Jump to content

அதுவரைக்கும் சொல்லிக்கொண்டிரு...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நான்
புல்லாங்குழலில் இருந்து கசியும்
ஒரு மெல்லிய இசையாக
உன்னை ரசிக்கிறேன்
நீ
புல்லாங்குழலுள் அடைபட்டு
துளைகளூடு வேளியேறும் காற்றாக்கி
என்னை வதைக்கிறாய்
 
நான்
பூவிலிருந்து ஒழுகும்
பரவச வாசனையாக
உன்னை நுகர்கிறேன்
நீ
பூக்களை தாங்கி நிற்கும்
ஊமைக் காம்புகளாக்கி
என்னை மறந்துபோகிறாய்
 
நான்
புத்தகங்களுக்கு நடுவே
பொத்திவைத்த மயிலிறகாக
உன்னை சேகரிக்கிறேன்....
நீ
புத்தகங்களுக்கு உள்ளே
கிழிந்துபோன பக்கங்களாக்கி
என்னை புரட்டிப்போகிறாய்...
 
நான்
எல்லாவற்றிலும் உன்னை
அழகாக ரசித்துக்கொள்கிறேன்
நீ 
அனைத்திலும் என்னை 
அடிமையாக நினைத்துக்கொள்கிறாய்..
 
நான்
ஓயாத உன் 
கவனிப்பின்மைகளுக்கு நடுவே
கொடுக்க நிறைய அன்புடன்
காத்திருக்கிறேன்
நீ
பேசாது உன்
வனமங்களுடன்
எடுக்க ஒரு புன்னகையைகூடதர
நேரமின்றி இருக்கிறாய்
 
நான்
உயிர்பிரிந்தும்
பிரியாத
உன் நிழலாக 
வருகிறேன்
நீ
அருகிருந்தும்
எனை உணராத
உடலாக 
தவிர்க்கிறாய்.
 
நாம்
ஒன்றாய் இருந்தும்
ஒருவர் ஒருவராய்
ஒதுங்கி இருக்கிறோம்..
காலத்தை தின்றேனும்
நமக்கு
போதும் இந்த நாடகம் என்று
பொழுதுரைக்கும் அதுவரை
பொறுத்திருப்பேன்..
 
ஒடுங்கியும் அகன்றும்
வற்றியும் பெருகியும்
ஓயாமல் ஓடும்
ஆற்றைப்போலவே
விரையும் நம்காலம்
தன்கடலை சேருமுன்னே
நாம்
மீண்டும் ஒருதடவை
மனதால் சந்திப்போம்
காத்திரு..
 
என் அன்பின் மீது
உன் கூரலகால்
குருதிவடிய
எழுதிச்சென்ற வரிகளெல்லாம்
வலிகளாய் ஊர
உனக்காக உயிர்பிடித்திருப்பேன்
உன் மீதுள்ள பிரியத்தால்
காத்திரு...
 
காலங்கள் வயதுகளாய்
முதிர்ந்துபோகையில்
எல்லாவற்றையும் 
உதாசீனப்படுத்தவைக்கும்
உன் இளமை இலைகள்
ஒரு கனவுபோல
உன்னை தனியே விட்டு 
உதிர்ந்துபோகையில்
எதிர்கொள்ள முடியாத தனிமை
உன்னை எதிர்த்து நிற்கும்...
காத்திரு...
 
கறுப்பு வெள்ளைகளாய்
உன் கலர்க்கனவுகள் 
உடைந்துபோகையிலும்
பசுமையாகவே 
என் அன்பின் நினைவுகள்
உன்னைபடர்ந்திருக்க
நாட்கள் தொலைத்திடாத 
அந்த நினைவுகளில் நீ
சற்றும் குறையாமல்
இருக்க காண்பாய்
காத்திரு..
 
உருவங்கள் உதிர்ந்துபோக
பருவங்கள் தொலைத்த
உன் பயணங்களின்
சுமை உணர்ந்து 
கால்கள் தள்ளாடும்
கணங்களில்
என் தோள்களின்மேல்
தலைபுதைக்க 
தேடிவரும் 
உன் ஆன்மாவின் 
தலைகோதும் விரல்களாய் 
நானிருப்பேன்
காத்திரு
 
அதுவரைக்கும் 
சொல்லிக்கொண்டிரு
அவரவர் வாழ்க்கை
அவரவர்க்கு..
 
 
Link to comment
Share on other sites

 
காலங்கள் வயதுகளாய்
முதிர்ந்துபோகையில்
எல்லாவற்றையும் 
உதாசீனப்படுத்தவைக்கும்
உன் இளமை இலைகள்
ஒரு கனவுபோல
உன்னை தனியே விட்டு 
உதிர்ந்துபோகையில்
எதிர்கொள்ள முடியாத தனிமை
உன்னை எதிர்த்து நிற்கும்...
காத்திரு...
 
கறுப்பு வெள்ளைகளாய்
உன் கலர்க்கனவுகள் 
உடைந்துபோகையிலும்
பசுமையாகவே 
என் அன்பின் நினைவுகள்
உன்னைபடர்ந்திருக்க
நாட்கள் தொலைத்திடாத 
அந்த நினைவுகளில் நீ
சற்றும் குறையாமல்
இருக்க காண்பாய்
காத்திரு..
 
உருவங்கள் உதிர்ந்துபோக
பருவங்கள் தொலைத்த
உன் பயணங்களின்
சுமை உணர்ந்து 
கால்கள் தள்ளாடும்
கணங்களில்
என் தோள்களின்மேல்
தலைபுதைக்க 
தேடிவரும் 
உன் ஆன்மாவின் 
தலைகோதும் விரல்களாய் 
நானிருப்பேன்
காத்திரு
 
அதுவரைக்கும் 
சொல்லிக்கொண்டிரு
அவரவர் வாழ்க்கை
அவரவர்க்கு..
 
 

 

மற்றவர்களின் வலிகளை உணர்ந்து கொள்ளும் நேரம் வரும்பொழுது....

 பலவிடயங்கள் எம் எல்லைகளைத் தாண்டிக் கடந்து போயிருக்கும். மீண்டும் வர இயலாத எல்லைகளுக்கப்பால் சூனியமாய் நிற்பது போல் இருக்கும்.

 

உணரவேண்டியதை உணரவேண்டிய நேரத்தில் உணர்ந்துகொண்டாலே நல்லது.

ஆனால்.... பெரும்பாலும் அது நடப்பதில்லை! :(

காலங்கடந்த ஞானத்தால் பிரயோசனம் ஏதுமில்லை.

 

கவிதைக்கு நன்றி சுபேஸ் :)

Link to comment
Share on other sites

 
காலங்கள் வயதுகளாய்
முதிர்ந்துபோகையில்
எல்லாவற்றையும் 
உதாசீனப்படுத்தவைக்கும்
உன் இளமை இலைகள்
ஒரு கனவுபோல
உன்னை தனியே விட்டு 
உதிர்ந்துபோகையில்
எதிர்கொள்ள முடியாத தனிமை
உன்னை எதிர்த்து நிற்கும்...
காத்திரு...
 
கறுப்பு வெள்ளைகளாய்
உன் கலர்க்கனவுகள் 
உடைந்துபோகையிலும்
பசுமையாகவே 
என் அன்பின் நினைவுகள்
உன்னைபடர்ந்திருக்க
நாட்கள் தொலைத்திடாத 
அந்த நினைவுகளில் நீ
சற்றும் குறையாமல்
இருக்க காண்பாய்
காத்திரு..
 
உருவங்கள் உதிர்ந்துபோக
பருவங்கள் தொலைத்த
உன் பயணங்களின்
சுமை உணர்ந்து 
கால்கள் தள்ளாடும்
கணங்களில்
என் தோள்களின்மேல்
தலைபுதைக்க 
தேடிவரும் 
உன் ஆன்மாவின் 
தலைகோதும் விரல்களாய் 
நானிருப்பேன்
காத்திரு
 
அதுவரைக்கும் 
சொல்லிக்கொண்டிரு
அவரவர் வாழ்க்கை
அவரவர்க்கு..
 
 

 

மற்றவர்களின் வலிகளை உணர்ந்து கொள்ளும் நேரம் வரும்பொழுது....

 பலவிடயங்கள் எம் எல்லைகளைத் தாண்டிக் கடந்து போயிருக்கும். மீண்டும் வர இயலாத எல்லைகளுக்கப்பால் சூனியமாய் நிற்பது போல் இருக்கும்.

 

உணரவேண்டியதை உணரவேண்டிய நேரத்தில் உணர்ந்துகொண்டாலே நல்லது.

ஆனால்.... பெரும்பாலும் அது நடப்பதில்லை! :(

காலங்கடந்த ஞானத்தால் பிரயோசனம் ஏதுமில்லை.

 

கவிதைக்கு நன்றி சுபேஸ் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்புகள் சுகமானவை.

கவிதைக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காலங்கள் வயதுகளாய்
முதிர்ந்துபோகையில்
எல்லாவற்றையும் 
உதாசீனப்படுத்தவைக்கும்
உன் இளமை இலைகள்
ஒரு கனவுபோல
உன்னை தனியே விட்டு 
உதிர்ந்துபோகையில்
எதிர்கொள்ள முடியாத தனிமை
உன்னை எதிர்த்து நிற்கும்...
காத்திரு...

 

அர்த்தம் பொதிந்த வரிகள்!

 

கவிதைக்கு நன்றிகள்!,

 

 

 

,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை காதலி விலகிய மன உணர்வை மிகவும் துல்லியமாகக் காட்டுகின்றது.

 

கவிதையில் குறிக்கப்பட்டவரும் பதிலுக்கு ஒரு கவிதையில் தன்னிலை விளக்கம் தரவேண்டும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்று என்று கூறமுடியாது வலிகள் சுமந்த கவிதையிது. இழப்புகளின் வலி மிகக் கொடுமையானது. இந்த இழப்பு உங்களுக்கானது எனில் எதைச் சொல்வது என்று தெரியவில்லை சுபேஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கவிதைக்குள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் இரசிக்கும் மாபெரும் கலைஞனைக் காண்கிறேன். எண்ணங்களின் முதிர்ச்சி வார்த்தைகளில் கோர்த்தெழுதிய வைரங்களாக வரிகளில் தேங்கி நின்று ஒளிர்கிறது. இந்த சிற்பியின் கைகளுக்குள் வடிவமைய மாட்டேன் என்று எட்டிச் செல்லும் முட்டாள் பெண்ணைப்பார்த்து பரிதாபப்படுகிறது மனம். ஓ... அந்த முட்டாள் பெண்ணால்தான் இப்படியொரு கவிஞனை வெளி உலகுக்கு கொண்டுவரமுடியும் என்பது இயங்கியல் விதி. அற்புதமான அன்பு குலவும் கவிதையில் நேற்றையைக் காட்டிலும் இன்னுமொருபடி உயர்ந்திருக்கிறாய் தம்பி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதின் வலி சுமந்து கவிதை வரி படைத்த சுபேசின் கவிதைக்கு பாராட்டுக்கள். முதுமையின் முற்றத்தில் கால் பதிக்கையில் தலை கோதிவிடும் விரல்களைத் தேடும் தோழமை நிச்சயம் தேவை. நல்லதொரு கலைஞனைக் கவிதையில் கண்டேன். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கவிதைக்குள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் இரசிக்கும் மாபெரும் கலைஞனைக் காண்கிறேன். எண்ணங்களின் முதிர்ச்சி வார்த்தைகளில் கோர்த்தெழுதிய வைரங்களாக வரிகளில் தேங்கி நின்று ஒளிர்கிறது. இந்த சிற்பியின் கைகளுக்குள் வடிவமைய மாட்டேன் என்று எட்டிச் செல்லும் முட்டாள் பெண்ணைப்பார்த்து பரிதாபப்படுகிறது மனம். ஓ... அந்த முட்டாள் பெண்ணால்தான் இப்படியொரு கவிஞனை வெளி உலகுக்கு கொண்டுவரமுடியும் என்பது இயங்கியல் விதி. அற்புதமான அன்பு குலவும் கவிதையில் நேற்றையைக் காட்டிலும் இன்னுமொருபடி உயர்ந்திருக்கிறாய் தம்பி. :rolleyes:

மனதின் வலி சுமந்து கவிதை வரி படைத்த சுபேசின் கவிதைக்கு பாராட்டுக்கள். முதுமையின் முற்றத்தில் கால் பதிக்கையில் தலை கோதிவிடும் விரல்களைத் தேடும் தோழமை நிச்சயம் தேவை. நல்லதொரு கலைஞனைக் கவிதையில் கண்டேன். வாழ்த்துக்கள்.

 

 

 

இந்த இருவரது வரிகளுக்கு பின்னர் நான் என்ன  எழத.

தொடரட்டும் தங்கள் எழுத்துக்கள்

Link to comment
Share on other sites

என் அன்பின் மீது
உன் கூரலகால்
குருதிவடிய
எழுதிச்சென்ற வரிகளெல்லாம்
வலிகளாய் ஊர
உனக்காக உயிர்பிடித்திருப்பேன்
உன் மீதுள்ள பிரியத்தால்
காத்திரு...
 
காலத்தே பயிர் செய் . விட்ட காலம் திரும்பாது  . வலியுணர் கவிதைக்கு வாழ்த்துக்கள் சுபேஸ் :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சுபேஸ். உணர்ச்சிகளை அனுபவித்து எழுதியுள்ள மாதிரி படைத்துள்ளீர்கள். அருமை, தொடர்ந்து பகிருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.