்து அருமையான 'வாழ்க்கைக்கான' பாடல்

 

http://www.youtube.com/watch?v=7i2AvTOZfCc

 

 

Link to comment
Share on other sites

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

 
பாடல்: கண்ணதாசன் 

படம்: ஆயிரத்தில் ஒருவன் 

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி 

பாடியது: T.M.சௌந்தரராஜன் குழுவினர்.

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே

போகும்போது வேறு பாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்

 

.........

 

அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்!

 

 

 

http://www.youtube.com/watch?v=KTtv3IGHbbc

 

 

பார்த்த ஞாபகம் இல்லையோ
 
படம் : புதிய பறவை
பாடல் : பார்த்த ஞாபகம் இல்லையோ
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வனாதன்


பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாய் விரிக்கப் புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
பாய் விரிக்கப் புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
கையோடு நெய்வழிய கண்ணோடு மைவழிய
அத்தானுக்கு முத்தாடத்தான் ஆசையிருக்காதோ
ஆசையிருக்காதோ...ஓ...ஓ...

http://www.youtube.com/watch?v=97Kw3i6nJAc

 

 

பெண் :    கல்யாண வளையோசை கொண்டு

             காற்றே நீ முன்னாடி செல்லு (இசை)    

             கல்யாண வளையோசை கொண்டு

             காற்றே நீ முன்னாடி செல்லு

             பின்னாடி நான் வாரேன் என்று

             கண்ணாளன் காதோடுச் சொல்லு

             மாமன் என் மாமன் மாமன் என் மாமன்

             கஞ்சி வரக் காத்திருக்கு

             கண்ணு ரெண்டும் பூத்திருக்கு

             வஞ்சி வரும் சேதி சொல்லு

             வந்த பின்னால் மீதி சொல்லு            

             கல்யாண வளையோசை கொண்டு

             காற்றே நீ முன்னாடி செல்லு

             பின்னாடி நான் வாரேன் என்று

             கண்ணாளன் காதோடு சொல்லு

    

                         (இசை)            சரணம் - 1

பெண் :    பாய் விரிக்கப் புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க

             பாய் விரிக்கப் புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க

             கையோடு நெய்வழிய கண்ணோடு மைவழிய

             அத்தானுக்கு முத்தாடத்தான் ஆசையிருக்காதோ

             ஆசையிருக்காதோ...ஓ...ஓ...

ஆண்  :    கல்யாண வளையோசை கொண்டு

             கஸ்தூரி மான் போல இன்று

             வந்தாளே இளவாழந் தண்டு

             வாடாத வெண் முல்லை செண்டு

    

                       (இசை)            சரணம் - 2

ஆண்  :    ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க

பெண் :     ஆஹா...இடை பிடிக்க

ஆண்  :    நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க

பெண் :     நெஞ்சு நெகிழ்ந்திருக்க

ஆண்  :    ஆஹா...ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க

              நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க

              பொன்னான நெல்மணிகள் கண்ணே

             உன் கண்மணிகள் தண்ணீரிலே செவ்வாழை போல்

             தாவிச் சிரிக்காதோ தாவிச் சிரிக்காதோ...ஓ...ஓ...

                        

{பெண்  : கல்யாண வளையோசை கொண்டு

             கஸ்தூரி மான் போல இன்று        

ஆண்  :    ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண்  :    வந்தாளே இளவாழந் தண்டு

              வாடாத வெண்முல்லை செண்டு  

பெண்  :   ஆ...ஆ...ஆ...ஆ...}

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்

 

 

 

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?


http://www.youtube.com/watch?v=ZDY04YUJ1uc

 

Song: maalai pozhuthin - பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
Movie: Nhagyalakshmi - திரைப்படம்: பாக்யலக்ஷ்மி
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

Year: - ஆண்டு: 1952 

 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி.இணைப'பிற்க்கு நன்றி நுனா.

Link to comment
Share on other sites

  பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

     இசை                 பல்லவி

    லாலாலா... ஆ... ஆ... ஆ...

    லலால லலாலலா... ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ...

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

    நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்

    சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

    நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்

    சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

    இசை                  சரணம் - 1

    ஓ... முள்ளி ஆடும் நெஞ்சம்

    கள்ளில் ஊறும் கண்கள்

    தங்கத் தட்டில் பொங்கும்

    இன்பத் தேன் போல் பெண்கள் ( இசை )

    முள்ளி ஆடும் நெஞ்சம்

    கள்ளில் ஊறும் கண்கள்

    தங்கத் தட்டில் பொங்கும்

    இன்பத் தேன் போல் பெண்கள் 

    சாட்டை கொண்டு பாடச் சொன்னால்

    எங்கே பாடும் பாடல்

    தத்தித் தத்தி ஆடச் சொன்னால்

    எங்கே ஆடும் கால்கள்

    துடித்து எழுந்ததே... கொதித்து சிவந்ததே...

    கதை முடிக்க நினைத்ததே...

    நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்

    சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

    இசை                    சரணம் - 2

    ஓ... முத்தம் சிந்தும் முத்து

    முல்லை வண்ணச் சிட்டு

    மேடை கண்டு ஆடும் பெண்மை ரோஜா மொட்டு

    வேட்டை ஆடும் மானுக்கென்ன

    வெட்கம் இந்தப் பக்கம்

    வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும்

    திட்டம் உண்டு திட்டம்

    துடித்து எழுந்ததே... கொதித்து சிவந்ததே...

    கதை முடிக்க நினைத்ததே...

    நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்

    சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

    இசை                  சரணம் - 3

    நாடு கண்ட பூங்கொடி காடு வந்த காரணம் 

    ஒரு முறை எண்ணிப் பார்

    தேடி வந்த நாடகம் கூடி வரும் வேளையில் 

    மறுபடி என்னைப் பார்

    நாடு கண்ட பூங்கொடி காடு வந்த காரணம் 

    ஒரு முறை எண்ணிப் பார்

    தேடி வந்த நாடகம் கூடி வரும் வேளையில் 

    மறுபடி என்னைப் பார்

    வலை போட்டு பிடித்தாலும் கிடைக்காது

    துடித்து எழுந்ததே... கொதித்து சிவந்ததே...

    கதை முடிக்க நினைத்ததே...

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

    வெற்றிக்குத் தான் என என்ன வேண்டும்

 

https://www.youtube.com/watch?v=3zm1tX7jxWU

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

   அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ
             நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
             அடியெடுத்து கொடுத்ததோ.

 

இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
             மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
             இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
   
             இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

 

http://www.youtube.com/watch?NR=1&v=R12D7i5PWGQ

 

   

 அழகு தெய்வம் மெல்ல மெல்ல   |   |     பாடல் தலைப்பு அழகு தெய்வம் மெல்ல மெல்ல    திரைப்படம் பேசும் தெய்வம்  கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி பத்மினி  பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் பி.சுசீலா  இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் வாலி   இயக்குநர்   ராகம்   வெளியானஆண்டு 1967  தயாரிப்பு      
             அழகு தெய்வம் மெல்ல மெல்ல

                       தொகையறா

ஆண்    ஆழியிலே பிறவாத அலை மகளோ...

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    ஏழிசையை பயிலாத கலை மகளோ... ( இசை )
             மூழி நடம் புரியாத மலை மகளோ... ( இசை )
             உலகத்தாய் பெற்றெடுத்த தலை மகளோ...

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

             அடியெடுத்து வைத்ததோ

             இசை                     பல்லவி

ஆண்    அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ
             நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
             அடியெடுத்து கொடுத்ததோ

             அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ
             நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
             அடியெடுத்து கொடுத்ததோ

             அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ

             இசை                     சரணம் - 1

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
             மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
             மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
             இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
             இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
             இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ
             நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
             அடியெடுத்து கொடுத்ததோ

             அழகு தெய்வம் மெல்ல மெல்ல
             அடியெடுத்து வைத்ததோ

             இசை                     சரணம் - 2

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    தத்தி வரும் தளர் நடையில் 
             பிறந்தது தான் தாளமோ ( இசை )
             தாவி வரும் கை அசைவில் 
             விளைந்தது தான் பாவமோ ( இசை )
             தெய்வமகள் வாய் மலர்ந்து மொழிந்தது தான் ராகமோ

பெண்    ஆ... ஆ...  ஆ... ஆ... ஆ... 

ஆண்    { இத்தனையும் சேர்ந்தது தான் இயல் இசை நாடகமோ }

பெண்    { ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... } ( இணைந்து )

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=tjjumYEmg04&list=PLAAD43E7E33F8047C

 
கட்டோடு குழல் ஆட ஆட

கண் என்ற மீன் ஆட ஆட

பொட்டோடு நகை ஆட ஆட

கொண்டாடும் மயிலேறி ஆடு

கட்டோடு ...

பாவாடை காத்தோடு ஆட ஆட

பருவங்கள் பந்தாட ஆட ஆட

காலோடு கால் பின்னி ஆட ஆட

கள்ளுண்ட வண்டாக ஆடு

கட்டோடு ....

முதிராத நெல் ஆட ஆட 

முளைக்காத சொல் ஆட ஆட 

உதிராத மலர் ஆட ஆட 

சதிர்ஆடு தமிழே நீ ஆடு

கட்டோடு ...

தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக 

புன்னை மரம் பூசொரிய

சின்னவளே நீ ஆடு

கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட

கண்டு கண்டு நான் ஆட

செண்டாக நீ ஆடு

கட்டோடு ....

பச்சரிசி பல ஆட பம்பரத்து நாவாட

மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு

வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட

ரெண்டு பக்கம் நான் ஆட

சொந்தமே நீ ஆடு

கட்டோடு .....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தென்னை மரத்தோப்புக்குள்ளே துரத்தி புடிச்ச தோகை மயில்

கையை தட்டி கூப்பிட்டார் அந்த கன்னடத்து பைங்கிளியை

மலையாளத்து மச்சானுக்கு மது விக்குது முத்து  சொண்டு

மயிலோ அது கிளியோ மன்னவரை மயக்க வந்த முல்லை மலரோ!

 

http://www.youtube.com/watch?v=vvwN4Z9KRpg

 

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ...

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்

 

சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா...
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ 
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் 

 

http://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

 

ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ...

பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ...
சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2)
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2)

(பூ மாலையில்)

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ...
மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ...
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.