Jump to content

காரணம் தெரியுமா ?

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம் தெரியுமா ?

பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில்  அவதானித்தேன்

பெரும்பான்மையான  பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ?

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,
    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?
    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?
     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?
   
தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?
சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில் தமிழனிடம் அதைக் கேட்கும் துணிவு இல்லை

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,

    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?

ஒருமுறையாவது அவர்களிடம் இதுபற்றி பகிடியாகவாவது கேட்டிருக்கிறீர்களா 

    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?

     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

 மீன் சந்தையில் மீன்களை வெட்டித் தரும்படி நீங்கள் கேட்பதில்லை. அத்தோடு மீன்கடை சிறிய இடமாக இருப்பதனால் கழிவுகளின் நாற்றம் மேலோங்கி இருப்பதும் காரணமாக இருக்கலாம்

உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?

தமிழனுக்கு தமிழன் மேல் இருக்கும் மதிப்பு அவ்வளவுதான் :D :D

தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?

தமிழரில் பலர் தாமும் சுத்தமில்லை.தம் பிள்ளைகளுக்கும் சுத்தம் பற்றிச் சொல்லிக் கொடுப்பதில்லை.அப்பாடிப்பட்ட ஒன்று இரண்டு பேரால் எல்லோருக்கும் துன்பம்.

சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

தமிழர்களில் பலர் பொறுப்பற்றவர்களாகவே புலம்பெயர் நாட்டிலும் இன்னும் இருக்கிறார்கள். சிலரை திருத்தவே முடியாது. :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள்... பார்ப்பதற்கு, அசிங்கமாக இருந்தாலும்....
தமிழர் நாம்... பச்சைத்தண்ணியில், பலகாரம் சுடுகிற ஆட்கள்.
நாமும்.. தாராளமாகச் செலவழித்தால்... வியாபாரியும்... கடையை... மெருகூட்டுவார் தானே...
ஐரோப்பாவில் உள்ள கடைக்குப் போய்... "கருவேப்பிலைக் கட்டு, ஒரு ஐரோ... விக்கிறியளோ... என்று கேட்டு, ஊர் ரூபாய்க் கணக்கில் பெருக்கிப் பார்க்கும்... எங்களை வைத்துக் கொண்டு, அவர்கள் எப்படி, முதல் தரமான.. சேவையை, செய்ய முடியும்? அதை... நீங்கள் முதலில் யோசியுங்கள்.
இதனைப் பற்றி... ஜீவா, சஜீவன், விசுகு, நந்தன் போன்றவர்களின் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் தெரியுமா ?

பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில்  அவதானித்தேன்

பெரும்பான்மையான  பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ?

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,

    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?

    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?

     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?

தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?

சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

நாடுகளுக்கேற்ப எம்மவர்களும் வாழ்கின்றார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகளுக்கேற்ப எம்மவர்களும் வாழ்கின்றார்கள். :D

நல்ல மினுப்பாக... இருந்தாலும், ஒண்டுக்கிருக்க... கூச்சமாய் இருக்கும் :D.

நாவூறு படாமல் இருக்க‌, கை கழுவும் தொட்டியில்... ஏற்கெனவே.... கக்கூஸ் பேப்பரை அடைத்து வைத்திருப்பார்கள். :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் தெரியுமா ?

பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில்  அவதானித்தேன்

பெரும்பான்மையான  பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ?

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,

    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?

    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?

     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?

தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?

சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

லண்டனிலும் அநேக இடங்களில்.. இந்த நிலை தான். ஊரில சின்னப் பிள்ளையளா இருக்கேக்க.. பேதி மருந்து என்று கொடுக்கிறது.. சமிபாட்டுப் பிரச்சனைக்கு. இஞ்ச தமிழ் கடையில சாப்பிட்டால் போதும்.. பேதி.. வாந்தியோட.. பீதியா போகும்.  என்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல.. அந்தந்த நாட்டு அடிப்படை சுகாதார விதிகள் மீறப்பட்டும்.. இவர்கள் எப்படித்தான் பிடிபடாமல்.. உதுகளை நடத்தினம் என்றது தான்.. எனக்கு ஆச்சரியமா இருக்குது. நான் பொதுவா தமிழ் கடைகளுக்குப் போறது குறைவு காரணம்.. இந்தச் சுகாதாரமின்மை.. சரியான நுகர்வோர் உபசரிப்பின்மை.. போன்ற காரணங்கள் தானே ஒழிய.. மற்றும்படி வேற காரணங்கள் இல்லை.  :icon_idea::)

Link to comment
Share on other sites

சமூகத்தில் அக்கறை இருந்தால் நகரசபைக்கு (லா சப்பலில்  என்னவோ தெரியாது) சொன்னால் வந்து பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள். கனடாவில் தமிழரின் சில உணவகங்கள் மூடப்பட்டதற்கு சுத்தமின்மை தான் காரணம் என அறிந்தேன்.

Link to comment
Share on other sites

சில விடயங்கள்... பார்ப்பதற்கு, அசிங்கமாக இருந்தாலும்....

தமிழர் நாம்... பச்சைத்தண்ணியில், பலகாரம் சுடுகிற ஆட்கள்.

நாமும்.. தாராளமாகச் செலவழித்தால்... வியாபாரியும்... கடையை... மெருகூட்டுவார் தானே...

ஐரோப்பாவில் உள்ள கடைக்குப் போய்... "கருவேப்பிலைக் கட்டு, ஒரு ஐரோ... விக்கிறியளோ... என்று கேட்டு, ஊர் ரூபாய்க் கணக்கில் பெருக்கிப் பார்க்கும்... எங்களை வைத்துக் கொண்டு, அவர்கள் எப்படி, முதல் தரமான.. சேவையை, செய்ய முடியும்? அதை... நீங்கள் முதலில் யோசியுங்கள்.

இதனைப் பற்றி... ஜீவா, சஜீவன், விசுகு, நந்தன் போன்றவர்களின் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.

தமிழ்சிறியின் கருத்துதான் எனதும். ஐந்து சதத்திற்கு இடியப்பம் எதிர்பார்த்தால் அவர்களும் என்ன செய்வார்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அந்த நாட்டின் சட்டதிட்டங்களை & பொறுப்பான அதிகாரிகளை  பொறுத்தது. ஒருக்கா உங்கள் பகுதி சுகாதார பொறுப்பாளருக்கோ அல்லது அமைச்சுகோ மொட்டைக்கடிதம் அனுப்பிவிடுங்கள், நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலிவான இடங்களில் சுத்தம், சுகாதாரம் எல்லாம் இருக்குமா..

சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் மத்திய பாரிஸ் பகுதிக்கும், லா சப்பலுக்கும் அதிக தூரம் இல்லை. ஆனால் சுத்தத்தில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கும்..

Link to comment
Share on other sites

நியுயோர்க்கில் ஐந்து போரோக்கள். தமிழர் இருப்பது குயின்ஸ்சிலும் ஸ்டேட்டன் ஐலண்டிலும்தான். இவை இரண்டும் .இடைத்தர போரோக்கள். அவற்றிலும் தமிழர் இருக்கும் பக்கம் இடைத்தரமானவை. மன்கட்டந்தான் வியாபாரத்தளம்.

நியூயோர்க்க தமிழர் மத்திய வகுப்பில் இருப்பதால் மத்திய வகுப்பு வாழ்க்கையை நடத்த முடிகிறது.

இது டொரொண்டொவில் காணப்படும் உணவகம். ஸ்காபரோ பக்கம் போனால் "மார்க்கம் லோகேசனை" ஒரு தடவை போய் பார்த்துவிடுங்கள்.

20110916-babu-1.jpg

How do they do it for that price??
FAVOURITE
DINER REVIEW • JUN 28, 2011
Just take it from me a standard issue Canadian white guy who stood out like a sore thumb among the largely Sri Lankan immigrant clientele....but I learned one magic word from the smiling counter staff....Combo!!
 
That's right just say combo and into a generous sized container goes chicken biryani rice, mushroom curry and butter chicken for a whalloping $4.50 out the door! I will never eat fast food again, I am a Babu junkie!!! Normally Indian food is usually very pricy, if these guys keep this up and give this quality for the $$ you wont eat anywhere else...I'm talking flavour!!!! I frequent the Markham location which is clean and shiny new. Best food deal in the GTA no kidding, especially when you factor in the frequent diner card you can get right at the counter so you tenth lunch is free, (the only drawbacks, no dining in and kind of irregular counter service but they are always nice and who can complain for this $$?? I wouldnt change a thing, Best to go in off hours as they are lined up out the door at normal diner times.

http://www.urbanspoon.com/r/10/1435679/restaurant/Scarborough/Babu-Takeout-and-Catering-Toronto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் தெரியுமா ?

பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில்  அவதானித்தேன்

பெரும்பான்மையான  பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ?

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,

    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?

    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?

     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?

தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?

சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

பணம் ஒன்றையே குறியாக வைத்து இயங்கப்படுகிறது. அங்கே சுத்தம் என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் போய்விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகப் பார்வை, தூரநோக்கு, சேவை மனப்பாங்கு  இல்லாத வியாபாரங்கள்!

மனச்சாட்சியை ஆண்டவனிடம் அடகு வைத்துவிட்டு நடத்தப்படும் பகல் கொள்ளைகள்!

இல்லாத கடவுள், பாவங்களைக் கழுவி விடுவார், என்ற அதீத நம்பிக்கை!

தீய பழக்கங்களை, விட்டு விடக் கூட, அனுமதிக்காத வெறும் வரட்டுக் கவுரவம்!

தானும், தனது குடும்பமும், என்ற கோட்பாட்டில் வாழும் சராசரித் தமிழரின் மனநிலை!

மேலேயுள்ள எல்லாம் சேர்ந்ததன் விளைவு! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் நடத்துபவர்கள் அப்படி இருந்தால் பின் அனைத்தும் அதுவாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிலுரைத்த ஆர்வலர்களுக்கு நன்றிகள்

அண்மையில் லாச்சப்பல் கடையில் பொருட்களை கொள்வனவு செய்தேன்
வீடுசென்று சிட்டையை பார்த்த போது 17 பொருட்களுக்கு விலை போடப்பட்டிருந்நது
நான் வாங்கிய பொருட்கள் 15 தான். ஒருவேளை தவறுதலாக இரண்டு தரம் விலை
போடப்பட்டுள்ளதா என்று பார்த்த  பொழுது எல்லா விலைகளும்   வேறு வேறு விலையாக இருந்நது.  
எனவே அந்த மாயப் பொருள் எது என்றும் அதன் விலை என்ன என்றும் அறிய மறுநாள் கடைக்குச்
சென்று வினவிய போது
'இல்லை அண்ண ஒரே விலை மரக்கறியள ஒண்டா நிறுத்து பில் அடிச்சிருப்பினம்" என்றார்
அப்படி எனில் நான் வாங்கிய பொருட்களின் எண்ணிக்கை அல்லவா கூடியிருக்க வேண்டும் என்றதும்
அவர் சொன்னார் " நீங்கள் ஒரு வேள ஏதாவது சாமான பாக்கில போடாம மறந்திருப்பியள்"  ஆக்கள்
மறந்து விட்ட சாமான  கண்டா பொடியள் கீழ  எடுத்து வைச்சிருப்பினம்", பிறகு வாங்க கேட்டு சொல்லுறன்
என்றவாறு அடுத்த வாடிக்கையாளரின் பொருட்களுக்கு விலை அடிக்கத் தொடங்கிவிட்டார்.

கடைச் சிப்பந்தியின் பதில், பல பொருட்களை கொள்வனவு செய்யும் போது லாவகமாக
மாயப் பொருட்களையும் இணைத்து விடுகிறாரோ என்ற என் சந்தேகத்தை வலுவூட்டியது. :blink:

நீங்களும் அவதானமாக பொருட்களின் எண்ணிக்கையையும்  சிட்டையையும் சரி பாருங்கள்

அடுத்ததாக  பலரும் லா சப்பலில் விலை மலிவு  , சேவை   சுத்தம்  நலிவு என்ற கருத்தை
பதிந்தனர். விலை மலிவு என்பதை நான் ஏற்கவில்லை. எமது சமையலுக்கு தேவையான
பொருட்கள் (கறிவேப்பிலை முருங்கை காய் , கீரைவகை இட்லி அரிசி ....... பொரிஅரிசி வெற்றிலை சுண்ணாம்பு..
பொங்கல் பானை....)   இங்கே மட்டுமே கிடைப்பதாலும், எம் நாவுக்கு பழக்கமான சுவையில் உணவகங்கள் இருப்பதாலும்
நான் (நாங்கள்) செல்கி(றோம்)றேன்  என்பது என் கருத்து.    

மீன்கடைகளில் காட்சிப்படுத்தப்படும் மீனின் தொகைக்கு ஏற்ப போதுமான அளவு ஐஸ்கட்டி இடப்படுவதில்லை
இது கூட சுகாதாரக் கேட்டுக்கும் துர்நாற்றத்திற்கும் காரணமாக இருக்கும்.   :icon_idea:

குறைகளை உரிய நிர்வாகத்திடம் தெரிவிக்க, பிரன்சு மொழியில் அலுவலகக் கடிதங்கள் எழுதுவதில்
போதிய மொழியறிவு இன்மையும் ஒழுங்கீன (ர்களுக்குச்) ங்களுக்குச் சாதகமாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.