Jump to content

வாக்கெடுப்பு: பாலியல் வன்கொடுமைக்கு ஆண்மை நீக்கம் சரியா/தவறா.


வாக்கெடுப்பு: பாலியல் வன்கொடுமைக்கு ஆண்மை நீக்கம் சரியா/தவறா.  

28 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

ஆண்மை நீக்கம் செய்யப்படுவது சரியான செயல் என நான் கருதவில்லை.

இந்தியாவில் தனிநபர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை. எனவே ஆண்மை நீக்கம் செய்யப்பட்டால் அந்த கோபத்தில் குறித்த ஆண் மீண்டும் அதே பெண்ணை (அந்த பெண் உயிருடன் இருந்தால்) வேறு விதமாக பாலியல் ரீதிரில் கொடுமைப்படுத்தி கொலை செய்யவும் சந்தர்ப்பம் உள்ளது. அல்லது வேறு பெண்கள் விடயத்திலும் இதே போல் செயற்பட சந்தர்ப்பம் உள்ளது.

பாலியல் வன்கொடுமைகள் பல நடப்பதற்கு சமூகம் ஒரு காரணம். அதை விட குறித்த நபர் மேல் அதிக தவறு உண்டு. இது மன்னிக்கக்கூடிய குற்றம் அல்ல. தண்டனை நிச்சயம் கிடைக்க வேண்டும்.

நுணா அண்ணா குறிப்பிட்டது போல் முதல் தடவையாக இருந்தால் சில வருடங்களுக்கு சிறையில் அடைத்து சிறையில் வைத்தே பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். இரண்டாவது தடவை எனின் பெரிய தண்டனை கொடுக்கலாம். (ஆனால் இங்கு இந்திய காவல்துறையினருக்கு சிறையிலுள்ள கைதிகளை அடித்து, உதைத்து தான் பழக்கம். அதை நிறுத்தி குறித்த நபருக்கு பாலியல் கல்வி வழங்கும் முறையை ஏற்படுத்தி கொடுப்பார்களா என்பது சந்தேகம். :rolleyes:  முதலில் போலீஸாருக்கு பாலியல் கல்வி மற்றும் கைதிகளுடன் பழகும் முறை தொடர்பாக போதிக்கப்பட வேண்டும். :icon_mrgreen:)

மிக கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வை நிகழ்த்தியிருந்தால் அல்லது குறித்த பெண்ணின் உயிர் போயிருந்தால் முதல் தடவையே பெரிய தண்டனை கொடுக்கலாம்.

 

அடுத்து,

 

இந்தியாவில் சட்டத்தை கொண்டு நடத்துபவர்களில் பெருமளவானோரே பாலியல் ரீதியான குற்றமிழைக்கும் தன்மையை, லஞ்சம் வாங்கும் தன்மையை கொண்டிருப்பார்கள். எந்த ஒரு சட்டத்தை கொண்டு வந்தாலும் அதை சரியாக அமுல்படுத்தாமல் குற்றவாளிகளை தப்பிக்க விட்டு விடுவார்கள். எங்கேனும் ஓரிருவரை மட்டும் தண்டிப்பார்கள். சட்டத்தை கொண்டு நடத்துபவர்கள் சரியாக இயங்குகிறார்களா என்பதை கண்காணிக்க ஓர் சரியான தலைமை இல்லாமையே இதற்கு காரணம். :rolleyes: (தமிழீழத்தில் தமிழீழ காவல்துறை சரியாக இயங்கியமைக்கு காரணம் அது தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.)

 

எனவே சட்டத்தை கையில் வைத்திருப்போர் தாமும் சரியாக இருந்து இப்பொழுதுள்ள சட்டத்தை சரியாக செயற்படுத்தினாலே பெருமளவிலான குற்றங்கள் குறைந்து விடும்.

 

பாதிக்கப்பட்ட பெண்களில் எத்தனை பேர் வெளிப்படையாக சட்டத்தின் உதவியை நாடுவார்கள் என்பதும் கேள்விக்குறி.


இந்தியாவில் சமூகத்தில் உடனடியாக மாற்றத்தை கொண்டுவர முடியாது. சட்டமோ உடனடியாக சரியான முறையில் செயற்படாது. செயற்பட்டாலும் நீதியாக செயற்படாது. எனவே எதை சட்டமாக கொண்டுவந்தாலும் இப்போதைக்கு பாலியல் வன்கொடுமைகள் குறையப்போவதில்லை. :rolleyes:

 

எதிர்காலத்தில் பாலியல் வன்கொடுமைகள் குறைய வேண்டுமானால் இப்பொழுதிலிருந்தே சிறுவயதினரை கல்வியறிவு கொண்டவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். பாலியல் கல்வி, பாலியல் ரீதியான விழிப்புணர்வு என்பன சிறுவயதிலிருந்தே கிடைக்க செய்ய வேண்டும். சக மாணவர்களுடன், மக்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதை ஒருபாடமாக கற்பிக்க வேண்டும்.

 

பி.கு: நான் எதற்கும் வாக்கு போடவில்லை.

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணா,

  • அபராதப் பணம் செலுத்திய பின்பு, ஆளை வெளியே விட வேண்டும்.
  • முதல் முறை செய்த குற்றம் என்றால்... மன்னித்து விடலாம்.


இது இரண்டும் மிக மிக தவறானது என நான் கருதுகிறேன். இதன் மூலம் பெண்தரப்பு பாதிக்கப்பட்ட போதும் ஆண்தரப்பு தப்பி விடும் தன்மை உள்ளது. :rolleyes:  இதற்கு யாரும் இன்னும் வாக்கு போடவில்லை. :D  இனியும் போடக்கூடாது என நினைக்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன?

தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநில‌த்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ள‌து. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2. ஏன் இவ்வளவு குற்றங்கள்?

தனிமனித ஒழுக்கம், சமூக சூழல் ஆகியவற்றைத் தவிர்த்து பார்க்கும்பொழுது அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகளுக்குக் காரணம், பெரும்பான்மையான பாலியல் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் போய்விடுவதேயாகும். எடுத்துக்கட்டாக 20% பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதாக கருதுவோமாயின், நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படாததானால் 80% குற்றவாளிகள் விடுதலை செயயப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் அடுத்த குற்றங்களை செய்யும் தொடர் குற்றவாளியாக(Habitual offender) மாறிவிடுகின்றனர்.

3. தொடர் குற்றவாளிகள் என்றல் என்ன?
 
மேற்கண்ட சுழற்சி ஒரு மோசமான சுழற்சியாகும் (vicious cycle). இந்த மோசமான சுழற்சியினால் தொடர் குற்றவாளிகள் (Habitual offender) உருவாகின்றனர்.

4. ஏன் குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை?

ஏனெனில் பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை (Social stigma) காரணமாக தண்டனை பெற்றுத்தரும் அளவிற்கு சாட்சி கூற இயலாத சூழல் உருவாகின்றது.

5. பாலியல் வன்முறை குறித்த சட்டப் பிரிவுகளை (375,376) மரண தண்டனை வழங்குமாறு திருத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க இயலுமா?

முடியாது. ஏன் எனில் சட்டங்களை எவ்வளவு கடுமையாக்கினாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகும்பொழுது ஒரு தண்டனையும் கிடைக்காது. எனவே பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதற்கான அறிவியல் பூர்வ வழிமுறைகளை உருவாக்குவதே சரியான தீர்வாக இருக்கும்.

6. பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதில் என்ன சிக்கல்?

பாலியல் குற்றங்கள் CrPC 53இன் கீழ் உதவி ஆய்வாளர் (Sub Inspector) அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றன. இவ்வாறு காவல் துறையால் செய்யப்படும் விசாரணை அறிவியல் பூர்வமானதல்ல. காவல் துறையின் விசாரணை அதிகாரிகள், சட்ட மருத்துவம் (Forensic Medicine) குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாக உள்ளனர். காவல் துறை, அரசின் மற்றும் ஒரு படை பிரிவே(Force) அன்றி அறிவியல் சார்ந்த துறை(Scientific Investigators) அல்ல.

பாலியல் குற்றங்களை விசாரிக்கும் முழு பொறுப்பை காவல் துறையிடம் ஒப்படைப்பது சரியான வழி முறை அல்ல. பெரும்பாலும் காவல் துறையின் விசாரணை நேரில் கண்ட சாட்சியங்களைத் திரட்டுவது அல்லது சூழ்நிலை சாட்சியங்களைத் திரட்டுவதாகவே இருக்கும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிடுவதாலும் குழந்தையாக இருப்பதாலும் யாருமல்லாத இடங்களில் குற்றம் பெரும்பாலும் நிகழ்த்தப்படுவதாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகின்றது.

மேலும் அறிவியல் பூர்வமான சோதனைகளான பெண்ணுறுப்பின் எபிதிலியல் செல்களை ஆணுறுப்பில் கண்டுபிடிப்பது, நகங்களில் சிக்கிய தசைத் துணுக்குகளை ஆராய்வது, ஆடைகளில் உள்ள இரத்தம் மற்றும் விந்து மாதிரிகளைத் திரட்டுவது மற்றும் லோகர்ட் பரிமாற்ற விதியின்படி முடி மற்றும் மற்ற பொருட்களைத் திரட்டுவது போன்ற பல அறிவியல் பூர்வமான வழிமுறைகள் பெரும்பாலான வழக்குகளில் செய்யப்படுவதில்லை.

மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முறையான வழிகாட்டுதல்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு இருப்பதில்லை. எனவே இவ்வகையான அறிவியல் பூர்வ ஆய்வுகள் (Forensic Investigations) உடனடியாக செய்யப்படாததினால் சாட்சியங்கள் திரட்ட இயலாமல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுகிறது.

7. மருத்துவக் கல்லுரி / அரசு மருத்துவமனைகளில் சட்ட மருத்துவத் துறையின் பங்கு என்ன?

நீதிமன்ற ஆணையின் கீழ் குற்றவாளி அல்லது பாதிக்கப்பட்ட பெண் சட்ட மருத்துவக்குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார். மேற்ககூறிய பல அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டும் வேலையை இத்துறை செய்கிறது. ஆனால் குறைபாடு என்னவெனில் சட்ட மருத்துவத் துறையால் விசாரணையை தன்னிச்சையாக துவங்கவோ, நீதிமன்றங்களினால் ஆணையிடப்படும் பரிசோதனைகளைத் தவிர வேறு வகையான குற்ற விசாரணைகளில் (Forensic investigation) ஈடுபடவோ முடியாது.

எடுத்துக்காட்டாக பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தால் சட்ட மருத்துவத் துறைக்கு அனுப்பப்படும் சூழலில், சட்ட மருத்துவர் குற்றவாளியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கருதினால் அதற்கான ஆணையை அவரால் பிறப்பிக்க இயலாது. இதனால் சட்ட மருத்துவத் துறை அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையை மட்டும் செய்து மேற்கொண்டு தொடர இயலாமல் நின்று போகும் சூழல் உள்ளது.

8. தற்போதைய தேவை என்ன?

நீதிமன்றங்களில் பாலியல் குற்றங்களை நிரூபிக்கும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிமுறைகளை வகுக்காமல் குற்றங்களை குறைக்க இயலாது. எனவே பாலியல் குற்றங்களை தன்னிச்சையாக விசாரிக்கும் அதிகாரமுடைய, அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஓர் இடை நிலை அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.

 இக்குழுவில் இடம் பெறுவதற்கான இடைநிலை அதிகாரிகளாக‌ அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான புதிய முதுநிலை படிப்பினை உருவாக்கி பயிற்சி அளிப்பதன் மூலமும், மேலும் வளர்ந்த நாடுகளின் குற்ற விசாரணை முறைகளை அவர்களை அறிந்து வரச் செய்வதன் மூலமும் இக்குழுவை சிறப்பான விசாரணை குழுவாக மாற்ற இயலும். மேலும் இக்குழுவினை சட்ட மருத்துவர், சட்ட வல்லுநர் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட விசாரணை அதிகாரி கொண்ட குழுவாக அமைக்க வேண்டும்.

இக்குழு ஏதேனும் ஒரு பாலியல் குற்றம் நடைபெறுமாயின் தன்னிச்சையாக விசாரணையைத் தொடங்கி, அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படும் எண்ணிக்கையை கூட்டலாம்.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22525:2012-12-31-11-04-03&catid=1:articles&Itemid=264

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முக்கியமாக சகல விசாரணைகளும் 3 மாதங்களுக்குள் முடித்து - அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்!

நீண்டகால கடூழிய சிறைத்தண்டனை + மற்றும் பெருந்தொகை அபராதம் விதித்தல்

 

இரண்டாவது முறையும் பெண்களை பாலியல் இம்சை செய்தால் - ஆண்மை நீக்கம் + நீண்டகால கடூழிய சிறைத்தண்டனை + மற்றும் பெருந்தொகை அபராதம் விதித்தல்
 

மூற்றவது முறையும் செய்தால் -  மரண தண்டனை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.